பகவானுடைய சங்கு,சக்ரம், கதை,வாள் ,வில் —என்கிற பஞ்சாயுதங்களும்
யதிராஜன் திருவுருவத்தில் அவதரித்துள்ளன. வேத வருத்தமாகப் பிரசாரம்
செய்யும் பாஷாண்டிகளை அழிக்க, பஞ்சாயுதங்களும் இப்படி, யதிராஜராக
அவதரித்துள்ளன .இப்படிப்பட்ட யதிராஜர், நம்மை,முழுவதுமாகக்
காப்பாற்ற வல்லவர்.
13. சமிதோதய சங்கராதி கர்வ :
ஸ்வபலாத் உத்த்ருத யாதவப்ரகாச 😐
அவரோபிதவாந் ச்ருதேரபார்த்தான்
நநு ராமாவரஜ : ஸ ஏஷ பூய : ||
நாம்/நான் என்கிற அஹங்காரத்தை ஏற்படுத்துகிற அத்வைதக்
கருத்துக்களைப் போக்கியவர் யாதவப்ரகாசரை , அத்வைதத்திலிருந்து,
ஸ்ரீவைஷ்ணவராக்கி,ஆட்கொண்டவர். ஸ்ரீபாஷ்யாதிகள் மூலமாக,
கீதையின் பொருளை உணர்த்தியவர். யாதவர்களின் கீர்த்தியை
ஓங்கச் செய்து, த்ரௌபதியின் மாங்கல்யத்துக்குக் கேடு வராவண்ணம்
காத்த, கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக அவதரித்தார்.
14.அபஹூச்ருத ஸம்பவம் ச்ருதீநாம்
ஜரதீநாம் அயதாயத ப்ரசாரம் |
விநிவர்தயிதும் யதீச்வரோக்தி :
விததே தா : ஸ்திர நீதி பஞ்ஜர ஸ்த்தா : ||
கிளிகள் —பக்ஷிகள்—இவற்றுக்கு சிறகு முளைத்து தத்தித் தத்திப்
பறப்பதைப் பார்க்கும் சிறுவர்கள், அவற்றைப் பிடித்து, சிறகுகளை
இழுத்தும் துன்புறுத்தியும் மகிழ்வர்.பெரியவர்கள், அவை துன்புறுவதைப்
பார்க்கச் சகிக்காமல் , இரும்புக்கூடு அமைத்து, கிளிகளை உள்ளே
வைத்துப் பழம் முதலியவை கொடுத்துப் பாதுகாத்து, அவற்றின் பேச்சை
ரசிப்பர் . அறிவாளிகள் அவை துன்புறுவதைச் சகிக்காமல், அவற்றின்
விருப்பப்படிப் பறக்க விடுவர்.
சிற்றறிவுள்ள மதவாதிகள் , வேதங்களாகிற புராதன காலப் பக்ஷிகளை
அலைக்கழித்து, தவறான அர்த்தங்களைச் சொல்லி, துன்புறுத்துவர்.
ஆனால்,நமது ராமாநுஜரோ இவற்றைக் கண்டித்து, வேதவாக்யங்களுக்கு
உண்மையான அர்த்தவிசேஷங்களைச் சொல்லி, வேதங்களைக் காத்தார்.
15. அமுநா தபநாதிசாயி பூம்நா
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ : |
மஹதீ குருபங்கதி ஹாரயக்ஷ :
விபுதாநாம் ஹ்ருதயம்கமா விபாதி : ||
பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனைவிடப் ப்ரகாசத்துடன்
நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .இதனால், குருபரம்பரைக்கே
ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக–
—மார்பில் பொருந்தியதாக)இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர்
விளங்குகிறார்.
16. அலூநபக்ஷஸ்ய யதிக்ஷமா ப்ருத :
விபாதி வம்சே ஹரிதத்வமக்ஷதம் |
யதுத்பவா : சுத்த ஸுவ்ருத்த சீதலா :
பவந்தி முக்தாவளிபூஷணம் புவ : ||
ஸ்ரீ உடையவர், மைநாகமலையை ஒத்தவர் மைநாகமலையின் சிறகுகள்
துண்டிக்கப்படவில்லை. அதைப்போல, இவருடைய மதமும் ,ஒருவராலும்
துண்டிக்கப்படாதது.இவருடைய சிஷ்ய பரம்பரையில் ( அதாவது ,பச்சை
மூங்கிலாக உருவகப்படுத்துகிறார் )ஹரிதத்வம் —பகவத் தத்வம் –பச்சையாக
இருக்கிறது ( செழிப்பாக இருக்கிறது). இந்த சிஷ்ய பரம்பரையான
பச்சை மூங்கிலில் ( கணுக்கள் –மூங்கிலில் இருப்பதைப்போல, சிஷ்ய பரம்பரை ) ,
சிஷ்யர்கள் சுத்தர்கள், நல்ல ஒழுக்க சீலர்கள், ( குளிர்ச்சி–சீதளம் ), கருணை
உள்ளவர்கள்–இப்படி, முத்துவடம்போல, பூமாதேவிக்கு ஆபரணமாக ஆகிறார்கள்
17. அநபாய விஷ்ணுபத ஸம்ஸ்ச்ரயம் பஜே
கலயா கயாபி கலயாப்யநுஜ்ஜிதம் |
அகளங்கயோகம் அஜடாசயோதிதம்
யதீராஜசந்த்ரம் உபராக தூரகம் ||
யதிராஜர் சந்த்ரனுக்கும் மேம்பட்டவர் . சந்த்ரன் ,நிலவினால் குளிர்ச்சியைக்
கொடுத்து, மகிழ்விப்பதைப்போல, யதிராஜரும் தன் அடியார்களுக்கு,
பகவானிடத்தில் ப்ரபத்தியை அநுஷ்டிக்கச்செய்து, பாபங்களைப்போக்கி
மகிழ்விக்கிறார். சந்த்ரனைவிட கம்பீரமான தோற்றம் உடையவர்.
பகவானின் திருவடிகளையே எப்போதும் த்யானிப்பவர்.எவ்விதக்
களங்கமும் இல்லாதவர். ராகு, கேதுவால் சந்த்ரன் பீடிக்கப்படுகிறான்;
ஆனால், எம்பெருமானாரோ ,காம புருஷார்த்தங்களை விரும்புவாரோடு
ஒருபோதும் சேராதவர். எம்பெருமானாரின் திவ்ய குணநலன்களில்
ஈடுபட்டு அவருக்கு அடிமை செய்ய விரும்பி , பூஜிக்கிறேன்
18.அபிகம்ய ஸம்யக் அநகா : ஸுபேதஸ:
யதிசக்ரவர்த்தி பத பத்ம பத்தநம் |
ஹரிபக்த தாஸ்ய ரஸிகா : பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹ தசயா ஸமிந்ததே ||
குற்றமில்லாத, வித்வான்களான பாகவத கைங்கர்ய அநுபவம் மிகுந்தவர்கள்
யதிராஜரின் திருவடித்தாமரை என்கிற நகரை அடைந்து, ஒருவரை ஒருவர்
விற்கவும் வாங்கவும் இருக்கும் நிலையிலே தங்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
( ஒரு பாகவதருக்கு பகவத் ஆராதனத்துக்குச் சில பொருட்கள் வேண்டியிருக்க
பணம் போதாதபோது, அப்போது அங்கு வந்த பாகவதர், என்னை விற்றுக்
கிடைக்கும் பணத்தை, பகவத் ஆராதனத்து செலவுக்கு , உபயோகப்படுத்துங்கள்
என்றாராம் இப்படி, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர்மீது ஒருவர் பொறாமை
இல்லாமல் , ஒருவருக்கொருவர் உதவுவது )
19.பருஷாதிவாத பரிவாத பைசுந
ப்ரப்ருதி ப்ரபூத பதநீய பங்கிலா |
ஸ்வததே மமாத்ய ஸுபகா ஸரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதகை : விசோதிதா : ||
குளத்தில் அழுக்காக இருக்கும் நீர் , தேத்தாங்கொட்டையினால்
தெளிவைப் பெறுவதைப் போல, அடியேன் பேச்சுக்கள், குத்தல்,
மிகைப்படுத்துதல், வம்பு, கோள் சொல்லல், இதுபோன்ற குற்றங்களால்
குழம்பி இருந்தபோது, எம்பெருமானாரின் புகழ்பரவிய அடியேனின்
சொற்களால் தெளிவடைந்து பெரியோர்கள் கொண்டாடும் நிலையில்
உள்ளது.
20. அநுகல்பபூத முரபித் பதம் ஸதாம்
அஜஹத்ரிவர்கம் அபவர்க வைபவம் |
சலசித்த வ்ருத்தி விநிவர்த நௌஷதம்
சரணம் யதீந்த்ர சரணம் வ்ருணீமஹே ||
எம்பெருமானாரின் திருவடிகள் ,பகவானின் திருவடிகளையும்விட
மேன்மையானவை. ( பகவானின் திருவடி இரண்டாம் பக்ஷம்)
இம்மை, மறுமை பலனை அளிக்கவல்லவை. சஞ்சல புத்தியைத்
தெளிவித்து, தத்வ அர்த்தங்களை உணர்த்தும் . இப்படிப்பட்ட ,
யதிராஜரின் திருவடிகளில் சரணம் அடைகிறேன்.
21. ச்வஸிதாவதூத பரவாதி வைபவா :
நிகமாந்த நிதி ஜலதேஸ் தவ ஸ்ப்ருச :
ப்ரதிபாதயந்தி கதிமாபவர்க்ககீம்
யதி ஸார்வபௌம பதஸாத் க்ருதாசயா : ||
யதிஸார்வ பௌம —யதீச் சக்ரவர்த்தி ,ஸ்ரீ உடையவர்.
இவருடைய திருவடிகளில் மனத்தையே சமர்ப்பித்தவர்கள்
பாகவதோத்தமர்கள்; வேதாந்த ஞானம் மிக்கவர்கள்; பிறமதப்
பிரசாரகர்களை நிரஸிப்பவர்கள்
22. மூலே நிவிச்ய மஹதாம் நிகமத்ருமாணாம்
முஷ்ணந் ப்ராக த்ருத நைகதண்ட : |
ரங்கேச பக்தஜந மானஸ ராஜஹம்ஸ் :
ராமாநுஜ : சரணமஸ்து முநி : ஸ்வயம் ந : ||
ராமாநுஜர் பரமஹம்ஸர். இந்தப் பரமஹம்ஸர்,ஹம்ஸம்
மாநஸரஸ்ஸில், பெரும் பெரும் மரங்களின் அடியே
கூடுகட்டி வாழ்வதைப்போல, திருவரங்கச் செல்வனுக்குத்
த்ரிகரணசுத்தியாகத் தொண்டுசெய்யும் பக்தர்களின்
மனம் என்கிற மாநஸரஸ்ஸில் சுகமாக வாழ்கிறார். அதாவது,
உடையவரை, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆச்ரயித்து, அவரைப்
பூஜித்து, இதயத்தில் இருத்தி , த்யாநம் செய்கிறார்கள் .
இந்த ச்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ,உடையவரை
ராஜ ஹம்ஸமாகவும், பரமஹம்ஸராகவும்நினைத்துச்
சரணம் அடைகிறார்.
23. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்ர :
ஸம்ஸார ஜிஹ்மக முகை : ஸமுபஸ்திதம் ந : |
விஷ்வக் ததம் விஷய லோப விஷம் நிஜாபி :
காடாநுபாவ கருடத்வஜ பாவநாபி : ||
நரேந்த்ரன் என்பவன் விஷவைத்யன் (பாம்பாட்டி )
இவன் ,மந்த்ர ஸித்தி உள்ளவர்களிடம் கருடமந்த்ரத்தை
உபதேசமாகப் பெற்று,லக்ஷக்கணக்கான தடவை ஜபித்து,
ஸித்தி அடைந்து, எந்த ஸர்ப்பம் கடித்து இருந்தாலும்
பல இடங்களில் பலமுறை கடித்து இருந்தாலும்,
கருட மந்த்ரத்தால் , பாம்பின் விஷம் முழுவதையும்
இறக்கி, கடிபட்டவனைப் பிழைக்க வைக்கிறார்.
அதைப்போல, ராமானுஜரும், அஷ்டாக்ஷரம், த்வயம்
போன்ற மந்த்ரங்களை பெரியநம்பிகளிடம் உபதேசமாகப்
பெற்று, தத்வ,ஹித, புருஷார்த்தங்களை நன்கு அறிந்து,
தன் அடியார்கள் ப்ரபத்தியை அனுஷ்டிக்கச் செய்து,
அடியார்களின் ஸம்ஸாரவ்ருக்ஷ விஷங்களை நீக்கி,
நல்ல வாழ்வை அளிக்கிறார்.
24. நாத : ஸ ஏஷ யமிநாம் நக ரஸ்மி ஜாலை :
அந்தர்நிலீநமபநீய தமோ மதீயம் |
விஜ்ஞாந சித்ரமநகம் லிகதீவ சித்தே
வ்யாக்யாந கேளி ரஸிநேக கராம்புஜேந ||
உடையவர்,யோகீச்வரன் . இவர், ஊனக்கண்ணால்
பார்க்க இயலாததையும் பார்க்கும் சக்தி பெற்றவர்.
இவர், தமது உபதேசமுத்ரை உள்ள வலது திருக்கர
நகங்களின் காந்தியால், மனத்தில் மறைந்திருக்கும்
அறியாமை இருளை அகற்றி, ஞானத்தை உபதேசிக்கும்
விதமாக , உபதேச முத்ரையோடு கூடிய திருக்கைகளில்,
இருவிரல்களையும் குவித்து, ஒப்பற்ற ஓவியர் போல
ஒளிர்கிறார்