திருப்பாவைக் கிளிக்கண்ணி –1

Posted on Apr 7 2016 - 12:34pm by srikainkaryasriadmin

திருப்பாவைக் கிளிக்கண்ணி
———————————— upto 13771_901036606627363_2653486557764905794_n10 paasurangal

1.ஆண்டாளின்  அவதாரம்

   ஆண்டவனின் அருட்பார்வை

   தீண்டுமோ இன்னல்கள் –கிளியே

   திருப்பாவை சொல்லிவிடில்

2.மார்கழி பிறந்துவிட்டால்

   மகளிர்க்குக் கொண்டாட்டம்

   விதம் விதமாய்க் கோலங்கள் –கிளியே

   வீதியிலே இழைத்திடுவர்

  1. சின்னஞ்சிறு பாலகர்கள்

    சீக்கிரமே துயிலெழுவர்

    பொங்கல் கிடைக்குமென்று –கிளியே

   போய் போய்ச் சாப்பிடுவார்

  1. கன்னியர்கள் நோன்பிருப்பர்

    காதலர்கள் காத்திருப்பர்

    ஊதல் காற்றுக்கெல்லாம் –கிளியே

    பாதகமே செய்திடுவர்

  1. பக்தர்கள் குழுமிடுவர்

    பலப்பல நாமாக்கள்

    பஜனைகள்  செய்திடுவர் –கிளியே

   பாடியே போற்றிடுவர்

 

 

  1. அப்படியென்ன இம்மாதம் ?

    அருமைப் பெருமாதம் !

    கண்ணனின் மாதமிது!–கிளியே

   கோதையின் மாதமிது.

  1. திருப்பாவை செப்பினாள்

   திருவுக்கும் திருவான

   நாரணனுக் களித்தாள்  —கிளியே

   நாச்சியார் திருமொழியும்

 

  1. கோதையின் திருவடிக்கே

    கோடியாய் நமஸ்காரம்

    திருவடி பணிந்து நான்—கிளியே

    திருப்பாவை வேண்டினேன்

  1. என்தாய், இனியவளாய்,

    எனக்கே  அருள்  என்றாள் !

   திகட்டாக் கிளிக்கண்ணிகிளியே

   திருப்பாவை சொல்லுகிறேன்

—————————————————

பாசுரம் 1.
———–

அதிகாலை எழுந்திருந்து

ஆற்றில் முங்கி நீராடி

நோன்பு தொடங்கிவிடில் —கிளியே

நாரணன் அருளிடுவான்

பாசுரம் 2
——————-

நோன்புக்கு வேண்டுவது

நாரணன் தாள் தொழுது

நெய்பால் தவிர்த்துக் —கிளியே

மையும் ,பூவும் தள்ளி

செய்யாதன செய்யாமல்

பொய் வார்த்தை கூறாமல்

உய்வதற்கு வழியென்று—கிளியே
உள்ளதைத் தானம் செய்

பாசுரம் 3
—————-

உத்தமனின் பேர்பாடி

உகந்த நோன்பிருந்தால்

பசுக்கள் வள்ளல்கள் –கிளியே

பாரெங்கும் செல்வங்கள்

பாசுரம் 4
——————–

பஞ்சுபோல் மேகங்கள்

தஞ்சம் அடையும் கடல்

கடலின் நீரெல்லாம் –கிளியே

கார்காலப் பெருமழைகள்

மின்னல் ஆழி, இடிசங்கம்

மேன்மேலும் சரமழைகள்

எங்கும் செலுத்தும் கோதண்டம்–கிளியே

எங்கள் மகிழ்வே நீராட்டம்

அடுத்த  பாசுரங்கள்  அந்தந்த நாளில் —ஆண்டாள் அருளால்

   

 

 

 

திருப்பாவைக் கிளிக்கண்ணி —2
—————————————————–

பாசுரம் 5
———–

தூய்மையாய் , தூமலரால்

மாயவனை அர்ச்சித்தும்,

தொழுதும், சிந்தித்தும், —கிளியே

தோத்தரித்துப் பணிந்தால்,

பிறவிதொறும் செய்தபாவம்,

பிறவிதனில் வருமதுவும்,

நெருப்பில் தூசாகும்!—கிளியே

நாரணன் அருளிடுவான் !

பாசுரம் 6
—————-

சிலம்புவது பறவைகள் !

கிளம்புவது சங்கு ஒலி !

அரி ,அரி எனச் சொல்லிக் –கிளியே

அனைவரும் கோவிலுக்கு!

கோவிலிலே இருக்கின்ற

கோவிந்தன், கண்ணன்

அவன் பெயரைச் சொல்லிக் –கிளியே

அகம் குளிரக் கண்டாரே  !

பாசுரம் 7
—————

வலியன்கள்  கீச்சும் ,

வளையல்கள் பேச்சும் ,

செவிகளில் பட்டும்,–கிளியே

சயனித்து இருக்கின்ற

நாயகப் பெண்பிள்ளை,

மாயனைப் பாடுவதால்

மயங்கி இருப்பதென்ன !–கிளியே

மாகதவம் திறந்துவிடு !

பாசுரம் 8
——————

கிழக்கு வெளுத்ததவும் ,

கறவைகள் மேய்வதுவும்,

அழகிக்குத் தெரிந்திருந்தும் –கிளியே

அசையாமல் இருப்பதென்ன !

சேர்ந்து சென்று பாடி ,

சேர்ப்பீர் “பறை” என்றால்

தேவாதிதேவனவன்! –கிளியே

ஆவாவென்றருளிடுவான் !

பாசுரம் 9
————–

மாடத்து விளக்கெரிய ,

மணம் கமழும் தூபங்கள் !

தூங்கும் மாமன் மகள் –கிளியே

தாள் அதனை நீக்கச்சொல்

மாமியே ,அவள்தாயே !

மகளை எழுப்பி விடு !

மகள்தான்  ஊமையோ?–கிளியே
செவிடோ,மதமதப்போ ?

மந்திரத்து மயக்கமோ ?
மயக்கத்தால்  தூக்கமோ ?

மாமாயன் பேரும் பலவும் –கிளியே
நாமங்கள் சொல்லுகிறோம் !

பாசுரம் 10
——————-

பெருவுறக்கப் பெண்ணே !

போரினில் கும்பகர்ணன் ,

பெருந்துயில் தந்தானோ?–கிளியே

பேதமைதான் செய்தானோ?

அருங்கலமே! ஆரணங்கே !

தருணமிது எழுந்துவிடு !

கதவைத் திறந்துவிடு!—கிளியே

கால் கடுக்க நிற்கின்றோம் .

About the Author

Leave A Response