ப்ரகாசிகா —–
வைபவ ப்ரகாசிகா ——
சண்டமாருத ஸ்வாமி அருளிய வைபவ ப்ரகாசிகா ——-
ஸ்ரீமத் வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகா !
” ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன , ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ” என்று கோஷித்த பரமாசார்யனுக்கு
159 வது ஸ்லோகத்தில் ” ஜயதி… ஜயதி ….ஜயதி… ஜயதி ” என்று நான்கு ஜயதி
அனுபவிப்பவர்கள், ஆசார்ய அனுக்ரஹம் பெற்றவர்கள்
மொத்தம் 165 ஸ்லோகங்கள் —–கூட்டினால் வருவது 3
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தை அனுக்ரஹித்தவருக்கு
தத்வ த்ரயத்தை விவரித்தவருக்கு
மூன்றின் பெருக்கமாக 165 ஸ்லோகங்கள்.
ஸ்ரீ குமார வரதார்யசார்ய ஸ்வாமி
“குருவே தைவதாய ச ” என்று, தமக்குக் குருவான ஸ்வாமி தேசிகனே தனக்குத் ( நமக்குத் )
தெய்வம் என்று அருளி, அந்தத் தெய்வம் சமீபத்தில் இருக்க
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய ; கவிதார்கிக கேஸரி
வேதாந்தா சார்ய வர்யோமே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி
என்று ப்ரார்த்தித் தார்
அந்தப் பரமாசார்யானோ
பிராட்டி விஷயமாக ஸ்ரீ ஸ்துதியிலும்
ஸ்ரீ பேரருளாளன் விஷயமாக , ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்திலும்
முறையே
“ஸந்நி தத்தாம் ஸதாமே ” என்றும், ” தேவதா ஸந்நி தத்தாம் ” என்றும்
திவ்ய தம்பதிகளை சமீபத்தில் இருக்கப் ப்ரார்த்தித்தார் ; ஸ்வாமி தேசிகனுக்கு மிகப் ப்ரியமான
ஸ்ரீ பெருந்தேவித் தாயாரும், ஸ்ரீ தேவப் பெருமாளும் என்றும் இப்படியே —-அர்ச்சாவதாரத்திலும் ஸ்வாமி
தேசிகனின் சமீபத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்
அப்படிப்பட்ட பரமாசார்யனை ” ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி ” என்று நாம் ப்ரார்த்தித்தால் ,
ஸ்வாமி தேசிகனை விட்டுப் பிரியாத திவ்ய தம்பதியர்
ஆசார்யனுடன் கூடவே நம்முடைய சமீபத்தில் நித்ய வாஸம் செய்வர் என்பது
உள்ளங்கை நெல்லிக் கனியாகும்

