Ramanuja daya pathram–1

Posted on Apr 19 2016 - 10:20am by srikainkaryasriadmin

ராமானுஜ தயா பாத்ரம்  …

.அவதார தினம் —–ஆவணி —-ஹஸ்த நக்ஷத்ரம்
————————————————————————————-

ஸ்ரீ மாந்  வேங்கட  நாதார்ய : கவிதார்க்கிக  கேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே  ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி  ||
————————
ராமாநுஜ தயா பாத்ரம்—-அவதார தினம் ஸ்ரீ தேசிகனடியார்களுக்கு மிகவும்
முக்யமானது.ராமாநுஜ தயா பாத்ரம் –இதன் அவதாரப் பெருமை, மஹிமை ,
அர்த்த விசேஷங்கள்—இவைகளை  அடியேன்   7–9–13  மற்றும் 14–9–13
தேதிகளில்  “ஸ்கைப் ‘  மூலமாக  உபன்யாஸம் செய்தேன்.

ராமாநுஜ தயாபாத்ரம்—-இந்த மந்த்ரச் சொல்லைக் — கேட்டவுடனே , நமது
நினைவுக்கு, வருவது ஸேவா ஸ்வாமி .
வில்லிவாக்கத்தில் எழுந்தருளி இருந்து, ஆசார்யரான ஸ்வாமி தேசிகன்
ஸேவையைத் தவிர வேறு ஸேவை இல்லை என்று  தேசிக தர்ஸனத்தைப் பரப்பி,
வில்லிவாக்கத்தில் மணிமண்டபத்தை ஸ்தாபித்து, அங்கு ஆசார்யன் ஸ்வாமி
தேசிகனையும், அவருக்கு அருளிய ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனையும் அர்ச்சா
மூர்த்திகளாக ப்ரதிஷ்டை செய்து, எண்ணுவது எல்லாம் ஸ்வாமி தேசிகன்,
பேசுவது எல்லாம் ஸ்வாமி தேசிகன், எழுதுவது எல்லாம் ஸ்வாமி தேசிகன்,
புகழ்வது எல்லாம் ஸ்வாமி தேசிகன், என்று மற்றொரு அபிநவ தேசிகராகவே  இந்த
நில உலகை அலங்கரித்து, ராமானுஜ தயா பாத்ரம் –அவதார உத்ஸவத்தை
பேட்டைகள் தோறும் ,க்ருஹங்கள் தோறும் ,கோயில்கள் தோறும் நடத்தி,
உபந்யஸித்து,அடியேனுடைய க்ருஹத்திலும் உபன்யஸித்து,
அடியேனுக்கு வழிகாட்டியாய், அடியேனை எழுதுவித்து ,பேசுவித்து ,
கடைசியாய்ப் புலம்ப வைத்து, வைகுந்த நகரம்
ஏகிவிட்டார்.
கோதை தமிழைப் பற்றி “ஸ்கைப்” மூலமாக  உபன்யாஸம் செய்தபோது, ஸ்வாமி
தேசிகனின் சொல்லாற்றல் தமிழில் ஈடு இணையற்றது என்று சொல்லி இருந்தேன்.
ஸ்வாமி தேசிகனின் தமிழைப்பற்றி  விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று
அயல்நாட்டு பக்தர்கள் ஆணை இடுகிறார்கள் .அதற்கு முன்பு, ஸ்வாமி தேசிகனைப்
பற்றி, அவருடைய உலகளாவிய பெருமைகளில் —சிலவற்றையாவது,” ராமாநுஜ தயா
பாத்ர”  உபந்யாஸமாகச்  சொல்வதற்கு —சென்றவருஷம், அடியேன்
அநவரதமும் தொழும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனும், ஸ்ரீஹேமாப்ஜவல்லித்
தாயாரும்(அடியேன் குடிலில் நித்ய வாஸம் ) அநுக்ரஹித்தார்கள்
இப்போது எழுதுவதற்குக்  கிடைத்துள்ள பாக்யமும்  , அந்த அநுக்ரஹமே .

இனி,  ராமாநுஜ தயா பாத்ரம்
—————————————–
கலியுகம் பிறந்து, 4440 ம் ஆண்டில் பஹூதான்ய வருஷம்….(இப்போது கலியுகம்
5115ம் வருஷம் )
இந்தத் தனியனை,  ஆவணி மாஸ  ஹஸ்த  நக்ஷத்ரத்தில் அநுக்ரஹித்தவர் , ஸ்ரீ
பேரருளாள  ஜீயர்.
இவர் இந்தத்  திருநாமத்துடன், பிறகு, ப்ரஹ்ம தந்த்ர  ஸ்வதந்தரர் என்று
ஸ்வாமி தேசிகனாலே பஹூ மானிக்கப்பட்டு, ஸ்ரீ பரகால மடத்தை  மைசூரில்
ஸ்தாபித்து, ஸ்வாமி தேசிகன் ஆராதித்து, பிறகு அநுக்ரஹித்துக் கொடுத்த
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனை  ஆராத்ய தெய்வமாகப் பெற்று, அநேகமாயிரம் சிஷ்ய
வர்க்கங்களுடன் அடுத்தடுத்த ஆசார்ய பரம்பரையுடன் அங்கங்கு மடத்தின்
கிளைகளை  நிறுவி, பராமரித்து, தேசிக ஸம்ப்ரதாயத்தைப் பரப்பி வரும்
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்.

——————————

இப்போது, குரு பரம்பரையைக் கொஞ்சமாவது
தெரிந்துகொள்வது/ நினைவு படுத்திக் கொள்வது அவச்யம்

ஸ்ரீ இராமாநுஜர்
|
|
இவருக்கு ஆயிரகணக்கான சிஷ்யர்கள் —முக்யமானவர்கள் 74
சிம்ஹாசனாதிபதிகள்
இவற்றில்  முக்யமானவர் —–பட்டர்
பிறகு,
திருக் குருகைப்பிரான்  பிள்ளான்
இவருக்கு ” குருகேசர் ” என்றும் திருநாமம்.
இவர்  பெரிய திருமலை நம்பிகளுடைய  இரண்டாவது குமாரர்
ஸ்ரீ  உடையவர் நியமனப்படி,
திருவாய் மொழிக்கு ” திருவாறாயிரப்படி ” என்று
வ்யாக்யானம் செய்து, உடையவரால் மிகவும் உகக்கப்பட்டு,
“பகவத் விஷயம் ” என்று  இன்றளவும் கொண்டாடப் படுகிறது.
இவருக்குப்பிறகு —-ஸ்ரீ விஷ்ணு சித்தர் என்கிற ”
எங்களாழ்வான் ” இவர் , திருவெள்ளறையில் அவதரித்தவர்
.            பிறகு….நடாதூர் அம்மாள்
பிறகு  நம்பிள்ளை
அடுத்து, அப்புள்ளார்
அவருக்கு அடுத்து,  ஸ்வாமி  வேதாந்த தேசிகன் —–
தூப்புல்  திவ்ய தேசத்தில்  அவதாரம் .

————————————————————————————————————————
ஆசார்ய  பரம்பரை—–இருவகை
ஒன்று—-அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்ய பரம்பரை
மற்றொன்று —க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய  பரம்பரை
ஸ்ரீ உடையவருக்கு முற்பட்ட—–அதாவது, பின்னருளால்
பெரும்பூதூர் வந்த வள்ளல், பெரியநம்பி,
ஆளவந்தார் , மணக்கால் நம்பி  என்று சொல்கிறோமே, அப்படி
ஸ்ரீ உடையவருக்கு முற்பட்ட ஆசார்யர்கள்,
ரஹஸ் யார்த்தங்களை  தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு
முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்கு ப்
பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம்
நோகாதவண்ணம் , அதேசமயம், தங்கள் மனம்
உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி
செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள்.
இதை  “அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்ய  ”  பரம்பரை என்று
சொல்வர் .இப்படிப்பட்ட பரம்பரை, திருக்கோஷ்டியூர்
நம்பி என்கிற மஹாசார்யனுடன் முடிந்தது.

ஸ்ரீ பாஷ்யகாரர் அவதரித்து, ஸம்ஸாரிகளிடம் கருணைகொண்டு,
அந்த சிஷ்யர்கள்ஸம்ஸாரபந்தத்திலிருந்து
விடுபடவேண்டும் என்கிற வாத்ஸல்யத்துடன், அவர்களைத்
திருத்தி, உபதேசங்கள் செய்யலானார்.
ஸ்ரீ உடையவர் வழிவந்த ஆசார்யர்களும், இதே முறையை
அனுசரித்து, சிஷ்யர்களிடம் கருணைகொண்டு
அவர்களை உய்விக்க உபதேசங்கள் செய்யத் தொடங்கினார்கள்.
ஆதலால், இது, “க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ”
பரம்பரை என்று சொல்லப்படுகிறது.  இதுவே ஸ்ரீ ராமாநுஜ
தர்ஸனம் ; ஸித்தாந்தம்;ஸம்ப்ரதாயம்
(பார்க்க–அடியேனின்–கேட்பதும்,சொல்வதும் –ஜூன் 2009,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் மாதப்  பத்ரிகை)-

ராமாநுஜ  ஸித்தாந்தம்
,ராமாநுஜ ஸம்ப்ரதாயம்  என்ன என்பதைச் சுருக்கமாகத்  தெரிந்து, கொள்வோம்
அப்போது, ஸ்வாமி தேசிகனை “ராமாநுஜ  தயா பாத்ரம்” என்று கொண்டாடுவது
கொஞ்சம் புரியும்.

ஸித்தாந்தங்கள்,
ஸம்பிரதாயங்கள் இரண்டு வகை.
ஒன்று—-வேதத்தைத் தழுவிய ஸித்தாந்தங்களும்ஸம்பிரதாயங்களும் ——-இது வைதிகம்
மற்றொன்று —-வேதங்களை ஆதாரமாகக் கொள்ளாதவை —-இது அவைதிகம்
ராமாநுஜருடைய ஸித்தாந்தமும், ஸம்ப்ரதாயமும், வேதங்களைத் தழுவியவை
—அதனால் வைதிகம்.
ராமாநுஜருடையஸித்தாந்தம் என்பது, ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை.
ராமாநுஜருடைய ஸம்ப்ரதாயம் என்பது, ராமாநுஜரால் ஏற்கப்பட்ட
குருபரம்பரையில், ஆசார்யன்,சிஷ்யனுக்கு உபதேசிப்பது அவன், தன்னுடைய
சிஷ்யனுக்கு உபதேசிப்பது  என்கிற க்ரமத்தில், பரம்பரையாகத் தொடர்ந்து
வரும் உபதேசங்கள்/ அனுஷ்டானங்கள்

மாதா, பிதா, குரு , தெய்வம்
என்று சொல்கிறோம். நமக்கு முதலில், மாதா—மாதாவைத் தெரிந்துகொள்ளாத
மகவு—குழந்தை, இல்லை. இந்த மாதா தான், இவர்தான் பிதா என்று அடையாளம்
காட்டுகிறாள். அந்தப் பிதா, இவர்தான் ஆசார்யன் என்று ,  குருவை அடையாளம்
காண்பிக்கிறார் .ஆசார்யன், இவர்தான் தெய்வம்–பகவான் என்று நமக்குச்
சொல்லி, பகவானைப் பற்றி, பல புராணங்கள், இதி ஹாஸங்கள்  இவைகளைச் சொல்லி,
ரஹஸ்ய  க்ரந்தங்களை உபதேசித்து, பகவானின் திருவடியை ,இந்த ஜீவன்
அடைவதற்கு, பரிச்ரமப்படுகிறார்/ படாதபாடு படுகிறார் ஆதலால், மாதா, பிதா,
குரு , தெய்வம்  இந்த நால்வரில் —நால்வரும் முக்யமாக இருந்தாலும்,
ஆசார்யனின் பங்கு மிக முக்கிமானது.

இனி,” ராமாநுஜ தயா பாத்ர……தனியன்

———————————————————————————-
வைகுண்ட வாசி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி யின் வேண்டுகோள்—-

ஸ்ரீ தேசிகன் புகழ் பாடுவது, பாடித் திரிவது, நமது தலையாய கடமை. ஏதாவது
ஒரு காரணத்தைக் கொண்டு, முன்னோர் காட்டிய வழியில், ஸ்வாமியின் வைபவத்தை
திருமாளிகைதோறும்  சென்று விண்ணப்பிப்பது  இக்காலத்துக்கு ஏற்ற
செயலாகும்.ந்யாயமான  வழியில், தேசிக பக்தியைப் பரப்புவதே  நமது லக்ஷ்யம்

விபவ வருஷத்தில், ஸ்வாமியின்  அவதாரம் .பஹூதாந்ய வருஷத்தில்  ஸ்வாமி
விஷயமாக ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர  ஸ்வாமி  இத் தனியனை ஸமர்ப்பித்தார்.
ஸ்வாமியின் ,ப்ரபந்தார்த்த  நிர்வாகத்தில் ஈடுபட்டு யாதவாத்ரியில்
—மேல்கோட்டையில்,  இத் தனியன் ஸமர்ப்பிக்கப்பட்டது    என்று குரு
பரம்பரையில் கூறப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமியின் எழுபதாவது  திரு நக்ஷத்ரத்தில்  இது
ஸமர்ப்பிக்கப்பட்டது என்று தேறுகிறது ————————
——–நன்றி….. ஸ்ரீ கண்டாமணி
— ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் புதல்வர்-ஸ்ரீ தேசிக ஸேவா ஆசிரியர் –

————————————————————Thiruvahindrapuram-Swami-Desikan-Varshika-Thirunakshatra-Mahotsavam551

About the Author

Leave A Response