
இதை இத்துடன் நிறுத்தி, அடுத்ததான
,கடைசியாகச் சொன்னாரல்லவா —இது சம்பந்தமாக, வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி
, தன்னுடைய அக்ஷய ஆராதனத்தில் “தாது” வருஷ ஸ்லோகத்தில்,
விஸர்கத்தில் (ஸ்ருஷ்டியில் ), தாதா எனப்படும் ப்ரஹ்மா சிறந்தவர்—வேங்கடநாதன் என்கிற
ஸ்வாமி தேசிகன், வைத்யர் —தாதுவுக்கு நிகரானவர். அவர், நம்முடைய சங்கடங்களைப் போக்கி,
மங்கலத்தைக் கொடுப்பாராக —என்கிறார்.
இப்போது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் —–
ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
இதற்கு விளக்கம் , அடியேன் “கேட்பதும், சொல்வதும் ” என்கிற தலைப்பில்
ஸ்ரீ காஞ்சி பேரரருளாளன் பத்ரிகையில்
173வதாக எழுதி இருக்கிறேன் ( மொத்தம் 1008 எழுதி இருக்கிறேன்—அடியேன் எழுதியதை
,அடியேனே சொல்லிக்கொள்ள வேண்டி இருக்கிறது—படிப்பவர்கள் க்ஷமிப்பார்களாக )
அதில், ஆசார்யன் செய்ய வேண்டுவதாகச் சொல்லப்படுவது நான்கு—
-1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—-இப்படிப்பட்ட ஆசார்யன்.
“சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார். இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.
அதனால்தான், உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த ஆசார்யர்களை,
” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” ,
” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .
ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப்போல,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
வ்யாக்யான கர்த்தாக்கள், “நித்ய யோகேதி சாயினே……” என்கிறபடியே
, நித்ய ஸம்பந்திலேயாய் , வேங்கடசா வதாரோயம்…… என்கிற க்ரமத்திலே ,
பூர்வ ஸ்வபாவத்தில் அலர்மேல் மங்கையாய் நின்று , இவ்வவதராத்தில்,
“மனுஷயத் வேச மானுஷீ ” என்கிறபடியே குத்ருஷ்டி நிரசநோபயுக்தையான
ஆத்ம வித்யா ரூபையாயும் ,பக்தி பரம்பரா ரூபையாயும், பிராட்டி நிற்கிறபடியே
சொல்லிற்றாயிற்று ”
வேதாந்தார்த்தப் ப்ரதாயினே ஸூக்தி பரம்பரா ரூபையும் என்று, இவர்,
தமக்கு, திருவேங்கட முடையான் வேதாந்த தேசிகத்வ பட்டாபிஷேகம் பண்ணின
தசையிலும், இவர், குத்ருஷ்டிகளை நிரஸித்தபின்பு
“கவிதார்கிக ஸிம்ஹம் ” என்று, அருகேயுள்ளார் ஜயகோஷணை இட்ட தசையிலும்,
அவர்கள் இருவரும் களித்து, பூர்வம் நாம் பண்ணின சித்தாந்த பட்டாபிஷேகம் ,
ஸப்ரயோஜனமாய்த்தென்று “வேதாந்த தேசிகன் ” என்றும்,
“ஸர்வதந்த்ர ஸ்வ தந்த்ரர் ” என்றும், அவர்கள், தமக்கிட்ட ப்ரஸித்த திருநாமம்
பெற்றபோதுமுண்டான “ஜய ஸ்ரீ” யை சொல்லிற்றாகவுமாம். அதாவது, பிராட்டி,
ஆத்ம வித்யா ரூபையாயும் , பக்தி பரம்பரா ரூபையாயும் இருப்பதை,
இந்த வார்த்தை சொல்கிறது.
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட, வளர்க்க,
பிராட்டி , ஆத்மா வித்யையாக இருக்கிறாள்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு முன்பாக “ச்ரியை நம : ” என்று
த்யாநித்து விட்டுத்தான் , பிறகு,
“ஸ்ரீ தராய நம : ” என்று பகவானைத் த்யாநிக்கிறோம்
.இப்படியாக, “ஸ்ரீமத்” என்பதற்கு, வ்யாக்யானம் சொல்லப்படுகிறது.
வேங்கடநாதார்யம்—-
———————-
திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான, ஸௌலப்ய
சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல், அதையே காரணமாகக் கொண்டு,
உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களை த்
திருத்திப் பணிகொள்ள ,பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு,
” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு ,
ஆசார்ய ரூபராய் அவதரித்து, நின்றபடியைச்
சொல்லிற்று. ……..
உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||
.
இதையே, திருவரங்கத் தமுதனார், தன்னுடைய இராமாநுச நூற்றந்தாதியில்,
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார். ச்லோகத்துக்கும்,
பாசுரத்துக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள் !
ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன; வர்ணாஸ்ரம தர்மங்கள்
பழைய நிலைக்கு வந்தன; பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;
இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.
” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .
இனி—–“-வந்தே வேதாந்த தேசிகம் ”