5
வந்தே வேதாந்த தேசிகம்
—————————–
ஸ்வாமி தான் அருளிய “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில்,
வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||
என்று அருள்கிறார்.
அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு,
சிறியனான என்னை வேதாந்ததேசிக பீடத்தில் அமர்த்தி, கைகளில் மகர யாழை
எடுத்துப் பாடச் செய்வதைப்போல, இந்த “தயா சதகம்”
என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக்கொண்டு துதிக்கச் செய்தான் ….
.என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.
இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச்
சூட்டினான். திருமலையில் உற்பத்தியானது,
திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது. அரங்கம் என்றால் “ஸபை” தானே.
வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
-தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..” என்று
பலகாலம் சொல்லி, வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..
கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில்
சென்று படுகுழியில் விழாமல் இருக்க, நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ
—-காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய ,
தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது. இவர்தான் தேசிகன் —
வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….
அவர்களை, அக்ஷர புருஷர்களாக —முக்தர்களாக– மாற்றும்
ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை
அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து
வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால்
“வந்தே” என்று, விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன்
ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன்
வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
அருளினார் என்று பார்த்தோம் வ்யாக்யானத்தை அனுபவித்தோம்
சுருக்கமாகச் சொன்னால்,
ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும்
மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி தன்னுடைய உபன்யாஸங்களில்,
கூறுவார்.கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற
நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்; அதாவது—-
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்
இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம்
என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல்கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
.இந்தத் தனியன் அவதரித்ததே அங்குதானே என்பார்.
நம்இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலா
ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற
பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்
வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு
அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—
வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம்
ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே
என்றும் , புகழ்ந்து உரைப்பர்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —அதாவது, பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் .
பிறருக்கு இவை சேராது.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி, மேலும் சொல்வார்—–
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.
மஹான்களாலும்,ஆசார்ய ச்ரேஷ்டர் களாலும், கொண்டாடப்பட்டு, வ்யாக்யானங்கள்
செய்யப்பட்டுள்ள, ஸ்வாமி தேசிகனின் பெருமை, புகழ், தேஜஸ், கீர்த்தி, உள்ளிட்ட
யாவற்றையும் சொல்லும் , இந்தத் தனியன் அரிய பொக்கிஷம்; அருமருந்து;
மந்த புத்தியினனான ,அடியேனுக்குத் தெரிந்தவரை, பூர்வாசார்யர்கள் அருளியுள்ள
க்ரந்தங்கள் ,ஆசார்யர்களிடம் க்ரஹித்தவை—–முக்யமாக வைகுண்ட வாஸி
ஸ்ரீ ஸேவா ஸ்வாமி உபன்யாஸங்களில் க்ரஹித்தவை –இவைகளை
வ்யாக்யானமாக எழுதும்படியான பாக்யம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
பூர்வாசார்யர்களைத் த்யானித்து புந : புந : நமஸ்கரிக்கிறேன்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் திருவடிகளில் நமஸ்கரித்து,
அடியேனின் க்ருதக்ஜதையை மாநஸீகமாக ஸமர்ப்பிக்கிறேன்
உபன்யாஸமாகச் சொல்லும் பாக்யத்தை அருளிய ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனும்,
ஸ்ரீ ஹேமாப்ஜவல்லித் தாயாரும் ( அடியேன் க்ருஹத்தில்—-நித்ய வாஸம் ) ,இதை
எழுதி முடிப்பதற்கும் அனுக்ரஹித்தார்கள் .
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
பின் குறிப்பு:—
ராமாநுஜ தயா பாத்ரம் —-என்கிற இந்தத் தனியனின் அர்த்த விசேஷங்களைப் படித்தவர்கள்,
மகிழ்ச்சி அடைந்தால் , மகிழ்ச்சியை அனைத்து தேசிக பக்தர்களிடமும்
பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினால், விருப்பம் தீர்மானமாக உருவெடுத்தால்,
வசதி உள்ளவர்கள் அச்சிட்டு, இலவசமாக,
ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்திரத்தன்று விநியோகிக்கலாம்.