அக்காலத்தில், “அங்கதம்’ என்பது, ஒருவரின் கீழ்த்தரமான குணத்தை, நயமாக,
நகைச் சுவையுடன் சொல்லும் வழக்கம் இருந்தது. விவேக சிந்தாமணி ,என்பது
நகைச் சுவையுடன் சொல்லும் வழக்கம் இருந்தது. விவேக சிந்தாமணி ,என்பது
பழம்பெரும் நூல்.அதிலே ஒரு செய்யுள்;–
குரங்கு நின்றுகூத் தாடிய கோலத்தைக் கண்டே
அரங்குமுன்பு நாய் ஆடிக்கொண்டாடுதல் போல
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டே
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் சிறியவர் செய்கை.
——விவேக சிந்தாமணி பாடல் 109 —–
குரங்கு ஒன்று அரங்கத்தில் கூத்தாடிய அழகைக் கண்டு, அரங்கத்தின் முன்பாக
நின்றிருந்த நாய், தானும் ஆடி, ஆடிய அக்குரங்கையும் புகழ்ந்தது.
இது,எதைப் போல என்றால், ,
இது,எதைப் போல என்றால், ,
தங்கள் கைகளை அங்குமிங்கும் வீசிப் பேசுகின்ற அற்பர்களின் ஆடம்பரப்
பேச்சுக்களைப் பார்த்தும், கேட்டும், மூடர்கள், தலையை அசைத்துப் புகழ்வதற்கு
ஒப்பாகும்.
மூடர்களை, மூடர்கள் கொண்டாடுவார்கள் இதற்கான ஒரு பாடல்–
விவேக சிந்தாமணியிலிருந்து ——
கழுதை காவெனக்கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகராமெனப் பகர்தல்
முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போலாம்.
“கா” வெனக் கதறிய கழுதையின் குரலைக் கேட்டு, மகிழ்ச்சியுடன்
பேய் ஒன்று, அதைத் தொழுது துதிக்கிறது.அதைக் கேட்ட கழுதை
இசையில் நமக்கு நிகர் நாமே என்று இறுமாப்பு அடைகிறது.
இதைப் போல, மூடர்களை, மூடர்கள் கொண்டாடுகிறார்கள்.
இவைபோன்றவை, நம்மை எங்கு இழுத்துச் செல்லுமோ என்று
தோன்றுகிறது. இதுவும் பகவானின் ,திருவிளையாடல்தானோ !
.

—