ஸ்ரீ ந்ருஸிம்ஹம் –4
சுக்ரனின் ஸ்தோத்ரம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் , நவ க்ரஹங்களில் ஒருவரான சுக்ரன் சொன்ன ஸ்தோத்ரம் உள்ளது—-
சுக்ரன், மனிதர்களின் கண்களுக்குக் காரணமானவர் இவர் ,ஒருவரின் ஜாதகத்தில் பலம் குறைந்தோ , குரூரப் பார்வையிலோ இருந்தால்,கண்களில் கோளாறு ஏற்படும்.பலிச் சக்ரவர்த்தி,குரு சுக்ராசார்யார் ,வாமன –த்ரிவிக்ரம அவதாரம் –இவை எல்லாருக்கும்
தெரிந்ததே. ஒரு கண்ணை ,வாமனனால் இழந்த சுக்ரன் ,கங்கையில் நீராடி இந்த ஸ்தோத்ரத்தால் ந்ருஸிம்ஹனைத் துதிக்க, சுக்ரன் இழந்த ஒரு கண்ணின் பார்வையையும் திரும்பப் பெற்றாராம்
அந்த ஸ்தோத்ரம் இதோ——
ஸ்ரீ சுக்ர உவாச :–
1. நமாமிதேவம் விச்வேசம் வாமனம் விஷ்ணுரூபிணம் |
பலி தர்ப்பஹரம் சாந்தம் சாச்வதம் புருஷோத்தமம் ||
2.தீரம் சோரம் மஹாதேவம் சங்கசக்ர கதாதரம் |
விஸுத்தம் ஞான ஸம்பன்னம் நமாமி ஹரிம் அச்யுதம் ||
3.ஸர்வசக்தி மயம் தேவம் ஸர்வகம் ஸர்வபாவனம் |
அநாதிமஜரம் நித்யம் நமாமி கருடத்வஜம் ||
4.ஸுராஸுரைர் பக்திமத்பி : ஸ்துதோ நாராயண : ஸதா |
பூஜிதம் சஹ்ருஷீகேசம் தம் நமாமி ஜகத்குரும் ||
5.ஹ்ருதி ஸங்கல்ப யத்ரூபம் த்யாயந்தி யதய :ஸதா |
ஜ்யோதிரூபம் அனௌபம்யம் நரஸிம்ஹம் நமாம்யஹம் ||
6. நஜாநந்தி பரம் ரூபம் ப்ரம்மாத்யா தேவதாகணா |
யஸ்யாவதார ரூபாணி ஸமர்ஸந்தி நமாமிதம் ||
7. ஏதஸ் ஸமஸ்தம் யேதாதௌ ஸ்ருஷ்டம் துஷ்டவதாத் புன : |
த்ராதம் யத்ர ஜகல்லீனம் தம் நமாமி ஜனார்த்தனம் ||
8பக்தைர் ரப்யர்ச்சிதோ யஸ்துநித்யம்பக்தப்ரியோஹிய : |
தம் தேவம் அமலம் திவ்யம் ப்ரணமாமி ஜகத்பதிம் ||
9. துர்லபம் சாபி பக்தாநாம் ய : ப்ரயச்சதி தோஷித : |
தம் ஸர்வசாக்ஷிணம் விஷ்ணும் ப்ரணமாமி சநாதனம் ||
ஸ்ரீ மார்க்கண்டேய உவாச :-
இதிஸ்துதோ ஜகந்நாத புரா சுக்ரேண பார்த்திவ |
ப்ராதுர்பூவ தஸ்யாக்ரே சங்கசக்ரகதாதர : ||
11. உவாச சுக்ரமேகாக்ஷம் தேவோ நாராயண :ஸ்ததா |
கிமர்த்தம் ஜாஹ்நவிதீரே ஸ்துதோஹம் தத்ப்ரவீஹிமே ||
சுக்ர உவாச :–
12.தேவதேவம் பூர்வமபவாதோ மஹாந்க்ருத : |
தத்தோஷஸ்யாபநுத்யர்த்தம் ஸ்துதவானஸ்மி ஸம்ப்ரதம் ||
ஸ்ரீ பகவானுவாச :–
13. மமாபராதாந் நயனம் நஷ்டமேகம் தவாதுனா |
ஸந்துஷ்டோஸ்மிதத : சுக்ர ஸ்தோத்ரேண நேனதேமுநே ||
14. இத்யுகத்வா தேவதேவேசஸ்தம் முநிம் ப்ரஹஸந்நிவ |
பாஞ்சஜன்னேய தத்சக்ஷீ :பஸ்பர்ச ச ஜனார்த்தன ||
15. ஸ்பிருஷ்ட மாத்ரேது சங்கேன தேவதேவேன சார்ங்கிணா |
பபூவ நிர்மலம் சக்ஷு :பூர்வந்நிருபஸத்தம || |
16ஏவம் தத்வாமுனே சக்ஷு பூஜிதஸ்தேன மாதவ : |
ஜகாமாதர்ஸனம் ஸத்ய: சுக்ரோபி ஸ்வாச்ரமம் யயௌ ||
17. இத்யேத துக்தம் முநிநா மஹாத்மனா
ப்ராப்தம் புரா தேவவர ப்ரஸாதாத் |
சுக்ரேண கிம்தே கதயாமி ராஜந்
புநஸ்ச மாம் பிருச்ச மனோரதாந்த : ||
—————————————————————-
கண் பார்வை வேண்டுவோர் .மேற்கண்ட ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்யச் சொல்லித் தினமும் , ச்ரத்தையுடன் செவிமடுக்க வேண்டும் —-
அபாமார்ஜன ஸ்தோத்ரம்
வெகு காலமாக வியாதியால் கஷ்டப்படுபவர்களுக்கு ,இந்த ஸ்தோத்ரம் ஸகலரோகங்களையும் போக்கும்.
இதில் த்யானத்தில் சொல்லும்போது,
சஞ்சத் சந்த்ரார்த தம்ஷ்ட்ரம் ஸ்புர துருரதநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத் பர்ஜந்ய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம் |
த்ரஸ்தாஸா ஹஸ்தியூதம் ஜ்வல தநல ஸடா கேஸரோத்பாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம் ||
என்றும் த்யாநிக்கப்படுகிறது
அதிமாநுஷ ஸ்த்வம்
ஸ்ரீ கூரத்தாழ்வான், தன்னுடைய அதிமாநுஷஸ்தவத்தில் ஒரு ச்லோகத்தில் ந்ருஸிம்ஹனைப் புகழ்கிறார்.
க்ரீடாவிதே :பரிகர :தவ யா து மாயா ஸா மோஹிநீ ந கதமஸ்யது ஹந்த ஜந்தோ : |
ஸஹ ! மர்த்யஸிம்ஹவபுஷ :தவ தேஜஸோ ம்சே சம்பு :பவன் ஹி சரப :சலபோ பபூவ ||
ஹே எம்பெருமானே ! மாயை என்னும் மூல ப்ரக்ருதி உன்னுடைய திருவிளையாடல்களுக்கு
உதவுகிறது —- இந்த முக்குணம் மயமான மாயை எத்தகையவராக இருந்தாலும் அவர்களை மயக்கி விடுகிறது.
ஹந்த —ஆச்சர்யம் !
சரபம் என்கிற பெயரை உடைய பறவையின் உருவை எடுத்த சிவன், உன்னை இந்த மாயையால்
மயங்கி அழிக்க முற்படும்போது , நரங்கலந்த ஸிம்ஹமான உன்னுடைய ப்ரகாசத்தில்
பெரிய ஒளியில் — பொறியில் அகப்பட்ட விட்டில் பூச்சியைப் போல் அன்றோ அழிந்தான் —
இரண்டு தலைகளும், சிறகுகளும் கூர்மையான நகங்களும் கீழ் நான்கு ,மேல்நோக்கி
நான்கு கால்களை உடையதும் பசுவைப் போலும் பறவையைப் போலும் பிராணி
சரபம் எனப்படும். இது ந்ருஸிம்ஹனை அழிக்க முயலும்போது, நருசிம்ஹான் இதை
அதே நகங்களால் கிழித்து எறிந்தார். இதை வராஹ புராணத்திலிருந்து தெளியலாம்.
ஸுந்தர பாஹுஸ்தவத்தில் கூறுகிறார் :–
ந வாயு பஸ்பந்தே ,யயது ரதவாஸ்தம் சசிரவீ
திசோநச்யந் ,விச்வாப்யசலத் அசலா ஸாசலகுலா |
நபச்ச ப்ரச்ச்யோதி ,க்வதிதமபி பாதோ நரஹரௌ
த்வயி ஸ்தம்ப்பே சும்ப்பத் வபுஷி ஸதி ஹே ஸுந்தர புஜ : ||
ஹே ஸுந்தரத் தோளுடைய அழகரே —-நீர் ந்ருஸிம்ஹனாக ஹிரண்யகசிபு அரண்மனையின்
இருந்தபோது, வாயு தேவன் எங்கும் அசையவில்லை ;சந்த்ர சூர்யர் மறைந்தனர்;
எல்லாத் திசைகளும் அழிந்தன;ஏழுலகும் நடுங்கியது;ஆகாயம் நழுவிற்று;
எல்லா நீர்நிலைகளிலும் ஜலம் கொதித்தது—-
அதாவது—ந்ருஸிம்ஹாவதாரத்தில் பஞ்சபூதங்களும் நிலை குலைந்தன,என்கிறார் .
பாகவத அபசாரப்பட்ட இரணியனுக்கு, ந்ருஸிம்ஹ அவதார வேளையில்
கட்டளைப்படி நடக்கவில்லையாம்.
அராளம் பாதாளம் த்ரிதசநிலய :ப்ராபி தலய :
தரித்ரீ நிர்தூதா ,யயுரபி திச :காமபி தசாம் |
அஜ்ரும்பிஷ்டாம் போதி :குமுகுமிதி கூர்ணத் ஸுரரிபோ :
விபந்தாநே வக்ஷ :த்வயி நரஹரௌ ஸுந்தரபுஜ ! ||
ஹே சுந்தரத் தோள் அழகரே—-நீர் ந்ருஸிம்ஹனாக அவதரித்து, தேவர்களின்விரோதியான இரணியனின் மார்பைப் பிளக்கும்போது, பாதாள லோகம் ,
அராளமாகியது –அதாவது கோணலாகியது; ஸ்வர்கம் அழியும் நிலை வந்தது; பூமியோ நடுநடுங்கியது;எல்லாத் திசைகளும் இன்னதென்று அறியாத
நிலையை அடைந்தன; சமுத்ரம் குமுகுமு என்ற சப்தத்துடன் பொங்கிச் சுழன்றுச் சீறியது —-
நகக்ரகசக ப்ரதி க்ரதித தைத்ய வக்ஷஸ்ஸ்த்தலீ
ஸமுத் தருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வம் வபு : |
விலோக்ய ருஷித :புந : ப்ரதி ம்ருகேந்திர சங்காவசாத்
ய ஏஷ நர கேஸரீ ஸ இஹ த்ருச்யதே ஸுந்தர : ||
ரம்பங்களைப்போன்ற நகங்களின் நுனியால், இரணியனின் மார்பைக் கீறியபோது,
அவன் மார்பிலிருந்து குருதி பெருக்கெடுத்து ஓடியது. தனது நிழலைப்பார்த்த சிங்க பிரான், நமக்கும் எதிரியாக சிங்கம் தோன்றி உள்ளதோ
சந்தேகப்பட்டு, அதையும் அழிக்கக் கோபமுற்றார் -அப்படிப்பட்ட ந்ருஸிம்ஹன்
திருமாலிரும் சோலையில் யாவரும் வந்து பணிய ஸேவை ஸாதிக்கிறார்