கண்ணன் கழலே இனிது ! இனிது !
————————————————————–
————————————————————–
இனியது எதுவெனக் கேட்பீராயின் ?
”இனிது, இனிது , ஏகாந்தம் இனிது ”
என்று பிதற்றுவர் ,வெண்பல் தவத்தவர் !
வென்றவன் இருக்க வீணன் வேண்டுமோ ?
2.கன்றுக்கிரங்கும் கண்ணன் இருக்க ,
கள்ளிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவர் !
இனிது இதுவென எடுத்துச் சொன்னால்,
இல்லை என்பர்; தொல்லை என்பர்.
3.பணி செய்தாலும், பிணி வந்தாலும்,
மனத்துக் கினியான் மனத்தில் உறைய
புனிதர் புகழும் கண்ணன் இருக்க
இனி எது வேண்டும் ? இதயம் இனிக்க !
4.இனியதில் இனிது, இனி ஏதுமில்லை !
இனியதில் இனிது, கண்ணனின் அழகு !
அழகுக்கெல்லாம் அழகன் கண்ணன் !
கண்ணன் கழலே இனியதில் இனிது!
5.கழலைப் பிடித்தோர், கண்ணனைப் பிடித்தோர்
பிடித்த கையினைப் பிடித்துத் தூக்கி ,
பிடித்த வண்ணம் பேரருள் அருளும் ,
கண்ணன் கழலே இனிது ! இனிது !
