Sri Nrusimham—17

Posted on Jun 19 2016 - 7:02am by srikainkaryasriadmin
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —17

 

13. ச்லோகம் 33

தினம்அநுதினநாதம் பூஜயித்வா திநாதௌ  நரஹரிமபி ஸம்யக் ப்ரோக்த மார்கேண  மந்த்ரி

ததநு ததநுமத்யா பஸ்மநா மந்த்ரிதேந  ப்ரதிரசயது ராக்ஞே வாப்ய பீஷ்டாய ரக்ஷாம்

ராஜ்ய அரசனுக்கு ஏற்படும் தொல்லைகளை நீக்கியும், அவனது பாராட்டைப்
பெற விரும்புபவர்களும், தினமும் இந்த ந்ருஸிம்ஹ மந்த்ரத்தால் ,
ஸுர்ய மண்டலத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் அந்தர்யாமியைத்

த்யானித்து ,ஸுர்யோதய சமயத்தில் பஸ்மத்தை மந்த்ரித்துக் கொடுக்க வேண்டும்

14. ச்லோகம் 39
ஸ்ரீ காம : ஸ்ரீப்ரஸுநை தசகமுத சதானாம் ஹீநேத் பில்வகாஷ்டை
தத் பத்ரைர்வா ப்ரஸுநை: ஸுமதிரத ஸமித்பி : பலைர்வா ததீயை :
புத்ரேப்ஸு :புத்ர ஜீவன் தனசித தஹனே தத்பலைர்வா ஸஹஸ்ரம்

தூர்வாபிஸ் த்வாயுஷேப்தாதபிமத மகிலம் ப்ராப்நுயான் மந்த்ரஜாபி

செல்வம் வேண்டுமா ?—வில்வமரத்தின் ஸமித்தால், இம்மந்த்ரத்தைச்
சொல்லி, 1008 தடவை ஹோமம் செய்யவும்.
அல்லது—
வில்வ இலை —வில்வப்புஷ்பம்–வில்வக்காயின் சில்லுகள்

இவற்றால் இம்மந்த்ரத்தைச் சொல்லி 1008 தடவை ஹோமம் செய்க.

சந்ததி உண்டாக–பிள்ளை பிறக்க–
பந்துஜீவச்செடி என்று இருக்கிறது–இதன் ஸமித்துக்களால் ,
இந்த மந்த்ரத்தைச் சொல்லி 1008 தடவை ஹோமம் செய்யவும்—
அதன் பழங்களாலும்  ஹோமம் செய்யலாம்.
தீர்க்கமான ஆயுளுக்கு—ஆயுஸ் வளர வேண்டுமா ?
அருகம்புல்லால், இந்த மந்த்ரத்தைச் சொல்லி, 1008 தடவை
ஹோமம் செய்ய வேண்டும்.ஒரு வருஷத்துக்குள் நிச்சயமான பலன்.
15. ச்லோகம் 40
ப்ராஹ்மீம் வசாம் வாஷ்டசதா பிஜப்தாம்
ப்ராத : ஸமத்யாந் ந்ருஹரிம் விசிந்த்ய
ஸம்ப்ராப்ய மேதாம் ஸ து வேத சாஸ்த்ர

நிஷ்ணாததீ : ஸ்யாதபி வத்ஸரேண

வேத சாஸ்த்ரங்களில் பண்டிதனாக–
ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்தரத்தால் வசம்பை  108 தடவை ஜபித்து,

காலை வேளையில் சாப்பிட ,இது ஸித்தியாகும்

16. ச்லோகம் 41
உக்தை : கிமத்ர பஹுபி மனுனா முனைவ
ஸம்ப்ரார்திதம்  ஸகலமேவ  லபேத் விதிக்ஞ :
தஸ்மாதமும் பஜத தத் ப்ரதிபன்ன ஸித்தா :

ஸம்ஸார ஸாகர ஸமுத்தரணார்த்தினோ யே

வீணாக விரிவாகச் சொல்ல வேண்டாம்—ஒருவன் எதை எதை
ஆசைப்படுகிறானோ, அவை எல்லாமும் இந்த மந்த்ரத்தை
ஜபித்தால் , விரைவாக அடைவான்—பிறவிக்கடலையும்

தாண்டுவான்; மோக்ஷமும் அடைவான்

17. ச்லோகம் 49
சின்னருஹாம் ஸமிதாம் த்ரிஸஹஸ்ரம் யச்ச ஜுஹோதி சதுர்தின மாத்ரம்

துக்தயுஜம் நசிரான்மநுஜாநாம் ஹோம விதிர்ஜ்வ சாந்திகர :ஸ்யாத்

பூத–பிரேத—பிசாசங்களின் தொல்லைகளை அழிக்க–
வெட்ட வெட்ட முளைக்கின்ற அருகம்புல் –இதன் ஸமித்
மூவாயிரத்தால், பாலில் தோய்த்து, நான்கு நாட்களுக்கு
தினமும் ஹோமம் செய்யவும்
18. ச்லோகம் 50 
அஸ்ய  யந்த்ரம் அபிளக்ய பூர்ஜகே ஸாது சாத த்ருண ராஜ பத்ரகே
மந்த்ர ஜப்தமபி சீர்ஷ பந்தனா ஜீர்ணிவி ப்ரமசிரோருஜாபஹம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை நியமப்படி, பூவரசு இலையிலோ
பனை ஓலையிலோ எழுதி, வியாதியஸ்தரின் தலையில்
சில மணி நேரம் கட்டி வையுங்கள்–விஷ ஜ்வரம் , நாள்பட்ட
தலைவலி, புத்தி பேதலிப்பு –இவை காணாமல் ஓடிவிடும்
19. ச்லோகம் 51 
ரக்தோத்பலை : ப்ரதிதினம்  மதுர த்ரயாக்த்ரை –
யோ வா ஜுஹோதி  நியமேன  ஸஹஸ்ர ஸங்க்யை  :
மாஸேந வாஞ்சிதம் அபாஸ்யதி மந்த்ரஜாபி
ஸ்யாத் வத்ஸ்ரேண  தனதான்ய ஸம்ருத்தகேஹ :
செவ்வல்லிப்புஷ்பங்களை–தேன் ,பால்,நெய் இவற்றில் தோய்த்து
அதாவது நனைத்து, ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரத்தைச் சொல்லி,
ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்யானத்துடன்,தினமும் ஆயிரம் தடவை
ஹோமம் செய்யுங்கள்—ஒரே மாசத்தில், நீங்கள் விரும்பியதை
அடைவீர்கள்.
இதைப்போல, ஒரு வருஷம் செய்தீர்களானால், தனம், தான்யம்,
வீடு,வாசல், போன்ற எல்லா செல்வங்களையும் அடைவீர்கள்.
20. ச்லோகம் 52
ஆரக்தைஸ்தரணி  ஸஹஸ்ரகம் ப்ரபுல்லைர்
அம்போஜைஸ்த்ரி மதுர ஸம்யுதை ஜுஹோதி |
லக்ஷ்மி ஸ்யாதத் மஹதி மஹத்  ததாயு :
ஸம்ப்ராப்த ஸகல ஜகத் ப்ரியச்ச பூயாத் ||
அன்றன்று புஷ்பிக்கும் செந்தாமரைப் புஷ்பங்களை எடுத்து வந்து,
தேன் —பால்—நெய்—இவற்றில் தோய்த்து, ஸ்ரீ ந்ருஸிம்ஹ
மந்த்ரத்தால் 1008 தடவை ஹோமம் செய்தால், மிகப் பெரிய
செல்வம் சேரும்; நீண்ட ஆயுள் கிடைக்கும்; எல்லாரும்
வேண்டியவர் ஆவர் .
21. ச்லோகம் 53
லாஜாபிஸ்த்ரி  மதுர ஸம்யுதாபி ரஹ்னோ
மாஸார்க  ப்ரதி ஜூஹுயான்முகே  ஸஹஸ்ரம் |
கன்யார்த்தி ப்ரதிலபதே வரோத கன்யாம்
கன்யா வா பவதி வரார்தினி வராட்யா  ||
பொரியை எடுத்துவைத்துக் கொண்டு
இதை, தேன் –பால்–நெய் –இவற்றில் தோய்த்து, ஸ்ரீ ந்ருஸிம்ஹ
மந்த்ரத்தைச் சொல்லி, காலையில் ,  அக்னியில் ,1000 தடவை
15 நாட்கள் ஹோமம் செய்யும்  வரன் ஒருவன்
அழகு, செல்வம் மிக்கவளான, பதிவ்ரதையான கன்னிகையை
மனைவியாக அடைவான் .
இதைப்போலவே , கன்னிகையும்  சிறந்த வரனை மணாளனாக
அடைவாள்.
22. ச்லோகம் 54. 
திலை : ஸராஜீகரமஞ்சரி ஸமித்
தவிர் க்ருதைச்ச த்வி ஸஹஸ்ர  ஸங்க்யகை 😐
ப்ரஜுஹ்வதோ  நைவ ருஜா க்ரஹோத்பவா
ந சாபிசார க்ஷதிரஸ்ய  ஜாயதே    ||
கரமஞ்சரி ,ராஜீ  என்கிற செடிகளின் ஸமித்தால்,
சுத்தமான அன்னம் ,நெய் இவற்றிறைச் சேர்த்து ,
ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரத்தால் 2000 தடவைஅக்னியில்
ஹோமம் செய்தால்நவக்ரஹ பீடைகள் நீங்கும்;
பில்லி—சூன்யம்—ஏவல்—வைப்பு—இவை யாவும்
அழியும்.
23. ச்லோகம் 55
தசாதிகசதை :பயோக்ருத யுதைச்ச தூர்வாத்ரயை
ஹுனேதினமுகேபி யோ நரஹரிம் விசிந்த்யா நலே |
அவாப்ய ஸ து தீர்க்கமாயுரகிலைர் வியுக்தோ கதை :
ஸுசி பவதி மாநவோ நிஜகளத்ர புத்ராதிபி : ||
அருகம்புல் மூன்று வகை—-மெல்லிய அருகம்புல்
சற்றுப் பட்டையான அருகம்புல் , மிக நீண்ட அருகம்புல்
இந்த மூன்றையும், பால், நெய் இவைகளில் தோய்த்து
அக்னியில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்யானத்துடன், 1000 தடவை
ஹோமம் செய்தால்,எல்லா வியாதிகளினின்றும்
விடுபட்டு, நீண்ட ஆயுளுடன் , மனைவி,  மக்கள்,செல்வம்
யாவும் பெற்று வாழ்வான்
24. ச்லோகம் 56
விஸ்தாரை : கிம்  ப்ரதிஜபதி யோ மந்த்ரமேனம் யதோக்தம்
லப்த்வா காமான் ஸமபிலஷிதா நாசு மந்த்ரி ஸ பூய : |
த்ரவ்யை ராட்யோ த்விஜ ந்ருபவரை :பூஜித : சாந்தசேதா :
ஸ்யாதப்யந்தே  பரமபரிஸுத்தம் பரம் தாம விஷ்ணோ : ||
மிகவும் விளக்கமாகக் கூறினாலும், சொல்வது இதுதான்—
எவன் ஒருவன் ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரத்தை முறையாகத் தினமும்
ஜபம் செய்கிறானோ —அவன் தான் விரும்பும் நியாயமான
நல்ல பலன்களைப் பெறுவான்; மந்த்ர ஸித்தி அடைவான் ;
செல்வம் செழிக்கும்; அரசர் அந்தணர் என்று எல்லாரும் கொண்டாடுவர் ;
எப்போதும் மனஸ் சாந்தமாக இருக்கும்; சாஸ்த்ரமுறைப்படி
வாழ்ந்துக் கடைசியில் ,ஸ்ரீ ந்ருஸிம்ஹனின் திருவடியை அடைவான்
அடியேனின் ப்ரார்த்தனை —
இவை போன்ற பற்பல ஸ்லோகங்கள் ,ஸ்ரீ ந்ருஸிம்ஹனைப் பற்றி ,
ப்ரபஞ்சஸாரத்தில் இருக்கின்றன. இந்தப்  ப்ரபஞ்சஸாரத்தை 
மிக நன்றாகப் படித்தஆசார்யன்  மூலமாக, மந்த்ரங்களை உபதேசமாகப் 
பெற்று,   ஆவ்ருத்தி செய்ய வேண்டும்/ விதிப்படி ஹோமம் 
செய்யவேண்டும் . மந்த்ர லோபமோ, க்ரியா லோபமோ, பக்தி லோபமோ 
ஏற்பட்டால்   , விபரீதபலன்களைக் கொடுக்கும் 
 
வைகுண்ட வாஸி  ஸ்ரீ உ. வே. லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் , நூற்றுக்கு 
மேற்பட்ட யக்ஜங்கள்   செய்திருக்கிறார்.  அடியேனுக்குத் தெரிந்தவரை,
இப்போது, இப்படி யாகம், யக்ஜம் ,ஹோமம் செய்வாரில்லை 
ஆதலால், ஜபம் உசத்தி—-
                     

இன்னும் தொடரும்

narasimha-14
About the Author

Leave A Response