Sri Nrusimham–18

Posted on Jun 19 2016 - 10:58am by srikainkaryasriadmin

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —18

ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி, ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன், வேதத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

96 வயது ஆயிற்று; வேதம் ஆரம்ப நிலையிலேயே இருந்தது.

கவலை வந்துவிட்டது, இவருக்கு. இந்த்ரனைக்குறித்து ”தபஸ் ” செய்தார். இந்த்ரன் தோன்றினான் —”உமக்கு என்ன வேண்டும்? ”என்று கேட்டான் இன்னும் எனக்கு 120 வயசு ஆயுள் கொடுங்கள் –என்று கேட்டார்

”ததாஸ்து”’ என்று சொல்லிவிட்டு மறைந்தான்

மஹரிஷி , வேதாப்யாஸத்தைத்  தொடர்ந்தார். முடிந்த பாடில்லை

96 வயது மறுபடியும் ஆகிவிட்டது—மீண்டும் இந்த்ரனைநோக்கித் தபஸ் செய்தார் இந்த்ரன் வந்தான். மகரிஷி இன்னொரு 120 வருஷங்கள் ஆயுள் வேண்டும் என்றார்

அப்படியே கொடுத்தேன் என்று சொல்லிப் போய்விட்டான்.

இந்த மாதிரி மூன்று முறை முடிந்தது—-

வேதாப்யாஸம் முடியவில்லை. மறுபடியும் இந்த்ரனைப் பிரார்த்தித்தார். இந்த்ரன் வந்தான்—

மஹரிஷி  எதிரே ”பூ :,  புவ : ஸுவ ,—என்கிற வ்யாஹ்ருதி மந்த்ரங்களாலே மூன்று மலைகளை உண்டாக்கினான்.

ஹே—மஹரிஷே —- இவை போன்றவை வேதங்கள்—என்று சொல்லிவிட்டு, ஒவ்வொரு மலையிலிருந்தும் ”ஒரு பிடி மண்ணை” எடுத்துக்  காண்பித்து ”நீர் இந்த முந்நூறு வயசு ஆயுஸில் , அத்யயனம் பண்ணியது இவ்வளவுதான்”என்றான்.

மேலும் சொன்னான்—வேதங்கள் அனந்தங்கள், எவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் பூரணமாக அத்யயனம் பண்ண முடியாது–அதனால், தபஸ் பண்ணி, அந்த பரமாத்மாவை சாக்ஷாத்கரித்து, மோக்ஷம் அடையும் ”என்று சொல்லி விட்டு மறைந்தான்.
எவ்வளவு ஆயுசு இருந்தாலும், எப்படி வேதாத்யானத்தை முடிக்க முடியாதோ,

அப்படி,  எவ்வளவு ஆயுஸ் இருந்தாலும், ந்ருஸிம்ஹ ப்ரபாவத்தைச் சொல்லி முடிக்க முடியாது.

பரத்வாஜ மஹரிஷி அப்படியே ரொம்பவும் தபஸ் பண்ணினார்–மட்டபல்லிக்கு வந்து,கிருஷ்ணா நதியில் நீராடி , ந்ருஸிம்ஹனை இரண்டு தளங்களை உடைய ”ஆரேபத்ரம் ” என்கிற இலைகளால் அர்ச்சித்து, த்யானித்து, இங்கேயே ”தபஸ்” பண்ணி, அந்த மட்டபல்லி லக்ஷ்மிந்ருஸிம்ஹனையே சாக்ஷாத்கரித்தார்.

பெரிய பெரிய மஹரிஷிகள் எல்லோருமே இப்படியென்றால் , அடியோங்களால், ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹனின் பிரபாவத்தையும், பெருமையையும், வாத்ஸல்யத்தையும் ஒரு சில பக்கங்களில் அடக்க முடியுமா ? முடியாது—முடியவே முடியாது.

இந்த 18 பாகங்கள் அல்லது அத்யாயங்கள் ,அவனது க்ருபை இல்லையேல், இதுவும் எழுதி இருக்க முடியாது

ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன், நம் எல்லோருடைய ஹ்ருதயத்திலும் ஆசனமிட்டு அமர்ந்து, இக,பர சுகங்களை அளிக்குமாறு ப்ரார்த்தித்து,,அவனது பொற்றாமரைத் திருவடிகளையே

கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம்.

அத்ருச்யதாத்யத்புத ரூபமுத்வஹந் |

ஸ்தம்பே  ஸபாயாம்  நம்ருகம் நமாநுஷம்     ||

ஸ்ரீ ந்ருஸிம்ஹ நவரத்ன மாலிகா—மங்களம்.

1. மங்களம் ஸ்தம்ப டிம்பாய மங்களம் ம்ருத்யும்ருத்யுவே  |
மங்களம் ரௌத்ரரூபாய நரஸிம்ஹாய  மங்களம் ||

2. ஹிரண்யகசிபும்  ஹத்வா தைத்யேந்த்ரம் தேவகண்டகம் |
ஜகத்ரக்ஷண  துர்யாய ஜகத் பீஜாய மங்களம் ||

3. ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸந்ந நிஜமூர்த்தயே |
வரதாபய  ஹஸ்தாய வரதாய ச  மங்களம் ||

4. கராக்ரை : வஜ்ரஸம்ஸ்பர்ஸை : நகரை : சத்ருதாரிணே |
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய  தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்||

5. நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர  விபூதயே |
ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம் ||

6. கிரீடஹார கேயூர  குண்டலாலங்க்ருதாய  ச |
கோடி ஸூர்யப்ரகாஸாய தேவ ஸிம்ஹாய  மங்களம் ||

7. த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே |
நரகேஸரிரூபாய லக்ஷ்மிலோலாய  மங்களம் ||

8. மத்ஸ்யகச்சப  வாராஹ ராம வாமன மூர்த்தயே |
ராம  க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம் ||

9. ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே |
ஸர்வேஸ்வராய  ஸர்வைஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்      ||

— —————————— —————————— ————–

ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ பரப்ருஹ்மணே நம :
ஸுபம்

 

 

narasimha-10

About the Author

Leave A Response