Ketpathum solvathum–3

Posted on Jul 6 2016 - 11:06am by srikainkaryasriadmin

கேட்பதும் சொல்வதும்–பகுதி–3 (201 முதல் 300 வரை )

201.ஜீவனை ஐந்து சக்ரகம் (சக்கரம் போன்றவை )சூழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்களே ?
202.”தயை”க்கு இரண்டு நிலையா ?
203.பாவங்களை ஒரு ஜீவன் செய்கிறான்,அந்தப் பாவங்கள் போவது எப்படி ?
204.”தயாகார்யம் ”என்பது என்ன ?
205.ஸ்ரீ, பூமி, நீளா தேவிகளின் திருக்கரங்களில் காணப்படும் புஷ்பம்–என்ன ?
206.”ஜந்மாந்தராண்யநு விசிந்த்ய பரஸ்ஸஹஸ்ராணி —–”என்று ஸ்ரீ கூரத்தாழ்வான் ,ஸ்ரீ வைகுண்டஸ்தவத்தில் அருளிச் செய்கிறார். அதாவது, ”பல்லாயிரக்கணக்கான பிறவிகளை எண்ணிப் பார்த்து –” என்கிறார். ”அநு விசிந்த்ய ” என்கிற பத ப்ரயோகம் வருகிறது.
ஜீவனுக்கு, இந்தப் பிறவி மட்டுமே எண்ணுவது சாத்யம்.
அப்படியிருக்க, பல்லாயிரக்கணக்கான பிறவிகளை எண்ணி —நினைவில் கொண்டுவருவது எப்படி சாத்யம் ?
207. இவ்வுலகில் உள்ள போகங்களில் ஏழு தோஷங்கள் (குறைகள்–குற்றங்கள் ) இருக்கிறதாமே ?
208. ” கிட்டாதாயின் வெட்டென மற ”–ஒரு வஸ்துவுக்கு /ஒரு போகத்துக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காவிட்டால்,
அந்த ஆசையை வெட்டிப்போட்டு ,அதை மறந்து விடு–இது யாருக்குப் பொருந்தும் ?
209.” தண்ணீர்ப் பந்தல் வைத்தால், பாலைவனத்தில் வைக்கவேண்டும்” என்பதாக ,பட்டர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறாராமே –?
210.”திருத்துழாய்க்கு நீர் இறைக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் போலே –” இதற்குப் பொருள் என்ன ?

211. ”சரபம்” என்றால் எது ?
212.”ஏழு ஸ்வரங்களை”ப் பற்றி ஒரு வ்யாக்யானம் உண்டு என்கிறார்களே ?
213. ”ஸேது பந்தம்” என்கிற பெயரில் ஒரு நூல் இருக்கிறதா ?
214. ”ஸௌந்தர்யம் ” லாவண்யம் ”–இரண்டுக்கும் என்ன வித்யாஸம் ?
215. ”ஜாம்பூநதம் ” என்கிறார்களே, இது என்ன ?
216. ”மஞ்சு விரட்டு”, ”ஜல்லிக்கட்டு” என்று தென்தேசத்தில், இப்போது ப்ரமாதப்படுத்தப்படுகிறதே,இது எதைக் குறிக்கிறது ?
217. ”அஷ்டமீ ” திதிக்கு அப்படி என்ன ஏற்றம் ?அல்லது குறைவு ?
218.தேவதாந்தரங்களைப் பூஜிப்பதால், பலன் சீக்கிரமாகக் கிடைக்கிறது என்கிறார்களே ?
219. ”புஷ்ப மண்டபம்” என்று ஸம்ப்ரதாயத்தில் ,எந்த க்ஷேத்ரத்துக்குப் பெயர் ?
220. ஸ்ரீ வைகுண்டம் , ”ஸுத்த ஸத்வம் ” என்று சொல்லப்படுகிறது– அப்படியானால், ப்ரக்ருதி —-?

221. கேட்பது மூன்று வகைப்படும் என்கிறார்களே ?
222. உஷத் காலத்தில் தீர்த்தமாடுவதால் (ஸ்நானம் செய்வதால் ) என்ன நன்மை ?வெந்நீர் இதற்கு நல்லதா ?
223. ” நாலு பிள்ளைக் கதை” என்கிறார்களே ?
224.”காவ்யம்”என்பதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் !
225.”மதுவர்க்கம்”ஸமர்ப்பிப்பதாகச் சொல்கிறார்களே ,அது என்ன ?
226.”பக்தி” ஒரே வரியில் விளக்க முடியுமா ?
227. ”பயபக்தி ” என்றால் ?
228. ”பரஜ்ஞானம் ” என்றால் ?
229. ”பரமபக்தி” என்றால் ?
230. நடனத்தில், ”சாரீ ந்ருத்தம் ” என்ற வகையில் ஒரு நடனம் ஸ்ரீ க்ருஷ்ணன் ஆடினானாமே ?

231.மின்சார சக்திக்கும், ப்ராண சக்திக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
232.”மூலங்கள்” என்றால் ?
233.வழிநடை யாத்ரீகர்கள் (பயணிகள்) , சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் அந்தக் காலத்தில் அரசர்கள் சாலைகளில் ”ஸத்ரம் ” கட்டிவைத்து
அவற்றைப் பராமரித்தார்கள். ”ஸத்ரம் ” என்கிற சொல்லின் அர்த்தம் என்ன ?
234.”அபிஜித்” விளக்குங்கள் !
235.” குதப காலம் ”என்கிறார்களே,அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் !
236. ”அபராஹ்ன ” காலத்தையும் சொல்லுங்கள் !
237.குடும்பம்” என்பது, கணவன் மனைவி அவர்களின் வயதுக்கு வராத தாய் தகப்பனாரைச் சார்ந்திருக்கிற குழந்தைகள் ,இதுதான் குடும்பம் என்று இப்போது சொல்லப்படுகிறதே, இது சரியா ?
238.”ராக்ஷஸர்கள்” என்றால் புரிகிறது. ”ப்ரஹ்ம ராக்ஷஸர்கள்” என்றால் ?
239. ”பூர்வ பக்ஷம்” என்று சொல்கிறார்களே, அது என்ன ?
240.”ஸ்வாபதேசம்” என்கிறார்களே, அது என்ன ?

241. ”ரித் விக்குகள் ”யார் ?
242. புரோஹிதர்கள் —-?
243.ஆசார்யர்களுக்கும், இவர்களுக்கும் வேறுபாடு உண்டா ?
244. இவற்றிலிருந்து ”ஆசார்யர்கள்” முக்கியமென்று தெரிகிறதே ?
245.எவை ரஹஸ்யம் ?
246. சங்கடமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிட்டால், என்ன செய்வது ?
247. ஒரு முஹூர்த்த நாழிகை என்கிறார்களே, அது என்ன ?
248. புராண, இதிஹாசங்களில் சொல்லப்படும் ”மயன் ” யார் ?
249. ”சரண பாதுகை”என்கிறார்களே, இது என்ன ?
250.”நீரில் நெருப்பு ” என்கிறார்களே, இரண்டும் தனித்தனி குணாதிசயங்கள் உள்ளனவாக இருக்கும்போது, நீரில் நெருப்பு என்று எப்படிச் சொல்லலாம் ?

251. நாம் சாப்பிடும் ஆகாரத்தை ,ஜாடராக்னி ,ஏழு தாதுக்களாக மாற்றி, ஸத்தைக் கொடுப்பதாகச் சொல்கிறார்களே ?
252.கிருஹங்களில் சாதம் சமைக்கும்போது, கஞ்சியை வடிக்காமல் இருந்தால்தான் ”ஸத்து ” என்கிறார்களே ?
253.”அப்ரதரு” என்றால் என்ன ?
254. ”உல்கங்கள் ” என்றால் என்ன ?
255. ”இந்திரவில் ”என்கிறார்களே ,அதைச் சொல்லுங்கள் !
256. கண்கள்துடிப்பதற்குக்கூடப் பலன் சொல்கிறார்களே ?
257. ”பிறவிக் குருடர்கள்” யார் ?
258. அநேக ஸஹோதரர்கள் இருக்கிறார்கள் ;அவர்களில் ஒருவருக்குத்தான் புத்ரர்கள் பிறக்கிறார்கள்.அப்போது, புத்ரர்கள் பிறக்காத ஸஹோதரர்களின் நிலை என்ன ?
259. ”ஸமாச்ரயணம் ”செய்துகொள்ள வயது வரம்பு இருக்கிறதா ?
260.”ஆந்திரங்கிச் சத்ரு”என்கிறார்களே, அது என்ன ?

261.ஒருவர் செய்யும் பாபம் , இன்னொருவருக்கும் தொற்றிக்கொள்ளுமாமே ,எப்படி?
262.”மூன்று முழமும் ஒரு சுற்று;முப்பது முழமும் ஒரு சுற்று”என்று பழமொழி இருக்கிறதாமே ?
263. ”இதயக்குகை”–என்று ஹ்ருதயத்தைச் சொல்கிறார்களே, ஏன் ?
264. ஆன்மீக ஹ்ருதயத்தை மலரச் செய்வது எப்படி ?
265. குணங்கள்—மூன்று—அவை, ஸத்வகுணம், ராஜஸ (ரஜோ ) குணம், தாமஸ (தமோ ) குணம் என்கிறார்கள். தாமஸ குணத்திலும் மூன்று வகை இருப்பதாகச் சொல்கிறார்களே ?
266. ”தாபத்ரயம் ”, ”ஈஷணத்ரயம் ” இவையும் மூன்றுதானா ?
267. கோயிலில் தேங்காயைக் கத்தியால் வெட்டி உடைக்கிறார்களே , இது சரியா ?
268.”மனஸ் ஸுத்தி ” எப்போது வரும் ?
269. ”ஓம் தத்ஸத் ”–ஒரே வரியில் அர்த்தம் சொல்ல முடியுமா ?
270. பகவன் நாமாக்களை பஜனையாக,ஸங்கீர்த்தனமாகச் செய்யவேண்டும்
என்கிறார்களே ?

271. பகவானை, அவனுடைய நாமாவைச் சொல்லி, ஸங்கீர்த்தனம் செய்வது, நமக்கு எப்படி உதவுகிறது ?
272. பகவானுடைய விஷயத்தில் ஈடுபடுவது அவச்யமா ?
273.நமக்கெல்லாம் ”வாழ்வு” என்பது எது ?
274. துராசா–துர்த்தசா –என்கிறார்கள்—புரியவில்லையே ?
275.”தந்தனம்” –சுருக்கமாகச் சொல்லுங்களேன் ?
276. ”யந்த்ரம்” என்றால் ?
277. ”மந்த்ரம் ” என்பது —?
278.ஜபம் செய்வதைப்பற்றி, இன்னும் நியமம் இருக்கிறதா ?
279. ஜபம் விடியற்காலை வேளையில் செய்வது சிறந்தது–என்பது சரிதான். ”அப்யஜ்ஞனம் ”–அதாவது எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது எப்போது ?
280. ”அப்யஜ்ஞனம் ” இதை பற்றி இன்னும் விரிவாகச் சொல்லுங்கள் ?

281. எண்ணெய் தேய்த்துக் கொள்ள நிஷித்த தினங்கள், (விலக்க வேண்டிய திதி ,வார, நக்ஷத்ரங்கள் ) உள்ளனவா ?
282. க்ஷவரம் செய்துகொள்வதைப் பற்றியும் இப்படி விதிகள் உள்ளதா ?
283. க்ஷவரம் செய்துகொள்ளக் கூடாத திதி வார நக்ஷத்ரங்கள் –சொல்லுங்கள் !
284. எந்தக் கார்யங்கள் செய்வதில் தாமதம் வேண்டும் ? ஏன் ?
285. எது , கடலைவிட மிகவும் பெரியது ?
286. ”தத்யங் ” முனிவர்,–ரிஷி–குதிரை முகத்தோடு இருந்தாராமே !
287. ”ரிஷி”, ”ரிஷி” –என்று சொல்கிறீர்களே –கொஞ்சம் விவரம் சொல்லுங்கள் !
288. ரிஷிகள்தான் வேதங்களைக் கண்டதாகச் சொல்கிறார்களே ?
289. ரிஷிகளின் குணங்கள் —சொல்ல முடியுமா ?
290.வேதங்களைக் கண்டு பிற்காலச் சந்ததிகளுக்குக் கொடுத்த ,ரிஷிகளுக்கு நாம் கடமைப்பட்டு இருக்கிறோம் அல்லவா !

291.” காண்டரிஷி ”தர்ப்பணம் —-?
292. ரிஷிகளிலும், தேவரிஷி,ராஜரிஷி, ப்ரஹ்ம ரிஷி என்கிறார்களே ?
293.பஞ்சபூதங்கள், பஞ்சேந்த்ரியங்களுடன் சம்பந்தப்பட்டு, அவற்றின் தன்மைகளை உடையவை என்கிறார்களே ?
294. ”க்ருஹஸ்தன்” தன்னுடைய வீட்டில், ஐந்து அக்நிகளைவைத்து, உபாஸிக்கவேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாமே ?
295.அந்த ஐந்து அக்நிகள் யாவை என்று சொல்ல முடியுமா ?
296. ஐந்து அக்நிகளின் விவரங்களைச் சொல்லுங்கள் ?
297. இவற்றில் செய்யப்படும் யஜ்ஞங்கள் எவை ?அவற்றுக்கு என்ன பெயர் ?
298.இவற்றுக்கு வேறு பெயர்களும் இருக்கிறதா ?
299. யஜ்ஞம் என்று சொல்லப்படும் இந்த ”வேள்வி” எதற்காக ?
300. இப்படி ஐந்து யஜ்ஞங்கள் செய்வதால், எப்படி நன்றிக்கடன் தீர்க்கப்படுகிறது ?

————-தொடருகிறது—மொத்தம் 1008 அல்லவா !10933912_1535923796657614_7775236168992255527_n

About the Author

Leave A Response