பரமபதநாதா! உன் பார்யைகள் மூவர்
பரம நீசன் நான் ! எனக்குமுண்டு மூவர்
பிணி ,பசி ,மூப்பு , இவர்களே அம்மூவர்
அணியாகச் சேர்வது, துன்பம், துன்பமே !
தணியாத துன்பமும் எப்போது மின்பமே!
உன்னிலும் நான் அதிகம் , ஏனெனில்
உனக்குப் பிறப்பில்லை; இறப்பில்லை.
எனக்கோ அவை அதிகம் ! ஆராயின்
உனக்கில்லை இப்பெருமை , உன் அடிமை

எனக்கே இவை அதிகம் ! பத்மநாபா !
உருப்பட்டூர் சௌந்தரராஜன்