Ketpathum Solvathum–4 (301 to 400)

Posted on Jul 7 2016 - 10:40am by srikainkaryasriadmin

கேட்பதும் சொல்வதும்–4 (301 முதல் 400 வரை )

—————————————————————————————————–

2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்
சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை
பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப்
புத்தகமாக வெளியிடவில்லை.
இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்
————————————————————————————–
301. ஸாளக்ராம க்ஷேத்ரத்தில் ,நேபாள அரசாங்கம் ”கண்டகி” நதி உற்பத்தியாகும் இடத்தில்,பெரிய வலைகளை ஆற்று வெள்ளத்தில் விரித்து, ஸாளக்ராமங்களை எடுத்து, அவற்றின் உள்ளே இருக்கிற ”ஸ்வர்ண”த்தை(தங்கம்) எடுத்துக் கொள்கிறார்களாமே ?
302. ”நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் ” என்கிறார்களே ?
303.”ததீயாராதனம் ” இதன் அர்த்தம் என்ன ?
304.”ததீயாராதனம் ” பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் !
305.” அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்ய ”பரம்பரை– என்கிறார்களே ?
306. அப்படியானால், ஸ்ரீ பாஷ்யகாரர் முதற்கொண்டு ,அவனுக்குப் பின்னால் ஆசார்ய பரம்பரை எப்படி அழைக்கப்படுகிறது ?
307. ”மடல் அவருக்கே, மதிள் உமக்கே –” என்று திருமங்கை மன்னன் சொன்னாராம் ?
308.கேள்வி 306ல் ”ஸ்ரீ ராமாநுஜ தர்ஸநம் ” என்று சொன்னதில், ”தர்ஸநம்” என்ன ?
309. ”’புருஷோத்தமன்’–இதை விரிவாகச் சொல்லுங்களேன் ?
310.ஸ்ரீ கோதைப் பிராட்டி, ”ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி –” என்று திருப்பாவையில் அருளுகிறாளே , இங்கு ”உத்தமன்”என்றால் என்ன பொருள் ?

311. ஸூர்யன் , வானவெளியில் சில நக்ஷத்ரங்களைக் கடக்கும்போது,மழையை நமக்கு அருள்கிறான் என்கிறார்களே ?
312.”புனருக்தம் ” என்கிறார்களே, அது என்ன ?
313. ‘கோவில்களில் ‘பஞ்சபேரர் ” என்கிறார்களே ?
314. ”ஸாரம் ” எது ? ”’சிகரம் ‘எது ?
315. பித்ரு தர்ப்பணம் ,ச்ராத்தங்கள் தவறாமல் செய்தால் நன்மை ஏற்படும் என்கிறார்களே ?
316.ஐந்து விதமான ”பித்ரு லோகம்”இருக்கிறதாம் ?
317. ”பித்ருயாண ” மார்க்கம் என்று தனியாக ஒரு மார்க்கம் இருக்கிறதா ?
318.பொதுவாகவே ”த்ரோகம் ” என்பது செய்யக்கூடாத தீச்செயல். இதில்கடுமையான த்ரோகம் இருக்கிறதா ?
319. ”வ்யக்தம்” –என்றால் என்ன ?
320. ”அவ்யக்தம் ” என்றால் என்ன ?

321. அவ்யக்தத்தை விளக்குங்கள் !
322. அபயத்தைக் கொடுப்பவை எவை ?
323 புராதன காலத்திலும் ”கிராம பஞ்சாயத்து ”இருந்ததா ?
324.”ஸ்நாதகன்” என்பவர் யார் ?
325.நன்றாகச் சொல்லிக்கொடுக்காத ஆசார்யனை கடலில் எறியலாமாமே !
326.”வாயால் வரும் பேச்சு ; மூக்கால் வரும் மூச்சு –என்கிறார்களே ?
327. ஸ்வாமி தேசிகன், ”ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்”தில் ”ப்ரதாந ப்ரதிதந்த்ரம் ”என்று சொல்கிறாரே,அப்படியென்றால் என்ன ?
328. ஸ்ரீவைகுண்டத்தைத் தவிர, ”ஸ்ரீ விஷ்ணு லோகம்”ஒரு இருப்பகாகச்சொல்கிறார்களே —நீங்கள் எழுதிய ”மறுபடியும் பிறவியா? பகவானின் திருவடியா ?”
என்கிற புஸ்தகத்தில் ,இதைச் சொல்லவில்லையே ?
329. ”அபேதச்ருதி ” என்றால் என்ன ?
330. ”பேத ச்ருதி ” என்றால் என்ன ?

331. ”கடக ச்ருதி ”என்கிறார்களே, அது என்ன ?
332. கடக ச்ருதியை விளக்குங்கள் !
333. அபேத ச்ருதிக்கு ,வ்யாக்யானம் செய்தவர் யார் ?
334. பேத ச்ருதிக்கு வ்யாக்யானம் உள்ளதா ?
335. ”ஸ்தோத்ரம்” என்பதன் அர்த்தம் என்ன ?
336. பிராட்டியின் குணங்கள்—–? பிராட்டியின் குணங்களையும் எம்பெருமானின் குணங்களையும் ,நீசர்களாகிய நாம் ஸ்தோத்தரிக்க என்ன தகுதி இருக்கிறது ?
337. ”ஆமிக்ஷை ” என்றால் என்ன ?
338. ”ஊர்மி ” என்றால் என்ன ?
339. யாரை பூஜிக்கக்கூடாது ?
340. ” ச்வேதவராஹ கல்பம் ”, ”வைவஸ்வத மன்வந்த்ரம் ”–விவரியுங்கள் !

341. ”நித்ய சத்ருக்கள் யார் ? ஏன் ?
342. யாரிடமிருந்து ,எதை க்ரஹிக்க வேண்டும் ?
343.இப்போதுள்ள அவசர கதியில் ,கர்மாக்களை விரைவாகச் செய்கிறார்களே, இது சரியா ?
344. ஆத்மா வேறு; சரீரம் வேறு ,என்கிறார்களே, இதை எப்படி உணர்வது ?
345.”ஸுஷுப்தி ” ?
346. ”பாரத வர்ஷே ” என்கிறார்களே—இது வருஷமா ?
347. ‘பகவானிடம் ‘சரணாகதி” ”,ப்ராஹ்ம முஹூர்த்தம் ”என்பது எது ?
348. ஆறுமாசம் பகல், ஆமாசம் இருட்டு என்று பள்ளியில் படித்துள்ளேன்,இது சரியா /
349. இருட்டே (இரவு ) இல்லாமல், எப்போதும் பகலாகவே சில பிரதேசங்கள் இருக்கிறதாமே !
350. எல்லாக்காலமும் இருளாக உள்ள பிரதேசம் இருக்கிறதாமே !

351. சிறந்த வேதாத்யாயி; ஆனால் வயதில் சிறியவர்;அவரிடமிருந்து ,வயதில் பெரியவர்
வேதங்களைக் கற்றுக்கொள்ளலாமா /
352. ”தீக்ஷை” என்றால் என்ன ?
353. ”ஸ்நாநங்க ”தர்பணம் என்கிறார்களே ?
354. ”அக்ந்யாதாநம் ” என்கிறார்களே, இதைச் சொல்ல முடியுமா ?
355. ”ப்ரோக்ஷணம்”, ப்ரோக்ஷித்தல் என்றால் என்ன ?
356.இதற்கு மந்த்ரம் ?உண்டா
357. இதற்கான ”மந்த்ர த்ருஷ்டாக்கள் ” யார் ?
358. இந்த மந்த்ரங்களின் முக்யத்வம் என்ன ?
359. இந்த மந்த்ரத்தைச் சொல்லி, ப்ரோக்ஷிக்கிறோம் –இது சரி–ஆனால், உள்ளங்கையில் எடுத்துக்கொள்ளப்படும் தீர்த்தம் ”சுத்தி” அதாவது ”புனிதம் ”அடைவது எப்படி ?
360.”மந்ததபஸாம் கஜரைவ மஹாவட காஷ்டாதி
பக்ஷணமாத்ம விநாசாயைவ ஸ்யாத் | இதன் அர்த்தம் என்ன ?

361. ஆசார்ய ஸ்தானத்தில் யார்யாரை, சாஸ்த்ரம் சொல்கிறது ?
362. ”சிரகாரி ” அர்த்தம் என்ன ?
363. அத்ரி மஹரிஷிதான் சந்த்ரனைப் படைத்தாராமே ?
364. ”ஜாதிஸ்மரர் ” என்பவர் யார் ?
365. ”ப்ரவசனம் ”, ”தெருக்கூத்து ”, ”பஜனை” –இந்த மூன்றுக்கும் என்ன ஒற்றுமை ?
366. ” ரக்ஷா பஞ்சகம் ” ?
367. ”ஸ்தோத்ரம்” சொல்வது நல்லதா ?, ”ஜபம் ” நல்லதா ?
368. அஷ்டாக்ஷர ஜபம் உயர்ந்ததா ?
369. தர்பத்தைக் க்ரஹிக்க ,மந்த்ரம் இருப்பதைப் போல,அதை வாழ்த்தவும் மந்த்ரம் இருக்கிறதாமே !
370. உலகம் தோன்றியதும் முதன்முதலில் ஏற்பட்டபாஷை ”ஸம்ஸ்க்ருதம் ” என்கிறார்களே ?

371. ”வாக்தேவியைப் பற்றிச் சொல்லுங்கள் !
372. ”யதாபூர்வம் ” என்ன பொருள் ?
373. கலியுகம் பிறந்த பிறகும், பாண்டவ வம்சம் இருந்ததா ? ‘
374.”ஜனமேஜயன் ”அரசாண்ட காலத்தில்,வசித்தவர்,”வைசம்பாயன மஹரிஷி அல்லவா ?
375. ஸ்ரீ வ்யாஸர் , தன்னுடைய தாயாரான ஸத்யவதிக்கு , கொடுத்தாராமே ,
என்ன பிள்ளை வரம் ?
376.’ஸோமக்ரயணம் ” என்ன ?
377. நவரத்னங்கள் -கேள்விப்பட்டிருக்கிறேன்-அது என்ன த்வாதச ரத்னங்கள் ?
378. த்வாதச ரத்னங்கள் யாவை ? அவை யாரிடம் இருக்க வேண்டும் ?
379. ”பஞ்ச மஹா யஜ்ஞம் ” என்று சொல்கிறார்களே, இது எப்படி யஜ்ஞம் ஆகும் ?
380. ”பெருங்காய”த்தை , ஏன் தளிகையில் உபயோகப்படுத்தக்கூடாது என்கிறார்கள் ?

381. இந்த்ரனுக்கு , எதனால் ப்ரம்மஹத்தி ”தோஷம் ஏற்பட்டது ?
382. இந்தத் தோஷத்தில், மூன்றில் ஒரு பங்குமட்டும் மரங்களை அடைந்தது என்றால்,
மற்ற இரண்டு பங்குகளை யார் ஏற்றுக்கொண்டார்கள் ?
383. ”ச்ருஷ்டி ”, மூன்று வகை என்கிறார்களே ?
384. ”ப்ராக்ருத ச்ருஷ்டி ” விளக்குங்கள் !
385. ”வைக்ருத ச்ருஷ்டி ”–இதையும் சொல்லுங்கள் !
386. ”தேவ ச்ருஷ்டி” என்றால் என்ன ?
387. ப்ரஹ்மாவின் இந்த ச்ருஷ்டிக்கு, என்னபெயர் ?
388.”ஸமஷ்டி ச்ருஷ்டி” என்கிறார்களே,இது என்ன ?
389. சாஸ்த்ரங்கள் , இரண்டு வகை என்கிறார்களே ?
390. ”தேவ வ்ருத்தங்கள் ” என்றால் என்ன ?

391. ”வேதாநுயாஸி” சாஸ்த்ரங்கள் –இவை என்ன ?
392. வேதாநுயாஸி” சாஸ்த்ரங்கள் — நான்கு வகை என்கிறார்களே ?
393. இதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள் !
394. உபநிஷத்திற்கும்”ஸாரம்” இருக்கிறதா ?
395. ”ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயம் ” என்பது , என்ன ?
396. ”ஈஸ்வர வ்யாபாரம் ” என்கிறார்களே ?
397. ”நித்ய யோகம் ” என்பது என்ன ?
398. ‘ஸுர்ப்பணகை” மதம் என்கிறார்களே —?
399. ”ராவண மதம்”என்பது—-?
400. ”ஸ்ரீஸ்துதியில்”ஸ்வாமி தேசிகன்,”தம்பதீ தைவதம் ந : ”என்கிறாரே –?

.
மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு
ஈ –மெயில் அனுப்பலாம்Mannarugdi-Sri-Rajagopalswami-Temple-Brahmotsavam-day-11-2015-10

About the Author

Leave A Response