Dhasamaskantham—Naveena Paaniyil—–

Posted on Aug 25 2016 - 6:25am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்—நவீனபாணியில்

ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தம் மிக முக்கியமானது.இதை, நவீன பாணியில்,

பகவான்  ஸ்ரீ க்ருஷ்ணனிடம் நேரில் பேசுவதைப்போல எழுதியிருக்கிறேன் 

                 இவை யாவும் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஈ –மெயில் மூலமாக அவ்வப்போது யாவருக்கும் அனுப்பப்பட்டது. அச்சமயம். பற்பல வாசகர்கள் படித்துஉருகி, அவர்களும் கண்ணனுடன் பேசி இருக்கிறார்கள்.

தற்போது, ”ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முடியும் தருவாயில் உள்ளது. 

                   இதனை, உங்கள் விருப்பத்துக்கு இணங்க, மறுபடியும் , அத்யாயம் அத்தியாயமாக உங்களுக்கு அனுப்புகிறேன். 

                                          ஸர்வம்  ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்த  

 

 

 

 

தசமஸ்கந்த தொடக்கத்தில் ,  பரீக்ஷித் ராஜன் , ஸ்ரீ சுகப்ரஹ்மத்தைக்   கேட்பதான  வ்யாஜத்தில்,பகவான்ஸ்ரீகிருஷ்ணன் அவதார மஹிமையை, அனுக்ரஹிக்கச் செய்த , அந்த உத்தரையின் புத்ரனை நமஸ்கரிக்கிறேன்.
அவனாலன்றோ , ஸ்ரீ கிருஷ்ண மஹா சரிதத்தைப் படிக்கக் கூடிய  /   கேட்கக்கூடிய  பாக்யம்கிடைத்ததுஅதற்காகஅந்த அர்ஜுன பௌத்ரனை, உத்தரை மைந்தனை —-ஸ்ரீ பரீக்ஷித் மகாராஜனைஎப்போதும்நமஸ்கரிக்கிறேன்.

ஸ்ரீ சுகப்ரஹ்ம  ரிஷி —-ஸ்ரீ வ்யாஸ பகவானின்  புத்ரர் ———பிக்ஷைக்காக   எவர் வீட்டின் முன்பும் “பால் கறக்கும் வேளை ” தாண்டி (கோதாஹண  வேளை )   நிற்க மாட்டார் .   அப்படிப்பட்ட மஹரிஷி ,  ஏழு நாட்கள்  கங்கைக் கரையில் , பரீக்ஷித்  மஹாராஜன் முன்பு  உட்கார்ந்து, ஸ்ரீ கிருஷ்ண சரிதத்தைச்  சொன்னார். பரீக்ஷித் மகாராஜாவுக்குச் சொல்லும் வ்யாஜத்தில், இந்த க்ரந்தத்தை எல்லாருக்கும் சொன்ன ,
ஸ்ரீ சுகப்ரஹ்ம  ரிஷியை   மனசாலும், உடலாலும், வாக்காலும்  நமஸ்கரிக்கிறேன்;  பலதடவை  நமஸ்கரிக்கிறேன் .  அவர் அல்லவா, இந்த அம்ருதத்தை; தேவாம்ருதத்தை; திகட்டாத அம்ருதத்தை  நமக்கெல்லாம் பருகக் கொடுத்தவர் ! நம்மைக் கொடுத்து வைத்தவர்களாகஆக்கியவர்!
ஆக,சுகப்ரஹ்ம ரிஷிக்குக்ருதஜ்ஞ்சதையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தைத்யர்கள், தானவர்கள், அஹங்காரம்  மற்றும் மதம் பிடித்த  அரசர்களாக த்வாபரயுகத்தில் பூமியில் பிறந்து வேத வ்ருத்தமான அக்ரமங்களைச்  செய்து,  அட்டஹாசம்  பொங்கி எழ   சாதுக்களை  ஹிம்சைப் படுத்தி  வாழ்ந்து , பூமி பாரத்தை
அதிகரிக்கச் செய்து, பூமிப் பிராட்டிக்கு கஷ்டத்தைக் கொடுத்த சமயத்தில்,  பூமிப் பிராட்டியை அழைத்துக் கொண்டு,  , ப்ரஹ்மா , தேவர்கள் புடைசூழ , க்ஷீராப்தியை அடைந்து, பகவானான  உன்னை, புருஷ ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், நாராயண அநுவாகம் —-இவற்றால் துதித்து, சாது சம்ரக்ஷணத்துக்காக  ராக்ஷஸ ர்களை  அழிக்க , பூவுலகில் அவதாரம் செய்ய உன்னைப் ப்ரார்த்தித்ததற்காக , உன்  அனுக்ரஹத்தைப்  பெற்றதற்காக ,
பூமிப் பிராட்டியையும், ப்ரஹ்மாவையும்  பல தடவை நமஸ்கரிக்கிறேன்.

மதுராவில், நித்ய வாஸம் செய்யும் கிருஷ்ணனே !
மதுரா ராஜ்யத்தின்  அரசனான உக்ரசேனனுடைய  தம்பி, —–தேவகனுடைய புத்ரியான  “தேவகியை “, சூரன் எனப்படும் யாதவ குலத் தலைவனின்  பிள்ளையான வஸுதேவர், விவாஹம்  செய்துகொண்டு தேவகியுடன் ரதத்தில் , தன்னுடைய  நகருக்குத் திரும்பும்போது, ராஜாவான உக்ரசேனனின் பிள்ளை “கம்ஸன் ” ,  தன் தங்கையின் மீது ( ஒன்று விட்ட தங்கை ) வாத்ஸல்யம் மிகுதியாக ,  தேரின் மீது ஏறி,  தானே     தேரைச்  செலுத்தினான்.
பாதி வழியில், —-ஆகாசத்திலிருந்து  குரல்—- கம்ஸனிடம்  பேசியது.
” முட்டாளே ! இவளுடைய  எட்டாவது கர்பத்தில்  தோன்றும் குழந்தை , உன்னைக்கொல்வான்.எந்தத்தங்கையைப்பாசத்துடன், தேரில் , குதிரைகளைப் பிடித்து  அழைத்துச்  செல்கிறாயோ, அந்தத் தேவகியின் எட்டாவது கர்பத்தில் பிறக்கும் சிசு , உனக்கு ம்ருத்யு ” என்று சொன்னது.   உடனே, பாபியும், துஷ்டனுமான  கம்ஸன்  , குதிரைகளின் கடிவாளத்தை  விட்டு விட்டு,  மஹா  கோபத்துடன், கத்தியை எடுத்து,
தேவகியைக் கொல்ல முயற்சித்தான்.  அப்போது, வஸுதேவர் , அவனைத் தடுத்து, இனிய வார்த்தைகளைச்சொன்னார்.
” ஒரு ஆத்மா, த்ரேகம் எடுத்ததும் , ம்ருத்யு கூடவே  வருகிறது;    இந்த த்ரேகத்தில், ஐந்து , ஐந்து இந்த்ரியங்கள்இருந்துத்ரேகம்அழியும்போது, அவையும் மறைகின்றன. ஆத்மா, தன் கர்ம  வினைக்கு ஏற்ப , மற்றொரு த்ரேகத்தை எடுத்துக் கொள்கிறது; தூக்கத்தில் இருந்தாலும், ஸ்வப்னத்தில் இருந்தாலும், ஆத்மாவை,மாயையால் , பகவான் செயல்பட வைக்கிறான்; மாயையின் மூன்று குணங்களால் உள்ள த்ரேகத்துடன்,
மனஸ் ஸும்  சேர்ந்து, மாயையினால்  ஆத்மா செயல் படுகிறது;  பிறகு, க்ஜானம்  வரப்பெற்று,  மாயையிலிருந்து  விடுபடுகிறது;   ஆதலால், ஒரு ஜீவன் , இன்னொரு ஜீவனுக்குத்  த்ரோகசிந்தனையுடன்  நடந்து கொள்ளக் கூடாது; உன்னுடைய க்ஷேமத்துக்காகபிறருக்குப்பயத்தை ஏற்படுத்தக் கூடாது; உன் தங்கை சிறியவள்; உனக்குப் புத்ரியைப் போன்றவள்; புதிதாக விவாஹம்  ஆனவள்; கொல்லத்தகாதவள் ” என்று, பலப்பல புத்திமதிகளைச்சொன்னார்.
கம்ஸன்  சமாதானம் அடையவில்லை.   க்ரூர ஸ்வபாவத்துடன் தன்எண்ணத்தைநிறைவேற்றிக்கொள்ளமுயன்றான்.
வஸுதேவர்   யோசித்தார். இப்போதைக்கு, இவளுக்கு  ஏற்பட்ட  ம்ருத்யுவைத் தடுக்க வேண்டும்.என்றுஆலோசித்து,
” ஹே, கம்ஸ !இவளிடமிருந்து, பயப்பட ஒன்றுமில்லை; குழந்தைகள் பிறந்தவுடன் , உன்னிடம்கொடுத்துவிடுகிறேன்;ஆகாசத்திலிருந்து, அசரீரி, இவளுடைய குழந்தையால் தானே, நீ கொல்லப்படுவாய் என்றது ? குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ இஷ்டப்படி செய்துகொள்என்றார்.
இதைக் கேட்டதும் கம்ஸன் , சரியென்று தலையை அசைத்து, தேரை விட்டு இறங்கிச் சென்றான். வஸுதேவர் , தேவகியுடன் தன்னுடைய வீட்டுக்குச் சென்றார். சில நாட்கள் சென்றன;

தேவகி கர்ப்பமடைந்து, முதல் குழந்தையைப் பெற்றாள். இக்குழந்தையின் பெயர் ” கீர்த்தமான் “. சொன்ன சொல் தவறாத வஸுதேவர், மனஸ் சங்கடப் பட்டுக்கொண்டே , பிறந்தகுழந்தையைகம்ஸனிடம்கொடுத்தார்.
கம்சன், குழந்தையைப் பார்த்தான். சந்தோஷப்பட்டான். சிரித்துக் கொண்டே, “இந்தக் குழந்தைஉன்னிடமேஇருக்கட்டும்;எட்டாவதுகுழந்தைதானே எனக்கு ம்ருத்யு ” என்றான். வஸுதேவர் “சரி” என்று சொல்லி குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பினார். இருந்தாலும், கம்ஸனிடம்அவருக்குச்சந்தேகம்தான்.

நாரதர்  , கம்ஸனுடைய  சபைக்கு வந்து,   ப்ரஹ்மாவின் முயற்சி , பூமிப்பிராட்டியின்பாரம்தீரபகவானின்அவதாரம், என்கிறதேவரஹச்யங்களைக் கம்ஸனுக்குச் சொல்லிவிட்டுச் சென்றார். கம்சன் மிகவும் பயப்பட்டான். தேவகி, வஸுதேவரைச் சிறையிலிட்டான். பிதாவான உக்ரசேனரை, சிறையில் அடைத்து, ராஜ்யத்தைப் பறித்து, தானே அரசன் ஆனான். தேவகி, வஸுதேவர் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றான்.

ஹே, ப்ரபோ ! உன்னுடைய சங்கல்பத்தாலன்றோ வஸுதேவர்—-தேவகி  விவாஹம் நடந்தது;உன்சங்கல்பத்தால்அல்லவா கம்ஸன் தானே முன்வந்து, வஸுதேவர்—தேவகி வந்த தேரைச் செலுத்தினான்; உன் ஆக்ஜைப்படிதானே, ஆகாசத்தில் , அசரீரி  கம்ஸனிடம்பேசி அவனுக்குப் பயத்தை ஏற்படுத்தியது; நாரதர், கம்ஸனிடம் வந்து பேசியது எல்லாம், உன்னுடைய  லீலை தானே; கம்ஸனுக்கு, அஹங்காரமும்,
கோபமும், பயமும் ஏற்பட்டு தகப்பனாரைச் சிறையில் அடைத்ததும் ராஜ்யத்தை அபஹரித்துக்கொண்டதும்,கர்பத்திலிருந்துபிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றதும் உன்னுடைய எண்ணம் தானே!     அப்படிப்பட்ட  சங்கல்பத்துக்கும் ,ஆஞ்ஜைக்கும், லீலைக்கும், எண்ணத்துக்கும் , அடியேனுடைய க்ருதக்ஜதை  உரித்தாகுக.  உனக்கு முன்பு  பிறந்துஉயிரை விட்டஏழுகுழந்தைகளின்த்யாகம்அல்லவா உன்அவதாரத்துக்கு வித்திட்டது !  அவர்களால்அல்லவா,உன்திருஅவதாரம்ஏற்படப்போகிறது !
அந்தக் குழந்தைகளை, பக்தியுடனும், நன்றியுடனும் நமஸ்கரிக்கிறேன்

நீ, தேவகியைத்  தாயாக  அடைந்தாய். தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடிதோன்றினாள்.கம்ஸன்மிகவும்பயந்தான்.
தன்னை அழிப்பவன், எட்டாவது கர்பமாக தேவகியின் வயிற்றில்  இருக்கிறான் ; அவன் பிறந்ததும்,அந்தக்குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்று,எப்போதும்உன் நினைவாகவேஇருந்தான்.

தேவகியின் கர்பத்தில், நீ   வாஸம் செய்யும்போது, உன்னை,  ருத்ரன், ரிஷிகள்,தேவர்கள்,முன்னிலையில்ப்ரஹ்மா துதித்தார். அல்லவா ? அதை , அடியேனும் சொல்லிஉன்னைஸ்தோத்ரம்செய்கிறேன்

இனி 2 வது அத்யாயம்…………….

11750709_395021787367482_4098802980368556849_n

About the Author

Leave A Response