Ramanuja Daya Pathram–thaniyan-chapter 6

Posted on Aug 25 2016 - 5:00am by srikainkaryasriadmin
ராமானுஜ தயா பாத்ரம் —தனியனின் விளக்க உரை –6 வது  பகுதி ,

இங்கு உள்ளது.

 

ராமானுஜ தயா பாத்ரம் —தனியனின் அவதார உத்ஸவம் , 4–9–2016 ஞாயிறு
அன்று சம்பவிக்கிறது.ஸுஹ்ருத்துக்கள் , ,இதற்கு முந்தைய பகுதிகளையும்
வெப்சைட்டில் உள்ளது—படித்து க்ருதார்த்தர்கள் ஆகுமாறு பிரார்த்திக்கிறேன்.
இவையாவும் 2014 அக்டோபரில்  எழுதப்பட்டது.


ராமாநுஜ தயா பாத்ரம்—தனியன்–விளக்கம்–6
————————————————

ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்— இந்த அருமையான தனியனை அருளினார் என்று பார்த்தோம்

வ்யாக்யானத்தை அனுபவித்தோம்

சுருக்கமாகச் சொன்னால்,
ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும்

மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.

வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி தன்னுடைய உபன்யாஸங்களில், கூறுவார்.
கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்; அதாவது—-

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்

இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல்கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் ).இந்தத் தனியன் அவதரித்ததே அங்குதானே என்பார். நம்இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலாம் ( காஞ்சீபுரம் ) ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்; ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்
வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்; பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு
அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.

இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—
வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம்

ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே
என்றும் , புகழ்ந்து உரைப்பர்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —அதாவது, பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் . பிறருக்கு இவை சேராது.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி, மேலும் சொல்வார்—–
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.

மஹான்களாலும்,ஆசார்ய ச்ரேஷ்டர் களாலும், கொண்டாடப்பட்டு, வ்யாக்யானங்கள் செய்யப்பட்டுள்ள,
ஸ்வாமி தேசிகனின் பெருமை, புகழ், தேஜஸ், கீர்த்தி, உள்ளிட்ட யாவற்றையும் சொல்லும் , இந்தத் தனியன்
அரிய பொக்கிஷம்; அருமருந்து;
மந்த புத்தியினனான ,அடியேனுக்குத் தெரிந்தவரை, பூர்வாசார்யர்கள் அருளியுள்ள க்ரந்தங்கள் ,ஆசார்யர்களிடம் க்ரஹித்தவை—–முக்யமாக வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி உபன்யாஸங்களில் க்ரஹித்தவை –இவைகளை வ்யாக்யானமாக எழுதும்படியான பாக்யம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
பூர்வாசார்யர்களைத் த்யானித்து புந : புந : நமஸ்கரிக்கிறேன். வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் திருவடிகளில் நமஸ்கரித்து, அடியேனின் க்ருதக்ஜதையை மாநஸீகமாக ஸமர்ப்பிக்கிறேன்
சென்ற வருஷம்
உபன்யாஸமாகச் சொல்லும் பாக்யத்தை அருளிய ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனும், ஸ்ரீ ஹேமாப்ஜவல்லித் தாயாரும்
( அடியேன் க்ருஹத்தில்—-நித்ய வாஸம் ) இந்த வருஷத்தில் இந்தத் தனியனின் அவதார தினத்துக்கு முன்பாகவே ,
எழுதி முடிப்பதற்கு அனுக்ரஹித்தார்கள் இவற்றில் பிழை இருப்பின் பொறுத்து, .அடியேனை அனுக்ரஹித்து,
ஊக்குவிக்கப் ப்ரார்த்திக்கிறேன் .

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :

பின் குறிப்பு:—

ராமாநுஜ தயா பாத்ரம் —-என்கிற இந்தத் தனியனின் அர்த்த விசேஷங்களைப் படித்தவர்கள்,
மகிழ்ச்சி அடைந்தால் , மகிழ்ச்சியை அனைத்து தேசிக பக்தர்களிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினால், விருப்பம் தீர்மானமாக உருவெடுத்தால், வசதி உள்ளவர்கள் அச்சிட்டு, இலவசமாக,
ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்திரத்தன்று ( 4–10–2014 சனிக்கிழமை) விநியோகிக்கலாம்.
Thiruvahindrapuram-panguni-uthiram11 - Copy

About the Author

Leave A Response