Numbers–what they say–chapters 9 to 20 poorththi

Posted on Sep 20 2016 - 6:09am by srikainkaryasriadmin

எண்கள் –அவை சொல்வது என்ன —9
————————————————————–

ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவையில் , முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று என்கிறாள் .
இதைச சொல்லவில்லையே என்கிறார்கள். சரி—சொல்கிறேன்—அஷ்ட வஸுக்கள்,
ஏகாதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அச்விநிதேவர்கள் –இருவர் —ஆக
முப்பத்துமூவர். அச்விநிதேவர்களுக்குப் பதிலாக, இந்த்ரன் ,பிரஜாபதி என்று
சொல்வாருமுண்டு .

அடுத்தது—30
—————–

இதுவும் திருப்பாவையைப் பற்றியதே.
முதல் பத்துப் பாசுரங்கள்—பகவானின் திருநாமங்களைச் சொல்லு என்பதை உணர்த்துகிறது.
2ம் பத்துப் பாசுரங்கள் —அவனது திருவடியை அர்ச்சனை செய் என்று சொல்கிறது.
3ம் பத்துப் பாசுரங்கள் —ஆத்மா சமர்ப்பணம் செய்யச் சொல்கிறது.
ஸ்வாமி தேசிகன், ” நேயமுடன் திருப்பாவைப்பாட்டு ஆறைந்தும் —–” என்கிறார்.
முதல் 5– நோன்பு எப்படிச் செய்யவேண்டும் என்கிற விவரம்
2ம் 5—–கண்ணனிடம் ப்ரேமம் கொண்ட ஆயர்குலச் சிறுமிகளை துயிலெழுப்புவது
3ம் 5—- கண்ணனுடன் பிரேமித்த பெருங்குலத்தில் பிறந்த பெரிய கன்னிகைகளை
அழைப்பது.
4ம் 5 —-கண்ணன் திருமாளிகையில் கோயில்காப்பான் முதல் நப்பின்னைப்
பிராட்டி வரை உள்ளவர்களை எழுப்புவது
5ம் 5 —–கண்ணனை எழுப்புவது ; தங்கள் வேண்டுகோளைக் கண்ணன் கேட்குமாறு
செய்வது
6ம் 5 —–வேண்டுகோள்கள் என்னவென்று சொல்வது

இப்போது எண் 27
——————————

நக்ஷத்ரங்கள் 27 என்பது யாவருக்கும் தெரிந்ததே
இந்த 27 நக்ஷத்ரங்களும் , தேவ நக்ஷத்ரங்கள், யம நக்ஷத்ரங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன
அதாவது கிருத்திகை முதல் விசாகம் வரை 14 நக்ஷத்ரங்கள்—வானத்தில்
ஸ்வர்க்க லோகத்துக்கு அருகில் இருப்பதால், இவை தேவ நக்ஷத்ரங்கள் எனவும்
அனுஷம் முதல் பரணி வரை 13 நக்ஷத்ரங்கள் யமலோகத்துக்கு சமீபத்தில் இருப்பதால்
யம நக்ஷத்ரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன

தேவ நக்ஷத்ராணி வா அன் யானி |
யம நக்ஷத்ரான் யன்யானி |
கிருத்திகா : ப்ரதமம் | விசாகே உத்தமம் |
தானி தேவ நக்ஷத்ராணி |
அனுராதா : ப்ரதமம் அபபரணீருத்தமம் தானி யம நக்ஷத்ராணி |
யாணி தேவ நக்ஷத்ராணி | தானி தக்ஷிணேந பரியந்தி |
யானி யம நக்ஷத்ராணி |தான்யுத்தரேண |
இதுதான் இதற்கான ஸ்லோகம்

இந்தத் தொடரில், அனைவருக்கும் தெரிந்த எண்கள் சம்பந்தமான விவரங்களைக்
கொடுப்பதைவிட ( உ–ம்– மாதத்துக்கு 30 நாட்கள்—வருடத்துக்கு 12 மாதங்கள்,
போன்றவை )இதுவரை சொல்லப்பட்ட விதத்தைத் தொடர்வது இந்தத் தொடரின்
நோக்கமாகும்.

இப்போது —எண் 26 யைப் பற்றி
—————————————–

இது ஒரு விசேஷமான எண் . 26ல் , “2” என்பது “த்வயம் ” என்று சொல்லலாம்.
26ல் , “6” என்பது, “விஷ்ணு மந்த்ரம்” என்று சொல்லலாம்
26யைக் கூட்டினால், வருவது, “8” இது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது.
26யைப் பெருக்கினால், வருவது , “12” .இது, த்வாதசாக்ஷரத்தைக் குறிக்கிறது.
நாராயண மந்த்ரம் —8 அக்ஷரங்கள்
வாஸுதேவ மந்த்ரம் —-12 அக்ஷரங்கள்
விஷ்ணு மந்த்ரம்—6 அக்ஷரங்கள்
இந்த மூன்றும் விஷ்ணு காயத்ரியில் அடக்கம்.
மொத்தம்–26 அக்ஷரங்கள்
26 என்றாலே, பகவான் —எப்படி என்றால்—-
1.ப்ரக்ருதி —அதாவது, உலகம் இது மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை
உடையது. இதற்கு, 3 குணங்கள் –ஸத்வம், ரஜஸ் ,தமஸ் . இவற்றில்,
கூடுதல் குறைதல் ஏற்படும்போது, மஹத் என்கிற தத்வம் உண்டாகிறது.

2.மஹத் —-இந்தத் தத்வத்திலிருந்து,

3. அஹங்காரம் —என்கிற தத்வம் பிறக்கிறது. இது ஸாத்விக அஹங்காரம்,
ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம் என்று 3 வகை.
பிறகு, பஞ்ச மாத்ரைகள்
4.சப்த தன்மாத்ரம்
5.வாயு தன்மாத்ரம்
6.தேஜஸ் (நெருப்பு )தன்மாத்ரம்
7.ஜல தன் மாத்ரம்
8. மண் ( ப்ருத்வி ) தன் மாத்ரம்

பஞ்ச ஞானேந்த்ரியங்கள்

9.சரீரம்
10.கண்
11. காது
12.மூக்கு
13.நாக்கு
(ஆக 5 )

பஞ்ச கர்மேந்த்த்ரியங்கள்

14. வாக்கு
15. கை
16. கால்
17. மூத்ரம் போகும் கருவி
18. மலம் போகும் கருவி
( ஆக 5 )

பிறகு , பஞ்சபூதங்கள்

19. ஆகாசம்
20. காற்று
21. நெருப்பு
22 ஜலம்
23.மண்
( ஆக 5 )
24. மனஸ்
25.ஜீவாத்மா
26. பகவான் அதாவது, பரமாத்மா
விஷ்ணு காயத்ரியை ஜபித்தாலும், அஷ்டாக்ஷரம், த்வாதசாக்ஷரம், என்கிற
மந்த்ரங்களை ஜபித்தாலும் , 26 வது அக்ஷரமாகிய, பகவானை ,உபாஸிப்பதாக
ஆகிறது. (அடியேனின், ஏன்–என்ன—எதற்கு என்கிற புத்தகத்தில், விரிவு உள்ளது )

எண் 24
————–

காயத்ரி மந்த்ரம்
————
காயத்ரி சந்தஸ் —24 அக்ஷரங்கள் .
காயத்ரி ஜபம் மிக முக்கியம். காயத்ரி என்கிற தனம் வந்துவிட்டால், எல்லாத்
தனங்களும்,நன்மைகளும் தேடி ஓடிவரும். காயத்ரியை இழந்தால்,
எல்லாவிதத்திலும் நஷ்டமே வரும். சமஸ்த தேவதைகளும் காயத்ரிக்குள் அடக்கம்.
சர்வ மந்த்ரங்களும் காயத்ரிக்குள் அடக்கம். எல்லா யந்த்ரங்களும், அடக்கம்
காயத்ரி சந்தஸ் மாதிரி, இப்படிப் பல சந்தஸ் இருக்கின்றன—அவையும்
என்ன என்று பார்ப்போம் –உஷ்ணிக் சந்தஸ்—28 அக்ஷரங்கள்.
அனுஷ்டுப் சந்தஸ்–32 அக்ஷரங்கள் . ப்ருஹதீ சந்தஸ்–36 அக்ஷரங்கள்.
பங்க்தீ சந்தஸ்—40 அக்ஷரங்கள். ஜகதீ சந்தஸ்—48 அக்ஷரங்கள்
24 அக்ஷரங்கள் . இதன் மஹிமை சொல்லில் அடங்காது.

Adiyen has written some years back about “Sandhya vandanam ” in english on the requst of
Sri U.Ve. Muralidhar Rangaswamy ( U.S. ) a portion relevant to “Gayathri ” is given below:–

Preparation for Gayatri manthra jabha:-

This is in three parts

1. Pranavam

2. Vyahrities

3.Manthram

Pranavam…..Head of the Veda

single syllable in three parts

a) whole Universe

b) it’s creation

c) preservation & destruction

though differently interpreted by Sages

at different times. But, it is comprehensive

and mere sound.When we pronounce, it

gives transcendental bliss

2. Vyahrities…….Comprehensive realisation of the entire Universe

” ………seven… but in Gayatri manthra, 3 vyahrities are used. Seven

Sages are responsible for these seven vyahrities.

Chandas/metres… seven . Presiding Deities are also seven

The above are followed by “pranayama”

3. Manthram…….Then, invocation of Gayatri Maathaa

She is the spirit of the Universe, having all potency and

transcendent, resplendence etc

This Manthra is in four parts

First consisting of three vyahrities—to bring before the

performer the whole Universe in all it’s parts in a

complete shape

Second, third, & four are 3 lines which give meaning thus;

” Which “Tejas” awake the sleeping ‘janendriyas”

and conduct them , which upasana “tejas”

responsible for the entire Universe as ” Soorya”,

that “tejas ” of Soorya is meditated

( It is practically not easy to give meaning to this richest and vibrant manthra

But this is an childish attempt forwhich adiyen begs your pardon )

This conveys our obeisance to that Divine which kindles our spiritual intelligence

and enhance it further and further, when we do “jabham” 108/1008 times during

every three Sandhyavandana performances everyday

This is a kind of spiritual exercise , when practiced, adds countless molecules

in our spiritual activities and intelligence. Repeated performance of jabha adds

our spiritual power correlating us and effecting wonderful organic relationship

between us and Divine God and bring more and more unbelievable

anugraha on the performer

Such of this spiritual faculty in us increases spiritual potency and prepares us

supreme in intelligence, understanding, & provides us spiritual control over others

besides giving vitality, beauty, intellect, strength, power etc etc

ஒவ்வொருவருக்கும், காயத்ரி ஜபம் எவ்வளவு முக்கிமானதுஎன்பதும்,

இந்த ஜபத்தை , மூன்று வேளையும் செய்வது அவச்யம் என்பதும் தெளிவாகிறது.

—————தொடருகிறது ———————–

எண்கள் —அவை சொல்வது என்ன ?—-10
———————————————————————

இப்போது 18 என்கிற எண்
———————————–

சஹஸ்ர நாமாக்கள் —1008
திவ்ய தேசங்கள் ———–108
அஷ்டோத்தர நாமாக்கள் -108
108ல் , பூஜ்யத்தை எடுத்தால் —-18
18 என்கிற எண்

முதலில் ,18 புராணங்களைப் பார்ப்போம்
1.விஷ்ணு புராணம்
2.நாரதபுராணம்
3.பத்மபுராணம்
4.கருடபுராணம்
5.வராஹபுராணம்
6.பாகவதபுராணம்
7.ப்ரஹ்மபுராணம்
8.ப்ரஹ்மகைவர்த்த புராணம்
9.ப்ரஹ்மாண்டபுராணம்
10.மார்க்கண்டேய புராணம்
11.பவிஷ்யபுராணம்
12.வாமனபுராணம்
13.சிவபுராணம்
14.லிங்கபுராணம்
15.ஸ்காந்தபுராணம்
16.அக்னிபுராணம்
17.மத்ஸ்ய புராணம்
18. கூர்மபுராணம்
இவற்றை, “தாமஸ புராணங்கள்”, “ராஜஸ புராணங்கள்”, “ஸாத்விக புராணங்கள் ”
என்றும் பிரித்துச் சொல்வர்.
——————————————————————————

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம்சைவ நரோத்தமம் |
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் ||

புருஷர்களில் உத்தமன் — புருஷோத்தமன் நாராயணனையும்,நரனையும்,வாக்தேவியான சரஸ்வதியையும் ,மஹாபாரதம் அருளிய வ்யாஸ பகவானையும், நமஸ்கரித்து—-ஜயத்தை —ஜயத்தைக்கொடுக்கும் பாரதக் கதையைச் சொல்லுங்கள்.

“ஜய ” சப்தத்துக்கு, “பாரதம் ” என்று பொருள்.”ஜ ” என்கிற அக்ஷரம், “8” என்கிற எண்ணைக் குறிப்பதாயும். “ய ” என்கிற அக்ஷரம், “1 ” என்கிற எண்ணைக் குறிப்பதாயும், “கடபயாதி ”
ஸங்க்யையின்படி, ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சொல்வர். தவிரவும், அக்ஷரங்களைக் கொண்டு , எண்களைச் சொல்லும்போது, அதைத் திருப்பிப் படிக்கவேண்டும் என்றும்
சொல்வர் . அதன்படி, “81 ” என்பதைத் திருப்பிப் படித்தால் , “18” வருகிறது.

“18” என்பது——–8 பர்வங்களைக் கொண்ட ஸ்ரீ மஹாபாரதம்
18 அத்யாயங்களைக் கொண்ட ஸ்ரீமத் பகவத் கீதை.
18 அக்ஷௌஹிணி சேனைகள் மஹாபாரத யுத்தத்தில் பங்கு கொண்டன.
18 நாட்கள் இந்த யுத்தம் நடந்தது.

பர்வம் அவாந்தர பர்வம் அத்யாயம் ச்லோகம்
1.ஆதிபர்வம் 19 260 10,889
2. ஸபாபர்வம் 8 173 4,367
3.வனபர்வம் 21 315 12,476
4. விராடபர்வம் 5 78 3,494
5. உத்யோகபர்வம் 10 196 6,753
6. பீஷ்மபர்வம் 4 122 5,809
7. த்ரோணபர்வம் 8 203 10,012
8. கர்ணபர்வம் 1 101 4,975
9. சல்யபர்வம் 3 66 3,596
10. ஸௌப்திகபர்வம் 2 17 815
11. ஸ்த்ரீபர்வம் 3 28 807
12. சாந்திபர்வம் 3 375 15,151
13. அனுசாஸனபர்வம் 2 272 11.194
14. ஆஸ்வமேதிகாபர்வம் 3 118 4.555
15. ஆஸ்ரமவாஸிகாபர்வம் 3 41 1.098
16. மௌஸலபர்வம் 1 9 301
17. மஹாப்ரஸ்தானபர்வம் 1 3 111
18. ஸ்வர்க்காரோஹனபர்வம் 1 5 232
—————————————————————————————————-
18 98 2392 96,635
—————————————————————————————————-

வித்யா ஸ்தானங்கள் —18
1. வேதங்கள்–(ஸ்ருதி )-ருக்,யஜுஸ் ,ஸாம , அதர்வண ——-4 *
2.உபவேதங்கள் –காந்தர்வ வேதம், ஆயுர்வேதம்,
தனுர் வேதம், அர்த்த சாஸ்த்ரம் —————————————–4 @
3. ஆறு அங்கங்கள்–சிக்ஷை, வ்யாகர்ணம், சந்தஸ் ,நிருக்தம்,
ஜ்யோதிஷம் ,கல்பம்., ————————————————–6 **
4.உப அங்கங்கள் —ந்யாயம் ,மீமாம்ஸம்,தர்ம சாஸ்த்ரம் ,
இதிஹாசம் ————————————————————————4
ஆக மொத்தம், வித்யா ஸ்தானங்கள் ————————————-18
* வேதங்கள் ஒவ்வொன்றிலும், ஸம்ஹிதை, மந்த்ரம், ப்ராஹ்மணம், ஆரண்யகம் ,உபநிஷத் என்கிற பிரிவுகள் உண்டு.

** 1.சிக்ஷை –பாணினி ,நாரதர், இவர்களால் செய்யப்பட்டது. இதில் சப்தங்களின் அக்ஷரங்களும், அவைகளின் இடங்களும்,
மூன்று ஸ்வரங்களும் சொல்லப்படுகின்றன. இப்போது கிடைப்பது 32 சிkshaiகளே
2.வ்யாகர்ணம் —இது லௌகிக ஸம்ஸ்க்ருத வ்யாகர்ணம் அல்ல. ஒவ்வொரு வேதத்துக்கும், “ப்ரதிசாக்யம் ” என்கிற நூல் உண்டு. பாணினி காலத்துக்கு முன்பு இருந்தது. பாணினி முதலியவர்கள் தங்களுடைய நூல்களில் ,”வைதீக ப்ரகரணம் ” என்று, முடிவில் இதைச் சொல்லி இருக்கிறார்கள்.
3. சந்தஸ் —-வேதமந்த்ரங்களின் மாத்திரைகளையும் கணங்களையும், பலவித விருத்தங்களையும் சொல்வது. பிங்கள மஹரிஷியால் செய்யப்பட்டது என்பர்
4. நிருக்தம்—வேத மந்த்ரங்களின் ப்ரயோஜனத்தை விளக்க,
அரிய பதங்களின் அர்த்தங்களும், நிகண்டுவும், உள்ளன யாஸ்க மகரிஷியால் செய்யப்பட்டதே இப்போது வழக்கத்தில்
உள்ளதென்பர்
5. ஜ்யோதிஷம்—-தற்கால ஜ்யோதிஷ நூல்களுக்கும் ,இதற்கும் சம்பந்தமில்லை. இது, வைதீக கர்மாக்களைச் செய்யவேண்டிய காலமும், பலனும், வருங்கால நடவடிக்கைகளையும் விவரிக்கிறது.
வேதாங்க ஜ்யோதிஷம் என்று ஒரு நூல் உள்ளது. இதில்,ஸுர்யனையும், க்ரஹங்களையும் , பற்றின கணித சாஸ்த்ரம் சொல்லப்படுகிறது. தற்காலத்தில் சொல்லப்படும் ” Astronomy ” இது.
6. கல்பம்—–வேதங்களில் சொல்லப்பட்ட கர்மாக்களைச் seyyum முறையைச் சொல்கிறது. காத்யாயனர், ஆச்வலாயனர்,
போதாயனர் இவர்கள், கல்ப ஸுத்ரங்கள் என்கிற பெயரில், இவற்றை இயற்றியிருக்கிறார்கள்.
@ உபவேதங்கள் –4. இவற்றில்
@@ காந்தர்வ வேதம்—வைதீக கார்யங்களில் உபயோகிக்கும்
ஸாம வேத மந்த்ரங்களையும், பகவானுடைய குணங்களையும்
பிழையில்லாமல் பாடும் வழியைச் சொல்வது. (இதில்
ஸங்கீதமும் ,பரதமும் அடக்கம் )
ஆயுர்வேதம்—ரோகங்களை நீக்கி ஆரோக்யத்தை உண்டுபண்ணும் வழியைச் சொல்லும் சரகம், ஸுச்ருதம், வாஹடம் முதலியன உள்ளன
தனுர்வேதம்—-ஆயுதங்களை உபயோகித்து, யுத்தம் செய்தல்; சேனைகளை அணிவகுப்பது போன்ற பல விவரங்களைச் சொல்கிறது.
அர்த்த சாஸ்திரம்—–அரசன் தன்னுடைய ராஜ்யத்தை எப்படி ஆளவேண்டும் ; வரிகள் விதிப்பு; வசூலிப்பு; அமைச்சர்கள், அந்தரங்கர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள் இப்படிப் பற்பல விவரங்களைச் சொல்கிறது.
( அடியேன் “வேதோபாஸனா ” என்பதாக, வேதங்களைப்பற்றி, மிக விரிவாக எழுதியுள்ளேன். இது, ஸ்ரீ உ.வே. உப்பிலியப்பன் கோவில் சடகோபன் U S தன்னுடைய E –magazine ல் வெளியிட்டிருக்கிறார் ).

ஸ்ம்ருதிகள் —18. உபஸ்ம்ருதிகளும்—-18
வேத அர்த்தங்களை,, மனத்தால், ஸ்மரித்துச்சொன்னதால், ஸ்ம்ருதிகள் எனப்பட்டது. இதைச் செய்தவர்கள், 1, ப்ரஹ்மா 2.விஷ்ணு, 3. மனு 4. யமன் , 5. அங்கிரஸ் , 6. வசிஷ்டர் , 7. தக்ஷர், 8. ஸம்வர்த்தர், 9.பராசரர் 10. ஆபஸ்தம்பர் , 11.காத்யாயனர் , 12. கௌதமர் , 13. சங்கர் , 14. லிகிதர்
15. அத்ரி, 16. ஹாரிதர் , 17. ப்ருஹஸ்பதி , 18. சுக்ரன் , 19.வ்யாஸர் 20. யாக்ஞவல்க்யர் , 21. போதாயனர் —–என்பவர்கள்.
————————————————————————————————-

ஸ்ரீமத் பகவத் கீதை—-18 அத்யாயங்கள்

கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்
பாதார விந்தமலர் பற்று.
ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்யாய விவரங்கள்
——–000————

யோகத்தின் பெயர் ச்லோகங்கள்
த்ருதராஷ்ட்ரன் க்ருஷ்ணன் அர்ஜுனன் சஞ்சயன் மொத்தம்

1. அர்ஜுன விஷாத யோகம் 1 — 21 25 47
2. ஸாங்க்ய யோகம் — 63 6 3 72
3. கர்ம யோகம் — 40 3 —- 43
4. ஞான யோகம் — 41 1 ——- 42
5. கர்ம ஸந்யாஸ யோகம்—-28 1 —- 29
6. த்யான யோகம் 42 5 —– 47
7. விஞ்ஞான யோகம்—— 30 —- ——- 30
8. அக்ஷரப்ரஹ்மயோகம்—– 26 2 ——- 28
9. ராஜவித்யாராஜகுஹ்ய யோகம் — 34 — —- 34
10. விபூதி யோகம் 35 7 —— 42
11. விஸ்வரூப ஸந்தர்ஸன யோகம் -10/ 37 8 55
12. பக்தி யோகம் 19 1 —— 20
13. க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ யோகம் – 33 1 —– 34
14. குணத்ரய விபாக யோகம் — 26 1 ——- 27
15. புருஷோத்தம யோகம் — 20 —– —— 20
16. தைவாஸுரஸம்பத் விபாக யோகம் – 24 —- —- 24
17. ஸ்ரத்தாத்ரயவிபாக யோகம் —27 1 —– 28
18.மோக்ஷ ஸந்யாஸ யோகம் — 71 2 5 78
——————————————————————————
1 569 89 41 700
——————————————————————————–

முதல் அத்யாயம்—-அர்ஜுனனின் மோகம்
2ம் அத்யாயம்———மோகம் தீருதல்
3ம் அத்யாயம்———கர்மயோகம் அனுஷ்டிக்கும் விதம்
4ம் அத்யாயம்———அனுஷ்டிப்பதில் உள்ள பேதங்கள் –வேறுபாடுகள்
5ம் அத்யாயம்——–கர்மயோக சௌகர்யம்
6ம் அத்யாயம்——–யோகவிதி
7ம் அத்யாயம்———பக்தியோகியான முமுக்ஷுவின் மகிமை
8ம் அத்யாயம்——–ஐச்வர்யாதி காமபேதங்கள்
9ம் அத்யாயம்——–பக்தியின் ரூபம்
10ம் அத்யாயம்——-பக்தியின் விருத்தி
11ம் அத்யாயம்——–பக்தியே உபாயம்
12ம் அத்யாயம் ——-பக்தியில் விரைவிவில் பலன்
13ம் அத்யாயம் ——-ஜீவஸ்வரூபம்
14ம் அத்யாயம்———முக்குணத்தின் ஆக்ஷி
15ம் அத்யாயம்———பரன் (பகவான் ) விலக்ஷணமாய் நியமித்தல்
16ம் அத்யாயம்——–தத்வ அனுஷ்டானம்-
17ம் அத்யாயம்——–வேத தர்மங்கள்
18ம் அத்யாயம்——–சாஸ்த்ர சாரம்

18 அத்யாயங்களை, இப்படியும் சுருக்கமாகச் சொல்வர்

ஸ்ரீ மஹாபாரதத்தில் ,பீஷ்ம பர்வத்தில், 25 முதல் 42 வரை—அத்யாயங்கள்—
ஸ்ரீமத் பகவத் கீதை . மஹாபாரதத்தில் , இது ஞான காண்டம். (வேதத்தில்,
கர்ம காண்டம், ஞான காண்டம் இருப்பதைப்போல) ஜீவாத்மா, பரமாத்மா
ஜகத்—-இவைகளைச் சொல்வது—-ஞான காண்டம். வேதங்களில் இந்த பாகத்துக்கு,
“உபநிஷத் ” என்று பெயர். மஹாபாரதத்துக்கு “கீதை” உபநிஷத் பாகம்.
திருவாய்மொழி 1102 பாசுரங்களும் (பகவத் விஷயம் ), ஸ்ரீமத் பகவத் கீதைக்கு,
“பாஷ்யம் ” என்றும் சொல்வர்.
கர்மயோகம்,ஞானயோகம் ,பக்தியோகம் ப்ரபத்தி, (சரணாகதி), இதை ஸ்ரீமத்
பகவத் கீதை 13வது அத்யாயத்தில், 66வது ச்லோகத்தில், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே
அருள்கிறார். இதற்கு “சரம ஸ்லோகம் ” என்று பெயர். ஸ்வாமி தேசிகன்,
இதற்கு வ்யாக்யனமாக ,”சரம ச்லோகச் சுருக்கு “என்று 11 பாசுரங்களை
அருளியிருக்கிறார். கீதா சாஸ்த்ரத்தையும் ,ஸ்வாமி தேசிகன், 21 பாசுரங்களில்,
“கீதார்த்த ஸங்க்ரஹம் ” என்று அருளி இருக்கிறார்
21வது பாசுரத்தில்,
தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம் மலர்மேல்
மாதுற்ற மாயன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான்
காதற் துணிவு உடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே
என்று பாசுரமிட்டு முடிக்கிறார்.
“கீதார்த்த ஸங்க்ரஹம் ” என்பதாக, ஸ்ரீ ஆளவந்தார் 32 ஸ்லோகங்களை
அருளியிருக்கிறார். இதை ஆதாரமாகக் கொண்டு, ஸ்ரீ உடையவர், “கீதா பாஷ்யம் ”
செய்துள்ளார். 18 அத்யாயத்துக்கும், தனித்தனியாக, மஹாத்மியத்தைச் சொல்லும்
கதை, பத்ம புராணத்தில் உள்ளது.

18வது எண் , “சந்த்ரனுடன் ” நெருங்கிய தொடர்புடைய எண் .
“கோல்ப் ” விளையாட்டில், 18 holes . கோவில் பூஜையில் 18 வாத்யக் கருவிகள் உண்டு.
முழு ஸுர்ய க்ரஹணம் 18 மாதங்களுக்கு ஒருமுறை வருகிறது.
ராகு தசை —18 வருஷம்
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபன் —-18 அடி நீளம் (சயன திருக்கோலம் )
பாண்டிய நாட்டில் 18 திவ்ய தேசங்கள்.
அழகர்கோவில் சந்நிதியை அடைய—18 படிகள் (18ம் படி கருப்பு)
சந்த்ரனுடன் சம்பந்தப்பட்ட எண்கள் —18, 108, 180.

சந்த்ர யந்த்ரம்
18
‘|———-|—————-|——————-|-
‘ | 7 | 2 | 9 |
———–|—————-|——————-|
| | | |
18 | 8 | 6 | 4 | 18
| | | |
———–|—————-|——————-|
| 3 | 10 | 5 |
| | | |
————————————————-
18
Number 1 denotes beginning of life
Number 8 denotes end of life

சித்திரை மாத வளர்பிறை 18வது திதி –அக்ஷய த்ருதீயை

திருக்கோட்டியூர் நம்பிகள், ஸ்ரீ உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்.

1. மோக்ஷத்தில் இச்சை உடையவனுக்கு, சம்சாரவித்து நசிக்கவேண்டும்.
2.சம்சாரவித்து நசித்தாலொழிய ,அஹங்கார மமஹாரங்கள் ஒழியமாட்டா
3. அஹங்கார மமஹாரங்கள் ஒழிந்தாலன்றி, உடற்பற்று போகாது.
4. உடற்பற்று போனாலொழிய ,ஆத்ம ஞானம் பிறக்கமாட்டாது.
5.ஆத்மஞானம் பிறந்தாலன்றி, செல்வம் போகம் இவற்றில் வெறுப்பு பிறக்கமாட்டாது
6. செல்வம் போகம் இவற்றில் வெறுப்பு உண்டானாலன்றி ,
எம்பெருமானிடத்தில் ப்ரேமம் பிறக்கமாட்டாது.
7. பகவத் ப்ரேமம் பிறந்தாலொழிய , ருசி நீங்காது.
8. விஷயாந்தர ருசி நீங்கினாலொழிய ,பாரதந்த்ரியம் பிறக்கமாட்டாது
9. பாரதந்த்ரியம் பிறந்தாலொழிய ,அர்த்த, காம, ராகத்வேஷங்கள் நீங்கமாட்டாது
10. ராகத்வேஷங்கள் நீங்கினாலொழிய ,ஸ்ரீவைஷ்ணவத்வம் கைகூடாது.
11. ஸ்ரீவைஷ்ணவத்வம் கைகூடினாலொழிய ,சாத்விக பரிக்ரஹம் பிறக்கமாட்டாது
12. சாத்விக பரிக்ரஹம் பிறந்தாலொழிய, பாகவத பரிக்ரஹம் பிறக்கமாட்டாது
13. பாகவத பரிக்ரஹம் பிறந்தாலொழிய, பகவத் பரிக்ரஹம் பிறக்கமாட்டாது.
14. பகவத் பரிக்ரஹம் பிறந்தாலொழிய, அநந்ய ப்ரயோஜனன் ஆகமாட்டான்
15. அநந்ய ப்ரயோஜனன் ஆகாதே, அநந்யார்ஹ சேஷபூதன் ஆகமாட்டான்
16. அநந்யார்ஹ சேஷபூதன் ஆகாதே , அநந்ய சரணன் ஆகமாட்டான்.
17. அநந்ய சரணன் ஆகாதே, அதிகாரிபுருஷன் ஆகமாட்டான்
18.அதிகாரி புருஷன் ஆனவனுக்கே, திருமந்த்ரார்த்தம் கைகூடும்

( பல வருஷங்களுக்கு முன்பு , ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ,இந்தப் பதினெட்டு வார்த்தைகளுக்கும், வ்யாக்யானம் சொல்லுங்கள் என்று அடியேனைக் கேட்டார். அடியேனும் ,,சரி ஆனால், காலக்ஷேபமாகக் கேட்க வேண்டும் என்றேன் .. இதுவரை, அவர் வரவில்லை.)

——————தொடருகிறது————-
,,
எண்கள் —அவை சொல்வது என்ன ?—11
——————————————————————–

அடியேன் மிகவும் தன்யனானேன். இத்தொடரைப் படிப்பவர்கள், 40 சம்ஸ்காரங்களை
எழுதுங்கள் –40 என்பதை விட்டு விட்டீர்களே, என்கிறார்கள்.
அடியேன், எண்களை சம்பந்தப்படுத்தி பகவானுடையதைப் பற்றியவும் ,
ஆழ்வார், ஆசார்யர்கள் அருளிய க்ரந்தங்களைப் பற்றியவும் சொல்லலாமென எண்ணி,
இத்தொடரைத் தொடங்கினேன். 40 சம்ஸ்காரங்களைச் சொன்னால், 96 தர்ப்பணங்களைச்
சொல்லவேண்டும். இப்படியெல்லாம் சொல்ல ஆரம்பித்தால், கர்மயோகத்தில் உழல
வேண்டியதுதான். ( இவை யாவும் கர்மாக்கள்). பகவானை அடைய பக்தியோகமும்,
ப்ரபத்தியும் உள்ளன. பக்தியோகம் செய்யவும் ப்ரபத்தி தேவை. இந்தத் தொடரைப்
படிப்பவர்களுக்கு, இவற்றில் ருசி (ஆசை ) ஏற்படுத்த, எண்களைச் சொல்லும் சாக்கில்,
பல நுட்பங்களைச் சொல்ல விழைகிறேன் . ஆதலால், அடியேன் சொல்லும் எண்கள்
சம்பந்தப்பட்ட , ஆத்ம , வேதாந்த விசாரங்களை க்ரஹிக்கப் பிரார்த்திக்கிறேன்

இப்போது எண் 16
——————————-

ஸ்ரீ புருஷ ஸுக்தம் 16 ருக்குகளைக் கொண்டது.

வேதத்தில், கர்ம காண்டத்திற்கு, ஜைமினி மஹரிஷி ,ஸுத்ரங்கள் செய்திருக்கிறார்.
16 அத்யாயங்கள்—-இதற்கு, மீமாம்ஸா சாஸ்த்ரம் என்று பெயர்.
ஷோடஸ கலைகள்
——————————
ஜீவாத்மா செய்த செயல்களை முன்னிட்டு, அதன் போகத்திற்காக ,பகவான்,
16 கலைகளை ஸ்ருஷ்டிக்கிறான் .(ஷோடஸ கலைகள் )
1.ப்ராணன் . 2.தேகம் . 3. ஸ்ரத்தை . 4. புத்தி . 5.முதல் 9. பஞ்சபூதங்கள்
10. இந்த்ரியம் .11.மனஸ் . 12.அன்னம் .13. வீர்யம் . 14. தபஸ் .15. மந்த்ரம் 16. கர்மம்
பெரியோர்கள், புத்திக்குப் பதிலாக, யாகாதிகளைச் சொல்வர்
இன்னும் சில பெரியோர்கள், பிராணன், ஸ்ரத்தை ,5 பூதங்கள், இந்த்ரியம்
மனஸ் ,அன்னம், வீர்யம், தபஸ், மந்த்ரம், கர்மம், பலன், பேர் (ஜீவன் )
இவை 16 என்று சொல்வர்.
இந்த ஜீவன் ,இப்படி ஷோடஸ கலா புருஷன் என்று அழைக்கப்படுகிறான்.

ஷோடச உபசாரம்
————————-

இவை 16 மட்டுமல்ல–36 என்றும் கூறுவார்
1.ஆவாஹநமும் ப்ராண ப்ரதிஷ்டையும் . 2. ஆஸனம் . 3.அர்க்யம் . 4. பாத்யம்
5. ஆசமநீயம் . 6.ஸ்நானம் . 7.வஸ்த்ரம். 8.யஜ்ஞோபவீதம். 9.கந்தம் 10.துளசி
11. சந்தனம் 12.புஷ்பம் 13.தூபம் 14.தீபம் 15.குங்குமம் 16.ஹரித்ரா சூர்ணம்
17.அலங்காரம் 18.ஆபரணம் 19.கண்ணாடி 20.குடை 21.சாமரம்,விசிறி
22.புநர் அர்க்யம் 23.பாத்யம் 24.ஆசமனம் 25. நைவேத்தியம் 26.மதுபர்கம்
27.தாம்பூலம் 28. மந்த்ர புஷ்பம் 29.வாத்யம் 30. சங்கீதம்
31.அஷ்டோத்ர சதநாம அர்ச்சனம் 32.த்யானம் 33.மந்த்ர ஜபம்
34. ப்ரதக்ஷணம் 35.நமஸ்காரம் 36.ஸயனோத்ஸவம்

எண் 15
————-

1. பரார்த்தம் 2.கல்பம். 3.மன்வந்தரம் . 4.யுகம் . 5. ப்ரதம பாதம் . 6ஜம்பூத்வீபம்
7.பாரதவர்ஷம் . 8.பரதகண்டம் . 9.சகாப்தம், தக்ஷிணே பார்ச்வம் . 10 முதல் 16
.திதிவார நக்ஷத்ரங்கள்

சந்திரனுக்கு, 15 கலைகள் என்று ஸ்ரீ தேவி பாகவதம் கூறுகிறது
1. சந்திரனின் முதல் கலையை அக்னிதேவனும்
2ம் கலையை, வாயுதேவனும்,
3ம் கலையை, விச்வேதேவர்களும்,
4ம் கலையை, ப்ரஜாபதியும் ,
5ம் கலையை வருணனும்
6ம் கலையை வாஸவனும்
7ம் கலையை தேவரிஷிகளும்
8ம் கலையை அஷ்ட வஸுக்களும்
9ம் கலையை இந்த்ரனும்
10ம் கலையை மருத்துக்களும்
11ம் கலையை ருத்ரர்களும்
12ம் கலையை விஷ்ணுவும்
13ம் கலையை குபேரனும்
14ம் கலையை பசுபதியும்
15ம் கலையை பித்ரு தேவதைகளும்
சாப்பிடுவதாகவும்,
ஒருகலைமட்டும் மிஞ்சியுள்ள சந்த்ரன் ,ஸுர்ய மண்டலத்தில் ,அமாவாஸ்யை
அன்று புகுந்து, ஸுர்யனின் சக்தியால்,சுக்ல பக்ஷத்தில் மறுபடியும் வளர்வதாகவும்
கூறுகிறது.
இதைப் 15 என்றும் சொல்லலாம் அல்லது 16 என்றும் சொல்லலாம். . ஆனால், 15 என்று
சொல்வதே நன்று என்று பெரியோர்கள் கூறுவர்
இன்னொமொரு செய்தி–
14வது திதி —அதாவது சதுர்த்தசி முடிந்ததும், –14வது கலை
முடிந்ததும் சந்த்ரன் பித்ரு காரகனாகிற ஸுர்யனிடம் போகிறான். அப்போது ஒருகலைபோய்
மீதம் ஒரு கலை உள்ளது.அந்த ஒரு கலையுடன் அக்னிதேவனைத் (ஸுர்யமண்டலத்தின்
நடுவில் உள்ள) துதித்து, தோஷங்கள் நீங்கி மறுபடியும் ஸுர்யநாராயணன் க்ருபையால்
வளர்கிறான்
வாமனாவதாரத்தில், த்ரிவிக்ரமனுக்கு அவரது திருவடியை ,ப்ரஹ்மா தன்னுடைய
கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தால்அபிஷேகம் செய்ய, அந்தத் தீர்த்தம் த்ருவமண்டலத்துக்கு
வந்து,பிறகு சந்த்ர மண்டலத்துக்கு வந்து, பிறகு கைலாசத்துக்கு வந்து,சிவனின் ஜடாமுடியில்
விழுந்து பிறகு பூமியில் கங்கையாக வருகிறது.சந்த்ரனில் காணப்படும் பனி, ஜலம் (deep craters )
இவை, சத்யலோகத்திளிருந்து கங்கை, சந்த்ர மண்டலத்தில் ப்ரவஹித்ததால் ஏற்பட்டது.
பகவானின் ஸ்ரீபாத தீர்த்தத்தால் சந்த்ரனின் தோஷம் நீங்கிற்று.இதற்காக ஒவ்வொரு
அமாவாஸ்யை அன்றும், அக்னி பிரவேசம் செய்கிறான் என்பர்
அடுத்தது —-14 என்கிற எண்
————————————–

மன்வந்தரங்கள் –14 அவையாவன :–1. ஸ்வாயம்புவர் 2.ஸ்வாரோஷிசர் 3. உத்தமர்
4.தாமஸர் 5.ரைவதர் 6.சாக்ஷுஸர் 7. வைவஸ்வதர் 8, ஸாவர்ணி 9.தக்ஷ ஸாவர்ணி
10. ப்ரஹ்மஸாவர்ணி 11. தர்ம ஸாவர்ணி 12.ருத்ரஸாவர்ணி 13.ரௌச்யர் 14.பௌத்யர்

இப்போது நடப்பது—வைவஸ்வத மன்வந்தரம் (7வது). ஒவ்வொரு மன்வந்தரத்திலும்
49 மருத்துக்கள் பிறக்கிறார்கள். அவர்களில் 28 பேர் அதே மன்வந்தரத்தில் முக்தி அடைய,
அவர்களுக்குப் பதிலாக, அதே எண்ணிக்கையில் வேறு மருத்துக்கள் அந்த ஸ்தானத்துக்கு
வருவதாக, ஹரி வம்சம் சொல்கிறது

வித்யா ஸ்தானங்கள் —14
1. 4 வேதங்கள் 2. 6 அங்கங்கள் (சிக்ஷா, வ்யாகர்ணம் , சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம்
கல்பம் ), 11. ந்யாய சாஸ்திரம் 12.மீமாம்ச சாஸ்த்ரம் 13.தர்ம சாஸ்த்ரம் 14 இதிஹாஸ
புராணங்கள் ( எண் 18யைம் பார்க்க )

ஆசார்யனுக்குத் தேவை–14 .
1. தயை 2. நல்ல குருபரம்பரையில் உபதேசம் பெற்றிருப்பது 3.வேதாத்யயனம்
செய்து இருப்பது. 4.வேதாந்த ச்ரவணம் பண்ணி, பகவானிடம் பக்தியுடன் இருப்பது
5.நிலையான ஞானத்துடன் இருப்பது. 6. ஸத்வ குணத்துடன் இருப்பது. 7.தோஷம்
இல்லாதவராய் இருப்பது 8.உண்மையே பேசுவது. 9.தக்க ஆசாரம் உடையவராய்
இருப்பது. 10.டம்பம், அஸுயை இல்லாமல் இருப்பது 11.ஜிதேந்த்ரியனாய் (புலன்
அடக்கம் ) இருப்பது 12. நிலைத்த பந்து–உறவு போல இருப்பது 13.மற்றவர் செய்யும்
தவற்றைத் திருத்துபவாக இருப்பது 14.தனக்கும், மற்றவர்க்கும் க்ஷேமத்தையே
வேண்டுவது

14 உலகங்கள்
ஸத்ய லோகம் 2.தபோ லோகம் 3. ஜனலோகம் 4.மஹர் லோகம் 5.ஸ்வர் லோகம்
ஸ்வர் லோகத்தில் இருப்பவை–த்ருவ மண்டலம்,( இது 3வது ஆகாசஸ்தானம்
–விஷ்ணுபதம்–விராட் புருஷனின் ஹ்ருதய நாடி அந்தர்யாமியாக விஷ்ணு இருக்கிறார்
கங்கையின் உற்பத்தி ஸ்தானம் ,விஷ்ணுபதம் என்பர்.—பரமபதம் என்பது வேறு )
ஸப்தரிஷி மண்டலம் சனி மண்டலம், ப்ரஹஸ்பதி மண்டலம் , அங்காரக மண்டலம்,
புத மண்டலம், நக்ஷத்ர மண்டலம் , சந்த்ர மண்டலம், சூர்ய மண்டலம் (ஸம்யமநீ என்கிற
யம பட்டணம், ஸுகமத என்கிற வருண பட்டணம், வஸ்வோகோஸரா என்கிற இந்த்ர
பட்டணம் இங்கு உள்ளன –இவ்விவரங்கள், ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் உள்ளது–
பார்க்க–அடியேனின் புத்தகம் ” ஏன்–என்ன–எதற்கு ” ) 6.புவர் லோகம். 7.பூலோகம்
( 7 த்வீபங்கள் 7 கடல்கள் உள்ளன 1.ஜம்பூத்வீபம் அதைச் சுற்றி உப்புக்கடல் 2.ப்லக்ஷத்வீபம்
அதைச் சுற்றி கருப்பஞ்சாற்றுக்கடல் 3.சால்மல த்வீபம் அதைச் சுற்றி ஸுரா கடல்–தேவர்கள்
வசிப்பது இங்கே . 4.குஸ த்வீபம் அதைச் சுற்றி நெய்க் கடல் 5.க்ரௌஞ்ச த்வீபம் அதைச் சுற்றி
தயிர்க்கடல் 6. ஸாக த்வீபம் அதைச் சுற்றி பாற்கடல் 7. புஷ்கர த்வீபம் அதைச் சுற்றி நல்ல
நீர்க்கடல் —பார்க்க–அடியேனின் புத்தகம் –ஏன்–என்ன –எதற்கு )
இன்னும் விவரங்கள் சொல்கிறேன்—புஷ்கர த்வீபம் நல்ல நீர்க்கடல் முடிந்ததும், ஸ்வர்ணமுகி
என்கிற பிரதேசம் உள்ளது.அதையடுத்து, லோகாலோகம் –பர்வதங்கள் உள்ளன. அதையடுத்து,
பேரிருள்—இருள் நிறைந்த பள்ளத்தாக்குகள் –நரகங்கள். இவை எல்லாவற்றையும் சுற்றி ,
அண்டச் சுவர் உள்ளது. இதுதான் அண்டம் எனப்படுகிறது. பகவானின் படைப்பில் ,இப்படி
எத்தனையோ அண்டங்கள் உள . பூலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம் –இவை
கல்பம்தோறும் அழிந்து, மறுபடி படைக்கப்படுகிறது (இதை, க்ருதகம் என்பர் ).ஜனலோகம்,
தபோ லோகம் ஸத்யலோகம் ,இவை கல்பம் தோறும் அழியாது –இதை அக்ருதம் என்பர் .
மஹர்லோகம், கல்பம் முடிவில் அழியாது. இங்குள்ள ஜனங்கள், பிரளய காலத்தில் அக்னியின்
வெப்பம் தாங்காமல் ஜனலோகம் செல்வர் (க்ருதக அக்ருதகம் )

14 விஷ்ணு சப்தங்கள் —“விஷ்ணோர் முகம் வீர்யாணி ——-” என்கிற விஷ்ணு ஸுக்தத்தில்
வருகிறது.14 லோகங்களுக்கும் அதிபதி விஷ்ணு என்பதைச் சொல்கிறது.14 வித்யா
ஸ்தானங்களும் விஷ்ணுவிடத்தில் அடக்கம்

——————தொடர்கிறது———————-

-எண்கள் —அவை சொல்வது என்ன ?—-12
———————————————————–

இப்போது எண் 12 என்பதைப் பார்ப்போம்

ஸ்ரீவைஷ்ணவனுக்கு முக்யமாக இருக்கவேண்டிய 12 நியமங்கள்
——————————————————————————————–
1.ஆஹார நியமம்
2.விஹார நியமம்
3. அன்ன நியமம்
4.போஜன நியமம்
5.ஸ்நான நியமம்
6.ஸ்வரூப நியமம்
7. உபாய நியமம்
8. உபேய நியமம்
9.வாஸ நியமம்
10. போக நியமம்
11. ஆசார நியமம்
12.ஸம்ஸர்க்க நியமம்
ஆஹார நியமம் என்பது, பாகவத அன்னத்தையே புசித்தல்.
விஹார நியமம் எனபது, மனத்துக்கு அநுகூலமான இடத்தில்,
வசித்தல் (திவ்யதேசமாக இல்லாவிட்டாலும் )
அன்ன நியமம் என்பது, அன்னத்திற்கு என்று சம்பாதிக்கும்
தண்டுலம் (அரிசி), முதலான அபக்குவமான த்ரவ்யத்தை,
அவைஷ்ணவர்களிடமிருந்து பெறாமல், இருப்பது.ஒருவனுக்கு
என்று உத்தேசிக்கப்பட்டதை அபஹரித்துப் புசிக்காமல் இருப்பது.
போஜன நியமம் என்பது, மனம் உவந்து கொடுக்கும்
தண்டுலாதிகளை,வாங்கி பாகம் பண்ணி பகவந் நியமனமாகப்
புசித்தல்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லப் புகுந்தால்,
அடுத்த எண்ணைப் பற்றிச் சொல்ல வெகுகாலம் ஆகும்,
(நியமங்களுக்கான விரிவான அர்த்தம் வேண்டுவோர்,
தனியே அடியேனைக் கேட்கலாம் )

தபஸ் 12
————-

தைத்திரீயத்தில் ,4வது பாகம், ஆரண்யகத்தில், “அம்பஸ்யபாரே —”
என்று தொடங்கும் 6வது ப்ரச்னம் சொல்கிறது. இது என்னவென்று
பார்ப்போம்.
தத்வம் —சேதனம், அசேதனம் , ஈஸ்வரன் (தத்வ த்ரயம் )
ஹிதம் —கர்மயோகம், ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி யோகம்
புருஷார்த்தம் —பகவான் (ஜீவன்கள்–அதாவது, முமுக்ஷுக்கள்
அடையும் பயன்—புருஷார்த்தம் )
இவற்றைத் தவிர, த்ரிவர்க்கம் , அபவர்க்கம் என்றும்,
த்ரி வர்க்கம் என்பது, தர்ம, அர்த்த , காமம் (அறம் ,பொருள், இன்பம் ) என்றும்,
அபவர்க்கம் என்பது, மோக்ஷமாகிய பேரின்பம் என்றும் சொல்லப்படுகிறது.
த்ரிவர்க்கத்தில் இரண்டு வகை, ஐஹிகம் , ஆமுஷ்மிகம்
ஐஹிகம் என்பது, இவ்வுலகில் வாழும்போது ஜீவன் பெறும் இன்பம்
ஆமுஷ்மிகம் என்பது, ஜீவன் மோக்ஷத்தில் பெரும் பேரின்பம்
ஆமுஷ்மிகமான மோக்ஷத்தைப் பெற, இஷ்டாபூர்த்த தத்தங்கள் உபாயமாக
உள்ளன.
இஷ்டா—யாகம், ஹோமம் முதலியன
பூர்த்த —-குளம், ஏரிகள் வெட்டுதல், தர்மசாலைகள் கட்டுதல் போன்றவை
தத்தம்—-தங்கம், தான்யம், ரத்னம், க்ருஹம், பசு முதலியவற்றைத் தானம் செய்தல்.
இப்போதுதான் வருகிறது–தவங்கள்
1. ஸத்யம்
2.தபஸ்
3.தமம்
4.சமம்
5.தர்மம்
6.ப்ரஜனனம்
7.த்ரேதாக்நிகளான –கார்ஹபத்யம்
8.ஆஹவனீயம்
9.தக்ஷிணாக்னி
10. அக்நிஹோத்ரம்
11. யஜ்ஞம்
12. பாநாயம் (மனஸ்ஸால் செய்யப்படுவது ) அதாவது—ந்யாஸம்

ப்ராஹ்மண குணங்கள் —12
—————————————–
1, தர்மத்தை கடைப் பிடிப்பது
2.சத்யத்தையே பேசுவது
3.க்ருச்ரம் முதலிய வ்ரத அனுஷ்டானத்தால் காயக்லேஸம் செய்வது
4.சாஸ்த்ர ஞானம்
5.பொறாமை இல்லாமலிருப்பது
6.தகாத கார்யம் செய்வதில் லஜ்ஜை
7.பொறுமை
8.பிறர் குணங்களில் தோஷாரோபணம் செய்யாமை
9.தானம் செய்வது
10. யாகம் செய்வது
11.மனத்தைக் கட்டுப்படுத்துவது
12.புறப் புலன்களை அடக்குவது

அதிஷ்டான தேவதைகள் –12
————————————-
12 மாதங்களுக்கும் ,12 அதிஷ்டான தேவதைகள்
1.மார்கழி —-கேசவன்
2. தை ——நாராயணன்
3. மாசி–மாதவன்
4. பங்குனி —-கோவிந்தன்
5.சித்திரை–விஷ்ணு
6.வைகாசி—மதுஸுதனன்
7. ஆனி —த்ரிவிக்ரமன்
8. ஆடி —வாமனன்
9. ஆவணி —ஸ்ரீதரன்
10. புரட்டாசி—-ஹ்ருஷீகேசன்
11. ஐப்பசி —பத்மநாபன்
12. கார்த்திகை—தாமோதரன்

சிஷ்யனின் குணங்கள்
——————————-

1. வேத அத்யயனம் மட்டுமல்ல, ஆசார்யனிடம் நல் உபதேசங்களைக்
கேட்கவேண்டும்
2.உண்மையே பேச வேண்டும்
3.தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்
4.வேத அத்யயனத்தை விடக்கூடாது.
5. குரு தக்ஷிணை கொடுத்து,பிறகு விவாஹம் செய்துகொண்டு
சந்ததியை விருத்தி செய்யவேண்டும்.
6.யோக,க்ஷேமங்களுக்கு வேண்டுபவற்றில், உபேக்ஷை கொள்ளக்கூடாது
7. தாய்,தந்தை, ஆசார்யன், அதிதி –இவர்களை தெய்வமாக நினைக்கவேண்டும்.
8. தேவ, பித்ரு கார்யங்களை விடாது செய்யவேண்டும்
9.வைதிக கர்மானுஷ்டானங்களில், எவற்றுக்கு எந்தக் குற்றமும் இல்லையோ,
எவை சதாசாரங்களோ , அவற்றை செய்யவேண்டும்
10. பெரியோர்களிடம், அடக்க ஒடுக்கத்தோடு நடந்து கொள்ளவேண்டும்.
11. ஊற்றத்துடனும், கொடுக்கும் வஸ்துவில் பற்று இல்லாமலும், தன்னுடைய
வசதிக்குத் தக்கபடியும், அல்பமான தானம் என்று வெட்கப்பட்டும்,
சாஸ்த்ரோக்தமாகச் செய்யவேண்டும் என்கிற பயத்துடனும், சங்கல்பத்துடனும்
பொருளைத் தானம் செய்ய வேண்டும்
12.ஆசாரங்களில், அனுஷ்டானங்களில் சந்தேகம் வந்தால், ஆசாரசீலர்கள் /
பண்டிதர்கள் / பெரியோர்கள் — இவர்களின் அனுஷ்டானங்களைக் கவனித்து,
அதன்படி அனுஷ்டானங்களைச் செய்யவேண்டும். ஆசாரமில்லாதவர்களிடம் ,
இவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கவனித்து, அப்படியே
ஆசாரமில்லாதவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும்.

மாணவப் பருவத்தில் 12 ஒழுக்கக் கட்டுப்பாடுகள் –12 ரத்னங்கள் என்றும் சொல்வர்.
————————————————–

1. ரிதம்—ப்ரபஞ்சத்தில் எல்லாமும் ஒரு ஒழுங்குமுறையாக இயங்குகிறது.
இதற்கு ஏற்றார்போல ஒன்றி வாழவேண்டும்
2.ஸத்யம்–உண்மையே பேசுதல், இனிமையாகப் பேசுதல், பிறருக்குத் தீங்கு
இல்லாமல் பேசுதல்
3. தவம்—வ்ரதம், உபவாஸம், தேவைகளைக் குறைத்தல்
4. தமம்—புலனடக்கம்
5.சமம் —மனஸ்சை எப்போதும் சாந்தமாக வைத்துக்கொள்ளல்
6.வேள்வி—-பகவான் நமக்குக் கொடுப்பதைத் திருப்பிக் கொடுக்கவே, வேள்வி
இதற்கு ஐந்து வழி– தேவ யஜ்ஞம் —பகவானுக்குப் பூஜை
7. ரிஷி யஜ்ஞம்—-சாஸ்த்ர ஞானம் பெறுவது,அதைப் பிறருக்கு வழங்குவது
8.பித்ரு யஜ்ஞம்—முன்னோர்களுக்கு ச்ராத்தம் ,தர்ப்பணம் இவற்றைச் செய்வது
9.நாராயஜ்ஞம்—-உதவி என்று வருபவர்களுக்கு, முடிந்த உதவிகளைச் செய்வது
10.பூத யஜ்ஞம் —–காகம், நாய் இவைகட்கு உணவிடுவது
11. அதிதி ஆராதனம் —வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது
12. மனித சமுதாய மேன்மை—நான் என்பதை விடுத்து, சமுதாய நன்மைக்கு
உழைப்பது

த்வாதச ஆதித்யர்கள்
———————————-
1.இந்த்ரன்
2.தாதா
3.பகர்
4.பூஷா
5.மித்ரர்
6.வருணர்
7.அர்யமா
8.அர்ச்சிஷர்
9.விவஸ்வான்
10.த்வஷ்டா
11.ஸவிதா
12.விஷ்ணு

12 மாதங்களிலும் ,
ஒவ்வொரு மாதமும், த்வாதசி திதியில், ஒவ்வொருவிதமான யஜ்ஞம்செய்தால்,
கிடைக்கும் பலனை, மஹாபாரதம் –அநுசாஸன பர்வம் சொல்கிறது

இப்போது 11வது எண்
————————————

ஏகாதச ருத்ரர்கள்
1.அனஜகபாதர்
2.அஹிர்புத்ந்யர்
3. வ்ரூபாக்ஷர்
4.பைரவர்
5.ஹரர்
6.பஹூரூபர்
7.த்ரயம்பகர்
8.ஸுரேச்வரர்
9. ஸாவித்ரர்
10.ஜயந்தர்
11.பிநாக்

பித்ருக்கள் செய்யும் நன்மைகள்—11
—————————————
(பித்ரு தர்ப்பணம், ச்ராத்தம் போன்ற பித்ரு தர்மங்களைத் தவறாமல் செய்பவர்க்கு )

1.எதிரிகளிடமிருந்து காப்பது
2.சர்ப்பம் போன்ற விஷ ஜந்துக்களிடமிருந்து காப்பது
3.பாவங்களிலிருந்து காப்பது
4.விபத்துக்களிலிருந்து காப்பது
5.ஸுர்யனிடமிருந்து ஒளியைப் பெற்றுத் தருவது
6.மங்களத்தை அருள்வது
7.பிள்ளைப் பேறு அளிப்பது
8.முன்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்க உதவுவது
9.இதற்காகப் ப்ரார்த்தனை செய்வது
10.நீண்ட ஆயுளைக் கொடுப்பது
11.சிலசமயங்களில், மரணத்தின் பிடியிலிருந்தே காப்பாற்றுவது

———————தொடருகிறது———-
————————————————————————————————-
—- எண்கள் —அவை சொல்வது என்ன ?—13
——————————————————————

இதுவரை எண் 11 முடிய , அரிய பலசெய்திகளைத் தெரிந்து ,மகிழ்ந்தோம்

இப்போது எண் 10—
—————————–

பசுவுக்குப் பத்துப் பெயர்கள் உள்ளன.
ஒரு தேசத்தில் பசுவதை ஆரம்பித்துவிட்டது என்றால், கலிபுருஷனின் ஆதிக்கம்
வந்துவிட்டது என்று அர்த்தம். அத்துடன், சூதாட்டம், கள்குடித்தல், விபசாரம்
மூன்றும் கலிபுருஷனுடன் கூடவே வருகின்றன.
அபு ரைஹான் ஆல்பெருனி என்ற இஸ்லாமியர், 1030ம் ஆண்டில் ஒரு புத்தகம்
எழுதி இருக்கிறார். sachu .e .alberuni ‘s India என்கிற இப்புத்தகம் இரண்டு தொகுதியாக ,
லண்டனில் 1910ல் வெளியிடப்பட்டது.
அதில், மிகுந்த மதப்பற்று உள்ளவர்களும், உறுதியான கொள்கை உள்ளவர்களும்,
தங்களுடைய உறுதியான கொள்கைகளுக்காகப் பெருமைப்படுபவர்களுமான
பாரத மக்கள் மீது, மேற்கிலிருந்து இந்த நாட்டில் புகுந்தவர்களாகிய நாம், பெரிய
அநீதியை இழைத்துவிட்டோம். “முகம்மது எல் காசிம் ” என்பவர், மூல்தானில் இருந்த
புனிதமான சூர்யன் கோவிலுக்குள் இருந்த புகழ் பெற்ற சூர்ய விக்ரஹத்தின் கழுத்தில்,
பசுவின் மாமிசத்துண்டைத் தானே கட்டி, மாலையாகத் தொங்கவிட்டார்.இதுபோன்ற
செயல்கள் பலவற்றாலும், மிகவும் அருவருப்பும் ,த்வேஷமும் அடைந்த சிறந்த அறிவு
படைத்த பல்லாயிரக்கணக்கான பாரதமக்கள் உள்நாட்டுக்குத் தொலைதூரத்துக்குச்
சென்றுவிட்டனர். அதனால்தான், அறிவாளிகளே இல்லாத வறண்ட பாரதநாட்டின்
ஒருபகுதியையே நமக்குக் கிடைத்தது —-என்று குறிப்பிட்டுள்ளார்.
பசு நமக்குத் தெய்வம்.
நமஸ்தே ஜானமாநாயை நமஸ்தே ஜாதாயா உததே நம : |
பாலேப்ய :ஸபேப்யோ ரூபாயாக்ன்யே தே நாம : ||
என்று சொல்லி பசுக்கள் வணங்கப்படுகின்றன.
1.அக்நியா —–கொல்லப்படக் கூடாதது.
2.உஸ்ரா —-பால், தயிர், வெண்ணெய் —ஹவிஸ் ஸைப் பெற்றுள்ளது
3.உஸ்ரியா —-மனிதனுக்குச் சுகபோகங்களைக் கொடுப்பது
4.அஹீ —-தானம் செய்தால் மஹத்தான புண்யத்தைப் பெறலாம்.
5.மஹீ —-எல்லாத் தெய்வங்களுக்கும் இருப்பிடம்
6.அதிதி—–எல்லா உலகங்களுக்கும் பால் கொடுத்துப் போஷித்தாலும்
சோர்வு அடைவதில்லை.
7.இளா —–எல்லோராலும் புகழப்படுவது.
8.ஜகதீ —பால் இவற்றை விரும்புபவர்கள், தேடிவந்து அடைவது
9.சக்வரீ —–யஜமானனை ,பால் முதலியவற்றைக் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவது.
10. கோ—-பசு

யமம் —தேவி புராணம் 10வது ஸர்க்கத்தில் சொல்லப்படுகிறது
———————————————————————————————-
1. புலனடக்கம்
2.இரக்கம்
3. பொறுமை (பொறுத்தல் )
4.கொடை (தானம் செய்தல் )
5.சத்யம் (உண்மை பேசுதல் )
6.நேர்மை
7.அஹிம்சை (கொல்லாமை )
8.களவாடாமை
9.சொல் இனிமை
10.மன அடக்கம்
இவைபத்தும் யமம் எனப்படுகிறது

வாயுக்கள் –10
————————-
ப்ராண சக்தியே உடலையும் ப்ரபஞ்சத்தையும் இயக்குகிறது. இது முக்யமான வாயு .
1. ப்ராண வாயு—மேல்நோக்கிய இயக்கம்
2.அபானன்—-கீழ் நோக்கிய இயக்கம்
3.வ்யானன் —-எல்லாப் பக்கமும் இயக்கம்
4. உதானன்—-மரண சமயத்தில், இந்த ஜீவாத்மாவாக்கிய உயிர், உடலைவிட்டு
வெளியேற உதவுகிறது.
5.ஸமானன் ——–உணவை ஜீரணித்து ரத்தமாக மாற்றுகிறது
6.நாகன்—-வாந்தி வருவது, ஏப்பம் வருவது
7.கூர்மன்—-கண் இமைகளை இயக்கம் வாயு
8.க்ருகலன் –பசியை உண்டாக்கும் வாயு
9.தேவதத்தன் —கொட்டாவியை உண்டாக்கும் வாயு
10. தநஞ்ஜயன்—-உடலுக்கு ஆரோக்யத்தைக் கொடுப்பது

விடவேண்டிய கர்மாக்கள் —10
——————————————————-

த்ரேகத்தால் செய்யப்படுபவை —3
1. உயிரைப் போக்குவது
2. திருடுவது
3. பிறர் மனைவியைத் /கணவரைத் தொடுவது

வாக்கினால் செய்யப்படுபவை —4
4 கெட்ட பேச்சுகள் பேசுவது
5.கடும் சொற்களைப் பேசுவது
6. கோள் சொல்வது
7. பொய் பேசுவது
மனத்தால் செய்யப்படுபவை —3
8.பிறர் பொருளில் ஆசைப்படுவது
9.பிராணிகளைக் கொடுமைப்படுத்த நினைப்பது
10. புண்யம் ,பாவம் என்பதெல்லாம் இல்லை என்று நினைப்பது

விச்வேதேவர்கள் —10 பேர்
———————————–

தக்ஷ ப்ரஜாபதிக்குப் பத்து பெண்கள் இவர்கள் தர்மதேவதையை மணந்தனர்
அவர்களில் “விச்வா ” ஒருத்தி. அவளுக்குப் பிறந்த பத்து பிள்ளைகளே
விச்வே தேவர்கள்
1. வஸு
2.ஸத்யன்
3. க்ரது
4. தக்ஷன்
5.காலன்
6.காமன்
7.த்ருதி
8.குரு
9.ப்ரூருவஸ்
10. மார்த்ரவன்
வஸு ஸத்யௌ க்ரது தக்ஷௌ காலகாமௌ த்ருதி :குரு ; |
ப்ரூருவா மார்த்தவாச்ச விச்வேதேவா ப்ரகீர்த்திதா ||
என்பது பரத முனிவர் அருளிய ச்லோகம் (சப்த கல்ப த்ருமம் ,வாசஸ் பத்யம் முதலிய
கிரந்தங்களில் விவரங்கள் உள்ளன )

தசாவதாரங்கள் –அபிநவ தசாவதாரம்
————————————————————-
1. மத்ஸ்ய அவதாரம்—-தர்ம மூலமாக, வேத சம்ரக்ஷணத்துக்கு
2. கூர்மாவதாரம் —-தேவர்களின் அமரத்வத்துக்கு
3. வராஹாவதாரம் —-தர்ம பூமியை நிலை நிறுத்துவதற்கு
4.நரசிம்ஹாவதாரம்—தன்னையே பகவானாக இறுமாந்து ,பக்தனைத் துன்புறுத்தியவனை
அழித்துத் தர்மத்தை வளரச் செய்வதற்கு
5. வாமனாவதாரம்–புகழுக்காகத் தர்மம் செய்யும் அசுரனை சிக்ஷித்து , அனைத்தும் தன்னுடைய
உடைமை என்று ஸ்தாபிப்பதற்கு
6. பரசுராமாவதாரம் —-யஜ்ஞத்துக்கான பசுவை அபஹரித்து, அக்ரமச் செயல்கள் செய்த
அசுரர்களை அழிப்பதற்கு
7. ராமாவதாரம்—–அதர்மம் செய்யும் அசுரர்களை அழிப்பதற்கு
8. பலராமாவதாரம்—-அதர்ம மார்க்கத்திலிழிந்த, ருக்மி போன்றோரை அழிப்பதற்கு
9. கிருஷ்ணாவதாரம்—-அதர்ம வ்ருத்தியாலான சமஸ்த பார நிவ்ருத்திக்கு
10. கல்கி அவதாரம்—-தர்ம யுகத்தைத் திரும்பக் கொணர்வதற்கு
இப்படியும் சொல்வர்——-
1. மத்ஸ்யம் —–நீரில் வாழும் பிராணி
2.கூர்மம்—-தரையிலும் சிலகாலம் வாழும்
3. வராஹம்—-நீரில் அபிமானமுள்ள, தரையில் வாழும்
4. நரசிம்மம்—-முழு மிருகம் ஆகாதது
5. வாமனம்—முழு மானிடமான சிறிய ரூபம்
6. பரசுராமம்—-ஜாதிமாறிய மனித ஸ்வரூபம்
7.ராமன் —-முழுமனித தர்ம ஸ்வரூபம்
8.பலராமன்—-பாபம் செய்வோரைத் தட்டிக் கேட்கும் மனித ஸ்வரூபம்
9. கிருஷ்ணன்—-ஈஸ்வர வ்யாபாரத்தைப் ப்ரகாசப்படுத்தி மனுஷ்யனாய்
உலகங்களை மயக்கிய ஸ்வரூபம்
10. கல்கி—-ஈஸ்வரத் தன்மையிலேயே நிற்கும் ஸ்வரூபம்

பகவானின் தசாவதாரங்களையும், ஆழ்வார்களின் அவதாரங்களையும் விவரமாக
இணைத்து, ஸ்வாமி தேசிகன் மற்றும் ஆசார்யர்கள் அனுபவித்து இருக்கிறார்கள்
( அடியேன் உபன்யாசங்கள் யூ –ட்யூபில் உள்ளன )
1. மீனமும்—-பொய்கை ஆழ்வாரும்
2. கூர்மமும்—பூதத்தாழ்வாரும்
3. மகாவராஹமும்—பேயாழ்வாரும்
4.நரசிங்கனும்—திருமழிசை ஆழ்வாரும்
5. வாமனனும்—-ஸ்ரீ சடகோபனும்
6. பரசுராமனும்—குலசேகர ஆழ்வாரும்
7.ராமனும்—பெரியாழ்வாரும்
8. பலராமனும்—-தொண்டரடிப்பொடி ஆழ்வாரும்
9. கிருஷ்ணனும்—-திருப்பாணாழ்வாரும்
10. கல்கியும்—திருமங்கை ஆழ்வாரும்
பராசர சம்ஹிதை சொல்கிறது—
மத்ஸ்யாதி ரூபவத் பக்த ரூபாதிக மத : பரம்
யுகே யுகே த்வமாஸீச்ச க்ரமாத்பூதம் ஸரச்சதத்
மஹ தாஹ்வய இத்யாதி நாமபேதே நத :க்ரமாத்

ஸங்கல்ப ஸுர்யோதயத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்வது—
ஜயதி மதிகரணீ க்ருதய தர்சிதா :த்ரயோவதாரா ……….

பத்து —இது அற்புதமான எண்

இனி 9 என்கிற எண்ணைப் பார்ப்போம்

————-தொடருகிறது————

– எண்கள் –அவை சொல்வது என்ன ?–14
———————————————————————-
-எண் 10 என்பதில் இன்னும் ஒரு செய்தி சொல்லியாக வேண்டும். ஏன் எனில்,
இது,9 என்கிற எண்ணில் ஒரு இடத்தில் வருகிறது
இந்த்ரியங்கள் –10
1. சரீரம்
2. கண்
3.காது
4.மூக்கு
5.நாக்கு
( இந்த ஐந்தும் ஞாநேந்த்ரியங்கள் )
6. வாக்கு
7. கை
8.கால்
9.மூத்ரம் போகும் கருவி
10. மலம் போகும் கருவி
( இந்த ஐந்தும் கர்மேந்த்ரியங்கள் )
.
———————————————————————–

இப்போது எண் 9யைப் பார்ப்போம்

தர்மங்கள் 9 என்று சொல்வார்கள்
1.வர்ண தர்மம்
2. ஆச்ரம தர்மம்
3. பித்ரு தர்மம்
4.மாத்ரு தர்மம்
5.ப்ராத்ரு தர்மம்
6.பத்நீ தர்மம்
7. ராஜ தர்மம்
8.ப்ரஜா தர்மம்
9. மித்ரா தர்மம்
———————————————–
பகவானுக்கும், நமக்கும் உறவுகள் 9 விதம்
பகவான் நாம்

1பரமாத்மா ஜீவாத்மா
2 யஜமானன் கிங்கரர்கள் (வேலையாட்கள்)
3. பிதா புத்ரர்கள் /புத்ரிகள்
4.ஆசார்யன் சிஷ்யன்
5.பதி பத்னி
6.போக்தா போக்யம்
7.ரக்ஷிப்பவன் ரக்ஷிப்படுபவர்கள்
8.நியமிப்பவன் நியமிக்கப்படுபவர்கள்
9. சேஷி சேஷபூதர்கள்
————————————-
நவரஸங்கள்

1.ச்ருங்காரம்
2.கருணை
3.அத்புதம்
4.பீபத்ஸம்(வெறுப்பு )
5.பயானகம் (பயம்)
6.வீரம்
7.ரௌத்ரம்
8.ஹாஸ்யம்
9.சாந்தம்
—————————-

ஸங்கரம் 9 விதம்
1.ஒரே படுக்கை
2.உட்காரும் ஆசனம் ஒன்றே
3.ஒரே பக்தி
4.ஒரே பாத்ரம்
5. சமைத்த அன்னத்தின் கலப்பு
6.யாகம் செய்து வைத்தல்
7. படிப்பித்தல்
8.விவகாதி ஸம்பந்தம்
9.கூடிப் புசிப்பது
கலந்து பேசுதல், தொடுதல், சேர்ந்து உறங்குதல், சேர்ந்து படுத்தல்,
சேர்ந்து உட்காரல், யாகம் செய்வித்தல், கற்பித்தல், விவாகாதி ஸம்பந்தம்
செய்து கொள்ளல் –இவற்றால் ஒருவரின் பாபம் இன்னொருவருக்கும்
தொற்றும் என்றும்,வைஷ்ணவர்கள் இப்படிப்பட்ட ஸங்கரங்களை
கீழ்ப்பட்டவரோடு செய்யமாட்டார்கள் என்றும் சொல்வர் .
————————————–

வர்ஷம் 9 —நவ வர்ஷம்
1. இலாவ்ருத வர்ஷம்
இது பூமியின் மத்தியில் உள்ளது. இலா வ்ருதம் என்றும் பெயர்.
பார்வதி முதலானவர்கள் வசிக்கின்றனர்.பகவான், ஸங்கர்ஷணனாக
இருக்கிறார். பரமேஸ்வரன் பூஜிக்கிறார்
2. பத்ராச் வர்ஷம்
பத்ராச்வமா பூகண்டம் என்றும் சொல்வர். பத்ரச்வஸர்கள் என்கிற
ரிஷிகள் வசிக்கின்றனர். இது, இலாவ்ருதத்துக்குக் கிழக்கே உள்ளது.
இங்கு ஸ்ரீ ஹயக்ரீவன் பூஜிக்கப்படுகிறார்.
3.ஹரிவர்ஷம்
இது இலாவர்ஷத்துக்குத் தெற்கே உள்ளது.இங்கு ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ,
ப்ரஹ்லாதன் முதலோனாரால் பூஜிக்கப்படுகிறார்.
4. கேதுமால வர்ஷம்
இது இலாவர்ஷத்துக்கு மேற்கே உள்ளது.ஸ்ரீ மஹாவிஷ்ணு ,இங்கு
மன்மத ரூபத்தில் இருப்பதாயும், மஹா லக்ஷ்மியும், ப்ரஜாபதியின்
புத்ரர்களும் பூஜிப்பதாயும் சொல்லப்படுகிறது.
5.ரம்யக வர்ஷம்
இது இலாவ்ருதத்தின் வடக்கே உள்ளதாயும், பகவான் மத்ஸ்யாவதார
ரூபியாக இங்கு இருப்பதாயும், வைவஸ்வதமனு முதலானோர்
பூஜிப்பதாயும் சொல்கிறார்கள்.
6.ஹிரண்யக வர்ஷம்
இதுவும் வடக்கேயே உள்ளதாயும்,பகவான் ,ஸ்ரீ கூர்மாவதாரமாக இருப்பதாயும்
பித்ரு கணங்கள் துதிப்பதாயும் சொல்லப்படுகிறது.
7.உத்தர குரு வர்ஷம்
இது இன்னும் ஹிரண்யகத்துக்கு வடக்கே இருக்கிறது. பகவான், ஸ்ரீ ஆதிவராஹ
மூர்த்தியாக உள்ளார் என்றும், பூதேவி பூஜிப்பதாயும் சொல்கிறார்கள்.
8.கிம்புருஷ வர்ஷம்
இது தெற்கே உள்ளது. பகவான் ஸ்ரீ ஸீதாராமனாக இருக்கிறார் என்றும்
ஹனுமானால் பூஜிக்கப்படுகிறார் என்றும் சொல்கிறார்கள்.
9.பாரத வர்ஷம்
பகவான், நர நாராயணராக இருக்கிறார் என்றும், நாரதரால் பூஜிக்கப்படுகிறார்
என்றும் சொல்வர்.
முதலில் சொல்லப்பட்ட 8 வர்ஷங்களில் ,சுகத்தை அனுபவிக்கலாம் என்றும்,
9 வதான பாரத வர்ஷத்தில், புண்யத்தை சம்பாதிக்கலாம் என்றும் சொல்வர்.
இது கர்ம பூமி. கர்மாக்களை இங்குதான் செய்யமுடியும்.,
(நாம் வசிப்பது பாரத வர்ஷம் —பரந்த தேசம் )
இது ,ஜம்பூத்வீபம் என்றும் சொல்லப்படும்.
——————————————–

கர்தம ப்ரஜாபதி –தேவ ஹூதி ்தம்பதியருக்கு 9 பெண்கள்
ப்ரஹ்மாவின் நிழலிலிருந்து தோன்றியவர்—கர்தம ப்ரஜாபதி .இவர் மனைவி
தேவஹூதி. இவர்களுக்கு 9 பெண்கள் . 9 பெண்களும் 9 மஹரிஷிகளை மணந்தனர்.
1.கலை –மரீசி
2.அநுஸுயை—-அத்ரி
3. ச்ரத்தா —அங்கிரஸ்
4. ஹவிர்பூ—புலஸ்த்யர்
5. கதி—-புலஹர்
6. க்ரியா –க்ரது
7. க்யாதி –ப்ருகு
8. அருந்ததி—வசிஷ்டர்
9.சாந்தி—அதர்வா
கர்தம ப்ரஜாபதியின் ஒரே புத்ரராக ,பகவான்,கபிலராக அவதாரம் . இவர் தன்னுடைய
தாயாருக்கு பக்தி யோகத்தையும் ஸாங்க்ய யோகத்தையும் உபதேசித்தார்.
மனமே எல்லாவற்றுக்கும் காரணம்; ஆத்மாவைக் கட்டுப்படுத்துவது மனமே;
புலன்களின் வழியே மனஸ் ,செல்லாமல், மனதைப் பகவானிடம் செலுத்தவேண்டும்;
இதுவே முக்திக்கு வழி; இதுவே பக்தி யோகம்;
ஸாங்க்ய யோகம் என்பது, 24 தத்வங்களுடன் கூடியது; –ப்ரக்ருதி ,அதாவது
மூல ப்ரக்ருதி , மஹத் , அஹங்காரம் , 5 தன்மாத்ரைகள் ,5 பூதங்கள், மனஸ் ,
10 இந்த்ரியங்கள் –இவை 24. 25வது தத்வம் ஆத்மா;
( இவை எல்லாவற்றையும் அடியேன் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் –சில
முக்ய விஷயங்கள் என்கிற புத்தகத்திலும், ஏன் –என்ன –எதற்கு என்கிற புத்தகத்திலும்
விளக்கி இருக்கிறேன் ) இப்படி அறிந்து, ஆத்மாவாகிற
ஜீவன் ,ப்ரக்ருதி பந்தங்களிலிருந்து விடுபடுவதற்குச் செய்யப்படுவது ,ஸாங்க்யயோகம்
——————————————————–

தைத்திரீயத்தில் —ஆனந்தவல்லி ,இப்படிக் கூறுகிறது

ஸ ஏகோ மானுஷ ஆனந்த : |
தே யே ஸதம் மானுஷா ஆனந்தா 😐
ஸ ஏகோ மனுஷ்ய கந்தர்வாணாமானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம் மனுஷ்ய கந்தர்வாணாமானந்தா : |
ஸ ஏகோ தேவகந்தர்வாணா மானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஸதம் தேவகந்தர்வாணா மானந்தா : |
ஸ ஏக : பித்ருணாஞ்சிரலோகலோகானாமானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம் பித்ருணாஞ்சிரலோகலோகானாமானந்தா : |
ஸ ஏக ஆஜானஜாநாம் தேவானாமானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தேயே ஸத மாஜானஜாநாம் தேவானாமானந்தா : |
ஸ ஏக கர்மதேவானாம் தேவானாமானந்த : |
யே கர்மணா தேவானபி யந்தி |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம் கர்மதேவானாம் தேவானாமானந்தா : |
ஸ ஏகோ தேவானாமானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம் தேவானாமானந்தா : |
ஸ ஏக இந்த்ரஸ்யானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம்இந்த்ரஸ்யானந்தா : |
ஸ ஏகோ ப்ரு ஹஸ்பதேரானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம் ப்ரு ஹஸ்பதேரானந்தா : |
ஸ ஏக ப்ரஜாபதேரானந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
தே யே ஸதம் ப்ரஜாபதேரானந்தா : |
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த : |
ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹ தஸ்ய |
ஸயச்சாயம் புருஷே |

இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறது

ஆனந்தம் நூறு மடங்கு பெருகுகிற தாம்( நூறு என்பது அளவிட முடியாதது
என்று பொருள் )
1.மனுஷ்ய ஆனந்தம்
2 அதைவிட நூறு மடங்கு கந்தர்வ ஆனந்தம்
3. அதைவிட நூறு மடங்கு தேவகந்தர்வ ஆனந்தம்
4. அதைவிட நூறுமடங்கு பித்ருக்கள் ஆனந்தம்
5. அதைவிட நூறு மடங்கு தேவர்களின் ஆனந்தம்
6. அதைவிட நூறு மடங்கு இந்த்ரனின் ஆனந்தம்
7.அதைவிட நூறு மடங்கு ப்ருஹஸ்பதியின் ஆனந்தம்
8. அதைவிட நூறு மடங்கு ப்ரஹ்மானந்தம்
9. அதைவிட நூறு மடங்கு பரப்ரஹ்மானந்தம்
——————————

ஸ்ரீ ந்ருஸி ம்ஹ பீஜாக்ஷரம் —9
1. உக்ரம்
2.வீரம்
3. மஹாவிஷ்ணும்
4. ஜ்வலந்தம்
5. ஸ ர்வதோமுகம்
6 ந் ருஸி ம்ஹம்
7. பீஷணம்
8. பத்ரம்
9. ம்ருத்யும்ருத்யும்
—————————————-

பரமபதத்துக்கு 9 படிகள்
ஸ்வாமி தேசிகன் பரமபத ஸோபானத்தில் சொல்வது—-
1. விவேகம்….இதில்,இ ந்தப் படிக்கட்டில் ஏறுவது ரொம்ப ச்ரமம்
2. நிர்வேதம் ….கடந்த காலத்தில் இருந்ததை நினைத்து நினைத்து வருந்துவது
3. விரக்தி அல்லது வைராக்யம்….உடல் அழிந்துவிடும் என்பதை உணர்ந்து
பகவானின் திருவடிகளைப் பற்றும் வைராக்யம்
4. பீதி
5. ஹேது
6. உத்கமனம்
7. அர்ச்சிராதி மார்க்கம்
8. திவ்யதேச ப்ராப்தி
9. பகவத் ப்ராப்தி
இந்த ஜீவன் 1முதல் 5 படிக்கட்டுகளில்ஏறுவது மிகவும் ச்ரமம்
5வரை ஏறிவிட்டால், அடுத்த 4 படிக்கட்டுகளில் பகவானே ஏற்றி விடுகிறான்

————————தொடருகிறது—————–

எண்கள் —அவை சொல்வது என்ன ?–15
——————————————————–

இந்தத் தொடரில் சொல்லப்படும் ஏராளமான விஷயங்கள்,
அடியேன் 2006ம் வருடம் முதல், 2013ம் வருடம் வரை
“ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் “ஆன்மிக மாதப் பத்திரிகையில்
“கேட்பதும், சொல்வதும் ” என்கிற தலைப்பில் 1008 கேள்விகளில்
பதில்களாக எழுதியவை. இவைகளுக்குப் பற்பல ப்ராசீனமான கிரந்தங்கள்,
ஆசார்யசீலர்களின் உபன்யாசங்கள் , உதவியாக இருந்தன.

இப்போது எண் 8 என்பதைப் பார்ப்போம்

அஷ்டதிக் கஜங்கள்
———————–

கஜம் (யானை ) பார்யை

1.ஐராவதம் —- அப்ரமு
2.புண்டரீகம் (மகாபத்மம் )–கபிலா
3.வாமனம் பிங்களா
4.குமுதம் அனுபமா
5.அஜ்ஜனம் தாம்ப்ரபர்ணி
6.புஷ்பதந்தம் சுப்ரதந்தி
7.ஸார்வபௌமம் அங்கனா
8.ஸுப்ரதீகம் அஜ்ஜநாவதி
——————

அஷ்டமா ஸித்திகள்
——————

1.அணிமா —–பரமாணுவைப்போலச் சிறிதாகச் செய்துகொள்வது .
இது, பகவானைத் தன்மாத்ரைகளில் வ்யாபித்து இருப்பதாகத்
த்யானித்தால் ,இந்த ஸித்தி ஏற்படும்
2.மஹிமா —–எல்லையில்லாமல் ரூபத்தைப் பெருக்கிக் கொள்வது.
பகவானை, “மஹத் “என்கிற தத்வத்தில் வ்யாபித்து இருப்பதாகத்
த்யானித்தால் ,இந்த ஸித்தி ஏற்படும்
3. லகிமா —–தன்னை மிகவும் இலேசாகச் (கனமே இல்லாமல்)
செய்துகொள்வது. பகவானைப் பரமாணுக்களில் வ்யாபித்து
இருப்பதாகத் த்யாநித்தால், இந்த ஸித்தி ஏற்படும்
4. கரிமா —-தன்னை மிகவும் பளுவாகச் செய்துகொள்வது.
பகவானைப் பூதங்களில் வ்யாபித்து இருப்பதாகத் த்யானித்தால்
இந்த ஸித்தி ஏற்படும்
5.ப்ராப்தி——இந்த்ரியங்களுக்கு ,அதிஷ்டான தேவதையாக விளங்குவது.
பகவானை, ஸாத்விக அஹங்காரத்தில் வ்யாபித்து இருப்பதாகத்
த்யானித்தால் ,இந்த ஸித்தி ஏற்படும்
6.ப்ராகாம்யம் —-இந்த்ரியங்களுக்குப் புலப்படும் வஸ்துக்களையும்,
புலப்படாத வஸ்துக்களையும் பார்த்து அனுபவிப்பது. பகவானை
“ஸுத்ராத்மா ” வாகத் த்யானித்தால் ,இந்த ஸித்தி ஏற்படும்
7.ஈசித்வம் —–ப்ராணிகளின் சக்திகளுக்கு, அதிஷ்டான தேவதையாக
விளங்குவது. ஸ்ரீ விஷ்ணு பகவானை இடையறாது த்யானித்தால் ,
இந்த ஸித்தி ஏற்படும்
8. வசித்வம் —–எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. பகவானை
ஸ்ரீமன் நாராயனனாகத் த்யாநித்தால், இந்த ஸித்தி ஏற்படும்

இப்படியும் சொல்வர்

1.பசி, தாகம் இல்லாமல் இருப்பது
2.வெகுதூரத்தில் இருக்கும் பொருள்களையும் காண்பது; சப்தங்களைக்
கேட்பது
3.இந்த உடலோடே ,மனோவேகத்தில் செல்வது
4.நினைத்த ரூபங்களை எடுப்பது
5.பிறர் சரீரத்தில் புகுவது
6.நினைத்தபோது மரணம்
7.தேவஸ்திரீகளுடன் விளையாடுவது;விரும்பியதை அடைவது
8.தடையில்லாத அதிகாரம்

அல்ப ஸித்திகள்

முக்காலங்களையும் அறிவது
.சீதம் ,உஷ்ணம் இவைகளை ஜயிப்பது
பிறர் எண்ணங்களை அறிவது
விஷம், ஜலம் ,நெருப்பு, ஸுர்யன் –இவைகளின் சக்தியைத் தடுப்பது
ஆயுதங்களால், அபாயமற்று இருப்பது

அஷ்ட திக் பாலகர்கள்
————————
1.இந்த்ரன்
2.அக்னி
3.யமன்
4.நிர்ருதி
5.வருணன்
6.வாயு
7.ஸோமன் /குபேரன்
8.ஈசானன்

————————–

அஷ்ட வஸுக்கள்
—————–

1.த்ருவர்
2.தர்மர்
3.ஸோமர்
4.தீர்த்தர்
5.அநிலர்
6.அநலர்
7.ப்ரத்யூஷர்
8.ப்ரபாஸர்
ஸ்ரீ மஹாபாரதம், அநுசாஸன பர்வம் அஷ்டவஸுக்களைப்பற்றிச்
சொல்லும்போது, 1. தரன் 2. த்ருவன் ,3.ஸோவன் 4.ஸப்வித்ரன்
5.அநிலன் 6.அநலன் 7.ப்ரத்யூஷன் ,8. ப்ரபாஸன் என்று சொல்கிறது.

———————————

மனிதனுக்கு 8 —பத்துகளைச் சொல்வர்

1. முதல் 10 வயது வரை பதட்டம்
2. 2ம் பத்தில், (11 முதல் 20)—இறுமாப்பு
3. 3ம் பத்தில் (21 முதல் 30) —முறுக்கு
4ம் பத்தில் (31 முதல் 40 )நாட்டம்
5ம் பத்தில் (41 முதல் 50) அலைச்சல்
6ம் பத்தில் (51 முதல் 60 ) ஆட்டம்—உடல் ஆடுதல்
7ம் பத்தில் (61 முதல் 70) ஏக்கம்
8ம் பத்தில் (71 முதல் 80 ) தூக்கம்
வாயால் வரும் பேச்சு, மூக்கால் வரும் மூச்சு
இரண்டும் போனால் போச்சு—உயிர் போச்சு—திரேகம் போச்சு

———————

8 அபிமானங்கள் போகவேண்டும் என்பர்

1. உடலே ஆத்மா என்கிற நினைப்பு
2. நான் ஸ்வதந்த்ரன் என்கிற நினைப்பு
3. பிறருக்கு அடிமை என்கிற நினைப்பு
4. மற்ற உபாயங்களில் ஊக்கம்
5. பந்துக்கள் அபிமானம்
6. சிற்றின்பத்தில் தீராத ஆசை
7. எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணம்
8. ப்ரஹ்ம வித்துக்களிடம் அபசாரம் செய்ய விருப்பம்
—————————-

அஷ்டாங்க யோகம்
————————

பக்தியோகம் ,எட்டு பிரிவுகளாகச் சொல்லப்படுகிறது
1. யமம்—கொல்லாமை, பொய் சொல்லாமை, திருடாமை, பெண்ணாசை
இல்லாமை, எல்லோரிடமும் கருணை, நேர்மை, பொறுமை,
நிலைநிற்றல் , தூய்மை , கொஞ்சமாகச் சாப்பிடுவது
2. நியமம்—உடலைப் பட்டினியால் வாட்டுதல், தெய்வநம்பிக்கை,
பகவானை வழிபடல், ஈகை , நல்ல நூட்களைப் படித்தல், கேட்டல்,
நல்லறிவு,தவறு செய்ய வெட்கப்படல், அஷ்டாக்ஷரம் முதலிய ஜபம்,
பலவகையான நல்ல கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல்
3. ஆஸனம்—-த்யானம் செய்ய உட்காரும் நிலை, ஸ்வஸ்திகம், கோமுகம்
பத்மம், வீரம், ஸிம்ஹம், பத்ரம் , முக்தம் ,மயூரம் –இப்படி 8 நிலைகளில்
ஆஸனம்
4.ப்ராணாயாமம்—- ரேசகம், பூரகம், கும்பகம்
ரேசகம்—-இடது நாசியில் உள்ள “இடா” என்கிற நரம்பு வழியாக, உள்ளே
இருக்கும் அழுக்குக் காற்றை,வெளியேற்றுதல்
பூரகம்—-வலது நாசியில் உள்ள “பிங்களா” என்கிற நரம்பு வழியாக,
வெளியிலிருந்து தூய்மையான காற்றை உள்ளே இழுப்பது.
கும்பகம்—-உள்ளே இழுத்த காற்றை, அதற்கான மந்த்ரங்களை உதடு
அசையாமல் சொல்லி, உடலில் உள்ள 72000 நாடிகளிலும் பரவிவரும்படி
செய்வது. இப்படிச் செய்வதால், உடலில் எங்குவேண்டுமானாலும்,
ப்ராணவாயுவை நிறுத்திக் கட்டுப்படுத்த முடியும்.
5.ப்ரத்யாஹாரம் —–கண், காது முதலிய புலன்களை அடக்குவது
6. தாரணை ——மனதை ஒருநிலைப்படுத்தி, பகவானைத் த்யாநிப்பது
7. த்யானம் —-ஒருநிலைப்படுத்திய மனத்தால், பகவானின் திவ்ய மங்கள
விக்ரஹத்தை எப்போதும் ஸேவிப்பது
8. ஸமாதி ——பகவானுடன் பிரிவு இன்றி சேர்ந்திருக்கும் நிலை
யமமும், நியமமும் —-மனம் தூய்மை அடைய
ஆஸனம்—ப்ராணாயாமத்துக்குத் தேவையானது
ப்ராணாயாமம் —–ப்ரத்யாஹாரத்துக்குக் காரணம்
ப்ரத்யாஹாரம் —-ப்ராணாயாமம் ,ப்ரத்யாஹாரம் இரண்டுமே அடுத்ததான
தாரணைக்குக் காரணம்
தாரணை —த்யானத்துக்குக் காரணம்
த்யானம் —ஸமாதிக்குக் காரணம்

——————————————–

பக்தியின் அங்கங்கள் 8 என்பர்
1. பாகவதர்களிடம் அன்பு
2. அவர்களுடன் கூடி, பூஜையும் ,பஜனையும்
3. தானும் ஆராதனம் செய்வது
4. டம்பம் இல்லாமல் இருப்பது
5. பகவத் கதைகளைக் கேட்பதில் ஆர்வம்
6. அப்படிக் கேட்கும்போது அதிலேயே லயிப்பது
7. எல்லாச் சமயங்களிலும் பகவானையே நினைத்திருப்பது
8. பகவானிடம் எதையும் ப்ரார்த்திக்காமல் இருப்பது

——————————-

பகவானிடம் பக்தி 8 வகை
—————-

1. பக்தஜன வாத்ஸல்யம்
2. பகவானைப் பூஜிப்பதை அனுமதிப்பதவும் ஆதரிப்பதுவும்
3. தானும் பூஜை செய்வது
4. பகவத் கைங்கர்யம் செய்வது
5. பகவத் நாம ச்ரவணம் செய்வது
6. அநிர்வசனீயம் —பக்தி ஸ்வரூபம் —பகவத் விஷயத்தில் எப்போதும் ஈடுபடல்
7. பகவானுக்குத் தாஸன் என்கிற பணிவு
8. ப்ரார்த்தனை இல்லாமல் பக்தி—ஸேவை –நிரந்தர பக்தி
—————————————

பகவானைப் பூஜிக்க 8 புஷ்பங்கள்
————–
1.கொல்லாமை
2. புலனடக்கம்
3. யாவரிடமும் அருள்
4. பொறுமை
5. நல்லறிவு
6. மெய்வருத்தம்
7. பகவானையே எப்போதும் நினைப்பது
8. உண்மையே பேசுவது
இவற்றைவிட மேலான பூக்கள், பகவானைப் பூஜிக்க ஏதுமில்லை
பகவானுக்கு உகந்த 8 புஷ்பங்கள் என்று
1.அஹிம்ஸை
2.இந்த்ரிய நிக்ரஹம்
3.தயை
4. பொறுமை
5.நல்லறிவு
6.தவம்
7. த்யாநம்
8. உண்மையே உரைத்தல்
என்றும் சொல்வர்
————–

புத்தி 8 வகை என்பர்
—————
1. சீக்ரத்தில் க்ரஹிப்பது
2. மறவாமல் தரிப்பது
3. சமயத்தில் நினைவுபடுத்திக் கொள்வது
4. பிறருக்கும் சொல்லிக்கொடுப்பது
5. ஊஹித்துத் தானாகத் தெரிந்துகொள்வது
6. சமயோசிதமாய் மாற்றுவது
7. பகுத்து அறிவது
8. தத்வ ஞானம்
—————————————–

புத்திக்குச் சிறப்பு 8 விதமாகச் சொல்வர்

1. கேட்க ஆவல்
2. கேட்டல்
3. கேட்டதை, புத்தியில் நன்கு வாங்கிக்கொள்ளுதல்
4. அப்படி வாங்கிக்கொண்டதை தரிப்பது (மறவாமல் இருத்தல்)
5. சேர்க்க வேண்டியதை ஊகித்துச் சேர்ப்பது
6. தள்ளவேண்டியத்தை விலக்குவது
7. ஒவ்வொரு வஸ்துவிலும் உள்ள விசேஷங்களை அறிவது
8. உண்மையான அறிவைக் கொண்டிருப்பது
—————————-

தர்ம மார்க்கங்கள் 8 என்பர்
————————-

1. யாகம்
2. அத்யயனம்
3. தானம்
4.தவம்
இந்த நான்கும், பித்ருயாண மார்க்கத்துக்குக் காரணமானவை
அதாவது, மறுபிறவியை அளிக்கக்கூடியவை
5. ஸத்யம்
6. பொறுமை
7. புலன்களை அடக்குதல்
8. ஆசையின்மை
இந்த நான்கும், தேவயான மார்க்கத்துக்குக் காரணம்
இந்த மார்க்கத்தில் செல்பவர்களுக்கு மறுபிறவி இல்லை
———————————————————————————————-

ப்ரதானமானவை –8
————————-
1. வேதங்களுக்குப் ப்ரதானம் —முகமாகிய அக்நிஹோத்ரம்
2. சந்தஸ் என்கிற மந்த்ரங்களில் ப்ரதானம் —காயத்ரி மந்த்ரம்
3. மனிதர்களில் ப்ரதானம் —அரசன்
4. நதிகளுக்குப் ப்ரதானம் —ஸமுத்ரம்
5. நக்ஷத்ரங்களுக்குப் ப்ரதானம் —சந்த்ரன்
6. ஒளிகளுக்குப் பிரதானம் (ப்ரகாசம் ) ஆதித்யன்
7. மலைகளில் ப்ரதானம் —மேரு மலை
8. பறவைகளுக்குப் ப்ரதானம் —கருடன்
ஸ்ருஷ்டிக்கு முன்பு, சூக்ஷ்மமாக இருந்து, புத்தி, மனஸ் , மஹத் ,
ப்ருத்வீ , ஜ லம், தேஜஸ், வாயு, ஆகாசம்,
அண்டஜம்,ஸ்வேதஜம்உத்பிஜ்ஜம் , ஜராயுஜம் , என்கிற
நான்கு வகைப் பொருட்கள்,ப்ரம்ம ருத்ராதி தேவர்களுக்கும் ஆத்மா—
அரூபியாக இருப்பவர் ஸ்ரீ க்ருஷ்ணபரமாத்மா
——————-ஸ்ரீமஹாபாரதம்—ஸபா பர்வம் ————–

————————————————

மநுஷ்ய குணங்கள் 8 என்று ஸ்ரீ விதுரர் சொல்கிறார்(உத்யோக பர்வம்)
—————————–
1. ஒருதடவை பெரியோர்களிடம் கேட்ட மாத்ரத்தில்,
அதை என்றும் மறக்காமல் இருக்கும்படியான ஞானம்
2. நல்லகுலத்தில் பிறவி
3. மனஸ் –அடக்கம்
4. சாஸ்த்ர பாண்டித்யம்
5. சத்ருக்களை வெல்லும் திறமை
6. மிதமாகப் பேசுவது
7. சக்திக்குத் தக்கவாறு தானம் செய்வது
8. நன்றி உள்ளவனாக இருப்பது

ஆராதிக்கத் தகாதவர்கள் –8

1. பிரமன்
2.சங்கரன்
3. புத்தன்
4. வ்யாஸர்
5. அர்ஜுனன்
6. பரசுராமர்
7. அஷ்டவசுக்களில் –பாவகன்
8. குபேரன்
வ்யாஸாதிகளுக்கு, நமஸ்காரங்கள் செய்தல் தகும்; அவச்யமுமாம் .
——————————————-

நாரதர் சொல்லும், அஷ்ட மங்களங்கள்
1. தன்னையே நெய்யில் பார்த்தல் (உருக்கிய நெய் )
2. தீக்ஷிதன்
3 அன்னதாதா
4. ஸமுத்ரம்
5. வேதாந்தி
6.தபஸ்வி
7. தர்மசீலன்
8. ஆசாரசீலன்

————————-

மங்களாஷ்டகம்
1. மஞ்சள்
2. உப்பு
3. பொரி
4. மொச்சை
5. வெல்லம்
6. ஜீரகம்
7. பழம்
8. புஷ்பம்
இவை மங்களத்தைத் தரவல்லவை
——————

ஸௌபாக்ய அஷ்டகம்
——————

1. கரும்பு
2. மொச்சை
3. அவரை
4. யவம்
5. பசும்பால்,
6 . தயிர், வெண்ணெய் , நெய்
7. செம்பருத்தி
8. . உப்பு ,
—————————————

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில் , கண்ணன் ஆடிய நாட்யங்கள் 8 என்பர்
————————

1. ஊர்த்வ தாண்டவம் (த்ரிவிக்ராமவதாரம் )
2. நவநீத நாட்யம் (வெண்ணெய்க்கூத்து–வெண்ணெய்க்காக ஏங்கி, அதைக்
கேட்டு க்ருஷ்ணன் ஆடிய நாட்யம் -)
3. குடக்கூத்து (தயிர்,பால், வெண்ணெய் இவற்றால் நிரப்பப்பட்ட
குடங்களை ஒன்றன்மீது ஒன்றாய் வரிசையாய்த் தலையில் தாங்கி,
குடங்களில் இருப்பவை சிறிதும் கீழே சிந்தாமல், ஆடுவது ) ,
4. சாரீந்ருத்யம் (காளிங்க நர்த்தனம் ) ஒருகாலை மட்டும்
தரையிலோ,அரங்கிலோ, தாங்கி, இன்னொருகாலை மேலே தூக்கியபடி
ஆடும் ந்ருத்தம் .இதைக் காளிங்கன் மீது ஸ்ரீ கிருஷ்ணன் ஆடினான்.

5. ஹல்லீஸகம்(நடுவில் ஸ்ரீ கிருஷ்ணன் இருக்க, சுற்றிலும் கோபியர்
சூழ்ந்து இருக்க ஆடும் நாட்யம் –ஸ்ரீ போஜனின் க்ரந்தம் சொல்கிறது )
6. கோஷ்டீநிருக்தம்
7. மன்றில்மரக்கால் கூத்து
8. ராஸக்ரீடை (குரவைக் கூத்து ) ஒரு கொபிகைக்கும், மற்றொரு
கோபிகைக்கும் நடுவில் கிருஷ்ணன் இருந்து, பலநூறு திருமேனிகளுடன்
அவரவர்களுக்கு அருகிலேயே இருந்து, அவர்களோடு கானத்துடன்
லயதாளத்துடன் ஆடியது.இந்த “ராஸக்ரீடா “வர்ணனம், ரிக்வேதத்திலேயே
சொல்லப்படுகிறது என்று ஸ்ரீ நீலகண்டர் தனது ஹரிவம்ச வ்யாக்யானத்தில்
சொல்லி இருக்கிறார் . இந்தக் கானமானது “ஸ்ரீ ராகம் “இது எல்லாரையும்
வசீகரிக்கும் ராகம்
———————-

ச்வேதாஸ்வர உபநிஷத் இப்படி கூறுகிறது ——
———————

1.பர மாத்மாவின் ஸ்வரூபம் —சக்ர ரூபமாகச் சொல்லப்படுகிறது.
பெரிய சக்ரம்—நடுவில் நாபி ; ஆரங்கள் எல்லாம் இருக்கும்.
ப்ரஹ்ம சக்ரத்திலும், மூன்று குணங்கள் உள்ள ப்ரகிருதி,
பஞ்சபூதங்கள், இந்த்ரியங்கள்(விகாரங்கள் 16 ), 50 அக்ஷரங்கள்
(12 மாசங்கள் ,5 ருதுக்கள், 2 அயனங்கள், ஒரு ஸம்வத்ஸரம்,
என 20, இவை ஆரம் ,ப்ரத்யரங்கம் –6 எட்டுகளை உடையவன்
என்று சொல்கிறது
2–8ஸித்திகளான 8 ஐஸ்வர்யங்கள்
3–8 திக்குகள்
4 —-8 திக் பாலகர்கள்
5— 8( பூமி, , ஜலம் ,நெருப்பு, வாயு, ஆகாசம் ,மனஸ் ,
புத்தி, அஹங்காரம் )
6— —–8 தேவதைகள் ( ப்ரஹ்மா , பிரஜாபதி போன்றோர் )
7——–அஷ்ட வஸு க்கள்
8—–தி ருக்கல்யாண குணங்கள் ( ஞானம் ,பலம், ஐஸ்வர்யம்,
வீர்யம், சக்தி, தேஜஸ் –இப்படி அனந்த கல்யாண குணங்கள்
உடையவன்—ஷாட்குண்ய பரிபூரணன் என்றும் சொல்வர் )
மேற்கண்ட ஏட்டில், ஏதேனும் ஆறு அல்லது எட்டுகளை உடையவன் ,
பரமாத்மா)
————————————————

ஸ்வாமி தேசிகன் ,அதிகார சங்க்ரஹத்தில் 45வது பாசுரத்தில் சொல்கிறார்

எட்டு மா மூர்த்தி எண் கணன் எண் திக்கு எட்டு இறை எண் பிரகிருதி
எட்டுமா வரைகள் ஈன்ற எண்குணத்தோன் எட்டெ ணும் எண் குணமதியோர்க்கு
எட்டுமாமலர் எண்சித்தி எண் பத்தி எட்டு யோகாங்கம் எண்செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணு ம் கலை எட்டு இரதம் மேலதுவும் எட்டினவே
எட்டுமாமூர்த்தி—-சிவனுக்கு 8 உருவங்கள் —
1.பூமி
2.ஜலம்
3.தேஜஸ்
4. வாயு
5. ஆகாசம்
6.சந்த்ரன்
7.ஸு ர்யன்
8.யஜமானன்
எண் கணன்
நான்கு முகங்களை உடையவர் ப்ரஹ்மா –ஆதலால் 8 கண்கள்
எட்டுத் திசைகள் (தெரிந்ததே)
எட்டுத் திக் பாலகர்கள் (இங்கு சொல்லப்பட்டுள்ளது )
எட்டு ப்ரக்ருதி (ப்ரக்ருதி ,மஹான் ,அஹங்காரம், பூமி, ஜலம் ,
தேஜஸ் ,வாயு, ஆகாசம் –என்பர் )
எட்டு குலபர்வதம்

1.ஹிமவான்
2.நிஷதம்
3.விந்த்யம்
4.மால்யவான்
5.பாரியாத்ரகம்
6.மந்தரம்
7.மலயம்
8.மேரு

பகவானுடைய 8 குணங்கள்
1.கர்மபந்தம் இல்லாதவர்
2.முதுமை இல்லாதவர்
3.மரணமில்லாதவர்
4.சோகம் இல்லாதவர்
5.பசியே இல்லாதவர்
6.போக வஸ்துக்களை அபரிமிதமாக உடையவர்
7.தாகம் இல்லாதவர்
8.நினைத்ததை முடிக்க வல்லவர்
புத்தியின் 8 குணங்கள் (இங்கு சொல்லப்பட்டுள்ளது )
புஷ்பங்கள் 8 (இங்கு சொல்லப்பட்டுள்ளது )
சித்திகள் 8 (இங்கு சொல்லப்பட்டுள்ளது )
ஐஸ்வர்யங்கள் 8 (அஷ்டமா சித்திகள் சொல்லப்பட்டுள்ளது )
எட்டுவித பக்திகள் (இங்கு சொல்லப்பட்டுள்ளது )
அஷ்டாங்க யோகம் ( இங்கு சொல்லப்பட்டுள்ளது )
எட்டு ரசங்களும் சொல்லப்பட்டன
சுவாமி தேசிகன் 64 கலைகளைப் பற்றியும் (எட்டு எட்டு எனும் கலை)
என்று சொல்கிறார்
———————————-

அஷ்டமீ சந்த்ரன்
————————

அஷ்டமீ சந்த்ரனை விசேஷமாகச் சொல்வர்.
சுக்ல பக்ஷமாக (வளர்பிறை) இருந்தாலும், க்ருஷ்ண பக்ஷமாக இருந்தாலும்
(தேய்பிறை ) எட்டாவது நாள் சந்த்ரன் விசேஷம்.
“பஞ்சதசீ ” என்கிற பௌர்ணமி அல்லது அமாவாஸ்யை இரண்டிலிருந்தும்
தலைகீழாகக் கணக்கிட்டாலும், எட்டாவது திதி அஷ்டமி. சந்த்ர வம்சத்தில்,
சந்த்ரன் சமமாக இருக்கும் திதியான அஷ்டமியில் ,பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனாக
அவதரித்தான்.
வளர்பிறையில் எட்டாவது நாளில் சந்த்ரன் தோற்றத்துக்கும்,
தேய்பிறையில் எட்டாவது நாளில் சந்த்ரன் தோற்றத்துக்கும்
வித்யாசமில்லை. அதனால்தான், பகவான் தன்னுடைய அவதாரத்துக்கு,
அஷ்டமியைத் தேர்ந்தெடுத்தாரோ ! ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தைச் சொல்கிறேன்.
இவர் எட்டாவது குழந்தை—-வஸுதேவர் –தேவகிக்கு

அஷ்டாக்ஷரம்
——————

திருமந்த்ரம் —8 எழுத்துக்கள் எல்லா மந்த்ரங்களிலும் சிறந்தது.
பற்பல விசேஷ அர்த்தங்களை உடையது. ஜபிப்போருக்கு எல்லா
பலன்களையும் அளிப்பது
ஸ்திரீகள், நான்காம் வருணத்தார்,
பிரணவத்துக்குப்பதிலாக, “அம் ” என்கிற அக்ஷரத்தைச் சேர்த்து
ஜபிக்கலாம்.
ஸ்வாமி தேசிகன்அருளிய ரஹஸ்ய க்ரந்தங்கள் ,சில்லறை ரஹஸ்யங்கள்,
ஸாரஸாரம் (திருமந்த்ராதிகாரம் ),விரோதபரிஹாரம் (மூல மந்த்ராதிகாரம் )
ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம் போன்றவை, எட்டெழுத்து மந்திர மகிமையை
விரிவாகச் சொல்கின்றன. காலக்ஷேப மூலமாக க்ரஹிக்க வேண்டும்

——————————-தொடருகிறது———————–

பி.கு.
இந்தத் தொடரில் அடியேன் எழுதுபவைகளை, சில உபந்யாசகர்கள்
உபன்யாசத்தில் சொல்வதாக அடியேனிடம் சொல்கிறார்கள். அடியேனுக்கு
மகிழ்ச்சியே —ஆனால், ஒரு வார்த்தை, அடியேனைப் பற்றியும் சொல்லவேண்டும்
என்கிற எண்ணம் அவர்களுக்கு வருவதில்லை என்றும் சொல்கிறார்கள்.
உபன்யாசகர்களில் சிலர் இப்படிச் செய்வது , அடியேனின் “பழமொழிகளும்
புதிய விளக்கங்களும் ” புத்தக வெளியீட்டுக்குப் பிறகு (2011ம் ஆண்டு )அவர்களே
அவர்களது மதியில் தோன்றியவைபோலப் பேசுவது அதிகமாகி விட்டது.

——————————————————————————————-
-எண்கள் அவை சொல்வது என்ன ?—16
———————————————————————–
இந்தத் தொடரில் சொல்லப்படும் ஏராளமான விஷயங்கள்,
அடியேன் 2006ம் வருடம் முதல், 2013ம் வருடம் வரை
“ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் “ஆன்மிக மாதப் பத்திரிகையில்
“கேட்பதும், சொல்வதும் ” என்கிற தலைப்பில் 1008 கேள்விகளில்
பதில்களாக எழுதியவை. இவைகளுக்குப் பற்பல ப்ராசீனமான கிரந்தங்கள்,
ஆசார்யசீலர்களின் உபன்யாசங்கள் , உதவியாக இருந்தன.
—————————————————————————–

இப்போது எண் 7—-இதைப்பற்றிப் பார்ப்போம்

7 ஸமித்துகள் –
——————-
1. அச்வத்தம்
2.உதும்பரம்
3. பலாசம்
4.ஸமீ
5.விகஸ்கதம்
6.அசனீ
7. புஷ்கரபர்ண
————————————————-

7 நாக்குகள்—அக்நிக்கு
——————
1.காலீ
2.கராலீ
3.மனோஜவா
4.சுநீசுதா
5. சுதூம்ரவர்ணா
6. ஸ்ப்ரிலிங்கிணீ
7. விச்வரூபி

———————————————–

லோகங்கள் 7
————————–
1. பூலோகம்
2. புவர்லோகம்
3. ஸுவர்லோகம்
4.மஹர்லோகம்
5.ஜனலோகம்
6.தபோலோகம்
7.ஸத்யலோகம்
———————————————————-
ஸப்த கன்னிகைகள் (ஸப்த மாத்ரிகா )
—————————-
1. ப்ராஹ்மி
2. மஹேஸ்வரி
3. கௌமாரி
4. வைஷ்ணவி
5. வாராஹி
6. இந்த்ராணி
7. சாமுண்டி
—————————————————-

ப்ரஹ்மரிஷிகள் 7பேர்
——————————
1. மரீசி
2.அங்கிரஸ்
3. அத்ரி
4. புலஸ்தியர்
5. புலஹர்
6. க்ரது
7. வஸிஷ்டர்
—————————————————————-

ஸப்த ரிஷிகள் 7 பேர்
—————————-

1. கச்யபர்
2. அத்ரி
3. பரத்வாஜர்
4. விச்வாமித்ரர்
5. கௌதமர்
6. ஜமதக்னி
7. வஸிஷ்டர்
( அத்ரியும் ,வஸிஷ்டரும் இரண்டிலும் உளர் )
———————————————————————-
ஸுர்யனுக்கு 7 சந்தஸ் ஆன —குதிரைகள்
—————————–
1. காயத்ரி
2. பிருஹதீ
3.உஷ்ணிக்
4. ஜகதி
5.த்ருஷ்டுப்
6. அனுஷ்டுப்
7. பங்க்தி
—————————————————————–

7 காலங்கள்—சாந்தோக்யம் சொல்கிறது
——————————–
1. ஸுர்யோதயத்துக்கு முன்பு, கால்நடைகள் மேய்ச்சலுக்குப்
போகும் காலம்
2. மனிதர்கள் எழுந்து நடமாடும் உதய காலம்
3. பறவைகள் சப்திக்கும் ஸங்கவ காலம்
4. தேவதைகள் ஆதரித்த உச்சிக் காலம்
‘5. அபரான்னத்துக்கு உட்பட்டு கர்பங்கள்
. வயிற்றில் உள்ளடக்கமாகி இருக்கும் காலம்
6. அஸ்தமனத்துக்கு முன்பு கால்நடைகள் திரும்பும் காலம்
7. பித்ருக்களுக்கு இஷ்டமான அஸ்தமன காலம்
—————————————————————-

7 வகையான அன்னங்கள்
—————————————-
1.பொதுவான அன்னம் –நாம் யாவரும் உண்பது
வானத்தோர், விருந்தினர், காக்கை யாவருக்கும்
2.தேவர்களுக்கு– 2 தர்ஸ பூர்ண மாசம்
3.பசுஜாதிக்கு –ஒன்று
4.தனக்காக மூன்று—மனஸ் ,வாக்கு, ப்ராணன்
————————————————————————–
அன்ன ஸுக்தம் சொல்லும் 7
——————————-
சாப்பிடக்கூடாத அன்னம்
———————————-
1.ஒரு ராத்திரி இருந்த அன்னம்
2. கேசம் இருந்த அன்னம்
3.கண்டவரிடத்தில் சாப்பிடுபவர்கள் வீட்டு அன்னம்
4.நித்யதிருவாராதனம் செய்யாதவர் வீட்டு அன்னம்
5.ஸ்திரீ தர்மம் இல்லாத வீட்டு அன்னம்
6.விழுப்பு, தீட்டு, எச்சில் கலக்கிற வீட்டு அன்னம்
7. விரோதிகள் வீட்டு அன்னம்
—————————————————————–

முக்தி க்ஷேத்ரங்கள் –7
—————————–
1. அயோத்தி
2. மதுரா
3.மாயா
4.காசி
5.காஞ்சி
6.அவந்தி
7.த்வாரகா
————————————————————-

வாயுக்கள்–7
————————–
வாயுக்கள், பூமியிலும், ஆகாயத்திலும் சஞ்சரிக்கின்றன
ஸாத்யர்கள்—இந்த்ரியங்களுக்குத் தேவதைகள் .அவர்களுடைய
பிள்ளை—ஸமானன் . இவன் “ஆவஹன் ” என்றும் சொல்லப்படுகிறான்.
இவன் புகையாலும், வெப்பத்தாலும் உண்டான மேகங்களை
அடித்துக்கொண்டு போகிறான். ஸமானுனுடைய பிள்ளைகளே
உதானன், வ்யானன் ,அபானன், ப்ராணன்
( ஆகாரம் உட்கொள்வதற்கு முன்பு ,ப்ரணவத்தையும் சேர்த்து,
“ப்ராணாய ஸ்வாஹா , அபாநாய ஸ்வாஹா ,வ்யாநாய ஸ்வாஹா,
உதாநாய ஸ்வாஹா , ஸமாநாய ஸ்வாஹா,ப்ரஹ்மணே ஸ்வாஹா —”
என்றெல்லாம் சொல்வதை நினைவுபடுத்திக்கொள்க–போஜனவிதிப்படி )
ப்ரவஹன் —மேகங்களில் மின்னல்களை உண்டாக்குகிறான். மழை,
மின்னல், எரிகொள்ளிக்குத் தேவதை
உத்வஹன்–(நம் உடலில், இவன் உதானன் )சந்த்ரனையும் ,
நக்ஷத்ரங்களையும் உதிக்கச் செய்கிறான் மேகங்களுக்கு, சமுத்ர
ஜலத்தைக்கொடுத்து, பர்ஜந்யன் என்கிற தேவதையிடம் ஒப்படைக்கிறான்.
ஸம்வஹன் (ஸுவஹன் ) மேகங்களைத் தாக்குகிறான்; பிரிக்கிறான்; மழை
பெய்யும்படி செய்கிறான். தேவ விமானங்களை ஆகாசத்தில் தாங்குகிறான்.

1. ஆவஹன் —பூமி, மேகமண்டலம் வரை
2. ப்ரவஹன்—-ஸுர்யமண்டலம் வரை
3.உத்வஹன் —-சந்த்ர மண்டலம் வரை
4. ஸுவஹன் @ஸம்வஹன் –நக்ஷத்ர மண்டலம்வரை
5. விவஹன்—-க்ரஹ மண்டலம் வரை
6. பராவஹன்—ஸப்தரிஷி மண்டலம் வரை
7. பரிவஹன்—-த்ருவ மண்டலம் வரை
இப்படி வாயுக்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்கின்றன –
——————————————————————

சிற்றின்பத்திற்கு 7 வகையான குற்றம்
——————————————–
1.கொஞ்சமாய் இருப்பது
2. நிலையில்லாதது
3. துன்பத்தை அடிப்படையாகக் கொண்டது
4. துன்பம் கலந்தது
5. துன்பமே மேல்முடிவில் வருவதாக அமைந்தது
6. நமக்கு இயற்கையாக இருக்க வேண்டிய—-பகவானை
அனுபவிப்பதாகிய பேரின்பத்துக்குப் பகையாயிருப்பது
7. அஹங்கார ,மமகாரங்களை உள்ளடக்கி இருப்பது
———————————————————————–

புத்தியின் குணங்கள் 7
————————————-
1.புது விஷயங்களை அறிவதற்கு ஆவல்
2. புது விஷயங்களைக் கேட்பது
3.புது விஷயங்களை மனதில் வாங்கிக் கொள்ளல்
4. இவற்றைத் தரிப்பது (மனத்தில் நிலைநிறுத்தல் )
5.பொருள்களின் கூறுபாட்டை அறிதல்
6. பொருள்களின் உண்மையைப் பற்றுதல்
7. தத்வத்தைத் தீர்மானமாக அறிதல்
————————————————————————.

முமுக்ஷுக்கான 7 குணங்கள் (முமுக்ஷு–மோக்ஷத்தை நாடுவோர் )
—————————————-
1. எல்லாப் பிராணிகளிடமும், தயை, பொறுமை
2.குணவான்களிடம் த்வேஷமில்லாமை
3. மனோ—வாக்—காயங்களில் , ஸுத்தி
4. ஆத்மாவை அதிகமாகப் பீடிக்காமையும், நல்ல கார்யங்களையே
செய்வதும்
5. ஆபத்தான நிலையிலும் மனம் குன்றாது இருப்பது
6. தானம் செய்வதில் ருசி
7. சிற்றின்பத்திலும் , பிறருடைய த்ரவயங்களிலும் பற்றில்லாமை
————————————————————————————-

பக்தி யோகத்திற்குத் தேவை 7 விஷயங்கள்(பக்தியோக உபாஸகன்)
———————————————————
1. விவேகம் —-சாஸ்த்ர சம்பந்தமான சுத்தமான ஆகாரத்தை உண்டு,
ஆபாஸ உடலை வேறுபடுத்துவது
2. விமோகம்—பற்று (ஆசை) இல்லாமல் இருப்பது
3. அப்யாஸம்—-பக்திக்கு இலக்கான ப்ரஹ்மத்தையே சிந்தனை செய்வது
4. க்ரியை —வைதீக கர்மாநுஷ்டானம்
5. கல்யாணம் —ஸத்யம், த்ரிகரண ஸுத்தி , தயை, கொடை , ஜீவகாருண்யம் ,
பிறருக்கு மனத்தாலும் தீங்கு நினைக்காமை
6. அநவஸாதம்—-சோர்வு இல்லாமல் இருப்பது
7. அநுத்தர்ஷம் —-அதிக மகிழ்ச்சிக்கு ஆளாகாமை
——————————————————————————————

பகவான், தன்னுடைய அடியார்களைக் காப்பது 7 விதங்களில்
—————————————————–
1.தாழாதே காத்தல்
2.தரம் பாராதே காத்தல்
3. வியாஜ நிரபேக்ஷமாகவே காத்தல்
4. எப்போதும் காத்தல்
5.எல்லா தேசத்திலும் (இடத்திலும் ) காத்தல்
6.எவ்வகையிலும் காத்தல்
7.பலனைக் கணிசியாமல் காத்தல்
இப்படிப் பகவான், தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காக்கிறான்

———————————————————————————-

யம ஸ்ம்ருதி என்கிற தர்ம சாஸ்த்ரம் சொல்கிறது—-
7–ஏழு நாக்குகளை உடையவன் அக்நி
7 அடி எடுத்து வைப்பது ஸப்தபதி—ஸப்தீகரணம்
7 வது—விஷ்ணு பத த்யாநம்

——————————————————————————–

ஸப்தபதி
———————-
1. விவாஹசமயத்தில் நடைபெறுவது —
கல்யாணப்பிள்ளை , தனது சஹதர்மிணியை , கையைப் பிடித்து அழைத்து
ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கும்போது சொல்லப்படும் மந்த்ரார்த்தங்கள்
1.சர்வவியாபியான விஷ்ணு உன்னுடன் வரவேண்டும்
2. தான்யலக்ஷ்மியுடன் விஷ்ணு உன்னுடன் வரவேண்டும்
3. விரதத்தின்பொருட்டு உன்னுடன் வரவேண்டும்
4.பிரிந்துபோனவர்கள் திரும்பிவரவேண்டும்
5.பசுக்கள் பெருக வேண்டும்
6. எல்லா தான்யங்களும் கிடைக்கவேண்டும்
7. ரிக்வித்துகளுடன் கூடிய யஜ்ஞம் நடைபெறவேண்டும்
—————————————————————————————-

7விதமான தோஷங்கள் —
—————————————-
பகவானைச் சரணம் அடைவதுதான், தோஷமில்லாதப் பெருவாழ்வு .
மீதி, எதை எடுத்துக்கொண்டாலும் 7 விதமான தோஷங்கள்
1. அல்பத்வம்—-தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்கள் அல்பம். பகவானையே
ஆச்ரயித்தால், இவை யாவும் அல்பமே. (உதாரணம்–ஜடாயு—கேட்காமலேயே
மோக்ஷம் கிடைத்தது. அல்ப விஷயமாக எதையும் கேட்கவில்லை –மோக்ஷத்தையும்
கேட்கவில்லை )
2. அஸ்திரத்வம் —-சம்ஸாரமாகிய இங்கு வாஸம் செய்யும்போது, புண்ய, பாப
அஸ்த்ரங்கள் —கர்மவினை என்கிற சாக்கில் நம்மீது பாயும்
3 துக்கமூலத்வம்—–ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடையும்வரை, அந்த
முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்கமிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது, ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் —அந்த விஷயத்தை இழக்கிறபோது அடைகிற துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம்—ப்ரக்ருதி ஸம்பந்தமும் துக்கம்
7. சுவாபாவிக ஆநந்த விருத்தத்வம் —-பகவானை அடைவதற்குத் தடையாக இருப்பது
எல்லாமே துக்கம்
—————————–
————————தொடருகிறது

எண்கள் –அவை சொல்வது என்ன ?—17
——————————————————————-

இப்போது ஆறு என்கிற எண்ணைப்பற்றிப் பார்ப்போம்
—————————————————————————————

1. சுமங்கலிக்கு ஆறு பொருட்கள் முக்கியம் என்பர்

1. காலில் மெட்டி
2. கையில் வளை
3. மூக்குத் திருகு
4. திருமங்கல்யம்
5.நெற்றியில் திலகம்
6.கூந்தலில் புஷ்பம் அல்லது கண்ணில் மை
(இவற்றை அடியேன் எழுதியுள்ள “மஹா வாத்ஸல்ய வைபவம் ”
என்கிற , பெரிய பிராட்டியின் “மெட்டி” யைப்பற்றிய சமர்ப்பணத்தில்
சொல்லியிருக்கிறேன் )

2.முத்து உண்டாகும் இடங்கள்

1.மேகம்
2.காட்டுப்பன்றி
3. சங்கு
4. மீன்
5. ஒருவகைப் பாம்பு
6. சிப்பி
கடலில், சிப்பியில்தான் அதிக முத்துக்கள் உண்டாகின்றன

3. சம்பத்தை விரும்புபவன், விடவேண்டியவை –6

1.அதிக நித்ரை
2.சோம்பல்
3.பயம்
4. க்ரோதம்
5. முயற்சியின்மை
6. விரைந்து செயல்படாத தன்மை

4.கடலில் எறியத்தக்க அறுவர்

1.நன்றாகச் சொல்லாத ஆசார்யன்
2.அத்யயனம் செய்யாத ரித்விக்
3.ரக்ஷிக்காத அரசன்
4.ப்ரியமில்லாத கணவன்/மனைவி
5.கிராமத்தை விரும்பும் இடையன்
6.வனத்தை விரும்பும் க்ஷௌரகன்

5.ஜபம் செய்யும்போது செய்யக்கூடாதவை–6

1. நகத்தைக் கிள்ளக்கூடாது
2.நகத்தைக் கடிக்கக்கூடாது
.இவை பரம தாரித்ரத்தையும் கொடுக்கும்
3.காலைத்தொடக்கூடாது (கையால் கூட )
4.நகத்தால் உடலைச் சொரிந்துகொள்ளக்க்கூடாது
5. தலைக்கேசங்களைச் சொரியக்கூடாது
6. தொப்புளுக்குக் கீழே யஜ்ஞோபவீதம் (பூணல் )
போகக்கூடாது ..( எப்போதுமே தொப்புளுக்கு மேலேதான்
பூணூல் இருக்கவேண்டும் )

6.வாக்கியம், முடிவடைவது–6 விதங்களில்

1.முக்தகம்—ஒரே ச்லோகத்தில், ஒருவாக்யத்தின் பொருள் முடிவது
2.யுக்மம்–2 ச்லோகங்களில் , வாக்யத்தின் பொருள் முடிவடைவது
3.திலகம்–3 ச்லோகங்களில், வாக்யத்தின் பொருள் முடிவது
4. கலாபகம் –4 ச்லோகங்களில் வாக்யத்தின் பொருள் முடிவது
5. குலகம்–5 ச்லோகங்களில் வாக்யத்தின் பொருள் முடிவது
6. மஹா குலகம்–5க்கு மேற்பட்ட ச்லோகங்களில், வாக்யத்தின்
பொருள் முடிவது

7.முத்ரைகள் 6

1. உபதேச முத்ரை— ஸ்ரீ பாஷ்யகாரருடையது
2.ஜ்ஞான முத்ரை –ஆசார்யருடையது
3.அபய முத்ரை –ஸ்ரீ ரங்கநாதனுடையது
4.வ்யாக்ரா முத்ரை–ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்வாமி தேசிகன்
5. வரதான முத்ரை —வரம் அளிப்பதான முத்ரை (தாயார்,பெருமாள்)
6. காட்டும் முத்ரை –ஸ்ரீ ஸ்ரீநிவாஸன்

8.ஸ்ரீவைஷ்ணவ குணங்கள்

1. வர்ணாஸ்ரம தர்மங்களை வழுவாமல் அனுஷ்டித்து,
2.தான் அனுஷ்டிக்கும் கர்மாக்களின் பலனை பகவானிடம்
அர்ப்பணித்து
3.பகவானுடைய தாஸ்யத்தின் சின்னமான துளசி, தாமரை
மாலைகளை அணிந்து
4. சங்க,சக்ர அங்கனம் செய்துகொண்டு
5.பன்னிரு திருமண் அணிந்து
6. பகவத் த்யானம் செய்து
வாழ்வது

9.ப்ரபன்னனுக்கு முக்யமானவை –6

1. மறக்க வேண்டியதில் முக்யமானது–சிற்றின்ப நுகர்ச்சி
2. நினைக்க வேண்டியதில் முக்யமானது–ஆசார்யனின் அனுக்ரஹம்
3. சொல்லாது ஒழிய வேண்டியதில் முக்யமானது –தற்பெருமை
4. சொல்ல வேண்டியதில் முக்யமானது —-த்வயம்
5. முக்கரணங்களாலும் செய்யக்கூடாததில் முக்யமானது —பாகவத
அபசாரம்
6.முக்கரணங்களாலும் செய்ய வேண்டியதில் முக்யமானது —
ஆசார்ய, பாகவத கைங்கர்யங்கள்

10.சரணாகதியின் பெருமைகள்–6

1. அறிந்தவர், அறியாதவர் என்கிற பாகுபாடு இல்லாமல்
எல்லாருக்கும் உபாயம்
2. நடுவில் தடங்கல் ஏற்பட்டாலும் தொடர்ந்து செய்யலாம்
3. சரணாகதியில், எந்த யோகமும் கலப்பு இல்லை
4. எல்லாரும் –பசு, பக்ஷி மரம் என்கிற வேறுபாடில்லாமல் செய்யலாம்
5. வேண்டுகிற எந்தப் பயனுக்கும் சரணாகதி செய்யலாம்
காகத்துக்கு—உயிர்
த்ரௌபதிக்கு —சேலை
தமயந்திக்கு—-நளன்
ஸுக்ரீவனுக்கு—–அரச போகம்
பரீக்ஷித்துக்கு —உயிர் பிழைத்து எழுவது
குபேரனுக்கு—-தனம்
இந்த்ரனுக்கு —மூவுலகும் ஆளும் அதிகாரம்
கார்த்தவீர்யார்ஜுனனுக்கு —-பல உருவங்கள் எடுத்துக் கொள்ளும்
ஸித்தி
ஜநகர் , முசுகுந்தர் , க்ஷத்ரபந்து ,கட்வாங்கர், ஆழ்வார்கள், பூர்வாசார்யர்கள்–
மோக்ஷம் (பரமபதம் )
6. யம , நியம –அங்கங்களுடன் கூடிய பக்தி யோகத்தை விடவும்
எளிய முறையில் பகவானை அடையும் வழி
( பகவானிடம் ,மஹா விச்வாஸம் –இது சரணாகதிக்கு அங்கம்.
இதில் குறையிருப்பின் சரணாகதி பலன் தராது. பெருநம்பிக்கையில்
தளர்வு கூடாது. பாகவத,ஆசார்ய அபசாரம் கூடாது.தேவதாந்திர
சம்பந்தம் கூடாது )

11. ஷடங்க யோகம்

1. பகவானுக்கும் அவன் அடியார்களுக்கும் அநுகூலனாக இருத்தல்
2. பகவானுக்கும் அவன் அடியார்களுக்கும் எதிராக நடக்காது இருத்தல்
3. பகவான் எப்படியும் காப்பாற்றுவான் என்கிற திடநம்பிக்கை கொள்ளல்
4. பகவானே காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுதல்
5. பகவானை அடைய ,எந்த வழியும் இல்லை என்று சொல்லல்
6. நம் ஆத்மா, அதைக்காக்கவேண்டிய பொறுப்பு, அதன்பலன்—
யாவற்றையும் பகவானிடம் ஒப்படைத்தல்
(இது 6 அங்கங்களுடன் கூடிய சரணாகதி —ஆத்மாவை,பகவானிடம்
சமர்ப்பிப்பது–அங்கி. மீதி 5ம் அதற்கு, அங்கம்—இந்தச் சரணாகதி,
ஸ்வரூப சமர்ப்பணம், பர சமர்ப்பணம், பல சமர்ப்பணம், பரண்யாஸம்
என்றும் சொல்வர்–இதற்கான விரிவு, காலக்ஷேபம் மூலமாகத் தெளியலாம் )

12.எம்பெருமானாரின் முக்ய திவ்ய ஸுக்திகள் –6–என்பர்

1. ஸ்ரீபாஷ்யம்
2. கீதா பாஷ்யம்
3. தீபம்
4. ஸாரம்
5. வேதார்த்த ஸங்க்ரஹம்
6. கத்ய த்ரயம்

13. தாயாரின் ஸ்ரீ என்கிற பதத்துக்கு 6 விதமான அர்த்தங்கள்

1. நம் தோஷங்களைத் தீர்ப்பவள்
2. பகவானின் க்ருபை ,நமக்குக் கிடைக்கச் செய்பவள்
3. நம் குறைகளைப் பொறுமையாகக் கேட்பவள்
4. நாம் சொல்வதை, பகவானைக் கேட்கச் செய்பவள்
5. பகவானுடைய சரணாரவிந்தத்தை எப்போதும் ஆச்ரயிப்பவள்
6. நாம் ஆச்ரயிக்க , தாயாராக இருந்து நம்மை ரக்ஷிப்பவள்

14. பகவானின் முக்யமான 6 திருக்கல்யாண குணங்கள்
(ஷாட்குண்ய பரிபூரணன் )

1. ஜ்ஞானம்—எல்லாப் பொருளையும், எப்போதும் நேரில் கண்டு
உணரும் திறன்
2. பலம்—-களைப்பு இன்றி எல்லாவாற்றையும் , தாங்கும் திறமை
3. ஐச்வர்யம் –அறிவுள்ளவை, அறிவற்றவை என்று பிரிந்துள்ள
எல்லாப் பொருளையும் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறமை —
ஸர்வைஸ்வர்யம் என்றும் சொல்வர்
4. வீர்யம்—உணரும் திறன், தாங்கும் திறமை கட்டுப்பாட்டில்
வைத்திருப்பது—-இவை எல்லாவற்றையும் செய்யும்போது
தான் மாறுபாட்டை அடையாத நிலை
5. சக்தி—எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் திறமை
6. தேஜஸ்—சங்கல்பத்தாலேயே எல்லாவற்றையும் படைத்து,
காத்து, அழிக்கவல்லவர் (ஸஹகாரிகள்–உதவியாளர்களில்லாமலேயே )
இந்த 6 குணங்களிலிருந்து ,மற்ற குணங்கள் ஆவிர்ப்பவிக்கின்றன.
பரிமளிக்கின்றன. பகவான், உலகங்களை , உதரத்தில் வைத்துக் கொண்டு
இருப்பதைப்போல , இந்த ஆறு குணங்களும், மற்ற எண்ணில்லா
கல்யாண குணங்களைத் தங்களிடம் அடக்கிக் கொண்டிருக்கின்றன என்பர்

15. திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராமானுஜருக்குச் சொன்ன 6 வார்த்தைகள்

காஞ்சி பேரருளாளன், ஸ்ரீ ராமானுஜருக்கு ,திருக்கச்சி நம்பிகள் மூலம்
அருளிய ஆறு வார்த்தைகள்

1.பரத்வம் நாமே
2.பேதமே தர்சனம்
3.உபாயமும் ப்ரபத்தியே
4.அந்திம ஸ்ம்ருதி வேண்டாம்
5.சரீர அவஸானத்திலே மோக்ஷம்
6.பெரியநம்பி திருவடிகளிலே ஆச்ரயிப்பது
(இவைகளுக்கு விரிவான விளக்கம், காலக்ஷேபம் மூலமாகத்தெளியவேண்டும் )

16. த்வய மந்த்ரம் —6 பதங்கள்

17. திருப்பாவையில், பாட்டு ஆறு ஐந்து என்று சொன்ன 6 விஷயங்கள்
( அடியேனுடைய திருப்பாவை உபன்யாசங்களில் சொல்லப்பட்டுள்ளன.
வெப்சைட்டில் பார்க்கலாம் )

18. 6 வார்த்தைகள்

1.வதுவை வார்த்தை
2.நெய்யுண் வார்த்தை
3.வெண்ணெய் வார்த்தை
4.நடந்த நல்வார்த்தை
5.மெய்மைப் பெருவார்த்தை
6.கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை

19.. ஆறு —நதியால் 6 நன்மைகள்

1.ஆற்றில் பெருகிவரும் ஜலம் ,இருகரைகளையும் இணைக்கிறது
(அதற்கு முன்பு ஆற்று மணல் இணைத்தது—இது இப்போது எங்கே?
நீங்கள் பார்த்தீர்களா ? )
2. ஆற்றில் பெருகிவரும் ஜலம் ,நித்ய கர்மானுஷ்டானங்களைச்
செய்ய உதவுகிறது
3. ஆற்றில் பெருகிவரும் ஜலம் குளிக்கவும், குடிக்கவும்–ஆடுமாடுகள்
பறவைகள் யாவும்—உதவுகிறது
4. ஆற்றில் பெருகிவரும் ஜலம் , ஏரி குளம் இவைகளை நிரப்புகிறது
5. ஆற்றில் பெருகிவரும் ஜலம் ,கிளை வாய்க்கால்கள் வழியோடி,
நெல் முதலிய பயிர்களை விளைவித்து, ஜீவராசிகளுக்கு ,உணவைக்
கொடுக்கிறது
6.ஆற்றில் பெருகிவரும் ஜலம் , படுகைகளில் தேங்கி, ஊற்று நீராக
வெயில்காலத்தில், குடிநீராக உதவுகிறது

20., தாகத்துக்குப் பகவான் 6 விதமாக இருக்கிறான்

1. தாகத்துக்கு—-ஆவரண ஜலம்போலே –இது ஸ்ரீ வைகுண்டம் (பரமபதம்)
—————–கானம் கேட்கும் இடம்
2. தாகத்துக்கு –ஸமுத்ர ஜலம்போலே —திருப்பாற்கடல்–
——————கூப்பாடு கேட்கும் இடம்
3. தாகத்துக்கு–காட்டாற்று வெள்ளம்போலே–ஸ்ரீ ராம, கிருஷ்ண முதலிய
அவதாரங்கள்— பகவான் இப்பூமியில் “குதித்த இடம் ”
4. தாகத்துக்கு–ஊற்று ஜலம்போலே —ஒவ்வொரு ஜீவனிலும் –அந்தர்யாமியாக–
——இது “ஊட்டும் இடம் ”
5. தாகத்துக்கு, —கிணற்று ஜலம்போலே—திவ்யதேசங்களில் அர்ச்சாவதாரமாக–
————–இது “வளைத்த இடம் ”
6. தாகத்துக்கு, அன்றன்று எடுக்கும் நீர்—-சாளக்ராம மூர்த்தி–
——————-இது, “தொடரும் இடம் ”

————————தொடருகிறது————————–

எண்கள் –அவை சொல்வது என்ன ?—19
——————————————————–

இதுவரை எண் 5 முடிய –நுட்பமான விவரங்களைப் பார்த்தோம்

இப்போது எண் 4
—————————–

வேதங்கள் 4 என்பது எல்லாருக்கும் தெரிந்ததே !
i வேதத்துக்கு 4 குணங்கள்
1. நித்யத்வம் —எப்போதும் இருப்பது
2. அபௌருஷேயத்வம் —யாராலும் இயற்றப்படாதது
3. அவிச்சின்னபரம் பராகதத்வம் —-ஆசார்யன் சொல்ல, சிஷ்யன் கேட்டுத்
திருப்பிச் சொல்ல, இப்படி ஒருவர் சொல்லி
ஒருவர் கேட்டுத் தொடர்ந்து வருவது
4. அனந்தத்வம் —அளவிடமுடியாதது

வேதத்துக்கு உள்ள சாகைகள் 4 ஆகப் பிரிக்கப்படுகின்றன
1. ஸம்ஹிதை–மகரிஷிகள், பகவானின் கிருபையால் மந்த்ரங்களைக்
கண்டு அருளியது (சாக்ஷாத்காரம் செய்து அருளியது )
2. ப்ராஹ்மணம் —ஸம்ஹிதைகளில் உள்ள மந்த்ரங்களை எந்தக் கர்மாக்களில்,
எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்கிற நெறிமுறைகளையும் (விதிகள் )
இது தொடர்பான இதிஹாஸங்களையும் கொண்டது
3. ஆரண்யகம் —ப்ராஹ்மணத்தில் சொல்லப்பட்ட யாகங்கள், ஹோமங்கள்,
இவற்றைப் பலன்கருதி செய்தால் ஸ்வர்க்கம் போன்றவற்றை அடைந்து,
அந்தப் புண்யம் தீர்ந்தவுடன் மறுபடியும் பிறப்பு என்கிற சம்சாரச் சுழல்
இல்லாது, கானகம் சென்று பலன்களை விட்டு, இப்படி வேதப்பகுதியின் தொகுப்பு
4. உபநிஷத்—-ஆரண்யகத்தின் நிறைவுப் பகுதி—நேரே பகவானை உணர்த்துவது

ii .புருஷார்த்தங்கள் –4
1.தர்மம்
2. அர்த்தம்
3. காமம்
4. மோக்ஷம்
ஸ்ரீமத் ராமாயணத்தில்,, தர்மம்–பகவான் ராமனாகவும், அர்த்தம்–லக்ஷ்மணனாகவும்
காமம்–சத்ருக்னனாகவும் , மோக்ஷம்—பரதனாகவும் ,சித்தரிக்கப் படுகின்றனர்
அர்த்தம்—அதாவது பொருள், தர்மத்தை அண்டியே இருக்கவேண்டும்.
(தர்ம வழியில் பொருள் ஈட்டப்படவேண்டும் மற்றும் தர்ம வழியில்
செலவழிக்கப்படவேண்டும்).
இச்சை –காமமாகிய ஆசை, மோக்ஷத்தை ஒட்டியே இருக்கவேண்டும் என்பர்

iii . இல்லை என்பதற்கு 4 விளக்கம் –தர்க்க சாஸ்த்ரப்படி
1. பிராக பாவம் —பானை உருவாக்கப்படுவதற்கு முன்பு, அது இல்லை
2. பிரத்வம்ஸா பாவம்–பானையை உடைத்த பிறகு , அது இல்லை
3. அந்யோந்யா பாவம்–ஒருபொருள் எதிரே இருந்தால், அது இருக்கும்
இடத்தில் நான் இல்லை; நான் இருக்கும் இடத்தில் அது இல்லை
4. அத்யந்தா பாவம்—எக்காலத்திலும் இல்லை

iv . “புருஷ : ” என்பதற்கு 4 விளக்கம்
1. புரி சயனாத் புருஷ : —நம் சரீரத்தில், சர்வ பதார்த்தங்களிலும் ,அவன்
இருந்தாலும் அவற்றின் குணதோஷங்கள் ஒட்டிக்கொள்ளாமல் ,
உத்தமோத்தமனாக இருக்கிறான்
2. பஹுதானாத் புருஷ : —வாரி வழங்குபவன்—மோக்ஷத்தைக் கொடுப்பவன்
3. புராணத்வாத் புருஷ : —பழைமையிலும் பழைமையானவன் ; அவனுக்கு ஆதியும்
இல்லை, அந்தமும் இல்லை
4. பூர்ணாவாத் புருஷ : —குறைவே இல்லாமல் சர்வமும் நிறைந்து விளங்குபவன்

v .முமுக்ஷு –4 நிலைகள்
1. சாலோக்யம்—-உரிய இடத்தை அடைவது
2. சாமீப்யம்—இடத்தை அடைந்து சமீபத்தில் இருப்பது
3. சாரூப்யம்—கைங்கர்யம் (அர்ச்சகர் பகவானை நெருங்கி இருந்தாலும்,
பார்க்காதது )
4. சாயுஜ்யம்—பகவானை நிரந்தரமாக அனுபவித்தல்—கைங்கர்யம்
செய்தல்—நெருங்கி, தர்சித்து, கைங்கர்யம்

vi . ஞான பாகங்கள் –4( ஜீவன்கள் நித்ய சுகத்தை அடைய)
1. ஆன்வீக்ஷிகீ —ஆத்ம வித்யையை உபதேசிப்பது
2. த்ரயீ (ருக், யஜுஸ் ,ஸாமம் ) தர்மாதர்மத்தை உபதேசிப்பது
3. வார்த்தா—ஜீவனம் செய்பவர்களின் தொழில்களைப் பற்றிய சாஸ்த்ரம்
4. தண்டநீதி—-குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள்

vii .பாபம் ஏற்பட 4 காரணங்கள்
1. பிறர் மனை நோக்கல்
2. கண்டதைக் கண்டபோது கண்ட இடங்களில் கண்ட அளவுக்கு உண்பது
3. கைகளால் திருடுவது
4. வாயால் கடுஞ்சொல் சொல்லல், மிகைபடக் கோரல், வம்பளத்தல், புறங்கூறல்

viii .சுத்தம் 4 வகை —விதுரர் மாளிகையில், ஸ்ரீ கிருஷ்ணர் சாப்பிட்டபிறகு,
துர்யோதனன் கேட்டதற்குச் சொன்னது—-
1. சுத்தம் பாகவதாஸ்யான்னம்
2.சுத்தம் பாகீரதி ஜலம்
3. சுத்தம் விஷ்ணுபத த்யானம்
4. சுத்தம் ஏகாதசி வ்ரதம்

ix .4 பேர்கள் சமம் என்கிறது ஸ்ரீ பராசர ஸ்ம்ருதி
1. கொக்கு போன்று வஞ்சிக்கிறவன்
2. பூனைபோல ஏமாற்றுகிறவன்
3. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவன்
4. கர்மாவை விட்டவன்

x . யஜ்ஞ ப்ரகரணம்
1. உத்கீதம்—-ஸாமவேதம் —பகவானை, தேவதைகளை ஸாம வேதத்தாலே
அழைக்கவேண்டும்
2. ரிக்வேதம்—அப்படி அழைக்கப்பட்டு வந்தவர்களை, ரிக் வேதத்தாலே
ஸ்தோத்ரம் செய்யவேண்டும்
3. யஜுர் வேதம்—வந்துள்ள பகவானுக்கும் தேவதைகளுக்கும் யஜுர் வேத
மந்த்ரங்களால் ஹோமம் பண்ணவேண்டும் –யஜ்ஞம் —
அப்போது ஹவிஸ்ஸை அவர்கள் ஏற்பார்கள்
4. அதர்வ வேதம்—- இந்த வேதம், ப்ருஹ்மாவாக இருந்து நடத்தி வைக்கிறது

xi அர்ச்சாவதாரம் –4 வகை

1. ஸ்வயம்வக்தம் —தானே விரும்பி , சில பிம்பங்களில் / விக்ரஹங்களில்
ஆவிர்ப்பவித்தல் —தானே சங்கல்பித்துத் தோன்றுவது
2. தெய்வம்—- — தேவதைகளால் பிரதிஷ்டை செய்யப்பட விக்ரஹத் திருமேனி
3. ஆர்ஷம்—மகரிஷிகளுக்குப் ப்ரத்யக்ஷமாகி, அவர்களால் ப்ரார்த்திக்கப்பட்டு
பிம்பங்களில் ஆவிப்பவித்தல்
4. மானுஷம்—மனிதர்களால் ஆகம சாஸ்த்ர ரீதியாக விசேஷமாக ப்ரதிஷ்டை
செய்யப்பட பிம்பங்களில் ஆவிர்ப்பவித்தல் .

xii . “த்வனி ” 4 வகை
1. சாந்தா—–த்வனி வயிற்றின் அடிப்பாகத்திலிருந்து கிளம்பும்போது
2.பஸ்யா அல்லது ரந்தீ—-த்வனி, நாபி பிரதேசத்திலிருந்து வரும்போது
3. ப்ரோணீ —-த்வனி கண்டத்திலிருந்து வரும்போது
4. ஸ்ருஷ்டி —–த்வனி வாயிலிருந்து வெளிப்படும்போது

xiii . சமம் –4
1. அன்னத்துக்கு சமமான தானம் இல்லை
2. அன்னைக்கு சமமான தெய்வம் இல்லை
3. காயத்ரிக்கு சமமான மந்த்ரம் இல்லை
4. த்வாதசிக்கு சமமான வ்ரதம் இல்லை

xiv . சகுனம் –4 வகை
1. காண்பதும் கேட்பதும் –சுபம்— கருடன்
2. காண்பதும் கேட்பதும் –அசுபம் —பூனை
3. காண்பது சுபம், கேட்பது அசுபம்—குள்ளநரி
4. காண்பது அசுபம், கேட்பது சுபம்—கழுதை

xv .ப்ரபத்தி –4 வகை
1. ஸ்வநிஷ்டை
2.உக்திநிஷ்டை
3. ஆசார்யநிஷ்டை
4. பாகவத நிஷ்டை

xvi . பரவித்யா —4 வ்யாஹ்ருதிகள் — அங்கம்
1.பூ :
2. புவ :
3.ஸு வ :
4. மஹ :
4வது வ்யாஹ்ருதி, முதல் 3 வ்யாஹ்ருதிகளுக்கும்
சரீரம். இந்த சரீரத்துக்கு ஆத்மா, பரப்ரம்மம்

xvii .”வாக்” எனும் வேதப்பசுவுக்கு 4 மடிகள் உள்ளன

xviii . ப்ரணவத்துக்கு,4 பாதங்கள்

xix . ஆத்மாவுக்கு 4 தசைகள்
1. விழிப்பு
2.ஸ்வப்னம்
3. உறக்கம்
4. மோக்ஷம்

xx . தீர்த்த சதுர்த்தம்
1. தீர்த்தத்தைக் கையில் வாங்கியே காலில் சேர்க்கவேண்டும்
2. தீர்த்தம் சேர்க்கும்போதோ, சேர்க்காமல் இருக்கும்போதோ
காலோடு இன்னொருகாலைத் தேய்க்கக்கூடாது
3. ஜலதேவதை, ராத்திரி நேரத்தில் கிணற்றில் உறங்குவதால்,
( இப்போது கிணறு எங்கே இருக்கிறது ! ) தீர்த்தத்தை , ராத்ரியில்
கிணற்றிலிருந்து எடுக்கக்கூடாது. மிகவும் அவச்யமாக இருந்தால்,
அதற்கான மந்த்ரத்தைச் சொல்லி எடுக்க வேண்டும்
4. தீர்த்தத்தில் ( ஆறு, குளம் குட்டை போன்றவை ) நின்றுகொண்டு
அதிலேயே வாய் கொப்பளிப்பதோ, காரி உமிழ்வதோ கூடாது

xxi .ஸ்ரீமத் ராமாயணம்–நாலு பிள்ளைக்கதை
1. ஒரு பிள்ளை ,பித்ரு வாக்ய பரிபாலனம் செய்தான்
2. இன்னொரு பிள்ளை, அவனுக்கு அங்க ரக்ஷகனாக –உதவியாக-
உடன் சென்றான்
3. மற்றொரு பிள்ளை, ராஜ்யத்தை வெறுத்து, பாதுகா பட்டாபிஷேகம்
செய்தான்
4. கடைசி பிள்ளை, பாதுகா பட்டாபிஷேகம் செய்த பிள்ளைக்கு—
அங்க ரக்ஷகனாக —உதவியாக—இருந்தான்

xxii . இங்கித சிச்ருக்ஷை –4
1. ஒன்றை நினைத்துக் கேட்டால் அதையே கொடுப்பது
2. கேட்டவுடன் கொடுப்பது
3. முகமலர்ச்சியுடன் கொடுப்பது
4. இன்னும் இப்படி சிச்ருக்ஷை செய்யவேண்டும் என்று ப்ரார்த்தித்துக்
கொடுப்பது

xxiii .இவர்கட்குத் த்ரோகம் செய்யக்கூடாது
1. ஸ்நேஹிதனுக்கு
2. நம்பினவர்களுக்கு
3. அன்னம் இட்டவர்களுக்கு
4. வசிக்க இடம் கொடுத்தவர்களுக்கு
த்ரோக்தவ்யம் ந ச மித்ரேஷு ந விச்வஸ்தேஷு கர்ஹிசித் |
ஏஷாம் சாந்தாநி புஞ்ஜீத யத்ர ச ஸ்யாத் ப்ரதிஸ்ரய : ||

xxiv . நாலு விஷயங்கள் உடனே பலனைக் கொடுக்கும்
1. தேவர்களுடைய சங்கல்பம்
2. புத்திமான்களின் மஹிமை
3. வித்யையைக் கற்றுத் தேர்ந்தவர்களின் வினயம்
4. பாவிகளின் திருட்டு

xxv .நாலு விஷயங்கள் அபயத்தைக் கொடுக்கும்
1.அக்னிஹோத்ரம்
2.மௌனம்
3.அத்யயனம்
4.யஞ்ஜம்

——————தொடருகிறது———–

எண்கள் —அவை சொல்வது என்ன -?–20
——————————————————————-

இப்போது , எண் 3 –இதைப் பார்ப்போம்

i .ஈஷணத்ரயம்
1. மண்
2. பெண்
3. பொன்

ii .தத்வத்ரயம்
1. சேதனன் ( ஆத்மா, ஜீவாத்மா அல்லது சித் என்றும் சொல்வர் )
2.அசேதனம் (அறிவில்லாதது )
3. ஈச்வரன் (பரமாத்மா,பகவான் )
அடியேனின் “ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் –சில முக்ய விஷயங்கள்
என்கிற புத்தகத்தில் (5ம் பதிப்பு ) எல்லா விவரங்களும் உள்ளன

iii .தூஷணத்ரயம்
1. அவ்யாப்தி—பசுக்கள் வெண்மையாக இருக்கும் என்கிறபோது
வேறு நிறமுள்ள பசுக்களும் இருப்பதால், இது அவ்யாப்தி என்கிற தோஷம்
2. அதிவ்யாப்தி—பசுவுக்குக் கொம்பு உண்டு என்கிறபோது, வேறு
மிருகங்களுக்கும் கொம்பு இருப்பதால் இது அதிவ்யாப்தி என்கிற தோஷம்
3. அஸம்பவம்—பசுவுக்கு ஒரு குளம்புதான் உண்டென்றால் ,இப்படிப்பட்ட
பசுவை எங்கிருந்து கொண்டுவருவது—

இப்படி 3 தோஷங்களும் இல்லாமல் விவரிக்கவேண்டும்

iv 3 அவஸ்தைகள்
1. விழித்து இருப்பது
2. தூங்குவது
3 ஸ்வப்னம்

v . உபதேசம் 3 வகை
1. பிரபுவைப்போல ஆணையிடுதல்
2. தோழனைப்போல ஹிதமாகச் சொல்வது
3. பிரியமான மனைவியைப் போல, ஆசையை உண்டாக்கி,
சொல்வதைச் செய்தால் ஒழிய தரிக்கமாட்டதபடி –தெரிவிப்பது

vi 3 முக்ய தோஷங்கள்
1. பொய் பேசுவது
2. பிறதாரத்திடம் நோக்கம்
3. பகை இன்றி இருக்கச் செய்தேயும், பிற ஹிம்ஸை
(பொய் பேசுவது தனக்குமட்டும் துன்பம் விளைவிப்பது. பிறன்மனை
விழைதல்–இருவருக்கும் பாபம்.3வது பலருக்குப் பாபம் )

vii 3 தலைமுறை வேத ஸம்பந்தம்
1. யஸ்ய வேதச்ச வேதீச விச்சித்யேதே த்ரி பூருஷம் |
ஸவை துர்ப்ராம்ஹணேஜேய : ஸர்வகர்ம பஹிஷ்க்ருதம் ||
மூன்று தலைமுறைகள் வேத சம்பந்தமும் (அத்யயனம் )
அத்யயனம் பண்ணியவர்கள் சம்பந்தமும் எவனுக்கு இல்லையோ,
அவன் துர்ப்ராஹ்மணன் என்று ஸ்ம்ருதி சொல்கிறது. ஒரு கர்மாவும்
செய்ய யோக்யதை இல்லாத ப்ராஹ்மணன் ஆகிறான்

viii 3வித வரவேற்பு
மரணத்தின்போது—
1. பாபாத்மாக்களுக்கு —-2 யமகிங்கரர்கள் வருவார்கள்
2. புண்யாத்மாக்களுக்கு—யமன் வருவான்
3. மோக்ஷம் அடைபவர்களுக்கு—பகவானே வருவான்

ix .போக்யத்வம் –3
1. போக்தா—அனுபவிப்பவன்
2. போக்யம் —அனுபவிக்கப்படும் பொருள் (போக்யத்வம் )
3. பிரேரிதா —-அந்தப்பொருளை அனுபவிக்கும்படியாக
நம்மை ஆக்குகிறவன் (நியம்க்ருத்வம் )

x . தீக்ஷைகள் —3
1. ஸ்பர்ச தீக்ஷை —-மழைக்காலத்தில், உணவைக் கொண்டுவந்து,
குஞ்சுகளுக்குக் கொடுக்க இயலாத தாய்ப்பறவை ,பசியால் கத்தும்
தன்னுடைய குஞ்சுகளைத் தன் இறக்கைகளால் அணைத்துக்
கொள்கிறது. குஞ்சுகளுக்குப் பசி தீர்ந்துபோய் ஆனந்தமாகக்
கத்துகிறது
2. நயன தீக்ஷை (த்ருக் தீக்ஷை )—தாய் மீன் , தன்னுடைய குட்டி
மீனைப் பார்த்தவுடனே , குட்டி மீனுக்குப் பசி தீருகிறது
3. ஸ்மரண தீக்ஷை—ஆமை எங்கேயோ ஓரிடத்திலும் , அதன்குட்டி
வேறு ஒரு இடத்திலும் இருந்தபோதிலும், தாய் ஆமை ,தன குட்டியை
நினைத்தவுடனேயே ,குட்டிக்குப் பசி தீருகிறது

xi . ரத்னங்கள் –3
1. புராண ரத்னம் —ஸ்ரீ விஷ்ணு புராணம்
2. ஸ்தோத்ர ரத்னம்—ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம்
3.மந்த்ர ரத்னம் –த்வய மந்த்ரம்

xii . கத்ய த்ரயம்
1. சரணாகதி கத்யம்
2. ஸ்ரீ ரங்க கத்யம்
3.ஸ்ரீ வைகுண்ட கத்யம்
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளியது

xiii . மந்த்ர ஸித்தி ஏற்பட 3 இடத்தில் பக்தியும் ,ச்ரத்தையும் வேண்டும்
1. மந்த்ரத்தின் இடத்தில்
2. உபதேசம் செய்யும் ஆசார்யன் இடத்தில்
3. மந்த்ர தேவதை இடத்தில்
குறிப்பு—மந்த்ரம் என்றால்—யார் பிழை இல்லாமல் உச்சரிக்கிறார்களோ
சொல்கிறார்களோ–அவர்களை—ரக்ஷிப்பதாலே ,அதற்கு மந்த்ரம் என்று பெயர்

xiv .விஷ்ணு காயத்ரியில் 3 நாமாக்கள்

1. நாராயணன்
2. வாஸுதேவன்
3. விஷ்ணு

xvi .ஏற்றமுடையது –3
1. அக்ரூராயணம்
2.அர்ச்சிராதி மார்க்கம்
3. திருவேங்கட யாத்ரை

xvii .எப்போது பார்த்தாலும் சலிக்காத புதுசு –3
1. யானை
2. சந்திரன்
3. சமுத்ரம்

xviii பகவன் நாம சங்கீர்த்தனம் 3 விதமாக உதவும்
1.த்ருஷ்ட பலம்—-அஜாமிளன் சரித்ரம்—கடைசி பிள்ளையான நாராயணன்
பெயரை உயிர் போகும் தருணத்தில் சொன்னான்
2. அத்ருஷ்ட பலம்—-த்ரௌபதிக்கு புடவை சுரந்தது
3. த்ருஷ்டா அத்ருஷ்ட பலம்—-கஜேந்திரன்காப்பற்றப்பட்டு மோக்ஷம் கிடைத்தது

xiv .அன்ன ஸுக்தம் 3 விஷயங்களைச் சொல்கிறது
1. மிதம் புக்த்வா —–மிதமாகப் பாதி வயிறு நிறையுமாறு சாப்பிட வேண்டும்
2. சதம் கதவா —சாப்பிட்டபிறகு, நூறு அடியாவது நடக்கவேண்டும்
3. வாமபாகே சயநாஞ்ச –இடதுபக்கம் சாய்ந்து 10 நிமிஷம் படுக்கவேண்டும்
இப்படி இருந்தால், வைத்யனிடம் ,இவன் போகவேண்டாம் என்கிறது அன்னஸுக்தம்

xx . வ்யாபக மந்த்ரங்கள் –3
1. அஷ்டாக்ஷரம்
2.ஷடக்ஷரம்
3.த்வாதசாக்ஷரம்

xxi .மூன்று விஷயங்கள் ப்ரமாணம்
1. ப்ரத்யக்ஷ ப்ரமாணம்
2. சப்த ப்ரமாணம்
3. அநுமான ப்ரமாணம்

xxii . பித்ரு தேவதைகள் —3
1. வஸு
2.ருத்ர
3.ஆதித்ய

xxiii .ரிஷிகள் 3 வகை
1. ராஜ ரிஷிகள் —உதாரணம்—விச்வாமித்ரர்
2. தேவ ரிஷிகள்—-உதாரணம்—நாரதர்
3. ப்ரஹ்ம ரிஷிகள் —உதாரணம்—வசிஷ்டர், அத்ரி பிருகு முதலியோர்

xxiv .விசிஷ்டாத்வைதம்–த்ரிவேணி வைஷ்ணவம்
1.உபநிஷத்தும்,வேதமும்—-கங்கை
2.பாஞ்சராத்ர நூல் —யமுனை
3.ஆழ்வார் அருளிச் செயல்கள்–சரஸ்வதி
ஆக , விசிஷ்டாத்வைதம் , த்ரிவேணி வைஷ்ணவம் எனப்படுகிறது.

xxv .கைங்கர்யம் 3 வகை
1. வாசிக —-வாசித்தல், ஸ்தோத்தரித்தல்
2.காயிக—-கைகளால் அர்ச்சித்தல்
3.மானஸீக —-மனத்தால் ஸ்மரித்தல்

xxvi . கேட்பது 3 வகை
1. வாயால் கேட்பது—-உதாரணம்–ஒரு பஞ்சாதி சொல் என்று மாணவனை
ஆசிரியர் கேட்பது–இது வாயால் கேட்பது
2. காதால் கேட்பது—-மாணவன் சொல்லும் பஞ்சாதியைக் காதால் கேட்பது
3. சொன்னபடி கேட்பது—-அந்த மாணவன் ,ஆசிரியர் சொன்னபடி கேட்டது

xxvii .3 விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்
1. அதிகமாகப் பேசுவது
2. அதிகமாக செலவழிப்பது
3.அதிகமாக எதிர்பார்ப்பது

xxviii . 3 விஷயங்களில் குறைவு கூடாது
1. மிகச் சொற்பமாக அறிவது
2. மிகச் சொற்பமாகக் கையிருப்பு
3. மிகச் சொற்பமான தகுதி

xxiv . மனிதனுக்கு 3 கடன்கள் முக்கியம்
1. ருஷிக்கடன் –ருஷிகளுக்கான கடன்–இது வாக்குக்கு அதிஷ்டான தேவதை
2. பித்ரு கடன்—-மூதாதையர்களுக்கான கடன்—இது உடலுக்கு
3. தேவர் கடன்—-தேவர்களுக்குச் ன்செஇவது—இது பாவத்தைப் போக்கும்
ஆக , மனிதனுக்கு மூன்று கடன்கள் முக்கியம்

xxv சாப நிவ்ருத்தி–3
1. ப்ரஹ்ம சாபம், மார்பின் வியர்வையாலே போக்கலாம்
2. துர்வாசரின் சாபம், மார்பில் இருப்பவளின் கடாக்ஷத்தாலே போக்கலாம்
3. கௌதம சாபம், ஒரு தடாகத்தில் முழுக்கிட்டுப் போக்கலாம்

xxvi .புத்தி விழிப்புடன் இருக்க 3 செயல்கள் முக்யம்
1.இயல்பு உணர்ச்சி —INSTINCT
2. அறிவு —-INTELLIGENT
3. உள்ளுணர்வு —-INTUTION

xxvii. தாமஸ குணம் 3 வகை
1. உண்மையை அறியாமல் உளறுவது
2. உண்மையை வேறாக மருண்டு எண்ணுவது
3. இது உண்மையோ இல்லையோ என்று மயங்குவது

xxviii ஜீவன் அனுபவிக்கும் சுகங்கள்–3
1. அசேதானுபவம்
2. சேதனானுபவம் —கைவல்யம்
3. பரமாத்ம அனுபவம்—மோக்ஷம்

xxiv . மூன்றுகள்
1. பொய் சொல்பவனைப் பரீக்ஷிப்பது
2. சுத்யந்தமாக தீர்த்த ஸ்வீகாரம்
3. தர்ப்பணத்தில் தில தானம்
4. வரப்ரேஷணம்
5. மருந்தும், விருந்தும்
6. விளையாட்டிலும்
7. பரீக்ஷை எழுதுவதும்

குறிப்பு— அடியேன் ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில்,
இவை போன்ற பற்பல நுட்பமான விஷயங்களை “கேட்பதும், சொல்வதும் ”
என்கிற தலைப்பில், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், 2013 ஏப்ரல் வரை
1008 கேள்வி—பதிலாக எழுதி இருக்கிறேன். அவற்றிலிருந்து, சிறிதளவே
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, அடியேனுக்கு
எழுதலாம்
————————————————————–

இப்போது எண் 2
———————-

i . கருணை 2 வகை
1. நித்யமான கருணை—- எல்லா ஜீவன்களையும், இருத்தி,
காத்து முதலான செய்யும் பகவானின் கருணை நித்யமானது
2.அநித்ய கருணை—அவரவர் செய்த அஜ்ஞாத ஸுஹ்ருதம்
முதலான கர்மாணு குணமாக விசேஷ பலன்களைக் கொடுப்பது,

ii . சரணாகதர் 2 வகை
1. ஆர்த்தர்—உடனே மோக்ஷம் வேண்டுபவர்
2. த்ருப்தர்—-சரீரம் விடுபட்ட பிறகு, மோக்ஷம் வேண்டுபவர்

iii . தர்மம் 2 வகை
1. ப்ரவ்ருத்தி தர்மம்—வேறு பலனுக்கான தர்மம்
1. நிவ்ருத்தி தர்மம்—-மோக்ஷத்துக்கான தர்மம்

iv . பகவானை ஆராதிக்க 2 முறைகள்
1. வைகானஸம்
2. பாஞ்சராத்ரம்

v . உபாஸிப்பவர்களுக்கு, பகவான் 2 விதமாக அருள்கிறான்
1. உபாயம்—-பகவானை அடைய, அவன் திருவடியை ஸ்மரிப்பது–
அவன் திருவடி உபாயம்
2. உபேயம் —பகவானின் திருவடியை எதற்காகப் பற்றுகிறோம் ?
பகவானை அடைவதற்கு—ஆதலால் பகவான் உபேயம்

vi . அக்னிக்குப் பாதணிகள் இருவர்
1. ஸ்வாஹா—
2. ஸ்வதா

vi i . கின்னர, கந்தர்வர்

1. கின்னரர்—மனித முகம், குதிரை உடல்
2. கந்தர்வர்—குதிரை முகம், மனித உடல்

viii . த்வயம்

இது இரண்டு என்று பொருள் படும் மந்த்ரம் –இரட்டை—
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம :

——————————————————–

இப்போது எண் 1

பிரணவத்தைத் தவிர “ஏகம் ” என்பதற்கு வேறு எதுவும் பொருத்தமாக இருக்காது.
எண்கள் –அவை சொல்வது என்ன ? என்கிற இந்தத் தொடரை , ஊன்றிப்
படித்தவர்க்கு, எண் ஒன்று என்பது என்னவென்றும் ,அதன் மஹோன்னத
முக்யத்வமும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.
ப்ரணவத்தின் பொருளை, காலக்ஷேபமாகக் கேட்கவேண்டும் என்பதால்,
இங்கு விரித்துரைக்கவில்லை

பூஜ்யம் –இது பூர்ணம் –இந்த பூஜ்யத்தை மஹரிஷிகள் ,தபோபலத்தால்,
கண்டு உலகுக்குக் கொடுத்தார்கள் . அந்த மஹ ரிஷிகளையும் அவர்களின்
வழித் தோன்றல்களையும், சிரஸ் ஸாலும் , மனஸ்ஸாலும் நமஸ்கரித்து,
உபநிஷத் வாக்யத்தைச் சொல்லி நிறைவு செய்கிறேன்

ப்ருஹதாரண்ய உபநிஷத் சொல்லும் சத்யமான பூர்ணத்வத்தை ,இப்போது
பார்க்கலாம்
ஓம் பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ||

ஓம்—-அது பூர்ணம் இதுவும் பூர்ணம்—-பூர்ணத்திலிருந்து , பூர்ணம்
தோன்றுகிறது. பூர்ணத்திலிருந்து , பூர்ணத்தை எடுத்தாலும்,
பூர்ணமே மிஞ்சுகிறது

ஓம் சாந்தி, சாந்தி , சாந்தி :

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலினே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :

————————————————————————————————–

Abstract
It commences with 72 Melakarthaa ragams
Then, the importance of Sanskrit & Science with sanskritic mathematics
Then about Sri Vishnu SahasraNama shakhas-01

About the Author

Leave A Response