Whose defeat was the reason for Pandava’s victory in Kurukshetra War

Posted on Sep 27 2016 - 7:23am by srikainkaryasriadmin

Soundararajan Desikan
27 September 2015 ·

மஹாபாரதக் கதையின் கதாநாயகன்
> யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள்
> கிடைக்கும் பீஷ்மர், அர்ஜுனன், பீமன்,
> கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச்
> சொல்வார்கள்.
> ஆனால் காவியத்தை நன்றாகப்
> படித்து, ரசித்து, அதைப் பற்றிச்
> சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான்
> மனதில் தோன்றுவார். யார் அவர்.?
> சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.
> மஹாபாரதக் கதையின் முடிவில்
> வருவது பாரதப் போர். 18நாட்கள் யுத்தம்.

வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
> எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள்! அவர்கள்
> பக்கத்தில் — பீஷ்மர், துரோணர், கர்ணன்,
> துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய
> பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள்
> வென்றார்கள்..? ஒவ்வொருவருடைய
> வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் சங்கல்பம்
> இருந்திருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால்
> பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
> இதோ ஒரு கேள்வி!
> கீழ்க்கண்ட வீரர்களில்,யாருடைய வீழ்ச்சி

பாண்டவர் வெற்றிபெறமுக்யக் காரணமாக இருந்தது ?

> 1) ஜயத்ரதன், 2) பீஷ்மர் , 3) துரோணர்4) கர்ணன்,
> 5) துரியோதனன் 6) விதுரர்…
> அநேகர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய
> யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள்.
> இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல
> சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று
> நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர்

– இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
> ஆனால் சரியான விடை விதுரருக்காகக் கண்ணன்
> தீட்டிய திட்டம்தான்.
>
> விதுரர் எங்கே சண்டை போட்டார்.? அவரை
> வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் ஏன் திட்டம்
> போட வேண்டும்.? கேள்விக்கு விடை சொல்லும் முன்

கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.
> யார் இந்த விதுரர்.?
> விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி
> (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும்
> கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய
> தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக
> எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான்,
> தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது
> மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து
> தெரியவருகிறது. கெளரவர் பக்கத்திலிருந்து போராடும்

பெரிய வீரர்களை வீழ்த்த ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட
> திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.
> ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் .
> பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத
> மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம்.
> கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம்.
> மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம்
> அடைய வேண்டும் என்று நியதி.
> சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும்
> அப்பாமார்களும், சகோதரர்களும்,
> கணவன்மார்களும், மச்சினர்களும்,
> பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த
> நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
> மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி
> நடந்துகொண்டார்களா.?
> திரெளபதியை, துச்சாதனன் துகில்
> உரியும்போது வாய் திறக்காமல்
> மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான
> தண்டனை — யுத்தத்தில் மரணம்.
> சரி,
> இப்போது கேள்வி.
> விதுரருக்காக ஏன்
> திட்டம் தீட்ட
> வேண்டும்.?
> விதுரர் அப்பழுக்கில்லாதவர்.
> மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர்
> செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும்

அவன் சகோதரர்களையும் கண்டித்து
> திரெளபதிக்காக வாதாடினார். அதனால்
> தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில்
> சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்களில்
> மூத்தவர் தரும புத்திரர் (எமனின்
> மகன்) எதிர்பக்கம் அவர் தந்தை – தர்மராஜர்
> (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
> எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால்,
> மற்ற பெரியவர்கள் – பீஷ்மர், துரோணர் – போல்
> விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக.,
> துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய
> கட்டாயத்துக்குள்ளாவார்.
> விதுரர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே
> முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
> விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால்
> பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.
> மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி

ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால்
> எல்லோரையும்விட மிக முக்யமானவர்
> விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம்

போராடக் கூடாது. எப்படித் தடுப்பது.?
> இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி ….
> ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து
> விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப
> அருமை…
> எல்லோருக்கும்
> தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப்
> போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத்
> தூது சென்றான். அவன் வருகிறான் என்று
> தெரிந்த திருதராஷ்டிரன்தடபுடல் வரவேற்பு எற்பாடு
> செய்திருந்தார். சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின
> இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார்
> என்ற கேள்வி பிறந்தது. நான், நீ எல்லோரும் அவரை
> அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை
> வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசாரங்களை ஏற்றுக்கொள்வேன்.
> இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று
> என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார்.
> விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்குப் பிரியமான கிருஷ்ணன்
> தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக்
> கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது —
> விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.

> மறுநாள்,த்ருதராஷ்ட்ரன் சபையில் ஸ்ரீ கிருஷ்ணன்
> பாண்டவர்களுக்காக வாதாடினான்.
> துரியோதனன் ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப்
> பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி
> கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
> கிருஷ்ணனும் “யுத்தம் நிச்சயம்” என்று சொல்லிவிட்டு
> பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார் திரும்பும்முன்,
> கிருஷ்ணருடைய சாரதி கேட்டான்.
> ஸ்வாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில்
> தங்க நிச்சயித்தீர்கள்.?” என்றான்.
> கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம்
> இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச
> நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
> கிருஷ்ணன் சென்ற பின் சபையில் எல்லோரும்
> துர்யோதனனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக்
> கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
> அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே
> துரியோதனனுக்கு விதுரர்மேல் கோபம்– அவர்
> பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு.
> போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான
> கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது.

விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக்
> கோபம் பொத்துக் கொண்டுவந்தது.

என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல்
> நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான்.
> குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
> (ஏற்க்னவே மாண்டவ்யர் மஹரிஷி கொடுத்திருந்த சாபம்

முற்றிலும் பலித்து விட்டது)
> விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க
> சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை.

கௌரவர்களுக்கு அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.
> என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான்
> என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான்
> பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று
> சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச்
> சபையிலிருந்து வெளியேறினார். யுத்தம் முடியும்வரை அவர்
> தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை
> ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்திருந்தால்,
> விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.?
> துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு
> வந்திருக்கும் அல்லவா.? விதுரர் வைத்திருந்த வில்
> மஹாவிஷ்ணுவின் வில். விஷ்ணு தநுஸு எனப்படும்
> அந்த வில்லை உபயோகிப்பவரை எவராலும் வெல்ல முடியாது.
> அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது.
> காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர்
> விஷ்ணு தநுஸ்ஸுடன் வந்து நின்று விட்டால்
> ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம்
> கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி,

துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து.,
> விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும்
> பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து
> விட்டது..!! இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்த்ரம்
> ஆக, விதுரரரை அப்புறப்படுத்தியதுதான், பாண்டவர்களின்

.. வெற்றிக்கு மிக முக்யக் காரணமாக இருந்தது என்று

சொல்லலாமல்லவா !..
Image may contain: 1 personsaints3

About the Author

Leave A Response