கலியும், காலனும் –I
கலியுகம் தொடங்கி, 5100 வருடங்கள் ஆகிவிட்டது.
கலியுகம், மொத்தம் 4,32,000 மனுஷ்ய வருஷங்கள். இன்றைய
நிலவரப்படி, இன்னும் சற்றேறக்குறைய,இன்னும் 4,27,000
வருஷங்கள் இருக்கின்றன.
க்ருத யுகத்தில், மனுஷ்ய ஆயுஸ் லக்ஷம் வருஷமென்றும் ,
திரேதாயுகத்தில், மனுஷ்ய ஆயுஸ் பத்தாயிரம் வருஷமென்றும்,
த்வாபர யுகத்தில், மனுஷ்ய ஆயுஸ் ஆயிரம் வருஷமென்றும்,
கலியுகத்தில்,மனுஷ்ய ஆயுஸ் நூறு வருஷமென்றும்,
வேதங்களும், புராணங்களும், சாஸ்த்ரங்களும் சொல்கின்றன.
ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவை, கலிபுருஷனின்
லக்ஷணத்தை விரிவாகச் சொல்கின்றன.
மஹாபாரத யுத்தம் முடிந்து, பாண்டவர்கள் ஸ்வர்க்கத்துக்குப்
போகும் சமயத்தில், கலியுகம் வந்துவிட்டது. அப்போது ”பரீக்ஷித்”
அரசன்.
த்வாபர யுகம் வரையில், அரக்கர்கள், ராக்ஷஸர்கள் என்று
இனம்காணும்படியாக இருந்தார்கள். வேதவிரோதமான கார்யங்களை
வெளிப்படையாகச் செய்தார்கள். வேதத்தில் சொல்லியுள்ளபடி,
மஹத்தான தபஸ்களைச் செய்து, மஹத்தான வலிமையை அடைந்து,
அதர்மச் செயல்களைக் கணக்கின்றிச் செய்தார்கள். அவர்கள் இன்னார் என்று
வெளிப்படையாகக் காண்பித்துக்கொண்டார்கள்.
பகவான் ,அவதாரம் எடுத்துஅவர்களை அழிக்க முடிந்தது.
ஆனால், இப்போது, இந்தக் கலியுகத்தில், அரக்கர்கள், ராக்ஷஸர்கள் என்று
அடையாளம் காண முடியாதவாறு, தர்ம சிந்தனை உள்ளவர்களின் கூடவே
கலந்து இருக்கிறார்கள். கலப்படம் என்பது, மனித குலத்தில் , கலியுடன்
கூடவே வந்துவிட்டது. ( இப்போது எல்லாவற்றிலும் கலப்படம் என்று
–உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், உடுக்கும் உடை வசிக்கும் இல்லம்,
பயிரிடும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழவகைகள், உயிர் காக்கும்
என்று சொல்லிக்கொள்ளும் மருந்துகள், சினிமாக்கள், ஊடகங்கள்,
வெப்சைட்டுகள், முகநூல்கள், இப்படி என்னென்ன உண்டோ எல்லாவற்றிலும் )
எந்தத் தேசமாக இருந்தாலும், எங்கு வசிப்பவர்களாக இருந்தாலும்,
ஏழையாக இருந்தாலும், பெரும் தனவானாக இருந்தாலும்,
கிராமத்திலிருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், க்ஷேத்ரமாக இருந்தாலும்,
இல்லாவிட்டாலும், ப்ராம்மணன் என்று சொல்லிக்கொண்டாலும்,
வியாபாரம் என்று சொல்லிக்கொண்டாலும் (அரசியலும்,வியாபாரமே)
எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும், அவர்களுடன் கூடவே
அரக்கர்களும் ராக்ஷஸர்களும் இருக்கிறார்கள்.
சித்ரங்களிலும், சினிமாக்களிலும்,டெலிவிஷன்களிலும், நாடகங்களிலும்,
நாம் சகஜமாகப் பார்க்கும் தோற்றத்தில் இவர்கள்இருப்பதில்லை.
நம்மைப் போலவே ஒருவராக இருக்கிறார்கள்.
இவர்களை, அரக்கர்கள், ராக்ஷஸர்கள் என்று எப்படி அறிந்து கொள்வது ?
கஷ்டம்தான்.
இன்னொன்று—
கலிபுருஷனுடன், காலனும் கைகோத்துக்கொண்டுவிட்டான். யமனைத்தான்
சொல்கிறேன். நூறு வயசு, ஆயுசு என்று சொல்லி முடிப்பதற்குள்,
அவன் கலியின் உதவியால் முந்திக்கொள்கிறான். ஒரு உயிர் பிறப்பதற்குள்,
மரணம் அடைகிறது. கருவைச் சிதைப்பது; பிறந்தவுடன் அழிப்பது;
ஊனமாகப் பிறப்பது; மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது; பத்து மாதங்களுக்குள்
பிறப்பது; இது ஒரு விதம்
வயது வித்தியாசமில்லாமல்— சிறு வயதோ, வயதான நிலையிலோ,
கொடூரமாகக் கொல்லப்படுவது; கை , கால்கள் வெட்டப்பட்டு,
துக்கசாகரத்தில் தொல்லைப்படுவது; பெண்களோ, அவர்களின் அவல நிலை
சொல்லி மாளாது —இவைகள் எல்லாம். நம்முடன் கலந்திருக்கும்
அரக்கர்களும் ராக்ஷஸர்களும் ,கணந்தோறும் நிறைவேற்றும் அதர்மங்கள்.
இது இன்னொரு விதம்.
மனிதர்களைப் போலவே ,பிறந்து, வளர்ந்து, நம்முடன் வாழ்கின்ற பல மனிதர்கள்—
அதர்மங்களைச் செய்கிறார்கள், அரக்கத்தனத்துடன்,ராக்ஷஸ குணத்துடன்—-
கலியும் ,காலனும் , துளியும் தொய்வு இல்லாமல், இவற்றைச் செய்விக்கிறார்கள்
இவை தினந்தோறும் நடைபெறுகின்றன—பல தேசங்களில்–பல வீடுகளில்—
ஆன்,பெண் வித்தியாசமின்றி—.
இவற்றை இப்போது பார்க்கலாம். மாலவன் துணையோடு !
1. காசு ,பணமா ? கருணையா?
*1. காசும் பணமும் இல்லா ஏழை
கருணையைத் தருவேன் என்றால்
கருணை யாருக்கு வேண்டும் ?
காசும், பணமும் வேண்டும்.
கேட்கின்ற குரல்கள் கோடி
வேட்கை இது பலகோடி
அதேசமயம்
*2.காசும் பணமும் உள்ளது
காசும் பணமும் கொடுத்தால்,
கருணை விலைக்கு வருமா ?
கருணை பண்டமாற்றுப் பொருளா?
கருணை உள்ளத்தில் உதிப்பது,
காசுபணம் ,ஆசையில் வருவது.
* 3. ஆசைக்கு வருவதுபோல் வந்து ,
நேசத்துக்கு வேட்டு வைக்கும்.
காலன் நெருங்குவதை உமக்குக்
கணந்தோறும் , நினைவுறுத்தும்.
கருணை, கண்ணனின் வார்த்தை.
தருணத்தில் ,தாள் பிடித்தால்,
தயங்காது கைகொடுப்பான்.
ஆயர்குலக் கள்வனவன் !