VEDOBAASANAA—-1

Posted on Oct 31 2016 - 6:30am by srikainkaryasriadmin

This is Vedhopaasana

Adiyen tried to give an bird’s eye view or a view from a window about the VEDAS Sriman Narayanan is worshipped as Vedapurushan
If there is no Vedam/ or veda adyyanam by brahmins, there is no life to every one. Vedaparayanam is disappearing slowly which will lead mankind to stone age.
Adiyen feels that vaishnavites are not giving due importance to Veda Adyyanam than that for Divya Prabandham. Both are important
When adiyen met asthikas from various walks of life and discussed about the failure to do vedapaatam, some of them told that they do not know sanskrit& that it is easy for them to go into Divyaprabandham
Brahmins should know their own saakha as per their gothram and vaishnavite should recite atleast panchasooktham
Chadur vedas are the breath of Sri Baghvan Narayanan. Adiyen thought that if a presentation is made about vedas, the next generation will be eager to do vedaparayanam in a big way
This is only a beginning and an attempt by a person not at all qualified to enter into this field. But it is a compulsion from adiyen’s upasana moorthi Sri Lakshmi Hayagreevan, to do this

Adiyen submits this VEDAOPAASANA to each one of you to read with interest

Vedopasana has been published in ‘Desika Seva’already.

ஸ்ரீ :
ஓம் ஸ்ரீ வேதபுருஷாய நம:
வேதோபாஸனா
வேதங்கள்
வேதம் – அநாதியானது
அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதை
ஒருவரும் இயற்றவில்லை. மஹரிஷிகளால் த்யானத்தில்
காணப்பட்டவை வேதம். இந்த மஹரிஷிகள்
”மந்த்ர த்ரஷ்டா ”எனப்பட்டனர். வேதம் ”அபௌருஷேயம்” எனப்படும்.
அதாவது
ஒருவராலும் இயற்றப்படாதது. உலகில் வேறு எந்த நூலோடு
கூடவும் ஒப்பிட இயலாதது. ஏனெனில் வேதம் ஆரம்பமும்,
முடிவும் இல்லாதது. இது எப்போது தோன்றியது என்பதை
வரையறுத்து சொல்லவும் இயலாது. பகவானின் மூச்சுக்காற்று
என்று சொல்லப்படுவதால், பகவானைப் போலவே வேதமும்
ஒருவராலும் தோற்றுவிக்கப்படாதது. வேதம் மிக கவனமாக பல
லட்சக்கணக்கான ஆண்டுகளாக முன்னோர்களால் எழுத்துப்
பிசகாமல், ஸ்வரம் பிசகாமல் மனனம் பண்ணி, வழிவழியாக,
இப்போதுள்ள தலைமுறை வரை கொண்டு வந்திருப்பது வேறு
எங்கும் காணாத, கேட்கப்படாத விந்தை. உலகத்தில் மிகமிகப்
பழமையானவை ‘வேதங்கள்”.
வேதத்தில் தர்மத்தைச் சொல்லும் பாகம் ”ஸம்Apதை”.
தத்வத்தைச் சொல்லும் பாகம் ”உபநிஷத்” அல்லது ”வேதாந்தம்”.
வேதத்தை ”ஸ்ருதி” என்றும் சொல்வர்.
ஆசார்யன் உபதேசிக்க சிஷ்யன் கேட்க, பிறகு, அந்த
சிஷ்யன் தன் சிஷ்யனுக்கு அல்லது சிஷ்யர்களுக்குச் சொல்ல
இப்படி வேதம், வழி வழியாகச் சொல்லப்பட்டது. தமிழில் இதை
”எழுதாக் கிளவி” என்று சொல்வர்.

க்ருஷ்ண த்வைபாயநர் – அச்வத்தாமா

ஒவ்வொரு த்வாபரயுகத்திலும் விஷ்ணுவின் அம்சமாக ஒரு
ரிஷி ”வ்யாஸர்” என்கிற பெயருடன் தோன்றி வேதத்தை
ஒழுங்குபடுத்துகிறார். இது 28வது சதுர்யுகம். இந்த யுகத்தில்.
”க்ருஷ்ண த்வைபாயனர்” என்கிற ரிஷி வ்யாஸராக அவதரித்து
வேதங்களை ஒழுங்குபடுத்தினார்.
அடுத்து வரும் த்வாபரயுகத்தில் த்ரோணாரின் புத்ரர்
”அச்வத்தாமா” (இவர் சிரஞ்சீவிகளில் ஒருவர்) வ்யாஸராகத்
தோன்றி, வேதங்களை ஒழுங்குபடுத்துவார் என்று
சாஸ்த்ரக்ஞர்கள் கூறியுள்ளனர். வேதம் என்பது ஸ்வர்க்கம், பசு,
புத்ரன் முதலிய இஷ்டத்தை அடைவதற்கும், நரகம் முதலிய
அநிஷ்டத்தை அடையாமல் இருப்பதற்கும் உபாயத்தை, லோக
ரீதியில் இல்லாததான ஒரு விஷயத்தைச் சொல்கிறது;.
யாகம்,ஹோமம், தானம், த்யானம் – இவை தர்மங்கள்.
இவைகளுக்கு ப்ரமாணமாக இருப்பது—_மூலமாக இருப்பது
”வேதம்”. இதை ”வேதோமீ கில தர்ம மூலம்” என்று சொல்வர்.
இப்படி வேதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லிக்
கொண்டே போகலாம். இது பாரத நாட்டின் பொக்கிஷம்,
கலியுகத்தில், மனிதர்கள் மந்த புத்தி உடையவர்களாக இருப்பர்
என்று வ்யாஸர் (க்ருஷ்ணத்வைபாயனர்) வேதத்தை நான்காக
பிரித்தார் என்று பொரியோர்கள் சொல்வார்கள். இப்படி
பிரிக்கப்பட்ட நான்கு வேதங்களின் விவரம் பற்பல
அட்டவணைகளாகவும், அட்டவணைகளில் உள்ளவற்றிற்கு
விஷயங்கள் சுருக்கமாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஏழு அட்டவணைகள்
அட்டவணை – I . 4 வேதங்கள் (மந்த்ரங்களின் எண்ணிக்கை
அவை சொல்லும் பொது விஷயங்கள்)
அட்டவணை – II வேதத்தின் பிரிவுகள் (அவை சொல்வது
எவை)
அட்டவணை – III வேதங்களின் சாகை விவரம்
அட்டவணை – IV வேதத்தில் உள்ள மந்த்ரபாகம்,
ப்ராஹ்மணபாகம்
அட்டவணை -V வேதத்தின் அங்கங்களின் விவரம் (ஸ்ம்ருதி,
இதிஹாஸம், புராணம் முதலியன)
அட்டவணை – VI வேதத்தின் உப அங்கங்கள் (சாங்க்யம்
யோகம் முதலியன)
அட்டவணை – VII வேதம் – பிரதிசாக்கியம் –4–
வேதங்களை அத்யயனம் செய்ய ”ஸ்வரம்” முக்கியம். இதை
ஐந்து விதமாக அத்யயனம்/ பாராயணம் செய்வார்கள்.

பாராயண முறை விவரம்
(1) வேத மந்த்ரங்களை சந்தி சேர்த்து பாராயணம் செய்தல்
– இது ”மூலஸம்ஹிதை” எனப்படும்.
(2) வேத மந்த்ரங்களைப் பதம் பதமாக பிரித்து அத்யயனம்
செய்தல் – இது ”பதஸம்ஹிதை” எனப்படும்
(3) ஒரு பதத்தை முன்னும், பின்னும் சொல்லுதல் (உ.ம்:
அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம்
யஜ்ஞஸ்ய, யஜ்ஞஸ்ய தேவம், தேவம் ரித்விஜம் —
இப்படி ) இது ”க்ரமஸம்ஹிதை” எனப்படும்.
(4) பதங்களைச் சேர்த்து சேர்த்து மறுபடியும் பிரித்துச்
சொல்லுதல் (உ.ம்: .அக்னிம் ஈளே, ஈளே அக்னிம்,
அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் ஈளே,
ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் யஞ்ஞயஸ்ய,
யஞ்ஞயஸ்ய ப்ரோஹிதம் இப்படி) – இது
”ஜடஸம்ஹிதை” எனப்படும்.
(5) கடினமாக அத்யயனம் செய்தல் (உ.ம்: அக்னிம் ஈளே,
ஈளே அக்னிம், அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம்
அக்னிம் ஈளே, அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ஈளே
ப்ரோஹிதம், ஈளே, ஈளே ப்ரோஹிதம், யஞ்ஞஸ்ய
ப்ரோஹிதம் -இப்படி) இது ”கனம்” எனப்படும்
குறிப்பு – மஹத்துக்கு காரணமான ப்ரக்ருதியில் அவ்யக்தம், அக்ஷரம், தமஸ்
என்றுமூன்று பிரிவுகள் உள்ளன. இருபத்து நான்கு தத்துவங்கள் என்று
சொல்லப்பட்டாலும். ஸத்வித்யையில் கண்ணால் காணக்கூடிய
பூதங்களைச் சொல்லும் ப்ரகாரத்தால் தேஜஸ்ஸில் தொடங்கப்பட்டது.
தைத்திரீயத்தில் பாஞ்சபௌதீக தேஹத்தைச்சொல்லும் ப்ரகாரத்தால்
ஆகாசத்திலே தொடங்கப்பட்டது. மிகவும் விரிவாக ஸூபாலோபநிஷத்தில்
சொல்லப்பட்டுள்ளது. மீதி உபநிஷத்துக்கள் சுருக்கமாகச் சொல்கின்றன.

அட்டவணை – I

வேதங்கள்
|
|—————————————————————-
| | | |
ரிக் யஜுர் ஸாம அதர்வணம்
|
————————————————-
| |-
க்ருஷ்ண யஜுர் சுக்ல யஜுர்
(தைத்திரீயம் ) (வாஜஸநேயம் )

”வித்” என்றால் அறிதல்,தெரிந்து கொள்ளுதல். க்ஞானத்தை
அறிதல் என்றும் பொருள். வேதத்திற்கு ”ஸ்ருதி” என்றும் பெயர்
உண்டு.
1. இவை செய்யுள் நடையில் பெரும்பாலும் உள்ளன. சில
உரைநடையிலும் உள்ளன
2. உச்சஸ்தாயி, கீழ்ஸ்தாயி என்ற ஸ்வர வித்யாஸங்கள் உண்டு.
இவற்றை ஆசார்யன் மூலமாக அத்யயனம் செய்ய
வேண்டும். (சொல்லிக் கொள்ள வேண்டும்).
3. சில சமயங்களில் வேத பாராயணம் செய்தல் கூடாது
என்றும் சாஸ்த்ரம் விதிக்கிறது (அநத்யயன காலம்).

அட்டவணை – II

ஒவ்வொரு வேதத்திலும் பிரிவுகள் – 4
|
——————————————————————————————————–
| | | |
மந்த்ரம் ப்ராஹ்மணம் ஆரண்யகம் உபநிஷத்
(ஸம்ஹிதை) |
மந்த்ரம் ப்ராஹ்மணம் ஆரண்யகம் இது
இது ஞான காண்டம்
கர்மகாண்டம் என்றும எனப்படும்
சொல்வர்

உபநிஷத்
|
மொத்தம் 108 என்பர். கிடைப்பது 12. முக்கியமானது 10
|
———————————————————————————————-
| | | |
ரிக்வேதம் யஜுர் ஸாம அதர்வணம்
| | | |
ஐதரேயம் (1) 1. ஈச 1.சாந்தோக்ய 1.முண்டக
கௌஷீதகி(2) 2. ப்ருஹு 2. கேந 2.ப்ரச்நோப
தாரண்யக 3.மாண்டூக்ய
3.தைத்திரீய
4.கடோ
5. ச்வேதாச்வதர

இவற்றில் முக்கியமானவை
1. ஈசோபநிஷத் 6. மாண்டூக்ய உபநிஷத்
(ஈசாவஸ்ய உபநிஷத்)
2. கேநோபநிஷத் 7. தைத்திரீய உபநிஷத்
3. கடோபநிஷத் 8. ஐதரேய உபநிஷத்
4. ப்ரச்னோபநிஷத் 9. சாந்தோக்ய உபநிஷத்
5. முண்டக உபநிஷத் 10. ப்ருஹதாரண்யக உபநிஷத்
இவற்றின் சுருக்கம் ”ப்ருஹ்ம ஸூத்ரம் ” . வ்யாஸர் இயற்றியது.
545 ஸுத்ரங்கள்

குறிப்பு-1: ”சாந்தோக்ய உபநிஷத்” என்கிற தலைப்பில் இந்த உபநிஷத்தைப்
பற்றிச் சொல்லிவிட்டு, அதன் பிறகு 32 (26) வித்யைகளும் சுருக்கமாகஇந்த
வேதோபாஸனாவில் சொல்லப்பட்டுள்ளன.

குறிப்பு-2: மேற்சொன்ன, பத்து உபநிஷத்துக்களுடன்கூட, (11)
ச்வேதாச்வதர உபநிஷத் (12) அதர்வசிர உபநிஷத் (13) அதர்வசிகோ உபநிஷத்
(14) கௌஷீதகி உபநிஷத் (15) மந்த்ரிகோபநிஷத் (16) ஸூபாலோபநிஷத் (17)
அக்நி ரஹஸ்யம் (18) மஹோபநிஷத் – இவைகளும், சுருக்கமாகச்
சொல்லப்பட்டுள்ளன.

குறிப்பு- உபாஸந காலத்தில் உபாஸிக்க வேண்டிய குணங்கள்:
பார்க்க: 6 – மாண்டூக்யோபநிஷத் – ஆறு கண்டங்கள்.
சாண்டில்ய வித்யையில் மநோமயத்வாதிகள். தஹர வித்யையில்
அபஹதபாப்மத்வாதிகள். ஸத்வித்யையில் ஸூக்ஷ்மத்வாதிகள்.
பரவாஸூ தேவரூபத்தை உபாஸிக்கும் வேறு ஆறு குணங்களையும்
உபாஸிக்கவேண்டும் (மூன்று வ்யூஹங்களுக்கும் இரண்டிரண்டு
குணங்களாக உபாஸிக்கவேண்டும்). பரவாஸூ தேவனுடைய கார்யம்
முமுக்ஷுக்களுக்கு மோக்ஷமளிப்பது.

அட்டவணை – III

வேதம்
|
சாகைகள்
(வேதத்திற்கு உள்ள கிளைகள்)
|
—————————————————————————————————-
| | | | |
ருக்வேத க்ருஷ்ண சுக்ல ஸாமவேத அதர்வண
சாகை யஜூர் யஜூர் சாகை வேத
வேத வேத சாகை
சாகை சாகை

அட்டவணை – IV

வேதம்
|
————————————————————————————–
| |
மந்த்ர பாகம் ப்ராம்மண பாகம்
(மனப்பாடம் செய்ய (மந்த்ரங்களின விவரம்
வேண்டிய பாகம்) யாகங்களின் பெருமை)
| |
———————————————————————————————–
| | | |
ருக் யஜூர் ஸாம அதர்வண
வேதம் வேதம் வேதம் வேதம்
1. ருக் வேதத்தில் ஐதரேய ப்ராம்மணம், கௌஷீதக
ப்ராம்மணம் இரண்டு உள்ளன.
2. யஜூர் வேதத்தில் இரண்டு பிரிவு: க்ருஷ்ண யஜூர் வேதத்தில்
ஒரு ப்ராம்மணம், ஒரு ஆரண்யகம், ஒரு உபநிஷத் உள்ளது.
சுக்ல யஜூர்வேதத்தில் ஒரு ப்ராம்மணம் உள்ளது. ஸாம
வேதத்தில் ஏழு ப்ராம்மணம் உள்ளது
4. அதர்வண வேதத்தில் ஒரு ப்ராம்மணம் உள்ளது

அட்டவணை – V

a வேதாங்கங்கள்
|
—————————————————————————–
| | |
(1) ஸ்ம்ருதிகள் (2) இதிஹாஸங்கள் 3)புராணங்கள்

(b) வேதாங்கங்கள் – ஆறு என்றும் சொல்வர்
————————————————————————————
|

1.சிக்ஷை 2. வியாகரணம் 3. சந்தஸ் 4. நிருக்தம் 5.ஜ்யோதிஷம் 6.கல்பம்

அட்டவணை – VI

வேதம்
உப அங்கங்கள் (உபாங்கங்கள்)
(வேதத்திற்கு உப அங்கமாக ஆறு ரிஷிகள் அருளிய நு]ல்கள்
1. சாங்கியம் 2. யோகம் 3.மீமாம்ஸம் 5.ந்யாயம் 6வைசேஷிகம்
|
—————————
| |
பூர்வ உத்தர
மீமாம்ஸம ; மீமாம்ஸம்

குறிப்பு – பரரூபத்தில் ஈடுபட்டவை உபநிஷத்துக்கள். விபவத்தில்
ஈடுபட்டவை புராணங்கள். வ்யூஹத்திலும், அர்ச்சையிலும் —– பாஞ்சராத்ர
ஆகமங்கள் .அர்ச்சாவதாரத்தில் ஈடுபட்டவை, திவ்ய ப்ரபந்தங்கள்
அந்தர்யாமியில் ஈடுபட்டவை – வித்யைகள்.

அட்டவணை – VII

வேதம்
இதை நன்கு அறிய வேதவ்யாகரணம் பயிலல்
இதற்கு ”பிரதிசாக்கியம்” என்றும் பெயர்
இலக்கணம் இருப்பதால் வ்யாகரணம்

பிரதி சாக்கியங்கள்
|
—————————————————————————————————
| | | |
ருக்வேத சுக்ல யஜூர் ஸாம வேதத்திற்கு அதர்வண
சாக்யம் வேதத்திற்கு புஷ்ப ஸுத்ரம் வேதத்திற்கு
பார்ஷத ப்ரதிசாக்யம் ப்ரதிசாக்யம் சுவடியாகவே
ஸுத்ரம் உள்ளது இருப்பதாக
எனப்படும் சொல்லப்
saints படுகிறது

இனி விரிவாகப் பார்ப்போம்

About the Author

Leave A Response