VEDOBAASANAA—2

Posted on Nov 1 2016 - 5:42am by srikainkaryasriadmin

2

அட்டவணை- 1ல் சொல்லப்பட்ட ருக்வேதம்

”ருக்” என்றால், எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ
அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ அதற்கு ”ருக்” ; என்று
பெயர். ”ருக்” எந்த இடத்தில் பதமாக பிரித்து வ்யவஸ்தை
செய்யப்பட்டுள்ளதோ அந்த மந்த்ரங்கள் ”ருக்”. இப்படி 10647
ருக்குகள் (10552 என்றும் சொல்கிறார்கள்).. இதற்கு 2024
வர்க்கங்கள், வர்க்கங்களுக்கு 1017 ஸுக்தங்கள் (ஒவ்வொரு
ஸுக்தத்திற்கு ஒவ்வொரு ரிஷி ), ஸுக்தங்களுக்கு 85
அனுவாகங்கள.; அனுவாகங்களுக்கு 64 அத்யாயங்கள்.
அத்யாயங்களுக்கு 10 மண்டலங்கள். மண்டலங்களுக்கு 8
அஷ்டகங்கள் உள்ளன. ருக்வேதம், அக்னியையும், இந்திரனையும்
அதிகமாகப் பேசுகிறது. மொத்தம் 3 அக்னிகள்.
1. புவி அக்னி – நாம் மூட்டுவது ( உடல் – சுடர்)
2. பர அக்னி – உயிரை இழப்பது (ஷாடராக்னி என்றும்,
வைச்வாநரன் என்றும் சொல்லலாம் — உடல் – க்ரணங்கள்).
3. நடு அக்னி – மழையை அடைவிப்பது (ஜாத வேதஸன்
ஸுர்யன் – உடல் மின்னல்)
4. ப்ரபஞ்சம்,எல்லாஉலகங்கள்,ஸுர்யன்,சந்த்ரன்,நக்ஷத்ரங்கள்,
அக்னி வாயு இவற்றின் வர்ணனைகள், சகல
தேவதைகளுக்கும் உள்ள ப்ரார்த்தனைகள் இதில் உள்ளன.
ருக் வேதத்தில் சில இடங்களில் விமானம், கப்பல், 3 சக்கர -9– சக்கர
வாகனம், எதிரிகளை; அழிக்கும் சாதனம் போன்றவைகள்
இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அச்வினி தேவர்கள் வானத்தில்
800 to 1500 mile வேகத்தில் செல்லக்கூடியவர்கள் (இறக்கை
உள்ள குதிரைகள்) என்றும் சொல்லப்படுகிறது.
படைப்பில் முதலில் தோன்றியது ”ஜலம்”. 30 ரிக்குகள்
இதைப் பற்றி சொல்கிறது.

அட்டவணை-1ல் சொல்லப்பட்ட யஜூர் வேதம்

இதில் 2086 மந்த்ரங்கள் இருப்பதாகச் சொல்வர். யாகங்கள்,
இவற்றைச்செய்யும் முறை முதலியவை உள்ளன. இவை இரண்டு
பிரிவாக உள்ளன.

க்ருஷ்ணயஜூர் வேதம்
( 2a )
101சாகைகள் (கிளைகள்)
இருந்ததாகச் சொல்வர்.
இப்போது 56 சாகைகளே
உள்ளன. அவையாவன.
உபநிஷத்கள் – 32
அவையாவன
1. அக்நிவேசம் 1. கடம்
2. ஆத்ரேயம் 2. தைத்திரீயம்
3. ஆபஸ்தம்பி 3. பிரமம்
4. ஆர்ச்சாயினம் 4. கைவல்யம்
5. ஆருணி 5. சுவேதசுவதாரம்
6. ஆலம்பினம் 6. கருப்பம்
7. ஆஹவரகம் 8. நாராயணம்
8. உலபம ; 9. அம்ருதநாதம்
9. ஓளகேயம் 10. காலாக்னி ருத்ரம்
10. ஐகேயம் 11. கஷூரிகம்
11. ஒளபமன்னியவம் 12. ஸர்வசாரம்
12. கடம் 13. சுகரகசியம்
13. கபிஷ்டலகடம் 14. தேஜோபிந்து
14. காண்டிகீயம் 15. தியானபிந்து
15. காமலாயினம் 16. பிரமவித்தை
16. காலாபம் 17. யோகதத்வம்
17. காலேதை 18. தக்ஷிணாமூர்த்தி
18. சரகம் 19. ஸ்கந்தம்
19. சாகலேயம் 20. சாரீரிகம்
20. சாராணீயம் 21. யோகசிக்ஷை
21. தாண்டினம் 22. ஏகாக்ஷரம்
22. துந்துபம் 23. அக்க்ஷி
23. தும்புரு 24. அவதூதம்
24. தைத்தீரீயம் 25. கடருத்ரம்
25. பாதண்டநீயம் 26. ருத்ரஇதயம்
26. பாரத்வாஜி 27. யோககுண்டலினி
27. பாலஸ்கினம் 28. பஞ்சபிரமம்
28. பிராச்யகடம் 29. பிராணஅக்னிஹோத்ரம்
29. மானவம் 30. கவிசம்தரணம்
30. மைத்திரயணீயம் 31. வராகம்
31. வாதூ]லம் 32. ஸரஸ்வதி ரகசியம்
32. வர்தந்தவீயம் (7 என்பது இல்லை)
33. வாராயணீயம்
34. வாராஹம்
35. வைகாநசம்
36. சாட்யாயநீ
37. சியாமாயனம்
38. சுவேதாசுவதாரம்
39. ஹாரித்திரவியம்
40. ஹாரிரதம்
41. ஹரண்யகேசி
மீதி சாகைகள் விவரம் தெரியவில்லை.

2(b) சுக்ல யஜூர் வேதம் (இவர்கள் வடக்கே அதிகம்)

15 சாகைகளும், 17 உபநிஷத்துக்களும் உள்ளதாகச் சொல்வர்.
அவையாவன.
15 சாகைகள் 17– உபநிஷத்துகள்

1. வாஜசனேயம் 1. ஜாபாலம்
2. காண்வம் 2. ஹம்ஸம்
3. ஜாபாலம் 3. பரமஹம்ஸம்
4. பௌதேயம் 4. ஸுபாலம்
5. மாத்தியான்தினம் 5. மாந்த்ரீகம்
6. காபோலம் 6. நிராலம்பம்
7. வைனதேயம் ** 7. திரிசிகிப்ரமாணம்
8. வைனதேயம்** 8. மண்டலப்ரமாணம்
9. பாராசரம் 9. அத்வைதய தாரகம்
10. பரமாவடிகம் 10. பைஸ்கனம்
11. ஆபடிகம் 11. பிக்ஷு
12. பௌண்டிரவத்ஸம் 12. துரியாதீதம்
13.பைஜவாபம் 13. அத்யாத்மம்
14. கௌந்தேயம் 14. யாஜ்ஞ வல்க்யம்
15. வைதேயம் 15. சாட்யாயனி
16. தாரஸாரம்
17. முக்திகம்
** 7;, 8 வெவ்வேறு

யஜூர் வேதம் தொடர்பான மற்ற நு]ல்கள்
1. தைத்திரீய ப்ராம்மணம் – தைத்திரீய மந்திரங்களின் யாக
விளக்கம்
2. சதபத ப்ராம்மணம் – இது ஸுக்ல யஜூர் வேத பாஷ்யம்
3. தைத்திரீய ஆரண்யகம் – வேத மந்திரங்களிலிருந்து
தொகுக்கப்பட்டது
4. ப்ரஹதாரண்யகம் – ஸுக்ல யஜூர் வேதத்திலிருந்து
தொகுக்கப்பட்டது.

ஸம்ஹிதை என்றால் மந்திரங்களின் கூட்டம் என்று சொல்வர்.

தித்திரி மஹரிஷி பரம்பரையால் க்ருஷ்ண யஜூர் வேத
மந்திரங்களுக்கு தைத்திரீய ஸம்ஹிதை எனப் பெயர் வந்தது.

யஜூர் வேதம் – 7 காண்டம் – இந்த ஏழு காண்டமும்,
காண்டம்,ப்ரபாடகம், ப்ரச்னம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

2(b) ஸுக்ல யஜூர் வேதம் –

இது வாஜஸனேய ஸம்ஹிதை
என்றும் சொல்ல்ப்படும். இது வட நாட்டில்பிரபலம். யாஜ்ஞ
வல்க்யர் அருளியது. இவர் வைசம்பாயனரிடமிருந்து பிரிந்தவர்.
இதில் 40 அத்யாயம் உள்ளது. 40வது அத்யாயம் ஈசோபனிஷத்
யஜூர் வேதத்தில் உள்ளது. ப்ரஹதாரண்யக உபநிஷத். இது
யஜூர் வேத சாரம்.

அஸதோ மா ஸத்கமய,
தம ஸோமா ஷ்யோதிர் கமய,
ம்ருத்யோமா அமிர்தம கமய,
இதன் அர்த்தம்:
(அஸத்திலிருந்து என்னை ஸத்திற்கு அழைத்துச் செல். இருளில்
இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல். மரணத்திலிருந்து
என்னை சாகாமைக்கு அழைத்துச் செல்).

இந்த உபநிஷத்தில் யாஜ்ஞ வல்க்யர் – மைத்ரேயி இடையே நடந்த
ஸம்வாதம் உள்ளது.
ஈசாவாஸ்ய உபநிஷத் (சுக்ல யஜூர் வேதம்)
”அக்னே நய ஸூபதாராயே ……………………….பிதேம”’
இந்த மந்த்ரத்தின் பொருள்:
(அக்னி தேவனே, ஒளிப் பொருளே எங்களின் எல்லாச்
செயல்களையும் நீ அறிபவன். நாங்கள் செய்த வினைப் பயனை
அனுபவிக்க எங்களை அனுபவப் பாதையில் இட்டுச் செல். தவறு
செய்யாமையை எங்களுக்கு உணர்த்து……..)

அட்டவணை 1ல் சொல்லப்பட்ட ஸாம வேதம்…(3)

ஸாம வேதம் என்பது பற்பல ரிஷிகள் பற்பல தெய்வங்களைப்
பற்றிச் சொன்ன ப்ரார்த்தனா கீதம் ஆகும். ரிஷிகள், இவைகளை
அசரீரி போல் கேட்டு நமக்கு அளித்தார்கள். இவை இரண்டு
பிரிவுகளாக உள்ளன. இதில் 1875 மந்த்ரங்கள் இருப்பதாகச்
சொல்வர் மாறுபட்ட ஸ்வரங்களைக்கொண்டது
1. பூர்வார்சிதம் – ஆறு பிhpவுகள்
2. உத்தரார்சிதம் – ஒன்பது பிhpவுகள்
மொத்தம் 30 அத்தியாயம்.

446 தசதிகள் (தசதி என்றால் 10 என்று பொருள்)
1000 பிரிவுகள் (சாகைகள); இருந்ததாயும் 17 சாகைகள் தான்
மிஞ்சியது என்றும் சொல்வார் உண்டு மற்றும் சில பெரியோர்கள்
தற்போது மூன்று தான் உள்ளது என்றும் சொல்வர். ரிக், பதஸ்,
பதஸ்தோமம் இப்படிப்பட்ட க்ரமத்தை உடையது ஸாமம்.
ஸாமம் 5 விதமாகவும், 7 விதமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு
”பங்க்தி” என்று பெயர். அதாவது பிரிவு. ஒவ்வொரு பங்க்திக்கும்
ஒரு அதிஷ்டான தேவதை.
ஐந்து பங்க்தி என்றால்:
1 ப்ரஸ்தாவம், 2 உத்கீதம், 3 ப்ரதிஹாரம், 4 உபத்ரவம், 5 நிதனம்
.
ஏழு பங்க்தி என்றால் 6 ப்ரணவம் 7 ஹூங்காரம் என்பதை
சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் சாந்தோக்ய உபநிஷத், கேநோபநிஷத் – இரண்டு
உபநிஷத்துக்கள் உள்ளன. ஐரோப்பிய சங்கீதக் குறிகளும்,
ஒலியும், ஸ்வரமும் சாமகானத்துடன் ஒத்துள்ளது. இதைப் பற்றி
டச்சுக்காரர்கள் நிறைய நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
ஜெர்மானியரும் இப்படியே ஆராய்ச்சி செய்து நிறைய நூல்கள்
வெளியிட்டிருக்கிறார்கள்.

17 பிரிவுகளில், ராணாயனீயம்,கௌதமம், என்ற இரண்டும்
அதிகமாகக் கானம் செய்யப்படுகிறது.

சாந்தோக்ய உபநிஷத் – இது சாந்தோக்ய ப்ராம்மணத்தைச்
சேர்ந்தது.
1. உத்தாலக ஆருணி — இவர் ஸத்வித்யையை ஸ்வேத
கேதுவுக்கு உபதேசித்தார்.
2. மஹிதாஸ ஐதரேயர் — இவர் புருஷ வித்யையை ஸ்வேத
கேதுவுக்கு உபதேசித்தார்.
3. ஸத்ய காம ஜாபாலர் — இவர் ஸம்வர்க்க வித்யையை
ஸ்வேத கேதுவுக்கு உபதேசித்தார்.
4. சாண்டில்யர் — இவர் சாண்டில்ய வித்யையை ஸ்வேத
கேதுவுக்கு உபதேசித்தார்.
5. ப்ரவாஹண ஜைவலி — இவர் பஞ்சாக்னி வித்யையை
ஸ்வேத கேதுவுக்கு உபதேசித்தார்.

இவைகள் எவற்றைக் குறிப்பது என்றால் கடுக்காயின்
குணங்களை அறிந்த வைத்யன், அளவும், முறையும் தெரிந்து
அதை நோயாளிக்கு கொடுக்க, நோயாளி வைத்யர் சொல்லியபடி
அதைச் சாப்பிட்டு பலன் பெறுகிறான். இவற்றின் அளவும்,
முறையும் அறியாது நோயாளி தன் இஷ்டத்துக்குச் சாப்பிட்டால்
முழுப் பயனை அடைய மாட்டான். கெடுதலையும் அடைவான்.
இது கடுக்காயின் குற்றமல்ல. மந்த்ரமும் கடுக்காயைப்
போன்றதே. இதை சொல்வதற்கு உத்தாலக ஆருணி போன்ற
ரிஷிகள் தேவை.

இதில் (ஸhமவேதத்தில்) தர்மத்தின் பிரிவுகள் சொல்லப்
படுகின்றன.
1) யக்ஞம் 2) அத்யயனம் 3) தானம் – இது முதல் பிரிவு

தவம் – இது இரண்டாவது பிரிவு (வானப்ரஸ்தம்)

ப்ரஹ்மச்சாரி தர்மம் – இது மூன்றாவது பிரிவு

வாக்கிற்கு நான்கு பகுதி இருப்பதாக சொல்லப்படுகிறது:
1) பரா 2) பச்யந்தி 3) மத்யமா 4) வைகரீ
இதில் வைகரீ மட்டும் நடைமுறையில் விளங்குகிறது. மற்ற
மூன்றும் உள்ளே மறைந்துள்ளது.

கேநோபநிஷத்:

யாரால் ? என்பது கேள்வி.
உலகங்களின் இயக்கம் – யாரால்?
புவிஈர்ப்பு விதி – இது கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாகவே இருந்து
கொண்டுஇருக்கிறது. ஸுர்யனைச் சுற்றி உள்ள வட்டப் பாதையில்
பல கிரகங்கள் இயங்குகின்றன. எப்போது இயங்க ஆரம்பித்தது
என்பன போன்ற கேள்விகள், பதி;ல்கள் இதில் உள்ளன. இந்த
உபநிஷத்தில் 35 மந்த்ரங்கள், 4 பகுதிகள் உள்ளன.
இதற்கு ஆதிசங்கரர், ஸ்ரீமத்வர் இருவரும் ”பாஷ்யம்” எழுதியிருக்கிறார்கள்
(உபநிஷத் வரிசையில் 2வது உபநிஷத்தில் விவரங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன).

சாந்தோக்ய உபநிஷத் (ஸாம வேதம்)
ஸாம கானம் செய்பவன் என்று பொருள். பத்து அத்யாயங்கள் .
இதற்கு தைத்திரீய உபநிஷத்தைப் போல சிறப்பு உண்டு.
அக்ஷரவித்யை, ஆகாச வித்யை, மது வித்யை, சாண்டில்ய வித்யை ,
ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை, பூமா வித்யை, தஹர வித்யை
என்று பல பிரிவுகள் உள்ளன.
(உபநிஷத் வரிசையில் 9வது உபநிஷத்தாக விவரங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன)
ஸhம வேதத்தில் கௌதமம், ராணையதீயம், ஷைமினீயம்
என்று மூன்று பிரிவு உண்டு.
கௌதம- தாண்ட்ய ப்ராஹ்மணம், ஸம்விதான ப்ராஹ்மணம்,
தேவதாத்யாய ப்ராஹ்மணம், ஸம்ஹிதோபநிஷத் ப்ராஹ்மணம்,
ஷட்விம்ஸ ப்ராஹ்மணம், ஆர்ஷேய ப்ராஹ்மணம், ஸாந்தோக்ய
ப்ராஹ்மணம், வம்ஸ ப்ராஹ்மணம் என்று எட்டு ப்ராஹ்மணங்கள்.

ஆரண்யகம் – சாந்தோக்ய ஆரண்யகம்
உபநிஷத் – சாந்தோக்ய உபநிஷத்

ராணயதீய ஸம்ஹிதை – இதற்கு தனியாக ப்ராஹ்மணம்,
ஆரண்யகம், உபநிஷத் இவை இல்லை.

ஜைமனீய ஸம்Apதை – இதில் ஜைமனீய ப்ராஹ்மணம், ஜைமனீய
ப்ராஹ்மண ஆரண்யகம், கேநோபநிஷத்து உள்ளன.

அட்டவணை- 1ல் சொல்லப்பட்ட அதர்வண வேதம் (4)

அறியாமை என்கிற இருளை ”அதர்” என்னும் அனல் எரிப்பதால்
இதற்கு அதர்வ வேதம் என்று பெயர். 5987 மந்த்ரங்கள்
இருப்பதாகச்சொல்வர்.
மந்த்ரங்களின் சேர்க்கை ஸம்ஹிதை. அதர்வ வேதத்திற்கு,
உபவேதங்களாக சர்ப்ப வேதம், பிசாச வேதம், அசுர வேதம், இதிஹாச
வேதம், புராண வேதம், ஆயுர் வேதம், யந்த்ர தந்த்ர வேதங்கள்
என்று பலவாறாக இருப்பதாகச் சொல்வர்.

பொது – ஸெளனக ஸம்ஹிதை, பிப்பலாத ஸம்ஹிதை என்று
இரண்டு ஸம்ஹிதைகள். கோபத ப்ராஹ்மணம், ப்ரச்னோபநிஷத்,
மாண்டூக்ய உபநிஷத், ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத் இவைகள்
இதைச் சேர்ந்தது.
இதற்குள்ள சாகைகள் (கிளைகள்) பிப்பலாத சாகை, ஸ்தௌத
சாகை, மௌத சாகை, சௌனகீய சாகை, ஜாஜல சாகை, ஜலத
சாகை, ப்ரம்ம வேத சாகை, வேத சாக சாகை, சாரண வைத்ய
சாகை, என்று பல சாகைகள் உள்ளன.
இதற்கு 31 உபநிஷத்துகள் இருப்பதாகச் சொல்வர். அவையாவன:

1. ப்ரச்னம் 17. ஸுர்யன்
2. முண்டகம் 18. ஆத்மா
3. மாண்டுக்யம் 19. பாசுபதம்
4. அதர்வ சிரம் 20. பரப்ரம்மம்
5. அதர்வ சிகம் 21. த்ரிபுரதாபனி
6. ப்ரஹத்சாபாலம் 22. தேவி
7. ந்ருஸிம்ஹ ஹத்தாபணி 23. பாவனம்
8. நாரத பரிவ்ராஜம் 24. பஸ்மசாபாலம்
9. சீதா, 25. கணபதி
10. சரமம் 26. மஹா வாக்யம்
11. மஹா நாராயணம் 27. கோபாலதாபணி
12. ராமரஹஸ்யம் 28. க்ருஷ்ணம்
13. ராமதாபனீ 29. ஹயக்ரீவம்
14. சாண்டில்யம் 30. தத்தாத்ரேயம்
15. ப்ரம்ம ஹம்ஸ பரிவ்ராஜகம் 31. காரூடம்
16. அன்னபூர்ணம்

அதர்வண மூலஸம்ஹிதை, 20 காண்டங்களாக பிரித்து பிறகு
ப்ரபாடகங்கள் , அனுவாகங்கள், ஸுத்ரங்கள், மந்த்ரங்கள் என்று
தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5847 மந்த்ரங்கள். அதர்வணம்
தெரிந்தவர்கள் காஷ்மீரில் சிலர், காசியில் சிலர் இப்போதும்
இருக்கிறார்கள்.

சுமார் 1575ஆம் ஆண்டில் ”பஹாவன்” என்கிற ப்ராமணன்
முஸ்லிமாக மதம் மாறி அதர்வண வேதத்தை பாரசீக மொழியில்
எழுதினான். இஸ்லாமியர்களுக்கு இது வரப்ரசாதமாக அமைந்து
விட்டது.

நோய்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் இந்த வேதத்தில் உள்ளது.
வானியல் ரகசியங்கள் இந்த வேதத்தில் உள்ளன. ஜலம், நிலம்,
காற்று, கனல் (நெருப்ப)[, ஆகாயம் இவற்றால் நோய்களை எப்படி
குணப்படுத்தலாம் என்பதும் இதில் உள்ளது. ”ஹிப்னாடிசம்”
இதில் சொல்லப்பட்டுள்ளது. செல்வத்தை அடையும் வழி
மூலிகைகளின் விவரம் இதில் உள்ளது.

அதர்வ வேதத்திலிருந்து ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆளில்லாத
(பைலட்டில்லாத) (V –I , V –II , V –III )போர் விமானங்களை
உருவாக்கி இங்கிலாந்தைத் தாக்கினார்கள். ப்ராண வாயு,
கரியமில வாயு விஷயம் இந்த வேதத்தில் உள்ளது. ரண சிகிச்சை,
அதற்கான கருவிகள் செய்யும் முறையை விளக்கும் விவரங்கள்
இந்த வேதத்தில் உள்ள ”சரகஸம்ஹிதை” யில் காணப்படுகிறது.
(தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இந்த நூல் உள்ளது).
கண்களுக்குத் தெரியாத கிருமிகள் உடலில் வலை போல்
உள்ளன என்று இந்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ருத்ரஜ்வரம் (வைரஸ் ஜ்வரம்) பற்றியும் குறிப்புகள் உள்ளன. முகம்
வழியாகச் செல்லும் கிருமிகள், உடலில் புகும் கிருமிகள், மூக்கு
வழியாகச் செல்பவை, தோல் வழியாகச் செல்பவை போன்ற
கிருமிகள். இக்கிருமிகளால் ஏற்படும் நோய்களைப் பற்றிய
விவரங்கள் உள்ளன. இயற்கை மருத்துவம் இதில்
சொல்லப்படுகிறது.
மூலிகைகளின் பெயர், அவற்றின் பலன் இதில்
உள்ளது. மணி, மந்த்ர, ஒளஷத சிகிச்சைகள், அதர்வணீ ஜபம்,
யாகம், தானம், ஸ்வஸ்திவாசனம், அவசேஸனம், அவமார்ஜனம்,
ஸ்நானம் 2 ஆஸ்கிரஸி, (மானசீக சக்தி), 3 தைவீ (வாயு, ஜலம்,
நிலம், ஸுர்ய சக்தி), 4 மானுஷி (மருத்துவர்கள்) இவை போன்ற
சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

சாந்தி கர்மாக்கள் அதாவது நோய்க்கு தக்கவாறு சாந்தி செய்து
கொள்வது, சித்தப் ப்ரமைக்கு கூட, இதில் விவரங்கள் உள்ளன.

ப்ரம்ம ஒளதனம்- அரிசியுடன் நல்ல ஜலம், நீர் கலக்காத பால்,
ஸோமம் போன்ற ஓஷதிகள் கலந்த அன்னம் இவைகளை
சாப்பிட்டால் ஏற்படும் க்ஞானம், நீண்ட ஆயுள், உடல் வலு,
நல்ல இல்லறம் போன்ற பலன்களுக்கான விவரம் உள்ளது.

விரோதிகளை அழிப்பதற்கான மந்திரம் உள்ளது. திருமணம், வீடு
எப்படி இருக்க வேண்டும், காலபைரவன், நாp, ஈக்கள், காகங்கள்,
ஆயுதங்கள், வில் அம்பு, மின்னல், இடி, வெள்ளம், நெருப்பு,
ஜ்வரம், க்ஷயம், இவற்றால் ஏற்படும் மரணம், அன்னத்தின்
பெருமை, ப்ராண வித்யை, அன்னமய, ப்ராணமய, மனோமய,
விக்ஞான மய, ஆனந்த மய கோசங்கள் பற்றிய விவரங்கள்
உள்ளன. ஏகாதச ருத்ரர்கள் பற்றிய விவரங்கள் உள்ளது.

அசுரர்கள்:

1. எல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் கடவுளை
ஏற்காதவன்
2. கர்வமுள்ள நாஸ்திகன்
3. தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவன்
4. சுயநலக்காரன்
5. துஷ்டன்
6. காமாந்தகன்
7. முன்கோபி
8. அக்கிரமக்காரன்
9. கொடூரன்
இவர்களெல்லாம் அசுரர்கள் என்று வேதம் சொல்கிறது.

ப்ரம்மச்சர்ய ஸு க்தம் இதில் உள்ளது. மனிதர்களின்
பாவங்களைப் போக்கி அவர்களை பாவமற்றவர்களாகச் செய்யும்
தேவதைகள் இதில் சொல்லப்பட்டுள்ளன.

பூமியில் வசிக்கும் தேவதைகள் சொல்லப்பட்டுள்ளன – விவரம்
வருமாறு:
1. அக்னி 26.ஹோத்ரா:
2. வனஸ்பதி (தாவர உருவில்
உள்ள தேவதை)
27. வீருதாம் பஞ்சராஷ்யானி
3. ஓஷதிகள் 28. ஸோமன்
4. வீருத: 29. தர்ப்ப:
5. அஹோராத்ர 30. யவ:
6. சபய்ய 31. பங்கள்
7. உஷா 32. ஸஹ :
8. பார்த்திவா:பசவ: 33. அராத
9. ஆரண்யா:ம்ருகா: 34. ரக்ஷாம்ஸி
10. பூமி 35. சர்ப்பம்
11. யக்ஷர்கள்
36. புண்ய ஜனங்கள் (புனிதமான
யாகங்கள் )
12. பர்வதங்கள் 37. மரணம் (11 விதமான மரணங்கள்)
13. கடல்கள் 38. ருதுக்கள்
14. நதிகள் 39. ருதுபதி
15. வேசன்தா: 40. ஆர்த்தவம்
16. பூமியில் நிலையாக
இருக்கும் சக்ரங்கள் 41. ஹாயன
17. வஸவ: 42. ஸமா:
18. அதர்வாண: 43. ஸம்வஸ்சர:
19. அங்கிரஸா : 44. மாஸா :
20. யாக தேவதைகள் 45. விஸ்n;வதேவா: தேவ பஸ்ய:
21. எஜமானன் 46. கிடைக்கவில்லை 47. பூதம்
22. ருசன் 48. பூதானாம், பூதபதி
23. சாமாளி 49.பேஷஜன்
24. பேஷஜானி
25. யஜூ

அந்தரிக்ஷ தேவதைகள் விவரம் வருமாறு:

1. கந்தர்வர்கள் 11. சகுந்தபனி
2. அப்ஸரா: 12. பவ
3. சந்த்ரமா: 13. ஸர்வ:
4. வாயு 14. ருத்ர:
5. பர்ஜன்யன்(மழை தேவதை) 15. பசுபதி:
6. அந்தரிக்ஷன் 16. இஷு
7. திக்குகள் 17. யமன்
8. ஸர்வாஆசா: 18. பிதர:
9. ஸோம: 19. அந்தரிக்ஷசத: தேவா:
10. பக்ஷிகள் 20. ருத்ரா:

வானில் வசிக்கும் தேவதைகள் –

1) இந்திரன் 13) த்வஷ்டா
2) ப்ருஹஸ்பதி (தேவ குரு ) 14) அஸ்விதௌ
3)ஸுர்யன் 15) ப்ருஹஸ்பதி( அசுர குரு)
4) ராஜா வருண: 16) அதர்மா
5) மித்ரன் 17) விஸ்வே ஆதித்ய:
6) விஷ்ணு 18) தெய்வீக பக்ஷிகள்
7) பகன் 19) த்யௌ
8) அம்சன் 20) நக்ஷத்திரங்கள்
9) விவஸ்வான் 21) சப்த ரிஷய:
10) சவிதாதேவன் 22) தேவி : ஆப:
11) தாதா 23)ப்ரஜாபதி
12) பூஷா 24) திவிஷதா:தேவா:

பூமியில் 49, அந்தரிக்ஷ த்தில் 20 குருஸ்தானத்தில் 24, ஆக 93

மேலும் இந்த வேதத்தில் யுத்தம், படைகள், தளபதி, வெடிக்கும்
குண்டு, கண்ணி வெடி, கையெறி குண்டு, வானில் சென்று
தாக்கும் யந்த்ரம், அம்பின் நுனியில் வைத்து எய்வது, நதிகள்,
குளங்களின் ஓரங்களில் மறைத்து வைக்கப்படும் குண்டுகள்,
மலையின் மறைவுப்பகுதிக்கும், கடலுக்குள்ளும் சென்று
தாக்குவது — இவை பற்றிய விவரங்கள் உள்ளன.

தூர்வாஸ்த்ரம்(கண்ணி புகைக் குண்டு) தமஸாஸ்த்ரம் (கண்கள் மங்கி
தடுமாறுதல்), சம்மேர்காநாஸ்த்ரம் (மயக்க மருந்தைப் போல)
இப்படி பலப்பல அஸ்த்ரங்களின் விவரங்கள் உள்ளன.

———————————————————————————————————————-

About the Author

Leave A Response