VEDOBAASANAA–3

Posted on Nov 3 2016 - 5:57am by srikainkaryasriadmin

3
அட்டவணை-II ல்சொல்லப்பட்ட மந்த்ரம்( ஸம்ஹிதை) (1)

வைதீக கர்மாக்களில் சொல்லப்படும் மந்த்ரங்கள் இதில்
உள்ளன. ப்ரார்த்தனா மந்த்ரங்கள், ஆசீர்வாத மந்த்ரங்கள் –
இவையும் இதில் அடக்கம். தர்ம ஸூக்ஷ் மங்களையும் இதில்
தெரிந்து கொள்ளலாம்.

ரிக் வேதத்தில் இரண்டு பிரி வு (1) சாகலப் பிரிவு (2)பாஸ்கலப்
பிரிவு.
சாகல பிரிவில், ருக் வேதத்திற்கு சாகல ஸம்ஹிதை. இதற்கு
ப்ராஹ்மணம், ஐதரேய ப்ராஹ்மணம். இதற்கு ஆரண்யகம்,
ஐதரேய ஆரண்யகம். இதற்கு உபநிஷத், ஐதரேய உபநிஷத்.
பாஸ்கலப் பிரி வு – இதற்கு பாஸ்கல ஸம்ஹிதை, கௌஷிதிகீ
ப்ராஹ்மணம், ஸாங்க்யாயன ஆரண்யகம், கௌஷிதீகீ உபநிஷத் –
இவை உள்ளன.
அட்டவணை-II ல் சொல்லப்பட்ட ப்ராஹ்மணம் (2)
மந்த்ரங்களுக்கும், க்ரியைகளுக்கும் உள்ள சம்பந்தம், யாக
விதிகள், யாகங்களைச் செய்யும் முறைகள், வேதாந்தக்
கொள்கைகள், உதாரணக் கதைகள், நுட்பமான உபதேசங்கள்,
ப்ராயஸ்சித்தம், ஸ்தோத்ரங்கள், பரம்பரை பற்றிய கதைகள் இதில்
உள்ளன. யாகத்தை நடத்த, யாகத்தை நடத்தும் யஜமானனால்
வரிக்கப்படும் ”ரித்விக்குகள்” பற்றிய விவரம் உள்ளது. அவர்கள் 4
கணங்கள். அவையாவன:
1. ஹோத்ரு கணம் – ருக்வேத அதிகாரிகள் (ருக்வேத
பாராயணம் செய்பவர்)
2. அத்வர்யு கணம் – யஜூர் வேதிகள் (யஜூர் வேத
பாராயணம் செய்பவர்)
3. உத்காத்ரு கணம் – ஸாம வேதிகள் (ஸாம வேத பாராயணம்
செய்பவர்)
4. ப்ரஹ்ம கணம் (யஜூர் வேதிகள்)
அட்டவணை-II ல் சொல்லப்பட்ட ஆரண்யகம் (3)
வானப்பிரஸ்தர்கள், சன்யாஸிகள் – காட்டில் படிக்க
வேண்டியவை இதில் உள்ளன. என்னென்ன யாகம் எப்படி எப்படி
செய்தால் என்ன பலன் என்பன போன்ற விவரங்களும் உள்ளன.

அட்டவணை-II ல் சொல்லப்பட்ட உபநிஷத் (4)

பகவானைப் பற்றிய தத்வங்களையும், பகவத் குண
த்யானத்தையும் விவாpக்கிறது (ஸத்வித்யை, தஹர வித்யை, பூம
வித்யை முதலியன). பகவானுடன் நெருங்கி இருப்பதால்,
அதாவது பகவானின் ஸ்வரூப, ரூப ,குணம்:- இவற்றைத்
தெரிவிப்பதால். ”உபநிஷத்” என்றும் சொல்லப்படுகிறது.
உபநிஷத்துகள் 108 என்று சொல்லப்பட்டிருந்தாலும், பத்து
உபநிஷத்துகள் முக்கியமாக சொல்லப்படுகின்றன. இது
”ஞானகாண்டம்” என்றும் சொல்லப்படுகிறது. பத்து
உபநிஷத்துக்களின் விவரத்தை ”உபநிஷத்துக்கள்” என்கிற
தனியான தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது – யஜூர் வேதம் – க்ருஷ்ண யஜூர் சுக்ல யஜூர்
என்று இரண்டு பிரிவு. க்ருஷ்ண யஜூர் வேதம் இரண்டு
கிளைகள்.
ஒரு கிளை: தைத்திரீய ஸம்Apதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம்,
உபநிஷத்.
இன்னொரு கிளை:-கட ஸம்ஹிதை கடோபநிஷத், கபிஸ்தல கட
ஸம்ஹிதை என்றும் ஒரு பிரிவு. மைத்ராயிணீ ஸம்ஹிதை,
மைத்ராயிணீ உபநிஷத், ச்வேதாச்வதரோபநிஷத்து, என்று
பிரிவுகள்.
சுக்ல யஜூர் – மாத்யந்தின பாடம், காண்வ பாடம் என்று
இரண்டு பிரிவுகள். பாடத்தின் பெயரிலேயே ஸம்ஹிதைகள்.
உதாரணம் – மாத்யந்தின ஸம்ஹிதை, காண்வ ஸம்ஹிதை.
ஈசாவாஸ்ய உபநிஷத்து. இரண்டு பாடங்களிலும் சதபத
ப்ராஹ்மணம் உண்டு. ப்ருஹதாரண்யக உபநிஷத் இதில் உள்ளது.

அட்டவணை-III ல் சொல்லப்பட்ட வேதங்களின் சாகைகள்
(1) ருக்வேத சாகை
21 சாகைகள் இருந்ததாகவும், தற்போது 6 சாகைகள் மட்டில்
இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவையாவன:
1. சாகலம்
2. புஷ்கலம்
3. ஆச்வலாயனம்
4. சாங்காயனம்
5. ஐதரேயம்
6. மாண்டூகாயனம்
அட்டவணை-III ல் உள்ள க்ருஷ்ண யஜூர்வேத சாகை

101 சாகைகள் இருந்ததென்றும், 86 மட்டும் இருந்ததென்றும்,
தற்போது 5 சாகைகளே உள்ளதென்றும் சொல்லப்படுகிறது.
அவை:
1. சரகசாகை
2. காடக ஸம்ஹிதை
3. கபிஷ்டல சாகை
4. மைத்ராயணி சாகை என்ற கலாப சாகை
5. தைத்திரிய சாகை

அட்டவணை-III ல் சொல்லப்பட்ட சுக்ல யஜூர் வேத சாகை
இதில் 17 சாகைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போது
இருப்பது 2 சாகைகள். அவை-
(1) வாஜசனேய ஸம்ஹிதை
சதபத ப்ராஹ்மணம்
ப்ரஹதாரண்ய உபநிஷத்
காத்யாயன ச்ரௌத ஸுத்ரம்
பாஸ்கர க்ருஹ்ய ஸுத்ரம் ;
(2) காண்வ சாகை

அட்டவணை-III ல் உள்ள ஸாம வேத சாகை
மூன்று சாகைகள் உள்ளன
(1) கௌதம சாகை
(2) ராணாயனீய சாகை
(3) ஜைமனீய சாகை

அட்டவணை-III ல் உள்ள அதர்வண வேத சாகை
இரண்டு சாகைகள் உள்ளன
(1) பிப்பலாத சாகை
(2) சௌனக சாகை
அட்டவணை-IV ல் உள்ள மந்த்ரபாகம்

ஒவ்வொரு வேதத்திலும், ஆசார்யன் சொல்ல, சிஷ்யன்
திரும்பச் சொல்லும் பாகம். மனனம் செய்யும் மந்த்ரங்கள் ருக்,
யஜூர் ,ஸாம, அதர்வண என்கிற இந்த நான்கு வேதங்களிலும்
உள்ளன.

அட்டவணை-IV ல் சொல்லப்பட்ட ப்ராஹ்மணபாகம்
ப்ராஹ்மண பாகத்தில், ஒவ்வொரு வேதத்திலும் உள்ள
மந்த்ரங்களின் விவரம் பேசப்படுகிறது. யாகங்கள் எதற்காகச்
செய்யப்படுகின்றன, அவைகளின் பெருமை எவை என்பதும்
சொல்லப்படுகிறது.

அட்டவணை-IV ல் ப்ராம்மணபாகத்தில் ருக் வேதத்தில் உள்ள (1)
ஐதரேய ப்ராஹ்மணம்
இதில் 40 அத்யாயங்கள் உள்ளன. இதில் வேத காலப்பழக்க
வழக்கங்கள், வேத கால நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.
சுநச்சேபன் கதை இதில் உள்ளது. ஆச்வலாயன கல்ப ஸுத்ரம்
இதில் உள்ளது. 12 அத்யாயங்கள் உள்ள ”ச்ரௌதம்”, 4
அத்யாயங்கள் உள்ள ”க்ருஹ்ய ஸுத்ரம் ” இதில் உள்ளது.

அட்டவணை-IV ல் ப்ராம்மண பாகத்தில் ருக்வேதத்தில்
(2)கௌஷீதகப்ராம்மணம் ஹவிர் யக்ஞம் – ஆறு அத்யாயங்கள் (1 முதல் 6 ),
யாகத்துக்கான (யக்ஞம்) ஸாதனங்கள் – மூன்று அத்யாயங்கள்
(7முதல் 10) யாகத்துக்கான (யக்ஞங்கள்)மந்த்ரங்கள்
20அத்யாயங்கள் (11 முதல் 30) (கௌஷீதக ஆரண்யகம் தனியாக
உள்ளது. இது, அஜாதசத்ரு என்பவர் பாலகீ என்பவருக்குச்
சொன்னவை.)
அட்டவணை-IV ல் ப்ராம்மண பாகத்தில் (3)க்ருஷ்ண யஜூர்
வேதம்
இதில் 1) தைத்திரீய ப்ராம்மணம் தைத்திரீய ஆரண்யகம்
தைத்திரீய உபநிஷத் உள்ளது. தைத்திரீய ப்ராம்மணம்,
பகவானின், எல்லாப் படைப்புகளையும் விவரிக்கிறது.

அட்டவணை-IV ல் ப்ராம்மண பாகத்தில் (4) சுக்ல யஜூர் வேதம்
இதில் ”சதபதப்ராம்மணம்” உள்ளது. இது இரண்டு
பாகங்களாக இருக்கிறது. யாகங்களைப் பற்றிய எல்லா விவரமும்
இதில் சொல்லப்படுகிறது.

அட்டவணை-IV ல் ப்ராம்மண பாகத்தில் (5)ஸாமவேதத்தில்
உள்ளவை
இதில் 7 ப்ராம்மணங்கள் இருக்கின்றன. அவையாவன:
(1) பஞ்சவிம்ச ப்ராம்மணம் (ஸோம யாகம் செய்யப்படும்
விதத்தை விவரிக்கிறது.
(2) சதவிம்சப்ராம்மணம் (க்ரஹங்களின் அமைப்பு, அவற்றின்
விவரங்கள், நக்ஷத்ரங்கள், அவைகளின் விளக்கங்கள்,
முக்கியமாக வான சாஸ்த்ரம், பூகம்பம் பற்றிய விவரம்
இதில் உள்ளன).
(3) சாமவிதான ப்ராம்மணம் (ஆகமங்களை விவரிக்கிறது.
இந்த ஆகமங்கள் நவரத்னம், பஞ்சரத்னம், ரத்னத்ரயம்
என்று வழங்கப்படுகிறது).
நவரத்னம்: 1) பாத்மம் 2)விஷ்ணு தந்த்ரம் 3)காபிஞ்சலம் 4)
ப்ரம்ஹ ஸம்ஹிதை 5)மார்க்கண்டேய ஸம்ஹிதை 6)பரம ஸம்ஹிதை
7)பாரத்வாஜம் 8) நாராயண தந்த்ரம் 9) பாரமேஸ்வரம்

பஞ்சரத்னம்: 1) பாத்மம் 2) ஸநத்குமாரம் 3)பரமஸம்ஹிதை
4)பத்மோத்பவம் 5)மாஹேந்த்ரம் (பாத்மத்தில் – சர்யாபாதத்தில்
இப்படி உள்ளன).

ரத்னத்ரயம்: 1) ஸாத்வதம் 2) பௌஷ்கரம் 3)ஜயாக்யம் (பகவானால்
நோpடையாக சொல்லப்பட்டதாக ஆசார்யர்கள் முடிவு)

(4) ஆர்ஷேயப்ராம்மணம் – ஸாமவேத அத்யாயிகளுக்கு
முக்கியமானது. அதாவது ஸாமவேதம்சொல்லிக்கொள்ளும்
சிஷ்யர்களுக்கு இது மிக முக்கியமானது
(5) வம்சப்ராம்மணம் – ஸாம வேத ஆசார்யர்களைப் பற்றி
இது விவாpக்கிறது.
(6) தேவதாத்ய ப்ராம்மணம் – ஸாமவேதத்திலேயே இது
முக்ய ப்ராம்மணம். ஸாமவேத கானம் பற்றிய எல்லா
விவரமும் இதில் உள்ளது.
(7) தல்வகாரப்ராம்மணம் – இது சாந்தோக்ய உபநிஷத்
என்றும் சொல்வர். சாந்தோக்ய உபநிஷத்தைப் பற்றி –
உபநிஷத் என்கிற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அட்டவணை-IV -ல் ப்ராம்மண பாகத்தில் (6) அதர்வண
வேதத்தில் கோபத ப்ராம்மணம் – மிக முக்யமான பகுதி. எல்லாப்
படைப்பு ரகஸ்யங்களும் இதில் உள்ளன.

அட்டவணை-V -ல் வேதத்தில் உள்ள (ய) வேதாங்கங்கள் என்கிற
தலைப்பில் (1) ஸ்ம்ருதிகள் – இது மனதால் நினைத்தல் என்றும்
சொல்லப்படும். உபப்ரும்ஹணங்கள் என்றும் சொல்வர். இதில்
மனுஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி என்று
இப்படி பல ஸ்ம்ருதிகள் உள்ளன. இவையாவும் ஒழுக்க
முறைகளையும் நீதிகளையும் விவரிக்கின்றன.
ஸ்ம்ருதிகள் 18.
வேத அர்த்தங்களை மனதால் ஸ்மரிப்பது.
ஸ்ம்ருதிகள் செய்தவர்கள் ப்ருஹ்மா, விஷ்ணு , மனு, யமன், அங்கிரஸ்,
வசிஷ்டர், தக்ஷர், ஸம்வர்த்தர், பராசரர், ஆபஸ்தம்பர்,
காத்யாயனர், கௌதமர், சங்கர், விஜிதர், அத்ரி , ஹாரிதர் ,
ப்ருஹஸ்பதி, சுக்ரன், வ்யாஸர், யாஜ்ஞவல்க்யர், போதாயனர்.

அட்டவணை-V வேதாங்கங்கள் –இதில் உள்ள )இதிஹாஸங்கள்
”இதிஹாஸம்” என்றால் நடந்ததை நடந்தபடியே சொல்வது.
(1) ஸ்ரீமத்ராமாயணம் (ஸ்ரீ வால்மீகி மஹரிஷியால்
அருளப்பட்டது. ஏழு காண்டங்கள் 24000
ச்லோகங்கள். பகவான் ஸ்ரீ மன் நாராயணன், ராமன்
என்கிற திருப்பெயரால் மனுஷ்ய அவதாரம் செய்து
மனுஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்பதை
வாழ்ந்து காட்டியது. (”சரணாகத சாஸ்த்ரம்”
ஸ்ரீமத்ராமாயணம் என்றும்சொல்வர்)
(2) ஸ்ரீ மஹா பாரதம் (ஸ்ரீ வ்யாஸ மஹரிஷி அருளியது) –
18 பர்வங்கள் ஒருலக்ஷம் ச்லோகங்கள். பாண்டவ,
துர்யோதனாதியர்கள்-ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம்,
தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடந்த போர்,
ஸ்ரீமத்பகவத்கீதை அவதரித்தது. ஸ்ரீ விஷ்ணு
ஸஹஸ்ரநாமம் அவதரித்தது – இவையும் மற்ற பிறவும்
உள்ளன.

அட்டவணை –V வேதாங்கங்கள் ——புராணங்கள்
புராணங்கள் மொத்தம் 18. மும்மூர்த்திகளைப் பற்றிச் சொல்கிறது
என்று சொல்வர். ஸாத்வீக, ராஜஸ, தாமஸ புராணங்கள் என்றும்
இவற்றைப் பிரித்துச் சொல்வார்கள்.
1. விஷ்ணு புராணம்
2. நாரதீய புராணம்
3. பாகவத புராணம்
4. கருட புராணம்
5. பத்ம புராணம்
6. வராஹ புராணம்
ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் பற்றிச்சொல்லும் புராணங்கள் இவை
என்றும், இவை ஸாத்வீக புராணங்கள் என்றும் சொல்வர்.

1. ப்ரஹ்மாண்ட புராணம்
2. ப்ரஹ்மவைவர்த்த புராணம்
3. மார்க்கண்டேய புராணம்
4. பவிஷ்ய புராணம்
5. வாமன புராணம்
6. ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாவைப் பற்றிச் சொல்லும் புராணங்கள் இவை என்றும்,
இவை ராஜஸ புராணங்கள் என்றும் சொல்வர்.

1. மத்ஸ்ய புராணம்
2. கூர்ம புராணம்
3. லிங்க புராணம்
4. சிவ புராணம்
5. ஸ்கந்த புராணம்
6. அக்னி புராணம்
பரமேஸ்வரனைப் (சிவன்) பற்றிச் சொல்லும் புராணங்கள் என்றும்
இவை தாமஸ புராணங்கள் என்றும் சொல்வர்.

அட்டவணை – V (b) வேதாங்கங்கள் – ஆறு

வேதத்திற்கு – சிக்ஷா என்பது மூக்கு என்றும், வ்யாகரணம்
என்பது வாய் என்றும், நிருக்தம் என்பது காது என்றும்,
ஷ்யோதிஷம் என்பது கண் என்றும், கல்பம் என்பது கைகள்
என்றும் சொல்வர். ஆறு அங்கங்களுடன் கூடிய நான்கு
வேதங்களுக்கு அனுகூலமான தர்க்கம் வேதத்தின் பொருளை
ஆராய மீமாம்ஸம், இதிஹாஸம் , புராணம் என்று 14 துறைகள்.
14 வித்யாஸ்தானங்கள் என்றும் சொல்வர். (ஆயுர்வேதம், அர்த்த
சாஸ்த்ரம், தனுர் வேதம், காந்தர்வ வேதம் என்று சேர்த்து 18
வித்யாஸ்தானங்கள் என்றும் சொல்வர்).

1) சிக்ஷை – பாணினி, நாரதர் முதலியவர்களால்
செய்யப்பட்டது என்று சொல்வர். 32 சிக்ஷைகள்
கிடைத்துள்ளதாகவும், இதில் சப்தங்களின் அக்ஷரங்கள்,
மூன்று ஸ்வரங்கள், இவற்றைச் சரியாக உச்சரிக்கும் விதம்
சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்வர்.

2) வ்யாகரணம் – இது இலக்கணம். அனுமானை நவ
வ்யாகரண பண்டிதன் என்று புகழ்வார்கள். வ்யாகரணம்.
ஸமஸ்க்ருத மொழிக்கும், வேதத்துக்கும் முக்யமானது

3) சந்தஸ் – வேத மந்திரங்களின் மாத்திரை. ; உச்சரிப்பு,
உச்சரிக்கும்போது உள்ள ஏற்ற, இறக்கம் சந்தஸ்
எனப்படுகிறது.

4) நிருக்தம் – வேதச்சொற்களைப் பிரிக்கும் விதம் இதில்
சொல்லப்படுகிறது. அரிய பதங்களின் அர்த்தங்களும்
நிகண்டுவும் இதில் உள்ளன. பாஸ்கர முனிவரால்
செய்யப்பட்டது தற்போது வழக்கத்தில் உள்ளது.

5) ஜ்யோதிஷம் – இதற்கு விளக்கம் தேவையில்லை.
வானஇயல் என கருதப்படுகிறது. வானசாஸ்த்ரமும் இதில்
சொல்லப்படுகிறது. ஜ்யோதிஷத்துக்கு சம்பந்தப்பட்டது
வானவியல். இதில் வைதீக கர்மாக்களை செய்ய வேண்டிய
காலம், பலன் விசாரிக்கப்படுகிறது. ஸு ர் யன், மற்றும்
க்ரஹங்களைப் பற்றிய கணித சாஸ்த்ரம் உள்ளது.

6) கல்பம் – வேதங்களில் சொல்லும் கர்மாக்களை ”கல்பம்”
சொல்கிறது. காத்யாயனர், ஆச்வலாயனர், போதாயனர் –
இவர்கள் அருளிய கல்பஸுத்ரங்கள் புகழ் பெற்றவை

அட்டவணை-VI – வேதத்திற்கு உபஅங்கமாக ஆறு ரிஷிகள்
அருளிய நூல்கள் விவரம் இதில் கொடுக்கப்படுகிறது.

1. சாங்கியம் – ஸ்ரீ கபில முனிவர் அருளியது. 25 தத்வங்கள்
இதில் சொல்லப்படுகின்றன. பஞ்ச அங்க யோகத்தால்,
ஞானத்தை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

2. யோகம் – ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இயற்றியது.இவர் இருபத்து
மூன்று நு]ற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச்சொல்வர்
யோகஸுத்ரம் என்கிற நுhலை இயற்றியிருக்கிறார்
ஸம்ஸ்க்ருதத்திற்கு மஹா பாஷ்யம் என்கிற இலக்கணமும்
இயற்றியிருக்கிறார் யோகத்தில்194 ஸுத்ரங்கள் உள்ளன.
மனஸ், உடல், ஆத்மா இவைகளை யோகம் செய்து
நெறிப்படுத்தி பகவானுக்கு அர்ப்பணிப்பதைப் பற்றிச்
சொல்கிறது. இது ”யோகஸித்தி” எனப்படுகிறது.
யோகஸுத்ரத்தில் 185 பழமொழிகள் வாக்யங்களாக உள்ளன.
இதில் நான்கு பிரிவுகள் உள்ளன அவை சமாதி, ஸாதனா,
விபூதி, கைவல்யம் (மோக்ஷம்) எனப்படும்

3. மீமாம்ஸம் (பூர்வ மீமாம்ஸம்) – ஜைமினி முனிவர் அருளியது.
12 காண்டங்கள் 60 அத்யாயங்கள் வேதத்தில் உள்ள தத்வ
விசாரணைகள் இதில் உள்ளன.

4. மீமாம்ஸம் (உத்தர மீமாம்ஸம்) – இது வேதாந்தம் எனப்படும்.
ஸ்ரீ வியாஸ முனிவர் அருளியது. இது வேதங்களின் ஸாரம்.
இது ”ப்ருஹ்ம ஸுத்ரம் ” என்றும் சொல்லப்படும். 4
அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்யாயத்துக்கும் 4
பாதங்கள். 5,58,191 ஸுத்ரங்கள். ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள்
இதற்கு பாஷ்யம் (உரை) எழுதியுள்ளார். இது ”சாரீரக
மீமாம்ஸை” எனப்படுகிறது. பகவத்ஸ்ரீ ராமனுஜரின் உரை
”ஸ்ரீ பாஷ்யம்” எனப்படுகிறது. ஸ்ரீ மத்வாச்சாரியாரும் உரை
எழுதியிருக்கிறார்.

5. ந்யாயம் – வேதத்தில் சொல்லப்பட்டவைகளைக் கடைந்து
அதிலிருந்து எடுக்கப்பட்டவை ”ந்யாயம்” , 537 ஸுத்ரங்கள்
உள்ளன. ”ந்யாயத்தை”அறிய 16 வழிகளைச் சொல்கிறது
(1) ப்ரமாணம் (2) ப்ரமேயம் (3) ஸம்சயம் (4) ப்ரயோஜனம்
(5) உதாரணம் (6) சித்தாந்தம் (7) அவயவம் (8) தர்க்கம்
(9) நிர்ணயம் (10) வாதம் (11) ஜல்பம் (12) விதண்டாவாதம்
(13) ஹேத்வபாஸம் (14) தந்த்ரம் (15) ஜோதி
16) நிக்ரஹஸ்தானம்

6. வைசேஷிகம் – ஸ்ரீ கணாத முனிவர் அருளியது. உலகில்
உள்ள எல்லாப் பொருள்களின் குண ஆராய்ச்சி
ஸம்பந்தமானது.
இவை ஆறு 1) த்ரவியம் – இது 9 பிரிவு –
அவையாவன – மண், ஜலம், தேஜஸ், வாயு, ஆகாயம், காலம்,
திசை, ஆத்மா, மனம்
2) குணம் – இது த்ரவியத்துடன்சேர்ந்தது. 24 பிhpவுகள் உள்ளன.
அவை ரூபம் , ரஸம், கந்தம்,பரிசம், சங்க்யை, பரிமாணம், பிரிதல்,
சம்யோகம், வியோகம்,முன்னிலை, பின்னிலை, புத்தி,ஸுகம், துக்கம்,
த்வேஷம்,முயற்சி குருத்வம், ஸ்நேஹம், சப்தம், வேகம், திரவத்வம்,
விருப்பு, வெறுப்பு, அடக்கம் – ஆக 24.
3) கர்மம் (வினை) 4)
சாமான்யம் (த்ரவ்யம், குணம் கர்மத்திலே சேரும். இது உயர்வு,
தாழ்வு என்று இரண்டு வகை)
5) விசேஷம் (கடைசியாகமீதமாகும் இரண்டு அணுக்களின் நிலை)
6) ஸமவாயம்(கர்த்தா, செயல், அணு , அண்டம் – இவற்றின் ஆராய்ச்சி) –

”ருக்” வேதத்திலிருந்து ஆயுர்வேதமும்
”யஜூர்” வேதத்திலிருந்து தனுர்வேதமும்
”ஸாம” வேதத்திலிருந்து கான வேதமும்
”அதர்வண” வேதத்திலிருந்து அர்த்த வேதமும்
(அர்த்தசாஸ்த்ரம் – ஆட்சிக்கலை) தோன்றியது என்று
சொல்வர்.

அட்டவணை-VII —- வேதம் – ப்ரதிசாக்கியம்

இவற்றில் பொதுவாக வேத உச்சாpப்பு, சந்தி பிரித்தல்,
சேர்த்தல், பதம் பிரிப்பது, சேர்ப்பது, உதாத்தம், அனுதாத்தம் –
இவற்றின் எண்ணிக்கை, ஸ்வர ஸம்பந்தமான ரஹஸ்யங்கள்,
ஸம்ஹிதைபாடம், பத ஸம்ஹிதை, நியமம்,
அதர்வ பிரதிசாகையில்க்ரமத்தின் ரகஸ்யம்
ஸாம வேதபிரதிசாகையில் ப்ரச்லேஷம்,
விச்லேஷம் வ்ருத்தம், அவ்ருத்தம், கதம், அகதம், உச்சம், நீசம்,
க்ருஷ்டம், அக்ருஷ்டம், ஸம்க்ருஷ்டம் போன்ற உச்சாரணங்களில்
பேதங்கள் விவரிக்கப்படுகின்றன.

அட்டவணை-II ல் சொல்லப்பட்ட உபநிஷத்துக்கள்

மோக்ஷ உபாயத்தை சொல்வது உபநிஷத்துக்கள்.
கரண களேபரங்கள் என்று சொல்லப்படும் இந்த்ரியங்கள் சரீரம்

இவை இல்லாதபோது ஜீவன் இவ்வுபாயங்களை அனுஷ்டிக்க
இயலாது. கரண களேபரங்களைக் கொடுத்து போக்ய
போகோபரணங்களையும் (அனுபவிக்கும் வஸ்துக்கள); ஏற்படுத்தி
பரஸ்பரம் சேர்க்கையை ஏற்படுத்தி அவைகளுக்கு அற்ப
பலன்களைக் கொடுத்து அவையாவும் அழிபவை, அநித்யம்
என்பதை உணர்த்தி அவற்றில் வெறுப்பை ஏற்படுத்தி
பரமபுருஷார்த்தமான பகவானின் திருவடிகளை அடைய
வழிகளை சொல்லுகிறான் பகவான். இந்த வழிகளைச்
சொல்வதுதான் உபநிஷத்துக்கள். வேதங்களில் ஒரு பகுதி
ப்ரமாணங்களுடன் சேர்த்து எழுதப்பட்டது (நாராயணண
உபநிஷத் – தைத்திரீய உபநிஷத்தின் 4வது வல்லி. இது க்ருஷ்ண
யஜூர் வேதத்தில் – தைத்திரீய ஆரண்யகத்தில் கடைசி பாகத்தில்
உள்ளது)
அனுவாகம் – பத்தும் அதற்குக் குறைவான பஞ்சாதிகளைக்
கொண்டது.
அனுவாகங்கள் சேர்ந்தது ப்ரச்னம் (அத்யாயம் என்றும் சொல்வர்)
பல ப்ரச்னங்கள் சேர்ந்தது காண்டம். (நாராயண உபநிஷத்தில் –
தூர்வா ஸுக்தம் (காத்யாயனி), ம்ருத்திகா ஸுக்தம், சத்ருஜய
மந்த்ரம், அகமர்ஷண ஸுக்தம், துர்கா ஸுக்தம், வ்யாஹ்ருதி
ஹோம மந்த்ரம் (ஓம்பூ:, ஓம்புவ:, ஓம்ஸுவ:) தஹர வித்யை,
நாராயண ஸுக்தம், பரப்ரம்ம உபாஸனம் (ஸுர்ய மண்டலத்தில்)
சிவோபாஸன மந்த்ரா:, பூதேவி மந்த்ரம், ஸந்த்யாவந்தன
மந்த்ரங்கள், காயத்ரீ ஆவாஹன மந்த்ரம், உபஸ்தான மந்த்ரம்,
மேதாஸுக்தம், காமோகார்ஷீத் மந்த்ரம், வைச்வ தேவ மந்த்ரம்,
ப்ராணாஹூதி மந்த்ரங்கள், பரதத்வ நிரூபணம், ஞானயஜ்ஞம்
மற்றும் பல உள்ளன.

ஆகாசாத் வாயு: வாயோரக்னி
இதன் பொருள்:-
மக்களுக்கு அன்னம் ப்ரதானம். இது ஒரு மருந்து. பசிக்கு
மருந்து. அன்னத்தை, மருந்தைச் சாப்பிடுவது போல் அளவோடு
சாப்பிட வேண்டும். உணவினால் ஆன புற உடம்பைப்போல
ப்ராண சக்தியால் ஆன உடம்பு உள்ளே உள்ளது. ”ப்ராணன் ” –
அதன் தலை: ”வ்யானன்” – வலது பக்கம், ”அபானன்” – இடது
பக்கம்: ”புலன்கள்.” ப்ராணனைத் தொடர்கின்றன.
இவை தவிரமனத்தினால் ஆன உடம்பும் உள்ளே இருக்கிறது.
”யஜூர் வேதம்” இதன் தலை.
”ருக் வேதம்” வலது பக்கம்.
”ஸாம வேதம்”இடது பக்கம்.
”அதர்வண வேதம்” கீழ்ப்பகுதியாக ஆதாரமாகஉள்ளது.
இவை தவிர புத்தியால் ஆன உடம்பு உள்ளது.
”ச்ரத்தை” இதன் தலை,
”ரிதம்” வலது பக்கம்,
”சத்யம்” இடதுபக்கம்,
”மஹத்” என்கிற சக்தி கீழ்ப்பகுதியில் ஆதாரமாகஉள்ளது.
இவை தவிர புத்தி , இது அங்குமிங்கும்ஓடிக்கொண்டிருக்கும்
. ”புத்தி” – தேரோட்டி.
”மனம்”-குதிரைகள்.
புத்தியின் ஆதாரம் ”மஹத்”
. இது ஐந்து உடம்பையும் ப்ரபஞ்சத்துடன் இணைப்பது.
மனத்தை விட புத்தி பெரியது.
ஆத்மாவுக்கு அடிமையாக ஐந்து விதமான ஆத்மாக்கள் உடம்பில்
இருக்கிறது. அவை:
(1) அன்னமய ஆத்மா (2) ப்ராணமய ஆத்மா (3) மனோமய ஆத்மா
(4) விக்ஞானமய ஆத்மா (5) ஆனந்தமய ஆத்மா.
இவைகட்கு ஆதாரம் ப்ரம்மம். கந்தர்வர்கள் நுட்பமான சரீரம்,
அருமையான இந்த்ரிய சக்தி படைத்து ஆடல், பாடல்களில்
வல்லவர்கள்.
முக்ய தேவர்கள் – அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்ரர்கள், த்வாதச
ஆதித்யர், இந்த்ரன், ப்ரஜாபதி, இந்த்ரன் (தேவராஜன்) ப்ருஹஸ்பதி
(தேவகுரு) ப்ரஜாபதி (விராட் புருஷன்), ப்ரஹ்மா (ஹிரண்ய
கர்ப்பன்) படைக்கும் கடவுள்.
இப்படி மிக முக்கியமானதாக உள்ள உபநிஷத்துக்களை, ஸ்ரீமத்
பகவத் கீதை, ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரம் இவைகளுடன் சேர்த்து
”ப்ரஸ்தான த்ரயம்” என்று சொல்வர்.

-இனி ஒவ்வொரு உபநிஷத்தாக மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்–

—————————————————————————————————————

About the Author

Leave A Response