24 என்கிற எண்ணின் விசேஷம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம :
நம் ஆசார்ய ஸார்வபௌமரான ஸ்வாமி தேசிகன் ,நம்மைப்போன்றவர்கள்
உய்யும் வழி அறிந்து உய்வதற்காக ,பற்பல ஸ்ரீ ஸூக்திகள் —ஸம்ஸ்க்ருதம்
ப்ராக்ருதம் ,தமிழ் பாஷைகளில் அருளியிருக்கிறார்.
இவை யாவும், தத்வ ,ஹித ,புருஷார்த்தங்களையும் ,ரஹஸ்ய க்ரந்தங்களையும்
விளக்கி, நம்மை உய்விக்க வைக்கின்றன.
இவை ,தமிழில் 24 ப்ரபந்தங்களாக இருக்கின்றன
1.அமிர்த ரஞ்சனி ——————————–39 பாசுரங்கள்
2.அதிகார ஸங்க்ரஹம்———————– 56 ”
3.அமிர்தாஸ்வாதினி————————— 37 ”
4.பரமபதஸோபானம்————————– 21 ”
5.பரமதபங்கம் ———————————–54 ”
6.அத்திகிரி மஹாத்ம்யம்——————– 29 ”
7.அடைக்கலப் பத்து —————————- 11 ”
8.அர்த்த பஞ்சகம் ——————————–11 ”
9.ஸ்ரீ வைணவ தினசரி ————————- 10 ”
10.திருச்சின்ன மாலை ————————- 11 ”
11. பன்னிருநாமம் ——————————-13 ”
12.திருமந்திரச் சுருக்கு ————————- 10 ”
13.த்வயச் சுருக்கு ——————————–12 ”
14.சரமச்லோகச் சுருக்கு ———————– 11 ”
15.கீதார்த்த ஸங்க்ரஹம் ——————— 21 ”
16.மும்மணிக்கோவை ———————— 10 ”
17.பத்துப்பா ———————————— -10 ”
18.கழற்பா —————————————10 ”
19. அம்மானைப்பா ——————————-10 ”
20.ஊசற்பா —————————————10 ”
21. ஏசற்பா —————————————10 ”
22.நவமணி மாலை ——————————10 ”
23.ஆஹார நியமம் ——————————-21 ”
24.ப்ரபந்த ஸாரம் ——————————–18 ”
ஆக ——————————————————–455 பாசுரங்கள்
( இவற்றில் வரிசை எண் 17 முதல் 21 முடிய 50
பாசுரங்கள் —லுப்தம் –கிடைக்கவில்லை )
ஆக , தேசிக ப்ரபந்தத்தில் 24 ப்ரபந்தங்கள் உள்ளன.
ஒரு ஆச்சர்யம் என்னவெனில், நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலும்
24 ப்ரபந்தங்கள் உள்ளன.
அவை——–
1.பொய்கை ஆழ்வார் ——-முதல் திருவந்தாதி — 100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் ——-இரண்டாம் திருவந்தாதி — 100 ”
3.பேயாழ்வார் ——–மூன்றாம் திருவந்தாதி — 100 ”
4.திருமழிசை ஆழ்வார் –நான்முகன் திருவந்தாதி —— 96 ”
5. ” ” —திருச்சந்த விருத்தம் -120 ”
6.நம்மாழ்வார் —————-திருவிருத்தம் —————–100 ”
7. ” திருவாசிரியம்—— 7 ”
8. ” பெரிய திருவந்தாதி ——— -87 ”
9. ” திருவாய்மொழி ————-1102 ”
10.மதுரகவி ஆழ்வார் —கண்ணிநுண் சிறுத்தாம்பு ——– 11 ”
11. குலசேகர ஆழ்வார் ———-பெருமாள் திருமொழி ——-105 ”
12.பெரியாழ்வார் ———பெரியாழ்வார் திருமொழி ———–473 ”
13.ஸ்ரீ ஆண்டாள் —————–திருப்பாவை ————— 30 ”
14. ” —-நாச்சியார் திருமொழி ————–143 ”
15.திருப்பாணாழ்வார் —-அமலனாதி பிரான் —————— 10 ”
16தொண்டரடிப்பொடி .ஆழ்வார்—-திருமாலை ——————45 ”
17. ” —–திருப்பள்ளி யெழுச்சி–10 ”
18. திருமங்கை ஆழ்வார் —-பெரிய திருமொழி —————1084 ”
19. ” ” திருக்குறுந்தாண்டகம் ——- 20 ”
20. ” ” திருநெடுந்தாண்டகம் ——— 30 ”
21. ” ” திருவெழுகூற்றிருக்கை —— 1 ”
22. ” ” சிறிய திருமடல் ————- 40 ”
23. ” ” பெரியதிருமடல் ————- 78 ”
24. திருவரங்கத்தமுதனார்– இராமாநுச நூற்றந்தாதி——– 108 ”
ஆக , 24 ப்ரபந்தகளுக்கு ————————–———-4000 பாசுரங்கள்
பன்னிரு ஆழ்வார்களும் ,திருவரங்கத்தமுதனாரும் , அருளிய
24 ப்ரபந்தங்களைப்போலவே ,ஸ்வாமி தேசிகனும் 24 ப்ரபந்தங்களை
அருளி இருக்கிறார். இந்த ஒற்றுமையை என்னவென்று பாராட்டுவது !
ஸ்வாமி தேசிகன், 32 ஸ்தோத்ரங்களையும், 32 ரஹஸ்ய க்ரந்தங்களையும்
8 காவ்யங்களையும், எவ்வளவுதான் ஞானம் இருந்தாலும் ,அவற்றை
அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக 24 சாஸ்த்ரங்களையும்
அருளியிருக்கிறார்.
மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்று, 24 ப்ரபந்தங்களில் ஏதேனும் ஒன்று,
ஒரு ஸூக்தி , ஒரு ச்லோகம், ஒரு பாசுரம் அல்லது ஒரு வாக்யம்
அநுஸந்திப்பவர் , வானேறிப் போய் , வைகுந்தத்தில் வாழ்வர் என்பது
திண்ணம் —-இது, பல மஹான்கள், ஆசார்யர்கள் , வாக்கு.
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் —–ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு .
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
Very informative. Is a good site for all Srivaishnavites. Dasan
.
thanks —pl continue to step in —this web-site whenever you find time