Irunthum, kidanthum, ninrum–3

Posted on Jan 1 2017 - 10:19am by srikainkaryasriadmin

இருந்தும், கிடந்தும், நின்றும் —-3

14. திருவள்ளூரில் கிடந்தான்

திருஎவ்வுள் என்கிற வீக்ஷாரண்ய க்ஷேத்ரத்திலே புஜங்க சயனத்தில் கிடந்தான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கிடந்தான்
ஸ்ரீ கனகவல்லி ஸமேதனாய்க் கிடந்தான்
.ஹ்ருத்தாபநாசினி புஷ்கரணிக் கரையில் கிடந்தான்
விஜயகோடி விமானத்தின் அடியில் கிடந்தான்
ப்ரஹ்மாவுக்கும், ருத்ரனுக்கும், சாலிஹோத்ர ரிஷிக்கும் ப்ரத்யக்ஷமாகிக் கிடந்தான்
திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்யக் கிடந்தான்
ஸேவார்த்திகள் ,வியாதிகள் தீரவேண்டுமென்று வேண்டிக்கொண்டு வந்தார்களே தவிர
திருவடி அடைய வேண்டும் என்று வரவில்லை

பகவான், மனம் தளர்ந்தானில்லை,
15.திருநின்றவூரில் ,பக்தவத்ஸலனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
16.திருவல்லிக்கேணியில் ,வேங்கடக்ருஷ்ணனாக —-பார்த்தஸாரதியாக கிழக்கு நோக்கி நின்றும்,
17.திருவிடவெந்தையில் ,லக்ஷ்மி வராஹனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
18.திருக்கடல்மல்லையில், ஸ்தலசயனப் பெருமாளாகக் கிழக்கு நோக்கிக் கிடந்தும்,
19.திருக்கடிகையில் யோகந்ருஸிம்ஹனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்தும் –இருந்தும்
20.திருநீர்மலையில், நீர்வண்ணனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
21.திருப்புட்குழியில் விஜயராகவனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்து இருந்தும்
22.திருப்பரமேச்வர விண்ணகரத்தில் பரமபதநாதனாக, மேற்கு நோக்கி அமர்ந்து இருந்தும்
23.திருப்பவளவண்ணத்தில், பவளவண்ணனாக, மேற்கு நோக்கி நின்றும்,
24.திருக்கள்வனூரில் ஆதிவராஹனாக மேற்கு நோக்கி நின்றும்,
25.திருக்காரகத்தில், கருணாகரனாக, தெற்கு நோக்கி நின்றும்,
26.திருப்பாடகத்தில் ,பாண்டவதூதனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்து–இருந்தும்
27.திருவேளுக்கையில், அழகிய சிங்கனாகக் கிழக்கு நோக்கி நின்றும்
28.அட்டபுயகரத்தில்ஆதிகேசவனாக, கஜேந்த்ரவரதனாக– எட்டுத் திருக்கரங்களுடன் மேற்கு நோக்கி நின்றும் .
29.திருக்கார்வானத்தில்,நவநீதசோரனாக மேற்கு நோக்கி நின்றும்.
30.திருவெஃகாவில் யதோத்தகாரியாக மேற்கு நோக்கிக் கிடந்தும்,
31. திருநிலாத்திங்கள் துண்டத்தில் சந்த்ரசூடனாக மேற்கு நோக்கி நின்றும்,
32திருஊரகத்தில் த்ரிவிக்ரமனாக மேற்கு நோக்கி நின்றும் .
33. திருநீரகத்தில், ஜெகதீசனாக,கிழக்கு நோக்கி நின்றும்,
34.திருத்தண்காவில் ,தீப ப்ரகாசனாக மேற்கு நோக்கி நின்றும்

இவ்வாறாக, தொண்டை நாட்டுத் திவ்ய தேசங்களில், பல ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்ய, ப்ரார்த்தித்தவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி , அருளி,
14 திவ்ய தேசங்களில் நின்றும், 2 திவ்ய தேசங்களில் கிடந்தும், 3 திவ்யதேசங்களில் அமர்ந்து இருந்தும், குழந்தைகளான நம்மை, ஆட்கொள்ள ,முயற்சித்தும்,
நாம், நம்முடைய சம்ஸார வேலைகளில் மாடுபோல் உழைத்து , அருகில் வந்த பகவானை–எம்பெருமானைக் கண்டு கொள்ளாமல் இருக்க, ,இதைப் பொறாத
பகவான்
35. திருக்கச்சியில் வரதனாக நின்றான்
பேரருளாளனாக நின்றான்
தேவாதிராஜனாக நின்றான்
அத்தியூரானாக நின்றான்
புள்ளூர்ந்து நின்றான்
மேற்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
பெருந்தேவித் தாயாருடன் நின்றான்
அநந்த ஸரஸ் அருகில் நின்றான்
புண்யகோடி விமானத்தின் அடியில் நின்றான்
சாலைக்கிணறு தீர்த்தத்தை விரும்பி நின்றான்
ப்ருஹ்மா ,ஆதிசேஷன், நாரதர், கஜேந்த்ரன் ,ப்ருகு —இவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்ய, அத்திகிரியில் நின்றான்
ஸ்ரீ உடையவருக்கு அருளிப் பேரருளாளனாக நின்றான்
திருக்கச்சி நம்பிகளுக்கு ஆறு வார்த்தைகள் அருளி நின்றான்
ஸ்வாமி தேசிகன் , துதித்துக் கொண்டாடப் , புன்முவலுடன் நின்றான்
சேதனர்களாகிய நாமோ , புள்ளூரும் வரதனை சேவித்துத் திரும்புகிறோம்.
முக்தி தரும் கச்சி தன்னில் , அவனின் திருவடி தொழுது ,முக்தி வேண்டினோமில்லை
தகப்பனுடன் சேர்ந்து வாழத் தகுதி பெற்றோமில்லை

ஆனால், தகப்பனாகிய எம்பெருமான், இன்னும் தெற்கே வந்தான் —
குழந்தைகளாகிய நம்மை வாரி அணைக்க—-

தொண்டை நாட்டிலிருந்து ,நடுநாடு வந்தான்

36.திருக்கோவிலூரில் உலகளந்து நின்றான்

வலது திருவடி ,வானத்தை அளக்க,நின்றான்
வலது திருக்கரத்தில் சங்கமும், இடது திருக்கரத்தில் ஆழியுமாக நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களின் சங்கத்தில் ,இடைகழிக்குச் சென்று நெருக்கி நின்றான்
திருவிக்ரமனாகி நின்றான்
கோபாலனாகி நின்றான்
தேஹளீசனாக நின்றான்
புஷ்பவல்லித் தாயாருடன் நின்றான்
பெண்ணை நதிக்கரையில் நின்றான்
ஸ்ரீகர விமானத்தின் அடியில் நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களுக்குப் ப்ரத்யக்ஷ்மாகி நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களும், திருமங்கை ஆழ்வாரும் பன்னிப்பன்னிப் பாசுரமிடப் பரசவசத்துடன் நின்றான்
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை ,இங்கிருந்து பெருகச் செய்யத் திருவுள்ளம் கொண்டு நின்றான்
உடையவர் ஸ்தாபித்த 74 ஸிம்ஹாசனாதிபதிகளில் ,திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ,வழிவழியாகக் கொண்டாட நின்றான்
ஸ்வாமி தேசிகன் ,சதகமிட்டுத் தோத்தரிக்க, சந்தோஷமாய் நின்றான்

ஜீவாத்மாக்களாகியவர், அர்ச்சாவதார மிடுக்கு கண்டு பிரமித்துத் , தூர விலகினர் .

எம்பெருமான், யோசித்து, மலையும் ,நதியும் உள்ள இடத்துக்கு வந்து நடுவில் நின்றான்

37.திருவயிந்திரபுரத்தில் நின்றான்

மூவராகி நின்றான்
மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்து நின்றான்
வினை தீர்த்த மன்னவனாக நின்றான்
ஏழிசைநாதப் பெருமாளாக நின்றான்
மேவுசோதியாக நின்றான்
தேவநாதனாக நின்றான்
அடியவர்க்கு மெய்யனாக நின்றான்
ஹேமாப்ஜவல்லித் தாயாருடன் நின்றான்
கருடநதிக்கரையில் நின்றான்
ஒளஷதகிரி அருகே நின்றான்
ஸுத்வ ஸத்வ விமானத்தின் அடியில் நின்றான்
இந்திரன், ருத்ரன், ஆதிசேஷன், கருடன்,சந்த்ரன் ,ப்ருகு ,மார்க்கண்டேயருக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
திருமங்கை ஆழ்வார் ,பாசுரமிடக் கேட்டுப் பூரித்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை,ராமானுஜ தயாபாத்ரமாக்கி நின்றான்
ஸ்வாமி தேசிகனை ஞான வைராக்ய பூஷணமாக்கி நின்றான்
ஸ்வாமி தேசிகனை, கிளியைப் பழக்குவிக்குமாப்போலே
பழக்குவித்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை,சதகம், பஞ்சாசத் , கோவை, மாலை என்று பலபடியாகத் தன்னைப் பாடச் செய்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை மஹாசார்யனாக உலகுக்குக் கொடுத்து நின்றான்

சேதனர்கள் , இவ்வெம்பெருமானின் ஸௌலப்யமும், பரத்வமும் உணர்ந்தாரில்லை.
ஸ்வாமி தேசிகன் வழி நின்று ”கடைத்தேற”த் துணிந்தாரில்லை

எம்பெருமானுக்குத் , திவ்ய தேசம் தொறும் நின்று நின்று திருவடிகள் நோவு எடுத்ததோ !

சோழநாட்டுக்கு வந்தான்

இந்தச் செய்தி இன்னும் வளரும்10371593_10200495644111134_8487485088549870741_n11011461_433446840195639_8456420589841525375_n

About the Author

Leave A Response