Irunthum kidanthum ninrum–4

Posted on Jan 3 2017 - 5:43am by srikainkaryasriadmin

இருந்தும், கிடந்தும், நின்றும் —-4

எம்பெருமானுக்குத் , திவ்ய தேசம் தொறும் நின்று நின்று திருவடிகள் நோவு எடுத்ததோ !

சோழநாட்டுக்கு வந்தான்

38. திருச்சித்ரகூடத்தில் , கிடந்தான்; இருந்தான் (சத்யாக்ரஹம் செய்வதைப்போல)
மூலவர், கோவிந்தராஜனாக ,போக சயனத்தில் கிடந்தான்
உத்ஸவர் தேவாதிதேவனாக, பார்த்தசாரதியாக அமர்ந்தான்–இருந்தான்
புண்டரீகவல்லித் தாயாருடன் இருந்தான்
ஸாத்விக விமானத்தின் அடியில் கிடந்தான், இருந்தான்
குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்யஇருந்தான்
சேதனர்களோ, திரும்பிப் பார்த்தாரில்லை

39.திருக்காழிச் சீராம விண்ணகரம்சீர்காழியில், இடது திருவடி உலகளக்கும் தாடாளனாக வந்து நின்றும் ,
40.திருத் தலைச் சங்க நாண்மதியமான தலைச்சங்காட்டில் வெண்சுடர்ப் பெருமாளாக நின்றும்,
41.சிறுபுலியூரில் க்ருபாஸமுத்ரனாகப் புஜங்கசயனமாகக்கிடந்தும்
42.திருவாலி, திருநகரியில், வயலாளி மணவாளனாக லட்சுமி ந்ருஸிம்ஹனாக இருந்தும்,
.திருநாங்கூர் 11 திருப்பதிகளில்,
முதலில்,
43..திருமணிமாடக்கோயிலில் நந்தாவிளக்கு என்றும், நாராயணன் திருநாமத்துடன் இருந்தும்
44.அரிமேயவிண்ணகரத்தில் குடமாடுகூத்தனாக இருந்தும்,
45.திருவண் புருஷோத்தமத்தில் புருஷோத்தமனாக நின்றும்,
46.திருச் செம்பொன்செய்கோயிலில் பேரருளாளன், செம்பொன்னரங்கர் என்று நின்றும்
47.திருவைகுந்த விண்ணகரத்தில் வைகுந்தநாதனாக இருந்தும்,
48.திருத்தெற்றியம்பலத்தில் ரங்கநாதன், லக்ஷ்மீரங்கர் என்கிற திருநாமங்களுடன் கிடந்தும்
49..திருமணிக்கூடத்தில், வரதராஜனாக நின்றும்
50.திருக்காவளம்பாடியில் கோபாலக்ருஷ்ணனாக நின்றும்,
51.திருத்தேவனார்தொகை என்கிற கீழச்சாலையில் தெய்வநாயகனாக நின்றும்
52.திருவெள்ளக்குளம் என்கிற அண்ணன் கோயிலில் ஸ்ரீநிவாசன் என்கிற அண்ணன் பெருமாளாக நின்றும்
53.திருப்பார்த்தன் பள்ளியில், பார்த்தசாரதியாக நின்றும்
.ஒவ்வொரு வருடமும்,தைமாத அமாவாசைக்கு மறுநாள்,
.திருநாங்கூர் 11 திவ்யதேசங்களில் முதன்மையான மணிமாடக்கோயிலில்,
.இந்தத் திவ்ய தேச எம்பெருமான்கள் , யாவரும் எழுந்தருளி திருமஞ்சனம் ஆகி,
.திருமங்கை மன்னனால் மங்களாஸாசனம் செய்யப்பெற்று, அன்று ராத்ரி, இந்த 11 அர்ச்சாமூர்த்தி
எம்பெருமான்களும் தனித் தனி கருட வாகனத்தில் ஆரோகணித்து சேவை சாதித்தாலும் ,
சேதனர்களாகிய நாம், பகவானின் பெருமையையும், பரிவையும் உணர்ந்தோமில்லை
திருமங்கை மன்னனும், குமுதவல்லி நாச்சியாரும் அன்று ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளினாலும்
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தோளுக்கு இனியானில் எழுந்தருளினாலும் , நமக்குச் சம்பந்தமில்லாற்போல
நழுவினோம்

பகவான் தம் குழந்தைகளான சேதனர்களைக் கைவிட்டு விடுவதாக இல்லை
54.திருஇந்தளூருக்கு வந்து வீரசயனமாகிப் பரிமளரங்கநாதனாகக் கிடந்தும் ,
55.திருவழுந்தூர் என்கிற தேரழுந்தூரில் எல்லை இல்லா அழகுடன் பசுங்கன்று அருகிருக்க,
ஆமருவியப்பனாக நின்றும்
56.திருநாகையில் (நாகப்பட்டிணம் ),நீலமேகனாகவும் ,ஸௌந்தரராஜனாகவும் நின்றும்
57.திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜனாக நின்றும்,
58.திருக்கண்ணங்குடியில் தாமோதரநாராயணனாக நின்றும்,
59.திருக்கண்ணமங்கையில் பக்தவத்ஸலனாக நின்றும்,
60.திருச்சேறையில் ஸாரநாதனாக நின்றும் ,
61.திருநறையூர் என்கிற நாச்சியார் கோயிலில் திருநறையூர் நம்பி ஸ்ரீநிவாஸனாக
விவாஹ திருக்கோலத்தில் நின்றும்
62.திருவிண்ணகர் என்கிற உப்பிலியப்பன் கோயிலில், ஸ்ரீநிவாஸனாக நின்றும்,
சேதனர்கள் , இப்படி அருகே வந்து கூப்பிடும் எம்பெருமானின் பரிவை அறியாமல் பிரிந்து ஓட
,
63.திருக்குடந்தை என்கிற கும்பகோணத்தில்,
காவிரியும் அரசலாறும் இருபுறமும் சாமரங்கள் வீசுவதைப்போல்
உபசரிக்க, சாரங்கபாணியாக , உத்தான சயனத்தில் கிடந்தான்.
ஆராவமுதனாக ,அழகுத திருமேனியுடன் நின்றான்
கோமளவல்லித் தாயாருடன் நின்றான்
பொற்றாமரைப் புஷ்கரணி அருகே நின்றான்
வேத, வைதீக விமானத்தின் அடியில் கிடந்தான்;நின்றான்
திருமழிசை ஆழ்வாருக்காக , கிடந்தவாறு எழுந்தான்
ஸ்ரீமந் நாதமுனிகள், திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களைத் தொகுக்கக் காரணமானான் ;
”ஆராவமுதாழ்வான் ” ஆனான்
பூமியில் எங்கும் காண இயலாத ”சித்திரைத்தேரில் ” பவனி வர நின்றான்
நம்மாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பெரியாழ்வாரும்,
திருமழிசை ஆழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் திருமங்கை ஆழ்வாரும்
51 பாசுரங்களால் பாட ,திருச் செவி சாத்தினான்
இவ்வளவு அருமையும் பெருமையும் வாய்ந்த ஆராவமுதனைக் கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணப்போமோ —
சேதனர்களுக்கு, மற்றொன்றினைக் காணும் சம்ஸார சம்பந்தம்தான் லபித்தது.

64. பகவான் திருநந்திபுர விண்ணகரம் என்கிற நாதன் கோயிலில்,ஜெகந்நாதனாக இருந்தும் ,
65. திருக்கூடலூரில் ஜகத்ரக்ஷகனாக நின்றும் ,
66. திருக்கவித்தலத்தில் (கபிஸ்தலம்) கஜேந்த்ர வரதனாகக் கிடந்தும் (புஜங்க சயனம் ),
67.திருவெள்ளியங்குடியில் கோலவில்லி ராமனாக புஜங்க சயனமாகக் கிடந்தும்
68.திரு ஆதனூரில் ஆண்டளக்கும் அய்யனாகக் கிடந்தும் ( இங்கும் புஜங்க சயனம் ),
69.திருப் புள்ளம்பூதங்குடியில், வல்வில் ராமனாகக் கிடந்தும் (இங்கும் புஜங்க சயனம் ),
70.திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாளாக நின்றும்
71.தஞ்சைமாமணிக்கோயிலில் நீலமேகப் பெருமானாக,மணிக்குன்றப் பெருமாளாக,ந்ருஸிம்ஹனாக இருந்தும்
72.திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக–புஜங்க சயனமாகக் கிடந்தும்,
73.திரு அன்பிலில் , வடிவழகிய நம்பியாகப் புஜங்க சயனமாகக் கிடந்தும்

சேதனர்கள் , சோழநாடு சோறுடைத்து என்றும் , ஆடல் பாடல் கலைகளில் அமிழ்ந்து போயும்,
அத்தனைக்கும் ஆதிநாதன் , அருகருகே கிடந்தும் இருந்தும் நின்றும்
அருள் புரியக் காத்திருப்பதை உணர்ந்தாரில்லை

பகவான் , அடுத்த திவ்ய தேசம் எது என்று யோசித்து,

திருமெய்யத்தில் வந்து நின்றான்

இந்தச் செய்தி இன்னும் வளரும்

12745734_1218305844886420_210590279213061706_n10922775_846664842064540_9000955182416358978_n

About the Author

Leave A Response