Irunthum,kidanthum, ninrum–5

Posted on Jan 5 2017 - 10:25am by srikainkaryasriadmin

இருந்தும், கிடந்தும், நின்றும் —-5
——————————————————–

பகவான் , அடுத்த திவ்ய தேசம் எது என்று யோசித்து,

திருமெய்யத்தில் வந்து நின்றான்

74.திருமெய்யம்

குடைவரைக்கோயிலில் கிடந்தான்
ஆதிசேஷன் ,அரக்கர்களை அண்டவிடாது இருக்கக் கிடந்தான்
ஸத்யமூர்த்தியாக நின்றான்
மெய்யப்பனாக நின்றான்
உய்யவந்த நாச்சியாருடன் நின்றான்
சத்ய தீர்த்தம் அருகில் நின்றான்
சத்யகிரி விமானம் அடியில் நின்றான்
திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்ய நின்றான்
நாம் உய்ய வந்தவன் என்று இந்த மெய்யப்பனை நினைத்தாரில்லை

75.திருமோகூரில்காளமேகப் பெருமாளாக நின்றும்
76.திருமாலிருஞ்சோலையில்,சொக்கத்தங்கமாக, கள்ளழகராக சுந்தர்ராஜப் பெருமானாக நின்றும்
77.திருக்கூடல் என்கிற மதுரையில், கூடலழகராக இருந்தும்,
78.திருத்தண்காலில் நின்ற நாராயணனாக நின்றும்,
79.ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயீயாகக் கிடந்தும் ,
80.திருக்கோட்டியூரில் உரகமெல்லணை கிடந்தும், ஸௌம்ய நாராயணனாக நின்றும்,
81.திருப்புல்லாணியில் தர்ப்பசயன ராமனாகக் கிடந்தும், ஆதி ஜெகந்நாதனாக நின்றும்,
82.திருப்புளிங்குடியில் காய்சினவேந்தனாகக் கிடந்தும்,
83.திருத்தொலைவில்லி மங்கலம் என்கிற இரட்டைத் திருப்பதியில்,ஸ்ரீநிவாஸனாக நின்றும்,
அரவிந்தலோசனனாக இருந்தும்
84.திருச்சிரீவரமங்கலம் என்கிற வானமாமலையில் தோதாத்ரிநாதனாக இருந்தும்,
85.திருக்கோளூரில் வைத்தமாநிதியாகக் கிடந்தும்,
86.திருக்குறுங்குடியில் ,திருப்பாற்கடல்நம்பி என்று கிடந்தும் இருந்த நம்பியாகவும் நின்ற நம்பியாகவும், மூன்று நிலையிலும் ஸேவை ஸாதித்தும் ,
87.திருக்குளந்தையில் பெருங்குளம் மாயக்கூத்தன் , ஸ்ரீநிவாசன் என்று நின்றும்,
88.திருவரகுணமங்கையில் விஜயாஸனப் பெருமாளாக இருந்தும்,
89.தென்திருப்பேரையில் மகரநெடுங்குழைக் காதனாக இருந்தும்,
90.திருவைகுண்டத்தில் வைகுண்டநாதனாக கள்ளபிரானாக நின்றும்,
91. திருக்குருகூரில் ஆதிநாதனாக, பொலிந்து நின்ற பிரானாக நின்றும் , ஸ்ரீநம்மாழ்வாரைக்
கோயில்கொள்ளச் செய்தும் , அரையர்களைச் சேவை செய்யச் செய்தும்,
இப்படி ”நவ திருப்பதிகள்” எனப்படும்,
ஸ்ரீவைகுண்டம்,
வரகுணமங்கை
திருப்புளிங்குடி
இரட்டைத் திருப்பதி என்கிற தொலைவில்லி மங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
திருப்பேரை
திருக்குருகூர்
என்கிற 9 திவ்ய தேசங்களில்,
கிடந்தும், இருந்தும், நின்றும் சேதனர்களை ஈர்க்க முயற்சித்தும்,
திருக்குறுங்குடியில் ,கிடந்தும், இருந்தும் நின்றும் கூப்பிட்டும்
இவரே உற்றம் , இவரே சுற்றம் , என்று சேதனர்கள் உணரவில்லை

உடனே, சேர நாடு என்கிற மலைநாட்டுக்குப் போனாலாவது,நம் குழந்தைகள் நம்மைத் தேடி வரமாட்டார்களா என்று எண்ணி
திருக்கடித்தானம் வந்தான்

92.திருக்கடித்தானத்தில்,அத்புத நாராயணனாக நின்றும்
93.திருக்காட்கரையில் காட்கரையப்பனாக நின்றும்,
94.திருச்செங்குன்றூரில் ,இமையவரப்பனாக நின்றும்
95.திருநாவாயில், நாவாய் முகுந்தன்–நாராயணனாக நின்றும்,
96.திருப்புலியூரில் ,மாயப்பிரானாக நின்றும்,
97.திருமூழிக்களத்தில் அப்பன் –ஸ்ரீஸூக்திநாதப்பெருமாளாக நின்றும் ,
98.திருவண்பரிசாரத்தில்,திருக்குறளப்பன்–திருவாழ்மார்பனாக இருந்தும் ,
99.திருவண்வண்டூரில் கமலநாதனாக நின்றும்,
100.திருவல்லவாழில் கோலப்பிரான் –ஸ்ரீவல்லபனாக நின்றும்
101.திருவித்துவக்கோட்டில் ,உய்யவந்தப்பெருமாளாக நின்றும்,
102.திருவாறன்விளையில் ,திருக்குறளப்பனாக நின்றும்
103.திருவாட்டாற்றில் ஆதிகேசவப் பெருமானாகக் கிடந்தும்
.நின்று, நின்று திருவடிகள் நோக,
ஒரு திவ்ய தேசத்தில் அமர்ந்து இருந்து, திருவாட்டாற்றில் கிடந்து,
ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் , தன்னைத் தேடி வரவில்லையே
என்கிற ஆதங்கத்தில்.
104.திருவனந்தபுரத்தில் கிடந்தான்
அனந்தபத்மநாபனாகக் கிடந்தான்
ஸ்ரீஹரிலக்ஷ்மியுடன் கிடந்தான்
மிகப் பெரிய திருமேனியுடன்,மூன்று வாசல் வழியே தரிசிக்குமாறு கிடந்தான்
ஹேமகூட விமானத்தின் அடியில் கிடந்தான்.
ஏகாதச ருத்ரர்களுக்கும் இந்த்ரனுக்கும், சந்த்ரனுக்கும் ப்ரத்யக்ஷமாகிக் கிடந்தான்
நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்யக் கிடந்தான்
சேதனர்கள் , மிகப் பெரிய திருமேனியைப் பக்தியுடன் சேவித்தாலும்,
பன்னிரு ஆழ்வார்களில் ,ஒருவர்தான் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்று
இவரை விடுத்துப் போந்தனர்

பகவான், இந்தக் குழந்தைகளை எப்படி மடக்குவது என்று யோசித்தான்.
காவிரி பாயும் ,கன்னலும், செந்நெல்லும் சூழும் , திவ்ய தேசமே தகும்
என்று திருவுள்ளம் பற்றி,
திருவெள்ளறை வந்தான்thiruvahindrapuram-sri-devanathan-perumal-temple-pagal-pathu-utsavam72

About the Author

Leave A Response