culture

Posted on Jan 22 2017 - 11:12am by srikainkaryasriadmin

குடிப்பிறப்பில் குற்றமில்லார் –எப்படி அறிவது —?

நல்ல வம்சத்தில், மூதாதையர்கள் அறவழி நின்று ,இல்வாழ்க்கை
நடத்திய குடியில்–வம்சத்தில் ,இவன் பிறந்தவன் என்பதை
எவ்வாறு உணர்வது ,என்பதை
சங்ககாலச் செய்யுளான –பதினெண் கீழ்க் கணக்குகளில் ஒன்றான
திரிகடுகம் சொல்கிறது—-

கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை
நள்ளிருங் கைவிடா நட்டொழுகல் —–தெள்ளி
வடுவான வாராற் காத்தல் இம்மூன்றும்
குடிமா சிலார்க்கே யுள .
பாடல் 77–நல்லாதனார்

1.கயவர்— கயமைத் தானம் உள்ளவர்-கீழ்மைக் குணம் உள்ளவர்-
கீழ்மக்கள்—அறநெறிக்குப் புறம்பாக நடக்கும் குணம் உள்ளவர்–
இவர்களை விட்டு ஒதுங்கி–நீங்கி–அவர்கள் அருகாமையிலேயே
செல்லாது,
2.நல்லவர்கள் இருக்கிறார்களே—அறவழியில் நடப்பவர்கள்–
அவர்களை –நட்ட நடு நிசியிலும் கைவிடாமல், அவர்களுடனே
நட்புப் பூண்டு , ஸ்நேகத்தை ஏற்படுத்தி, வளர்த்து,அவர்களுடன் வாழ்வதும்
3.தங்களின் செயல்களால், குற்றமே ஏற்படாதவாறு தடுத்து, அறவழியில்
வாழ்வதும்
இந்த மூன்று குணங்களும் எவரிடம் இருக்கிறதோ,
அவர்கள்,
குடிப் பிறப்பில் குற்றம் இல்லாதவர் என்று உணரலாம்


Sarvam Sree Hayagreeva preeyathaamnala--dhamayanthi-20105_507674526050167_3370489852133454122_n

About the Author

Leave A Response