தனியன்–தெரிவோம் –தெளிவோம்——1 இணைப்பு
————————————————————————————
மிக முக்கியமான தனியனான
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
என்பதை ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் அருளினார் என்று தெளிந்தோம்
இவருடைய வரலாற்றுக் குறிப்பு —-( மிகச் சுருக்கமாக)
இவர் ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர்.ஸ்ரீ வரதாசார்யர் என்கிற திருநாமம்.
நள வருஷம் ஆவணி மாத ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதாரம்.
விபவ வருஷத்தில் –ஸ்ரீபாஷ்ய க்ரந்தம், தனது திருத்தகப்பனாரும் –ஆசார்யருமான
ஸ்வாமி தேசிகனிடத்தில் காலக்ஷேபம் செய்து க்ரஹித்தார் .
காலக்ஷேபம் பூர்த்தி ஆனவுடன்,
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
என்கிற இந்தத் தனியனை விண்ணப்பம் செய்து தெண்டனிட்டார் .
அப்போது கூடவே இருந்த ஸ்ரீ ஸுதர்சன பட்டர் முதலானோர் ,
இந்தத் தனியனைக் கேட்டு,மிகவும் சந்தோஷித்து ”இனிமேல்
இந்தத் தனியனைச் சொன்னபிறகே ,க்ரந்த காலக்ஷேபம் செய்யவேண்டும்”
என்று நியமித்தார்கள்.
இதற்கு முன்புவரை, ஸ்வாமி தேசிகனின் ப்ரதம சிஷ்யரான வீரவல்லி பெருமாளய்யன்
விண்ணப்பித்த
நம : பதம் இதம் பூயாத் தஸ்மை வேங்கடஸுரயே |
யத்வாகம் க்ருதஸேகேந ஸஞ்ஜீவிதமிதம் ஜகத் ||
என்கிற தனியன் வழக்கத்தில் இருந்தது.
ஸ்வாமி தேசிகன் பரமபதம் எழுந்தருளிய பிறகு ஒருவருஷ காலம் ஸ்ரீரங்க வாஸம்
செய்தார்.அங்கு, ஸம்வத்ஸர கைங்கர்யங்களைப் பூர்த்தி செய்து,சஞ்சாரமாக
ஒவ்வொரு திவ்யதேசமாக ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வாமியுடன் எழுந்தருளி,
தஞ்சை மாமணிக்கோயில் அடைந்தார்கள்.
அங்கு எழுந்தருளியிருந்தபோது ,ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பரமபதிக்க,
அவருக்குப் பன்னிரண்டு தினங்களும் அபரகார்யங்கள் முடிந்தநிலையில்,
திருக்கார்த்திகை ஆகிவிட்டது.பரமபதித்த ஸ்ரீவைஷ்ணவரின் உறவினர் ,
ஸ்ரீநயினாசார்யரிடமும் ,ப்ரஹ்மதந்த்ர ஸ்வாமியிடமும் வந்து,
” திருக்கார்த்திகைக்குப் பிறகு,அநத்யயன காலம் என்பதால், நாலாயிர திவ்ய
ப்ரபந்தங்களை ஸேவிக்க இயலாதநிலையில், திருவத்யயன தினத்தில்
எதை ஸேவிப்பது –? ”என்று கேட்க, இவ்விருவரும் ஆலோசனை பண்ணி ,
”அநத்யயன காலத்தில் திவ்ய ப்ரபந்தங்களின் தனியன்களையும், தேசிகப்
ப்ரபந்தங்களையும்ஸேவித்து , திருவத்யயனத்தை நடத்துமாறு”நியமித்தனர் .
நீலமேகப் பெருமாள் திருவோலக்கத்தில், அத்யயன காலத்தில்,எம்பெருமானார்–
ஸ்ரீ உடையவர் நியமனப்படி நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை ஸேவித்து
முடித்ததும்,தேசிக ப்ரபந்தங்களையும் ஸேவித்துவரும்படி நியமிக்க,
இது தொடர்ந்து நடந்து வருகிறது.
ஸ்ரீ நயினாசார்யர் அருளிய நூல்கள்–
ஸ்வாமி தேசிகனின் ”அதிகரண ஸாராவளி” க்கு ”அதிகரண சிந்தாமணி ”
என்கிற வ்யாக்யானம் 2.தேசிக மங்களம் 3.ப்ரார்த்தநாஷ்டகம் 4.ப்ரபத்தி
5.விக்ரஹத்யாநம் 6.திநசர்யை 7பிள்ளையந்தாதி மற்றும் பல நூல்கள்.
இவருக்குப் பத்து சிஷ்யர்கள்.ஜய வருஷம் பங்குனி மாதம் க்ருஷ்ணபக்ஷ
ஸப்தமியில் பரமபத ப்ராப்தி.
தனியனின் அர்த்தம்–மிகச் சுருக்கமாக—
கருவிலே திருவுடையவரான ,திருவேங்கடவனின் மறுஅவதாரமான
வேதங்கள், சாஸ்த்ரங்கள் முதலியவற்றில் மிகவும் வல்லுநரான ,
வாதப்போர் செய்வதில் ஸிம்ஹமான ,வேதாந்த ஆசார்யரான ஸ்வாமி தேசிகன்
எங்களுடைய ஹ்ருதயத்தில் எப்போதும்,எப்போதும் வஸிப்பாராக —எங்கள்
ஹ்ருதயங்களை இருப்பிடமாகக் கொள்வாராக—
May the ever glorious Venkatanatha,the greatest among the elite teachers of Vedantha and the Lion
among the great poets and dialections reside for ever in our hearts
Sarvam Sree Hayagreeva preeyathaam