தனியன்–தெரிவோம்—-தெளிவோம்—-6
———————————————————————–
பூதம் ஸரஸ்ச மஹ்தாஹ்வய பட்டநாத
ஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||
இதுவரை—-
முதல் இரண்டு தனியன்கள் —-ஸ்வாமி தேசிகனைப் பற்றியும்,
3வது தனியன், –குருபரம்பரை சம்பந்தப்பட்ட தனியனாகவும்,
4வது தனியன், ஸ்ரீ ராமாநுஜருக்கான தனியனாகவும்,
5வது தனியன், ஸ்ரீ நம்மாழ்வாருக்கான தனியனாகவும்
அநுபவித்துத் தெளிந்தோம்.
5வது தனியனில் ,எல்லா ஆழ்வார்களையும் சரீரமாகக் கொண்ட
சரீரிபூதரான நம்மாழ்வாரைச் சரணம் அடைந்தபிறகு,
6வது தனியனாக இதில், சரீரபூதர்களாகச் சொல்லப்படுகிற,
பொய்கை ஆழ்வார் முதலானவர்களையும் சேர்த்து, மறுபடியும்
ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணம் அடைவதைச் சொல்கிறது—-
இது, திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிய தனியன்
இவருடைய சுருக்கமான குறிப்பு—-
இவர் ”குருகேசர் ” என்றும் அழைக்கப்பட்டார்.
கலி 4136ல் கி.பி. 1034ல் ஸ்ரீமுக வருஷ ஐப்பசி பூராட நக்ஷத்ரத்தில்,
பெரிய திருமலை நம்பிகளின் இரண்டாவது குமாரராக அவதாரம்.
”பிள்ளான்” என்று திருநாமம்.
எம்பெருமானாரிடம் சகல சாஸ்த்ர அர்த்தங்களையும் கற்றறிந்தார் .
எம்பெருமானார், இவரை ”ஞான புத்ரனாக” ஸ்வீகரித்தார்.
அவருடைய நியமனப்படி, திருவாய்மொழிக்கு ”திருவாறாயிரப்படி ”
வ்யாக்யானம் செய்தார். இது, ”பகவத் விஷயம்” என்று போற்றப்படுகிறது
(திருவாய்மொழியே பகவத் விஷயம் என்றும் சொல்வர் ).
இதுவும் காலக்ஷேப க்ரந்தம் . ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ ஆளவந்தார்
திருவுள்ளப்படி நம்மாழ்வார் திருநாமத்தை இவருக்கு இட்டு,
”திருக்குருகைப் பிரான் பிள்ளான்” என்று அழைத்தார்.
இவர் ஸ்ரீபாஷ்ய ,பகவத் விஷய ஸிம்ஹாஸனாதிபதி . இவர், பூதத்தாழ்வாரின்
இரண்டாம் திருவந்தாதிக்கு ”தனியன்” அருளியுள்ளார்.
இவர் ஸ்ரீ உடையவருடன் ,ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தளியபோது,
ஆழ்வார்களை ஒருசேரச் சேர்த்து, ஒரு தனியனாய் அருளினார்.
ஸ்ரீ உடையவர், இதைப்பாராட்டி, திவ்ய ப்ரபந்தங்களைத் தொடங்குவதற்கு முன்பு,
இதனை ஸேவிக்குமாறு நியமித்தார்.
தனியன்–சுருக்கமான அர்த்தம்—
——————————————————–
ஸ்ரீ நம்மாழ்வார் —சரீரி
அவரைச் சரணம் அடைந்தபிறகு ,அவருடைய சரீர பூதர்களாயும் ப்ரபந்த கர்த்தாக்களுமான
பொய்கை ஆழ்வார்
முதலான ஆழ்வார்களையும் பின்னும் நம்மாழ்வாரைச் சரணம் அடையும்
ப்ரகாரத்தை, இந்தத் தனியன் சொல்கிறது.
பூதம் ஸரஸ்ச—–
இந்தத் தனியன், ஒருசமயம், திருநகரியில், எம்பெருமானாருக்கு, ஒருக்கால்
ப்ரபந்த அனுஸந்தான சமயத்தில்,ஆழ்வார்களில் முதன்மையான நம்மாழ்வாரை மாத்ரம்
”மாதாபிதா யுவதயஸ்”என்கிற தனியனால் சரணம் என்று பற்றினாலும்,
மற்ற ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார்களையும் சரணம் அடையவேண்டும்
என்று அருள,
அந்தக் குறை தீர அப்போதே மற்ற ஆழ்வார், ஆண்டாள் எம்பெருமானார்களோடே
கூடின நம்மாழ்வாரைச் சரணம் அடையும்படி,இந்தத் தனியனை ப்ரஸாதித்து அருளியது—–
பூதம்—என்றது—-கடல்மல்லைக் காவலரான பூதத்தாழ்வார் ,
கச்சிதன்னில் பொய்கையில் வந்துதித்த பொய்கை ஆழ்வார்
மாமயிலைப் புனிதர் பேயாழ்வார்
வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் —பெரியாழ்வார் என்கிற இடத்தில்
ஸம்பத்ரூபையான ஆண்டாள்,
திருமழிசைப்பிரான்
குலசேகரன்,
உறந்தை வளம்பதி திருப்பாணாழ்வார்
திருமண்டங்குடி வாழ உதித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
தொல்வழியே நல்வழி எனக்காட்டிய மதுரகவிகளோடு( கூடிய நம்மாழ்வார் )
எழில் குறையல் வரும் கலியன்
ஸ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்—
பொய்கை ஆழ்வார் முதலானவர்களையுடைய நம்மாழ்வாரை
இவர்களை சரீர பூதர்களாகக் கொண்ட சரீரி பூதரான நம்மாழ்வாரை,
”நித்யமே ப்ரணதோஸ்மி ” என்று தொழுது, சரணம் அடைவதைச் சொல்கிறது—
Sarvam Sree Hayagreeva preeyathaam