poems

Posted on Aug 15 2017 - 10:47am by srikainkaryasriadmin
Categorized as
211

சிந்தனைகள்—-
————————–

இல்லாள் வெறுத்தொதுக்கி ,இடித்து உதறியவனை
ஈனனை மூடனை அறிவிலா முட்டாளை
பொல்லாங்குப் பலபேசி பூரித்துத் திளைத்தவனை
பாதகனை, நீசனை, பல்லிப்பிறவியனை
எல்லாமும் பெற்றிட்டோம் என முயங்கி இருப்பவனை
இச்சகனை , பகைவனை, அண்டிக் கெடுப்பானை
வல்லாரே இல்லையென்று வலிய நின்று உளறுபவனை
வல்வினையும் கொள்ளாதோ வலிய வந்தவனை !

எக்காளம் கொட்டிட்டு முக்காலம் முழங்கி
எடுத்தெறிந்து சொல்வானை ஈனனை
எக்காலம் இதுவென்று இறுமாந்து சொல்வானை
எப்போதும் பிதற்றுவன், மூளியை
அக்காலம் முதலிருந்தே ஆணவத்தின் இருப்பிடத்தை
ஆலகால விஷத்தானை அறிவிலியை
இக்காலம் ஓடிவந்து இறுகி அணைத்துவிட்டு
இறுதி இதுவென்று சொல்லாதோ அவனை !

முதுகில் குத்துபவர் முக்காடு போட்டிட்டு
முன்னே பழிச்சொல் சொல்வர் அவனை
உதடில் இனிப்பாயும் உள்ளம் விஷமாயும்
உறவும் உள்ளுறைசொல்லும் அவனை
அடிமையென நினைத்து அலைக்கழித்து அழித்து
அகத்திலே ஆழக் குத்திவிடும் அவனை
அடிமையென அச்சுதன் ஆரச் சொல்லிவிடில்
ஆனந்தம் அள்ளிவிடும் அவனை !

About the Author

Leave A Response