ஸ்ரீமத் வேங்கடநாத குரு ஸ்தோத்ரம் —————————-

Posted on Sep 19 2017 - 5:38am by srikainkaryasriadmin
|
Categorized as
89

அடியேன்
எண்ணரிய மஹான்கள், நிகழும் புரட்டாசி மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ச்ரவண நக்ஷத்ரத்தில் , ஸ்வாமி தேசிகனின் 750 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தை பார் புகழும் வண்ணம் கொண்டாடத் திருவுள்ளம் பற்றி, அவற்றைச் செயற்படுத்தும்
தருணத்தில், அடியேன், ஸ்ரீ காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி அருளிய ஸ்வாமி தேசிகனைப் பற்றிய ஸ்தோத்ரத்தை ,மிக எளிய ,சுருக்கமான வ்யாக்யானத்துடன் , உங்களுக்குச் சமர்ப்பிப்பதில் பேரானந்தம் அடைகிறேன்—–
உருப்பட்டூர் ஸௌந்தரராஜாசார்யன்
———————————————————————————————————————

Swami Desikan--in ''kannadi arai''-1898131_320395198163475_8824581668337319345_nPBASwami-01s—————————————

ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம்அண்ணங்கராசாரியர் இயற்றியது

ஸ்ரீ உ. வே. உருப்பட்டூர் ஸௌந்தரராஜாசார்யன் –வ்யாக்யானம் –சுருக்கமாக—

—————————————————————————————————————-

This is an wonderful sthothra ,given by eminent scholar of yester -years
who is none other than Sri Kanchi Prathivathi Bayangaram Annangaracharya Swamy
We may write countless pages about his kainkarya to Vaishnavism but it will be
endless.He took enormous pains to re establish the identity of the unshakable views
of two great Acharyas –i.e. Sri Pillai Lokacharya and Sri Vedanta Desika on whose
preachings the two sects of Sri Vaishnavism are based.
May the glorious Venkatanatha, the greatest of teachers of Vedanta, and the lion among poets and debaters, reside forever in my heart.
Dasan—Uruppattur Soundararajan

ஸ்ரீ காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி ,ஆங்கில ஆண்டு 1891ல் அதாவது விக்ருதி தமிழ் வருஷத்தில் பங்குனி மாதத்தில் ,விசாக நக்ஷத்ரத்தில் அவதரித்தார். ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயமான ஏராளமான க்ரந்தங்களை எழுதி

‘க்ரந்த மாலா ஆபீஸ் ” என்பதாக காஞ்சியில் நிறுவி,அதன்மூலமாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். பற்பல தலைப்புகளில் ,பற்பல திவ்ய தேசங்களில் எண்ணரிய உபன்யாஸங்கள் செய்திருக்கிறார். ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றி ”ஸ்ரீ சைல பாதுகா ஸஹஸ்ரம் ” எழுதி இருக்கிறார்.
1983ம் ஆண்டு மிதுன சுக்ல ஏகாதசியில் பரமபத ப்ராப்தி (JUNE 21st )

ப்ரதிவாதி பயங்கரம் ஸ்வாமி யின் திருமாளிகையில் ஸ்வாமி தேசிகன் அர்ச்சா ரூபியாக எழுந்தருளி , ஆராதிக்கப்பட்டார் என்றும் சொல்வர்.
இந்த மஹான் , ஸ்ரீ வேதாந்தாசார்யனின் தனியனான


ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரி |
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
என்கிற ச்லோகத்திற்கு அக்ஷரக்ரமத்தில் , ஸ்வாமி தேசிகனின்

அதியாச்சர்யப் பெருமைகளை விளக்கி 32 ச்லோகங்களில்
”ஸ்ரீமத் வேங்கடநாத குரு ஸ்தோத்ரம் ”
என்பதாக அருளி இருக்கிறார் . ஒவ்வொரு ச்லோகத்தின் முடிவிலும்
” சந்நிதத்தாம் ஹ்ருதி ” என்று சொல்லி இருப்பது மிக ஆச்சர்யகரமானது.

ஸ்ரீமத் வேங்கடநாத குரு ஸ்தோத்ரம்
——————————————————————
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய இதி பத்யாக்ஷர க்ரமாத் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்ய ஸ்தோத்ரம் வச்மி ஸதாம் முதே ||
வ்யாக்யானம் —-

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரி |
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
என்கிற தனியனில் இருக்கிற ஒவ்வொரு அக்ஷரத்தையும் ( எழுத்து )
எடுத்து, ஒவ்வொரு ச்லோகத்துக்கும்முதல் எழுத்தாக வைத்து ,
ஸ்வாமி தேசிகனின் பெருமைகளை ஒவ்வொரு ச்லோகத்திலும் சொல்லி, நல்லோர்களான கேட்பவர்கள்/ வாசிப்பவர்கள் –இவர்கள்
உள்ளமெல்லாம் கனிய/ கசிந்துருக ஸ்தோத்ரமாக இயற்றப்படுகிறது.

தனியன்
——————————
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
இது கலி சகாப்தம் 4431ல் சுக்ல வருஷம் சித்திரை மாதம் ,புனர்வஸு
நக்ஷத்ரத்தில் அருளப்பட்டது என்பர். .ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர்
வரதாசார்யர் என்கிற நயினாசார்யர் அருளியது.
இந்தத் தனியனின் அர்த்த விசேஷத்தைச் சிலாகித்த பெரியோர்கள் ,
இந்தத் தனியனை , ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீஸூக்திகளை
ஸேவிக்குமுன்பாக தனியனாக ஏற்றார்கள்.தவிரவும் ஸ்வாமி தேசிகன்
அருளிய ஸ்தோத்ரங்களை ,கோஷ்டியாகவோ , தனியாகவோ ஸேவிக்குமுன்பாக,
பக்தியுடன் சொல்வது என்பது பூர்வர்கள் காட்டிய வழியாகும். மேலும்,
எந்த ஸ்தோத்ரங்களைச் சொல்ல ஆரம்பித்தாலும், சுப கார்ய ஆரம்பத்திலும்
இந்தத் தனியனைச் சொல்வது ஆசார்யர்கள் காலந்தொட்டு நெடுநாளைய வழக்கம்.
பக்தியுடனும் ச்ரத்தையுடனும் அநுஸந்திக்கப்படும்
ஸ்வாமி தேசிகனின் தனியன்
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரி |
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
வைஷ்ணவ ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கு , —-இருகலையாருக்கும் —-
மிகவும் தெரிந்த தனியன்
இதை , அக்ஷரம் அக்ஷரமாக –அந்த க்ரமத்திலேயே எடுத்து, ஸ்வாமி தேசிகனின் அதியாச்சர்யமான பெருமைகளை , ஸ்தோத்ர ரூபமாக –32 ச்லோகங்களாக ,அருளி இருக்கிறார்.
இது, ஸ்வாமியின் பெருமைகளை விளக்கும் ”துதி நூல்” என்பதாக அவரே எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

1. ஸ்ரீமத்வேங்கடநாத தேசிகமணி சேஷாத்ரி பூஷா மணேர் கண்டாம்ச :
குசிகாத்ம ஜாந்வய ஸுதா ஸிந்தோஸ் ஸூதாதீ திதி : |
ஸ்ரீ ராமாநுஜ சூரிவர்ய கருணா ஸம்ப்ராப்த வித்யோத்கரோ
அனந்தார்யாஹ்வய ஸோம ஸுத் ஸுதமணிர்மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம் —-இவர் ,திருவேங்கடமுடையானின் திருமணியின் அம்சமாக அவதரித்தவர். விச்வாமித்ர வம்சத்தின் திலகமாக அமைந்தவர் . இவருடைய மாதுலர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் அனுக்ரஹம் பெற்று, அவரது அருளால் ,சகல கலைகளையும்
நன்கு கற்றவர். ஸ்ரீ அநந்த சோமயாஜியின் அருமைப் புதல்வர்—இப்படிப்பட்ட ஸ்ரீமத் வேங்கடநாத தேசிகர் , அடியேன் உள்ளத்திலே வாஸம் செய்வாராக

2. மாநாதீத மஹாகுணெளக ஜலதி :மாயிப கண்டீரவ :
மாதங்காசல மௌளிமண்டனமணே : மாந்யோ மஹாதேசிக : |
மக்னான் ஸம்ஸ்ருதி ஸாகரே மிதமதீன் மாத்ருக் ஜனான் ரக்ஷிதும்
மத்யார்கார முபேயிவான் குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

இவர், எல்லையில்லா மிகச் சிறந்த குணக்கடல் போன்றவர்; மதம் பிடித்த யானைகளைப் போன்று மாயாவாதம் செய்பவர்களுக்கு, சிங்கம் போன்றவர்; அத்தியூரான் என்றுபோற்றப்படும் ஸ்ரீ காஞ்சி பேரருளாளனின் க்ருபைக்குப் பாத்திரமானவர்;பிறவி என்கிற
பெருங்கடலுள் அழுந்தித் தத்தளிக்கும் நம்போன்றவர்களைக் காத்து ,அருள மனுஷ்ய வேஷம் பூண்டவர்; அப்படிப்பட்ட ஸ்வாமி தேசிகன் அடியேன் உள்ளத்திலே திகழவேணும்

3.வேதண்டாசல மண்டனஸ்ய வரதஸ்யாங்க்ரி ஸதா ஸம்ஸ்ரயன்
தஸ்யை வாத்புத மாபி ரூப்யமனிசம் சித்தேனுபூய ஸ்வயம் |
வைகுண்டேபி ந மே அபிலாஷ இதிய : ப்ரோசே மஹாதேசிக :
ஸோயம் பண்டித மண்டலி பரிப்ருடோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||
வ்யாக்யானம்

ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாளுடைய திருவடிகளையே தஞ்சமென்று இறுகப்பற்றி ,ஸ்ரீ வரதனின் அற்புத திவ்ய வடிவழகை ,இடையறாமல்–கொஞ்சம்கூட இடைவெளி இல்லாமல்— அனுபவித்து, வைகுண்ட வாஸத்திலும் எனக்கு விருப்பம் இல்லை என்று
அருளிச் செய்த , வித்வந்மணியான ஸ்வாமி தேசிகன் என் உள்ளத்தினுள்ளே உறைவாராக (ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்தில் 49வது ச்லோகத்தில் —
நிரந்தரம் நிர்விஸதஸ்த்வதீயம் அஸ்ப்ருஷ்ட சிந்தாபதமாபிரூப்யம் |
ஸத்யம் ஸபே வாரண ஸைலநாத வைகுண்ட வாஸேபி ந மேபிலாஷ : ||
கரிகிரியில் எழுந்தருளி உள்ள தேவப்பெருமாளே—மனத்தாலும் கற்பனை செய்ய இயலாதஉன் அதியாச்சர்ய ஸௌந்தர்ய வடிவழகை ,எப்போதும் மறவாமல் நித்த நித்தம் பருகிக் களிக்கும் எனக்கு , இந்தச் சுவையைத் தவிர ,வைகுண்ட லோகத்திலும்
அந்தச் சுவையைப் பெற்றாலும் வேண்டவே வேண்டாம்–ஸத்யம் )

4. கல்பந்தே கில யஸ்ய தேசிக மணே : ஸ்ரீ ஸூக்தி ரத்னோத்கரா :
ஸர்வேஷாமபி தேஹினாம் பவபயோத்விக்நாத்மநாம் முக்தயே |
ஸோயம் வேதசிரோ குருர்யதிபதே சித்தாந்த மத்ய அத்புதம்
பூயோபி : க்ருதிசஞ்சயைர் விசதயந் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||
வ்யாக்யானம்

பிறப்பு, இறப்பு, மூப்பு—இவை மனிதர்களுக்கு மூன்று வியாதிகள்.இவற்றுக்கு ஸம்ஸாரிகள் பயந்து நடுங்குகிறார்கள். இந்த ஸம்ஸாரிகளை ,பிணிகளிலிருந்து விடுவித்து அவர்களை வாழ்விக்க திவ்ய ஸூக்திகளை அருளிச் செய்தவரும்
எம்பெருமானார் தர்ஸனத்தைப் பலப்பல திவ்ய க்ரந்தங்களினால் நன்கு விளக்கியவருமான ஸ்வாமி தேசிகன் என் உள்ளத்தையே வாசஸ்தலமாகக் கொள்வாராக

5.டங்காத்யைர் பஹீபி :புராணகுருபி : ப்ராகேவ த்ருஷ்டம் தத :
பஸ்சாத் ஸ்ரீயுதநாத யாமுனையதிக்ஷ்மா ஸ்ருந் முகைர் வர்ததம் |
ஸித்தாந்தம் குருராடஸௌ பஹீதமைஸ் ஸத்வந்த விருந்தைர்நிஜை :
ஸம்வ்ருத்தம் கலயன் கலிப்ரமதனோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்
ஸ்வாமி தேசிகன் யதிராஜ ஸப்ததியில் 57 வது ச்லோகத்தில்
யதி க்ஷமாப்ருத் த்ருஷ்டம் மதமிஹ நவீனம் ததபி கிம்
தத : ப்ராகேவ அந்யத்வத ததபி கிம் வர்ண நிகஷே |
நிசாம்யந்தாம் யத்வா நிஜமதி திரஸ்கார விகமாத்
நிராதங்கா :டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதய : ||
டங்கர் ,த்ரமிடர் ,குஹதேவர் முதலிய பற்பல முன்னோர்கள் விசிஷ்டாத்வைதக்கொள்கைகளை ,முன்னமேயே சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கு உதாரணமாக எடுத்து, அப்படிப்பட்ட முன்னோர்களாலும் ,ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் , ஸ்ரீ உடையவர் முதலான பின்னாலான ஆசிரியர்களாலும், ஸநாதனமாக இருக்கிற விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, பற்பல உயர்ந்த க்ரந்தங்களினால் பரிவுடன் போஷித்து அருளின ஸ்வாமி தேசிகன்
கலி புருஷனை வென்று என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேணும்

6.நாஹம் போத்தமலம் பவமி நிகமாந்தார்யஸ்ய திவ்யௌக்தி ஷு
ப்ராக்ஜைகானு பவார்ஹமத் பூததமம் திவ்யார்த்த ஸாரம் ஸ்வயம் |
காருண்யேன ஸுதுர் வசன் பரிதஸ்ஸோயம் மஹாதேசிக : ஸர்வார்தன் ஸ்வயமேவ ஸாதுகமயன் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்
ஸ்வாமி தேசிகன் அருளிய திவ்ய ஸூக்திகளின் உள்ளார்ந்த அர்த்தங்கள் ,மிகவும் பாண்டித்யம் உள்ளவர்களால் மட்டுமே அறியவல்லன ; நான் நீசன் , அவற்றை அறியகில்லேன்.
ஆதலால், ஸ்வாமி தேசிகனே , மிகவும் பேரருள் கொண்டு ,ஸகல அர்த்தங்களையும் அடியேனுக்கு உணர்த்தி, என் உள்ளத்தின் உள்ளே வாழ வேணும்

7.”தாஸஸ்ஸே ” ”டகிலோப் ” ”ருத்யக் ” ”இகோயன் ” ”குத்ஸிதே ” ”டஸிகுட் ”
”ஜேர்ஜஸ் ” ”ஜோஅந்த் ” இதித்ருசாணி ஸததம் சூத்ராணி ஸங்க்ரந்ததாம் |
ஸ்ரேய :கிஞ்சன் நோதியாதாதி தியா ஸூக்தி ஸ்ஹ்ருத்யா அதாத்
யோ வேதாந்த மஹாகுருஸ்ய க்ருபயா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

உலகில் பல வித்வான்கள் ” தாஸஸ்ஸே —-” என்பது முதலான ஸூத்ரங்களை வ்யாகரணம் படிப்பதாக ,உருப்போட்டுக்கொண்டு, அதிலேயே உயிரை விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு,
ஒரு நன்மையையும் கிட்டவில்லையே என்று திருவுள்ளம் இரங்கி , அமிர்தமான மொழிகளான ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்த ஸ்வாமி தேசிகன் என் அகத்தையே தம் அகமாகக் கொள்ள வேணும்

8. ய :காருண்ய நிதிர்யமாஹ் பகவான் வேதாந்த ஸத்தேசிகம்
யேநேதம் புவனம் ஸநாதமபவத் யஸ்மை நதி : ஸ்ரேயஸி |
யஸ்மாத் திவ்யஸுதோதய ஸமபவத் ப்ரபாவோ அத்புத : யஸ்மிந்
ஸர்வகுணா பபு : ஸ குராராண் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்
கருணா ஸமுத்ரமாக இருப்பவரும், திருவரங்கப் பெருமானால் ”வேதாந்தாசார்யர் ”என்று அருளப் பெற்றவரும் இவ்வுலகத்தை ஸநாதனமாக்க வல்லவரும், தம்மைப் பக்தியுடன் ஸ்தோத்தரிப்பவருக்கு நன்மைகளையே அளிப்பவரும் ,அமுதம் பெருகுவதுபோன்ற ஸ்ரீ ஸூக்திகளுக்கு ஆகரமாய் இருப்பவரும் ,அதி அற்புதங்கள் அமைந்தவரும் ,நற்குண நிதியுமான ஸ்வாமி தேசிகன் ,என் மனத்தையே கோயிலாகக் கொள்ள வேணும்

9.கன்யாமாஸி பணீந்த்ர சைல சிகராலங்கார தீர்த்தோடுனி ப்ராதுர்
பூய பவாப்தி மக்ன ஜனதா ஸம்ரக்ஷணைக வேரதி |
ய :ப்ரோவாச சதாதிகான் ஸுமதுரான் ஸாரார்த்த ரத்நாகரான்
ஸத்க்ரந்தான் ஸ குருர் குணா ம்ருத நிதிர் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

மலைகுனிய நின்ற திருவேங்கடத்தெம்பெருமானின் அவப்ருத திருநக்ஷத்ரமான புரட்டாசி ச்ரவணத்தில் திருவவதாரம் செய்து, அடியோங்களைப் போன்ற சேதனர்களை , ஸம்ஸார பந்தத்திலிருந்து
விடுவிக்க நூற்றுக்கணக்கான திவ்ய ஸ்ரீ ஸூக்திகளை அருளிய ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்திலிருந்து அகலமாட்டார்

10. விச்வத்ராண விசக் ஷணஸ் பகவான் கண்டாம் ஸ்வகீயாம் ஸுபாம்
தோதாத்வயாஹ்வய திவ்யயோபி துந்தரே ந்யஸ்யன்ஸமா த்வாதச |
ப்ராதுர்பாவ்ய யதாத்மனா விபவநாம்நயப்தே நபஸ்யே நிஜே நக்ஷத்ரே
ஜகதீம் ரரக்ஷ ஸ குருர் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

எல்லா உலகங்களையும் ரக்ஷிக்கும் திருவேங்கடமுடையான், தன்னுடைய ”திருமணி ஆழ்வாரை ”பன்னிரண்டு வருஷம் தோதாரம்மையின் திருவயிற்றில் வாழ்வித்து, ஒரு ப்ரபவ வருஷ புரட்டாசித் திருவோணத்தில் இங்கு அவதரிக்கச் செய்து, இவ்வுலகம் வாழக் காரணமாக இருந்த ஸ்ரீ தேசிகர், அடியேனின் மனத்தையே
உறைவிடமாகக் கொள்ளவேணும் .

11. தாதோ மே புவநப்ரஸித்த மஹிமா வித்யா நிஷத்யாமக யஸ்ய
ஸ்ரீ நிகமாந்ததேசிகமணே ஸ்ரீஸூக்தி ரத்னாவளி : |
ஆ பால்யாந்மம கண்டபூஷண தயா விந்யாஸ்தத் அந்யாத்ருச :
ஸோயம் தேசிக ஆத்மன : கருணயா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

உலகமுழுவதும் புகழும் ,கல்வியில் சிறந்த அடியேனின் திருத்தகப்பனார், அடியேனின் கிளர்ந்து எழும் இளமை முதலாக , எந்த ஸ்ரீ தேசிகரின் திவ்ய ஸூக்திகளை எல்லாம் ”கண்ட பாடமா”க ஆக்கிவைத்தாரோ அந்த ஸ்வாமி தேசிகர் அடியேனின் மனத்தையே உறைவிடமாகக் கொள்ளவேணும்

12. கிஞ்சித் ஞானமுபேயுபாமபி ஸதாம் யஸ்ய த்ரயீசேகராசார்யஸ்ய
அத்புத ஸூக்தி ப்ருந்தமனகம் ஹ்ருத்யம் ஹி வித்யோததே |
பக்திம் பூரிதமாம் விரக்திமனகாம் விஞ்ஞான முச்சாவசம்
விப்ராணஸ்ஸ மஹா குருர்குண நிதிர் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

கிஞ்சித் ஞானம் உள்ளவர்களும் கூட ,ஸ்வாமி தேசிகர் வாக்யார்த்தங்கள் அருளும்போது,மிகவும் ரஸிப்பர்; அங்ஙனம் அமுதமென்மொழிகளை அருளிச் செய்தவரும், ஞானமும் ,பக்தியும்,
விரக்தியும் மலிந்தவுருமான ஸ்ரீ தேசிகர் ,அடியேனின் மனத்தை ஆளவேணும் .

13. கல்லோலா இவ ஸாகரே குருவரே யஸ்மிந் ஸதா ஸுக்தய :
ப்ராதுர்பாவமனர்கலம் ஜனிஜூஷாம் ஸௌபாக்ய பூம்னா தது : |
ஸோயம் ஸர்வகலாவிஹாரநிலய : ஸர்வக்ஞ சூடாமணி : ஸர்வாநந்தந ஸத் குணெளக ஜலதிர் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

எப்போதும் கடலில் அலைகள் கிளர்ந்து எழுவதைப்போல ,அடியோங்களின் பாக்யத்தால் மேன்மேலும் எப்போதும் ஸ்ரீஸூக்திகள் பொங்கிவரப் பெற்றவரும்,அனைத்துக் கலைகளிலும் வல்லவரும், ஸர்வஜ்ஜரும் , ஸத்குண நிதியுமான ஸ்ரீ தேசிகர்,
அடியேனின் மனத்தில் வஸிப்பதை ஒருபோதும் விடலாகாது..
14. கேவா ஸந்தி மஹீதலேத்ர விபுலே வேதாந்தகுரே கிரஸர்வாஸாது
விம்ருச்ய தஸ்ய ஹ்ருதயம் காடம் க்ரஹீதும் க்ஷமா : |
ஸோயம் தேசிக ஸார்வபௌம இஹ மாமேகம் க்ருபாவைபவாத்
ஸ்வீயாந்த கரணக்ஞமாசு கலயன் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

தம்முடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளை நன்கு ஆராய்ந்து ,தமது ஆழ்ந்த திருவுள்ளத்தை அறிய வல்லவர் இவ்வுலகில், ஒருவரும் இல்லையே என்கிற குறைதீர , அடியேனின்மீது தமது பேரருளை அநுக்ரஹித்து
தம்முடைய திருவுள்ளக்கருத்தை அறியச் செய்ய வல்லவரான ஸ்ரீ தேசிகர் ,அடியேனுடைய மனத்தையே
உறைவிடமாகக் கொள்ளவேணும்

15. ஸத்யம் ஸத்யமஹம் ப்ரவீமி புவனே நாந்யோவதீர்ணோ குரு :
சாரித்ரம் பரமம் பவித்ரமதுளா ஸுக்தீஸ்ச ஸந்தர்சயந் |
ஏகோயம் ச்ருதிமௌலிதேசிகமணி ; ஸர்வாத்மா சோபன :
ஸோயம் ஸுமதரித்ரயா கருணயா ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

” இவரது சரித்ரமோ பவித்ரம்; இவரது திவ்யஸூக்திகளோ ஒப்பற்றது;
இப்படிப்பலபடியாலும் சிறப்புப் பெற்றவர் இவர் ஒருவரே; ” என்று சபதமிட்டுச் சொல்வதற்கு உரியவர் ஸ்ரீ தேசிகர். இவர்,எல்லையில்லாக் கருணையோடு ,அடியேனின் உள்ளத்தின் உள்ளே உறையவேணும்
.
16. ரீங்காரம் கலயந்தி சீதுகணிகாம் பீத்வா த்விரேபா வனே
ஸோஹம் வேதசிரோகுரோர்ஹி பணிதீ : பீயூஷகல்பா முஹீ : |
பாயம்பாய மனர்கலம் விரசயே தெளர்யத்ரிகம் சத்வரே ஸோயம்
ஸர்வகலாநிதிர் குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

வண்டுகள்,கானகத்தில் தேன் திவலைகளைக் கொஞ்சம் பருகி மகிழ்ச்சியுடன் ரீங்காரம் செய்கின்றன ; அடியேனோ, ஸ்ரீ தேசிகரின் திவ்யஸுக்திகளாகிற திவ்யமான அம்ருதத்தை வேண்டியமட்டும் பருகி ,நாற்சந்திகளில் ஆடியும் பாடியும் களிக்கின்றேன் ; இப்படி அடியேனைக் களிப்பிக்கவல்ல ஸ்ரீ தேசிகர் ,அடியேனுடைய நெஞ்சில் மேவுக —

17. வேதானாம் படனம் புராணகதனம் ஸ்ம்ருத்யாதி ஸம்சீலனம் ஸர்வ யஸ்ய குரோர்கிராம் பரிசயை : புஷ்ணாதி ஸோபாம் பராம் |
ஸோயம் ஸர்வபதீனதீ விலஸிதோ வைராக்ய வாராம் நிதி :
ஸ்ரீமான் வேதசிரோகுரு :ப்ரதிகலம் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

ஸ்ரீ தேசிகரின் திவ்ய ஸூக்திகளில் பரிச்சயம் இருந்தால்தான் , வேத பாராயணத்திலோ,புராண உபந்யாஸத்திலோ தர்மசாஸ்த்ர பரிசீலனத்திலோ ,மற்றும் எது செய்வதாக இருந்தாலும், எந்தப்பேச்சும் பொலிவுடன் மிளிரும் என்னும்படியான வைபவம் உள்ளவரும்,
எல்லாவழிகளிலும் செல்கிற புத்தி விலாஸம் —மேன்மை உடையவரும் ,மஹா விரக்தருமான
ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தையே மன்னியிருக்கவேணும்
18. தாந்தி சாந்தி ரிதி த்வயம் ஹி ஸகலை ஸம்பாதனீயோ நிதி :
ஸோயம் யஸ்ய வபௌ ஸ்வபாவநியதோ லக்ஷ்மீச ஸங்கல்பத : |
வாஜிக்ரீவக்ருபா கடாக்ஷ விபவோ அஞ்சத் ப்ரபாவோஜ்வல :
ஸோயம் தேசிக தல்லஜ : ஸ்வக்ருபயா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

ஒவ்வொருவரும் அவச்யம் சம்பாதிக்கவேண்டிய நிதிகள்—-”சமமும், தமமும் ”.இவை, பகவத் ஸங்கல்பத்தால் இயற்கையாகவே அமையப்பெற்றவரும் ,ஸ்ரீ ஹயக்ரீவனின் க்ருபா கடாக்ஷத்தினால் ,பெருமேன்மை பெற்றவருமான ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தினுள்ளே மன்னி வீற்றிருக்க வேணும்

19. தாதோயம் தனயோயமேஷ ஸஹஜஸ்ஸைஷா ப்ரஸு :பத்ன்ய ஸௌ க்ஷேத்ரம் மாமகமேத தித்யனவதீ ப்ரோஜம்பமாண த்ருஷா |
ஸர்வா மே ஸமபூத்யதீய பணிதிஷ்வேவ , ப்ரஸித்த ப்ரத ஸோயம்
நிஸ்தல வைபவோ குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

ஸ்ரீ பெரியாழ்வார் தன்னுடைய திருமொழியில்
ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாளென்று மயங்கி, மாளு மெல்லைக்கண் வாய்திறவாதே ,கேசவா புருடோத்தமா என்றும், கேழலாகிய கேடிலீ யென்றும் ,பேசு வாரவ ரெய்தும் பெருமை பேசுவான்புகில் நம்பர மன்றே

என்று அருளி இருப்பதைப்போல, பற்பல விஷயமாக விளையும் அடியேனுடைய விருப்பமெல்லாம் ,அடியேனுக்கு வேறு ஒன்றிலும் செல்லாமல், தம்முடைய திவ்ய ஸுக்திகளிலேயே செல்லுமாறு அருளிய ஸ்ரீ தேசிகர் அடியேனின் நெஞ்சத்திலே
வாழவேணும்
20. சார்வாகாதிம் துர்மதாந்ததமஸத்வம் ஸார்த முத்யன் ரவி :
ஸ்ரீமத் வைஷ்ணவ மண்டலி குவலய உல்லாஸாய பாஸ்வான் விது : |
ஸோயம் வேதசிரோகுருஸ்ய பகவாநித்யேவ மத்யாதராத் ஸர்வை
ஸாது குணை : ப்ரசஸ்ய மஹிமா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

”சார்வாகம் ” முதலிய துர்மதங்களாகிய காரிருளை அகற்றுவதற்குத் தோன்றின ஆதித்யன் என்னத்தகுந்தவரும் ,ஸ்ரீவைஷ்ணவ மண்டலமாகிற ஆம்பலை மலரச் செய்கிற ”சந்த்ரன் ” என்னத்தகுந்தவரும் —ஆகிய ஸ்ரீ தேசிகர் , அடியேனின் மனத்தில்
வாழவேணும் .

21.யக்ஜே தாதுருதித்வரஸ் வரத :ஸ்ரீ ஹஸ்திசைலேஸ்வர :
ஸ்வீயே வாஹனமண்டபே பரமயா ப்ரீத்யா யமாஸ்தாபயன் |
வாரம் வாரம் அநுக்ரஹம் ப்ரகடயன் வித்யோததே தாத்ருஸ
ப்ரக்யாதாமித வைபவோ குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

அயன் செய்த வேள்வியில் அவதரித்த பேரருளாளனால் , அடிக்கடி எழுந்தருளப் பண்ணுவித்து பஹுமானிக்கப் பெறுகிற ஸ்ரீ தேசிகர் அடியேனின் உள்ளத்தின் உள்ளே உறையவேணும்
22.வர்கே வைஷ்ணவ சுத்த ஸந்ததி ஜூஷாம் ச்லாத்யான் அதான்யைரபி
ப்ராக்ஜைர் பூரிதமை : ப்ரசஸ்ய விபவான் க்ரந்தான் கரிஷ்டான் பஹு |
ஸ்ரீமத் வாஜி முகஸ்ய திவ்ய க்ருபயா நித்யம் ஸ்ருஜன் நிர்மலப்ரக்ஜோ
தேசிக ஏஷ தோஷவிதுரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

ஸ்ரீ வைஷ்ணவ சமூகம் மாத்ரமல்ல , மதாந்தரஸ்த பண்டித சமூகமும்
கொண்டாடும்படியான அரிய ஸ்ரீ ஸூக்திகளை ஸ்ரீ ஹயக்ரீவரின் அருளாலே அனவரதமும் அருளிய ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தில் வாழவேணும்

23. யோக்யானாமயம க்ரஹண்ய முக்யாக்யாமிஹே ஸுர்ஜன :
யஸ்யாசார்யமணே விஸுத்த பணிதிஷ்வத்யாதரம் ப்ராப்னுயாத் |
ஸோயம் சததூஷணி முஸ்வ்ர மஹா க்ரந்தாவளீக்யாபிதப்ரக்ஞா
சேவதிராதரேண மஹதா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

”சத தூஷணீ ” முதலிய பல சிறந்த க்ரந்தங்களை , ”யோக்யர் ” என்று
பெயர்பெற விரும்புபவர் எல்லோரும் விரும்பிக் கற்பர்.அப்படிப்பட்ட சிறந்த க்ரந்தங்களை அருளிச் செய்து, ஞானப் பெரும் புகழ் படைத்த ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தின் உள்ளே அன்புடன் அமர்ந்திட வேணும்.

24. மேதின்யாமிஹ ஸர்வத :ப்ரஸ்ருமரா விக்யாதிரன்யாத்ருசி யஸ்ய
ஸ்ரீ நிகமாந்த தேசிக மணே நித்யம் ஸமுஜ்ஜிரும்பதே |
யஸ்யாஹூ ஸகலேபி தந்த்ரநிசயே ஸ்வாதந்த்ரயமத் யங்குசம்
ஸ்ரீ மானேஷ குணாலயோ குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

இந்நிலவுலகம் முழுவதும் பரவுமாறு பெரும் புகழ் படைத்தவரும்,
”ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் ” என்கிற பெரிய விருது பெற்றவருமான ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தில் குடிகொண்டிருக்கவேணும்

25. ஸந்தேஹான் ஸகலான் ஹதான் விதத : பீயூஷஸந்தேஹதான்
கங்காபூர ஸதர்மண சுபதமான் திவ்யாந்நிபந்தான் பஹூன் |
உத்தாடய க்ஷிதிமண்டலம் நிருபமம் நிஷ்கல்மஷம் சாததத்
வேதாந்தார்ய குருத்தம :கருணயா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

இவருடைய திவ்ய க்ரந்தங்கள் ,சாஸ்த்ரங்களில் சகல சந்தேகங்களையும் போக்கவல்லவை;”தேவாமிர்தமோ இவை ” என்னும்படியான சந்தேகத்தை உண்டாக்குபவை; கங்காப்ரவாஹம்
போன்றவை; இப்படிப் பல திவ்ய க்ரந்தங்களை அருளி, இவ்விருள் தருமா ஞாலத்தையே தெருள்தருமா ஞாலமாக்கின ஸ்ரீ தேசிகர், அடியேனின் மனத்திலே வாழவேணும் .

26. நித்யாராதன பேடிகாம் மம க்ருஹே தன்யாம் விதன்வம்சி சராத்
ஸர்வாஸாமபி ஸம்பதாம் மம குலே பீஜாயமானோ மஹான் |
ஞானானுஷ்டிதி ஸம்பதா ஸமுஹித : கண்டீரவோ வாதினாம்
த்ரையந்தார்ய மஹாகுரு சுபமதீர் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

அடியேனுடைய க்ருஹத்தில் கோயிலாழ்வாரில் , ”அர்ச்சாமூர்த்தி”யாக நீண்டகாலமாகவே எழுந்தருளியிருந்து அநுக்ரஹம் செய்பவரும், அடியேனின் குடும்பத்தில் நேருகின்ற ஸகலவித ஸம்பத்துகளுக்கும் முதல் தனிவித்தாக அமைந்தவரும், ஞான ,அநுஷ்டான
ஸம்பத்ஸம்ருத்தரும் ”பரவாதி சிங்கமு”மான ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்திலே மன்னியிருக்கவேணும்

27. தன்யோ நான்ய இஹாஸ்தி கேவலமஹம் தன்யாக்ரீணிரித்யமும்
கர்வம் நிர்வஹதி ப்ரஸித்தமஹிமா யோ தேசிகோ மாமகம் |
ஸோயம் தன்யதமாம் தராம் விதததீ ஸுக்திர் மே யாஸ்ருஜன்
ஸ்ரீமான் வேதசிரோ குருர்மதஜூஷோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

அடியேன் ஒருவனே குறையற்றவனென்றும் , அடியேனைப்போன்ற நிறைவாளர் மற்றாருமில்லையென்றும் , அடியேன் செருக்குக் கொள்வதற்குக் காரணபூதரும் ,இப்பூமண்டலம் க்ருதார்த்தமாகும்படி அளவில்லா திவ்ய ஸூக்திகளை அருளிச்
செய்தவருமான ஸ்ரீ தேசிகர் அடியேனின் உள்ளத்துள்ளே உறையவேணும்
28.தாம்யத்பிர் பஹுதா ஜனை : பரிவ்ருதே பூமண்டலேஸ்மின் அஹம்
யஸ்யானுக்ரஹ பாத்ர தாம நிதர ப்ராப்யாமிஹ ப்ராப்னுவன் |
ஸந்துஷ்ட ஸததம் ப்ரபுல்ல ஹ்ருதயோ துக்கோத்திவை தேசிகோ
வர்தே ஸோயம் அமேயதீர் குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

எண்ணவொண்ணாக் கஷ்டங்களை அனுபவிக்கிற ஜனங்களே மலிந்திருக்கிற இந்நிலவுலகில், அடியேன் ஒருவனையே தம் அருளுக்கு ,கொள்கலமாக்கி –இலக்காக்கி–எப்போதும் கனிந்து மகிழ்ந்தே இருப்பவனாகவும் ,துன்பத்தின் தாக்கமே இல்லாதவனாகவும்
அடியேனை ஆக்கி வைத்து அருளி இருக்கின்ற ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தில் நித்யவாஸம் செய்யவேணும் .

29. ஸத்வ்ருந்தைஸ்ஸஹ நித்யவாஸ ரஸிகம் ஸங்க்யாதிகைர் பாவுகை :
ஸம்ஸ்ராவ்யோக்தி பரம்பரம் ச க்ருபயா யோ மாம் வ்யதா தேசிக : |
ஸோயம் த்ராவிட ஸம்ஸ்க்ருதாதி ஸகல ப்ராஹீஷு கூலங்கஷ ப்ரக்ஜோ
வேதசிரோ குருர் மதுரவாக் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

அடியேனுக்கு எப்போதுமே ஸத் ஸஹவாஸம் நேரும்படியாக்கியவரும், எண்ண இயலாத ரஸிக மஹா ஜனங்கள் கேட்டுக் களிக்குமாறு சொற்பொழிவாற்றும் வல்லமை உண்டாகும்படி
ஆக்கியவரும் வடமொழி தென்மொழி வல்லவருமான ஸ்ரீ தேசிகருக்கு ,அடியேனின் மனமே கோயிலாகவேணும்
30. தாரித்ரயம் க்ஷபயந் யசோ விஷதயன் விஞ்ஞான முஜ்ஜ்ருபயன்
ஆசாரம் பரிபேஷயன் சுபமதிம் ஸர்வத்ர ஸம்வர்தயன் |
பக்திம் மேதுரயன் ஹரௌ கிமதிகை : ? ஸர்வான் குணான் ஜ்ரும்பயன்
ஸ்ரீமத்வேதசிரோ குருர்மஹித வாக்மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

முன்பு ஒரு ப்ரஹ்மசாரிக்கு ஏழ்மையைப் போக்கியதைப்போல ,ஏழ்மையைப் போக்கி,புகழை விளைவித்து, நல்லறிவை வளர்த்து,நல்ல நடத்தையை நல்கி, நல்ல புத்தியை செழிப்பித்து , பகவத் பக்தியைப் பெருக்கி ,ஸகல குண பூர்த்தியையும் உண்டாக்கி ,அருள வல்ல ஸ்ரீ தேசிகர் அடியேனின் மனத்தையே வாசஸ்தலமாகக் கொள்ளவேணும் .
31. ஹ்ருத்யைர் நித்யமவத்ய கந்தவிதுரை ருச்சாவசைர் மாமக
க்ரந்தைர் பூமிமிமாம் ஸதா ஸுரபயன் வேதாந்த சூரி குரு : |
பூர்வாசார்ய ஸதுக்தி ரத்ன ஸததாஸ்வாதைக ஸக்தாசயம் குர்வன்மாம்
கமனீய திவ்ய வபுஷா மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

வித்வந் மநோஹரங்களும் குற்றமற்றவைகளுமான பலவகை நூல்களை ,அடியேன் இயற்றி இவ்வுலகை உகப்பிக்கும்படியாகவும் , பூர்வாசார்யர்களின் திவ்ய ஸூக்திகளையே
இடைவீடின்றி அனுபவித்துக்கொண்டிருக்கும்படியாகவும் அருள்செய்து வருகின்ற ஸ்ரீ தேசிகர், தனது அழகிய திருவுருவத்தோடு அடியேனின் மனத்தில் திகழவேணும் .

32. திவ்யாகார ஜிதஸ்மர : ஸுகவிதா சாதுர்ய லீலாக்ருஹம்
ஸுத்தாநுஷ்டிதி கேலிஸத்வா பகவத் பக்த்யா கரோன்ய அத்புத : |
ஸந்திக்தார்த்த வினிர்ணயேஷு சதுர ஸர்வார்த்த ஸித்த சாதிகானேக
க்ரந்த க்ருதேஷ தேசிக மணிர் மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி ||

வ்யாக்யானம்

மன்மதனிலும் விஞ்சிய வடிவழகார்ந்தவரும் , நல்ல கவித்வ சக்தி பொருந்தியவரும் பரம பவித்ரமான நடத்தையுடையவரும் பகவத் பக்தி வாய்ந்தவரும் , தெளியவேண்டிய அர்த்தங்களை தெளிவிக்க வல்லவரும் ,”ஸர்வார்த்த ஸித்தி ” முதலிய பல சிறந்த
நூல்களை அருளியவருமான ஸ்ரீ தேசிகர் அடியேனின் உள்ளத்தைவிட்டு அகலாதிருக்கவேணும் .

இத்தம் வாதி பயங்கர வம்சீய அண்ணங்கராசார்ய சங்கலிதம் |
ஸ்ரீமத் வேங்கடநாத ஸ்தோத்ரம் படதாம் ஸம்ருத்திரகிலா ஸ்யாத் ||
இதி ஸ்ரீ காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய க்ருதிஷு |
ஸ்ரீமத் வேங்கடநாத குரு ஸ்தோத்ரம் ஸமாப்தம் ||

ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் இயற்றிய

ஸ்ரீ வேங்கடநாத குரு ஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது

ஸுபம்

About the Author

Leave A Response