———————————————-
இது, ஸ்வாமி தேசிகனின் தினசர்யா —-23 ச்லோகங்கள்
ஒவ்வொரு நாளும், ஸ்வாமி தேசிகன் அனுஷ்டித்ததை , அவரது திருக்குமாரர்
ச்லோகங்களாகச் செய்து, ஒவ்வொரு ச்லோகத்திலும் அவரை ஸ்மரித்து,
ஸேவித்து , இந்த ஸ்தோத்ரத்தை அருளி இருக்கிறார்.
நமது பரமாசார்யனை ,இந்த ஸ்தோத்ரத்தைச் சொல்லி, தினமும் ஸேவிப்பது,
என்பது, ஒவ்வொருவரின் பரம பாக்கியமாகும்.
வைகுண்டவாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி, இந்நிலவுலகில் இப்போது இருந்தால்,
இதற்கென்றே ஒரு திட்டம் வகுத்திருப்பார்
ஸ்வாமி தேசிகனின் 750 வைத்து திருநக்ஷத்ர மஹோத்ஸவ சமயத்தில்,
பரமாசார்யனின் தினசர்யா ஸ்தோத்ரத்தை , ஸம்ப்ரதாயஸ்தர்கள்
தினமும் அநுஸந்தித்து ஆசார்யனின் க்ருபைக்குப் பாத்திரமாகுமாறு
ப்ரார்த்திக்கிறேன்
,
ஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்
——————————————————————————-
இந்த ஸ்தோத்ரம், ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரரான ஸ்ரீ வரதாரியார் என்கிற
ஸ்ரீ நயினாராசார்யர் அருளியது—
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே ||
——————————–
முதலில் இரண்டு ச்லோகங்களில் ஆச்சார்ய வந்தனம் செய்கிறார்
1. காஞ்சீபுரீ யஸ்ய ஹி ஜந்ம பூமி :விஹாரபூர் வேங்கடபூதரேந்த்ர : |
வாஸஸ்தலீ ரங்கபுரீ தமீட்யம் ஸ்ரீ வேங்கடேசம் குருமாஸ்ரயாம : ||
எழில் மிகு புகழ்க் காஞ்சி எவருக்கு அவதார பூமியோ, மலைகுனிய நின்றானின்
திவ்யதேசமான திருவேங்கடம் , எவருக்கு ”விஹாரஸ்தலமோ ”, பூலோக வைகுண்டம்
என்று போற்றப்படும் திருவரங்கப் பெரியகோயில் க்ஷேத்ரம் எவருக்கு நித்யவாஸமோ ,
அப்படிப்பட்ட ஸ்ரீ வேங்கடநாதன் என்கிற ஆசார்யனைச் சரணமாகப் பற்றுகிறோம்
2.ஸம்பாவநா யஸ்ய ஹி காலகூட : ஸபா புஜங்கீ குணபஸ் தருண்ய : |
ஸ்யாத் ரௌரவம் ராஜக்ருஹம் ச ஜீயாத் சிரம் குருர் வேங்கடநாதநாமா |\
புகழும், பாண்டித்யம் முதலியனவும் ஒன்று சேர்ந்த விமுகரான ஸ்வாமி தேசிகன் ,
பிறர் தன்னைக் கௌரவிப்பதைக் காலகூட விஷமாகவும், ஸம்பாவனை செய்யும்
ஸபையை ஸர்ப்பமாகவும் , யுவதிகளைப் பிணங்களாகவும் , அரசர்களின் ( தனவான்கள் )
மாளிகைகளை ரௌரமென்னும் கொடிய நரகமாகவும், கருதினார்.
இப்படிப்பட்ட ஸ்ரீ வேங்கடநாதன் என்னும் ஆச்சார்யோத்தமர் எப்போதும்
ஸர்வவோத்க்ருஷ்டமாக விளங்கவேண்டும்.
3. ய : ப்ராதரப்யேத்ய ஹரிம் ஸுசீநி த்ரவ்யாண்யுபாதாய சுசி ஸுசி : க்ருதேஜ்ய : |
ஸ்வாத்யாயயுக்தோ நிஸி யோகரூபாம் நித்ராம் ஸமாரோஹதி தம் நதாஸ்ஸ்ம : ||
விடியற்காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து, காலையில்
பகவானைச் சரண் அடைந்து, அபிகமந ஆராதனத்தைச் செய்து, பிறகு, பகவத
ஆராதனத்துக்கு வேண்டியதைச் சேகரித்து, மாத்யாஹ்நாதிகளைப் பண்ணி,
இஜ்யா காலத்தில் பகவதாராதநத்தைச் செய்து, ஸ்வாத்யாய காலத்தில்
வேதாத்யயனம் முதலியவற்றைச் செய்து, இரவு யோகரூபமான நித்ரையைச்
செய்யும் ”பஞ்சகால பராயண”ரான ஸ்ரீ தேசிகனை வணங்குகிறோம்
4. யாமே துரீயே யத்வாக் ரஜன்யா : விஹாய ஸய்யாம் விஹிதாங்க்ரி ஸுத்தி : |
யோத்யாதரேணாஸ்தித யோகசேஷ : தம் வேங்கடேசம் குருமாநமாம : ||
ராத்ரியில் 4வது ஜாமத்தில் , உறக்கத்திலிருந்து எழுந்து ”ஹரிநாம ”சங்கீர்த்தாதிகளைச்
செய்து , படுக்கையிலிருந்து எழுந்திருந்து, கை கால்களைச் சுத்திசெய்துகொண்டு , மிக ஆதரத்துடன்
யோகத்தை அனுஷ்டிக்கும் குருவான ஸ்ரீ வேங்கடநாதனை வணங்குகிறோம்
5. ததோநுஸந்தாய ததிம் குரூணாம் தம் சாபி தேவம் ரமணம் ரமாயா : |
தத்காலயோக்யாநி ததாவிதாநி ஹ்ருத்யாநி பத்யாநி படந்தமீடே ||
பின்பு, குருபரம்பரையையும் ஸ்ரீமந் நாராயணனையும் , ப்ராதக் காலத்தில்
அநுஸந்திப்பதற்கு யோக்யமான / மனோரஞ்சிதமான , ச்லோகங்களையும்
பாசுரங்களையும் அநுஸந்திப்பவரைச் சேவிக்கிறேன்
6. உத்தாய கேஹாதுபகம்ய ரம்யாம் கவேரகந்யாம் கலிதாங்க்ரி ஸுத்தி : |
ததோ விஸோத்யாப்ஸு நிமஜ்ய ஸுப்ரம் வஸ்த்ரம் வஸாநம் தமஹம் ஸ்மராமி ||
(இப்படி அநுஸந்தித்த ) பிறகு தனது திருமாளிகையிலிருந்து புறப்பட்டு,
ரம்யமான காவேரி தீரத்தை அடைந்து நதியில் சாஸ்த்ரோக்தமாக நீராடி,
வெள்ளை வேஷ்டியைத் தரித்துக்கொள்ளும் ஸ்வாமியை ஸ்மரிக்கிறேன்
7. த்ருத்வோர்தவ புண்ட்ராணி ஸரோஜபீஜ மாலாம வந்த்யாம் ஸமுபாஸ்ய ஸந்த்யாம் |
ஸாவித்ரமீஸம் ஸவிது : புரஸ்தாத் ஸ்துவந்தமேகாக்ரதியா ஸ்துவே தம் ||
பிறகு, த்வாதஸோர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக்கொண்டு,( பன்னிரு திருமண் )
தோஷமில்லாத தாமரை மணி மாலையை அணிந்து, ஸூர்யனைப் பார்த்தவாறு
அர்க்ய ப்ரதாநாதிகளைப் பண்ணி ஏகாக்ர சித்தராய் காயத்ரி ப்ரதிபாத்யனான
ஸூர்ய மண்டலாந்தர்வர்த்தியான நாராயணனைத் த்யானம் செய்யும்
ஸ்வாமியை ஸ்தோத்ரம் செய்கிறேன்
8. ததஸ் ஸுபூர்வாஹ்நிக நித்ய கர்ம நிர்வர்த்ய நித்யேஷ்ட நிவ்ருத்தி மார்க : |
ஸ்ரீரங்கதாமோபஸமேத்ய ஸேவா க்ரமேண ரங்கேஸ்வர பாதமூலம் |\
காலை வேளையில் செய்யும் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து, ஸ்ரீரங்கநாதன்
ஸந்நிதிக்கு எழுந்தருளி, பலிபீடம் அருகில் குரு பரம்பரா அநுஸந்தான ப்ரணாமங்களைப்
பண்ணி, விஷ்வக்ஸேநரை ஸேவித்து, த்வாரபாலகர்களின் அநுமதியுடன்
பெரிய பெருமாள் அருகில் சென்று, அவன் திருவடிகளைச் சரணமாகப் பற்றும்
ஆசார்யனை ஸேவிக்கிறேன்
9. ப்ராபோதிகீபி :ப்ரதிபோத்ய கீர்பி : ப்ரஸாத்ய தம் கத்யமுகை ; ப்ரபந்தை : |
ஆஸாஸ்ய தந்மங்களமாப்தவாக்யை : ஆபாதசூடம் கலயந்த மீடே ||
இப்போது, ஸுப்ரபாதம் ,திருப்பள்ளியெழுச்சி இவைகளைச் சொல்லி அரங்கனைத்
மோனத்துயில் ஏழாகி செய்து, ஸ்ரீ உடையவர் அருளிய கத்யங்களை ஸேவித்து,
அந்த எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடி, அவனைப் பாதாதி கேசம் அனுபவித்து
ஆனந்தத்தில் மூழ்கும் ஆசார்யனை ஆச்ரயிக்கிறேன்
10. தீர்த்தப்ரஸாதாதிகமத்ர லப்தவா விக்ஞாப்ய தேவாய ததோ விஸ்ருஷ்ட : |
ஸநைருபேத்யா ஸ்ரமகல்பமாதமாத்ம க்ருஹம் ஸுகாஸீநமஹம் ஸ்மராமி ||
பின்பு, தீர்த்தம், சடாரி இவைகளைப் பெற்று, ரங்கநாதனிடம் விண்ணப்பித்து,
அவன் நியமனம் பெற்று, பின்புறமாகவே மெள்ள , கர்ப்ப க்ருஹத்தினின்று
வெளியே வந்து, மஹரிஷிகளின் ஆஸ்ரமத்துக்கு ஒப்பான , தன்னுடைய
திருமாளிகைக்கு வந்து ,ஸுகமாக வீற்றிருக்கும் ஆசார்யனை ஸ்மரிக்கிறேன்
11. வ்யாக்யானஸாலாமுபகம்ய சாதோ சிஷ்யாநந்யாந் ஸ்ரவணாபிமுக்கியாந் |
ஸங்க்ராஹயந்தம் ஸகலாநி தந்த்ராணி அதந்த்ரிதம் தம் குருமாஸ்ரயேஹம் |\
பிறகு, காலக்ஷேபம் ஸாதிக்கும் மண்டபத்துக்கு எழுந்தருளி , இதர விஷயங்களில்
பற்று இல்லாமல், வேதாந்த விஷயங்களை ஸ்ரவணம் பண்ண வந்திருக்கும்
சிஷ்யர்களுக்கு, ஸகல சாஸ்த்ரங்களையும் உபதேசிக்கும் ஆசார்யனை ஸேவிக்கிறேன்
தொடரும் ——-
Sarvam Sree Hayagreeva preeyathaam
Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkarya