தனியன்—22 to 29—

Posted on Jan 26 2018 - 7:59am by srikainkaryasriadmin
|
Categorized as
2458

தனியன்—22 to 29—

ஆபாதசூட மநுபூயஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா —
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் 
யோநிஸ்சிகாய  மநவை     முநிவாஹநந்தம் 

இது திருப்பாணாழ்வார் அருளிய ”அமலனாதிபிரான்”
பாசுரங்களுக்கான  தனியன் .
பெரியநம்பிகள் அருளிய தனியன்.
இவரை ”மஹாபூர்ணர்”  என்றும் சொல்வர்.
இவர், கலி 4099, கி.பி. 988, ஒரு ஹேவிளம்பி வருட 
மார்கழி  கேட்டையில் ஸ்ரீரங்கத்தில் அவதாரம்.
ஸ்ரீ ஆளவந்தாரின் ப்ரதான சிஷ்யர்.காஞ்சிக்குச் 
சென்று ,ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்ன ச்லோகங்களை 
ஸ்ரீ உடையவர் கேட்குமாறு இசையுடன் சொல்லி, 
அவரைத் திருவரங்கம் அழைத்துவந்தார்.
கச்சித் தேவப்பெருமாள் சொன்ன ஆறு வார்த்தைகளில் 
ஒன்றான, ”பெரிய நம்பிகளை ஆச்ரயிப்பது–” என்பதற்கு 
ஏற்ப ஸ்ரீ உடையவரின் ஆசார்யனாக ஆகி, அவருக்கு 
பஞ்சஸம்ஸ்காரம்  செய்வித்தவர்.
அவருக்கு, வ்யாஸ ஸூத்ரங்கள் ,திருவாய்மொழியைத் 
தவிர, மீதி நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் –இவைகளின் 
உள்ளார்ந்த அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் 
உபதேசித்தவர்.
உடையவரின் திருப்பாவைப் பாசுரங்களின் ஈடுபாட்டை 
அனுபவித்து,  அவருக்கு ”திருப்பாவை ஜீயர்” என்று 
திருநாமமிட்டவர்.திருப்பதிக் கோவை அருளியவர்.
உடையவருக்கு, திருக்கோட்டியூர் நம்பிகள் மூலமாக 
ரஹஸ்யார்த்தங்கள் கிடைக்க அருளியவர். 
திருவரங்கப் பெருமாள் அரையர் மூலமாக ,உடையவரை ,
”ஆசார்ய நிஷ்டை”,  ”சரமோபாய நிஷ்டை” கிரந்தங்கள் 
அருள நியமித்தவர். 
இவருக்கு, உடையவர் வேறு இல்லை;
தனது ஆசார்யன் ஆளவந்தார் வேறு இல்லை, இங்ஙனம் 
அனுபவித்தவர்.
தனது குமாரன் ”புண்டரீகாக்ஷனை”யும்.
குமாரத்தி ,”அத்துழாய்” என்பவளை உடையவரின் 
சிஷ்யர்களாக்கி மகிழ்ந்தவர்.
தனது ஆசார்யரான ஆளவந்தாருக்கு ,ராஜபிளவை முதுகில் 
வந்து நோயுற்றபோது,அந்த நோயை ஆசார்ய ப்ரஸாதமாக 
கீழ்க் குலத்தைச் சேர்ந்த ”மாறநேரி நம்பி”ஏற்றார் .பெரிய நம்பிகள்,
அவரை, நீராட்டி, புண்ணுக்கு மருந்து இட்டு, உணவு ஊட்டி 
சிச்ருக்ஷை செய்தார்.
அவர் திருநாடு அலங்கரித்தபோது,அவருக்கு ”ப்ருஹ்மமேத 
ஸம்ஸ்காரம் –”முதலியன செய்து, சாதி அந்தணர்களால் 
விலக்கிவைக்கப்பட்டார். இவர் செய்த ச்ராத்தத்தில் ,
அந்தணர்கள், ச்ராத்த போக்தாக்களாக வரமறுத்தபோது,
முதலாழ்வார்களே ச்ராத்த போக்தாக்களாக வந்து ,
ச்ராத்தம் பூர்த்தியாகும் பேறு  பெற்றவர்.
பெரியநம்பிகளின் குமாரத்தி ”அத்துழாய்”–இவள் புக்ககத்தில் 
ஒருநாள் ஸ்நானம் செய்யப்போகும்போது மாமியாரைத் 
துணைக்கு வரும்படி அழைக்க, மாமியார் ”உனக்கு, உன்கூடவே 
”ஸ்த்ரீதன வெள்ளாட்டி” வந்திருந்தால் அழைத்துச் செல் என்றாள்.
இதனால், மிக வருத்தமுற்ற அத்துழாய், பிறந்தகத்துக்கு வந்து,
இதைச் சொன்னாள் . அதற்கு பெரிய நம்பிகள், ”இதற்கு நான் 
செய்யக்கூடியது என்னவென்று தெரியவில்லை–உங்கள் 
ஜீயரிடமே( ஸ்ரீ உடையவர் ) சொல்வாயாக—” என்றார்.
அத்துழாய், இவ்விவரத்தை உடையவரிடம் விண்ணப்பித்தபோது,
உடையவர், அருகிலிருந்த ”முதலியாண்டானை” அழைத்து,
”அத்துழாய்க்கு ஸ்த்ரீதனமாக நீர் அவளுடன்  கூடவே ,அவளுடைய 
புக்ககம் சென்று வேண்டிய வசதிகளைச் செய்யும்” என்றார் .
முதலியாண்டானும் அப்படியே போய்  அங்கு கைங்கர்யம் செய்ய,
அத்துழாயின் மாமனார் மாமியார் இருவரும் இவ்விஷயமாக 
உடையவரைக் கேட்டார்கள். அதற்கு உடையவர், ”என் ஆசார்யனின் 
குமாரத்தி  அத்துழாய்—-அவளுக்குச் சௌகர்யங்களைச் செய்து 
கொடுக்கிறோம் —முதலியாண்டான் ,அங்கு இருக்க வேண்டாமென்றால், 
என்னிடத்தில் இருந்துகொண்டே சௌகர்யங்களைச்செய்வான்”என்றார் .
 
உடையவருக்குப் பதிலாக, கூரத்தாழ்வான் சோழ அரச சபைக்குச் 
சென்றபோது, உடன் இவரும் சென்று, சோழ அரசனால் கண்களை 
இழந்தார் . அப்போது அருகில் இருந்த அவரது குமாரத்தி அத்துழாய் 
இருவரையும் அரச சபைக்கு வெளியே அழைத்து வந்தாள் .
வயது முதிர்ந்த பெரியநம்பிகள் வலிபொறுக்கமாட்டாமல், ஸ்ரீரங்கம் 
திரும்பும் வழியில் கங்கைகொண்ட சோழபுரத்தில் 
கூரத்தாழ்வான் மடியில் தலையும், அத்துழாய் மடியில் திருவடிகளும் 
இருக்க கி.பி. 1097 தாது வருஷத்தில் திருநாடு அலங்கரித்தார்.
தனியனின் சுருக்கமான அர்த்தம் 
திருவரங்கத்தெம்பெருமானை — பகவானை– திருவடி முதலாக ஸேவித்து 
மிகவும் குளிர்ந்த திருவுள்ளத்தை உடையவராய் ,—-யார்–திருப்பாணாழ்வார் 
”ஹரிம் ”—-கஜேந்த்ர ரக்ஷணம் செய்த –ஆனையின் துயரம் தீரப் 
புள்ளூர்ந்தவன் —-கருட வாஹனத்வ குணபூர்ணன் –
சேஷசாயீ—காவிரி நடுவுபாட்டில் ஓர் கிடக்கையாய்க் 
கிடப்பவன்—தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருடப் 
பள்ளிகொண்டவன்—–
இவன்தான் பெரிய பெருமாள். 
நயநயோர் விஷயாந்தராணாம் —-என் அமுதினைக் கண்ட கண்கள் 
மற்றொன்றினைக்  காணாவே —என்று தம்முடைய திருக்கண்களுக்கு 
விஷயாந்தர தர்சனத்தை —
நிச்சிகாய —–நிச்சயித்தாரோ—

மநவை     முநிவாஹநந்தம்—-தம் முனிவாஹனம் மநவை —
அப்படிப்பட்ட ”முநிவாஹனர் ” என்கிற திருநாமமுடைய 
திருப்பாணாழ்வாரைத் த்யானம் செய்கிறேன்—–
 
 
தனியன்—தெரிவோம்—தெளிவோம்—–23
—————————————————————————–

காட்டவே கண்டபாத கமலம் நல்லாடை உந்தி 
தேட்டருமுதரபந்தம்  திருமார்பு கண்டம் செவ்வாய் 
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து 
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே 

இதுவும், திருப்பாணாழ்வார் அருளிய ”அமலனாதிபிரான்”
பாசுரங்களுக்கான தனியன்.
திருமலைநம்பிகள் என்கிற ஸ்ரீசைல பூர்ணர் என்கிற 
திருமலை பூர்ணர் அருளியது. பெரிய திருமலை நம்பி என்றும் 
அழைப்பர்—
இவர் ,ஸ்ரீமந் நாதமுனிகளின் திருப்பேரரான ஸ்ரீ ஆளவந்தாரின் 
திருப்பேரன் ஆவார்.

கலி 4076 கி.பி.974 பவ வருஷம் சித்திரைமாத ஸ்வாதி 
நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.
திருமலை—திருப்பதி தேவஸ்தானரிகார்டுகளில்,
 கலி 4075, கி.பி. 973, ஸ்ரீமுக வருஷம் புரட்டாசி 
மாதம், அனுஷ  நக்ஷத்ரம் என்று உள்ளது.
திருவேங்கட முடையானுக்கு,”பாபவிநாசம்”அருவியிலிருந்து,
தினமும் தீர்த்தம் எடுத்து வந்து ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தவர்.
திருமலையப்பனாலேயே ”தாதா” என்று அழைக்கப்பட்டவர். 
இவருடைய சந்ததியினர் ,”அதனால், ”தாதாசார்யர் ”என்று பெருமையுடன் 
போற்றப்படுகிறார்கள்.
ஸ்ரீ உடையவரின் தாய்வழி மாமன்.  ஸ்ரீ உடையவர் ,ஸ்ரீபெரும்பூதூரில் 
அவதரித்தபோது, திருமலையிலிருந்து ,ஸ்ரீபெரும்பூதூர் வந்து ,
குழந்தையைக் குளிரக் கடாக்ஷித்து, குழந்தையின் முகப்பொலிவைக் 
கண்டு, ”இளையாழ்வான்”இவரே என்று திருநாமமிட்டவர்.
உடையவரின் சிற்றன்னையின் குமாரரும் தனக்குச் ஸஹோதரியின் 
குமாரருமான ”கோவிந்த”னை  திருத்திப் பணி  கொண்டவர்.தனது 
குமாரர்களான ,”பிள்ளைத் திருமலை நம்பி”, ”பிள்ளான்”, மற்றும் தனக்கு 
மருமகன் உறவான ”கிடாம்பி ஆச்சா”னையும் உடையவருக்கு, 
சிஷ்யர்களாக ஆக்கியவர்—-உடையவரை  ஆச்ரயிக்கச் செய்தவர்.
முதன் முதலில், உடையவர் , படிகளேறி,  திருமலைக்கு வந்தபோது ,
இவர் திருமலையிலிருந்து கீழே படிகளில் , திருவேங்கடமுடையான் 
ப்ரசாதங்களுடன் ,இறங்கி உடையவரை  எதிர்கொண்டழைத்தவர்.
”பெரியவரான தேவரீர் இப்படி சிரமப்படலாமா–? தேவரீர் விரும்பினால் 
யாரேனும் சிறியவரை அனுப்பி இருக்கலாமே –” என்று உடையவர் 
விண்ணப்பிக்க ,திருமலைநம்பிகள் ,”தேடித் தேடிப் பார்த்தும்,
அடியேனை விடச் சிறியவர் எவரும் இல்லை—-” என்று தன்னைத் 
தாழ்த்திப் பணிவுடன் சொன்னவர் .உடையவருக்கு, திருப்பதி மலையில் 
முதல் குன்று என்னுமிடத்தில் உள்ள ”பாதாள மண்டபத்தில்”
தினமும் காலை ,திருமலையிலிருந்து இறங்கி வந்து ,ஸ்ரீமத் 
ராமாயண ச்லோகங்களுக்கு விசேஷ அர்த்தங்களை ஒருவருட காலம் 
சொன்னவர்.அப்போதெல்லாம், உடையவர் திருப்பதிலிருந்து மலையேறி 
இந்த முதல் குன்றுக்கு வருவாராம். அங்கு இப்போதும் 
ஸ்ரீநிவாசப் பெருமானின் ”திருவடிச் சுவடுகள்” பாதாள மணடபத்தின் அருகே 
கல்லில் பதிந்து இருக்கக் காணலாம். (இவை பற்றிய விவரங்கள், 
குருபரம்பரா பிரபாவம் சொல்லும் வாய்ப்புக்கிடைத்தால் விரிவாகச் 
சொல்கிறேன்—)
திருமலைநம்பி  ,வாழ்ந்த  திருமாளிகை திருமலையில் தெற்கு மாட 
வீதியில் உள்ள முதல் கட்டிடம்.  ஏழுமலையான் –உத்ஸவர் —
புறப்பாட்டின்போது எல்லாம், இங்கு உள்ள திருமாளிகையில் 
திருமலைநம்பிக்கு அருளப்பாடு ஆகி , இங்கிருந்துதான் , வேத ,
திவ்யப்ரபந்த பாராயணம் தொடங்கப்படுமாம்.இப்போதும் உத்ஸவமூர்த்தி 
மாடவீதி புறப்பாட்டின்போது, இந்த சந்நிதியில் திருமலைநம்பி 
அர்ச்சா மூர்த்திக்கு ,மரியாதைகள் ஆகின்றன —
(கடந்த இரண்டு வருடங்களாகத் திருமலையில், புரட்டாசி மாத அநுஷ நக்ஷத்ர
உத்ஸவத்தில் அந்வயிக்கும் பேறு  கிடைத்துள்ளது—-அவதார உத்ஸவத்தை 
”திருமலை நம்பிகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கைங்கர்ய ஸபா 
சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்–முக்கியமாக கீழத்திருப்பதி–ஸ்ரீ கோவிந்தராஜன் 
ஸந்நிதி வடக்கு மாடவீதி வாசியான ஸ்ரீ உ.வே. கிருஷ்ணஸ்வாமி தாதாசார்ய ஸ்வாமி 
மற்றும் திருமலையில் திருமலை நம்பி மடத்தை நிர்வகிக்கும் ஸ்ரீமான் ராகவன் —
இருவரையும் சொல்லியாகவேண்டும்–சமீப காலமாக,  தி.தி. தேவஸ்தானமும் 
இதில் இணைந்து நடத்துகின்றனர்  )
 
தனியனின்  அர்த்தச்  சுருக்கம் 
லோகசாரங்க முனி தோள் தன்னிலே அமர்ந்து, தென்னரங்கனைத் 
திருக்கமலபாதம், அரையில் சிவந்த ஆடை, அயனைப் படைத்த எழில் உந்தி 
தேடற்கரிய திருவயிற்று உதரபந்தம் திருவாரமார்பு, உலகங்களையெல்லாம் 
முற்றும்   உண்ட கண்டம்,சிவந்த வாய், ஸதா விகஸிக்கும் அப்பெரியவாய 
கண்கள், நீலமேனி —என்றெல்லாம் அனுபவித்து மெய்மறந்தார் ,திருப்பாணாழ்வார். 
பெரிய பெருமாளின் நியமனத்துக்கு முன்பாக, காவிரிக் கரையிலிருந்தே 
வீணையும் கையுமாக பெரியபெருமாள் விஷயங்களான பாசுரங்களாலே 
அவனுடைய திவ்ய குணாதிசயங்களை அனுபவித்தவர்.பெரியபெருமாள் 
நியமனத்துக்குப் பின்பு, ”முனி வாஹனராகி ”  நேரிலேயே  அனுபவித்தவர் 
அதுமட்டுமின்றி, உலகறிய பெரிய பெருமாள் திருவடிகளில் அந்தர்ப்பவித்தார்–
அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் திருவடிகளில் –பரவினோம்—
சிரோபூஷணமாகக் கொண்டோம்—ஸ்தோத்ரம் செய்தோம்—-
 
 
 
 
 
 
 
 
 
 
தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—24
——————————————————————–
அவிதித விஷயாந்தரஸ் சடாரே 
ருபநிஷதா முபகா ந மாத்ர போக :
அபிசகுண வஸாத்த  தேகசேஷீ 
மதுரகவிர் ஹ்ருதயே ம மாவிரஸ்து 

இது ஸ்ரீ மதுரகவிகளின் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”க்கான தனியன்.
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளியது—
 ,திருக்குடந்தையில்,
”ஆராவமுதே—” என்கிறதிருவாய்மொழி அநுஸந்திக்கும்போது,
அந்த ஆயிரம் பாசுரங்களையும் அநுபவிக்க ஆசைப்பட்டவராய் 
அதை அறிவதற்கு திருநகரிக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைக் 
கேட்டார். அவர்கள், ”நாம் அறியோம்—ஆனால் –கண்ணிநுண் சிறுத்தாம்பு 
பாசுரங்களை உமக்குச் சொல்கிறோம்—பன்னீராயிரம் முறை இதை ஆவ்ருத்தி 
செய்யும்போது ஆழ்வாரைத் தரிசிக்கலாம், வேண்டுவதை அடையலாம்”
என்று சொல்லி, ஆழ்வார் திரு அவதாரம் முதலாக எல்லா திவ்ய சரிதங்களையும் 
சொல்லி, மதுரகவிகள் ஆட்பட்டமை யாவும் சொன்னார்கள். 
இங்ஙனம் ஆவ்ருத்தி செய்யும்போது, அந்த பிரபந்த அர்த்தத்தில் ஈடுபட்டு ,
இந்தத் தனியனும் இதற்கு அடுத்ததும் அருளியதாகச் சொல்வர் ——

இவரது சரிதம் ,தனியன்–3  மற்றும் 7 லும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும்,அவ்விவரங்கள் மீண்டும் இங்கே கொடுக்கப்படுகிறது–
 
ஸ்ரீமந் நாதமுநிகள்—வீரநாராயணபுரம் என்கிற காட்டுமன்னார்கோவிலில் 
சொட்டைக்குலத்திலகரான ஈச்வர முனிகளுக்கு, கலி 3985ல் ஸோபக்ருத் வருஷம் 
ஆனி ,அநுஷத்தில் அவதாரம். வேதவேதாந்த விற்பன்னர் ;யோகரஹஸ்யம் 
நன்கு அறிந்தவர்.மறைந்துபோயிருந்த ”திருவாய்மொழி ”முழுவதையும் மற்றும்
 மற்ற ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களையும், ஆழ்வார் திருநகரிக்குச் சென்று, 
அங்கிருந்தவர் நியமனப்படி, ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”பாசுரங்களை,
 ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில் பன்னீராயிரம் தடவை அநுஸந்தித்து ,
 தம்முடைய யோகதசையில் ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து , அவரிடமிருந்து, 
திருவாய்மொழியும் மற்ற எல்லாப் பிரபந்தங்களும் உட்பொருளுடன் அறிந்து,
ரஹஸ்ய மந்த்ரங்களையும் உபதேசிக்கப் பெற்றார். 
பிரபந்தங்களை, இயலும் இசையுமாகத் தொகுத்தார். முதலாயிரம், பெரிய திருமொழி ,
இயற்பா , திருவாய்மொழி என்று பிரித்து தன்னுடைய மருமான்களான 
கீழையகத்து ஆழ்வான்,  மேலையகத்து ஆழ்வான் இவர்களுக்கு, தேவகானமாகப் 
பாடும்பாடி , பழக்கினார் ஆதலால், இவர் , தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்.
இவருடைய பேரன் ஸ்ரீ ஆளவந்தார். 
ஸ்ரீமந் நாதமுநிகள் அருளிய நூல்கள்—ந்யாய தத்வம்,  யோகரஹஸ்யம் 
இவருடைய சிஷ்யர்களில்  ,உருப்பட்டூர் ஆச்சான் முக்கியமானவர்–இந்த உருப்பட்டூர் 
ஆச்சான் வம்சமே அடியேனின் பாக்யம் 
ஸ்வாமி தேசிகன் அதிகார ஸங்க்ரஹத்தில் ———
காளம் வலம்புரியன்ன  நற்காதலடியவர்க்குத் 
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசைதந்த வள்ளல் 
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே 
நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே 
                                                      என்கிறார் 
யதிராஜ ஸப்ததியில் —
நாதேந  முநிநாதேந  பவேயம் நாத வாநஹம்  |
யஸ்ய நைகமிகம்  தத்வம்  ஹஸ்தாமலகதாம் கதம்  || 
வேதங்களில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை ஆய்ந்து எடுத்து, உள்ளங்கை 
நெல்லிக்கனிபோலக் காட்டிய ,நாதமுனிகளை ,நமக்கு நாதனாகப் போற்றுவோம்.
முநித்ரயம் 
நாதமுநி 
யாமுனமுநி 
ராமாநுஜ முநி 
இந்த  த்ரயத்துக்கு ,ப்ரதம  முநி  இவரே—–
கி.பி. 917ல் தாது  வருஷம் மாசி மாதத்தில் சுக்லபக்ஷ ஏகாதசியில் ,
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே ”சம்போடை”என்கிற சொர்க்கப் பள்ளத்தில் 
திருநாடு அலங்கரித்தார்.

தனியனின் சுருக்கமான அர்த்தம் 

சடாரே:  அவிதித விஷயாந்தர :      ————-
நம்மாழ்வாரைக்காட்டிலும் வேறு ஒருவரை, ”ஸ்துத்ய தேவதையாக ”
அறியாதவர்.
சடாரே:  உபநிஷதாம்  உபகாந மாத்ர போக :   ———
ஆழ்வாரின் உபநிஷத் ரூபமான திவ்ய பாசுரங்களையே போகமாகக் 
கொண்டவர்—போக்யமாகக் கொண்டவர். 
சடாரே:குண வஸாத் ததேகசேஷீ   —————–
ஆழ்வாரின் அவதாரம் முதல் அவருடைய ,வணங்கத்தக்க கல்யாண 
குணங்களையும் கேட்டு தம்மிடத்தில் அநுக்ரஹித்த விசேஷமான  குணங்களையும் 
அனுபவித்து, ஆழ்வாருக்கே ”சேஷபூதராக ”ஆனவர்.
மதுரகவி——–
ஆறிய  நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு அனவரதம் அந்தரங்க அடிமைசெய்து 
மாறனையல்லால் என்றும்  மறந்தும் தேவுமற்றறியேன் என்று இருந்தவர் –மதுரகவிகள் .
மம ஹ்ருதயே  ஹ்ருதயே  ஆவிரஸ்து —–
அப்படியான பெருமை பொருந்திய மதுரகவிகள், என் மனஸ்ஸில் 
ஆவிர்ப்பவிக்கட்டும் –இதனால், மதுரகவிகளை விட்டுப் பிரியாத 
நம்மாழ்வாரும் ஆவிர்பவிப்பர் என்றும் கருத்தாகும் –இந்தப் 
ப்ரார்த்தனைப்படியே நம்மாழ்வாரும் மதுரகவிகளோடு எழுந்தருளி,
நாலாயிரத்தையும் திருமந்த்ரார்த்தங்களையும் நாதமுனிகளுக்கு யோகதசையில் 
உபதேசித்து அருளினார் 
இப்படியாக, மதுரகவிகளை வேண்டி, அவரையே சரணமாக அடைகிறார் —–
mathurakavikal knew sri sadagopar –nammaazhvaar as his only true preceptor and he knew none 
other than him..He became very happy by singing these pasurams which are  holy upanishad meanings .
He hailed Nammaazhvar as his supreme master because of his unparalelled qualities and virtues 
May this saint Mathurakavikal appear in my heart and bless me—–
 

தனியன்—தெரிவோம்—தெளிவோம்—-25
———————————————————————
வேறொன்றும்  நான்   அறியேன் வேதம் தமிழ்  செய்த 
மாறன் சடகோபன் வண் குருகூர் —ஏறு எங்கள் 
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார்  எம்மை 
ஆள்வார்  அவரே  அரண் 

இதற்கு  முந்தைய தனியனில் விவரித்ததைப் போல 
இந்தத் தனியனும் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளியதே—-
இவருடைய சரிதம் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
  வேதத்தைத் தமிழில் 1296 பாசுரங்களாக—
ருக்வேத ஸாரம்—திருவிருத்தம்—100 பாசுரங்கள்
 யஜுர் வேத ஸாரம் —திருவாசிரியம்—-7 பாசுரங்கள் 
ஸாம வேத ஸாரம் —-திருவாய்மொழி—1102 பாசுரங்கள் 
அதர்வண வேத ஸாரம் —பெரிய திருவந்தாதி–87 பாசுரங்கள் 
அருளிய
 மாறன் என்றும் , சடகோபன் என்றும் போற்றப்படுபவரும்  
திருக்குருகூருக்கு ஸ்வாமியானவரும் வேதங்களின் உட்பொருள் யாவும் மனத்தில் பதியுமாறு 
நிறுத்தின —தக்கசீர் சடகோபன் என்கிற திருநாமமுள்ளவரும் 
முழுவதும் எம்பிரான் நின்ற புகழ்  ஏத்த அருளினவரும்  
தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய் தேவு மற்றறியேன் 
என்று ஸ்தோத்ரம் செய்த – இப்படிக்கொத்த மதுரகவிகள் 
சடகோபன் என்கிற ஆழ்வாரைத்தவிர்த்து மற்றொருவரையும்  நான் அறியேன்–
என்று பொருள்.
 
ஸ்வாமி தேசிகன் சொல்கிறார்—
உலகம் படைத்தான் கவியாயின மாறனுக்கு அன்பனாய் 
அவர் பணி உரைத்தே மதுரகவியான ஆழ்வார் 
மதுரகவிகளை ஆழ்வார் ஆண்டதைப்போல , தம்மை மதுரகவிகள் 
ஆள்வார் என்கிறார்.——-
அவரே –மதுரகவிகளே—- ரக்ஷகர்–அரவணைப்பு 

Sri Mathurakavi hails Sri Nammaazhvar —
Sadagopa alias Maran has rendered into tamil the salient features of Vedas.
He is the Lord of Thirukkurukoor
He is my ( Mathurakavi )sole sustenance
He knows not anyone else than Sadagopa 
Such a Saint Sri Mathurakavi is the only refuge; he is the only protector

 
 
 
 தனியன்—தெரிவோம்—-தெளிவோம்—-26
—————————————————————————

   கலயாமி  கலித்வம்ஸம்  கவிம் லோக திவாகரம் 
   யஸ்ய கோபி : ப்ரகாஸாபி : ஆவித்யம்  நிஹதம் தம  : 

இந்தத் தனியனை  அருளியவர் திருக்கோட்டியூர் நம்பிகள்.
ஸ்ரீ ஆளவந்தார் திருவடியில் , திருமங்கை ஆழ்வாரின் 
”பெரிய திருமொழி”வ்யாக்யான அர்த்தங்களைக் கேட்டு ,
அவற்றில் மிகவும் ஈடுபட்டு ,இந்தத் திருமொழியை ,
அஞ்ஞானிகள் அதிகரிக்கும்போது, ஞானம் பிறந்து உஜ்ஜீவிப்பர் 
என்று அகத்தில் பூரித்து, இந்த ஆழ்வாரைச் சரணம் 
அடைபவராய், இந்தத் தனியனை அருளியதாகச் சொல்வர்.
இவர் கலி 4089,  கி.பி. 987 ஸர்வஜித் வருஷம் ,வைகாசி 
ரோஹிணியில் திருக்கோஷ்டியூரில் அவதாரம்.
திருக்கோட்டியூர் பூரணர் என்பதும் இவரே —-
”ரஹஸ்யத்ரயம் ” என்கிற அஷ்டாக்ஷரம்,, த்வயம், சரமஸ்லோகம் 
இவற்றின் உட்பொருள் முழுவதையும் மிகவும் நுணுக்கமாக 
ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அருள, அவற்றை ஆழமாகக் கற்றறிந்தவர் .
ஆளவந்தாரிடமிருந்து, ”பவிஷ்யதாசார்ய ”ரான  உடையவரின் 
அர்ச்சாதிருமேனியை அருளப்பெற்றவர். இதே உடையவரை , 
ரஹஸ்யத்ரய உட்பொருளை அவருக்கு உபதேசிக்க ,அவரை,
18 முறை திருக்கோஷ்டியூருக்கு நடந்து வரச்  செய்து ,அவரது 
உறுதியை மெச்சி , ரஹஸ்யத்ரயஉள்ளார்ந்த கருத்துக்களை 
உபதேசித்தவர்—
உடையவரின் கருணை உள்ளத்தில் கசிந்து, அவரை ”எம்பெருமானார்”
என்று திருநாமமிட்டு அழைத்தவர்.நம்முடைய ஸம்ப்ரதாயத்துக்கு 
”எம்பெருமானார் தர்ஸனம்”  என்று பெயரிட்டவர். திருமங்கை ஆழ்வாரின் 
”பெரிய திருமொழிக்கு”த் தனியன் இட்டவர்.
தனது குமாரன் குமாரத்தி இருவரையும் உடையவரின் சிஷ்யர்களாக 
ஆக்கியவர் .  திருமாலை ஆண்டானை ,உடையவருக்கு ,திருவாய்மொழியின் 
அர்த்தவிசேஷங்களை உபதேசிக்குமாறு அவரை நியமித்தவர்.
இராமாநுசருக்கு , மடைப்பள்ளி கைங்கர்யம் செய்ய ”கிடாம்பி ஆச்சானை”
நியமித்தனர். இவரது சரிதம் விரிக்கின் பெருகும்;குருபரம்பரை 
உபந்யாஸத்தின்போது விரிவாகப் பார்க்கலாம்.

  தனியனின் அர்த்தச்  சுருக்கம்–

கவிம் லோக திவாகரம்—-
ஸூர்யன் —திவாகரன்—வெளி இருளைப் போக்குமாப்போலே .
இவரது பாசுரங்கள், ஜனங்களுக்கு ,உள் இருளாகிய அஞ்ஞானத்தைப் 
போக்குவதாலே இவர் விலக்ஷணமான ஆதித்யர் என்றபடி——-
கலி த்வம்ஸம் —கலியின் கடுமையைப் போக்குவிப்பவர் –த்வம்ஸம் செய்பவர்.
கலயாமி–அப்படிப் புகழ் பெற்ற ஆழ்வாரைச் சரணமடைகிறேன்—

ப்ரகாஸாபி : யஸ்ய கோபி :—–இவரது பாசுரங்கள் மிகக் கம்பீரமானவை;
ஆனாலும், எல்லோருக்கும் எளிதாக அர்த்தங்களைத் தெளிவிக்கும்  

ஆவித்யம்  தம :  நிஹதம்:—அவித்யை, ப்ரக்ருதியாகி 
இதற்குத் தொடர்பான ”தமஸ்” வேரற்று வீழ்ந்தது ,  என்றபடி 
இவரது திருமொழியால், செவிபடைத்தார் அனைவரும் தத்வ விவேகம் 
பெற்று, உபாயத்தில் இழிந்து, புருஷார்த்தத்தை அடைவர்; அகங்கார, மமதை ,
இவற்றால் வரும் ப்ரக்ருதி சம்பந்தத்தை போக்கும் ; இப்படி உபகரித்து 
அருளியவரான திருமங்கை ஆழ்வாரைச் சரணமடைகிறேன்—என்றபடி— 

தனியன் —-தெரிவோம்—தெளிவோம்  –27 
————————————————————————————–
 
 
வாழி  பரகாலன்  ,வாழி கலிகன்றி 
வாழி குறையலூர் வாழ்வேந்தன் —-வாழியரோ 
மாயோனை வாள் வலியால்  மந்திரங்கொள் 
மங்கையர்கோன்  தூயோன் சுடர்மானவேல் 
 
இதுவும் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்களுக்கான 
2வது  தனியன்  என்பர்—-. 
 
இந்தத் தனியனை  அருளியவர்  எம்பெருமானார் .
இவர், கலி 4119 கி.பி. 1017 ம்  ஆண்டில்,சித்திரைத் 
திருவாதிரையில் ஸ்ரீபெரும்பூதூரில் கேசவ ஸோமயாஜி —
காந்திமதி தம்பதியருக்குப் புத்ரனாக அவதாரம்.  
இவரது சரிதத்தில்  ,இவரது ஆயிரமாவது ஆண்டு 
திருநக்ஷத்ர பூர்த்தி சமயத்தில் ,எந்த 
ப்ரபாவத்தை  எடுத்துச் சொல்ல !
மிக மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றாலும் 
நாளும்  போதாது;  ஏடும் போதாது—-
குரு பரம்பரை உபன்யாஸம்  செய்யும்போது ஓரளவு 
சொல்லலாம்.
இப்போது—- 
 
இவர் ஆதிசேஷனின் அவதாரம்.திருக்கோட்டியூர் நம்பிகள், 
கண்ணனே, இராமாநுசன் என்பார் .
கண்ணன் , வசுதேவர்–தேவகிக்கு எட்டாவது  குழந்தை.
ஸ்ரீ உடையவர் , பெருமாள் பிராட்டி நீங்கலாக , குருபரம்பரையில் 
எட்டாவது ஆசார்யன். 
திருவரங்கத்தமுதனார் தனது இராமாநுச நூற்றந்தாதியில் 
33வது பாசுரத்தில் 
அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்  கை ஆழி என்னும் 
படையோடு நாந்தகமும் படர் தண்டும்  ஒண் சார்ங்க வில்லும் 
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு  என்று இடையே 
இராமாநுச  முனியாயின இந்நிலத்தே 
என்கிறார் 
பகவானின் பஞ்சாயுதங்களின் அவதாரம்  என்று சொல்கிறார் 
 
தனியனின் சுருக்கமான அர்த்தம் —–
 
அஸ்மத்தேசிக பங்க்தி வைபவமிமம் யே  வா படந்த்யந்வஹம் 
             ச்ருண்வந்தோ விபவைகதேசமபி  வா ஸத்ய :புநீதாஸ்வயம்  |
தே ஸர்வாந் புவி மாநவாநபி புநந்த் யந்யேசதத்  ஸம்ச்ரயா :   
           ப்ராயச்சித்தமிதம் பவேத் புவி ந்ருணாம் மஹா பாப்மநாம் ||
 
த்ருதீய ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர்  மூவாயிரத்தில் சொல்லியுள்ளார் .
 
ஒருசமயம் 
ஸ்ரீமந் நாதமுநிகள் சித்திரை உத்ஸவத்தில் ,திருக்குடந்தையில் 
ஆராவமுதனை திருத்தேரில் ஸேவித்து அவ்வழகில் ஈடுபட்டு ,இந்தத் 
 திருத்தேரைப்போலவே இவர் ஆராவமுதாழ்வான் ஆனார்; இத்தேரும் 
பெருமாளும் இங்கிருப்பதால் இந்த ஊர் ”செல்வம் மல்கு 
தென்திருக்குடந்தையாய்த்து ”  என்றும், 
அச்சொல்லை உடைய ”திருவெழுகூற்றிருக்கை ” யிலும் 
அந்தத் தேரிலும் ஆராவமுதனிடமும் ஈடுபட்டு அந்தப் பிரபந்தம் 
”ரதபத்ததி ” யாகையாலே ,அந்தத் திருவெழு கூற்றிருக்கையை 
அப்போது அநுஸந்தித்தார் என்கிற வ்ருத்தாந்தத்தை ,எம்பெருமானார் 
பக்கலிலே  ஒருகால் கூரத்தாழ்வான் திருவெழு கூற்றிருக்கையின் 
அர்த்தத்தை அதிகரிக்கும்போது கேட்டு , அப்படிப் பெருமை வாய்ந்த
திருமங்கை ஆழ்வார் விஷயத்தில் ”மங்களாசாஸனம் ” பண்ணுகிறவராய் 
”வாழி பரகாலன் —-” என்கிற இந்தத் தனியனைஸ்ரீ உடையவர்  அநுஸந்தித்து 
அருளியதாலே , இந்தத் தனியனை ”’  திருவெழு கூற்றிருக்கை”க்குத் 
தனியனாக ”பிள்ளான் ” நியமித்து அருளியதாகவும் சொல்வர்.     
 
  வாழி பரகாலன்——விரோதிகளை வெல்பவர்; இவர் திருமங்கை ஆழ்வார்  
இவர் நித்யமும்  மங்களத்வத்தை  உடையவராக வேண்டும் என்பதாக 
”வாழி ” என்கிறார்.
வாழி கலிகன்றி —–இவர் கலியுக தர்மத்தைப் போக்குபவர் ;  அப்படியெனில் –?
  க்ருதயுக  தர்மத்தை இக்கலியுகத்தில் ஸ்தாபிப்பவர் .இவர் நித்யமும்  
மங்களத்வத்தை  உடையவராக வேண்டும்
வாழி குறையலூர் வாழ்வேந்தன்——குறையலூரில் வாழ்கின்ற  வேந்தன் 
வாழி—-நித்யமும்  மங்களத்வத்தை  உடையவராக வேண்டும்
மாயோனை வாள் வலியால்  மந்திரங்கொள்——அரங்கத்து  அரவணையில் 
உறங்குவதுபோல் பள்ளிகொள்ளும் ”மாயோன்” –திருவரங்கத்தான் —
அழகியமணவாளன் —–இவனை—-மந்த்ரத்தைச் சொல்லாவிடில் 
வெட்டிவிடுவேன் என்று தன்னுடைய வாளின்   வலிமையைக் காட்டி,
மந்த்ரத்தை க்ரஹித்தவன் 
தூயோன்—‘ அஸாதுப்யோர்த்தமாதாய   ஸாதுப்ய: ஸம்ப்ரயச்சதி—”  
என்கிறபடி ,  -வைணவரல்லாதவரின் தனங்களைக் கொள்ளையடித்து ,
ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதித்துப் பரிசுத்தமானவர் 
சுடர்மானவேல் —-மிகவும் மகத்தான அதி தேஜஸ்ஸை உடைய 
வேலை ஆயுதமாக உடையவர் 
மங்கையர்கோன் —-திருமங்கையில் உள்ளவர்கட்கு அரசன் –ராஜன் .
 
வாழியரோ—இவ்வளவு பெருமை வாய்ந்த திருமங்கை ஆழ்வார் 
நித்ய மங்களத்துடன்  வாழவேண்டும்  என்றபடி—— 
 
பகவந் நாம ஸங்கீர்த்தனம்  பாப நிவர்த்தகம் என்னுமாப்போலே,
ஆசார்யர்களின் திருநாம ஸங்கீர்த்தனமும் பாப நிவர்த்தநார்த்த 
பிராயச் சித்தமாம்  
‘ 
 
 
This series is continued from Muscat 

தனியன்—தெரிவோம்—-தெளிவோம்—-28
——————————————————————-

 நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி 
  நஞ்சுக்கு நல்லமுதம்  தமிழ் நன்னூல் துறைகள் 
அஞ்சுக்கிலக்கியம்  ஆரணசாரம் பரசமயம் 
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே 

இதுவும் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிப்
பாசுரங்களுக்கான 3 வது தனியன். கூரத்தாழ்வான் 
இயற்றியது. இவரது சரிதம் தனியன்கள் 3லும் ,4லிலும் 
சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தனியனை  அருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானைப் பற்றிய குறிப்பு 
(மிகச் சுருக்கமாக)
 
ஸ்ரீ கூரத்தாழ்வான் ,காஞ்சி மாநகரின் வடமேற்கே அமைந்துள்ள ,
கூரம் என்கிற ”ஸ்ரீ க்ராமத்தில் ”, கி.பி. 1031ம் ஆண்டு, தை மாத ஹஸ்த 
நக்ஷத்ரத்தில் ,ஹரித கோத்ரத்தில், அவதரித்தவர் .ஸ்ரீ வத்ஸமிச்ரர்,என்றும் 
ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்றும் அழைப்பர்.செல்வச்  செழிப்பில் மிதந்தவர்.
( குரு பரம்பரா ப்ரபாவம்—, உபந்யஸிக்கும்போது,விரிவாகச் சொல்கிறேன் )

எம்பெருமான், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் –இவர்களிடம்,விசேஷ பக்தியுடன் 
இருந்ததால், ”ஆழ்வான் ” என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
பகவானிடம், அனவரதமும், அத்யந்த பக்தியுடன் விளங்கினார்.
 இதனால்,செல்வத்திலும், சுகபோகங்களிலும் பற்று,  அற்று விழ , 
எல்லாச் செல்வங்களையும் ஸத்கார்யங்களுக்கும், வறியோர்க்கும் வாரிவழங்கி,’
ஸதாசார்ய சம்பந்தத்தைத் தேடி காஞ்சிக்கு  வந்தார்.

இவர், எம்பெருமானாரை விட வயதில் மூத்தவர்.அதிக திருநக்ஷத்ரங்கள் உள்ளவர்.
ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் -இவர்களின் திருத்தகப்பனார் .
நிகரில்லாத வைராக்யமும்,நெறியும் எம்பெருமானார்க்கு இணையான 
ஜ்ஞானமும்  கொண்டவர். 

எழில்நகர் புகழ்க் காஞ்சிக்கு வந்த இவர், அங்கு, ஸன்யாச ஆஸ்ரமத்தில் ,பரம 
தேஜஸ்ஸுடன் வீற்றிருந்த யதிராஜரின் திருவடிகளைச் சரணம் என்று அடைந்து,
”பஞ்ச ஸம்ஸ்காரம் ”  முதலியவற்றைப் பெற்று , யதிராஜரை எப்போதும் 
பிரியாமல், அவருக்கே அனவரதமும் கைங்கர்யம் செய்து வந்தார். 
இந்த  நிலையில்,ஸ்ரீ ராமாநுஜர் , ஸ்ரீ ஆளவந்தாரின் உள்ளக்கிடக்கையை 
நிறைவேற்ற சங்கல்பம்  மேற்கொண்டு,”ப்ரஹ்ம ஸுத்ரத்”துக்கு வ்யாக்யானம் 
எழுதுவதற்கு யோசித்தார்.காஷ்மீர  தேசத்தில், சாரதா  பீடத்தில்,
”போதாயன வ்ருத்தி”க்ரந்தம் இருப்பதை அறிந்து, அங்கு , கூரத்தாழ்வானுடன் 
சென்றார்.
சாரதா பீடத்தில் அங்குள்ள அதிகாரிகளின் அநுமதியுடன் ,”போதாயன வ்ருத்தியைப் 
படித்து, அதை நகலெடுக்க முற்பட்டார்.
இதை வேறு விதமாகவும் கூறுவர்.
படித்த நிலையில், பாதியில்,   ஒருநாள், அந்த அதிகாரி க்ரந்தத்தைப் பறித்துச் 
சென்றதாகவும்  கூறுவர் .
யதிராஜர் மிகவும் வருத்தமடைந்தார். அப்போது கூரத்தாழ்வான், யதிராஜரிடம்
”தேவரீர் உறங்கும் வேளையில் அடியேன் இந்த க்ரந்தம் முழுவதையும் படித்து 
மனத்தில் நிறுத்திவைத்துள்ளேன்;கவலை வேண்டா” என்று விண்ணப்பித்தார்.
ஒரே ராத்ரியில், லக்ஷ க்ரந்தாத்தமகமான (சதகோடி என்றும் சொல்வர்),
போதாயன வ்ருத்தியை மனப்பாடம் செய்துகொண்டார்.

இதனால் சந்தோஷம் அடைந்த யதிராஜர் ,கூரத்தாழ்வானுடன் ஸ்ரீரங்கம் திரும்பி 
வந்தார்.யதிராஜர் சொல்லச் சொல்ல, கூரத்தாழ்வான் எழுத, இதுவே 
”ப்ரஹ்ம ஸுத்ரத்”துக்கு , விசிஷ்டாத்வைதபரமான வ்யாக்யானமாயிற்று.
இதுவே ‘காஷ்மீரத்தில் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியால் ”ஸ்ரீ பாஷ்யம்” என்று 
பஹுமானிக்கப்பட்டது .

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ,சோழநாட்டை ஆண்ட ,தீவிர சிவபக்த 
அரசன் , அவனுடைய அமைச்சன் நாலூரானுடன் சேர்ந்துகொண்டு, 
 ”சிவாத் பரதரம் நாஸ்தி”—சிவனை விடஉயர்ந்த பரதேவதை கிடையாது என்று
 ஒரு ஓலையில் எழுதி வைணவ வித்வான்ககளிடம், கட்டாயப்படுத்திக் கையொப்பம் 
வாங்கிவரும்போது, யதிராஜரிடம் அப்படிக் கையெழுத்துப் பெறவேணும் என்று 
நாலூரான் தூண்டுதலால், ஸ்ரீரங்கத்துக்குச் சேவகரை அனுப்பி, யதிராஜரை 
அழைத்து வரச்  சொல்ல, இதை அறிந்த கூரத்தாழ்வான், தானே காஷாயம் தரித்து, 
பெரியநம்பிகளுடன் அரச சபைக்குச் சென்று, 
ஏக : ப்ராஸீஸரத் பாதம், அந்ய :ப்ராக்ஷாலயந் முதா |
அபரோ அதீதரந்மூர்த்நா   கோதிக :தேஷூ  கண்யதாம்   ||
ஒருவன் திருவடியை நீட்டினான்;இன்னொருவன் சந்தோஷத்துடன் அத்திருவடியை 
அலம்பினான்;மற்றோருவன், அத்திருவடி தீர்த்தத்தைத் தலையில் தரித்தான்.
இவர்களில்  உயர்ந்தவர் யார்  என்பது    உங்களுக்குத் தெரியுமே  !
இதனால் கோபமடைந்த அரசனும் நாலூரானும் மிகக் கடுமையாக நிர்ப்பந்தம் 
செய்யவே, 
”த்ரோண மஸ்தி தத : பரம் “‘ ( முகத்தல் அளவையில்,சிவம் என்றால் ”குறுணி”
”த்ரோணம் ”என்றால் பதக்கு )என்று எழுதிக் கையெழுத்திட , அரசன் ,கூரத்தாழ்வானின் 
கண்களைப் பறிக்க சேவகர்களுக்குக் கட்டளையிட, 
உடனே கூரத்தாழ்வான் ”உன்னைப்போன்ற பகவத் த்வேஷிகளைப் பார்த்த கண்கள் 
எனக்கு வேண்டியதில்லை” என்று கூறி, தன்னுடைய கண்களைத் தன்  கையாலேயே 
பறித்து, அரசவையில் வீசி எறிந்தார்.பெரியநம்பிகளும் கண்களை இழந்தார்.
திரும்ப ,ஸ்ரீரங்கம் வந்தவர்,
 
கண்களை இழந்தநிலையிலும்  பெரியபெருமாளைத் தரிசிக்க,  தட்டுத் தடுமாறி 
கோபுர வாயிலுக்குப் போக, காவலர்கள், ‘உடையவரின்  சிஷ்யர்கள் எவரையும் 
கோயிலில் அனுமதிக்க அதிகாரமில்லை; அவருடைய சம்பந்தம் இல்லை என்று சொல்வோர் 
உள்ளே செல்லலாம் ”என்று தடுக்க, எம்பெருமானார்சம்பந்தமில்லாத எம்பெருமான் எனக்கு வேண்டாம் 
என்று சொல்லி, தரிசனம் செய்யாமலே திரும்பினார்;இது அவருடைய 
அளவில்லா ஆசார்ய பக்தியைக் காட்டுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, எம்பெருமானார் ஸ்ரீரங்கம் திரும்பிவந்து,கூரத்தாழ்வான் 
திருமாளிகைக்குச் சென்று, ஆழ்வானை வாரி அனைத்து, ”ஆழ்வானே —விசிஷ்டாத்வைத 
தர்சனத்துக்காக ,உமது தரிசனத்தை இழந்தீரே ”என்று விம்மி அழுதார். 
அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமண் கோணியது என்று அபசாரப்பட்டிருப்பேனோ ”
என்றாராம். இப்படிப் பல செய்திகள் இவருடைய சரிதத்தில் உள .விரிக்கின் பெருகும்.
ஒருசமயம், கூரத்தாழ்வான்,  ரங்கநாதரை ஸேவிக்கும்போது ‘இப்போதே பரமபதம் அடைந்து
 உமக்குக் கைங்கர்யம் செய்யவேணும் ” என்று பிரார்த்திக்க, பெரியபெருமாளும் ”அப்படியே” 
என்க, ஆழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளைத் த்யானித்தபடி அவ்வாறே பரமபதம் அடைந்தார்.
இவர் எழுதிய நூல்கள்—-
பஞ்சஸ்த்வம் –சாரீரக ஸாரம் என்பர்.
புருஷகார பூதையான ஸ்ரீரங்க நாச்சியாரைப் பற்றி—— ஸ்ரீஸ்த்வம் 
பரமபதநாதனைப் பற்றியதும் ஸ்ரீபாஷ்ய ஸாரமுமான —-ஸ்ரீ வைகுண்டஸ்த்வம் 
விபவாதாரங்களைச் சொல்லும் —-அதிமாநுஷஸ்த்வம் 
திருமாலிருஞ்சோலை அழகனைப் பற்றி–ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்த்வம் 
கச்சிநகரப்பனைப்பற்றி —ஸ்ரீ வரதராஜஸ்த்வம்  
  
அபிகமன ஸாரம் —–வடுகநம்பிகளுக்காக 
சரம ச்லோக வ்யாக்யானம் 
புருஷஸூக்த பாஷ்யம் 
யமக ரத்நாகரம் (பகவான் க்ருஷ்ணனைப் பற்றி தெலுங்கு லிபியில் 
மஹா காவ்யம் என்பர். இதை, கூரத்தாழ்வான் எழுதவில்லை என்றும்,
அவர் வம்சத்தில் உதித்த வேறொரு ஸ்ரீவத்ஸாங்க மிச்ரர் எழுதியது என்றும் சொல்வர் )
விவாஹம் முதலிய சுப முஹூர்த்தங்களில் பாடப்படும் லக்ஷ்மி கல்யாணமே வைபோகமே, 
மடியிலெடுத்துப் பாலகனை, ஸ்ரீராம், ஜய ஜய , லாலி,  ஊஞ்சல் —-இவைபோன்றவைகளும் 
கூரத்தாழ்வான் அருளியதாகவும் விவாஹ காலத்தில்,”வாரணமாயிரம்”அநுஸந்திக்கும்படியான 
ஏற்பாடுகளைச் செய்தவரும் இவரே என்பர்.
ஆழ்வான், கூரநாதர், கூராதிநாதர் ,நடமாடும் பதஞ்சலி,ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர்,ஸ்ரீ வத்ஸசிஹ்னர் ,
எல்லாமும் இவரே—-
வடுகநம்பியின் ஆசார்யன் —
அனுஷ்டானத்தில் பலரைத் நிறுத்தியவர்—-
இவரின் முன்னோர்கள்,கூரத்தில் குடியேறுவதற்கு முன்பு, திருமாலிருஞ்சோலை அடிவாரத்தில், 
சுந்தரத்தோளுடையானுக்குக் கைங்கர்யங்கள் செய்துவந்தனர் என்று சொல்வர்.
இவர் ஆத்மகுணச் செம்மல் 
பஞ்சகால பராயணர் 
நடமாடும் பதஞ்சலி 
எம்பெருமானாரின் நிகரற்ற அத்யந்த சிஷ்யர் 
எம்பெருமானார்க்குப் ”பவித்ரம்”போன்றவர் 
முக்குறும்பறுத்தவர் 
தர்ஸனத்துக்குத் தர்ஸனம் தந்தவர் 
பெரியநம்பிகளால் கொண்டாடப்பட்டவர் 
எம்பெருமானாரின் உறவுக்காக, எம்பெருமானின் ஸேவையையே புறந்தள்ளியவர் 
ஆசார்யனையே ,உய்வித்த சிஷ்யர் 
வேதமாதாவின் ”திருமாங்கல்யம்”எனப்போற்றப்பெறும் பஞ்சஸ்தவங்களை அருளியவர் 
இவருடைய திருமாளிகையை, ஸ்ரீரங்கம் கிழக்குச் சித்திரை வீதியில் இன்றும் ஸேவிக்கலாம் 

தனியனின் அர்த்தச் சுருக்கம் 
———————————————–

 பரகாலன் பனுவல்களே ——திருமங்கை ஆழ்வாரின் திவ்ய ஸூக்திகள் —
பனுவல்களே —திவ்ய ஸூக்திகளே  –பாசுரங்களே 

நெஞ்சுக்கிருள்கடி தீபம்—–அஜ்ஞானிகளின்  அஜ்ஞானத்தை அழிக்கின்ற/போக்குகின்ற 
அழகிய ஜ்ஞான விளக்கு 

அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்—–எவராலும் நிவர்த்தி செய்ய இயலாத 
அடுத்தடுத்த நீண்ட நெடிய பிறவிகளுக்கு ,அந்த ஜன்மப் பரம்பரை என்கிற விஷத்தை 
முறிக்கின்ற / அழிக்கின்ற நல்ல அருமையான அமுதம் 

தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம்—–தமிழுக்கு இலக்கணமான 
நன்னூல் சொல்கின்ற ஐந்து துறைகளுக்கு —  இவருடைய பாசுரங்கள் இலக்கியம் 
 ஆரணசாரம்——-வேதங்களின் சாரம்,  அஷ்டாக்ஷரம் என்கிற திருமந்திரம்;
இதற்கும் சாரம் —நம : சப்தம்; இந்த சப்தார்த்தம் ,ப்ரபத்தி ஜ்ஞானம் 
இது, தத்வ ஜ்ஞான  பூர்வகமாகவும் புருஷார்த்த சாதகமாகவும் இருப்பதாலே 
இந்தத் திருமொழி ,”நம :” சப்த அர்த்தமாக கொண்டாடப்பட்டு , சர்வ உபநிஷத் 
சாரமாகவும் பெருமை உடைத்து;
பரசமயம் பஞ்சுக்கனலின் பொறி—- வேதங்களுக்கு விரோதமாகச் சொல்கின்ற 
பிற மதங்கள் என்கிற ”பஞ்சுக்கு” நெருப்புப் பொறி 
திருமங்கை ஆழ்வாரின் திவ்ய ஸூக்திகளை  அதிகரித்தவர்கள் ,
தத்வ ஜ்ஞான புருஷார்த்த ஜ்ஞானத்துடன் சரணாகதி சாஸ்த்ர 
ப்ரவர்த்தகராய் , பிற மதாந்திர நிராஸகர்களாய் , ப்ரஸித்தி 
பெறுவர் —என்கிற கருத்து–
 
This series is continued from Muscat
 
அடியேன்—–
தனியன் 3,  4 மற்றும் 28 இவைகளில் இப்படிச் சொல்லி இருக்கிறேன்—–
 
ஸ்ரீ கூரத்தாழ்வான் ,காஞ்சி மாநகரின் வடமேற்கே அமைந்துள்ள ,
கூரம் என்கிற ”ஸ்ரீ க்ராமத்தில் ”, கி.பி. 1031ம் ஆண்டு, தை மாத ஹஸ்த 
நக்ஷத்ரத்தில் ,ஹரித கோத்ரத்தில், அவதரித்தவர் .ஸ்ரீ வத்ஸமிச்ரர்,என்றும் 
ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்றும் அழைப்பர்.செல்வச்  செழிப்பில் மிதந்தவர்.
—————————————————————
ஸ்ரீ கூரத்தாழ்வானின்  அவதாரம்  சௌம்ய ஆண்டு (1009ம் ஆண்டு ) தை மாதம் ஹஸ்த நக்ஷத்ரம் 
என்றும் சான்றுகள் உள்ளன; மேலும் ,அவர் இராமானுசரைவிட 8 வயது மூத்தவர் என்பதிலும் தட்டில்லை —
ஏனெனில், ஸ்ரீ இராமானுசர் கி.பி. 1017ல் அவதரித்தார் என்பதை நோக்கும்போது, இது சரியென்று 
பெரியோர்கள் சொல்வர்.
எது எப்படி இருப்பினும்,  கூரத்தாழ்வான் வைணவ உலகிற்கும், ஸ்ரீ உடையவருக்கும் செய்த  
அளப்பரிய பணிகள், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை——
இவைகளை, குரு பரம்பரையைப் பற்றி அடியேன் சொல்லும்போது விரிவாக எடுத்துரைக்கிறேன்–
 
அடுத்து——— 
 
  தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—-29
———————————————————————————

எங்கள்  கதியே ! இராமாநுச  முநியே  !
சங்கை கெடுத்தாண்ட  தவராசா !—-பொங்குபுகழ் 
மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரமனைத்தும் 
தங்கு மனம் நீ எனக்குத்  தா .
இதுவும் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்களுக்கான 
4 வது தனியன். 
ஸ்ரீ எம்பார்  அருளியது.

பெரிய திருமலை நம்பிக்கு , இரண்டு சகோதரிகள் .
மூத்தவர் பூமிப்பிராட்டி என்கிற காந்திமதி, உடையவரின் தாயார்.
இளைய சகோதரி பெரிய பிராட்டி—-மதுரமங்கலம் கமல நயன பட்டரின் 
மனைவி. உடையவருக்கு, சிறிய தாயார் என்கிற உறவு. 
 
இவருக்கு, கலி 4127, கி.பி. 1025ம் ஆண்டு குரோதன வருஷம் , தை மாத 
புனர்பூசத்தில் கோவிந்தன் என்கிற திருநாமத்துடன் ,பிறந்தார். 
இளையாழ்வார் என்கிற உடையவரும் , கோவிந்தனாகிய இவரும் 
திருக்கச்சியில் ,யாதவ ப்ரகாசரிடம் கல்வி பயின்றனர்.
 
இந்தக் கல்வியானது, அத்வைதபரமாக இருந்ததால், அவ்வப்போது 
இளையாழ்வார் ,அதற்கு வைணவபரமாக வ்யாக்யானம் சொல்வார். 
யாதவ ப்ரகாசருக்கு இது பிடிக்கவில்லை. இளையாழ்வார்,கோவிந்தன்
மற்றும் பல சிஷ்யர்களுடன் காசி யாத்ரைக்குக் கிளம்பி, நடு வழியில் 
அடர்ந்த காட்டில் இளையாழ்வாரை முடித்துவிடத் திட்டம் வகுத்தார். 
 
இதை அறிந்த கோவிந்தன் ,இளையாழ்வாருக்கு இதைச் சொல்ல  ,
இளையாழ்வார் அங்கிருந்து தப்பித்து ,காஞ்சி திரும்ப காட்டிலேயே 
நடக்க, அப்போது பேரருளாளனும் பெருந்தேவித் தாயாரும் 
வேடுவன் , வேடுவச்சி உருவங்களில் அங்கு வந்து இளையாழ்வாரைக் 
காப்பாற்றினார்கள்.  
 
காசியில் , கங்கா ஸ்நானத்தின்போது,யாதவ பிரகாசர், தனது ”சித்து” வேலையால் ,
கோவிந்தனின் உள்ளங்கையில் சிவலிங்கத்தை வரவழைத்து, 
இவருக்கு, ”உள்ளங்கை கொணர்ந்த நாயனார்” என்று பெயரிட்டு, 
காளஹஸ்தியில் சிவா பூஜையில் ஈடுபடவைத்தார். 
 
இளையாழ்வார், யதிராஜராக ஆகி, தனது சிறிய தாயாரின் குமாரர் 
கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ள, ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் மூலமாக 
பெரிய திருமலை நம்பிகளை வேண்ட, திருமலை நம்பிகளும் 
காளஹஸ்தியில் , ”உள்ளங்கை கொணர்ந்த நாயனார்” நடந்து போகும் வழியில் 
ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகளைச் சொல்லிச் சொல்லி, பகவானின் பரத்வத்தை 
கோவிந்தன் உணருமாறு செய்து, திருத்தி, அவரை உடையவரிடம் அனுப்பி 
சிஷ்யனாக்கினார். இவரே ”எம்பார்”. 
 திருவரங்கத்தில்,உடையவரிடம் வந்த கோவிந்தன், பெரிய திருமலை நம்பியைப் 
பிரிந்து இருக்க இயலாமல், திரும்பவும் திருமலைக்கு வந்தார்.  பெரிய திருமலைநம்பித் 
திருமாளிகைக்குமுன்பாகத் தெண்டனிட்டார். இதை அறிந்த நம்பிகள், கோபத்துடன் 
”அந்தப் பித்தனைப் போகச் சொல்லுங்கள் —” என்று சொல்ல அவரது தர்மபத்நி 
”தீர்த்தப் ப்ரஸாதமாவது கொடுக்க வேண்டாமோ —‘ என்று பரிவுடன் வேண்ட, 
அதற்கு நம்பிகள், ”விற்ற பசுவுக்குப் புல்  இடுவார் உண்டோ —/–என்க, இதைச் 
செவியுற்ற கோவிந்தன் அதன் அர்த்த சூக்ஷ்மத்தை உணர்ந்து , எம்பெருமானாரிடம் 
 வந்தார். 
 
எம்பெருமானார், இவரை ”கோவிந்தப் பெருமாளே —” என்று நெஞ்சு தழுதழுக்க 
அணைத்துக்கொண்டார். கோவிந்தனோ, எம்பெருமானாரைத் தெண்டனிட்டு, 
”இந்தச்  சிறியேனை பெரிய அளவில் அழைத்தல் தகாது—தம்பீ என்று அழைத்தால் 
போதுமே  என்க ,
அதற்கு யதிராஜர் , நான் ஸந்யாஸி — உறவு முறை சொல்லி 
அழைத்தல் தகாது—-மேலும் ,  நமது ஆசார்யர் திருமலை நம்பிகளே 
உம்மை ”கோவிந்தப் பெருமாளே —” என்று அழைக்கும்போது ,அதற்குக் குறைவாக 
அழைக்க எனக்கு அதிகாரமில்லை  என்றார். அப்போது யதிராஜருக்கு 
69  திருநக்ஷத்ரம் என்றும் சொல்வர். 
 
கோவிந்தனின் பற்றில்லா வாழ்க்கை, வைணவ ஊற்றம் ஆசார்ய விச்வாஸம் 
இவையெல்லாம் ,திருவரங்கத்தில் வைணவர் குழாங்களிலும் , சிஷ்யர்களிடமும் 
-பரவியது–இவை தனக்குத் தகும் என்றார் கோவிந்தன்.
 
இதை அறிந்த உடையவர், ”பிறர் உம்மைப் புகழ்ந்தாலும் ,நீர் இப்படி அவற்றை 
ஆமோதிக்கலாமா —” என்க,
அதற்கு, கோவிந்தன், ”காளஹஸ்தியில் கழுத்தில் லிங்கத்துடன் வசித்த 
அடியேனை –இந்த ஆத்மாவை—உய்யுமாறு செய்த தேவரீரின் திருக்கல்யாண 
குணங்கள் அன்றோ இதில் தெளிவாகிறது —தேவரீரின் க்ருபையால் 
உண்டான ஏற்றம் இது– ஆதலால் , இவை தனக்குத் தகும் என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட உடையவர் ,  கோவிந்தனை மிகவும் மெச்சினார்.
ஒரு சமயம் திருவரங்கத்தில் ஒரு வேசியின் வீட்டின் எதிரே தம்மையும், அனுஷ்டானம் 
செய்வதையும் மறந்து,நெடு நேரமாகக் கோவிந்தன் அங்கேயே நிற்பதாகச் செய்தி 
வந்தது. அதிர்ந்தார் எம்பெருமானார்.
கோவிந்தனை வரச்  சொல்லி விசாரிக்க 
அவரும் ”ஆமாம்” என்று தலை அசைத்தார்.
மேலும் சொன்னார்—
அந்த வேசி ,தன்னுடைய குழந்தைக்குத் தேவரீருடைய பெருமைகளை எல்லாம் 
பாடலாகப் பாடி , அக்குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருந்தாள் ;அடியேனின் 
ஆசாபாசங்கள் அச்சமயம்  அகன்று ,தேவரீரின் பெருமைகளில் மயங்கிச் 
செவிமடுத்தேன் ;மன்னிக்கவேணும்– என்றார். 
உடையவர், இதனைப் பக்குவமாக விசாரித்து ,உண்மை என அறிந்து, கோவிந்தனின் 
ஆசார்ய பக்தியைக் கண்டு ப்ரமித்துப்போனதாக ,குருபரம்பரை சொல்கிறது.
 
 
இப்படிப் பல விருத்தாந்தங்கள் ,குருபரம்பரா ப்ரபாவத்தில் உள்ளன—-
இவரது பற்றற்ற , ஆசார்ய, பகவத் பக்தி மிகுந்த வரலாறு ,பின்னோருக்குச் 
சுவையமுதம்;
எம்பெருமானார் ,இவருக்குத் தன்னுடைய திருநாமமான 
”எம்பெருமானார்” என்பதை இட்டு ,அழைத்தபோது, கோவிந்தன் 
கூனிக் குறுகிப்போனார்.  ” தேவரீரை  ஆச்ரயித்த  தேவரீரின் அதே திருநாமம் 
அடியேனுக்குத் தகாது—” என்று கண்ணீர் மல்க ப்ரார்த்திக்க , எம்பெருமானார் 
சரியெனச்  சொல்லி  அந்தத் திருநாமத்தைச் சுருக்கி , ”எம்பார்–” என்று 
அழைத்தார். 
 
எம்பார், எம்பெருமானாரின் திருவடிகளை விட்டு அகன்றாரில்லை. 
 
பற்பமெனத் திகழ்  பைங்கழல் உந்தன் பல்லவமே  விரலும் ,
 
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும் ,
 
முப்புரி நூலோடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் ,
 
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும் ,
 
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும் ,
 
காரிசு தன்கழல் சூடிய முடியும் ,கனநற்சிகை முடியும் ,
 
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என்னிதயத்  துளதால் ,
 
இல்லையெனக்கெதிர் ! இல்லையெனக்கெதிர் இல்லையெனக்கெதிரே ! 
 
என்று, உவகையும் பெருமையும், எக்காளமும் ஒருங்கே சேர ,
 
வாழ்ந்து வரும்போது, 
”இராமாநுசா ”  என்கிற திருநாமச் சுவையைச் சுவைக்க,
 ஒரு பிள்ளை இல்லையே என்று எம்பார் வருந்தினாராம் அப்போது, 
எம்பெருமானார் இவரை அழைத்து, சங்கு, சக்ரத்துடன் கூடிய 
திருமண்காப்பு பொறித்த , தனது நித்யகர்மாநுஷ்டான உபபாத்ரத்தைக் 
கொடுத்து, இதனை எம்பெயரால் அழைக்கலாம் —என்க ,எம்பாரின் 
உவகைக்கு எல்லையே இல்லை. 
 
ஸ்ரீ கூரத்தாழ்வானோ , எம்பெருமானாரைவிட வயதில் மூத்தவராக 
இருந்தாலும், உடையவர்பால் கொண்ட ஆசார்ய பக்திக்கு அளவில்லை.
சிறந்த பெருமைமிகு ஞானமும் , பகவத் பக்தியும் கொண்டவர்.
ஒருசமயம், எம்பாருக்கு , எம்பெருமானாரோடு உள்ள திருமேனி 
சம்பந்தத்தை எண்ணிப்பார்த்து, ” எம்பெருமானாரோடு அடியேனுக்கு 
பதக்கு  ஆத்ம சம்பந்தம் இருந்தாலும், ஒரு உழக்கு கூட 
திருமேனி சம்பந்தம் இல்லையே —”என்றாராம். 
 
 (பதக்கு , ஆழாக்கு என்பவை அக்கால முகத்தல் அளவைகள் )
 
எம்பார் திருநாட்டுக்கு எழுந்தருளியது—கி.பி. 1140–ரௌத்ரி ஆண்டு என்பர்.
எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளிய மூன்று ஆண்டுகளில் 
இவரும் பரமபதித்தார்.
 
இராமானுசரின் ஆயிரமாவது ஆண்டு பூர்த்தியை ,வைணவர்கள் 
பக்தியுடன் பரவசத்துடன் கொண்டாடும் வேளையில், 
இராமானுசரைப் பற்றி, மிக ஆழமாக ஆராய்ந்து, அநேக அருமையான 
கிடைத்தற்கரிய செய்திகளைச் சேகரித்து, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், 
காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு பொக்கிஷமான ”இராமானுச வைபவம்”
என்கிற நூலை ,அன்பர்கள் படித்து இன்புறுமாறும், இவ்வின்பத்தை, 
பாகவத கோஷ்டியினர் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டுகிறேன்—
இந்நூலை எழுதியவரும் ,வைணவ உலகில் ”குடத்திலிட்ட விளக்காக ”  
கைங்கர்யங்கள் செய்பவருமான  ஸ்ரீ ஆர்.வி. ஸ்வாமிக்கு அடியேனின் பாராட்டுதல்கள்—
 
 
தனியனின் அர்த்தச் சுருக்கம் 
———————————————————-
 
 
  எங்கள்  கதியே ! ————–”ராமாநுஜாங்க்ரி  சரணோஸ்மி —-” என்கிறபடியே, 
ஸம்ஸாரச் சூழலில் , அகதிகளாக இருக்கும் அடியோங்களுக்கு ,கதியாக இருப்பவரே 
 
 இராமாநுச  முநியே  !—–இவர் இராமாநுசர் ! இவர் முநி  ! முனிவர் –முக்கோலுக்கு 
ஏற்றம் தந்தவர்.  
 
சங்கை கெடுத்தாண்ட  தவராசா !—- ”சங்கை” —சந்தேகம்—உண்மைத் தத்வத்தை 
அறியாது மயங்குவது—-வேதத்துக்கு எதிராகப் பொருள் கொள்வது; — சொல்வது —
அநீச்வர வாதிகள், அத்வைத வாதிகள் –இவர்களுக்குள்ள ஈச்வர ,ஜீவ , தத்வ 
விஷயங்களில் ஏற்படும் சங்கைகளை ஸ்ரீ பாஷ்யம் போன்றவற்றால் விளக்கி, 
சரணாகதி சாஸ்த்ர  ஸ்தாபகம். 
மற்றும், பக்தி ப்ரபத்தி ரூப  உபாயங்களையும் ,
விபுத்வ  உபாயத்வங்களையும்  , அறியாதவர்களுடைய சங்கைகளை  
கத்யங்களால் பரிஹரித்து, அவர்களையும் ஆட்கொண்ட சரணாகத சாஸ்த்ர 
ஸ்தாபகர்   —”தவம்” என்பது சரணாகதி சாஸ்த்ரத்தைச் சொல்லிற்று—-
 
 —பொங்குபுகழ் மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரமனைத்தும் 
தங்கு மனம் நீ எனக்குத்  தா ———–எப்போதும் மங்காத ,எப்போதும் 
பொங்குகின்ற  கீர்த்திமானான திருமங்கை ஆழ்வார் ப்ரஸாதமாக அருளிய 
வேதரூபமான , பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் , திருநெடுந்தாண்டகம் 
ப்ரபந்தங்களை  அடியேனின் மனத்தில் என்றும் தங்கியிருக்கும்படி 
அப்படிப்பட்ட மனத்தை அருளவேனும் என்று பிரார்த்தித்தபடி—-
பிள்ளான் கூறுவார்—-
-எம்பெருமான் கடாக்ஷம் பெற்றால், பொன்னுலகில் ஸர்வஜ்ஞராகத் தட்டில்லை ; 
எம்பெருமானார் கடாக்ஷம் பெற்றால்  இம்மண்ணுலகிலும் ஸர்வஜ்ஞராகத் தட்டில்லை 
 
”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்  
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே ”
 
இங்கு நினைவு கூறத்தக்கது—
 
 From My ”Web site ”
 
எங்கள்  கதியே,  இராமாநுச முனியே —-
—————————————————————————————
அடியேனின் விண்ணப்பம்
ஸ்ரீ பாஷ்யகார என்கிற பெரிய ஏரியிலே , ஸ்ரீ ஆளவந்தார், மணக்கால் நம்பி, பெரிய நம்பி, மற்றும் திருக்கோட்டியூர் நம்பி போன்ற பரம ஆசார்யர்கள்  உபதேசித்த ,கங்கா ப்ராவாஹம் போன்ற உபதேசங்கள் நிரம்பி இருக்கின்றன. ஸ்ரீ உடையவர், இந்தப் பெரிய ஏரிக்கு மதகுகள் போல 74   சிம்ஹாசனாதிபதிகளை  நியமித்து, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை நன்கு செழித்து வளரச் செய்தார்.
ஸ்ரீ எம்பெருமானாரின் திரு நக்ஷத்ரம் மஹோன்னதமானது–அவரது திருநக்ஷத்ர வைபவத்தை,பெரும் பாக்யமாகக் கருதி  அடியார்கள் கொண்டாடவேண்டும்
இந்தப் பெரும் பாக்ய நாளில் , திருவரங்கத்து அமுதனார் அருளியுள்ள “இராமானுச நூற்றந்தாதியை ” சேவிப்பதும், அவற்றின் பொருளை அகத்தில் கொள்வதும் , அதன் பயனாக சம்ப்ரதாய ஊற்றம் கொண்டு , மென்மேலும் பகவத், பாகவத கைங்கர்யங்கள்  செய்ய விழைவதும் சாலச் சிறப்பு உடைத்து.
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனைத் த்யானித்து,  “எங்கள் கதியே, இராமானுச முனியே ” சமர்ப்பித்து உள்ளேன்.
இதன் பிறகு “ஸ்ரீ வேதாந்த தேசிக நூற்றந்தாதி ” வரும்; விரைவில் வரும்
தொடர்ந்து படியுங்கள்
எங்கள் கதியே ! இராமானுச   முனியே !
——————————————————————-
தனியன்
————–
முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன்னங்கழல் கமலப் போதிரண்டும் ——என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன்   தென் புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன்  யான்
———————
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதன்றி     நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி  இராமானுச முனி  தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து  அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும்  கலித்துறை அந்தாதி ஓத  இசை நெஞ்சமே
—————–
சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும்   உன் நாமமேல்லாம்  என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு  அறுசமயம்
வெல்லும் பரம    இராமானுச ! இதென் விண்ணப்பமே
—————–
இனிஎன் குறை நமக்கெம்பெருமானார்    திருநாமத்தால்
முனி தந்த நூற்றெட்டு சாவித்திரிஎன்று     நுண் பொருளைக்
கனி தந்த  செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
——————–
நான்காவது தனியன் கூறுவதாவது;—நூற்றெட்டு ஆவ்ருத்தி ஜெபிக்கப்படும், சாவித்ரியின் பொருளாகிய —-அதன் சூக்ஷ்ம அர்த்தத்தை—
இது பகவானால் உபதேசிக்கப்பட்டு, விச்வாமித்ரரால் பிரகாசம் செய்யப்பட்டதை , ஆசார்யரான
எம்பெருமானாரைத் த்யாநிப்பதால், தர்ம விஷயமான புத்தியை அளிக்கும் கலித்துறை
அந்தாதியை புண்ணியரான திருவரங்கத்து அமுதனார் ,பாசுரமிட்டுத தந்துள்ளார்
—————-
இந்தத்  தனியன் மேல் நாட்டில் சேவிக்கப்படுகிறது.  ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிய ” கண்ணிநுண் சிறுத்தாம்பு ” முழுக்க, முழுக்க,ஸ்ரீ நம்மாழ்வார் விஷ்யமாகவே இருக்கிறது.  ஆனால், நமது பூர்வர்கள்,   அதை, முதலாயிரத்தில் சேர்த்து அனுசந்திக்கிறார்கள்.
அதைப் போலவே, திருவரங்கத்து அமுதனார் அருளிய “இராமானுச நூற்றந்தாதியை ” நான்காவது ஆயிரத்தில் சேர்த்து அனுசந்த்கிக்கப்படுகிறது.
“பகவத் சேஷத்வ கைங்கர்யங்களுக்கு எல்லை————பாகவத சேஷத்வ கைங்கர்யங்கள் ”
———————————————-
” இராமனுசர் ” என்னும் “சொல்” லக்ஷ்மணனையும் குறிக்கும்; கண்ணனையும் குறிக்கும்; ஏன்—பரதனையும், சத்ருக்னனையும் கூடக் குறிக்கும்.
பகவான் ஸ்ரீ ராமனாக அவதரித்து, சாமான்ய தர்மம், விசேஷ தர்மம், வர்ணாஸ்ரம தர்மம், சரணாகத தர்மம் என்று செய்து , தர்மத்தை ஸ்தாபித்துக் காட்டினார்.  அவருக்குப் பின்பாக , இந்த ” அனுஜர் ” ( ராமானுஜர் ) சாமான்ய, விசேஷ, வர்ணாஸ்ரம, தர்ம ஸ்தாபன, சரணாகத ரக்ஷணம் செய்து காட்டி உள்ளார்.
“ராமா ” என்பது ஸ்ரீ ஆண்டாளையும் குறிக்கும். ” ராமா ” என்கிற ஆண்டாள், அனுஜா—எந்த ஆழ்வார்களுக்குப் பின்பு தோன்றியவளோ, அவளுக்குப் பின்பாக எந்த ஆழ்வார்கள் தோன்றினார்களோ, அவர்கள் யாவருமே ராமானுஜர்களாய்,அவர்கள் அனைவருமாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ராமானுஜர்.
“ராமை ” என்கிற பெரிய பிராட்டியைப் போல, “நிக்ரஹம் ” என்பதே தெரியாமல்,”அனுக்ரஹ  ” வடிவமாய்,  பெரிய  பிராட்டியைப்  பின்பற்றி ,  “பிரஜா ரக்ஷணம் ” செய்தவர் இராமானுசர். இப்படியாகப் பலப் பலப் பொருள்களைக்கூறிக்கொண்டே போகலாம்.
பகவத் ராமானுஜரைப் பற்றி, “இராமானுச நூற்றந்தாதி ” அருளியவர் திருவரங்கத்தமுதனார். இவரைப் “பெரிய கோயில் நம்பி ” என்றும் அழைப்பர். இவர், எம்பெருமானாரின் நியமனத்தினால், ஸ்ரீ கூரத்தாழ்வானாலே திருத்தப் பெற்றவர். ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆஸ்ரயித்தவர்.
இப்படி, ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆச்ரயித்து, தம் ப்ராசார்யரும், தம்மால் ஈடு இணையின்றி அனுபவிக்கப் பெற்றவருமான எம்பெருமானார்
விஷயமாக, ஆயிரத்துக்கும் மேலான  பாசுரங்கள் இயற்றியதாகவும், அவற்றை எம்பெருமானார் விரும்பவில்லை என்றும், பிறகு, அரங்கன் நியமனத்தின் பேரில் “நூற்றந்தாதி ” இயற்றி, எம் பெருமானாரும்  ,   பெருந் திரளாக பக்தர்களும் திருவரங்கன் திரு முன்பே கூடியிருந்தபோது, எல்லோரும் போர உகக்க,
“இராமானுச  நூற்றந்தாதியை ” விண்ணப்பித்தார் என்றும்  சொல்வர்.
“இராமானுச நூற்றந்தாதி’ அமுதுக்கு அமுது; அமுதனார் அருளிய அமுது; திருவரங்கன் உகந்த அமுது;  நமக்கெல்லாம் அமுது;
இந்த அமுதத்தில் , சிலவற்றை அள்ளிப் பருகலாம் வாருங்கள், இதை விட பாக்யம் வேறு எது !
continues—-2
 
எங்கள் கதியே ! இராமானுச முனியே ! continued
—————————
1)  பூமன்னு மாது  பொருந்திய மார்பனின்  புகழ் மலிந்தபாமன்னு  மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ; பல்கலையோர்  தாம் மன்ன வந்த இராமானுசன்    !
2)      குறையல் பிரான்  அடிக்கீழ் விள்ளாதஅன்பன்  இராமானுசன்  !
3)     பொருவருஞ்சீர்  ஆரியன் செம்மை இராமானுசன்  !
4)     ஊழி முதல்வனையே  பன்னப் பணித்த இராமானுசன்   !
5)    எனக்குற்ற  செல்வம் இராமானுசன்   !
6)    இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன்கவிகளன்பால்  மயல் கொண்டு வாழ்த்தும்  இராமானுசன்  !
7)   பழியைக் கடத்தும் இராமானுசன்  !
8)     பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் ,செந்தமிழ்த் தன்மையும் கூட்டி, ஒன்றத் திரித்தன்
எரித்த திருவிளக்கைத்  தன்திருவுள்ளத்தே  இருத்தும் பரமன் , இராமானுசன்  !
9)    இறைவனைக் காணும்  இதயத்து இருள் கெட, க்ஜானமென்னும்  நிறை விளக்கேற்றிய   , பூதத் திருவடித் தாள்கள்
நெஞ்சத்து உறைய வைத்து ,  ஆளும் இராமானுசன்  !
10)  மன்னிய பேரிருள் மாண்ட பின்  கோவலுள்  மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும்
தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்  !
—    11)  சீரிய நான்மறைச்செம்பொருள்  செந்தமிழால் அளித்த பார் இயலும், புகழ்ப் பாண் பெருமாள் ,சரணம் ஆம் பதுமத்    தார் இயல்           சென்னி  இராமானுசன்   !
12 ) இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு  இறைவன் இணை அடி போது அடங்கும் இதயத்து இராமானுசன்  !
13) செய்யும் பசு துளபத்து எழில்  மாலை  செந்தமிழில்  பெய்யும்  மறைத் தமிழ் மாலையும், பேராத சீர் அரங்கத்து           ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியாமெய்யன் , இராமானுசன்  !
14)கொல்லிக் காவலன் சொல் பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்  இராமானுசன்
15) சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராது அவனைப் பல்லாண்டு காப்பிடும்             பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்   !
16) தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து, தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன், அரங்கர் மௌளி            சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற    வள்ளல் இராமானுசன்  !
17) கண்ணமங்கை நின்றானைக்கலை பரவும் தனியானைத் தண்தமிழ்   செய்த நீலன் தனக்குஉலகில்  இனியான் –எங்கள் இராமானுசன்  !
18) எய்தற்கு அரிய  மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு            இசையும் பெரியவர் ,சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன்  !
19) மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று  உறு பெரும் செல்வமும்  தந்தையும் தாயும் உயர் குருவும் ,          வெறிதரு பூமகள் நாதனும் என்று நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்  !
20)  ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்க்கு இனியவர்தம்,          சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை   நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்  !
21)தூய நெறி சேர்  யதிகட்கு இறைவன்  யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன்  !
22) கார்த்திகையானும், கரிமுகத்தானும், கனலும் முக்கண் மூர்த்தியும், மோடியும், வெப்பும், முதுகிட்டு,மூவுலகும்         பூத்தவனே என்று போற்றிட, வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்  !
23 )வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும்  இராமானுசன்  !
24 )பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து     அவிய, கைத்த மெய்க்ஜானத்து     இராமானுசன்  !
25 )கார் ஏய் கருணை   இராமானுசன்  !
26 )என் செய்வினை ஆம் மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை, திக்கு உற்ற கீர்த்தி இராமானுசன்  !
27)வெள்ளைச் சுடர் விடும் உன்   பெருமேன்மைக்கு  இழுக்கு இது என்று, தள்ளுற்று இரங்கும் இராமானுசன்    !
28)நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் ,நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்             நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன்  !
29)தென் குருகைப் பிரான் பாட்டென்னும் வேதப் பசுந் தமிழ் தன்னைத்  தன் பக்தி என்னும்  வீட்டின் கண்  வைத்த இராமானுசன்  !
30)தொல் உலகில் , மன் பல உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் ,அனகன், இராமானுசன்  !
31)இன்று  ஓர் எண் இன்றியே  காண் தரு  தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைகீழ் பூண்ட அன்பாளன் இராமானுசன்  !
32) செறு  கலியால் வருந்திய   உலகத்தை வண்மையினால் வந்து எடுத்து, அளித்த அருந்தவன் எங்கள் இராமானுசன்.
33)கேள்வன் கை ஆழி என்னும்  படையொடு  நாந்தகமும்,படர் தண்டும், ஒண் சார்ங்க வில்லும் புடையார் புரிசங்கமும்            இந்தப் பூதலம் காப்பதற்கு   என்று இடையே இந்நிலத்தே ஆயினான் இராமானுசன் !
34)நிலத்தை செறுத்துண்ணும் நீசக் கலியை,   நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,
என் பெய்,வினைத்தென்புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின் ,நலத்தைப் பொறுத்தது ,தன் நயம் புகழ் இராமானுசன் !
35) பொன்னரங்க மென்னில் மயலே பெருகும், இராமானுசன்
36) காசினியோர் இடரின் கண் விழுந்திடத் தானும் அவ்வொண்  பொருள்கொண்டு ,அவர்பின் படரும் குணன் எம் இராமானுசன் !
37)படி கொண்ட கீர்த்தி ராமாயணமென்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன் !
38)புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன் !
39)இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில்  பெரும் புகழே தெருளும் தெருள் தந்த இராமானுசன் !
40)கண்ணனுக்கே ஆமது காமம்; அறம், பொருள் , வீடு , இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் !
41)   மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே  கண்ணுற நிற்கிலும், காணகில்லா உலகோர்கள் எல்லாம்,           நண்ணரு க்ஜானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆகவைத்த அண்ணல் இராமானுசன் !
42)மாமலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என உபதேசித்த  தூயவன் தீதிலா இராமானுசன் !
43)அறம் சீரும் உறு  கலியைத் துரக்கும்  பெருமை (குடிகொண்ட) இராமானுசன் !
44)சொல்லார் தமிழ் ஒரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் ,எண் அருஞ்சீர்             நல்லார் பரவும் இராமானுசன் !
45)சரண் அன்றி, அப்பேறளித்தற்கு   ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி,  என்று இப்பொருளைத் தேறுமவர்க்கும்         எனக்கும் உனைத் தந்த செம்மைச் சொல்லால்  கூறும் பரம் அன்று, இராமானுசன் !
46)கூறும் சமயங்கள் ஆறும் குலையக்   குவலயத்தே மாறன் பணிந்த மறை உணர்ந்தோனை  ;மதியிலியேன் தேறும்படி என் மனம்          புகுந்தவன் ; திசை அனைத்தும் ஏறும் குணம் இராமானுசன் !
47)இறைஞ்சப்படும்  பரண் , ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செய்யும் அண்ணல் இராமானுசன் !
48)புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுசன் !
49)பூங்கமலத் தேன் நதிபாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன் !
50) பாவு  தொல் சீர் எதித்தலை நாதன் இராமானுசன் !
51)  அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய்  அன்று  பாரதப் போர்    முடியப் பரி நெடுந்தேர் விடுங்கோனை  முழுதுணர்ந்த           அடியார்க்கு அமுதம் இராமானுசன்!
52) பார்த்தான் அறு   சமயங்கள் பதைப்ப ,இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடை த்தான் புகுந்து          தீர்த்தான் இருவினை ,தீர்த்தரங்கன் செய்ய  தாள் இணையோடு ஆர்த்தான் இராமானுசன் !
53)என்னை ஆளவந்த கற்பகம்; கற்றவர் காமுறு சீலன்; கருதரிய பற்பல உயிர்களும் பல் உலகு யாவும் பரனதென்னும்          நற்பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டிய , அற்புதன் செம்மை இராமானுசன் !
54)நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன; நாரணனைக்  காட்டிய வேதம் களிப்புற்றது; தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண்தமிழ் மறை         வாழ்ந்தது; (காரணம்) மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் !
55)கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன் !
56)  கோக்குல மன்னரை மூவெழுகால் ஒருகூர் மழுவால்  போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் , புவனம் எங்கும் ஆக்கிய           கீர்த்தி       இராமானுசன் !
57)மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் ;          நற்றவர் போற்றும் இராமானுசன் !
58)பேதையர் வேதப்பொருள் இது என்று உன்னி, பிரமம் நன்று என்று ஓதி, மற்று எல்லா உயிரும் அஹுதென்று,          உயிர்கள் மெய் விட்டு ஆதிப்  பரனோடு ஒன்றாமென்று  சொல்லும்  அவ் அல்லல் எல்லாம் வாதில் வென்ற மெய்ம்மதிக்கடல்          இராமானுசன் !
59)கடலளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு   காலத்து, மிக்க நான்மறையின் சுடரொளியால் ,          அவ்விருளைத் துரத்திலநேல் , உயிரை உடையவன், நாரணன் என்று உணர்த்தியவன் இராமானுசன் !
60)உணர்ந்த மெய்க்ஜானியர்  யோகந்தோறும் திருவாய் மொழியின் மணம் தரும்   இன்னிசை மன்னு  மிடந்தொறும்           மாமலாராள் புணர்ந்த    பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் ,குலக்கொழுந்து          இராமானுசன் !
61) அரு முனிவர் தொழும்     தவத்தோன் இராமானுசன்  !
62)இருவினைப் பாசம் கழற்றி  இன்றி  யான் இறையும்  வருந்தேன்; இனி எம் இராமானுசன் !
63)அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைத்து ஓட வந்து , இப் படியைத் தொடரும் இராமானுசன் !
64)பண்டரு  மாறன் பசுந் தமிழ்  ஆனந்தம்    பாய் மதமாய், விண்டிட வந்த  வேழம் எங்கள் இராமானுசன் !
65) குற்றமெல்லாம் பதித்த குனத்தினருக்கு அந் நாழற்ற க்ஜானம் தந்த இராமானுசன் !
66)தன்னை எய்தினர்க்கு ,தன் தகவென்னும் சரண் கொடுத்து, மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் !
67)உயிர்கட்கு அரண் அமைத்து, கரணமிவை மாயவனுக்கென்று (உரைத்த) இராமானுசன் !
68)”ஆர்” எனக்கின்று நிகர் சொல்லின்    ,மாயன், அன்று ஐவர்  தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்         பாரினில் சொன்ன      இராமானுசன் !
69)சரண் என்று, தான் அது தந்த  , எந்தை இராமானுசன் !
70)என்னையும் பார்த்து, என் இயல்பையும் பார்த்து, எண்ணில்  பல் குணத்து உன்னையும் பார்க்கில் , அருளும் இராமானுசன் !
71)முன் செய்வினை, நீ செய்வினை அதனால், பேர்ந்தது வண்மை, பெருந்தகை  இராமானுசன் !
72)நிறை புகழோருடன், என்னை வைத்தனன், இராமானுசன் !
73)வண்மையினாலும்,உந்தன்  மாதகவாலும், மதிபுரையும் தண்மையினாலும் இத் தரணியோர்கட்குத்  தான் சரணாய்        உண்மை  நன் க்ஜான  முரைத்த இராமானுசன் !
74)எழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே ஏரார் குணத்து எம் இராமானுசன் !
75)நின் புகழே வந்து மொய்த்து அலைக்கும், இராமானுசன் !
76)நின்ற வண்கீர்த்தியும்   நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்குன்றமும்  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்      உன்றனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள் என்றனக்கும்   இவை ஈந்து    அருளும் இராமானுசன் !
77) ஈயாத இன்னருள் ஈந்தனன்,என்னில்  பல் பொருளால் மறைக் குறும்பைப் பாய்ந்தனன்;கீர்த்தியினால்  என் வினைகளை      வேர் பறியக்  காய்ந்தனன்  வண்மை இராமானுசன் !
78) கருத்தில் புகுந்து, உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, நீ, இந்த மண்ணகத்தே திருத்தி,    திருமகள் கேள்வனுக்கு ஆள் ஆக்கிய இராமானுசன்  !
79)பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் !
80)நல்லார் பரவும் இராமானுசன் !
81)சோர்வின்றி  உந்தன் துணை அடிக்கீழ்த் தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு  அரங்கன் செய்ய, தாளிணைகள் பேர்வின்றிஇன்று   பெறுத்தும்  இராமானுசன் ! !
82)தெரிவுற்ற க்ஜாலம்  செறியப் பெறாது ,வெந்தீவினையால்  உருவற்ற க்ஜானத்து உழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்     பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் ,தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் !
83) “சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் “என்னும் பார் கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்     ;   உன்  பாத பங்கயமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதில் எய்துவன் (அதற்கான)  கார் கொண்ட வண்மை இராமானுசன் !
84)கண்டு கொண்டேன், தன்னைக்  காண்டலுமே  தொண்டு    கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்   விண்டுகொண்டேன் ,அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் –அவனே இராமானுசன் !
85)ஓதிய வேதத்தின்  உட்பொருளாய் அதனுச்சி மிக்கசோதியை  நாதனென்று அறியாது உழல்கின்ற,தொண்டர்பேதைமைதீர்த்த   இராமானுசன்  !
86)பற்றா மனிசரைப் பற்றி    , அப்பற்றி விடாது  அவரை உற்றார் என உழன்றோடி நையேன் இனி   எம்மை ஆளும் பெரியவர் கற்றார் பரவும்   இராமானுசன் !
87)பெரியவர் பேசிலும், பேதையர் பேசிலும் தன் குணங் கட்கு உரிய   சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர் தெரியும்     வண்கீர்த்தி இராமானுசன் !
88)கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ,ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து ,அதனால் வலி மிக்க சீயம்    இராமானுசன் !
89)போற்ற அரும் சீலத்து இராமானுசன் !
90)நினையார் பிறவியை நீக்கும் பிரான் ; இந்நீணிலத்தே எனை ஆளவந்த இராமானுசன் !
91)மருள் சுரந்து, ஆகம வேதியர் கூறும் அவப்பொருளாம் இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க, தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா  உயிர்கட்கும் நாதன்—-அரங்கன்  என்னும் பொருள் சுரந்தான் எம் இராமானுசன் !
92)புண்ணிய நோம்பு புரிந்துமிலேன்; அடி போற்றி  செய்யும் நுண்ணருங்கேள்வி   நுவன்றுமிலேன்; இன்று என் கண்ணுள்ளும், நெஞ்சுள்ளும்      புகுந்து நின்ற எண்ணருங்கீர்த்தி இராமானுசன்  !
93)கட்டப் பொருளை மறை பொருள் என்று , கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே, என் பெரு வினையைக் கிட்டிக்   கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி  வெட்டிக் களைந்த இராமானுசன் !
94) தவந் தரும், செல்வம் தகவும் சலியாப் பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாமமென்னும் திவந்தரும் (அதன் நாமம் )    தீதில்  இராமானுசன் !
95)உள் நின்று உயிர் கட்கு உற்றனவே செய்து அவர்க்குயவே பண்ணும் பரனும், பரிவு இலன் ஆம் படி , பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று,      வீடளிப்பான், எம் இராமானுசன் !
96)வளரும் பிணி கொண்ட வல்வினையால், மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது    முடைத் தலை ஊன்     தளருமளவும்   தரித்தும், விழுந்தும்  தனி திரிவேற்கு உளர் , ஏற்றவர், இறைவர் இராமானுசர் !
97)தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்மண்ணு  தாமரைத் தாள்  தன்னை உற்று  ஆள் செய்ய  , இன்று என்னை உய்த்தான் தன் தகவால்        தன்னை உற்றார் அன்றி  தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து தன்னை உற்றாரைச் சாற்றும் குணத்தான் இராமானுசன் !
98 )இடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம் நரகலிட்டுச் சுடுமே அவற்றைத்  தொடர் தொல்லைச் சுழல்  பிறப்பில் நாடுமே , நம்மை நம்     வசத்தே   விடும் ( அவனைச் ) சரணமென்றால், ( அவன் ) இராமானுசன் !
99)தர்க்கச் சமணரும், சாக்கியர் பேய்களும் தாழ் சடையோன் சொற்கற்ற   சோம்பரும்,  சூனிய வாதரும் , நான் மறையும் நிற்கக் குறும்பு செய்  நீசரும்,  நீணிலத்தே மாண்டனர். —(எப்போது )பொற் கற்பகம் போந்தபின் ( அவரே ) இராமானுசர்!
100)என் நெஞ்சம் என்னும் பொன்வண்டு, உனதடிப் போதில் ஒண் சீர்  ஆம் தெளி தேன் உண்டு, அமர்ந்திட வேண்டி, நின் பால் போந்தது    அதுவே ஈந்திட வேண்டும் ( வேண்டியது கொடுக்கும் )  இராமானுசன் !
101)மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு, மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயர் அகற்றி உயக் கொண்டு     நல்கும் இராமானுசன் !
102)நையும் மனம் உன்  குணங்களை உன்னி , என் நா இருந்து (உனை அழைக்கும் ) எம் ஐயன் இராமானுசன் !
103)என் தன் மெய் வினை நோய் களைந்துகையில் கனி  என்னவே க்ஜானம் அளித்தனன்  இராமானுசன் !
104)உன் தன் மெய்யில் பிறங்கிய  சீர் அன்றி நிரயத் தொய்யில்  கிடக்கிலும் சோதி விண் சேரிலும்  —இவ்வருள்  செய்யும் இராமானுசன் !
105)செழுந்திரைப் பாற்கடல்  கண் துயில் மாயன்  திருவடிக்கீழ் விழுந்திருப்பார்  நெஞ்சில் மேவுநன் கஜானி ,நல் வேதியர்கள் தொழும்      திருப்பாதன் இராமானுசன் !
106)இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்  மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம்மாயனுக்கு என்பர் நல்லோர் , அவை தன்னோடு வந்து    மாயன் இருப்பிடம்  மனம்—–(அது) இராமானுசன் !
107) என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோரும் பிறந்து இறந்து  எண்ணரிய  துன்புற்று  வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு ;      உன்   தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி என்னை ஆக்கி, அங்கு ஆட்படுத்தும் இன்புற சீலத்து இராமானுசன் !
108)பக்தி எல்லாம் தங்கியது என்ன நம் தலைமிசை ,  பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்ன, அங்கயல் பாய் வயல்       தென்னரங்கன் அணி ஆக மன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும்
குறிப்பு:–அடைப்புக்குறியில் உள்ள சொற்கள் அடியேன் சொன்னவை yengal kathiye1iraamaanusa muniye!
——————————————————————————————————————————————————————
 
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்
சீரார்  தூப்புல் திருவேங்கடமுடையான்  திருவடிகளே சரணம்

About the Author

Leave A Response