——————————————————————————————
ஸஹஸ்ரநாமம்
ஸஹஸ்ராநாம் நாம் புண்யானாம் த்ரிருக்தானாம் து யத்பலம் |
தத்பலம் லபதே ஜந்து க்ருஷ்ணேத் யக்ஷர மாத்ரத : ||
ஸஹஸ்ரநாமம் , பாராயணம் செய்யச் செய்ய அளவற்ற பலன் கிடைக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத்தான் சொல்கிறேன்—-
முதன் முதலில், ஏற்பட்டது இதுவே —
பிறகுதான் , ஏகப்பட்ட ஸஹஸ்ரநாமங்கள் , பாராயணத்துக்கு வந்தன—-
ஸஹஸ்ரநாமம் , பாராயணம் செய்யச் செய்ய அளவற்ற பலன் கிடைக்கும் என்று
சொன்னேனல்லவா ?
இதைவிட ஸஹஸ்ரநாமத்தில் , ஈஸ்வரன் சொல்வதாக வரும்
”ஸ்ரீ ராம ராம ராமேதி, ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாமதத்துல்யம் ராமநாம வராநநே ”
என்பதில், ”ஸ்ரீ ராம ராம ராமேதி–” என்று ராம நாமத்தை மூன்று தடவை சொன்னால்,
ஸஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் கிட்டும்.
ஆனால், ஒரே ஒருமுறை சொல்லப்படும் ”க்ருஷ்ண ” நாமம் –ஒன்பது முறை சொல்லும்
ராமநாமத்துக்கான பலனைக் கொடுக்கும்
சமயம் கிடைத்தபோதெல்லாம் ”க்ருஷ்ணா ” என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் ?
—
Sarvam Sree Hayagreeva preeyathaam