மற்றவை நேரில் —-14
ஹே, நாராயணா, ஹே, நாராயணப்ரியே ,
இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது என்றும், பிறப்பும் இறப்பும் அவரவர்கள் கையில் இல்லை என்றும் நன்கு தெரிந்த மனுஷ்யர்கள்,
குலகர்வத்திலும், தன கர்வத்திலும் , வித்யா கர்வத்திலும் மூழ்கி , எதிர்ப்பட்டவரை எடுத்தெறிந்து பேசுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
ஊருக்குப் போதிக்கிறார்கள் , மேற்சொன்ன முக்குரும்பை அறுக்க வேண்டுமென்று !
ஆனால், அவர்கள் அதில் நீந்திக்களிக்கிறார்கள் !!
நகம் இருக்கிறது, எல்லாருக்கும் இருக்கிறது. நகங்களுக்கு சாயம் பூசுகிறார்கள், விதம், விதமான சாயம்.
அடடா, அதை , என்னவென்று சொல்ல !
ஆனால் , அந்த நகமே சொத்தையாகும்போது , அதை வெட்டி எறிகிறார்கள்
நகம் சொத்தையானால் வெட்டி எறியலாம் !
நாமே சொத்தையானால் ?
மற்றவை நேரில்
—
Sarvam Sree Hayagreeva preeyathaam