ப்ராஹ்மணனைப்பற்றி தர்ம சாஸ்திரம் சொல்வது என்ன–
தர்ம சாஸ்திரமானது — ப்ரஹ்மச்சாரிகள் ,க்ருஹஸ்தர்கள், வானப்ரஸ்தர்கள், ஸந்யாஸிகள் ,ஆண்கள், பெண்கள், பிராமணர் அல்லாதவர் ஆகிய ஒவ்வொரு அங்கத்துக்கும் தனித்தனியாக விதிகளைச் சொல்கிறது இப்போது தர்ம சாஸ்த்ரம் ,ப்ராஹ்மணனைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் —-.
1.ப்ராஹ்மணன் தர்ம சாஸ்திரத்தை அவசியம் தெரிந்து கொண்டு முடிந்தவரை கடைப்பிடிக்க வேண்டும்.
2. ப்ராஹ்மணர்கள் ஸுர்ய உதயத்தின்போதும் அஸ்தமனத்தும் போதும் தூங்ககூடாது.
3. நித்யகர்மாக்களில் அடிப்படையான ஸந்தியாவனத்தை மூன்று வேலைகளிலும் தவறாமல் செய்ய வேண்டும்.
4. ஆண்கள் வெள்ளை வேஷ்டி அங்கவஸ்த்ரத் துணியுடன்தான் கர்மாக்களைச் செய்ய வேண்டும்.
5. கலர் மற்றும் தைத்த துணிகளைஉடுத்திக்கொண்டு அனுஷ்டானங்களைச் செய்யக்கூடாது.
6. பெண்கள் வேத மந்திரங்களைச் சொல்லக்கூடாது.மூன்று நாள் வீட்டு விலக்காக இருக்கவேண்டும்;
7. கர்மானுஷ்டானம் செய்யும்போது ஆண்கள் கச்சம் வைத்து வேஷ்டி உடுத்திக்கொள்ளவேண்டும் .
8.விவாஹம் ஆன பெண்கள் விளக்கேற்றும்போது மடிசார் வைத்து புடவைஉடுத்திக்கொள்ளவேண்டும் .
9. ஒருவர் பயன்படுத்திய வஸ்திரம், செருப்பு, சாப்பிடும் தட்டு, படுக்கை, மாலைஇவைகளை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.
10. விதிக்கப்பட்ட அபர கர்மா நேரத்தைத் தவிர மற்றைய நேரத்தில் ஈர வஸ்திரத்துடன் இருக்கக் கூடாது.
11. கர்மாக்களை ஈரத்துணியுன் செய்யக்கூடாது.
12. விதிக்கப்பட்ட அபர கர்மாவைத் தவிர ஒருபோதும் தலைமுடி நுனியை முடிந்துகொள்ளாமல் , விரித்து தொங்க விடக்கூடாது.
( இப்போது க்ராப் என்று ஆகிவிட்டது—விட்டது தொல்லை )
13. எல்லா கர்மாவிற்கும் அவரவர் தனித்தனியாக தீர்த்த பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
14. எல்லா கர்மாக்களையும் பூமியில்தான் செய்ய வேண்டும். மாடியில் செய்வது சாஸ்த்ர விரோதம் .
15.கர்மாக்கள் இருவகை- நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்கள்.
16. நித்தியகர்மாக்களான ஸந்தியாவந்தனங்களைச் செய்யாவிட்டால் பாபம் வரும்.
17. ஸந்தியாவந்தனம் செய்யாத ப்ராஹ்மணன் வேறு எந்த கர்மாக்களைச் செய்தாலும் பலன் இல்லை.
18. ச்ராத்தத்தை ஒவ்வொரு புத்ரனும் தனித் தனியாகத்தான் செய்ய வேண்டும்.
19. எந்த கர்மா செய்தாலும் நடுவில் பேசக்கூடாது.
20. அம்மா அப்பா ச்ராத்தங்களை பார்வணமாகச் செய்யவேண்டும்.(ஹோமம் ,ப்ராஹ்மண போஜனம், பிண்டதானம் முக்கியம் ).
26. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆசார, அனுஷ்டானங்களைச் சொல்லித் தர வேண்டும்.
27. ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டும்.
28. சரீர உழைப்பில்லாத (சிரமமில்லாத) எந்த கர்மாவும் முழுப்பலன் தராது.
29. ப்ராஹ்மணன் தனது தர்மத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் பின்பற்றாமல் ப்ராஹ்மணன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை .
30. கோவிலிலிருந்து ப்ரஸாதமாகக் கொடுக்கப்படும் மஞ்சள்காப்பு, குங்குமம், துளசி போன்றவற்றைப் பக்தியுடன் ஸ்வீகரிக்கவேண்டும்.
31. க்ருஹஸ்தர்கள் அவசியம் வருடத்தில் இரண்டுபக்ஷத்திலாவது ( பௌர்ணமி, அமாவாஸ்யை ) ஔபாஸனம் செய்து, பிரதமையன்று ஸ்தாலீபாகம் செய்ய வேண்டும்.
32. ப்ராஹ்மணன் ரிஷிகளின் பரம்பரையில் வருவதால், அந்தந்த ஸ்ம்ருதிகளின்படி ஆசார அநுஷ்டானம் இருக்கவேண்டும்..
33. ஸ்ம்ருதி அல்லது தர்ம சாஸ்திரத்தை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
34. ஸ்வ சாகையை மாற்றுவதற்கும் அதிகாரமில்லை
35. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆண் அல்லது பெண் விவாஹரத்து செய்து கொள்ள தர்ம சாஸ்த்ரத்தில் இடம் இல்லை.
36:- விவாஹம் ஆன பெண்ணுக்கு தர்மசாஸ்திர முறைப்படி ஒரே கோத்திரம் அல்லது வேறு தோஷம் அல்லது தீராத வியாதி இருப்பது தெரியவந்தால், அந்த மனைவியை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டுதான், தேவையானால் அந்த ஆண் மறு விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.
37. அப்பா அல்லது அம்மா அல்லது மற்றவர்களுக்காக செய்யும் அந்திமக்கிரியை முடிந்தவுடனோ அல்லது தாயாதிகளுக்கு பத்து தீட்டு கடைபிடிக்கும் போதோ மற்றும் கர்ப தீட்சை முடியும் போதோ ஆண்கள் வபநம் ( க்ஷவரம் –ஸர்வாங்கம் ) செய்து கொள்ள வேண்டும்.
38. குடியிருக்கும் வீடு கீழ் தளத்தில் இருந்தால் தர்மசாஸ்த்ரப்படி பூமியில் கர்மாக்களைச் செய்வதாக ஆகும்..
39. கணவன் இறந்துவிட்டால், மனைவி சாஸ்திரப்படி வபநம் செய்து கொண்டால்தான் அவர்களுக்கு இறப்பு தீட்டு விலகும்.
இந்த விதவைகள் இறப்புத்தீட்டு விலகாமல், ஐபம் செய்வதாலும், கோவிலுக்கு போவதாலும் அவர்களுக்கும் அந்த குடும்பத்திற்கும்
மஹா பாபம் ஏற்படுகிறது . இறப்பு தீட்டு மகா சக்தி வாய்ந்ததாகும்.( இப்போது , இதைச் சொல்லி ப்ரயோஜனமில்லை )
அநாதை பிணத்தை ஸ்ம்ஸ்கரிப்பதும், ஏழை, குருடன் இவர்களுக்கு உதவுவதும் ஸகல பாபங்களையும் போக்கக்கூடியது..
40. எந்த வீட்டில் சாஸ்த்ர முறைப்படி வேத சப்தம் கேட்காமலும், சாஸ்த்ரப்படி கர்மானுஷ்டங்கள் நடை பெறாமலும், எந்த க்ருஹத்திற்கு வேத அத்யாயிகள் அடிக்கடி வரவில்லையோ அந்த வீடு சுடுகாட்டுக்குச் சமம் என்று ஸ்ம்ருதி கூறுகிறது.
41. இன்று ஸ்நானம் செய்துவிட்டு வஸ்த்ரத்தை உலர்த்தி, மறுநாள் ஸ்நானம் செய்த பிறகு அதை உடுத்திக்கொள்வது நித்ய கர்மாவிற்கு மட்டுமே பொருந்தும்.
42.மற்ற கர்மாக்களுக்கு, குறிப்பாக ச்ராத்ததிற்கு அன்று ஸ்நானம் செய்து விட்டு அன்று காலை நனைத்து உலர்த்திய வஸ்த்ரத்தைத்தான் உபயோகிக்க வேண்டும்.
44. ஸ்நான ஜாடி –அதாவது ஸ்நான வேஷ்டியுடன் ஸ்நானம் செய்யவேண்டும்; வஸ்திரமில்லாமல் ஸ்நானம் செய்யக்கூடாது.
45. வேதம் படித்தவர்களை (வேதாத்யாயிகள் ) ஒரு போதும் குறை கூறக்கூடாது.
46. காஸ் அடுப்பை கர்மாக்கள் செய்யும் போது உபயோகப்படுத்தக்கூடாது. குமிட்டி அடுப்பு விறகு அடுப்பு முக்கியமானது.
47. கர்மாவை நன்றாகப் புரிந்துகொண்டு ச்ரத்தையுடன் செய்ய வேண்டும்.
48. வைதிகர்கள் தர்ம சாஸ்திரத்தைத் தெரிந்து கொண்டுதான்ப்ரயோகமுறையையும் தெரிந்துகொண்டுதான்
வைதிக கர்மாக்களைச் செய்து வைக்க வேண்டும்.
49.தர்ம சாஸ்திரத்திற்கு விரோதமாகச் கர்மாக்களை செய்து வைக்கும்போது, அதன் பாபம் தக்ஷணை மூலமாக
அந்த வைதிகருக்கே வந்து சேரும்.
50. வேதங்கள், சாஸ்த்ரங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதில் சிறிதளவும்
அனுஷ்டானம் இல்லாத ப்ராஹ்மணனைவிட , தர்ம சாஸ்திர முறைப்படி
நித்யகர்மாக்களான சந்தியாவந்தனாதிகளை செய்கின்ற ப்ராஹ்மணன் சிறந்தவன் .
—
Sarvam Sree Hayagreeva preeyathaam