Srimath Raamaayanamum Naamum – 2

Posted on Apr 2 2016 - 3:53pm by srikainkaryasriadmin

Thiruvallikeni-Parthasarathy-temple-Ramar-Utsavam-day-2-2014-04

ஸ்ரீமத் ராமாயணமும்நாமும் —–தொடர்ச்சி —2
——————————————————————
ஸ்ரீமத் ராமாயணம், வேதத்தைவிடச் சிறந்தது —-வேதம் சிறந்தது. அதை அத்யயனம் செய்ய வேண்டும். ஆனால், இன்னார்தான் அத்யயனம் செய்யலாம் , இன்னார்தான் கேட்கலாம், குறிப்பிட்ட காலத்தில்தான் கேட்கலாம்,
( அநத்யயன காலம் என்பதாக, வேதத்தைச் சொல்லக் கூடாத காலம் உண்டு ). குறிப்பிட்ட இடத்தில்தான் அத்யயனம் செய்யலாம், வேதம் வல்ல வேதஅத்யாயீ மூலம் தான்  வேதத்தைக் கற்கலாம் என்று பல கட்டுப்பாடுகள்; சட்டதிட்டங்கள் உள்ளன.

ஆனால், ஸ்ரீமத் ராமாயணத்துக்கோ இவ்வளவு கடுமையான விதிகள் இல்லை. இதைப் படித்தாலே வேத அத்யயனம் செய்ததாக ஆகும். இதைக் கற்றாலே, வேதத்தைக் கற்றதாக ஆகும். ஏனென்றால், வேதங்களின் அவதாரமே ஸ்ரீமத் ராமாயணம். வேதங்களால் நாம் அறிகிற ஸ்ரீமந்  நாராயணன் , தசரத குமாரனாக அவதரித்தபோது வேதங்கள் ,
வால்மீகி மஹரிஷி  மூலமாக ராமாயணமாக அவதாரம் செய்தன.

வேத வேத்யே  பரே  பும்ஸி  ஜாதே தசரதாத்மஜே  |

வேத : ப்ராசேதஸாத்   ஆஸீத்  ஸாக்ஷாத்  ராமயணாத்மனா   ||

…………………இது ப்ரமாணம்
ஸ்ரீ நம்மாழ்வார் , திருவாய்மொழியில்,

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலாப் புல்  எறும்பு ஆதி ஒன்று இன்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்கு  உய்த்தனன் நான்முகனார் பெற்ற  நாட்டுளே ஸ்ரீராமன் அவதரித்த அயோத்தில் தோன்றியிருந்த நிலம், நீர், காற்று , இவையெல்லாம்   தாங்கள்தான் உயிரினங்களுக்கு , பலம், சுகம்  இவைகளைக் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தன.

Page 2

ஸ்ரீராமன் அவதரித்தபிறகு, ராமனே எல்லா உயிர்களுக்கும் தாரகம், போஷகம், போக்யம் என்று உணர்ந்தன

கர்ம யோகம் போன்றவைகளை அனுஷ்டிக்காமலேயே , ராமனின் திருவடிகளே சரணம் என்று இருந்தன.

பிற அவதாரங்களுக்கு இல்லாத சிறப்பு .இது; இவனே கற்பதற்கு உரியவன்  என்கிறார்.

முராரி என்கிற புகழ் பெற்ற கவிஞர் , ராமபிரானைக் கதாநாயகனாக வைத்து, ” அனர்க்க ராகவம் ”என்று

காவ்யம் எழுத ஆரம்பித்தபோது, அவருடைய நண்பர்கள், ஸ்ரீ ராமனைப்பற்றி ஏற்கெனெவே பல காவ்யங்கள்
பல படைப்புகள்   வந்து விட்டன என்றார்களாம். அதற்கு , முராரி, ”’ராமனின் நற்குணங்களை இதுவரை
எவரும் எழுதி முடித்தவர்கள் இல்லை; நாடு என்றால் எது, ஒரு அரசன்  நாட்டை எப்படி அரசாட்சி செய்ய வேண்டும்,

ஒரு குடும்பத்தில் தலைவன் தலைவி மகன்  தந்தை  அண்ணன்  தம்பி   தாய் மகன்  மாமியார்   மருமகள்

இப்படிப் பல உறவுகளும் எப்படி ஒருவருக்கு ஒருவர் நடந்துகொள்ள வேண்டும்   என்பனவற்றை,

வாழ்வாங்கு வாழும் முறையைச் சொல்வது ராம காவ்யம்; இது கதை, வரலாற்று நூல், அற  நூல், வேதாந்த நூல்

என்று எப்படிச் சொல்லப்பட்டாலும், மனிதனைச் செம்மைப் படுத்துகிறது.வழிகாட்டுகிறது ” என்றாராம்

 

 

 

 

 

 

 

 

Page 3

இது சரணாகதி சாஸ்த்ரம்

ஸ்ரீமத் ராமாயணம், பகவானிடம் சரணாகதி அடையச் சொல்கிறது.

ஸ்ரீ ராமனின்

அவதாரத்துக்கு  முன்பு—-தேவர்கள் சரணாகதி

விச்வாமித்ரரிடம் —த்ரிசங்கு , சுனச்சேபன் —சரணாகதி

ஸ்ரீராமனிடம் ——–லக்ஷ்மணன் சரணாகதி

காகாஸுரன்  சரணாகதி

பரதன் சரணாகதி

பரதனுடன் கூட, சத்ருக்னன் சரணாகதி

தண்டகாரண்ய  ரிஷிகள் சரணாகதி

ஸுக்ரீவன் சரணாகதி

சமுத்ரராஜன்  சரணாகதி

த்ரிஜடை  சரணாகதி ( பிராட்டியிடம் )

விபீஷணன் சரணாகதி

இப்படிப் பல சரணாகதிகள்—ஆதலால், இது சரணாகதி சாஸ்த்ரம் என்று புகழப்படுகிறது.

 

ஸ்ரீமத் பாகவதத்தில், ப்ரஹ்லாதன் , பகவானிடம் 9  வகையான பக்தியைச் சொல்கிறான்.

ச்ரவணம்   கீர்த்தனம்  விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம் |

அர்ச்சனம் வந்தனம்  தாஸ்யம் ஸஹ்யம்  ஆத்ம  நிவேதனம் ||

ஸ்ரீமத் ராமாயணம், இந்த 9 விதமான பக்தியைச் சொல்கிறது.

  1. ச்ரவணம் —–அநுமன் ….. இவர் எப்போதும் ராம நாமத்தை ச்ரவணம் செய்பவர்; ராமகாதை எங்கெங்கு

சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் கைகுவித்து கேட்டுக்கொண்டிருப்பவர்

 

 

 

 

Page 4

  1. கீர்த்தனம்—வால்மீகி மகரிஷி …….ஸ்ரீமத் ராமாயணத்தை 24,000 ச்லோகங்களில் பாடியவர். பிறருக்குக்          கற்பித்தவர். சக்ரவர்த்திதிருமகனின் பட்டாபிஷேகம் முடிந்தது; ஜனங்கள்

சந்தோஷப்பட்டார்களாம் இதை ஒரு ச்லோகத்தில் மகரிஷி சொல்கிறார்.
ராமோ  ராமோ ராமஇதி ப்ரஜாநாம்  அபவன் கதா |

ராம பூதம்  ஜகத் அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி ||

ராமன் தன்  அழகாலும் , சீலத்தாலும் (குணம் )நல்ல  ஆட்சியாலும்
அனைவருடைய மனமும், வேறு எங்கும் செல்லாதபடி திருத்தி ,காத்து,

அவதார ப்ரயோஜனமான மோக்ஷத்தையும் அளிக்கிறான் என்கிறார்

ராம நாமாவை ,ஐந்து தடவை சொல்லிச் சந்தோஷப்படுகிறார்

3, ஸ்மரணம் —-ஸீதை ……….பிராட்டி அசோக  வனத்தில் இருக்கிறாள். அவளுக்கு மனம்  ரதமாகிறது.  எண்ணங்கள் குதிரைகள்  ஆகின்றன  மனஸ் , எண்ணங்கள் இவற்றின் மூலம்    ராமனையே நினைத்து இருக்கிறாள். ராமனையே பார்க்கிறாள்.  ராமனைப் பற்றியே பேசுகிறாள். ராமனைப் பற்றியே கேட்கிறாள்.                    இப்படி, ஸ்மரண பக்தி. நினைத்து, நினைத்து உருகுகிறாள்.

ஸங்கல்பஹய  ஸம்யுக்தை :
யாந்தீமிவ  மநோரதை :

ஹா ராம ஸத்ய வ்ரத ! தீர்க  பாஹோ

ஹா பூர்ண  சந்த்ர ப்ரதிமான  வக்த்ர

ஹா ஜீவ லோகஸ்ய  ஹித : ப்ரியஸ்ச

ராமேதி ராமேதி ஸதைவ புத்யா
விசிந்த்ய   வாசா ப்ருவதீ  தமேவ

விசிந்தயந்தீ  ஸததம்  தமேவ

ததைவ பச்யாமி  ததா ச்ருணோமி
—————————-ச்ரவண  பக்திக்கு ஸீதா பிராட்டி

 

 

 

Page  5

4.பாத ஸேவனம் —–பரதன்…….. பரத : ஸ்ரீ பாதுகா ஸேவநே ………பரதன், ஸ்ரீராமனிடம் ஸாத்விகமான பக்தி கொண்டவன். தசரதன் ஸ்வர்க்கம் சென்றார். அப்போது, பரதனும் சத்ருக்னனும் அயோத்தியில் இல்லை.

கேகய தேசம் ( மாமாவின் தேசம் ) சென்று இருந்தார்கள். பரதன், சத்ருக்னனுடன்    அயோத்திக்குத் திரும்புகிறான்.

ஸ்ரீ ராமனின் வனவாஸத்துக்கெல்லாம் தன்  தாயாரான கைகேயியும் மற்றும் கூனியே  காரணம் என்று தெரிந்துகொள்கிறான்
ஹன்யாம் அஹம்  இமாம்  பாபாம்  கைகேயீம்  துஷ்ட சாரிணீம்  |

யதிமாம் தார்மிகோ ராஜா நாஸுயேத்  மாத்ரு காதகம்   ||

அயோத்தியை அரசாண்ட தசரதனைக் கொன்றும்  , ஆள்வதற்கு உரிமையுள்ள ஸ்ரீராமனைக் காட்டுக்கு

அனுப்பியும் கடுமையான பாபத்தைச் செய்த கைகேயியைக் கொன்று விடுவேன்.  ஆனால், பரம தார்மிக

குணம் உள்ள ராமன் “தாயைக் கொன்று பாபம் செய்தவன் ” என்று அருகிலேயே நெருங்கவிடமாட்டான்

என்கிறான்.

இமாமபி ஹதாம் குப்ஜாம் யதி  ஜானாதி  ராகவ : |

த்வாம்ச  மாம் சைவ  தர்மாத்மா நாபி பாஷிஷ்ய தே  த்ருவம் ||

ஹே  …சத்ருக்னா ! இந்தக் கூனியைக் கொன்றுவிடுவேன்.  அறிந்தால், ஸ்ரீ ராமன் உன்னோடும் என்னோடும்
முகம் கொடுத்துக்கூடப்  பேச மாட்டானே   என்கிறான்.

பரதன் சபதம் செய்கிறான்

யதிது ஆர்யம் ந சக்ஷ்யாமி விநிவர்த்துயிதம்  வநாத்   |

வனே தத்ரைவ வத்ஸ்யாமி  யதார்யோ லக்ஷ்மணஸ்ததா  ||

 

 

Page  6

ஹே—-ஆசார்ய—-ஹே—-மந்த்ரிகளே ——வனத்திலிருந்து ராமனைத் திருப்பி அயோத்திக்கு அழைத்து

வர முடியாவிடில் , ராமன் திருவடிகளே சரணம் என்று இருப்பேன் ——-என்கிறான்.
பரதன் ,ஆரண்யத்துக்குப் போகிறான். சத்ருக்னன் , ஆசார்யன், மந்திரிகள், தாய்மார்கள், சேனைகள்

அவனைத் தொடர்ந்து , கானகத்துக்குச் செல்கிறார்கள். ராமனிடம், அயோத்திக்குத் திரும்பி வந்து

ராஜ்யத்தை ஆளுமாறு , வணங்கி, வேண்டுகிறான். ஆனால், ஸ்ரீராமன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியாக, ஸ்ரீ ராமனிடம் அவரது பாதுகைகளை வேண்டுகிறான்.

அதிரோஹ  ஆர்ய  பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே  |

இமேஹி ஸர்வலோகஸ்ய  யோகக்ஷேமம்  விதாஸ்மத :  ||

ஸ்ரீ ராமன், தன்னுடைய திருவடிகளில் பாதுகைகளைச் சேர்த்து , அவற்றை, பரதனுக்கு அநுக்ரஹிக்கிறான்

பரதன், பாதுகைகளைத் தன்  சிரஸ்ஸில்   தாங்கி,அயோத்தி மாநகருக்கு முன்பாகவே உள்ள நந்திகிராமத்தில்,

பாதுகைகளை ஸிம்ஹாசனத்தில்  எழுந்தருளப் பண்ணி , பாதுகா சேவகனாக  பதினான்கு ஆண்டு காலம்

பாதுகா ராஜ்யத்தை நடத்தினான்.

நீ காட்டுக்கு வரவேண்டாம்  என்று ஸ்ரீராமன் சொன்னபோதிலும், ஸீதையும் ராமனும் வீற்றிருக்க, இருவரையும்

சரணாகதி செய்து , லக்ஷ்மணன் , அவர்களுடன்கூடவே காட்டுக்கு வந்தான். ஆனால், பரதனோ , ஸ்ரீராமன் வராமல் நகருக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்திருந்தபோதிலும், ஸ்ரீராமனின் கட்டளையை ஏற்று,

ஸ்ரீராம ஸேவைக்குப் பதிலாக, ஸ்ரீராம பாதுகா ஸேவை செய்தான்.  இது பாத ஸேவன பக்தி
Page  7

  1. அர்ச்சன பக்தி —ஸபரி…………….பம்பை நதிக்கரை. மதங்க முனிவர் ஆஸ்ரமம். மதங்க மஹரிஷி,பம்பையில் தீர்த்தமாடி, சிஷ்யர்களுடன் ஆஸ்ரமத்துக்குப் போவதைப் பார்த்தாள் , ஸபரி ,அன்றுமுதல், காட்டில் கிடைக்கும் நன்கு கனிந்த பழங்கள் , காய்ந்த சுள்ளிகள், இவற்றை சேகரித்து, அவர்கள் செல்லும் வழியில் வைத்துவிட்டு ஒதுங்கி நிற்பாள். பல நாட்கள் இப்படியே சென்றன.ஒருநாள், மஹரிஷி , இப்படிச் செய்பவர் யார் என்று தெரிந்துகொள்ள ஒதுங்கி நின்றுகொண்டிருந்த ஸபரியைப் பார்த்தார்.  ஸபரி, முனிவரை நமஸ்கரித்தாள்  மஹரிஷியின் கிருபையால், ஸபரி ,ஆஸ்ரமத்துக்குச் சென்று, அவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பணிவிடைகளைச் செய்து வந்தாள்

இப்படிப் பல காலம் கடந்தது.  மஹரிஷியும் , சிஷ்யர்களும் இவ்வுலகை விட்டு நீங்கும் காலம் வந்தது. அப்போது, மஹரிஷி ,ஸபரியிடம்,

” நீ இங்கேயே இருந்து, ஸ்ரீராமன் இங்கு வரும்போது, உபசரித்து,
அதற்குப் பின்பு , மேல் உலகுக்கு வா ……” என்று  சொன்னார்.

அன்றுமுதல், ஸபரி , ஸ்ரீ ராமனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் .வயது முதிர்ந்தது;நரை, திரை வந்தது;அப்போதும் காத்திருந்தாள் .

ஒரு நாள் —–ஸ்ரீ ராமன், லக்ஷ்மணனுடன் , இந்த மதங்க முனிவர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். ஸபரிக்குஅளவிலா சந்தோஷம் . ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, ஸ்ரீ ராமனை ,மலர்களைத் தூவி

வணங்கினாள் . இருகரம் கூப்பி, ஆசனத்தில் அமரவைத்து,ஸ்ரீ ராமனின் திருவடிகளுக்குத் திருமஞ்சனம் செய்து, அந்த தீர்த்தத்தால்,தன்னை அபிஷேகம் செய்துகொண்டு, மீதி தீர்த்தத்தைப் பருகினாள் . ஸ்ரீராமனுக்கு, அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் ஸமர்ப்பித்தாள் . அதுவரை,
சேமித்து வைத்திருந்த இனிய  கனிந்த பழங்களை உண்ணுமாறு ஸமர்ப்பித்தாள்.

 

 

 

 

 

Page  8

ஆண்டு  அவள் அன்பின் ஏத்தி ,
அழுது,இழி அருவிக் கண்ணள்

மாண்டது என்  மாயப் பாசம் ;
வந்தது வரம்பில் காலம் (யான்)

பூண்ட மாதவத்தின் செல்வம்

போயது  பிறவி என்பாள்

———(கம்பர்–ஆரண்ய காண்டம்)

பூண்ட தவத்தால், செல்வத்தை அடைந்தேன்; அது, ஸ்ரீ ராமனை பூஜிக்கும் செல்வம்; எனக்குப் பிறவி அற்றுப் போயிற்று  என்று ஸபரி சொல்வதாக, கவிச் சக்ரவர்த்தி , பாசுரம் இடுகிறார்.
ஸ்ரீ வால்மீகி சொல்கிறார்

தாம் உவாச  ததோ  ராம :

ச்ரமணீ ம் ஸம்ஸித   வ்ரதாம்  |

அர்ச்சிதோபிஹம்  த்வயா  பக்த்யா

கச்சகாமம் யதா ஸுகம் ||

ஸ்ரீ ராமன் சொல்கிறார்—உன் பரம பக்தியால், நன்கு உபசரித்தாய்; நீ விரும்பியதை அடைவாயாக —

உடனே, ஸபரி,   சுடர் விட்டு எரியும்  அக்னியில் தன்னை ஹோமம் செய்தாள் ..பளிச்சிடும் மின்னல்கொடி அதனின்றும் தோன்றியது; ஸபரியின்  ஆத்ம ஜோதி , பர ப்ரஹ்ம  சாக்ஷாத்காரத்தைப் பெற்றது.

இதை, ஸ்வாமி  தேசிகன், ஸ்ரீ ரகுவீர கத்யத்தில் (மஹா  வீர வைபவம் )  அவந்த்ய  மஹிம  முநிஜன பஜன முஷித ஹ்ருதய  கலுஷ  சபரீ மோக்ஷ சாக்ஷி பூத     என்கிறார்.
குற்றமே இல்லாத ஆசார்யர்களின் அனுக்ரஹத்தால் அஞ்ஞானம் நீங்கப்பெற்ற சபரி மோக்ஷம்

அடைவதற்கு  நீ சாக்ஷியாக  விளங்கினாய்  …..என்கிறார். ஆசார்யனைத் தவிர வேறு தெய்வம்

 

Page 9

 

இல்லைஎன்றும், பாகவத அனுக்ரஹமும் இருந்தால் மோக்ஷம் நிச்சயம் என்பதும் பகவானே

அதற்கு சாக்ஷி என்றும் தெளிவாகிறது. இப்படி , அர்ச்சன  பக்திக்கு, சபரி மோக்ஷத்தைப் பூர்வர்கள்

எடுத்திருக்கிறார்கள்.

  1. வந்தன பக்தி—-விபீஷணன் …….ராவணனின் தம்பியாக இருந்தாலும் , விபீஷணன், பரம தர்மிஷ்டன். அரக்கர்களுக்கு உரிய மோசமான குணம் சிறிதும் இல்லாதவன். ராவணனிடம் , “சீதையை, ராமனிடம் சேர்ப்பித்துவிடு …வலுவில், அழிவைத் தேடிக்கொள்ளாதே…”

என்று தனியாகவும்,  ராஜ சபையிலும், பலதடவை  அறிவுரை சொன்னான். ராவணன், இதற்காக,விபீஷணனை ஏசினான்

விபீஷணன்,  அண்ணனுடன் இருந்து அவனின் அவச்சொல்லைக் கேட்பதைவிட,  ராமனிடம் வருவது மேன்மையானது என்று .தீர்மானித்தான்.

ஸோஹம்  பருஷி  தஸ்தேன  தாஸவச்சாவ  மானித : |

த்யக்த்வா புத்ராம்ஸ்ச  தாராம்ஸ்ச  ராகவம் சரணம் கத :  ||

இலங்கையின்  வடக்கே சென்று,  கடலைக்  கடந்து  ” நான் ராவணனால்  ஏசப்பட்டு , வேலையாளைப் போல அவமதிக்கப்பட் டேன் ; ராஜ்யம் வேண்டாம், மனைவி மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கி பரமாத்மனி  யோரக்த : விரக்த : அபரமாத் மனி  |

மீதி எல்லாவற்றிலும் பற்றை அறுத்து, சர்வ லோக சரண்யனான ராமனைச் சரண் அடைந்தேன்   என்றான்.

தருமமும், ஞானமும் தவமும் வேலியாய்

மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க்

கருணையங்  கோயிலுள்  இருந்த கண்ணனை

அருள்நெறி எய்திச் சென்று அடி வணங்கினான்

என்கிறார் கம்பநாட்டாழ்வார்

Page 10

 

தர்மம், ஞானம், தபஸ் என்று மூன்று பக்க மதிற்சுவர் ; முன்புறம் உள்ளது–பெருமை, பொறுமை என்கிற கோபுர வாசல்;கருணைமயமான கர்பக்ருஹம் ;அங்கு எழுந்தருளி இருக்கும் அருளைச்சுரக்கும்

பெருமானை , முறைப்படி உள்ளே சென்று தெண்டனிட்டான்.

ஸ  துராம்ஸ்ய  தர்மாத்மா நிபபாத விபீஷண : |

பாதயோஸ்  ஸரணான் வேஷீ  சதுர்பி : ஸஹ ராக்ஷசை : ||

நிபபாத விபீஷண : பாதயோ : சரணான்  வேஷீ   ||

ஸ்ரீ ராமன் திருவடிகளையே அடைக்கலமாகக் கொண்டு, விபீஷணன் அடி பணிந்தான்.

—–இது வந்தன பக்தி என்று பெரியோர்  சொல்வர்.

  1. தாஸ்யம் —-லக்ஷ்மணன்………துளஸீ ,முளைக்கும்போதே , வாசனையைக் கொடுத்துக்கொண்டே முளைத்து,

வளருகிறது.  லக்ஷ்மணன்,   அவதரிக்கும்போதே ,பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காகவே அவதரிக்கிறான் .

அதனால்தான், இந்தக் குலத்துக்கே ஆசார்யரான குலகுரு வசிஷ்டர், இவனுக்கு நாமகரணம் இடும்போது,

கைங்கர்ய லக்ஷ்மியோடு பிறந்தவன்— ”லக்ஷ்மணோ,லக்ஷ்மி ஸம்பந்ந…”  என்பதாலே லக்ஷ்மணன் என்று பெயரிட்டதாகச் சொல்வர்.

ஸ்ரீராமன்   காட்டுக்குப் போகும்போது, ஸீதா தேவியை புருஷகார பூதையாகக் கொண்டு , ராமனின்

திருவடிகளைப்  பிடித்து,”அடைக்கலம் என்று சொல்லி வந்தவரை, அஞ்சேல் …” என்று வாழ்விக்கும்

உம்மைப் பிரியமாட்டேன்  என்று சரணாகதி செய்தான் , லக்ஷ்மணன்.

தனு :  ஆதாய ஸகுணம் கனித்ர பிடகாதர :  |

அக்ரதஸ்தே  கமிஷ்யாமி பந்தானம் தவ  தர்ஸயன் ||

அஹம்  ஸர்வம்  கரிஷ்யாமி ஜாக்ரத :  ஸ்வபதர்ஸதே   ||

 

Page  11

அடியேன்,உம்மைத் தொடரும்   வேலைக்காரன். அடியேனை ஏற்றுக் கொள்வீராக. அப்போதுதான்

அடியேனின் ஜன்மம் சாபல்யம் அடையும். வில்லில் நாண்  ஏற்றிக் கையில் பிடித்துக்கொண்டு,

பூமியைத் தோண்டும் கொத்து என்கிற ஆயுதத்தோடும்,கனிகளைச் சேகரிக்கும் கூடையைச்

சுமந்துகொண்டும், உங்களுக்கு முன்பாக –முன்னாலேயே நடந்து போய் , உங்களுக்கு நடப்பதற்கு

வழியைக் காட்டிக் கொண்டு செல்வேன். நீங்கள் தங்கும் இடத்தில்  தட்ப,வெப்ப நிலைகளுக்கு

ஏற்ப , பர்ண சாலை அமைத்து , நீங்கள் விழித்து இருக்கும்போதும், உறங்கும்போதும், தேவையான
பொருட்களை  சேகரித்துக் கொடுப்பேன். எல்லா  ஊழியமும் செய்வேன்   என்கிறான் — தாஸ்ய பக்தி

  1. ஸக்ய / ஸஹ்யம் —-ஸுக்ரீவன் …..நட்பு ….பகவான் , ஸ்ரீ ராமனாக அவதரித்து இருக்கிறான் என்பதை,

முன்கூட்டியே உணராத நிலை ஸுக்ரீவனுக்கு.   மனுஷ்யனாகக் கருதி, தனக்குச் சமமாகப் பாவித்து,

நட்பு பாராட்டுகிறான்.

ச்வேதாச்வர  உபநிஷத்  இப்படிக்கூறுகிறது.

பகவானை, புகல்  அளிக்கும்   —-அடைக்கலம் கொடுக்கும் —கருணை உள்ளம் கொண்ட சஹா –நண்பன் —

என்கிறது.

ஸுக்ரீவன் , அக்னி சாக்ஷியாக , ஸ்ரீ ராமனிடம் நட்பு கொள்கிறான்.  கையை,ஸ்ரீ ராமனிடம் நீட்டி,

நட்புக்கு அடையாளமாக என் கையைப் பற்றுங்கள்   என்கிறான்.

ரோசதே யதி வா  ஸக்யம்  பாஹூ : ஏஷ : ப்ரஸாரித :  |

க்ருஹ்யதாம்  பாணினா  பாணி :  ||

என்பது  ஸ்ரீ வால்மீகி ச்லோகம். பக்தியுடன்  கலந்த ஸஹ்யம்

 

Page  12

தவ  ப்ரஸாதேன  ந்ருஸிம்ஹ ,  வீர , ப்ரியாம்  ச  ராஜ்யம்  ச  ஸமாப்னுயாம்  அஹம்

ஸ்ரீ வால்மீகி மஹரிஷியின் ச்லோகம் இது.  .ஹே..ந்ருஸிம்ஹாவதாரம்  எடுத்தவனே—-
நான் என்னுடைய மனைவி ருமையையும் , என்னுடைய ராஜ்யத்தையும் அடைவதற்கு

உதவி செய்யுங்கள்  என்கிறான் ஸுக்ரீவன்  ( பகவான் என்று உணர்ந்தவுடன்)

ஆக , நட்புக்கு உதாரணமாக , ஸுக்ரீவனை, எடுத்துக் கொள்கிறார்கள், பெரியவர்கள்.

  1. ஆத்ம நிவேதனம் —ஜடாயு…..அகஸ்த்யர் ஆலோசனைப்படி, ஸ்ரீராமன், சீதையும் லக்ஷ்மணனும்

,  கூடவே வர பஞ்சவடிக்குச் செல்கிறான். போகும் வழியில், ஜடாயுவைச் சந்திக்கிறார்கள்.

ஜடாயு சொல்கிறான்—–உ வாச  வத்ஸ  !  மாம் வித்தி வயஸ்யம்  பிதுராத்மன :

ஹே—-வத்ஸ —–நான், உன் தகப்பனாரின் நண்பன்—-நான், கருடனின் சகோதரனான அருணனின்

பிள்ளை—ஜடாயு  என் பெயர். மேலும் சொல்கிறான்….

ராக்ஷஸர்கள்  அதிகமாக வசிக்கும் இந்த வனத்தில்  துணையாக இருப்பேன்  என்கிறான்.

 

 

 

 

 

 

Page 13

ராவணன் ஸீதாப் பிராட்டியை,  விமானத்தில் எடுத்துச் சென்றபோது,ஆகாயத்தில்
ராவணனைத் தடுத்துப் போரிட்டான். கடைசியில், ராவணனால் சிறகுகள் ( இறக்கைகள் )
துண்டிக்கப்பட்டுத் தரையில்  விழுந்தான். ஸ்ரீ ராமனும் , லக்ஷ்மணனும் , ஸீதையைத்

தேடிக்கொண்டு வந்தபோது, நடந்த விவரத்தை அவர்களிடம் சொன்னான்.

அந்த காலேபி  த்ருஷ்ட் வாத்வாம்  முக்தோஹம்  ரகுஸத்தம   |

ஹஸ்தாப்யாம்  ஸ்பிருச  மாம் ராம  ! புனர்யாஸ்யாமி  தே  பதம்  ||

————-அத்யாத்ம ராமாயணம்

பஞ்சவடியில் ,பலதடவை உன்னை ஸேவித்தேன். இப்போது உயிர் பிரியும் சமயத்தில்

உன் தர்ஸநம்  கிடைத்தது. ஒரு தடவை, உன் திருக்கரங்களால், என்னைத் தடவிக் கொடு.

முக்தனாகி  உன் திருவடியை (வைகுந்தம் ) அடைகிறேன் , என்கிறான், ஜடாயு.

தன்னுடைய ஆத்மாவை, ஸ்ரீராம ஸேவையில் நிவேதனம் செய்கிறான்.

,இப்படியாக , ப்ரஹ்லாதன் சொன்ன , நவவித பக்தியையும் ஸ்ரீமத் ராமாயணத்தில்

மேலோட்டமாகப் பார்த்தோம் (  ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஆண்டவன். அருளிய
” ராமபிரானைக் கற்போம் “தொடர்ச்சியாக , அடியேன் சேர்மனாக உள்ள
“ஸ்ரீ காஞ்சி பேரருளாளனி”ல் பிரசுரம் ஆயிற்று. ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஆண்டவனைத் ,

தெண்டன் சமர்ப்பிக்கும் போதெல்லாம், அவ்வப்போது இதைப் பற்றிக் கேட்டாகும்.
ஸ்ரீமத் ஆண்டவனின்  வாத்ஸல்யம் , க்ருபை கலந்த சம்பாஷணைகள் —எப்போதும் மறக்க இயலாதது. )

அடுத்து, யுகந்தோறும் , ” ஸ்ரீமத் ராமாயணம்” என்பதைப் பார்ப்போம்.

About the Author

Leave A Response