Srimath Raamaayanamum Naamum – 3

Posted on Apr 2 2016 - 3:54pm by srikainkaryasriadmin
Thiruvahindrapuram-Sri-Devanatha-Perumal-Ramar-Utsavam-day-3-2014-1
ஸ்ரீமத் ராமாயணமும், நாமும் ——3
—————————————————–

யுகம்தோறும்  ஸ்ரீமத் ராமாயணம் , என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

க்ருத யுகம்
—————

ஸோமதத்தன் என்பவன்  சாஸ்த்ரங்களை  நன்கு அறிந்தவன். அனுஷ்டானங்களையும்  விடாமல்
செய்பவன். கௌதம  மஹரிஷியின்  சிஷ்யன்.

ஒருநாள், ஸோமதத்தன் , தன்னுடைய  குடிசையில் பகவத  ஆராதனம் செய்துகொண்டிருந்தான்.
 அப்போது ,எதிர்பாராமல், கௌதம மஹரிஷி   வந்தார்.   ஸோமதத்தன், குருவைப் பார்த்தும்
எழுந்திருக்கவில்லை;  நமஸ்கரிக்கவில்லை; தொடர்ந்து ,ஆராதனம் செய்துகொண்டிருந்தான்.
ஆராதனம் செய்துகொண்டிருந்தாலும் , ஆசார்யன் வந்தால், எழுந்திருந்து, நமஸ்கரித்து,
அவரிடம் சொல்லிவிட்டு, ஆராதனத்தைத் தொடர்வதே  முறை .இதைச் செய்யாததால்,
ரிஷிக்குக் கோபம்வந்து, ஸோமதத்தனைச் சபித்தார். ” என்னை அவமானம் செய்த  நீ, அரக்கன்
ஆவாய் ” என்றார். ஸோமதத்தன்  உடனே குருவின் திருவடியில் வணங்கி, மன்னிக்குமாறு
வேண்டினான். ” அறியாமல் செய்த குற்றம்….மன்னித்து அருள்க …” என்று  மன்றாடினான்.
ஆசார்யனுக்கு ,மனம் இளகியது.”கார்த்திகை மாதம் வளர்பிறையில் ஸ்ரீமத் ராமாயணத்தைக்
கேட்பாயானால் ,  விமோசனம் ஏற்படும் ” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
ஸோமதத்தன், ராக்ஷஸன் உருவில் , எதிரே வருபவர்களை எல்லாம், அடித்துக் கொன்று
சாப்பிட ஆரம்பித்தான்.இப்படிப் பலகாலம் கழிந்தது.
ஒருநாள் கர்கன்  என்கிற  ப்ராம்மணன் , கங்கைக்குச் சென்று நீராடி, கங்கை நீர் நிறைந்த
குடத்தைத்  தோளில்  சுமந்துகொண்டு, உருக்கமாக, உரக்க,”ராம நாமாக்களை ”
சொல்லிக்கொண்டு, ஸோமதத்தன்    ராக்ஷஸனாக வசிக்கிற வழியாக வந்தான்.
சப்தம் வந்த திசையை நோக்கிப் போன ஸோமதத்தன், கர்கன் என்கிற அந்த ப்ராம்மணன் மீது
பாய்ந்தான்.
சட்டென்று  ஒதுங்கிய கர்கன் , ஸோமதத்தனைப் பார்த்து,  ” பிராணிகள்தான் உயிர்க் கொலை
செய்து வாழ்கின்றன; அறிவுள்ள நீயும் இப்படிச் செய்யலாமா?நீ ஏதோ தகாத செயலைச் செய்து,
இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. இதோ கங்கா தீர்த்தம் … ஸ்ரீராம
நாமத்தால் மந்த்ரிக்கப்பட்ட  தீர்த்தம்.  ” என்று சொல்லிக் கொஞ்சம் கங்கா தீர்த்தத்தைக்
 கொடுத்தான்.  ஸோமதத்தனுக்கு , கௌதமர்  சாபமும்  ராமாயணமும் நினைவுக்கு வந்தன.
தீர்த்தத்தைப்   பருகினான். உடனே சொன்னான் ”அந்தணரே …உமது உபதேசத்தால், தன்யனானேன்
இன்று என்ன நாள்? என்ன மாதம் ? என்று கேட்டான். கர்கன் , கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ நவமி
என்று சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டு, ” அந்தணரே …ஆசார்யனின் கருணை …தாங்கள்
ஸ்ரீமத் ராமாயணத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்…அதைக் கேட்டவுடனே , அடியேனுக்குப்
பாப விமோசனம் கிடைத்துவிடும் ”’என்று வேண்டினான்.  எல்லா  விவரங்களையும்
தெரிந்துகொண்ட கர்கன் , ஸ்ரீமத் ராமாயணத்தை உடனே பாராயணம் செய்யத் தொடங்கினான். \
 அதைக் கேட்கக் கேட்க, ஸோமதத்தனின்  மனம் உருகியது .  அரக்க வடிவமும் குணமும் நீங்கி,
பழையபடி ஸோமதத்தன்  ஆனான்.
ஸ்ரீ ராமபிரான், சங்க, சக்ர கதாபாணியாக இவன் எதிரில் தோன்றி, அபயப்ரதானம்  செய்தார்.
சங்க சக்ர கதாபாணி : ராமபத்ர :ஸமாகத :  |
என்று ஸ்காந்தம்,   இந்தச் சரிதத்தைச் சொல்கிறது.

த்வாபர யுகம்
—————-

ஸுமதி என்கிற அரசன், ஸ்ரீராமபிரானின் பக்தன்  அரசனின் மனைவியும் அப்படியே
.ஒரு நாள், விபண்டகர் என்கிற மஹரிஷி, அரசனைப்  பார்க்க வந்தார்.  அரசன் அவரை வரவேற்று,
உபசரித்து,ஆசனத்தில் அமரச் செய்தான்.
மஹரிஷி , அரசனிடம் ” அரசே…..பகவான் பற்பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.
புராணங்களும், இதிஹாசங்களும் , இவற்றைப் புகழ்ந்து போற்றுகின்றன.  ஆனால்  ,உமக்கு,
ஸ்ரீ ராமபிரானிடத்தில் அதீத பக்தி, ஸ்ரீமத் ராமாயணம் படிப்பதில் அதிக ஆர்வம், அதைக்கேட்பதில்
–அடிக்கடி கேட்பதில் முயற்சி, பிறருக்கு எடுத்துச் சொல்வதில் மகிழ்ச்சி  என்று
ஈடுபட்டு இருக்கிறீர்களே— இதற்குக் காரணம் என்ன என்பதைச் சொல்லலாமா ? ” என்று கேட்டார்
அரசன் பதில் சொன்னான்.
மஹரிஷே ….உம்மிடம் சொல்வதற்குத் தயக்கம் இல்லை. நான் , முற்பிறவியில், மாலதி என்கிற
பெயரில், நான்காம் வருணத்தில் பிறந்தேன். நிறைய  பாபச் செயல்களைச் செய்தேன்.
கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடித்தேன். கொலைகள் செய்தேன்.
விலைமாதர்கள் உறவு உண்டு.இவற்றை யெல்லாம், விளையாட்டாகச் செய்தேன்.
ஒருநாள், என்னுடைய  ஆகாரத்துக்காக வேட்டையாடினேன். எந்த விலங்கும், பிராணியும்
வேட்டையில் அகப்படவில்லை. சூர்யன் நடுவானத்துக்கு வந்து விட்டான் . உச்சி வேளை .
 ஒரே பசியும் தாகமும் வாட்டி எடுத்தது. சுற்றிச் சுற்றி வந்து ஒரு ஆஸ்ரமத்தை அடைந்தேன் .
அது , வசிஷ்ட மஹரிஷியின்  ஆஸ்ரமம் என்று தெரிந்து கொண்டேன். தாமரைப் பொய்கை
இருந்தது. நிறையத் தண்ணீர் எடுத்துக் குடித்து, மர  நிழலில் இளைப்பாறினேன் . பிறகு
வேட்டைக்குச் செல்வதும்,   இங்கு வந்து தங்குவதுமாக இருந்தேன். கொஞ்ச காலம்
கழிந்தது.
ஒருநாள்,  ஒரு வேட்டுவச்சி , தன்  உறவுக்காரர்களைப் பிரிந்து, பசிதாகத்துடன்
நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்தாள் . அவளுக்குப் பழங்களையும், தாகத்துக்கு நீரையும் கொடுத்தேன்.
அவள் சொன்னாள் :—
நான் விந்திய மலைச் சாரலில் வசிப்பவள். பொய்தான் சொல்வேன். திருடுவேன் . கணவனைக்
கொன்று விட்டேன்.உறவுக்காரர்கள் விரட்டி விட்டார்கள் ….
நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.இருவரும் தம்பதிகளாக ஆனோம்.
அப்போது , ஒரு மாசி மாதம்; வசிஷ்ட மஹரிஷியின்  ஆஸ்ரமத்தில்,ஒரே கோலாகலம்.
ஒருவர், ஸ்ரீமத் ராமாயணம் சொல்ல, ரிஷிகள் எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
நாங்களும், ச்ரத்தையுடன் கேட்டோம்.  9 நாட்கள் இப்படி ஸ்ரீமத் ராமாயணம் கேட்டோம்.
ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்டு முடிக்கிற சமயத்தில்,உயிர்   பிரிந்தது. ஸ்ரீராம தூதர்கள்,
விமானத்தில் எங்களை அழைத்துச் சென்றார்கள். ப்ரஹ்ம லோகம், இந்த்ர லோகம், இவற்றில்
சுகத்தை அனுபவித்தோம். இப்போது, பூமியில் , இந்தப்  பிறவியைப் பெற்றோம் .

தத : ப்ருத்வீம்  வயம்  ப்ராப்தா : க்ரமேண  முநிஸத்தம  |

மாசி மாதத்தில், சுக்ல பக்ஷத்தில், ஸ்ரீமத் ராமாயணத்தை ஒன்பது நாட்கள் கேட்டதன் பலனாக,
இந்த  ஜன்மத்தில், அரசனாகவும், அரசியாகவும் வாழ்கிறோம்
என்றான்
( –ஸ்காந்தம்-உத்தர காண்டம்–நாரத—ஸநத் குமார ஸம்வாதம் )

கலியுகம்
————-

கலியுகத்தின் ஆரம்பம்.
ஸ்காந்தத்தில் , ராமாயண  மஹாத்மியம்  சொல்கிறது—-
கலிகன் என்கிற ஒரு வேடன் இருந்தான். எல்லாப் பாபங்களையும்  செய்தான்.

பரதார பரத்ரவ்ய ஹரணே   ஸததம் ரத :  |
தேன  பாபானி அநேகானி  க்ருதானி  ஸுமஹாந்திச    ||

பிறன் மனை விழைவது,பிறர் பொருளைக் கவர்வது,இப்படிப் பலப்பலப் பாதகச் செயல்களைச்
செய்து வந்தான். ஒரு சமயம், பக்கத்தில் உள்ள ”ஸௌவீர ” என்கிற நகரத்துக்குச்  சென்றான்.
அங்குள்ளவர்கள்,  இராமாயண ப்ரவசனம் செய்வார்கள்.அதனால், அந்த நகரம் செழித்து இருந்தது.
கலிகன்,இந்த நகரத்துக்குப் போகும்போது,  நந்தவனத்தைப் பார்த்தான். அந்த நந்தவனத்தின்
நடுவில், ”ராம  மந்திர் ”—கோவில்–இருந்தது.  நந்தவனத்தில் புகுந்து, மந்திருக்குள்
நுழைந்தான்.  ,  உள்ளே  பொன்னாலான குடங்கள் , தங்க நகைகள் நிறைய இருந்தன. இவற்றைப்
பார்த்தான்.  உடனே, திருடும் எண்ணம் தோன்றியது.  அருகில் நெருங்கும்போது, அங்கே ” உத்தங்கர் ”
என்கிற ப்ராம்மணர்  இருந்தார் . அவர் , ராம த்யானத்தில் தன்னை   மறந்து ஈடுபட்டிருந்தார்.கலிகன்
அவர்மீது பாய்ந்தான்.

உத்தங்கம்  ஹந்தும்   ஆரேபே  உத்யதாஸி : மதோத்தத  : |
பாதேன   ஆக்ரம்ய தத்வக்ஷ :  கலம்  ஸங்க்ருஹ்ய பாணினா  ||

உத்தங்க ரிஷியைக் கீழே தள்ளி, அவர் மார்பின்மீது    ஒரு காலை வைத்து, ஒரு கையால்
அவர் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால்  அவர் தலையைத் துணிக்க (வெட்ட)
வாளை உருவினான். ரிஷியின் த்யானம் கலைந்தது. திடுக்கிட்டார்.

ஹந்தம் க்ருதமதிம்   வ்யாதம்  உத்தங்க :  ப்ரேக்ஷ்ய சாப்ரவீத்  |
போபோ : ஸாதோ  ! வ்ருதாமாம்த்வம்  ஹனிஸ்யஸி  நிராகஸம்   ||
மயா  கிம்  அபராத்தம்  தே s  தத்வத  த்வம்  ச  லுப்தக  !  ||

ஹே….சாதுவே….என்று  அலறினார். குற்றம்  செய்யாத என்னை  ஏன் கொல்வதற்குத் துணிகிறாய் ?
நான் என்ன தவறு/ தீங்கு செய்தேன் ?ஏதாவது தீங்கு செய்திருந்தால் சொல் ….என்றார்.

கலிகன் எந்தப் பதிலும் சொல்லவில்லை; இவரைப் பார்த்தான்.உத்தங்கர் மறுபடியும் பேசினார்.

ஸுஜனோ  ந  யாதி வைரம் பரஹித  நிரதோ விநாஸ காலேபி  |
சேதேபி  சந்தன தரு : ஸுரபீ கரோதி முகம் குடாரஸ்ய    ||
அஹோ நிஷ்காரணம் லோகே  பாதந்தே ஸுஜனான் ஜனான்  |
தீவரா :  பிஸுனா : வ்யதா : லோகே  அகாரண வைரிண  :  ||

முற்றிப்போன சந்தன மரம், விலை மதிப்பில்லாதது .அதன்    வாசனையே , அது எங்கு
இருக்கிறது என்று   காட்டி விடும். அதைக் கோடாலியால் வெட்டுகிறார்கள்.ரம்பத்தால் அறுக்கிறார்கள்.
இந்தக் கோடாலி,ரம்பம் இவற்றை முகர்ந்து பார்த்தாலே , சந்தன வாசனை வீசும். நம்மை
இப்படிச் சின்னாபின்னம் ஆக்கிவிட்டார்களே என்று,சந்தன மரம் தன்னுடைய வாசனையைக்
கொடுக்காமல் இருப்பதில்லை.  அதைப்போல ,ஸாதுக்கள்  தங்களுக்கு அழிவு நேர்ந்தாலும்
கெடுதல் செய்தவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.பகைமை பாராட்ட மாட்டார்கள்.
பகைவனாக இருந்தாலும், நாம்தானே தக்க சமயத்தில் உதவினோம் என்று பெருமையடித்துக்
கொள்ளவும்  மாட்டார்கள்.

கலிகன் ,இதையெல்லாம் கேட்டான் . தான் எதற்காக உள்ளே வந்தோம் என்பதை  மறந்தான்.
உத்தங்க மஹரிஷியின்  ஹிதமான பேச்சு, ராம மந்திரின் சாந்நித்யம் ,  அவன்  மனதை
மாற்றியது.கண்ணீர் பெருக்கெடுத்தது . ரிஷியைப் பார்த்துக் கை கூப்பினான்.
மன்னியுங்கள்…மன்னியுங்கள்,,,,,மன்னியுங்கள்…. என்றான்.

கலிக : ப்ராஞ்ஜலி : ப்ராஹ  க்ஷமஸ்  வேதி  புன : புன :  |
தத் ஸங்கஸ்ய  ப்ரபாவேண  ஹரி ஸந்நிதி  மாத்ரத  :  ||
கத பாபோ  லுப்தகஸ்ச  ஸாநுதாப : அபவத்  த்ருவம்

 (   ஸ்காந்தம் —-ராமாயண மஹாத்ம்யம்  )

கலிகன் நாத் தழுதழுக்கச் சொன்னான் —–….பிராம்மணரே.மன்னியுங்கள் …மன்னியுங்கள்….
முற்பிறவியில் செய்த  பாபங்களால்,இந்தப் பிறவியில் வேடனாகப் பிறந்தேன். பலப்பல ,
பாவங்களைச் செய்தேன். இவற்றைப் போக்கிக் கொள்ளத்   தகுந்த வழியை அருள்வீராக..என்றான்

 ஒருவன்  செய்த பாவங்களில்,நான்கில் ஒரு பங்கு, அவன் தவறு செய்துவிட்டோம் என்று
உணர்ந்து வருந்துவதால் கழிகிறது. இன்னொரு கால் பாகம் , அந்தத் தவறை மறுபடியும்
செய்யாததால் கழிகிறது. மற்றொரு கால்பாகம்,ப்ராயச்சித்தம் செய்ய ஆரம்பித்தாலே
கழிகிறது . மீதி  இருக்கும் கால்பாகம், ப்ராயச்சித்தம் செய்வதால் கழிகிறது. ..என்று
சாஸ்த்ரங்கள் சொல்கின்றன.

உத்தங்கர்  பதில் சொன்னார்

சைத்ரே  மாஸி  ஸிதேபக்ஷே  கதா ராமாயணஸ்ய  ச   |
நவாஹ்னா  கில   ஸ்ரோதவ்யா  பக்தி பாவேன   ஸாதரம்   ||
யஸ்ய ஸ்ரவண  மாத்ரேண  ஸர்வ பாபை : ப்ரமுச்யதே  ||
                              ( ஸ்காந்தம்—ராமாயண மஹாத்ம்யம்  )

கலிகனே …….சித்திரை மாத சுக்ல பக்ஷத்தில்,ராமாயணத்தை 9 நாட்கள்
பக்தி, ச்ரத்தையுடன் கேட்டால்,பாபமெல்லாம் ஓடிப்போய் விடும். …என்றார்
கலிகனும் ,  அவரிடமே ,ஸ்ரீமத் ராமாயணத்தை ,நவாஹமாக –9 நாட்கள் , அவரையே
சொல்லும்படி பிரார்த்தித்து, ச்ரத்தையுடன் கேட்டான்.ஸ்ரீ ராம பட்டாபிஷேக சரிதத்தைக்
கேட்டதும், அவன் உயிர் பிரிந்தது. தேவ லோகத்திலிருந்து விமானம் வந்தது.கலிகனின்
ஆத்மா உத்தங்கரை  சேவித்துவிட்டு,விமானத்திலேறி விஷ்ணு லோகம் சென்றது.

 சாஸ்திரம்,ஒவ்வொரு ஆச்ரமத்துக்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைச் சொல்கிறது.
அவற்றைச் செயல்படுத்த மன உறுதி வேண்டும்.  இது,கலியுகத்தில் மிக அதிகமாக
இருக்கவேண்டும்.

ஸ்காந்தோத்ரம்   சொல்கிறது——

வாசாலாஸ்ச  பவிஷ்யந்தி  கலௌ  ப்ராப்தே ச  யோஷித :  |
விப்ரவம் ஸோத்பவ :  ஸ்ரேஷ்ட : உபவீதம் ஸிகாம்  த்யஜேத்   ||
ராக்ஷஸா : கலிம் ஆஸ்ரித்ய ஜாயந்தே  ப்ரஹ்ம  யோநிஷு   |
கலௌ விப்ரா: பவிஷ்யந்தி கஞ்சு கோஷ்ணீஷ  தாரிண :  | |
த்விஜா :அநுஷ்டான ரஹிதா : பகவத் தர்ம வர்ஜிதா :  |
மனஸ்  ஸுத்தி  விஹீனானாம்  நிஷ்க்ருதிஸ்ச  கதம் பவேத் ||

கலியுகத்தில் பெரும்பாலும் பெண்களிடம் பணிவு குறைந்து காணப்படுகிறது.
தாம் நினைப்பது தகாததாக இருந்தாலும்,அதை சாதிக்கும் பேச்சாற்றல்  மிகுந்து
காணப்படுகிறது.  ஆண்கள் நல்ல குடியில் பிறந்தவர்களாக இருந்தாலும் ,
தங்களுடைய   நித்ய கர்மாநுஷ்டானங்களிலிருந்து வழுவியவர் களாகவும் ,
 சிகை , கச்சம் ,யஜ்ஜோபவீதம் ,பகவத் ஆராதனம்  இவற்றைக் கைவிட்டவர்களாகவும்
காணப்படுகிறார்கள் . ,மேலும் , கைலி  போன்ற விதம் விதமான ஆடைகளில்
மோகம் கொள்கிறார்கள் . இதனால்,மனத் தூய்மை  இல்லாமல்,அல்லல் படுவதைக்
காண்கிறோம் . இதற்குக் காரணம்,புராணங்களில் பேசப்படுகிற அரக்கர்களும்,
அரக்கிகளும் அந்தணர் இல்லங்களில் பிறப்பை எய்தி, சமூகச் சீர்கேட்டிற்கு
அடித்தளம் அமைக்கிறார்கள்   போலும் என்று ஸ்காந்தோத்ரம் சொல்கிறது

இந்த நிலை மாறி,அந்தந்த ஆஸ்ரம உடைகள், நித்ய கர்மாநுஷ்டானம் இவைகளில்
ச்ரத்தை ,ஊக்கம் ,  இதன் காரணமாக மனத்தூய்மை சுக வாழ்க்கை வேண்டுமென்றால்,
இதையும் ஸ்காந்தோத்ரம்  சொல்கிறது

ஊர்ஜே  மாகே  ஸிதே பக்ஷே சைத்ரே ச த்விஜஸத்தமை : |
நவம் யஹனி ஸ்ரோதவ்யம் ராமாயண  கதாம்ருதம்  ||
த்ரிஸப்த   குல ஸம்யுக்த: ஸர்வபாப  விவர் ஜித :  |
கோடி ஜந்ம ஸமுத்தேன புண்யேனைவ து  லப்யதே  ||

கார்த்திகை, மாசி,சித்திரை மாதங்களில், நவமி திதியில் , பெரியோரைக் ,கொண்டு ,
ராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லுமாறு வேண்டி, ச்ரத்தையுடன் கேட்டோமானால்
எல்லாப் பாவங்களும் அழிந்து, 21 தலைமுறையினரோடும் , தாமும் நல்ல நிலையை
அடைவார்கள். இந்தப் பாக்யம், பலப்பல பிறவிகளில் செய்த புண்யபலத்தால் கிடைக்கும்

இனி,  ஐதீஹமும் ,  நிர்வாஹமும் –என்ன என்பதை ஸ்ரீ கீதாசார்யன் ஆசிரியர்
ஸ்ரீ உ .வே .வேங்கடகிருஷ்ணன்  ஸ்வாமி –வாழ்வும் , வாக்கும் என்கிற அருமையான
நூலில்சொல்லி இருக்கிறார். இதில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உரைகளில்
ஸ்ரீமத் ராமாயண காவ்யப் பெருமைசொல்லப்பட்டுள்ளது.  இவற்றில் இரண்டொன்றை மட்டில்

அடுத்து, பார்ப்போம்

About the Author

Leave A Response