SRI GODHA STHUTHI–3

Posted on Apr 3 2016 - 4:29pm by srikainkaryasriadmin
  1. துங்கை ரக்ருத்ரிமகிர : ஸ்வய முக்த மாங்கை :
    யம் ஸர்வகந்த  இதி  ஸாதர முத்வ ஹந்தி |
    ஆமோத மந்யமதி கச்சதி  மாலிகாபி :
    ஸோபி  த்வதீய  குடிலாளக வாஸி தாபி : ||

 

கோதா மாதா!  அநாதியான   வேதங்களின் சிரஸ்  என்று சொல்லப்படும் உபநிஷத்துக்கள், பகவானை “ஸர்வ கந்தமயன்”  , “ஸர்வகந்தன் ‘  என்று கொண்டாடி தங்கள் சிரஸ்ஸில்  தரிக்கின்றன.

அத்தகைய  முழுதும் மணம்  கமழும் எம்பெருமான், நீ, உனது சுருண்ட கூந்தலில் சாத்திக் கொண்டுப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மாலைகளைத்  தன சிரஸ்ஸில் வகித்து
, விலக்ஷ்ணமான , பரம போக்யமான , வாசனையை அடைகிறான்.

The Vedas,  by their lofty heads, i.e. upanishads ,  hail on their own accord  the Bhagvan,  as the all-fragrant  Being,

He is “Sarvaghanthan”  While so, He  attains further fragrance  by the garlands  rendered by you  by keeping them in His head . Parama bhogyam…..parama bhogyam.

  1. தந்யே ஸமஸ்த   ஜகதாம் பிதுருத்தமாங்கே

த்வந்மௌளி  மால்யபர  ஸம்பரணேந  பூய : |

இந்தீரவ  ஸ்ரஜ மிவாதததி  த்வதீ யாநி

ஆகேகராணி  பஹூ மாந  விலோகி தாநி  ||

ஸமஸ்த லோக  நாயகனான —எல்லா உலகங்களுக்கும்  பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது, நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,

தந்யமாயிற்று   மேலும், நீ, அடங்காத காதலுடன்  அரைக்கண்களால்  , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து, அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்)

மாலைபோல் அமைந்துள்ளது. தலை குனிந்து  நீ நாணி நிற்கிறாய்; ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், நீ  ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

He is ” Lok Nayak ” He is the father of all the worlds. His head is highly blessed because of your fragrance garland  which you adorned ,before your submission to Him.

The loving side long glances of your half-closed eyes  place another garland  of blue lotuses  on Him,

  1. ரங்கேச்வரஸ்ய   தவ ச ப்ரணயாநு பந்தாத்

அந்யோந்ய  மால்ய  பரி வ்ருத்தி  மபிஷ்டு வந்த : |

வாசால யந்தி  வஸூதே  ரஸிகாஸ்  த்ரி லோகீம்

ந்யுநாதிகத்வ  ஸமதா  விஷயைர் விவாதை : ||

பூமியில் அவதரித்த கோதா தேவியே…..நீயும் ரங்கநாதனும்,  மாலைகளை ஒருவருக்கொருவர்

பரிமாறி, மாலை மாற்றிக்கொள்ளும்போது, சூழ இருக்கும் ரஸிகர்கள் /பக்தர்கள், உங்களில் ஒருவரைத் தாழப் பேசியும், ஒருவரை உயர்த்திப் பேசியும், இருவரையும் சமமாகப் பேசியும், இந்த ஆரவாரம் , உலகம் முழுவதும் பரவி, எதிரொலிக்கச் செய்கிறார்கள்.

hey…Bhoodevi…..The mutual exchange  of divine garlands  between Sri Ranganatha and you , as a result of extreme affection/love between both of you,  is highly praised  by rasikas, who, by doing so, fill the entire worlds  with words of praise  resultng in a debate, about the inferiority ,superiority  and equality  between both of you

 

22.

தூர்வாதள  ப்ரதிமயா  தவ  தேஹ  காந்த்யா

கோரோசநா  ருசிரயா  ச  ருசேந்திராயா : |

ஆஸீதநுஜ்ஜித   சிகாவள  கண்ட்ட  சோபம்

மாங்கள்யதம்  ப்ரணமதாம் மதுவைரி

ஹே…கோதாப் பிராட்டியே,,, பெரிய பிராட்டியின் நிறம் பொன்  நிறம்; உன்னுடைய நிறம் அருகம்புல்  பச்சை; பகவானின் நிறம் நீலம் ;   பகவானை சேவிப்பவர்கள், திருமேனியில் ,

மயில் கழுத்து நிறம் —-அதாவது, பொன் நிறம், அருகம்புல் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்து—மயில் கழுத்துச் சாயல் —திருமேனியில் விளங்கிட, மங்கலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. திருக்கல்யாணோத்ஸவம்  முடிந்து ,நீங்கள் ஏக ஆஸனத்தில்  எழுந்தருளி இருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறது.

The  colour of Emperuman (blue)  by mingling with  the lustre of your colour (doorva grass)  and with the charming splendour of Mahalakshmi ( Gorochana) acquired the inseparable loveliness of the neck of beautiful peacock . This darshan gives  auspiciousnesswhich shows that you are by the side of Emperuman along with Periya Piraatti in ” Ekaasanaa” after your  divine marriage
23.

அர்ச்சயம்   ஸமர்ச்சய நியமைர்  நிகம ப்ரஸூநை

நாதம்  த்வயா  கமலயா ச  ஸமேயிவாம்ஸம்  |

மாதஸ்  சிரம்  நிரவிசந்  நிஜ மாதிராஜ்யம்

மாந்யா மநு  ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே   ||

கோதாப் பிராட்டியே….நீ, ரங்கநாதனை அடைந்தபிறகு, அவன் உன்னோடும், எப்போதும் பிரியேன் என்று சொன்ன பெரிய பிராட்டியோடும்    கூடி நின்று, அனைவர்க்கும் நாதன் ஆனான். எல்லாரும் ஆராதிக்கும்படி,  அர்ச்சாவிபவத்தில்  , எழுந்தருளி இருக்கிறான். இக்ஷ்வாகு வம்ஸத்தைச் சேர்ந்த,

மனு, மாந்தாதா  முதலிய ராஜாக்கள்–மகான்கள், நியமத்தொடு வேதங்களாகிய  மந்திர புஷ்பங்களினால், உன்னை அர்ச்சித்து, பெரியதான ராஜ்யத்தை அடைந்தார்கள். காலத்தினால்,  ரங்கநாதன் முன்னும், நீ பின்னும் எண்ண வேண்டாம். பூமியின் உருவில் நீ என்றும் ரங்கநாதனுடன் இருப்பவளே!

Hey…mother Goda….those highly placed kings of Manu,  Manthaathaa enjoyed   and ruled the earth  for long periods ,only after worshipping  Sri Ranganatha with your  company and  with Kamala.  with flowers of vedhas… You are earth … you are Goda  You are ever with Sri Ranganatha  with Periya Piraatti.
24

ஆர்த்ரா  பராதிநி   ஜநேப்ய பிரக்ஷணார்த்தம்

ரங்கேச்வரஸ்ய   ரமயா  விநிவேத்யமாநே  |

பார்ச்ச்வே பரத்ர  பவதீ யதி  தத்ர  நாஸீத்

ப்ரா யேண  தேவி வதநம்  பரிவர்த்திதம்  ஸ்யாத்  ||

ஹே…தேவி.. நீ எங்களைக் காப்பாற்றுகிறாய் …ஜீவன், கணக்கிலாப் பாவங்களைச் செய்து, பெரிய பாவியாகி கஷ்டப்படுகிறான். அவன் செய்த பாவங்கள் , அவனைத் துன்புறுத்தும்போதே, அவனைக் காப்பாற்றுங்கள் என்று பெரிய பிராட்டி  எம்பெருமானின்  வலதுபுறம் நின்று  விண்ணப்பிக்கிறாள் .

அது தகாத வேண்டுகோளாகப் படுகிறது;  எதிரே  திருமுக மண்டலத்தைத் திருப்புகிறான்; பகவானுக்கு எதிரே அபராதிகள்; அவர்களைப் பார்க்க மனம் இசையவில்லை ; இடது பக்கமாக முகத்தைத் திருப்புகிறான்; ஹே…கோதா.. நீ அங்கே நின்று , நீயும் அவனை வேண்டுகிறாய்;நீ, அங்கு , நித்ய வாஸம் செய்வதால்தான் —பகவானுக்கு இடப்புறம் நின்று பகவானை வேண்டுவதால்தான்,

அந்தக் கார்யம் அனுகூலமாகிறது; நாங்கள் ,பகவானின் க்ருபையைப்  பெற்றோம்.

Devi……Mahalakshmi pleads  with Emperumaan standing by His right side  to protect us from the countless sins

He ignores and stares straightly  where sinners( we) are standing; He  shows His face left side where you are pleading  with Him to protect us . He ,then , determines to protect us  . Hey..Gotha…This is due to your krupa

 

 

 

 

25

கோதே  குணைரபநயந்  ப்ரணதாபராதாந்

ப்ருக்ஷேப  ஏவ  தவ  போக  ரஸானுகூல :  |

கர்மாநுபந்தி     பல  தாந    ரதஸ்ய  பர்த்து :

ஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸந    மர்ம பிதா  நிதாநம்  ||

கோதே….. தாயே….நீ புருவத்தை நெறிக்கும்போது ,அது உனக்கும் உன் நாதனுக்கும் ,பெரியதொரு போகத்தைக் கொடுக்கிறது. அவன் புருவ நெறிப்பு , உலகங்களை நடுங்கச் செய்கிறது; எங்களின் பாபங்களைப்  பொறுக்கமாட்டேன் என்கிறான்; அந்த சமயத்தில், உனது புருவ நெறிப்பு ,அவனுடைய புருவ நெறிப்பை   அடக்கி விடுகிறது. அவன் உனக்கு நாதன்; உலகங்களுக்கு எல்லாம் நாதன்; தன்னைக் குறைசொல்லாவண்ணம் காத்துக் கொள்கிறான்; அதற்காக அவன் ஏற்படுத்திக்கொண்ட சங்கல்பம், அவரவர் கர்மாக்களுக்கான பலனை அளிப்பது;  இதில் அவன் ஸ்வதந்த்ரனாக  இருந்தாலும்,உன் புருவ நெறிப்பு   , அவனை அடக்கி விடுகிறது.  என்ன பாக்யம், எங்களுக்கு!
Goda….. The knitting  of your eye-brows is enjoyable to both to You and Emperuman.  But His knitting gives fruits according to our karma…He is “Nathan” to you and to all worlds… But your knitting of eye-brows  is helpful to us

because He wipes out  our sins ,because of You.

26.

ரங்கே   தடித்குணவதோ  ரமயைவ   கோதே

க்ருஷ்ணாம்புதஸ்  கடிதாம் க்ருபயா ஸூவ்ருஷ்ட்யா  |

தௌர்கத்ய  துர்விஷ விநாச ஸூதாநதீம்  த்வாம்

ஸந்த :  ப்ரபத்ய  சமயந்த்யசிரேண  தாபாந்  ||

ஸ்ரீ  ஆண்டாள்  அமுத நதி;  எப்படிஎன்றால், திருவரங்கச் செல்வன் ஒரு கார்முகில்; அதில் பெரியபிராட்டி மின்னல்கொடி;  இந்த இரண்டுமாக அருள் என்கிற மழை பொழிகிறது;  இது வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது, மேடுபள்ளங்களில் நிறைந்து, அங்கு சிக்கித் தவிக்கும் சேதனர்களின் சம்சார தாபத்தை——அந்தத்  தீய விஷத்தை, அடித்துத் தூரத் தள்ளி , மிகவும் தெளிந்த அமுத நதியாக இருக்கிறது— அது — ஹே கோதா—நீயே உன்னை அடைந்து சேதனர்கள், தங்கள் தாபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

Goda Devi—–you are the river ” amrutha” ; this is fed by copious  rains   of mercy falling from the cloud –Sri Rangapathi– coupled with  the fine lightening –Periya piraatti— this is powered to destroy deadly poison of samsaara to alleviate the sufferings of chethanas

27.

ஜாதாபரா தமபி  மா மநுகம்ப்ய  கோதே

கோப்த்ரீ  யதி   த்வமஸி   யுக்தமிதம்  பவத்யா :  |

வாத்ஸல்ய  நிர்ப்பரதயா  ஜநநீ  குமாரம்

ஸ்தந்யேந   வர்த்தயதி  தஷ்ட பயோதராபி  ||

அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்; குற்றமே செய்துகொண்டு இருப்பவன்; என்றாலும், நீ, என்னைப் புறக்கணிப்பதில்லை . காக்கின்றாய். இது உனக்கு ஏற்ற செயல். தாயார், குழந்தையிடம், அளவில்லா அன்பு கொண்டவள். அதன் பசி அறிந்து, பாலூட்டுபவள். ஆனால், குழந்தைக்கு, தாயார் செய்யும் உபகாரமும்,  தாயாரின் அன்பும் பாசமும், எப்படித் தெரியும் ? ஸ்தன்ய பானம் செய்யும்போது , குழந்தை கடித்தாலும், இதற்காக அந்தக் குழந்தையைத் தாயார், தூக்கி எறிந்து  விடுவதில்லையே !     வேறு உபாயத்திலும் இறங்குவது இல்லையே !முன்போலவே அல்லவா, ஸ்தன்ய பானம் கொடுக்கிறாள் .  ஆஹா , இது உனக்குத் தகுந்ததே !

Goda…Eventhough adiyen is most sinner,  you sympathise  and protect  A mother, though bitten  by her child, while sucking the breast-milk, nourishes the child  again and again with motherly affection  and never discard the child
28.

சதமக  மணிநீலா சாரு  கல்ஹார  ஹஸ்தா
ஸ்தநபர  நமிதாங்கீ  ஸாந்த்ர   வாத்ஸல்ய ஸிந்து : |
அளகவிநிஹி தாபி :  ஸ்ரகபி ரா க்ருஷ்ட  நாதா
விலஸது ஹ்ருதி  கோதா  விஷ்ணுசித் தாத் மஜா ந : | |

த்யான ச்லோகம்

இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன்  கரத்திலே வைத்திருப்பவள்; ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன்  வசப்படுத்திக்கொண்டவள்; விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி;  கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

Goda…..the blue colour of  the “sapphire” known as ” Indra mani”. Goda….holding a lovely water-lily  in Her hand.  Goda—whose thirumeni is slightly bent  by the weight of Her breasts. Goda….an ocean of maternal love. Goda–attracted  the Lord Sri Ranganatha wearing fragrent garlands in her fore-head…..[

May Goda, the beloved daughter of Vishnuchiththa , ever shine in our hearts

29.

இதி விகஸித  பக்தே ருத்திதாம்  வேங்கடேசாத்

பஹூ குண ரமணீயாம் வக்தி கோதாஸ் துதிம்  ய : |

ஸ  பவதி  பஹூ மாந்ய :  ஸ்ரீமதோ ரங்க பர்த்து :

சரண கமல  ஸேவாம் சாச்வதீ  மப்யுபைஷ்யந் ||

பக்தியின் பெருக்காக, வேங்கடேச கவியிடமிருந்து, பற்பல காவ்யங்களின் குணங்களை உடைய
இந்த கோதா ஸ்துதியைப்  பாராயணம் செய்பவன், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடியில், அவ்வுலகில் நீண்ட காலம்

கைங்கர்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகிலும்  அவனுடைய க்ருபைக்குப் பாத்ரமாவான்

He, who  utters this ” Goda Stuti”  which is very beautiful by possessing various qualities , and given by Sri Venkatesa Kavi, becomes permanently a kainkaryaparan  at the lotus feet  of  Sri Ranganatha ever associated withMahalakshmi  at Paramapatham and also gets krupa  of Sri Ranganatha  here in this world

கவி தார்க்கிக  ஸிம்ஹாய  கல்யாண குணசாலிநே  |

ஸ்ரீமதே வேங்கடேசாய  வேதாந்த குருவே நம :  ||

ஸூபம்

ஆசார்ய ஸார்வபௌமன்  ஸ்வாமி  தேசிகன் அருளியுள்ள ஒவ்வொரு ஸ்துதியும் ,ஆச்சர்யமான ,நுட்பமான பற்பல விஷயங்களை உள்ளடக்கியது.” பூ ஸ்துதி “என்பதாக, பூமிப் பிராட்டியை ஸ்தோத்ரம் செய்தவர், பூமிப் பிராட்டியின் அவதாரமான  கோதையை  இங்கு  28 சுலோகங்களால் ஸ்தோத்ரம் செய்கிறார். இது கோதா பரிணயம் என்பர்,ஆன்றோர்
இவள் ஸ்ரீ ஆண்டாள் ; ரங்கநாதனையே மலர்மாலை சூடிக் கொடுத்து ஆண்டவள்;  ஆடி மாதம் பூர ( பூர்வ பல்குனி ) நக்ஷத்ரத்தில் அவதரித்தவள்.  பூமிப் பிராட்டியே ,கோதாப்பிராட்டி.

பூமிப் பிராட்டியை ஸ்தோத்தரித்தால், இந்த ஸ்தோத்ர மணிகளில், பெரிய பிராட்டி ரங்கநாயகியையும்,
ஸ்ரீரங்கச்செல்வனாகிய ரங்கநாதனையும்  ஸ்தோத்ரம் செய்ததற்கு ஒப்பாகும்.

Andal1937457_264389733764022_3636992975091604148_n

About the Author

Leave A Response