SRI GODHA STHUTHI

Posted on Apr 3 2016 - 4:20pm by srikainkaryasriadmin

ஸ்ரீ கோதா ஸ்துதி
——————-

சூடிக்கொடுத்தவள்  அவதரித்த திருவாடிப்பூரம் ,

ஸ்ரீ ஆண்டாள் திருவவதார தினம்.

வைகுண்டவாஸி ஸ்ரீ  ஸேவா ஸ்வாமியின்   , ஸ்ரீ கோதா ஸ்துதி உபன்யாஸம் நடைபெறும்.

பரம போக்யமாக இருக்கும். ஸ்வாமி  தேசிகன் அருளிய மிக அருமையான ஸ்தோத்ர நூல்.

ஒவ்வொரு ச்லோகத்துக்கும்,  வியாக்யானம் சொல்லும்போது,  ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் சொல்லாற்றலை வியப்பதா…. ஸ்வாமி தேசிகனின் கவித்வத்தை வியப்பதா என்று திக்கு முக்காடிப் போவோம் .ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் அருளிய  கோதா ஸ்துதியை அனுசந்தித்தால்,
ஸ்ரீ ஆண்டாள் அருள் நிச்சயம்  அந்த அச்யுதன் அருளும் நிச்சயம் என்கிற
அர்த்தவிசேஷத்தை , அழகாக எடுத்துச் சொல்வார் எவ்வளவோ இன்னல்களுக்கிடையில், அங்கங்கு சென்று ஆதரவு திரட்டி, ஆசார்யன் அருளிய ஸ்தோத்ரங்களை அர்த்தத்துடன் அச்சிட்டு ,இலவசமாக விநியோகித்தவர்.
.இது கோதா பரிணயம் …விவாஹத்தில் வரும் முக்ய விஷயங்கள் இதில் சொல்லப்படுகின்றன …..கன்னிப் பெண்கள் ,கோதா ஸ்துதியை அந்தரங்க சுத்தியுடன் பாராயணம் செய்து , நல்ல இல்வாழ்க்கையில் ஈடுபட்டு , அடுத்தடுத்த சந்ததிகளுடன் நலமுற வாழ்வதும்  , மாதர்கள் இதைப் பாராயணம் செய்து நன்மைகள் பெற்றதையும் அடியேன் பார்த்து வருகிறேன்.
.

ஸ்ரீ ஸேவா  ஸ்வாமியை  மானசீகமாகத் தெண்டனிட்டு,அடியேனின் மந்த புத்திக்கு எட்டியவரை ,
ஸ்ரீ கோதா ஸ்துதியைச்  சொற்ப வரிகளில்  விளக்குகிறேன்

 

ஸ்ரீ மான்  வேங்கடநாதார்ய :  கவிதார்க்கிக கேஸரீ |

வேதாந்தசார்யவர்யோ  மே   ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸ்ரீகோதா ஸ்துதி

 1. ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்

ஸ்ரீ  ரங்கராஜ  ஹரி சந்தன  யோக த்ருச்யாம் |

ஸாக்ஷாத்  க்ஷமாம்  கருணயா கமலாமி வாந்யாம்

கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே ||

 

ஸ்ரீ பெரியாழ்வாரின்  குலத்தில்  தோன்றிய கற்பகக்கொடி ;  அழகிய மணவாளனாகிய  ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் கொடி ;; பூமிப் பிராட்டியின் அவதாரம்; கருணையே உருவாகி, பெரிய பிராட்டியைப் போல இருப்பவள்; இப்படிப்பட்ட கோதா பிராட்டியை ,எந்தப் புகழும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன்

ஸ்லோகத்தின் முதல் வரி, ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத்தையும் ,இரண்டாவது வரி, அவளது திருக் கல்யாண விசேஷத்தையும் ,மூன்றாவது வரி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியைப்போலக் கருணையே உருவானவள் என்றும், அப்படிப்பட்ட கோதா தேவியைப் புருஷகாரமாகப் பற்றி சரணம்

அடைகிறேன் என்று நாலாவது வரியிலும் சொல்கிறார்

She is  the  kalpaka creeper in the flower garden of sri Vishnu Chiththa  which is seen entwined  with  Sri Rangaraja ,the Harichandana tree . She is  Bhoodevi  and appears  to be another Goddess Lakshmi  because of Her mercy guna

I, who have no other refuge   seek refuge  in such Goddess-Gotha

 

 

2.வைதேசிக : ச்ருதிகிராமபி   பூயஸீநாம்

வர்ணேஷு மாதி மஹிமா ந  ஹி மாத்ருசாம் தே |

இத்தம்  விதந்தமபி  மாம் ஸஹசைவ  கோதே

மௌநத்ருஹோ  முகரயந்தி குணாஸ் த்வதீயா ||

உனது மஹிமை  ,வேதங்களுக்கும் எட்டாதது; என்போன்றவர்களின் வார்த்தைகளால் அது எப்படி

சொல்லத்தகும்; இவ்வுண்மையை அறிந்த என்னையும், உனது குணப்ராபங்கள் என்  மௌனத்தைக் கலைத்து, தேவரீரைப் பற்றிப் பேச வைத்துவிட்டது.த்ரி விக்ரமாவதாரத்தை  ஒரு உருவில் அடக்கி விடலாம்; உனது மஹிமையை  ஒருவராலும் அடக்க இயலாது; நானே பேசினால் ” முகரதை” என்கிற குற்றம் வந்து விடும் ( பலர் வாய்க்கு வந்தபடி பேசுவது) ஆனால் உன் குணங்கள் என்னைப் பேசவைக்கின்றன

hey…Goda Devi!  your glory is far beyond  even the countless Vedic tests; Though adiyen is fully aware of this, the attributes of you which are haters of silence  on my part make me to praise you ( speak about you)
3.த்வத் ப்ரேயஸ :  ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்

துல்யாம்  த்வதீய மணிநூபுர  சிஞ்ஜிதாநாம் |

கோதே த்வமேவ  ஜனனி  த்வத பிஷ்ட வார்ஹாம்

வாசம்  ப்ரஸன்ன  மதுராம் மம  சம்விதேயா ; ||

கோதே  …நீ வாக்கை அளிப்பவள்…உனது நாதனுடைய செவிகளுக்கு அமுதம் போன்று இருக்கும்படியாயும், உனது திருவடிகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் ரத்னச் சலங்கையின் ஓசைகளுக்கு நிகராக இருக்கும்படியாயும்  உன்னைத் துதிக்கும் சொற்கள்  தெளிவும், இனிமையுமாக அடியேனிடமிருந்து வெளி வரும்படியாக ,அருள்வாயாக

உன் திருவடிகளில் அணிந்திருக்கும் நூபுர மணி நாதத்தை, இரு செவிகளாலும் ஆதரித்து அனுபவிக்கிறான்,அரங்கன். அப்போதே உன் கரத்தலம் பற்றத் தீர்மானி த்தானோ !

Mother Goda !You alone should confer on me the lucid and sweetest words, which will be delightful  like netar

to the sacred ears of your Nathan,  which will be equal to the beautiful and sweet sounds of your anklets studded with very fine stones and which are very competant  to adequately praise you

 

 

 

 1. க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுநாநுபாவம்
  தீர்த்தைர்  யதாவத வகாஹ்ய  ஸரஸ்வதீம்  தே |
  கோதே  விகஸ்வர  தியாம் பவதீ கடாக்ஷத்
  வாச :  ஸ்ப்புரந்தி மகரந்தமுச : கவீநாம்  ||க்ருஷ்ண  சம்பந்தத்தினால் ,  உனது வாக்காகிய  சரஸ்வதி , யமுனையாகவும் ஆகிறது.
  இந்த யமுனைத் துறைகளில் இறங்கியவர்கள், உனது கிருபையால் மேதா விலாசம்
  வரப்பெற்று, மஹா கவிகளாக  மாற்றப்பட்டு, அபார க்ஜானத்தை அடைகிறார்கள்.
  அவர்களுடைய வாக்குகள் தேனைத் தெளிப்பதுபோல் உள்ளது.
  அந்த சரஸ்வதி  ,அங்கு—கங்கையும் ,யமுனையும் கலக்குமிடத்தில் — அந்தர்வாஹினி
  உனது சரஸ்வதி (வாக்கு)  யமுனையாகத் தோன்றுகிறது. அதனால், சரஸ்வதிக்கும் துறைகள்
  ஏற்பட்டன ( இறங்கி நீராடும் துறைகள்) அதில் இறங்கி ஸ்நானம் செய்பவர்கள் உனது
  கடாக்ஷத்தால், கவிகளாக ஆகி, அவர்களுடைய வாக்குகள் தேனைப் பொழிகின்றன.Goda !  your words ( Thiruppaavai, Naachchiyaar thirumozhi )  have acquired
  the glory  of the ever sacred river Yamuna because of their affection with
  Sri Krishna. Poets immerse in them with the anugraha of acharyas and
  subsequently their intellectual beauty begin to blossom through which honey
  showers5. அஸ்மாத்ருசா  மபக்ருதௌ  சிரதீக்ஷிதாநாம்
  அஹ்நாய  தேவி  தயதே  யதஸௌ முகுந்த : |
  தன்னஸ்சிதம்  நியமிதஸ்  தவ மௌளி தாம்நா
  தந்த்ரீ  நிநாத  மதுரைஸ்  ச  கிராம் நிகும்பை : ||

  என்போன்ற அபராதிகள், பகவானுக்கு பிரதிகூலமே செய்தாலும், எங்களுக்கு முகுந்தன்
  கருணை செய்கிறான். அப்படி செய்யக் காரணம், ஒன்று , தன்னைக்காட்டிலும் பெரியதொரு
  சக்திக்குக்கட்டுப்பட்டு அடங்கி இதைச் செய்வது ;இரண்டாவது, முகுந்தனைக்
  கட்டிப்போட்டுக்
  கையெழுத்து வாங்குவார் இருக்க வேண்டும். நீ, உனது  திருமுடியில் சூடிக் கொடுத்த
  பூமாலைகளாலும் , உன்னுடைய பாமாலைகளாலும், முகுந்தனை வசப்படுத்தி
  வைத்திருக்கிறாய்.

  Goda !  Sri Mukundan  very quickly extends  His anugraha NOW  even to jeevas
  like us  who have been  been committing harmful misdeeds from countless
  janmas.  This anugraha must certainly be the result of  His being bound by
  your crest i.e. flower garlands  and by your sweet poems  on Him

  6.சோணா தரேபி  குசயோரபி  துங்கபத்ரா
  வாசாம் ப்ரவாஹ  நிவஹேபி  ஸரஸ்வதீத்வம் |
  அப்ராக்ருதைரபி ரஸைர்  விரஜா  ஸ்வபாவாத்
  கோதாபி  தேவி  கமிதூர் நநு  நர்மதாஸி  ||

  தாயே…..உன்னை சேவிக்கும்போது,  வார்த்தைகள் வெள்ளம்போல் வருகின்றன. ஏனென்றால்
  நீயே வெள்ளமாக  இருக்கிறாய்.உனது திருநாமமே கோதா…அதாவது..  கோதா ( கோதாவரி )
  ஆனாலும்,
  உன்  திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண  பத்ரா )
  தோன்றுகிறாய். சொல் வளத்தில்  ஸரஸ்வதி  நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர்
  வாஹினியாக ஆகிறாய்.  திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம்
  வ்ரஜை  நதி ஆகிறாய்  –வ்ரஜை —குற்றமற்றவள்–. உன் கணவனுக்கு, நர்மதை (
  இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி )
  ஆகிறாய். மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை
  —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

  இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.  ஆறு ஆறுகள்—கோதாவரி,
  சோணையாறு, சரஸ்வதி நதி,  வ்ரஜா  நதி ,நர்மதா, துங்கபத்ரா …….

  Oh,,,Devi… You are Goda—godavari river. … though your lips  are sona
  river, your words are sarasvathi river.  By your celestial nature , you are
  vraja river  and by enjoyment by your Husband you are narmada and
  thungabatra
  Adiyen salute You

 

 

Srivilliputhur-Andal-Vatapatrasayee-Vishnu-Temple22

About the Author

Leave A Response