Mukuntha Maalaa-3

Posted on Apr 4 2016 - 6:05am by srikainkaryasriadmin
  1. இதம் ஸரீரம் பரிணாம பேஸலம்

பதத்ய வஸ்யம்  ஸ்லத–ஸந்தி –ஜர்ஜரம் |

கிமௌஷதை: க்லிஸ்யஸி   மூட  துர்மதே

நிராமயம் க்ருஷ்ண –ரஸாயநம் பிப  ||

ஹே—மூடனே….இந்த சரீரம் ,வயதால் முதிர்ச்சி அடைந்து, இளைத்து, பூட்டுகள் தளர்ந்து, நிச்சயம் அழியப்போகிறது. துர்மதே—-துர்புத்தியே ! இந்த சரீரத்தைக் காப்பாற்ற, பற்பல மருந்துகளை ஏன் சாப்பிடுகிறாய் ?

க்ருஷ்ண ரஸாயனம் பிப—-ஸ்ரீ கிருஷ்ணன் என்கிற திருநாமத்தை உச்சரிக்கின்ற மிக உயர்ந்த மருந்தைப் பானம் செய்

  1. தாரா வாராகர வரஸுதா   தே  தநூஜோவிரிஞ்சி :

ஸ்தோதா வேதஸ்தவ ஸுரகுணோ  ப்ருத்ய    வர்க்க : ப்ரஸாத :

முக்திர் மாயா  ஜகத விகலம்  தாவகீ தேவகீ  தே

மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் –த்வய்யதேந்யந்த   ஜாநே  ||

க்ருஷ்ணா….உன்னுடைய பத்னி, திருப்பாற்கடலில் உதித்த மஹாலக்ஷ்மி என்பதை அறிவேன்.

உனது தனயன்,  பிரம்மா  என்பதை அறிவேன்

உன்னைத் துதிப்பது, வேதங்கள் என்பதை அறிவேன்

உனது வேலைக்காரர்கள், தேவர்கள் என்பதை அறிவேன்

உனது மாயை உலகம் என்பதை அறிவேன்

உனது தாயார் ,தேவகி என்று அறிவேன்

உனது சிநேகிதன் இந்திரனின் புத்ரனான அர்ஜுனன் என்பதை அறிவேன்

அத: அந்யத்  ந  ஜாநே —இவற்றைக்காட்டிலும் வேறு ஒன்றும் உன்னைப் பற்றி அறியேன்

 

  1. க்ருஷ்ணோ ரக்ஷது நோ  ஜகத்ரய குரு : க்ருஷ்ணம்  நமஸ்யாம்யஹம்

க்ருஷ்ணேநாம ரஸத்ரவோ விநிஹதா:க்ருஷ்ணாய துப்யம் நம :  |

க்ருஷ்ணாதேவ  ஸமுத்திதம் ஜகதிதம்  க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்

க்ருஷ்ணே  திஷ்டதி  ஸர்வமேததகிலம்  ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் ||

ஜகத்ரய குரு :க்ருஷ்ண :ந : ரக்ஷது —உலகத்துக்கெல்லாம் ஆசார்யனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை ரக்ஷிப்பானாக

அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி —-அடியேன் ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்

கிருஷ்ணனால் தேவர்களின் விரோதிகள் அழிக்கப்பட்டனர்;

க்ருஷ்ணாய துப்யம் நம:—-க்ருஷ்ணனான உனக்கு நமஸ்காரம்

இந்த உலகமெல்லாம், ஸ்ரீ க்ருஷ்ணனிடமிருந்து தோன்றியது;
அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ :—அடியேன் க்ருஷ்ண தாஸன்.

எல்லாமே க்ருஷ்ணனிடத்தில் நிலை பெற்று இருக்கிறது.ஹே, கிருஷ்ண ! மாம் ரக்ஷஸ்வ —ஹே, க்ருஷ்ணா ,

அடியேனைக் காப்பாற்று

  1. தத்த்வம் ப்ரஸீத பகவந் ! குரு மய்ய நாதே

விஷ்ணோ ! க்ருபாம் பரம காருணிக : கில த்வம் |

ஸம்ஸார —ஸாகர –நிமக்ந –மநந்த தீநம்

உத்தர்த்துமர்ஹஸி  ஹரே !புருஷோத்தமோஸி  ||

ஹே, பகவானான விஷ்ணுவே !அநந்த ஹரே —-முடிவே இல்லாத ஹரியே நீ, புருஷர்களில் சிறந்தவன் புருஷோத்தமன். பரம காருணிகன் –கருணைக்கடல் . அடியேன் பிறவிக் கடலில் மூழ்கியவன்; தீனன் ;

அடியேனைக் கரைஏற்றத் தகுந்தவன்;அப்படிப்பட்ட நீ, அடியேனுக்கு அருள் புரிவாயாக

35.நமாமி நாராயண பாத பங்கஜம்

கரோமி நாராயண –பூஜநம் ஸதா |

வதாமி நாராயண –நாம  நிர்மலம்

ஸ்மராமி  நாராயண –தத்வ மவ்யயம்  ||

எப்போதும், அடியேன் ஸ்ரீ நாராயணனின் திருவடித்தாமரைகளையே வணங்குகிறேன் . ஸ்ரீமந்நாராயணனைப்

பூஜிக்கிறேன் நாராயண நாமத்தைச் சொல்கிறேன் . அழிவே இல்லாத, நாராயணன் என்னும் தத்வப் பொருளையே

ஸ்மரிக்கிறேன்

  1. ஸ்ரீநாத நாராயண வாஸுதேவ

ஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய  சக்ரபாணே  |

ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே

ஸ்ரீ ராம  பத்மாக்ஷ  ஹரே முராரே ||

லக்ஷ்மிபதியே , நாராயணனே , வாஸுதேவனே , க்ருஷ்ணா , பக்தப்ரியா , சக்ரபாணியே , பத்மநாபனே ,

அச்யுதனே ,கைடபனை அழித்தவனே ( ஸ்ரீ ஹயக்ரீவா),  ஸ்ரீராமா , தாமரைக் கண்ணனே , ஹரியே ,முராரியே

  1. அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண

கோவிந்த தாமோதர  மாதவேதி |

வக்தும் ஸமர்த்தோபி  ந  வக்தி  கஸ்சித்

அஹோ ஜநாநாம்  வ்யஸநாபி  முக்யம்   ||

அநந்தா , வைகுந்தநாதா , முகுந்தா, க்ருஷ்ணா , கோவிந்தா, தாமோதரா ,  மாதவா,—–இப்படியெல்லாம், சொல்வதற்கு ஸமர்த்தோபி—சாமர்த்யம் இருந்தும், ஜனங்கள் , உலக விஷயங்களில் ஊன்றி இருக்கிறார்களே—-என்ன ஆச்சர்யம் !

  1. த்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்

ஹ்ருத்பத்ம —மத்யே  ஸததம்  வ்யவஸ்திதம்  |

ஸமாஹிதாநாம்  ஸததாபயப்ரதம்

தே  யாந்தி  ஸித்திம்  பரமாஞ்ச  வைஷ்ணவீம்  ||

பகவான் ஸ்ரீவிஷ்ணு முடிவே இல்லாதவர்; ஹ்ருதயத் தாமரையில் எப்போதும் நிலையாக வீற்றிருப்பவர்;ஐம்புலன்களையும் அடக்கியவருக்கு, எப்போதும்   அபயம் அளிப்பவர்; அப்படிப்பட்ட
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை, த்யானம் செய்பவர்கள் மிக உயர்ந்ததும் ,சாச்வதமுமான , வைஷ்ணவீம் ஸித்திம் —உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைவார்கள்.

  1. க்ஷீரஸாகர —தரங்க –ஸீகரா ஸார

தாரகித —சாரு –மூர்த்யே  |

போகீபோக —ஸயநீய –ஸாயிநே

மாதவாய –மதுவித்விஷே நம :  ||

திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் திருமேனியில் பள்ளிகொண்டு

பாற்கடலின் அலைத்துளிகள் , நக்ஷத்ரங்கள் போலப் பட்டுத் திருமேனியை அலங்கரிக்கிற ஸ்ரீமந்நாராயணனும்,   .  மது என்னும் அரக்கரை அழித்தவரும் , ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனுமான( மாதவன்) ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்

  1. யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ  கவிலோக வீரௌ

மித்ரே த்விஜந்மவர -பாராஸவா  –வபூதாம்  |

தேநாம்புஜாக்ஷ –சரணாம்புஜ —ஷட்பதேந

ராஜ்ஞா  க்ருதா  க்ருதிரியம்     குலஸேகரேன ||

தாமரைக் கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு  போன்ற ஸ்ரீ குலசேகர  மன்னருக்கு, ப்ரியமானவர்களும், கேள்வி ஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும் வீரர்களும் –அந்தண -மிஸ்ர

வர்ணத்தில் இரு நண்பர்களாக இருந்தார்களோ ,அந்தக் குலசேகர மன்னரால், இயம்  க்ருதி : க்ருதா —-இந்த ஸ்தோத்ரம் செய்யப்பட்டது.

 

 

 

கும்பே புனர்வஸு பவம்   கேரளே கோள பட்டணே

கௌஸ்துபாம்ஸம் ஸம்தராதீசம்  குலசேகரமாஸ்ரயே

ஸ்ரீ   குலசேகராழ்வார்  திருவடிகளே சரணம்

ஸுபம்

 

Thiruvahindrapuram-Sri-Devanathan-Perumal-Temple-Pagal-Pathu-Utsavam-Commences4

About the Author

Leave A Response