Sri Mukuntha Maalaa-2

Posted on Apr 4 2016 - 6:00am by srikainkaryasriadmin
 1. பவஜலதி —கதாநாம் த்வந்த்வ —வாதாஹதாநாம்

ஸுத துஹித்ரு —-களத்ர –த்ராண — –  பாரார்திதாநாம் |

விஷம –விஷய –தோயே  மஜ்ஜதா –மப்ல வாநாம்

பவது ஸரணமேகோ விஷ்ணு போதோ  நராணாம் ||

பகவான் ,கரை ஏற்றுகிறான் —விஷ்ணு போத :—என்கிறார்–விஷ்ணு என்கிற ஓடமாகக் கரைஏற்றுகிறான்.  இந்த சம்சாரம் இருக்கிறதே—புனரபி ஜனனம், புனரபி மரணம் –இந்தக்கடலில், த்வந்த்வ வாதாஹதனாம்—குளிர்–வெய்யில்,

சுகம்–துக்கம் என்பனபோன்ற இரட்டைகள் ,இவனைத் தாக்குகின்றன; உறவுகள் —இவர்களைக் காப்பது என்கிற பாரத்தால், கஷ்டப்படுகிறான் ; விஷய சுகம் என்கிற ஜலத்தில் மூழ்குகிறான்; இவனைக் கரையேற்ற ஓடம் இல்லை; இப்படிப்பட்டவர்களுக்கு, விஷ்ணுவே ஓடம் . அவன்தான் சரணம்

 1. பவஜலதி –மகாதம் துஸ்தரம்  நிஸ்தரேயம்

கதமஹமிதி  சேதோ   மா  ஸ்ம  கா : காதரத்வம் |

ஸரஸிஜத்ருஸி  தேவே  தாவகீ பக்திரேகா

நரகபிதி  நிஷண்ணா  தாரயிஷ்யத்வஸ்யம் ||

மறுபடியும் மனஸ்ஸுக்குச் சொல்கிறார். ஹே சேத :—–மனசே…ஜனன, மரண சம்சாரக் கடல் –இது மிக ஆழமான கடல்; இதைத் தாண்டுதல் எப்படி என்று …காதரத்வம்  மா ஸ்மா  கா :——பயப்படாதே –  தாமரைக் கண்ணன்; நரகாசுரனை அழித்தவன்; அப்படிப்பட்ட பகவானிடம் ,உனக்குப் பக்தி இருந்தால், ஏகா அவஸ்யம்  தாராயிஷ்யதி–

அது ஒன்றே , அவசியம் , தாண்டச் செய்துவிடும்

 1. த்ருஷ்ணா தோயே மதந–பவநோத்தூத–மோஹோர்மி- மாலே

தாராவர்த்தே  தநய —சஹஜ –க்ராஹ –ஸங்காகுலே   ச  |

ஸம்ஸாராக்யே  மஹதி  ஜலதௌ  மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்

பாதாம் போஜே  வரத  பவதோ பக்திநாவம்  ப்ரயச்ச ||

பக்திநாவம் , என்கிறார் ,இந்த ச்லோகத்தில். பக்திநாவம் ——பக்தி என்கிற ஓடம் .ப்ரயச்ச—கொடுங்கள் என்கிறார்.

அந்த பக்தி, பவது பாதாம்புஜே—-தேவரீரின் திருவடித் தாமரைகளின்மீது பக்தி என்கிறார்.
வரத —-வரம் அளிப்பவரே என்று பகவானைக்கூப்பிடுகிறார். பக்தியாகிய ஓடத்தை யாருக்காகக் கேட்கிறார் ?மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந :—-பெரிய சமுத்ரத்தில் மூழ்கியுள்ள எங்களுக்கு, அது என்ன சமுத்ரம் ? சம்சாரமென்னும் பெரிய

சமுத்ரம்; இந்த சமுத்ரத்தில் பேராசை என்கிற ஜலம்;காமமும், மோஹமும் , காற்றும் அலையும் (காற்று வீசி சமுத்திர அலைகள் மேலே எழும்புவது போன்று காமம் என்கிற காற்று இந்த சம்சாரக் கடலில் வீசி, மோஹம் என்கிற அலைகளை, மேலே மேலே எழுப்புகிறது ); தாராவர்த்தே—மனைவி என்கிற சுழல்; மக்கள், கூடப் பிறந்தவர்கள்-இவர்களெல்லாம், முதலைக் கூட்டங்கள். ஹே..த்ரிதாமந் —–ஹே,பரந்தாமா, இப்படிப்பட்ட சம்சாரக் கடலைத் தாண்ட, பக்தி என்கிற ஓடத்தை அருளும்படி விண்ணப்பிக்கிறார்.

 1. மாத்ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந்  பதாப்ஜே

மாஸ்ரௌஷம் ஸ்ராவ்யபந்தம் தவ சரிதம பாஸ்யாந்ய தாக்யா நஜாதம் |

மாஸ்மார்ஷம் மாதவ ! த்வா மபி  புவநபதே ! சேதஸா பஹ்நுவாநாந்

மாபூவம் த்வத் ஸபர்யா —வ்யதிகர –ரஹிதோ  ஜந்மஜந்மாந்த  ரேபி ||

ஸ்ரீ குலசேகரர், இந்த ச்லோகத்தில், பகவத் பக்திக்கான முக்ய விவரங்களைச் சொல்கிறார். புவநபதே !  மாதவா! என்கிறார். உன் திருவடியில் (பவத: பதாப்ஜே பக்திஹீநாந்)    பக்தி இல்லாதவர்களை, பாவிகளை ( க்ஷீண புண்யான் ) ஒரு க்ஷணமும் பார்க்கமாட்டேன்; உன் திவ்ய சரிதங்களைத் தவிர,  மற்றக் கதைகளைக் கேட்கமாட்டேன் ; உன்னை மனத்தால் வெறுப்பவரை  நான் மனத்தாலும் நினைக்கமாட்டேன் (மாஸ்மார்ஷம் ); இந்த  ஜன்மத்திலும்,மற்ற ஜன்மங்களிலும், உன்னை பூஜை  செய்யாதவனாக  இருக்கமாட்டேன் (மாபூவம்).  பார்க்கமாட்டேன்;  கேட்கமாட்டேன்;நினைக்கமாட்டேன்; உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றி செய்யப்படும் பூஜையைச் செய்யாமல் இருக்கமாட்டேன்—-என்கிறார்.

 1. ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்

பாணித்வந்த்வ ! ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய ! த்வம் ஸ்ருணு |

க்ருஷ்ணம் லோகய  லோசநத்வய ! ஹரேர் –கச்சாங்க்ரியுக்மாலயம்

ஜிக்ர  க்ராண முகுந்தபாத –துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம்  ||

நாக்கே—கேசவனைத் துதி; மனமே , முராரியைப் பஜனை செய்;கைகளே, ஸ்ரீதரனை அர்ச்சியுங்கள்; காதுகளே, அச்சுதனின் சரிதங்களைக் கேளுங்கள்;கண்களே, கண்ணனைத் தர்சியுங்கள் ; கால்களே , —ஹரே ஆலயம் கச்ச—ஹரியின் திருக்கோவிலுக்குச் செல்லுங்கள்;   மூக்கே  ,முகுந்தனின் திருவடித்  துளசியை  நுகர்வாயாக;  தலையே,

விஷ்ணுவை வணங்குவாயாக . இந்த  ஸ்லோகத்தில்,பகவானின் திருநாமங்களாகிய , கேசவன், முராரி,ஸ்ரீதரன், அச்யுதன்,  கிருஷ்ணன், ஸ்ரீஹரி,முகுந்தன், விஷ்ணு —ஆக  , எட்டுத் திருநாமங்களைச் சொல்கிறார்.

17.ஹே  லோகா : ஸ்ருணுத ப்ரஸுதி மரணவ்யாதேஸ் — சிகித்ஸாமிமாம்

யோகஜ்ஞா : ஸமுதா ஹரந்தி  முநயோ யாம் யாஜ்ஞவல்க் யாதய : |

அந்தர் ஜ்யோதிரமேயமேக –மம்ருதம்  க்ருஷ்ணாக்யமாபீயதாம்

தத்பீதம்  பரமௌஷதம்  விதுநதே  நிர்வாணமாத்யந்திகம்  ||

க்ருஷ்ணாக்யம் அம்ருதம் ஆபீயதாம்  தத் பரமௌஷதம் —-கிருஷ்ணன் என்கிற அம்ருதம் உயர்ந்த மருந்து என்கிறார்.

ஹே, லோகா :—லோகத்தில் உள்ளவர்களே, ஜனன, மரண வியாதிக்கு,   இமாம் சிகித்ஸாம், ஸ்ருணுத—-இந்த சிகிச்சையைக் கேளுங்கள் என்கிறார்.   யாஜ்ஞவல்க்யர் போன்ற  மஹரிஷிகள்  சொன்ன மருந்து என்கிறார். நமக்குள் அந்தர்யாமியாகவும், ஜோதிஸ்வரூபனாகவும் , அமேயம் ஏகம் க்ருஷ்ணாக்யம் —-அளவிட முடியாத , ஒன்றாக உள்ள, கிருஷ்ணன் என்கிற அம்ருதமே மருந்து; அதைப் பானம் செய்தால்,கடைசியான மோக்ஷ சுகம் கிடைக்கும்
( முக்தி தரும் )இதைப் பானம் செய்யுங்கள்

 1. ஹே மர்த்யா : ! பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத :

ஸம்ஸாரார்ணவ —மாபதூர்மி –பஹுளம்  ஸம்யக்  ப்ரவிஸ்ய ஸ்திதா : |

நாநா –ஜ்ஞான –மபாஸ்ய சேதஸி  நமோ நாராயணாயேத்யமும்

மந்த்ரம்  ஸப்ரணவம்  ப்ரணாமசஹிதம்  ப்ராவர்த்தயத்வம்  முஹூ : ||

ஹே மர்த்யா:—-ஒ, மனுஷ்யர்களே , என்கிறார்.  இவர்கள் யார் ? ஆபதூர்மி ஸம்ஸாரார்ணவம்  ஸம்யக்  ப்ரவிஸ்ய

ஸ்திதா :—-ஆபத்தான அலைகலுள்ள, சம்சார சமுத்ரத்தில் நன்கு மூழ்கி உள்ளவர்கள் .  உங்களுக்கு, மிக உயர்ந்த ஹிதம் –நன்மையை ,சுருக்கமாக, வக்ஷ்யாமி—சொல்கிறேன். ஸ்ருணுத—-கேளுங்கள். பலவிதமான ஞானங்களைத் தள்ளிவிட்டு, ஸப்ரணவம்—–பிரணவத்துடன் கூடி இருக்கிற, நமோ நாராயணாய இதி —“நமோ நாராயணாய”  என்கிற

மந்த்ரத்தை, நமஸ்காரத்துடன் , அடிக்கடி (முஹூ : ) ஜெபியுங்கள்

 1. ப்ருத்வீ ரேணுரணு:  பயாம்ஸி  கணிகா : பல்கு –ஸ்புலிங்கோநலஸ்

தேஜோ நிஸ்வஸநம் மருத் தநுதரம்  ரந்த்ரம் ஸு ஸுக்ஷ்மம்    நப : |

க்ஷூத்ரா ருத்ர –பிதாமஹ –ப்ரப்ருதய : கீடா : ஸமஸ்தாஸ் –ஸு ரா :

த்ருஷ்டே  யத்ர  ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி : ||

உன்னுடைய மஹிமையைக் காணும்போது, பூமி, சிறிய தூசு; ஜலமெல்லாம் திவலை ( நீர்த் துளி); தேஜஸ் என்பது சிறிய நெருப்புப் பொறி;காற்று, சிறிய மூச்சு ; ஆகாயம், மிகச் சிறிய த்வாரம்; சிவன், பிரமன் முதலான சகல தேவர்களும் சிறிய புழுக்கள்; உன்னுடைய அளவில்லாத இந்த மஹிமை  வெல்லட்டும்

 1. பத்தேநாஞ்ஜலிநா  நதேன  ஸிரஸா  காத்ரை : ஸரோமோத்கமை :

கண்டேந  ஸ்வரகத் கதேந  நயநேநோத்கீர்ண –பாஷ்பாம்புநா |

நித்யம் த்வச்சரணாரவிந்த — யுகள –த்யாநாம்ருதாஸ்வாதிநாம்!

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ! ஸததம்  ஸம்பத்யதாம் ஜீவிதம் ||

தாமரைக் கண்ணா ! கூப்பிய கரங்களோடும், வணங்கிய தலையோடும், மயிர்க்கூச்செடுக்கும் உடலோடும், தழு தழுத்த குரலோடும், ஆனந்தபாஷ்பம் பெருகும் கண்களோடும், உன் திருவடித் தாமரைகளை த்யானம் செய்கிற
அம்ருத ரஸத்தை, எப்போதும்  பானம்செய்கிற , வாழ்க்கை நிறைவடையட்டும்

21.ஹே கோபாலக ! ஹே க்ருபாஜலநிதே ! ஹே  ஸிந்து கந்யாபதே

ஹே கம்ஸாந்தக ! ஹே கஜேந்த்ரகருணாபாரீண ! ஹே  மாதவ !  |

ஹே  ராமாநுஜ ! ஹே ஜகத்குரோ ! ஹே  புண்டரீகாக்ஷ !  மாம்

ஹே கோபி ஜநநாத !   பாலயபரம் ஜாநாமி  ந த்வாம் விநா ||

ஹே, கோபாலா, ஹே கருணா சமுத்ரமே, ஹே சமுத்ரராஜனின் புத்ரியான லக்ஷ்மியின் பதியே , கம்சனை அழித்தவனே,   கஜேந்த்ரனைக்  கருணையோடு காப்பாற்றியவனே , மாதவா, பலராமனின் தம்பியே, மூவுலக்கும்

ஆசானே, தாமரைக் கண்ணா, கோபிகைகளின் அன்பனே,  உன்னையல்லால் , வேறு யாரையும் அறியேன்,

மாம், பாலய—என்னைக் காப்பாற்று

 1. பக்தாபாய –புஜங்க –காருடமணிஸ் –த்ரைலோக்ய –ரக்ஷாமணி :

கோபீலோசந –சாதகாம்புதமணி : சௌந்தர்யமுத்ரா மணி : |

ய : காந்தாமணி —ருக்மிணி —கநகுச –த்வந்த்வைக —பூஷாமணி :

ஸ்ரேயோ  தேவஸிகாமணிர் திஸது  நோ  கோபால சூடாமணி :  ||

ய :—எவன் , தேவா—அந்தப் பகவான்,   அவன் தேவசிகாமணி—அவன், பக்தர்களுக்கு வரும் ஆபத்துக்களாகிய சர்ப்பத்துக்கு, காருடமணி (கருட  ரத்னம்)

அவன், மூவுலகையும் ரக்ஷிக்கும்  மணி (ரத்னம் ). அவன், கோபிகைகளின் கண்களாகிற சாதகபக்ஷிகளுக்கு, மேகமாகிய மணி ( ரத்னம் ). அவன், சௌந்தர்ய –முத்ரா மணி—அழகிற்கே அழகான மணி (ரத்னம் ). அவன், பெண்கள் குல ரத்னமான ருக்மிணிக்கு ,அலங்கார மணி (ரத்னம்). அவன், கோபால சூடாமணி ( யாதவ குலத்துக்கே சூடாமணி ).

அவன்,  அந்தக் கண்ணன், நமக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும். ( அவன் ஏழு மணிகளாக, ஆழ்வாரால் போற்றப்படுகிறான் )

23.ஸத்ருச்சேதைக மந்த்ரம்  ஸகலமுபநிஷத் —வாக்ய–ஸம்பூஜ்ய –மந்த்ரம்

ஸம்ஸாரோத்தார– மந்த்ரம் ஸமுபசித தமஸ் –ஸங்க –நிர்யாண –மந்த்ரம் |

ஸர்வைஸ்வர்யைக —மந்த்ரம்  வ்யஸந –புஜக –ஸந்தஷ்ட–ஸந்த்ராண –மந்த்ரம்

ஜிஹ்வே!ஸ்ரீ-க்ருஷ்ண -மந்த்ரம் –ஜபஜப  ஸததம்  ஜந்ம –ஸாபல்ய –மந்த்ரம்

வியாதிகள் தீர, மணி, மந்த்ரம், ஔஷதம்  என்று மூன்று   முறைகள் உள்ளதாக, ஆயுர்வேதம் சொல்கிறது.

ஆழ்வார்,  சம்சாரிகளின்  பிறப்பு, மறுபடியும் இறப்பு, திரும்பவும் பிறப்பு என்பதான பிணி தீர , இந்த மூன்றையும் சொல்கிறார் . இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் , மணி என்பதாகச் சொன்னார். இந்த ஸ்லோகத்தில், மந்த்ரம் என்பதைச் சொல்கிறார்.

ஹே…ஜிஹ்வே —ஸததம் ஜபஜப —-என்கிறார். அதாவது, ஏ ,  நாக்கே—-எப்போதும் ஜபித்துக்கொண்டிரு —என்கிறார்.

எந்த மந்த்ரத்தை—? ஸ்ரீ க்ருஷ்ண  மந்த்ரம்—

இந்த மந்த்ர மஹிமையைச் சொல்கிறார்.

விரோதிகளை அழிக்கும் மந்த்ரம்

எல்லா உபநிஷத்துக்களும் போற்றுகிற மந்த்ரம்

சம்சார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கும் மந்த்ரம்

சேதனர்களிடம் மண்டியுள்ள அஞ்ஜானம் என்கிற இருட்டை அகற்றும் மந்த்ரம்

எல்லா ஐஸ்வர்த்தையும் அளிக்கும் மந்த்ரம்

துன்பமென்கிற சர்ப்பம் தீண்டியவரைக் காக்கும் மந்த்ரம்

ஜன்ம சாபல்ய மந்த்ரம்

இதுவே ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம். இந்த எப்போதும் ஜபிக்கச் சொல்கிறார்.
24.வ்யாமோஹ –ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி–ப்ரவ்ருத்யௌஷதம்

தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம்    த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநை கௌஷதம் |

பக்தாத்யந்தஹிதௌஷதம்  பவபயப்ரத்வம்ஸநை கௌஷதம்

ஸ்ரேய : ப்ராப்திகரௌஷதம்  பிப மந :ஸ்ரீ -க்ருஷ்ண –திவ்யௌஷதம்    ||

முந்தைய இரண்டு ஸ்லோகங்களில், மணி, மந்த்ரம் என்று இரண்டையும் சாதித்த ஆழ்வார் இந்த ஸ்லோகத்தில் ,ஔஷthaம் என்பதாகச் சொல்கிறார்

மனஸ்ஸுக்குச் சொல்கிறார் ;—

உலக மயக்கங்களைத் தெளிவிக்கும் ஔஷதம்

ரிஷிகளின் மனஸ் சை பகவானிடம் திருப்பும் ஔஷதம்

அரக்கர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் ஔஷதம்

மூவுலக மக்களும் பிழைப்பதற்கான ஔஷதம்

பக்தர்களுக்கு மிக அனுகூலமான ஔஷதம்

சம்சார பயத்தை அழிக்கும் சிறந்த ஔஷதம்

எல்லாவிதமான நன்மைகளையும் கொடுக்கும் ஔஷதம்

இந்த ஔஷதம்— க்ருஷ்ண திவ்ய ஔஷதம்

பிப —பருகுவீர்களாக

க்ருஷ்ணன்  என்கிற ஔஷதத்தைப்  பருகுங்கள் ,இதுவே திவ்ய ஔஷதம் .என்கிறார்

 1. ஆம்நாயா ப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதான் யந்வஹம்

மேதஸ்சேதபலாநி  பூர்த்தவிதயா ஸர்வே   ஹூதம் பஸ்மநி  |

தீர்த்தாநாம வகாஹநாநி  ச கஜஸ்நாநம்  விநா யத் பத

த்வந்த்வாம்போருஹ  –ஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ் ஸ நாராயண : ||

பகவானின் திருவடிப் பெருமையைச் சொல்கிறார்.

பகவானின் திருவடிகளைத் த்யாநிக்காமல்,

வேத அத்யயனம்/ பாராயணம் செய்தல், காட்டில் புலம்புவதற்கு ஒப்பாகும்.

வைதீக விரதங்கள், உடல் கொழுப்பை அகற்றுமே  அன்றி,வேறு பலனைக் கொடுக்காது.

குளம்./ கிணறு இவைகளை வெட்டுவது, நெருப்பே இல்லாத சாம்பலில், ஹோமம்செய்யப்பட்டதாகும்.
தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது, யானைகள் குளிப்பது போலாகும்.

அதனால், ஸ : தேவா விஜயதே—அந்த பகவானுக்கே விஜயம்—வெற்றி

 1. ஸ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்

கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபி நோபி |

ஹா ந : பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந  தஸ்மின்

தேந  ப்ராப்தம் கர்ப்பவாஸாதி துக்கம் ||

ஸ்ரீமந்நாராயணா என்கிற பகவன் நாமத்தைச் சொல்லிப் பாவியும்கூட ,அவர் விரும்பிய பலனை அடைந்திருக்கிறார்கள்.

ஹா—-முன் பிறவியிலேயே இதைச் சொல்லவேண்டுமென்றுத் தோன்றவில்லையே ?அதனால், கர்ப்ப வாஸம்

முதலான கஷ்ட துக்கங்கள் எல்லாம்,   ப்ராப்தம்—அடையப்பட்டது

 1. மஜ்ஜந்மந : பலமிதம் மதுகைடபாரே

மத்ப்ரார்த்தநீய –மதநுக்ரஹ  ஏஷ  ஏவ  |

த்வத்  ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரக–ப்ருத்ய –ப்ருத்ய

ப்ருத்யஸ்ய  ப்ருத்ய  இதிமாம்  ஸ்மர லோகநாத ||

மதுகைடபரை அழித்தவரே ! ஹே லோகநாதா ! அடியேன் உம்மை வேண்டி, தேவரீர் அனுக்ரஹிக்க வேண்டியது இதுவே !

உமது ,அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியேன் என்று , மாம்—அடியேனை, ஸ்மர— நினைப்பீராக அதாவது , அடியாரின் வரிசையில், ஏழாவது நிலையில் உள்ள அடியானாக, பகவானைத் திருவுள்ளம் பற்றச் சொல்கிறார்.

 1. நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா மேகாதிபே  சேதஸா

ஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே  நாராயணே திஷ்டதி |

யம்  கஞ்சித்  புருஷாதமம்  கதிபயக்ராமேஸமல் பார்த்ததம்

ஸேவாயை  ம்ருகயாமஹே  நரமஹோ மூகா வராகா வயம் ||

மூவுலகங்களுக்கும் ஒரே தலைவன்; மனதால் ஸ்மரித்து அவனுக்கு அடிமையானாலேயே தன்  ஸ்தானத்தையே நமக்கு அளித்து விடுபவன்;  புருஷோத்தமன்; நாராயணன் என்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது,

சில கிராமங்களுக்கு மட்டுமே தலைவன் ; சொற்பப் பணத்தைக் கொடுப்பவன்; தரக் குறைவான மனிதன் —இவனிடம்,

ஸேவாயை ம்ருகயாமஹே —-வேலை கொடுங்கள் என்று கெஞ்சி அலைகிறோமே —நாம், எவ்வளவு மூடர்கள் /

அற்பர்கள்

 1. மதந பரிஹர ஸ்திதிம்  மதீயே

மனஸி  முகுந்த–பதாரவிந்த —தாம்நி |

ஹர–நயந –க்ருஸா நுநா  க்ருஸோஸி

ஸ்மரஸி ந  சக்ர பராக்ரமம்  முராரே ||

மன்மதா!  முகுந்தனின் திருவடிகள் என் மனத்தில்  வசிக்கின்றன —நீ என் மனத்தில் இருங்காது நீங்கி விடு.

நீ, ஏற்கெனவே சிவபிரானின் நெற்றிக் கண்ணால் அழிந்திருக்கிறாய்; முராரியின், சக்ராயுதத்தின் பராக்ரமத்தை நினைவுபடுத்திக்கொள்ளவில்லையா ?

 1. தத்த்வம் ப்ருவாணானி பரம் பரஸ்மாத்

மது க்ஷரந்தீவ ஸதாம் பலாநி |

ப்ராவர்த்தய  ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே

நாமாநி  நாராயண கோசராணி ||

தன்னுடைய நாக்கைக் கை கூப்பி வணங்குகிறார்.

நாக்கே, உன்னை நமஸ்கரிக்கிறேன் . நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இரு. அந்தத் திருநாமங்கள் உயர்ந்தவைகளில் உயர்ந்ததான தத்வங்களைக் கூறுகின்றன. தேனைப் பொழிகின்றன. நல்லவர்கள்  விரும்புகின்ற பலன்களும் அவையேSrirangam--divyadhampati10934072_10153014314547272_5414735428285136014_n

About the Author

Leave A Response