Paasurams 11 to 20
பாசுரம் 11
—————-
கோபாலப் பொற்கொடியே !
தாபத்தால் வந்துள்ளோம் .
முற்றத்தில் வந்திருந்து, —கிளியே
முகில்வண்ணன் பேர்சொல்லி
உன்னை அழைக்கின்றோம் !
ஒன்றும் பேசி அசையாது ,
உறங்குவதுதான் எதற்கு? —கிளியே
ஒன்றுமறியாப் பெண்ணா நீ !
தொடருகிறது——-
—
திருப்பாவைக் கிளிக்கண்ணி—3
————————————————
12 வது பாசுரம்
பாலால் நனைந்து சேறாகி
பால்வளம் செல்வம் தங்காய் நீ
பனியால் நனைந்து கடைபற்றிக்–கிளியே
பேதைப் பெண்கள் வந்துள்ளோம்
மனத்துக்கினியான் மாவீரன்
மட்டிலாப் புகழைப் பாடிடவும்
இனித்தான் எழுக, ஈதென்ன ?–கிளியே
இனிய தூக்கம் விட்டுவிடு !
பாசுரம் 13
————-
கொக்கைக் கிழித்த கண்ணனைக்,
கிள்ளித்தலை யெறிந்த ராமனை ,
பாடித் திரியப் பெண்கள்–கிளியே
பாவைக் களமும் சேர்ந்தாரே !
குருவும்போய்,வெள்ளியுமே
கிழக்கே வந்து பறவைஒலி
கண்டும் உன் மான்கண்கள்—கிளியே
கள்ளத் துயிலில் மூடுவதேன் !
14வது பாசுரம்
—————-
ஆம்பல்கூம்பித் , தாமரைமலர
சோம்பலின்றித் துறவியர் கோயில்
நோக்கிச் சங்கம் முழக்கக்–கிளியே
வாக்கில் முன்னே எழுப்புவனென்று
சொன்னச் செல்வியே, வெட்கம் எங்கே ?
சொக்கிப் பேசும் வார்த்தையுமெங்கே ?
கண்ணனின் புகழைப் பாடுக –கிளியே
கட்டில் தூக்கம் ஏன்,ஏன் ஏன் ?
15வது பாசுரம்
———————-
இளங்கிளியே !இன்னம் உறங்காதே !
கலங்கு மொழி தவிர்க ! வருகின்றேன்!
வல்லமைப் பேச்சறிவோம் —கிளியே
வலியதே ,இது நீங்கள்தான் !
நானேதான் ஆகின்றேன்
அனைவரும் வந்து நின்றார்
வல்லானைப் பாடவும் –கிளியே
வந்தேதான் நிற்கின்றோம்
16வது பாசுரம்
———————
கோயில்வாயில் காப்போனே !
குன்றக் கதவைத் திறந்து விடு !
ஐயம் வேண்டாம், கோவிந்தன் –கிளியே
பையப் பறையும் தருகின்றான் !
கண்ணன் தூங்கும் நேரமிது
காத்திருங்கள் எனச் சொல்ல,
காலையிலே எழுப்பத்தான்—கிளியே
வேலையோடு வந்துள்ளோம் !
தொடக்கத்தில் மறுக்காதே !
தூயோமாய் வந்துள்ளோம்
தூமணி வாசல் கதவத்தைக் –கிளியே
திறந்துவிடு , என்றார்கள்..
மணிக்கதவம் திறந்தது
17வது பாசுரம்
——————–
ஆடை,நீர் ,சோறளிக்கும் ,
ஆளுமரசனே ,எழுந்திராய் !
அவனுக்கு இனிய மாதே —கிளியே
அசோதையே எழுந்திராய்.
உலகத்தை அளந்தவனே
உறங்காது, எழுந்திராய்
பலமிகுந்த ராமா–கிளியே
பலராமா எழுந்திராய் .
18வது பாசுரம்
———————
நந்தகோபன் மருமகளே
நப்பின்னாய், கடைதிறவாய்!
பந்தலில் குயிலும், கோழி —கிளியே
பாடுவதைக் கேட்டிலையா ?
நப்பின்னாய் ! உன் மைத்துனனின்
ஒப்பில்லாப் பேர்பாடி, வந்துள்ளோம்
வந்து நீ திறவாய் எனக்—கிளியே
வருந்தி அழைத்தார்கள் .
19வது பாசுரம்
———————-
குத்து விளக்கும் ,கோட்டுக்காலும் ,
மெத்தென்று உள்ள சயனத்தில்,
நப்பின்னை உடன் உள்ளாள்! —கிளியே
நாரணா! வாய் திறவாய் !
மணவாளன், மலர்மார்பன் ,
தணியாத தூக்கத்தில் ,
விட்டுப் பிரியாயோ–கிளியே
வீண் தகவு இதுதானோ !
நப்பின்னை, மணிக்கதவம் திறந்து உள்ளே இவர்களை அழைக்க—-
20வது பாசுரம்
———————-
தேவர்கள் துயர் தீர்க்க
தேடி அவர் இடம் சென்று
அண்டியவர்களைக் காக்கும்–கிளியே
அழகா! கண்ணா! துயிலெழாய் 1
நப்பின்னை, நல்நங்காய்
நம்பி வந்த எங்கட்கு
உக்கமும், தட்டொளியும் –கிளியே
உடனே அளித்தருளி ,
கண்ணனையும் அனுப்பிக்
காத்தருள்வாய், எம்திருவே !
கண்ணனுடன் நாங்கள்—கிளியே
கலந்துறைய நீ,அருள்வாய் !