yengal gathiye, iraamaanusa muniye—-

Posted on Apr 9 2016 - 6:57am by srikainkaryasriadmin

எங்கள்  கதியே,  இராமாநுச முனியே —-

—————————————————————————————

அடியேனின் விண்ணப்பம்
ஸ்ரீ பாஷ்யகார என்கிற பெரிய ஏரியிலே , ஸ்ரீ ஆளவந்தார், மணக்கால் நம்பி, பெரிய நம்பி, மற்றும் திருக்கோட்டியூர் நம்பி போன்ற பரம ஆசார்யர்கள்  உபதேசித்த ,கங்கா ப்ராவாஹம் போன்ற உபதேசங்கள் நிரம்பி இருக்கின்றன. ஸ்ரீ உடையவர், இந்தப் பெரிய ஏரிக்கு மதகுகள் போல 74   சிம்ஹாசனாதிபதிகளை  நியமித்து, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை நன்கு செழித்து வளரச் செய்தார்.
ஸ்ரீ எம்பெருமானாரின் திரு நக்ஷத்ரம் மஹோன்னதமானது–அவரது திருநக்ஷத்ர வைபவத்தை,பெரும் பாக்யமாகக் கருதி  அடியார்கள் கொண்டாடவேண்டும்
இந்தப் பெரும் பாக்ய நாளில் , திருவரங்கத்து அமுதனார் அருளியுள்ள “இராமானுச நூற்றந்தாதியை ” சேவிப்பதும், அவற்றின் பொருளை அகத்தில் கொள்வதும் , அதன் பயனாக சம்ப்ரதாய ஊற்றம் கொண்டு , மென்மேலும் பகவத், பாகவத கைங்கர்யங்கள்  செய்ய விழைவதும் சாலச் சிறப்பு உடைத்து.
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனைத் த்யானித்து,  “எங்கள் கதியே, இராமானுச முனியே ” சமர்ப்பித்து உள்ளேன்.
இதன் பிறகு “ஸ்ரீ வேதாந்த தேசிக நூற்றந்தாதி ” வரும்; விரைவில் வரும்
தொடர்ந்து படியுங்கள்

எங்கள் கதியே ! இராமானுச   முனியே !

——————————————————————-

தனியன்

————–

முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்

பொன்னங்கழல் கமலப் போதிரண்டும் ——என்னுடைய

சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன்   தென் புலத்தார்க்கு

என்னுக் கடவுடையேன்  யான்

———————

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதன்றி     நண்ணினர் பால்

சயந்தரு கீர்த்தி  இராமானுச முனி  தாளிணை மேல்

உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து  அமுது ஓங்கும் அன்பால்

இயம்பும்  கலித்துறை அந்தாதி ஓத  இசை நெஞ்சமே

—————–

சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்

நல்லன்பர் ஏத்தும்   உன் நாமமேல்லாம்  என் தன் நாவினுள்ளே

அல்லும் பகலும் அமரும்படி நல்கு  அறுசமயம்

வெல்லும் பரம    இராமானுச ! இதென் விண்ணப்பமே

—————–

இனிஎன் குறை நமக்கெம்பெருமானார்    திருநாமத்தால்

முனி தந்த நூற்றெட்டு சாவித்திரிஎன்று     நுண் பொருளைக்

கனி தந்த  செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான்

புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே

——————–

நான்காவது தனியன் கூறுவதாவது;—நூற்றெட்டு ஆவ்ருத்தி ஜெபிக்கப்படும், சாவித்ரியின் பொருளாகிய —-அதன் சூக்ஷ்ம அர்த்தத்தை—

இது பகவானால் உபதேசிக்கப்பட்டு, விச்வாமித்ரரால் பிரகாசம் செய்யப்பட்டதை , ஆசார்யரான

எம்பெருமானாரைத் த்யாநிப்பதால், தர்ம விஷயமான புத்தியை அளிக்கும் கலித்துறை

அந்தாதியை புண்ணியரான திருவரங்கத்து அமுதனார் ,பாசுரமிட்டுத தந்துள்ளார்

—————-

இந்தத்  தனியன் மேல் நாட்டில் சேவிக்கப்படுகிறது.  ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிய ” கண்ணிநுண் சிறுத்தாம்பு ” முழுக்க, முழுக்க,ramanujarஸ்ரீ நம்மாழ்வார் விஷ்யமாகவே இருக்கிறது.  ஆனால், நமது பூர்வர்கள்,   அதை, முதலாயிரத்தில் சேர்த்து அனுசந்திக்கிறார்கள்.

அதைப் போலவே, திருவரங்கத்து அமுதனார் அருளிய “இராமானுச நூற்றந்தாதியை ” நான்காவது ஆயிரத்தில் சேர்த்து அனுசந்த்கிக்கப்படுகிறது.

“பகவத் சேஷத்வ கைங்கர்யங்களுக்கு எல்லை————பாகவத சேஷத்வ கைங்கர்யங்கள் ”

———————————————-

” இராமனுசர் ” என்னும் “சொல்” லக்ஷ்மணனையும் குறிக்கும்; கண்ணனையும் குறிக்கும்; ஏன்—பரதனையும், சத்ருக்னனையும் கூடக் குறிக்கும்.

பகவான் ஸ்ரீ ராமனாக அவதரித்து, சாமான்ய தர்மம், விசேஷ தர்மம், வர்ணாஸ்ரம தர்மம், சரணாகத தர்மம் என்று செய்து , தர்மத்தை ஸ்தாபித்துக் காட்டினார். அவருக்குப் பின்பாக , இந்த ” அனுஜர் ” ( ராமானுஜர் ) சாமான்ய, விசேஷ, வர்ணாஸ்ரம, தர்ம ஸ்தாபன, சரணாகத ரக்ஷணம் செய்து காட்டி உள்ளார்.

“ராமா ” என்பது ஸ்ரீ ஆண்டாளையும் குறிக்கும். ” ராமா ” என்கிற ஆண்டாள், அனுஜா—எந்த ஆழ்வார்களுக்குப் பின்பு தோன்றியவளோ, அவளுக்குப் பின்பாக எந்த ஆழ்வார்கள் தோன்றினார்களோ, அவர்கள் யாவருமே ராமானுஜர்களாய்,அவர்கள் அனைவருமாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ராமானுஜர்.

“ராமை ” என்கிற பெரிய பிராட்டியைப் போல, “நிக்ரஹம் ” என்பதே தெரியாமல்,”அனுக்ரஹ  ” வடிவமாய்,  பெரிய  பிராட்டியைப்  பின்பற்றி ,  “பிரஜா ரக்ஷணம் ” செய்தவர் இராமானுசர். இப்படியாகப் பலப் பலப் பொருள்களைக்கூறிக்கொண்டே போகலாம்.

பகவத் ராமானுஜரைப் பற்றி, “இராமானுச நூற்றந்தாதி ” அருளியவர் திருவரங்கத்தமுதனார். இவரைப் “பெரிய கோயில் நம்பி ” என்றும் அழைப்பர். இவர், எம்பெருமானாரின் நியமனத்தினால், ஸ்ரீ கூரத்தாழ்வானாலே திருத்தப் பெற்றவர். ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆஸ்ரயித்தவர்.

இப்படி, ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆச்ரயித்து, தம் ப்ராசார்யரும், தம்மால் ஈடு இணையின்றி அனுபவிக்கப் பெற்றவருமான எம்பெருமானார்

விஷயமாக, ஆயிரத்துக்கும் மேலான  பாசுரங்கள் இயற்றியதாகவும், அவற்றை எம்பெருமானார் விரும்பவில்லை என்றும், பிறகு, அரங்கன் நியமனத்தின் பேரில் “நூற்றந்தாதி ” இயற்றி, எம் பெருமானாரும்  ,   பெருந் திரளாக பக்தர்களும் திருவரங்கன் திரு முன்பே கூடியிருந்தபோது, எல்லோரும் போர உகக்க,

“இராமானுச  நூற்றந்தாதியை ” விண்ணப்பித்தார் என்றும்  சொல்வர்.

“இராமானுச நூற்றந்தாதி’ அமுதுக்கு அமுது; அமுதனார் அருளிய அமுது; திருவரங்கன் உகந்த அமுது;  நமக்கெல்லாம் அமுது;

இந்த அமுதத்தில் , சிலவற்றை அள்ளிப் பருகலாம் வாருங்கள், இதை விட பாக்யம் வேறு எது !

continues—-2

About the Author

Leave A Response