திருவாய் மொழியில் கயிறு சாற்றுதல்
—————————— ——-
ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி சாம வேதசாரம் என்று போற்றப்படுகிறது.
இது பகவத் விஷயம் … காலக்ஷேபம் மூலமாக அர்த்தங்களைக்
க்ரஹிக்கவேண்டும்.
நமது முன்னோர்கள், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பாசுரங்களை மனப்பாடம் செய்து இருந்தார்கள். இதில் பாகவதர்கள் ஈடுபாடு அதி ஆச்சர்யமானது. முக்யமாக திருவாய்மொழி சேவிப்பது என்பது அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம்
திருவாய்மொழி புத்தகத்தை , உயிருனும் மேலாக மதித்து, ஒவ்வொரு தரமும் புத்தகத்தை வணங்கி விட்டுத்தான், அதற்கு உண்டான சிக்குப் பலகையில் வைத்துப் பிறகு
பாசுரங்களை படிக்க ஆரம்பிப்பார்கள்
தங்கள் வீட்டில் , எந்தக்கார்யம் செய்யத் தொடங்கினாலும், திருவாய் மொழியில் ,
கயிறு சாற்றிப் பார்த்து ,பலன் எப்படி வருகிறது என்று தெரிந்துகொண்டு , அந்தக் காரித்தைச் செய்தார்கள். கயிறு சாற்றிப் பார்த்ததில் உத்தரவு கிடைக்கவில்லை என்று அந்தக் கார்யத்தை ஒதுக்கினார்கள்; ஒதுக்கியதால் ,இடரில் இருந்து காப்பாற்றப்பட்டதை அனுபவத்தில் உணர்ந்தார்கள்; அதனால் , கயிறு சாற்றிப் பார்ப்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது.
இது ,இன்றையத் தலைமுறைக்கு, எந்த விவரமும் தெரியாத ஒன்று,
மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுவார்கள்; முன்னோர்கள் மூடர்கள், இவர்கள் புத்திசாலிகள் என்கிற நினைப்பு
இருந்தாலும்,
இப்படிக் கயிறு சாற்றுதல் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதில் தவறில்லையே !
அக்காலத்திய “திருவாய்மொழிப் புத்தகத்தில் ஒரு பக்கத்தில் ஒரு பாசுரம் இருக்கும்.
ஒரு கார்யம் தொடங்குவதற்கு முன்பு, திருவாய்மொழி புத்தகத்தை வணங்கி, அதைக் கையில் எடுத்து, ஸ்ரீ நம்மாழ்வாரைத் த்யானித்து, ஒரு பட்டுக் கயிற்றால், புத்தகத்தைத் திறப்பார்கள்.
அந்தந்த பாசுரத்துக்கு என்று குறிப்புகள் இருக்கின்றன
முதற் பத்தில் 1 ம் பாசுரம் ஒ, 2– அத, 3– ஒ , 4– தீது, 5—7— ந , 8– பொ , 9-10– ந.
அத—அதமம்
அழ —அழகு
உ —உத்தமம்
ஒ — ஒரு குறிப்பும் இல்லை
சீ—சீதேவி உண்டு
தீ —தீது
ந —நன்று
பே–பேறு
பொ—பொல்லாதது
ம –மத்திமம்
முதற் பத்தைப் போல , ஒவ்வொரு பத்துக்கும் குறிப்புகள் உள்ளன . இவ்வாறு பத்தாவது பத்து வரை குறிப்புகள் உள்ளன
ராமாயணம், பாகவதம் இவற்றிலும் கயிறு சாற்றும் பழக்கம் இருந்தது
மேலே சொன்ன புத்தக அமைப்பு, கயிறு சாற்றும் வழிகள் , நடைமுறையில் மாறி இருக்கலாம்
ஆனால், பொதுவாக , திருவாய்மொழி , நம்மாழ்வாராகவே மாறி அனுக்ர ஹித்தது என்பது
நம் முன்னோர்கள் அனுபவித்து , ஆழ்ந்த பக்தியில் இருந்தது உண்மை

Sarvam Sree Hayagreeva preeyathaam