Soorya Ashtakshara manthra

Posted on Apr 12 2016 - 5:55am by srikainkaryasriadmin

ஸுர்ய  மண்டலத்தில் பரப்ரஹ்ம  உபாஸநம்
—————————————————————————-

            ( இங்கு  கொடுத்துள்ள உபநிஷத்தை ,வேதத்தை அத்யயனம்

               செய்தவர்களிடமிருந்து, க்ரஹித்து, பிறகு உச்சரிக்கவும் )

            மஹா நாராயண  உபநிஷத் கூறுகிறது.

ஆதித்யோவா ஏஷ  ஏதன்  மண்டலம் தபதி தத்ர  தா ருசஸ் –தத்ருசா

மண்டல   ஸருசாம்  லோகோதய  ஏஷ  ஏதஸ்மின்  மண்டலேச்சிர்

தீப்யதே  தானி ஸாமானி  ஸ  ஸாம்னாம்  லோகோத ய ஏஷ ஏதஸ்மின்

மண்டலேர்ச்சிஷி  புருஷஸ் -தானி  யஜூ(கும்)  ஷி   ஸயஜூஷா

மண்டல  ஸ  யஜூஷாம்  லோகஸ்ஸைஷா  த்ரய்யேவ  வித்யா

தபதி  ய ஏஷோந்தராதித்யே  ஹிரண்மய  புருஷ :

ஆதித்யன் ,உண்மையில் அந்த பரமாத்வே ( அதாவது ஸ்ரீமன் நாராயணன் )

இந்த ஆதித்ய மண்டலம், ஜகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கிறது.( ஆதித்ய

மண்டலத்தை வேதமயமாகவும்,அங்கு வேத புருஷனான ஆதித்யனான

பகவான் நாராயணன் இருப்பதாகவும் த்யானிக்கவேண்டும்.)
அங்கு ப்ரசித்தமான ருக் வேதங்கள், ஒளிவடிவமாகப் பிரகாசிக்கின்றன.

ருக்வேத மண்டலம்; ருக்வேத மந்த்ரங்களின் உறைவிடம்.

இந்த மண்டலத்தில், கொழுந்து விட்டு எரியும் ஜ்வாலைகள் , ஸாம வேத

மந்த்ரங்கள்;அது, ஸாமவேத மந்த்ரங்களின் உறைவிடம்.
இந்த மண்டலத்தில், ஜ்வாலையில் உள்ள புருஷன் எவனோ, அவன்

யஜுர் வேத மந்த்ர ஸ்வரூபன்; அது யஜுர் வேத மண்டலம்;யஜுர்

வேதத்தின் உறைவிடம்.

” த்ரயீ  வித்யா ” என்ற வேதம் மூன்றுமே ஆதித்ய மண்டலமாக ,
ஜகஜ்ஜோதியாகப்  ப்ரகாசிக்கிறது . அதனுள் உறைபவன், பொன் நிறத்தில்

உள்ள புருஷனாகிய பரமாத்மா (ஸ்ரீமந்  நாராயணன் )

ருத்ரம் சொல்கிறது—–

உதைனம் கோபா  அத்ருசன் -நத்ரு சந்நுத  ஹார்ய :

ஸூர்யரூபியான இந்த பகவானை, கோபர்களும் கூடப் பார்க்கிறார்கள்;

ஜலம் எடுத்துவரும் பெண்கள் பார்க்கிறார்கள்;எல்லாப் பிராணிகளும்

பார்க்கின்றன . இப்படிப்பட்ட ஸூர்யன் , நமக்குப் பரம ஆனந்தத்தை

அளிக்கட்டும். வேத சாஸ்த்ர  ஞானம் இல்லாத இடையர் உட்பட,

எல்லாருக்கும் அருளவே, பகவான் ஸூர்யனாகப் ப்ரகாசிக்கிறார் ;

மூன்று மூர்த்திகளும் அவரே; மூன்று காலங்களும் அவரே .

ஆதித்யோ  வை   தேஜ  ஓஜோ  பலம் யசச் -சக்ஷு-ச்ரோத்ர -மாத்மா

மனோ மன்யுர் –மனுர்–ம்ருத்யுஸ் -ஸத்யோ  மித்ரோ  வாயு-ராகாச

ப்ராணோ  லோக –பால க  கிம் கம் தத் ஸத்ய -மன்ன-மம்ருதோ

ஜீவோ  விச்வ கதம ஸ்வயம்பு ப்ரஹ்மைத -தம்ருத  ஏஷ  புருஷ

ஏஷ  பூதானா -மதிபதிர் –ப்ரஹ்மணஸ்-ஸாயுஜ்ய  ஸலோகதா —

மாப்னோத் –யேதாஸா -மேவ   தேவதானா   ஸாயுஜ்ய (கும்)

ஸார்ஷ்டிதா (கும்) ஸமானலோகதா –மாப்நோதி  ய  ஏவம்

வேதோத்யுபநிஷத்

இவையெல்லாம் ஆதித்யனே —ஒளி ,வீர்யம், பலம், கீர்த்தி, கண் ,

காது, சரீரம், மனஸ் , கோபம், மநு , யமன், ஸத்யதேவதை, மித்ரன்,

வாயு , ஆகாசம், ப்ராணன் , லோகபாலகர்கள், ப்ருஹ்மா , இவையென்று

விவரிக்க முடியாத தத்வம் எல்லாமே ஆதித்யன். இது, “தத்”, என்றும்,

“ஸத்” என்றும் சொல்லப்படுகிறது. இதுவே உண்மையான பொருள்;

இதுவே அன்னம்; அம்ருதம்; ஜீவன்;உலகம்;எல்லையில்லா ஆனந்தம் ;

இதுதான் ஆதித்யன்; அழிவே இல்லாத பரமாத்மா ; எல்லாஉயிர்களுக்கும்

ஆத்மா; இப்படியாக உணர்ந்து     த்யாநிப்பவன், ஸாயுஜ்யபதவியை அடைவான்

ஆதித்ய  தேவதா மந்த்ரங்கள்
——————————-

க்ருணிஸ்–ஸூர்ய   ஆதித்யோ ந ப்ரபாவாத்யக்ஷரம் |

மதுக்ஷரந்தி  தத் ரஸம் | ஸத்யம் வை  தத்ரஸமாபோ ஜ்யோதீஸோம்ருதம்

ப்ரஹ்ம  பூர் புவஸ்  ஸுவரோம்  |

ப்ரகாசஸ்  ஸ்வரூபி; உலகங்களைத் தோற்றுவிப்பவன் ; அழிவில்லாதவன்;

ஆதித்யன் —தனது கிரணங்களைத் தடையின்றி ஆகாசத்தில்  செலுத்துகிறான்;

சஞ்சாரம் செய்கிறான்; ஆறுகளின் உருவங்களில் , அவனது வாத்ஸல்யம்,

உலகத்திற்கு நன்மையைச் செய்கிறது; இதுவே ப்ரணவம் ; இதுவே ஸத்யம்-

இதுவே ஜலம்; இதுவே ஒளி ; இதுவே ரஸத்தை உடைய அன்னத்தை அளிக்கும்

பூமி; உயிருக்கு ஆதாரமான வாயு; எங்கும் பரந்து விரிந்துள்ள ஆகாசம்;

“பூ : “,  “புவ : “,  ” ஸுவ : ”  என்கிற வ்யாஹ்ருதிகள்  உணர்த்தும் “மனஸ் ”

” புத்தி “,  “அஹங்காரம் ” என்கிற தத்வங்கள்.

ஸந்த்யாவந்தனாதிகளில் ,
——————————————
ப்ராதஸ்  ஸந்த்யாவனத்திலும் (ஸூர்யச்ச

மா மன்யுஸ்ச  மன்யுபதயஸ்ச ——————————),
ஸாயம்ஸந்த்யாவனத்திலும்( அக்னிஸ்ச  மா  மன்யுஸ்ச——————)
என்று மந்த்ரங்கள் இருக்கின்றன.

ஆதித்ய மண்டலேத்யாயேத்  பரமாத்மானம் அவ்யயம் |

விஷ்ணும் சதுர்புஜம் ரத்ன பங்கஜாஸனமத்யகம் ||

க்ரீட ஹார கேயூர  கடகாதி விபூஷிதம் |

ஸ்ரீவத்ஸ வனமாலா  ஸ்ரீதுளஸீகௌஸ்துபோஜ்ஜ்வலம் ||

ஹரிம் பீதாம்பரதரம் சங்க சக்ர கதாதரம் |

ப்ரஸன்னவதனம்  ரத்ன  குண்டலைர்  மண்டிதாநநம்||

ஸர்வ ரத்ன  ஸமாயுக்தம் ஸர்வாபரண பூஷிதம் ||

பத்மாஸனத்தில் இருப்பவன்; நான்கு திருக்கைகளுடனும், சிரஸ்ஸில்

க்ரீடத்துடனும்  திருமார்பில் ரத்ன ஹாரங்களுடனும் ஸ்ரீ வத்ஸ
மருவுடனும்  வனமாலையுடனும் ,துளசீ மாலையுடனும் ,கௌஸ்துப
ரத்னத்துடனும் மிக விசேஷமாகப் ப்ரகாசிப்பவனும், தோள் வளை —

—-களுடனும்,இடையில் பட்டு வஸ்த்ரத்துடனும் சங்கம், சக்ரம் ,கதை

இவைகளை ஏந்தி இருப்பவனும், திருக் காதுகளில் ரத்ன மகர குண்டலங்களைத்

தரித்திருப்பவனும், பொலிவு மிகுந்த திருமுகத்தை உடைய பக்தவத்ஸலனாக

பக்தர்களின் பாபங்களைப் போக்கும் பரமாத்மா –ஸ்ரீ மஹாவிஷ்ணு–

இவரை மேற்கூறிய மந்த்ரத்தைச் சொல்லி,ஆதித்ய மண்டலத்தில் த்யானம்

செய்யச் சொல்கிறது.

த்யேயஸ்ஸதா  ஸவித்ருமண்டல  மத்யவர்த்தீ

நாராயணஸ்  ஸரஸி ஜாஸந   ஸந்நிவிஷ்ட :  |

கேயூரவான் மகரகுண்டலவான் க்ரீடி  ஹாரி

ஹிரண்மயவபுர்த்ருத  சங்க சக்ர :  ||
ஸூர்ய மண்டலத்தின் நடுவே  பத்மாஸனத்தில் தோள்வளை , மகரகுண்டலம்

க்ரீடம் , மாலை முதலிய திருவாபரணங்களை அணிந்து, சங்கு சக்ர கதாதரனாய்

ஸ்வர்ணமயத் திருமேனியோடு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமந் நாராயணனை

எப்போதும் ( எக்காலத்திலும் ) த்யாநிப்போமாக

மாத்யாஹ்நிகத்தில் , ஸுர்ய தர்ஸன மந்த்ரமும்  ( பச்யேம ஸரதஸ் ஸதம் —-)

தீர்க்கமான சக்ஷுஸ்ஸைக் கொடுக்கிறது.

எவன்  ஒருவன் ஸந்த்யாவந்தனாதிகளை லோபமில்லாமல் செய்கிறானோ,

அவன் ஸுர்ய உபாஸனா செய்தவன் ஆகிறான்.

 

ஸ்ரீ தேவநாயக பஞ்சாஸத்தில்  , ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்லோகத்தில்

திவ்யே  பதே ஜலநிதௌ  நிகமோத்தமாங்கே
ஸ்வாந்தே  ஸதாம்  ஸவித்ரு மண்டல மத்த்யபாகே |
ப்ரம்ஹாசலே   ச  பஹூமானபதே  முநீனாம்
வ்யக்திம்  தவ த்ரிதசநாத ! வதந்தி நித்யம் ||

இந்த ஸ்லோகத்தில், “ஸவித்ரு மண்டல மத்யபாகே ” என்பது குறிப்பிடத் தக்கது.
பகவான், ஸூர்ய மண்டலத்தில் எப்போதும் சாந்நித்யம் செய்கிறான்…இதை 32 வித்யைகளில்
மது வித்யை , அந்தராதித்ய வித்யை  முதலியவை சொல்கின்றன
காயத்ரியே , இந்த ஸூர்ய நாராயணனைப் புகழ்வதாக, மைத்ராயணீயோபநிஷத் சொல்கிறது.
ஸ்ரீ ஹயசிர  உபாக்யானத்தில், யாக்ஜவல்க்யர் ஸூர்ய மண்டல மத்யவர்த்தியான

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனை ஆராதித்து, சுக்ல யஜுர் வேதத்தைப் பெற்றார் என்று,

வாஜஸனேய ஸம்ஹிதைகள்  (வாஜீ =  ஸூர்ய நாராயணனான
ஸ்ரீ ஹயக்ரீவன் ) கூறுகின்றன

 

–அர்வாவஸூ  கதை
——————————

மஹா பாரதத்தில் , இந்த விவரம் உள்ளது (வன பர்வம் )

பரத்வாஜர்  அவருடைய சிநேகிதர் ரைப்யர்  —இருவரும் மஹரிஷிகள்.  மஹா தபஸ்விகள்.

ரைப்யர் மிகப் பெரிய வித்வான். வித்வத்  சபையில்  நன்கு பிரகாசித்தார். அந்த அளவுக்கு

பரத்வாஜர் வர இயலவில்லை. – இவர் குமாரர் யவக்ரீதர்.    ரைப்யரின் குமாரர்கள்

பராவஸூ , அர்வாவஸூ  என்று இருவர்.

ரைப்யரைப் போலத் தன்  தகப்பனாரும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்

வேத பாகங்களை ஆசார்யன் மூலமாக அல்லாமல், தபஸ் மூலமாக அறியவும்,

யவ்க்ரீதர் , இந்த்ரனை நோக்கித் தவம் இருந்தார். இந்த்ரன் ப்ரஸன்னமாகி,

குரு  முகமாகத்தான்   – கற்க இயலும் என்று சொல்லி விட்டான். பலமுறை தவம் செய்தும்

இதே பதில்தான் ( விவரம் மஹா பாரதத்தில் உள்ளது) கடைசியாக

“சிறந்த வித்வானாக வேண்டும்” என்று வேண்டி அந்த வரத்தைத்

தகப்பனாருக்கும் சேர்த்து இவர் பெற்றார்

விஷயத்தைத் தன்  தகப்பனாரான பரத்வாஜரிடம் சொன்னார்.  அவர்

,” பிள்ளாய்….இது உனக்கு அஹங்காரத்தை உண்டாக்கும். ரைப்யர் மிகச் சிறந்தவர்

;அவர் பிள்ளைகளும் அப்படியே; ஆதலால் அவர்களை விரோதிக்காதே ” என்றார்.

ஆனால்,  விரோதம் வளர்ந்து, ரைப்யரால் ,யவக்ரீதர்கொல்லப்பட்டார்.

பரத்வாஜருக்கு இது தெரிந்து, அவர் ரைப்யருக்குச் சாபமிட்டார்.அந்த சாபத்தால்,

ரைப்யருடைய மூத்த மகன் பராவஸூ ,  தானும் தன்  தந்தையும் , ப்ருஹத்த்யும்னன்

என்கிற அரசரின் யாகத்தில்  இருந்து யாகத்தை நடத்திக் கொண்டு இருக்கும் நாட்களில்

ஒரு நாள் இரவு, தன்  தந்தையை , தந்தை என்று அறியாமல் கொன்றுவிட்டான்.

பிதாவுக்குச் செய்யவேண்டிய அந்திமக் கார்யங்களைச் செய்தான்.

அரசனின் யாகசாலைக்குத் திரும்பி வந்த பராவஸூ , தன் தம்பியான அர்வாவஸூவிடம்

‘சஹோதரா….இந்த யாகத்தை உன் ஒருவனால் மட்டுமே பூர்த்தி செய்விக்க இயலாது…

உனக்கு அந்தத் திறமை இல்லை….எனக்காக  ப்ரஹ்ம தோஷப்  ப்ராயச் சித்தத்தை

நீ செய்து விடு…நான்  அரசரின் யாகத்தை நடத்தி வைக்கிறேன் ..” என்றான்.
அர்வாவஸூ வும் “சரி ” என்று சம்மதித்து, ப்ராயச் சித்தத்தைச் செய்துவிட்டு ,

அரசரின் யாக சாலைக்குத் திரும்பினான். அப்போது பராவஸூ

அரசே…ப்ரஹ்மஹத்தி தோஷம் செய்து, பிராயச்சித்தம் செய்தவன்

யாக சாலைக்குள்  வரக்கூடாது ” என்று சொல்ல, அரசன் ,
அர்வாவஸூவைத் துரத்திவிட்டான். அர்வாவஸூ எவ்வளவோ உண்மையைச்

சொல்லியும் சத்யம் செய்தும் ஒருவரும் நம்பவில்லை.

அர்வாவஸூ  வனத்தில் உக்ரமாகத் தபஸ்  செய்து, சூர்ய  பகவானைத் துதித்து,

அவரது  அனுக்ரஹத்தால் , ரஹஸ்ய வேதமான “ஸூர்ய மந்த்ரத்தைப்

ப்ரகாசப்படுத்தும்  வேதத்தை அறிந்து, அதிலிருந்து “ஸூர்ய  அஷ்டாக்ஷரத்தை ”

அறிந்து அதைப் பலமுறை ஜபித்து, ஸூர்ய  பகவானே ப்ரஸன்னமாகி ,

அவரது க்ருபையால், கெட்ட பெயர் நீங்கி, தேவர்கள் வரம் அருள,

இவனே அரசரின் யாகத்தை நடத்தி முடித்தான். தேவர்கள் கொடுத்த வரத்தால்,

இவர் தகப்பனாரும், பரத்வாஜரும், யவக்ரீதரும் ,உயிர் பெற்று எழுந்தனர்.

அப்போது அர்வாவஸூ ,  தேவர்களை வேண்டினான்

” நான் ஜபித்த இந்த ஸூர்ய அஷ்டாக்ஷர ” மந்த்ரம், உலகில் நிலை பெற்று

இருக்க வேண்டும் ” என்று ப்ரார்த்தித்தான் .

இந்த மந்த்ரம் சகல ஸ்ரேயஸ்ஸையும் அளிக்க வல்லது.

ஜபிக்க, ஜபிக்க, ஸூர்ய நாராயணனின் அனுக்ரஹம் முழுமையாகக் கிடைக்கும்.

இந்த ஸூர்ய மந்த்ரத்தை , ஆசார்யன் மூலமாக  உபதேசம் பெற்று , ஜபிக்க வேண்டும்.

Sarvam Sree Hayagreeva preeyathaam1545896_610259689041757_85357530_n

About the Author

5 Comments so far. Feel free to join this conversation.

 1. Krishnan Narasiman May 17, 2016 at 4:07 am - Reply

  Thangalin Kainkaryam Melum PrakAsikka BhagawAnai PrArthikkioren-DhAsan S N Krishnan

  • srikainkaryasriadmin July 3, 2016 at 9:13 am - Reply

   swamin—-kindly encourage adiyen further and further
   thanks to Sri S N krishnan, Sri S V S Vinodh and Sri V .Rajagopalan
   Expecting comments from all readers and viewers

  • srikainkaryasriadmin October 27, 2016 at 2:51 pm - Reply

   Ungalaipponra suhruththukkalin viruppamthaan adiyenai menmelum urchaagappaduththukirathu

 2. Ramanujam October 8, 2016 at 5:34 pm - Reply

  Just now Wf are learning this portion of Veda and your vakysnsm / meaning helps us in aporecistkng the vedas very much.

  Please continue this Yemon setvive

  • srikainkaryasriadmin October 27, 2016 at 2:48 pm - Reply

   Thanks very much–this is one of three kainkaryams dictated in ”Sastras” Likitha kainkaryam

Leave A Response