2
ஸ்ரீ பேரருளாளஜீயர்—-
ஸ்வாமி தேசிகனின் அத்யந்த சிஷ்யர். அவரும், ஸ்வாமி தேசிகனும்
ஸ்ரீரங்கத்தில் ஒருசமயம் எழுந்தருளி இருக்கும்போது , ஒரு வித்வான் ,
ஸ்வாமி தேசிகனிடம் வந்து , வேதாந்தவாக்யார்த்தம் சொல்ல வந்திருப்பதாகச்
சொன்னார். ஸ்வாமி தேசிகன் , பேரருளாள ஜீயரை அழைத்து, இந்த வித்வானிடம்,
“சததூஷணி” முதலிய க்ரந்தங்களைக் கொண்டு, வாதம் புரியுமாறு நியமித்தார்.
பேரருளாள ஜீயர், அப்படியே மூன்று நாட்கள் வாதம் பண்ணி , அந்த வித்வானை
வாதத்தில் ஜெயித்து, ஸ்வாமி தேசிகனிடம் வந்து, விவரங்களை
விண்ணப்பித்தார். ஸ்வாமி தேசிகன் மிகவும் சந்தோஷித்து, ” இன்றுமுதல்
நீர்,” ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் ” என்று அழைக்கப்படுவீர் என்று சொல்லி, கௌரவித்தார்.
கொஞ்ச காலம் கழித்து, ஸ்வாமி
தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர் , ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர்
மற்றும் சிஷ்யர்கள் சூழ திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார் .
அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார்.
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர் , ஸ்வாமி தேசிகனின் அனுமதியைப் பெற்று, காலக்ஷேப கோஷ்டியில்
அமர்ந்து
ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே ||
பிறகு, ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும், ஸ்ரீ அப்புள்ளாரின்
பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான ஸ்வாமி தேசிகன் விஷயமாக,
ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு குரு பரம்பரையைச் சொல்லி, பகவத் விஷய
காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.
இந்த விஷயம், ஸ்வாமி தேசிகனுக்குத் தெரிந்தது.
ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய :——-” என்கிற
தனியன், நம்முடைய பெருமையைச் சொல்கிறது.
” ராமாநுஜ தயாபாத்ரம் —-” என்கிற இந்தத் தனியன், நமக்கு
ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது …..என்று
சந்தோஷப்பட்டு,
” ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: …..” என்கிற தனியன் ஸ்ரீ
பாஷ்ய காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும் படியும்
” ராமாநுஜ தயா பாத்ரம் …” என்கிற இந்தத் தனியன் “பகவத் விஷய ”
காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும் நியமித்தார்.
இப்படியாக, “ராமாநுஜ தயா பாத்ரம் ……” தனியன் அவதாரம் எடுத்ததாக
, பூர்வாசார்யர்களும், பெரியோர்களும் சொல்வர் .
1998ம் வருஷத்தில் பஹூ தாந்ய வருஷத்தில், ஆவணி ஹஸ்தத்தில், 660வது
அவதார தினம் கொண்டாடப்பட்டது.
25–8-1998—அன்று ராமாநுஜ தயா பாத்ர பத்ய மஹோத்ஸவம் என்று ஸ்ரீ ஸேவா
ஸ்வாமியால் ,ஒரு விரிவுரைப் புத்தகம் எழுதி ,அச்சிடப்பட்டு, இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
சென்ற விஜய வருஷ ஆவணி ஹஸ்தத்தில், 675வது அவதார தினத்தில்(2013ம் ஆண்டு) உபன்யஸிக்கும்
பாக்யம் அடியேனுக்குக் கிடைத்தது. 676வது(ஜய –ஆவணி–ஹஸ்தம் 2014ம் ஆண்டு )
அவதார தினத்தில் —லிகித கைங்கர்ய பாக்யம் கிடைத்தது.
——————————
இப்போது, ” ராமாநுஜ தயா பாத்ரத்” தனியனின் வ்யாக்யானம்
ராமாநுஜ தயா பாத்ரம்
—————
ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்—-ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம்
என்று பெருமையுடன் சொல்லப்படும்,
ஸித்தாந்தத்துக்கு அதிபதி, ஸாக்ஷாத் பரம ஆசார்யன் –ஸ்ரீ உடையவர்
—இவருடைய தயை –கருணைக்கு–
பாத்ரம் —பாத்ரமானவர் –இலக்கானவர்
ஸ்ரீராமாநுஜரின் கருணைக்குப் பாத்ரமானவர்–இந்த ஸ்ரீ ராமானுஜர், நமது
விசிஷ்டாத்வைத தர்ஸன ஸ்தாபகர்.
இவருடைய தயைக்கு இலக்கானவர்
இன்னொரு அர்த்தம்——-
இவருக்கு “ராமாநுஜப்பிள்ளான்” என்றும் திருநாமம் உண்டு. ——கிடாம்பி ராமாநுஜாசார்யர் என்றும் திருநாமம்.
இவருடைய தனியன் :–
நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே |
ஆத்ரேய பத்மநாபார்ய ஸூதாய குணசாலிநே ||
இவருடைய சகோதரிதான், தோதாரம்மா —-ஸ்வாமி தேசிகனின் தாயார்
தனது மாமாவிடம், மருமானான ஸ்வாமி தேசிகன், சப்தம் ,தர்க்கம், மீமாம்ஸம் முதலிய
ஸாமாந்ய சாஸ்த்ரங்களைக் க்ரஹித்தார் . ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம்,
முதலான வேதாந்த க்ரந்தங்களையும்விசேஷ அர்த்தங்களுடன் உபதேசிக்கக் கேட்டார்.
அப்புள்ளார், வைநதேய மந்த்ரத்தை உபதேசித்தார். தனது திருமேனியில் நோவு
சாத்திக்கொண்டிருந்தபோது, தனக்கு ஸ்ரீ நடாதூர் அம்மாள் மூலமாகக் கிடைத்த ,
தான் ஆராதனம் செய்துவந்த ஸ்ரீ உடையவர் பாதுகைகளையும் கொடுத்தார்.
ஸ்வாமி தேசிகன் அவைகளைப் பக்தியுடன் பெற்று, தன்னுடைய
திருவாராதனத்தில், சேர்த்துக் கொண்டார்.
ஸ்வாமி தேசிகன் மங்களத்தில் ,…..
ராமாநுஜார்யாத் ஆத்ரேயாத் மாதுலாத் ஸகலா: கலா : |
அவாப விம்ஸத்யப்தே ய :தஸ்மை ப்ராக்ஞாய மங்களம் ||
என்று மங்களா சாஸனம்—- ஸ்தோத்ரம் சொல்கிறோம்.
ராமாநுஜ தயா பாத்ர வ்யாக்யானத்தில், ” ராமாநுஜ சப்தத்தாலே, ராமாநுஜ அப்புள்ளார் முகமாய்,
இதி எதிராஜ மாகானஸ எதிவரனார் மடப்பள்ளி வந்த மணம் என்னும் இத்யாதியாலும்,
உடையவருடைய கடாக்ஷபரீவாஹமாக வந்து ஸர்வார்த்தங்களும் நிரம்பின “என்று உள்ளது
.இதனாலும், அப்புள்ளார் என்கிற ஆசார்யரின் தயைக்குப் பாத்ரமானவர் என்றும் அர்த்தம் சொல்வர்.
எப்படி, தயைக்குப் பாத்ரமாகிறார் என்றால்,
1. அவருடைய திருவுள்ளத்தை நிறைவேற்றுவது —அதன்மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
2. அவர் விட்டுச் சென்ற ,ஸம்ப்ரதாய விஷயங்களை நிறைவேற்றுவது —அதன் மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
இந்த இரண்டுமே, ஸ்வாமி தேசிகனிடம் இருந்தன. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் —
ஸ்ரீ பாஷ்யகாரர் உகந்த கைங்கர்யம். இன்னொன்று—திவ்ய ப்ரபந்த ஸம்ரக்ஷணம்–
-ஸ்ரீ உடையவர் உகந்த இந்தக் கைங்கர்யங்களை தாமும் செய்து, தானே ப்ரபந்தங்களை அருளி,
திவ்ய ப்ரபந்த ரக்ஷணம் செய்தார்.
3. “ராமாநுஜ ” என்பது, இளைய பெருமாளைக் குறிக்கும்.
“லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்த : ” என்கிறார், வால்மீகி. பெருமாளாகிய ஸ்ரீ ராமனையே காப்பாற்றியவர் லக்ஷ்மணன்
அத்தகைய இளைய பெருமாளின் அருள் கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.
4. ராம அநுஜ தயா பாத்ரம் —-
பரதனுக்கும், ராமாநுஜன் என்கிற திருநாமம் உண்டு. “ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜஞ்ச ……..”இந்த ராமாநுஜனான
பரதன், பதினான்கு ஆண்டுகள், ராமனின் பாதுகைகளை ஆராதித்தவர். ஸ்வாமி தேசிகன், பாதுகைகளுக்காகவே ,
“சஹஸ்ரம் “—பாதுகா சஹஸ்ரம் –பாடியவர்.
ஆக , ராம அநுஜ தயா பாத்ரம்.
5. சத்ருக்னனும் ராமனுக்கு, அநுஜன். பரதனை , ராமனுக்கு அனுஜன் என்று பார்த்தோம்.அந்தப் பரதனுக்கும்
அநுஜன் சத்ருக்னன்.இவன் பரம பாகவதன். நித்ய சத்ருக்களை வென்றவன்
ஆதலால், ஸ்ரீ ஸேவா ஸ்வாமி, தன்னுடைய உபன்யாஸத்தில்,
“ராமாநுஜ —சத்ருக்ன தயா பாத்ரம் “என்று சொல்வார்.
6. “ராமாநுஜ ” என்பது ஸ்ரீ க்ருஷ்ணனைக் குறிக்கும்.
ராமாவதாரத்துக்குப் பிந்தைய அவதாரம்.—-க்ருஷ்ணாவதாரம் .
ஆக , க்ருஷ்ணனும் —ராமாநுஜன்
ராமாநுஜ தயா பாத்ரம்—-க்ருஷ்ணனுடைய கருணைக்குப் பாத்ரமானவர்,
ஸ்வாமி தேசிகனின் . யாதவாப்யுதயம் ஒன்றுபோதும்; கோபால விம்சதி ஒன்று போதும்
ஸ்வாமி தேசிகன், திருவேங்கட முடையானையும், தேவப் பெருமாளையும்
அரங்கனையும்—-கண்ணனாகவே கண்டவர்.
வைஷ்ணவ சித்தாந்த ஸ்தாபகரான , ஸ்ரீ ராமாநுஜரின் திருநாமத்துடன் தொடங்கும் தனியன்,
ஸ்வாமி தேசிகனுக்கு மட்டிலுமே உண்டு என்பது ஒரு ஏற்றம்.
ராமாநுஜ சித்தாந்தத்தை த் தன்னுடைய க்ரந்தங்களால் ஆழமாக வேரூன்றச் செய்து,
ஆல் போல் தழைக்கச் செய்தவர் ஸ்வாமி தேசிகன். ராமாநுஜ தர்சனத்துக்கு –
-ரக்ஷை கட்டியவர்—–. ஐந்து ரக்ஷைகள் —ரக்ஷை—காப்பு.
1. ஸ்ரீ ஆளவந்தாரின் “கீதார்த்த ஸங்க்ரஹம்”என்கிற க்ரந்தத்துக்கு ,ஸ்ரீ உடையவர்,
“கீதா பாஷ்யம்” செய்தார். இரண்டையும் சேர்த்து, ” கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ” செய்தார்.
2. “கத்யத்ரயத்து”க்கு ரஹஸ்ய ரக்ஷை செய்தார்.
3. சரணாகதி சித்தாந்தத்தை ஸ்தாபிக்க, “நிக்ஷேப ரக்ஷை” செய்தார்.
4. ஸ்ரீ பாஞ்சராத்ரம் பரஸ்பர முரண்பாடுகளாலே மறைந்துவிடுமோ என்கிற நிலையில்
இருந்ததை மாற்றி, “ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷை ” செய்தார்.
5. அநுஷ்டானங்கள், நலிவு அடையாதபடி, பொலிவு அடைய, “ஸச்சரித்த ரக்ஷை ” செய்தார்.
இப்படி ஐந்து ரக்ஷைகளை, ராமாநுஜ சித்தாந்தத்துக்குக் கட்டி, ராமாநுஜ சித்தாந்தத்தை ,
நிலை நிறுத்தியவர் .ஆதலால், ராமாநுஜ தயாபாத்ரம்.
ஸ்ரீ இராமாநுஜர் பெருமையை, உலகுக்குக் பறை சாற்றியவர், ஸ்வாமி தேசிகனைப்போல
வேறு ஆசார்யன் இல்லை. “யதிராஜ ஸப்ததி ” ஒன்றே போதும்,இதைச் சொல்ல!
ராமாநுஜர் பெருமையை இப்படி உலகறியச் செய்ததால் “ராமாநுஜ தயா பாத்ரம்”
இராமாநுச நூற்றந்தாதியை, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தோடு சேர்த்து, அநுசந்தானம்
செய்வித்து, இன்றளவும் வழங்கும்படியாகச் செய்தவர், ஸ்வாமி தேசிகன்,
ஆதலால், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.
இன்னொன்று……
ரமந்த இதி ராமா :தேஷாம் —–அதாவது, ஆழ்வார்களின் அநுஜ:—ராமாநுஜர் —-உடையவர்.
ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைக் காத்து, வளர்த்து, உடையவருக்கு உகப்பாக இருப்பதால்,
ராமாநுஜ தயா பாத்ரம்.
ஸ்வாமி தேசிகன் ,” ப்ரபந்த ஸாரம் ” என்று அருளி இருக்கிறார். இதற்குத் தனியனே,
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், கோதைப் பிராட்டியான ஸ்ரீ ஆண்டாள்,
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ….என்கிற
12 ஆழ்வார்களையும் சொல்லி, அவர்கள் அவதரித்த நாள், ஊர், திருநாமங்கள், திருமொழிகள்,
அவற்றுள் பாட்டின் வகையான இலக்கம், மற்றுமெல்லாம் சொல்லி,
14 வது பாசுரமாக, ஸ்ரீ உடையவர்—ராமாநுஜரைப் பற்றி,
பேசிய நல் கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே .
அவதரித்து, இவ்வுலகில் குதர்க்க வாதம் செய்பவர்களை வென்று, அரங்கனே—-
பெரிய பெருமாளே– கதி என்று வாழ்ந்து, அருளும்—அருள்புரிந்து கொண்டிருக்கிற—இப்போதும் ,
அருள் புரிந்து கொண்டிருக்கிற —யதிராஜா—–யதீச்வரர்களுக்
இப்படி, எதிராசரான ஸ்ரீ ராமாநுஜரையும் , ஆழ்வார்களோடு, ப்ரபந்த கோஷ்டியில்
சேர்த்தவர் ,ஸ்வாமி தேசிகன்—-ஆதலாலும், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.
எப்படி என்கிறீர்களா ? இதோ, ஆழ்வார்களின் கோஷ்டிப் பாசுரம் …..
துய்ய தமிழ் இருபத்து நான்கிற் பாட்டின், தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே .
ஆறு இருவர்களும், ஒரே ஒருவரும் சேர்கிறார்கள். அதன் பலன், பாட்டின் தொகை, நாலாயிரமும்—
இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.
( அடியேன் , திருப்பாவை உபன்யாசத்தில் சொல்லி இருக்கிறேன் )
“அநுஜ” என்றால், கோதைக்குப் பின்னால் தோன்றிய வள்ளல்—உடையவர்.
அந்த உடையவரின் கருணைக்குப் பாத்ரமானவர் ,ஸ்வாமி தேசிகன்—ராமாநுஜ தயா பாத்ரம்.
ஸ்வாமி தேசிகனின் திருக் குமாரர் —குமார வரதாசார்யர் —-தன்னுடைய பிள்ளை அந்தாதியில்,
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம்என் சென்னியதே .
ராமாநுஜ தயா பாத்ரம்.