Ramanuja daya pathram–3

Posted on Apr 19 2016 - 10:52am by srikainkaryasriadmin

Desiganin kandarvakottai temple                                              3
இப்போது ஜ்ஞான    வைராக்ய  பூஷணம்———
——————————————-

பூஷணம், என்றால்  ஆபரணம் . ஸ்வாமி  தேசிகனுக்கு,  எது  ஆபரணம் என்றால் ,
ஜ்நானமும்  , வைராக்யமும்

ஜ்ஞானப்  பிரான்—-ஸ்ரீ வராஹப் பெருமான்
ஜ் ஞாநானந்த மாயன்—-ஸ்ரீ ஹயக்ரீவன்

1. ஸ்ரீ வராஹப் பெருமான் ,பூமிப் பிராட்டிக்கு, வராஹ சரம ஸ்லோகம்  சொல்ல, பூமிப்பிராட்டி, கோதையாக அவதரித்து,
வராஹ சரம  ஸ்லோகத்தை ,  ” திருப்பாவை ”  பாசுரங்களாக , நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள், உஜ்ஜீவிக்க
அநுக்ரஹித்தாள் .  ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆண்டாளின்  பாசுரங்களில்  உருகி, “திருப்பாவை ஜீயரா”க  ஆனார்.
இவை எல்லாவற்றையும்  சேர்த்து, சிந்தித்து , ஸ்வாமி  தேசிகன், “கோதா ஸ்துதி ” அருளினார்.
இந்த ஸ்துதி மூலமாக, ஞானப் பிரானையே வயப்படுத்தினார்.
ஸ்ரீ வராஹ அவதாரம், பகவானின் அவதாரங்களில் முக்யமாகச்  சொல்லப்படும் பத்து அவதாரங்களில் மூன்றாவது.

ஸ்வாமி  தேசிகன் , தான் அருளிய ” தசாவதார ஸ்தோத்” ரத்தில்
கோபாயே  தநிஸம் ஜகந்தி குஹநா போத்ரீ  பவித்ரீ க்ருத –
ப்ரஹ்மாண்ட : ப்ரளயோர்மி   கோஷ குருபிர் கோணா ரவைர் குர்குரை 😐
யத்தம் ஷ்ட்ராங்குர  கோடி  காட கடநா  நிஷ்கம்ப நித்ய ஸ்திதி :
ப்ரஹ்ம  ஸ்தம்ப   ஸௌதஸௌ   பகவதீ   முஸ்தேவ விஸ் வர் பரா ||
அதாவது…..பகவான், மஹா வராஹமாக அவதரித்து, கடல்களின்  ஓசையைவிட  பெரிய உறுமல்களால்,
உலகங்களை உய்வித்து தம்முடைய இரு அழகிய பற்களினால், மூழ்கிய பூமியைத் தூக்கி
நிலை நிறுத்தினார். இது, பற்களிடையே சிக்கிய கோரைக்கிழங்கு போலக் காட்சி அளித்தது.
மேலும், ப்ரஹ் மாதி, ஸ்தாவர ,பிராணிகள், மற்ற எல்லாவற்றையும்
— ஈன்றது. அத்தகைய வராஹப் பெருமான் லோகத்தை ரட்சிக்க வேண்டும் ……..
( இந்த ச்லோகம் –நவ க்ரஹங்களில் ,ராகு க்ரஹப் ப்ரீதிக்கு ஏற்றது என்றும் சொல்வர் )
2. வைனதேய மந்த்ரத்தைப்  பலமுறை  ஆவ்ருத்தி  செய்து, ஸ்ரீ கருடன் ப்ரஸன்னமாகி,
ஸ்ரீ ஹயக்ரீவரை விக்ரஹ  ரூபமாகக் கொடுத்து ஆராதிக்கச் சொல்ல, அந்த ஞானானந்த மயனுக்கு
ஞானானந்த மயம் தேவம்   நிர்மல ஸ்படிகா க்ருதிம்

ஆதாரம் ஸர்வ  வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

என்று தொடங்கி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்   அருளினார்.

ஸ்ரீ ஹயக்ரீவனின் பரிபூர்ண கடாக்ஷத்தால், எல்லா வித்யைகளும் ,போட்டி போட்டுக் கொண்டு,
ஸ்வாமி  தேசிகனிடம் வந்து ப்ரார்த்தித்தபோது, ஸ்வாமி  தேசிகன், ஞானமும், வைராக்யமும்,
சம்பந்தப்பட்ட வித்யைகளை மட்டில் பிரார்த்தித்து, மீதி வித்யைகளை ,எப்போதெல்லாம்
ப்ரார்த்தனை  செய்யப்படுகிறதோ, அப்போது வந்து அநுக்ரஹிக்கவேண்டினார்.
ஜ்ஞான  பூஷணம் —- இதற்கு அவர் அருளிய க்ரந்தங்கள்  ஒன்றா  இரண்டா ? பலப் பல !
32 ரஹஸ்ய   க்ரந்தங்கள்—-யாவும் ஜ்ஞானத்தின்  சிகரங்கள்–
32 ஸ்தோத்ரங்கள் ,  24 ப்ரபந்தங்கள் , 24  அநுஷ்டான சாஸ்திரங்கள் , 8 காவ்யங்கள் ,
1  பகவத் விஷயம் —ஆக  மொத்தம் 121  என்று,வைகுண்ட வாஸி
மதுராந்தகம்  திருமலை  ஈச்சம்பாடி ஸ்ரீ வீரராகாவாசார்ய மஹா தேசிகன் சொல்லியாகும்.
( இவைகளின் விவரங்களை இங்கு உரைப்பின் , பெருகும் )
இவைகள் மாத்ரமல்ல, ஸ்வாமி  தேசிகன் காலக்ஷேபங்கள்  ஸாதித்த  பாங்கு,
சிஷ்யர்களுக்கு ஏற்பட்ட சாஸ்த்ரசந்தேக  நிவ்ருத்தி —–இப்படிப் பல ,
ஸ்வாமி  தேசிகன் ஜ்ஞான  பூஷணம்  என்பதைச் சொல்கிறது.

இனி, வைராக்ய  பூஷணம் —-

ஸ்வாமி  தேசிகன் க்ரஹஸ்தாஸ்ரமத்தில்,  தினந்தோறும் , உஞ்சவ்ருத்தி செய்து,
உஞ்சவ்ருத்தியில் கிடைக்கும் அமுந்த்ரியை (அரிசி) பத்நியிடம் கொடுத்து,
அந்த அரிசியைத் தளிகை செய்து, திருவாராதனத்தில் தளிகை அமுது
பண்ணுவிப்பது வழக்கம். ( உஞ்சவ்ருத்தில்  பல நியமங்கள் உண்டு —இங்கு அவற்றை
விரிக்கின் வளரும்–அடியேன் சென்ற வருஷ உபன்யாசத்தில் சொல்லி இருக்கிறேன் ) —
இப்படி, ஒரு சமயம், ஸ்வாமி  தேசிகன் உஞ்சவ்ருத்தி எடுக்கும்போது, ஒரு தனிகரின்
(பணக்காரர் ) பத்னி, ஸ்வாமி  தேசிகனின்  ஆசார்ய விலக்ஷண ,பரம காருண்ய ,
பரம தேஜஸ்ஸால் ஈர்க்கப்பட்டு, அன்றைய தினத்தில்,
அரிசியுடன் கூட சில தங்கக் காசுகளையும் சேர்த்து , உஞ்சவ்ருத்தி பாத்ரத்தில்
சேர்த்து விட்டாள் . ஸ்வாமி தேசிகன் இதைக் கவனிக்கவில்லை.
க்ருஹத்துக்கு வந்தார்——அரிசியை  ஸஹதர்மிணியிடம் கொடுத்துவிட்டு,
இவருடைய நித்ய அநுஷ்டானத்தைத்தொடங்கி விட்டார். ஸ்வாமியின்  பத்னி,
அரிசியை  முறத்தில் சேர்த்து, அதை சோதிப்பது வழக்கம். அதாவது—சுத்தம் செய்வது—
ஏதாவது கல் மண் போன்றவை இருப்பின் அதை நீக்குவது—அப்படி சோதிக்கும்போது,
இந்தப் பொற்காசுகளைப் பார்த்தாள் . இவை என்னவென்று தெரியாமல்,
ஸ்வாமி  தேசிகனிடம்வந்து, “ஸ்வாமி ..இன்றையஉஞ்சவ்ருத்தியில், அரிசியுடன்கூட,
ஏதோ பளபளவென்று மின்னுகிறதே …இது என்ன….? ” என்று கேட்டாள்
ஸ்வாமி தேசிகன் முறத்தைப் பார்த்தார் ;அரிசியுடன்கூடப் பொற்காசுகளையும் பார்த்தார்;
“இது பளபளவென்று இருப்பதாலேயே இது ஒரு புழு…விஷப் புழு…..தூர வீசி எறிந்துவிடு…..”
என்றார். பத்னியும் அப்படியே செய்தாள் .
வைராக்ய பூஷணத்துக்கு  இது ஒரு உதாரணம்.
இன்னொரு உதாரணம்—
“வித்யாரண்யர் ” என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அக்காலத்திய விஜயநகர சாம்ராஜ்யத்தில்
ஆஸ்தான வித்வானாக இருந்தவர். இவரும், ஸ்வாமி தேசிகனும் சஹாக்கள்  ( நண்பர்கள்)
வித்யைகளைப்  பயிலும்போது, ஆசார்யனிடம்இருவரும், சிஷ்யர்கள்.
அதாவது  சஹ  மாணவர்கள். வித்யைகளை  எல்லாம் கற்றுத் தேறி, இருவரும் பிரிந்தார்கள்.
வித்யாரண்யர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரச குமாரியை ” ப்ரஹ்ம  ராக்ஷஸ் ”
பீடித்து இருந்தபோது, அரசனின் வேண்டுகோளின்படி, ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை   விரட்டி,
ராஜகுமாரியைக் காப்பாற்றினார். அது முதல், ராஜ சபையில்அத்யக்ஷர் .
ஆஸ்தான  வித்வான்  ஆனார். செல்வச் செழிப்பு; அதிகாரம்; ஏகப்பட்ட மரியாதைகள் —
-இப்படி வாழ்ந்து வந்தார்.
ஸ்வாமி  தேசிகன், வைராக்ய  பூஷணமாக இருப்பதும், ராமாநுஜ  தர்ஸனத்தைப்
பரப்பி வருவதும், தேசமெங்கும் பரவியது. வித்யாரண்யரும் இதைக் கேள்விப்பட்டார்.
தன்னுடைய சஹா ,தன்னை விடவும் ஞானத்தில் முதிர்ந்தவர், ஆசார்ய விலக்ஷணர்
இப்படி, உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு, வறுமையில் இருக்கும்போது, தான் மாத்ரம்
செல்வத்தில் புரளுவது சரியல்ல என்று எண்ணினார். அவரையும் விஜயநகர சாம்ராஜ்ய
வித்வானாக ஆக்கினால், அவரது வறுமை அகன்று விடும் என்று தீர்மானித்தார்.
உடனே ஒரு தூதுவரைக் கூப்பிட்டார், ஒரு பத்ரிகையை . எழுதி, தூதரிடம் கொடுத்து
,ஸ்வாமி  தேசிகனிடம் அனுப்பினார்.
 அதிகப்  ப்ரஸித்தி  பெற்ற தூப்புல் குலத் திலகமே —–அடியேன் மூலமாக,
தேவரீரின் புகழையும், கீர்த்தியையும் , விஜயநகர மஹாராஜா  கேள்விப்பட்டு,
சந்தோஷப்பட்டார்; அதுமுதல், தேவரீரை ஸேவிக்க  ஆசைப்பட்டு, தேவரீரையே
த்யாநித்துக்கொண்டு இருக்கிறார்; தேவரீரைத் தன்னுடைய தனத்தால் ஆதரித்து,
தேவரீருடைய முகாரவிந்தத்திலிருந்து வரும்  வாக் அம்ருதத்தில் மூழ்கித்
திளைக்க விரும்புகிறார்; தேவரீர், சிஷ்யவர்க்கங்களுடன்
இங்கு விஜயநகரத்துக்கு—ஹம்பி நகருக்கு, எழுந்தருளி, தேவரீரின் ஆதரவு பெற்ற
அடியேனையும், சந்தோஷிக்கச் செய்யவேண்டும் என்று எழுதினார்.

இந்தப் பத்ரிகையைப் படித்த, ஸ்வாமி  தேசிகன்,

க்ஷோணீ   கோண  சதாம்ச பாலந  கலா துர்வார கர்வாநல
க்ஷூப்யத்   க்ஷூத்ர நரேந்த்ர சாடு சநா   தந்யாந்ந மந்யா   மஹே  |
தேவம் ஸேவிதுமேவ  நிஸ்சி நு மஹே  யோஸௌ  தயாஜ : புரா

தாநா  முஷ்டி முசே குசேல  முநயே தத்தேஸ்ம   வித்தே சதாம் ||

என்று பதில் ஸ்லோகம்  எழுதி அனுப்பினார்
அதாவது—-இந்தப் பூமண்டலம்  மிகப் பெரியது; இதில்  ஏதோ  ஒரு  மூலையில்,
“ஏக தேசம்” என்று சொல்லி,அரசர்கள் ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை, அடியேன் துதிக்க விரும்பவில்லை.  அரசர்களைத்
துதித்து, அதனால் வரும் தனமும் ஒரு பொருட்டாக அடியேனின் மனத்தில் படவில்லை.
பகவானைத்  த்யானம் செய்கிறோம். அவரே எல்லாப் பலன்களையும்,
கொடுக்க வல்லமை படைத்தவர். குசேலருக்குக்

குபேர சம்பத்தைக் கண்ணன் கொடுக்க, நாம் அறிந்திருக்கிறோம்  அல்லவா !

அவன் பகவான்—-கொள்ளக் குறைவிலன்; வேண்டிற்றெல்லாம் தரும்
கோதில் மணிவண்ணன்
ஸ்ரீ நம்மாழ்வார் அருள்கிறார் —
சேரும் கொடை புகழ்  எல்லையிலானை ,ஓராயிரம்

பேரும்  உடைய பிரானையல்லால், மற்றும் யான்கிலேன்

வித்யாரண்யருக்கு  இந்தப் பதில்   போய்ச் சேர்ந்தது. அவர் வருத்தப்பட்டார்.
சிலகாலம்  கழிந்தது. வித்யாரண்யரால்வெறுமனே  இருக்க முடியவில்லை.
இன்னொரு பத்ரிகை  எழுதி, தூதுவன் மூலமாக அனுப்பினார்.
அதையும் படித்தார், ஸ்வாமி  தேசிகன். உடனே இந்தப் பத்ரிகைக்கும்
பதில் எழுதினார்.  அதுதான் “வைராக்ய பஞ்சகம் “
ஸிலம் கிமநலம்  பவே   தநல   மௌதரம்  பாதிதும்
பய : ப்ரஸ்ருதி  பூரகம்  கிமு ந  தாரகம் ஸாரஸம் |
அயத்ந  மலமல்லகம்  பதி  படச்சரம் கச்சரம்
பஜந்தி  விபுதா : முத  ஹ்ய ஹஹ குக்ஷித : குக்ஷித : ||
2. ஜ்வலது  ஜலதி க்ரோட  கிரீடத் க்ருபீட பவ ப்ரபா
   ப்ரதி பட  படு ஜ்வாலா   மாலா குலோ  ஜடரா நல : |
   த்ருணமபி  வயம்ஸாயம்  ஸம்புல்ல மல்லி மதல்லிகா
பரிமள முசாவாசா  யாசா மஹே ந  மஹீச் வராந்  ||
3. துரீச்வா த்வார  பஹிர்  விதர்த்திகா  துராஸி காயை ரசிதோய மஞ்ஜலி |
    யதஞ்ஜநாப ம் நிரபாய  மஸ்தி  மே  தனஞ்ஜய ஸ்யந்தந  பூஷணம் தநம் ||
4. சரீர  பத நாவதி ப்ரபு  நிஷேவணா  பாதநாத்
    அபிந்தந  தநஞ்ஜய ப்ரசமதம்  தநம்   தந்தநம்  |
    தனஞ்ஜய  விவர்தநம்  தந  முதூட  கோவர்த்தநம்
    ஸூ ஸா தந ம பாதநம் ஸூமநஸாம்  ஸமாராதநம்  ||
5. நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித்  நமயா  கிஞ்சி தார்ஜிதம்

    அஸ்திமே  ஹஸ்தி சைலாக்ரே  வஸ்து பைதா மஹம் தநம் ||

ஒருவனுக்கு, உயிர் வாழ்வதற்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர், மானத்தை மறைக்க வஸ்த்ரம்  போதும். இதற்காக, ராஜாவை அணுகி, இருக்கவேண்டும் என்பதில்லை. வயல்களில்  சிந்தி இருக்கும் நெல்மணிகள்—-உணவுக்குப் போதுமானது. ஆறு,குளம்,குட்டை இவைகளில் உள்ள தண்ணீர் தாகத்துக்குப் போதுமானது. வீதிகளில் சிதறிப் போடப்பட்டிருக்கும் கந்தைத் துணிகள் ,  மானத்தை மறைக்கப் போதுமானது . இப்படி, இவை எல்லாம் சுலபமாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்க, அரசனை அண்டி ,  அவனை ஸ்தோத்ரம்  செய்து, /   துதிகள் பாடி அவனிடம்
யாசிக்கிறார்களே… பரிதாபம் !
2.ஸமுத்ரத்தில் , “வடவாக்னி ” என்கிற நெருப்பைப்போல , வயிற்றில் “ஜாடராக்னி ” வ்ருத்தியாகி  பசி,  தாகம்   என்று கஷ்டப்பட்டாலும், சாயங்கால வேளையில்,  பூத்துத் தானாக மலர்கிறதே —வாசனையுள்ள  மல்லிகைப்பூ —–அந்த

வாசனையை உடைய நமது வாக்கினால், ஒருபோதும் அரசனை யாசிக்கமாட்டோம் .

3, அர்ஜுனனின் ரதத்தை அலங்கரித்த மைவண்ணன்  கண்ணனின் தனம் நமக்கு இருக்கிறது.
இந்தத் தனம் குறைவே இல்லாதது. ஆதலால், துஷ்ட அரசர்களின் வாசலில் போய்
தனத்துக்காக, துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்–ஹரியைத் துதித்து,
உடனே கிடைக்கும் தனம் உபயோகமானது. சனகாதி முனிவர்களாலும், த்யானம் செய்ய
இயலாத பகவானின் தனம்  எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று சிலருக்குத் தோன்றும்.
எண்ணலாம் ;

அதற்குப் பதில் சொல்கிறேன், கேளும்—

4. ராஜாக்களை அண்டிப் பெறுகிற  தனம், நிரந்தரமானதல்ல;  தற்காலிகமாகப்
பசி  தாகத்தைப் போக்கும்; நம்முடைய மரண பர்யந்தம்  அவர்கள் கொடுக்கும்
ஸ்வல்ப த்ரவ்யத்துக்காக  அவர்கள் தயவை  எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
பெரிய கஷ்டத்தை, அந்த அல்ப தனம்  ஏற்படுத்தும். ஆதலால், அந்தத்  தனம்
உபயோகமில்லாதது; நம்மால் ஆச்ரயிக்கப்பட்ட பகவான் என்கிற தனம்,
அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, மேன்மையை உண்டாக்கியது.
ஜாடராக்னியை மங்கச் செய்தது; தனவானின்  தனம் அவனுக்குப் போஷகமாக
இருக்கும்; ஆனால், கோவர்த்தன கிரியைத் தூக்கி, கோக்களையும், கோபாலகர் களையும்
காப்பாற்றியது,  பகவானாகிய  தனம்; மேலும், தன்னை  யார் ஆச்ரயிக்கிறார்களோ —
-தேவர்கள் வித்வான்கள்  என்று இவர்களையெல்லாம்  சந்தோஷப்படுத்தக் கூடியது
. ஆதலால், பகவான்தான்  உயர்ந்த தனம்;
5. சுயார்ஜிதமோ, பிதுரார்ஜிதமோ  அதன்மூலம்  தனம்  இருந்தால், அரசர்களை
இவ்விதம்  அலக்ஷியமாகப் பேசலாம்;ஒன்றுமில்லாத  உஞ்சிவ்ருத்தி செய்பவன்
, இப்படிப் பேசுதல் கூடாது   என்று, நினைக்க வேண்டாம்;
ஹஸ்தி கிரியில், எழுந்தருளி இருக்கும் தேவப் பெருமாள் என்கிற  தனம்
என்னிடம்  இருக்கிறது; நாம் சம்பாதித்ததோ தகப்பனார் சம்பாதித்ததோ ஒன்றுமில்லை;
ஆனால், நம் பிதாமஹர் (ப்ரஹ் மா) சம்பாதித்த தனம்  ஒன்று இருக்கிறது;
அத்திகிரியில் இருக்கிறது; அதை  ஒருவராலும்  அபகரிக்க முடியாது;
ப்ரஹ்மாவின் யாகத்தில் அவதரித்த
தேவாதி ராஜனே, தேவப் பெருமாளே, நமக்குப்  பெரிய  தனம்
About the Author

Leave A Response