Sri Ramanujar

Posted on May 6 2016 - 10:00am by srikainkaryasriadmin
ஸ்ரீ ராமாநுஜர் :—
——————————
இவர்—- ஆதிசேஷனின் அவதாரம்.1.ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி  திவ்யஸூரி ஸ்தோத்ரம்  அருளி இருக்கிறார் அதில் கூறுகிறார் :– – மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம் |
துண்டீரமண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே ||

ஸ்ரீ ராமாநுஜர்  சேஷாவதாரம்என்று ஸ்பஷ்டமாகக் காட்டப்படுகிறது

2. ஸ்ரீராமாநுஜருக்கு ஸாக்ஷாத் சிஷ்யர்  வடுகநம்பி என்று சொல்லப்படுகிற  ஆந்த்ரபூர்ணர். கூறுகிறார் 

வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய, பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை |
சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம் தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத் ||

சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை:
|
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||

3.  வேங்கடாத்ரி என்ற மகாகவி தமது விச்வகுணாதர்ச சம்பூவில் இவரை ஆதிசேஷனுடைய அவதாரம் என்றே அருள்கிறார்..

ராமாநுஜாய குரவே நரவேஷபாஜே, சேஷாய தூதகலயே கலயே ப்ரணாமாந் |
யோ மாத்ருசாநபி க்ருசாந் பரிபாதுகாம:, பூமாவவாதரத் உதஞ்சித போத பூமா ||

இப்படி பல ஆசார்யபுருஷர்கள் ஸ்ரீ ராமானுஜரை ஆதிசேஷாவதாரம் என்றே புகழ்கின்றனர்

.II   ஸ்ரீ ராமானுஜரின்  அவதாரம் :—
—————————————-

ஸ்ரீ வைகுண்டத்தில்  நித்ய ஸுரிகளும், முக்தர்களும் அனைத்துக் கைங்கர்யங்களையும்
செய்துவரும்போது, ஒரு சமயம்    வைகுண்டபதியான  வாஸுதேவன்
பூலோக வாசிகளிடம் பரம கருணை கொண்டு அவர்களை உஜ்ஜீவிப்பதற்காக
ஆதிசேஷனுக்கு ஆணையிட்டார். 

ச்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா: |
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ: ||

ச்ருதிகள் நஷ்டமடைகின்றன; ஸ்ம்ருதிகள் அழிகின்றன , ப்ராம்மணர்கள்
நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்வதில்லை. . வேதாங்கங்கள் நலிகின்றன.
.கலி,  விருத்தியடைகிறது. ஜீவாத்மாக்களைக் காப்பாற்ற ,
நீ,
என்னுடைய  பஞ்சாயுதங்களின் சக்தியைப் பெற்றுக்கொண்டு,
ராமாநுஜராக அவதரித்து
, வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி இவைகளுக்கு
உண்மையான அர்த்தங்களைச்  சொல்லி, வ்யாக்யானமிட்டு ,
ஜீவாத்மாக்களை  நன்னெறியில் திருப்பு ” என்று உத்தரவிட்டார்.
அதன்படி ஆதிசேஷனே ,இராமாநுசனாக  அவதரித்தார்
.
உலகத்தில் ராமாநுஜ தரிசனம்  ஏற்பட்டு வளர்ந்தது.

மந்நியோகாத் பூதபுர்யாம் அஹீநாமீச்வர : கலெள
|
ஸ்ரீராமாநுஜரூபேன ஜநிஷ்யதி ஸதாம் முதே ||

. ராமாநுஜர் , புத்ரகாமேஷ்டி மூலமாக அவதரித்தவர் என்றும் சொல்வர்..
இவரது பிதா ஆஸூரி கேசவாசார்யருக்கு “ஸர்வக்ரது “என்ற பிருது  உண்டு.
இவர் காந்திமதி என்கிற மாதுஸ்ரீயைத் திருமணம் செய்துகொண்டு,வாழ்ந்தார்.
பல வருஷங்கள் கழிந்தும், 
சந்ததி இல்லை. பெரியோர்களின் ஆக்ஞைப்படி
“ப்ருந்தாவன க்ஷேத்திரம் “என்று புகழ்பெற்ற  திருவல்லிக்கேணியில்
புத்ரகாமேஷ்டி செய்தார். யாகம் முடிந்த அன்றிரவு, அல்லிக்கேணி எம்பெருமான்
ஸ்ரீபார்த்தசாரதி
, “நானோ, என் ஆஸனமான ஆதிசேஷனோ உனக்குப் புத்ரனாக
வருவோம் ” என்று ஸ்வப்னத்தில் சொன்னதாகவும்
சொல்வர்.

III .  உலகு உய்ய  வந்த வள்ளல்
ஸ்ரீ உடையவர், மிகவும் பரந்த மனத்தினராய் ,உலகம்உய்யவேண்டும்
என்கிற பரம கருணையுடன்,
பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு-பாதகாத்|
ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம் ||” என்று
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் உபதேசமாகப் பெற்ற மந்திரார்த்தங்களை
ஆசார்ய நியமனத்தை மீறி  எல்லாருக்கும் உபதேசித்தார் .
.
IV . தீர்த்த கைங்கர்யம்
ஸ்ரீ ஆளவந்தார், சிஷ்யர்களுக்குப் பகவத்விஷய காலக்ஷேபம் ஸாதித்து வந்த சமயம்.
அப்பொழுது
,ஒரு நாள்
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டுஎன்ற திருவேங்கடமுடையான் விஷயமான
பாசுரம் சொன்னாராம்.
.
நீர் கொண்டு என்று தீர்த்த கைங்கர்யத்தை ஸ்ரீ நம்மாழ்வார் சொல்லி இருப்பதால்,
திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்யவேண்டும் என்கிற ஆர்வம்
இருந்திருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்து அவரது மனோரதத்தை
நிறைவேற்ற ஆளவந்தார் சங்கல்பித்தாராம்
காலக்ஷேபம் முடிந்ததும்
, “திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யத்தை
இந்தக் கோஷ்டியில் யார் செய்யப் போகிறார்கள்
?” என்று கேட்டாராம்.
பெரிய திருமலை நம்பி
, “அடியேன் சித்தமாக இருக்கிறேன்” என்று சொல்ல
,ஸ்ரீ ஆளவந்தார் போர உகந்து  அவருக்கு “இந்தக் கைங்கர்யத்தைச் செய்யும்—”
என்று அருள, பெரிய திருமலைநம்பி அவரைத்  தண்டனிட்டு உடனே
திருமலைக்குச் சென்று அந்தக் கைங்கர்யத்தைச் செய்தாராம்.
தினந்தோறும்  திருமலையில் உள்ள  “பாபவிநாசம் “என்கிற நதியிலிருந்து
ஒரு குடத்தில்  இவர் தீர்த்தத்தை எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு
ஸமர்ப்பித்துவந்தார். ஒரு நாள் வழக்கம் போல் குடத்தில்  தீர்த்தத்தை எடுத்துக்
கோயிலுக்கு  வரும்போது, திருவேங்கடமுடையான்  வில்லி வேஷத்தில் வந்து,
,நம்பிக்குத்  தெரியாமல் குடத்தில் த்வாரத்தை உண்டாக்கி தீர்த்தம் முழுவதும்
கீழே பெருகும்படி செய்துவிட்டார்.
பெரிய  திருமலைநம்பி கொஞ்ச தூரம் சென்றதும்
,
தாதா, எனக்கு ரொம்பவும் தாகமாய் உள்ளது. கொஞ்சம் நீர் கொடு” என்று
வில்லி வேஷத்தில் வந்தவர் கேட்டார்.
. அப்போது கலசத்தில் நீரே இல்லை. பெரிய திருமலை நம்பி திடுக்கிட்டார்.
. “வெகு தூரத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்து வருகிறேன் . கோவிலுக்கு அருகிலேயும்
வந்து விட்டேன். குடத்தில் தீர்த்தம்  இல்லையே —–.
மறுபடி பாபவிநாசம் நதிக்குச்  சென்று  தீர்த்தம் கொண்டு வரவும் சக்தி இல்லையே
?”
என்று கலங்கினார்.அப்போது வில்லிவேஷத்தில் வந்த ஸ்ரீநிவாசன்
தாதா—-பெரியவரே! கலக்கம்  வேண்டாம், நான் பாணப் பிரயோகம் செய்து
இவ்விடத்திலேயே தீர்த்தத்தை வரவழைக்கிறேன். இங்கிருந்தே நீர்  தீர்த்தத்தை
எடுத்துச் செல்லலாம் ” என்று சொல்லி
, ஓர் அஸ்திரத்தைப் பிரயோகித்தார்.
ஆகாசத்திலிருந்து கங்கா தீர்த்தம் பெருக  பெரிய திருமலை நம்பிகள் மிகவும்
சந்தோஷத்துடன்  தீர்த்தத்தை எடுத்துச் சென்றார்.இதுவே 
ஆகாச கங்கை‘  ஆயிற்று..
ஸ்ரீ ராமாநுஜர் , தனது குருவான யாதவ ப்ரகாசருடன் காசிக்கு யாத்திரையாகச்
சென்ற சமயத்தில்,, குருவின் சதித் திட்டத்தை அறிந்து, இரவோடு இரவாக
அவரிடமிருந்து  மீண்டு திரும்பி வந்த போது ,காஞ்சிக்கருகில் பேரருளாளனும்
பெருந்தேவித் தாயாரும்  வேடுவர் வேடுவச்சி உருவத்தில் வந்து
தடுத்தாட்கொண்டார்கள். அப்போது,  முதலில் வேடனுடைய உருவம் தரித்த
வரதனும் பிறகு பெருந்தேவியும் பிறகு ராமாநுஜரும்  நடந்து வந்தது,
பிரணவத்தின் பொருளை அறிய வைத்தது.
தினமும், இந்தக் கைங்கர்யம் தொடர்ந்தது—-
ஸ்ரீ வேங்கடாத்ரி மஹா கவி  சொல்கிறார்.
தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித் வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந் யயாசே
அர்ச்சாவதார எம்பெருமானுக்கு,  தீர்த்த  கைங்கர்யம் மிகவும் உகந்தது.

ஸ்ரீ ராமானுஜரும்,  காஞ்சிக்கு அருகே உள்ள சாலைக்கிணற்றிலிருந்து,
பேரருளாளன் உகப்பை  அறிந்து,
 தினமும் தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார்.
.

இதை ஸ்வாமி தேசிகன்
யதிராஜ ஸப்ததியில்(62) கூறுகிறார்
வந்தே தம் யமிநாம்  துரந்தரமஹம்  மாநாந்தகார  த்ருஹா
பந்தானாம்  பரிபந்திநாம்  நிஜ த்ருஸாருந்தாநமிந்தாநயா |
தத்தம் யேந தயா ஸுதாம்புநிதிநா பீத்வா விஸுத்தம் பய :
காலேந: கரிசைல க்ருஷ்ண ஜலத: காங்க்ஷாதிகம் வர்ஷதி  ||
 யதிராஜன், கருணைக்கடல்; தேவப் பெருமாளும் கருணைக் கடல்.
ராமாநுஜன் கொண்டுவந்து ஸமர்ப்பித்த ஜலத்தை தேவாதிராஜன் அருந்தினார்.
காஞ்சி கரிகிரி மேல்
நின்று காளமேகமாக ,  பலன்களைப் பொழிகிறார்.
கேட்பதற்கும் அதிகமான  பலன்களைப் பொழிகிறார். இருளைப் போக்கி,

தம் சிந்தனையாலே பிற மதங்களை நிரசிக்கும் பெருமை வாய்ந்த
எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன்..

.பகவானை அடைய ஆசைப்படுபவன், மற்ற எல்லாப்  பொருள்களிடம்
உள்ள ஆசையை விடவேண்டும்.
பற்றுக பற்றற்றான்  பற்றினைப்
பற்றுக   அப்பற்று விடற்கு
ஸ்ரீ ராமாநுஜர்,  பகவானுடைய திருவடிகளில் உண்டான அளவில்லாப் பற்றினால்,
மற்ற எல்லாவற்றிலும் பற்றை ஒழித்தார்
யோ நித்ய மச்யுத  பதாம்புஜ யுக்ம  ருக்ம
வ்யாமோ  ஹதஸ் ததிதராணி  த்ருணாயமேநே
அஸ்மத் குரோர்  பகவதோஸ்ய  தயைக  ஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம்  ப்ரபத்யே

 ஸ்ரீ உடையவரின் இந்தத் தனியன் அடியார்களுக்கு அருமருந்து.

V . அனுஷ்டானபரர்


ஸ்ரீ ராமானுஜர், த்வயார்த்தத்தை, அடியார்களுக்கு உணர்த்த, ” சரணாகதிகத்யம்” என்று
மூன்று கத்யங்கள் மூலமாக, ஒரு பங்குனி உத்திரத் திருநாளில்,  ஸ்ரீ ரங்கத்தில்
“ஸ்ரீ ரங்க  திவ்ய தம்பதிகள் ” முன்பாக  தாமே அநுஷ்டித்துக் காட்டி
னார்   

உலகோர்கள் எல்லாம் அண்ணல் ராமாநுசன் வந்த தோன்றிய அப்பொழுதே ..
நாரணற்கு ஆயினரே

எம்பெருமானார்  திருவடிகளே  சரணம்
Sriperumbudur-Swami-Ramanujar-Aippasi-Thiruvadirai-Vanabhojana-Utsavam20
About the Author

Leave A Response