sri nrusimham

Posted on May 18 2016 - 10:58am by srikainkaryasriadmin
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —பாகம் 3
மாங்கள்யஸ்தவம்
இது விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ளது. ஒரு நல்ல கார்யத்தைத்
தொடங்கும்போதும்  அதைத் தடங்கல் இன்றி நடத்தவும் ,துர்ஸ்வப்நம்
அமங்கலம் , துக்கங்கள் கஷ்டங்கள் ,பயம் இவற்றைப் போக்கவும் ,
நம் முன்னோர்கள் தினமும் சாளக்ராம ஆராதந –அபிகமனத்தில்
பாராயணம் செய்திருக்கிறார்கள். இந்த ஸ்தோத்ரத்தைப் பெண்கள், தினமும்
விளக்கேற்றி  வைத்துப் பாராயணம் செய்யலாம்.
  இங்கு ந்ருஸிம்ஹாவதாரம் சொல்லப்படுகிறது—
21.தம்ஷ்ட்ரா –கராளம்  ஸுரபீதிநாசகம்  க்ருதம்  வபுர் –ந்ருஸிம்ஹ –ரூபிணா |
த்ராதும் ஜகத் யேந  ஸ ஸர்வதா ப்ரபு : மமாஸ்து மாங்கள்யவிவ்ருத்தயே ஹரி : ||
 
தேவர்களின் பயத்தைப் போக்கவல்லதும், கோரைப் பற்களால் பயத்தை
உண்டாக்குவதுமான நரங்கலந்த சிங்கத் திருவுருவை ,உலகைக் காப்பாற்ற
யார் தரித்தாரோ ” ஹரி ”எனக்கு மங்களங்களைப் பெருகச் செய்வாராக
 
22.தைத்யேந்த்ர–வக்ஷஸ் ஸ்தல —தார –தாருணை :கரேருஹைர்  ய :க்ரகசாநு காரிபி : |
சிச்சேத  லோகஸ்ய பயாநி  ஸோச்யுதோ  மமாஸ்து மாங்கள்ய–விவ்ருத்தயே ஹரி : ||
இரணியன் மார்பைக் கிழித்ததும் ரம்பம் போன்றதுமான நகங்களால் ,உலகின்
பயத்தைப் போக்கிய ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக
 
23.தந்தாந்த –தீப்தத்யுதி -நிர்மலாதி ய :சகார ஸர்வாணி  திசாம் முகாநி  |
நிநாத –வித்ராஸித –தாநவோ  ஹ்யஸௌ மமாஸ்து மாங்கள்ய –விவ்ருத்தயே ஹரி : ||
பற்களின் ப்ரகாசத்தால்  திசை முடிவிலும் காந்தியைப் பரப்புகிறவரும்,
ஸிம்ஹநாதத்தால் அஸுரர்களை நடுங்கச் செய்பவருமான ஹரி எனக்கு மங்களங்கள்
பெருக அருள்வாராக 
24. யந்நாம -ஸகீர்த்தநதோ  மஹா பயாத்  விமோக்ஷ -மாப்நோதி ந ஸம்சயம்  நர : |
ஸ  ஸர்வ-லோகார்த்தி –ஹரோ  ந்ருகேஸரீ  மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||
தன்னுடைய நாமத்தைச்  சொல்பவரின் பெரும் பயத்தைப் போக்கி க்ருபை செய்பவரும்,
உலகங்களின் கஷ்டத்தைப் போக்குபவரான ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள்
பெருக அருள்வாராக
25. ஸடா –கராள  ப்ரமணாநிலாஹதா : ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ் ஸமந்தத : |
ஸ  திவ்யசிம்ஹ :ஸ்புரிதா-நலேக்ஷணோ  மமாஸ்து  மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||
பிடரிக் கேசங்கள் அலைந்து மேகக்கூட்டங்களை நாலாபுறமும் சிதறும்படி செய்பவரும்
 நெருப்புக் கனல் ஜ்வலிக்கும் நேத்ரங்களை உடையவருமான   ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள்  
பெருக அருள்வாராக
26. யதீக்ஷண –ஜ்யோதிஷி  ரச்மி -மண்டலம் ப்ரலீந -மீஷந் ந  ரராஜ பாஸ்வத : |
குத :ச சாங்கஸ்ய  ஸ  திவ்யரூப -த்ருக்  மமாஸ்து   மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||
எவருடைய  திருக்கண்களின் தீக்ஷ்யண்யத்தில் ஸுர்யனின் ஒளிக்கதிர்கள்    மங்குமோ,
சந்திரனின்  ப்ரகாசத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாமோ அந்த திவ்ய ரூபமான
ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள்   பெருக அருள்வாராக—
27. அசேஷ –தேவேச –நரேச்வரேச் வரை : ஸதா ஸ்துதம்  யச்சரிதம் மஹாத்புதம்  |
ஸ  ஸர்வ–லோகார்த்தி -ஹரோ மஹாஹரி : மமாஸ்து   மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||
எந்த ந்ருஸிம்ஹனுடைய மகோன்னத சரித்ரத்தை தேவர்களும், உலகத்தோரும்
புகழ்ந்து கொண்டாடுகிறார்களோ  உலகங்களின்  துக்கத்தையும்  பாவங்களையும்
அழிக்கவல்ல அந்த ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக
 
28. த்ரவந்தி தைத்யா : ப்ரணமந்தி தேவதா : நச்யந்தி ரக்ஷாம்ஸி  அபயாந்தி சாரய 😐
யத் கீர்த்தநாத்  ஸோத்புத –ரூப கேஸரீ  எந்த ந்ருஸிம் மமாஸ்து   மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||
யாருடைய திருநாமத்தைச் சொன்னவுடனே அசுரர்கள் ஓடுகிறார்களோ ,
தேவர்கள் நமஸ்கரிக்கிறார்களோ, அரக்கர்கள் அழிவார்களோ, எதிரிகள்
திரும்பி ஒடுவார்களோ அந்த ந்ருஸிம்ஹன்  எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக
 
     
   
 ப்ரதோஷம் 
ஸ்ரீ ந்ருஸிம்ஹனுக்கு, ப்ரதோஷ காலம் விசேஷமானது. அவதார நேரம். சாயங்கால
வேளை .  தினமும் சாயங்கால வேளையில்    ந்ருஸிம்ஹனை பூஜிப்பதோ,
கோவிலுக்குச் சென்று ஸேவிப்பதோ, க்ருஹங்களிலேயே ஸ்தோத்ரங்களைச்
சொல்வதோ ,அளவில்லா பலனை அளிக்கும். அதுவும், குடும்பத்திலுள்ள அனைவரும்
ஒருசேர அமர்ந்து ,ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரங்களைச்சொன்னால், எல்லாருக்கும் க்ஷேமமும்,
தன  ,தான்ய அபிவிருத்தியும், வளரும்.
இதிலேயே ” மஹா  ப்ரதோஷம் ” என்றும் இருக்கிறது.  ராத்ரி அஸ்தமனத்திற்குப் பிறகு
அரை நாழிகை த்ரயோதசி (12 நிமிஷங்கள் ) இருந்தால், அது மஹா ப்ரதோஷம் எனப்படும்.
அதற்கு முன்பே த்ரயோதசி  இருந்தால், முதல்  நாளே ப்ரதோஷம் என்றும் சொல்கிறார்கள்.
மஹா ப்ரதோஷத்தில் ” மௌன வ்ரதம் ”  இருந்தால், ஞானம் விருத்தியாகும் .சாயங்காலம்
அஸ்தமிப்பதற்கு முன்பு மூன்றே முக்கால் நாழிகை தொடங்கி, பாதி ராத்ரி வரையிலும்,
 அல்லது அஸ்தமனம் முதல் ஆறு நாழிகை வரையிலோ மௌன வ்ரதம்  இருக்கலாம்.
இந்த மஹா ப்ரதோஷ வேளையில்  உணவு அருந்துவது, பயணம் இவை கூடாது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹனை  ஸேவிக்க வேண்டும்.இந்தப் ப்ரதோஷ வேளையில் வாங்கிய கடனில்
ஒரு பகுதியைக் கொடுத்தால், மீதிக் கடன் சீக்கிரம் தீர்ந்து  விடும்.
44ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர்
44ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்  ஸ்ரீ மாலோலன் விஷயமாக, பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்,
த்வாதச ஸ்தோத்ரம் கராவலம்ப ஸ்தோத்ரம் , பிரபத்தி,தயா ஸாகர சதகம்
  இவைகளை அருளி இருக்கிறார்.
பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் இங்கே கொடுக்கிறேன் ;—-
மாலோலம் ப்ரணிபத்யாஹம்  ஸ்வர்ண ஸ்ரீந்ருஹரிம்ததா |
மங்களாத்ரி  ரமாஸிம்ஹம் க்ருஷ்ணம் நர்த்தன கோவிதம் ||
2. ஸ்ரீ ரங்கநாதம் ஹஸ்தீசம்  லக்ஷ்மீபூமி ஸமன்விதம்  |
சேஷாசலேசம் ஸ்ரீவாஸம்  யாதவாத்ரி ரமாஸகம்  ||
3. ஸ்ரீ பூ ஸுரபி  ரங்கேசம்  ஸ்ரீவராஹௌ  ஹயாநநம் |
பூமாதி கேசவம் சக்ரம் கோதாம் வடதளேசயம்  ||
4. ஸஸீதாலக்ஷ்மணம்  ராமம் அபர்யாப்தாம்ருதம் ஹரிம் |
ஸ்ரீ மூர்த்தி : ஸ்ரீ சடாரீ ச ஸேநேசம்  சடமாதிநம்  ||
5. பரகாலம் யதீந்த்ரம்  ச வேதசூடா குரூத்தமம்  |
ஆதிவண் சடகோபாதீந்  யதிவர்யாந் பஜே நிஸம் ||
6. பஞ்சாம்ருதமிதம் புண்யம் ய : படேத்  ஸததம்முதா  |
ரமா நர ஹரிஸ்தஸ்ய  தத்யாதீப்ஸிதமாதராத்   ||
இதுவும் மிக சுலபமான ஸ்தோத்ரம்—இதையும் தினமும்
அனுசந்திக்கலாம்.
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் —ஸ்ரீ ந்ருஸிம்ஹனின் அளவிலாப் பெருமை
பரக்கப் பேசப்படுகிறது.
உலகம் முழுவதும்  சக்தி மயம் —சக்தி பகவானுடையது—அஷ்டாதசசஹஸ்ர சக்திகள்
இருக்கின்றன—இவை இரண்டு பிரிவுகளாக இருக்கின்றன
1.பூதி சக்தி
2. க்ரியா சக்தி
பொதுவாக ஒவ்வொரு வஸ்துவுக்கும் மூன்று நிலைகள் உண்டு.
ஸத்தா—–அந்த வஸ்து, முதலில் அந்த வஸ்துவாக உருப்பெற்று இருப்பது.
ஸ்திதி—அந்த வஸ்துவாகத் தொடர்ந்து இருப்பது
ப்ரவ்ருத்தி—இந்த வஸ்துக்களின் செயல்கள் ( நல்லவை நாற்பது என்கிற தலைப்பில் 103வதாக,
த்ருஷ்டி  என்கிற தலைப்பில் ,இவற்றைச் சொல்லி இருக்கிறேன் )
ஒருவஸ்து,  அந்த வஸ்தாக உருப்பெற்று இருக்கும் நிலைமை ——-ஸத்தா
 அந்த வஸ்து அப்படியே தொடர்ந்து இருப்பது —-ஸ்திதி
இவை இரண்டும்—-பூத சக்தி.
இந்த வஸ்துவை இயக்குவது—–ப்ரவ்ருத்தி
இது க்ரியா சக்தி
உதாரணம்—
விளக்கு —வஸ்து
விளக்குக்கு வரும் தீப ஜ்வாலை —ஸத்தா
தீப ஜ்வாலை காற்றில் அணையாமல் இருப்பது—-ஸ்திதி
தீப ஜ்வாலை , வெளிச்சம் கொடுக்கிறது;தொட்டால் சுடுகிறது;காற்றில் அசைகிறது —
இது ப்ரவ்ருத்தி
உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் இந்த மூன்றும் உண்டு.
ஒரு பொருள் உருவாக (ஸத்தா) சக்தி தேவை
அந்தப் பொருள் தொடர்ந்து இருக்க ( ஸ்திதி ) சக்தி தேவை
அந்தப் பொருள் அசைய, நகர, வெளிச்சம் இவைகளைக் கொடுக்க (ப்ரவ்ருத்தி)-சக்தி தேவை
பூதி சக்தியால்—-உலகம் உண்டாகிறது
க்ரியா சக்தியால் —-உலகம் இயங்குகிறது
இந்த இரண்டு சக்திகளும்—எம்பெருமானின் திருக்கரத்தில் இரண்டு ஆயுதங்கள்
இவையே ஆபரணங்கள்
பூதி சக்தி—தாமரை
க்ரியா சக்தி—-சக்ரம் —இதுவே ஸ்ரீ ஸுதர்சனர்
இவர் திருக்கரத்திலும் சக்ரம் உண்டு .ஸுதர்சன சக்ரத்தின் முன்புறத்தில்,
வட்டத்தில் பகவானின் அவதாரங்களைப் ப்ரதிஷ்டை செய்து, உபாஸிப்பது
தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த ஸுதர்சன சக்ரத்தின் இன்னொரு பக்கத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
அஹிர்புத்ந்ய சம்ஹிதை கூறுகிறது—-எம்பெருமானுடைய முழு சக்தி ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
ஸ்ரீ ஸுதர்சனன்
ஹிரண்ய கசிபு, கடுமையான தபஸ் செய்து, ப்ரஹ்மாவிடம் வரம் பெற்றான்.
மூன்று உலகங்களையும் ஜெயித்தான். அவனே, இந்த்ரன்;ஸுர்யன் ; வாயு; அக்னி ;
வருணன் ; சந்திரன்;குபேரன்;யமன் .
யாகங்களில் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸை அவனே சாப்பிட்டான் .
இப்படிப்பட்ட அஸுர சக்தி முன்பும் இல்லை; பின்பும் இல்லை.
இவனை ஸம்ஹரிக்க பகவான், தன் சக்தி மூர்த்தியான ஸ்ரீ ஸுதர்சன ரூபத்தையே
ந்ருஸிம்ஹனாக ஆக்கிக் கொண்டு அவதரித்தார்.
ஆதலால், ஸுதர்சனரின் மற்றொரு அவதாரமே ந்ருஸிம்ஹன் –இந்தக் கருத்தை
வைத்தே, அஹிர்புத்ந்ய  சம்ஹிதை ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ ந்ருஸிம்ஹன் —மூர்த்திகளைச்
சேர்த்தே பேசுகிறது.
ஸ்ரீ ஸுதர்சன கவசத்தில்—-
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸுதர்சன கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அஹிர்புத்ந்யே  பகவான் ரிஷி :
அநுஷ்டுப் சந்த :
ஸ்ரீ ஸுதர்சன ஸ்ரீ மஹா ந்ருஸிம்ஹோ  தேவதா
சஹஸ்ரார  இதி பீஜம்
ஸுதர்சன மிதி சக்தி :
சக்ரமிதி கீலகம்
மம ஸர்வ ரக்ஷார்த்தே
ஸ்ரீ ஸுதர்சன புருஷ ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரீத்யர்த்தே
ஜபே விநியோக:
என்று சொல்கிறோம்—-
ஸுதர்சனரைச் சொல்லும்போதெல்லாம் ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் சொல்கிறோம்
 
பகவானின் ஸ்ரீ ஸுதர்சன ரூபத்தை உபாஸிக்கும்போது , அவரின் மற்றொரு ரூபமான
ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் முன்னும் பின்னும்  உபாஸிக்கிறார்கள். இதனால், பகவானின்
க்ரியா சக்தியின் பரிபூர்ண அநுக்ரஹ சக்தியைப் பக்தர்கள் பெறலாம்.
இந்த சூக்ஷ்மத்தை வைத்தே, ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ,ஸ்ரீ ஸுதர்சனம் –இரு திவ்ய மங்கள
விக்ரஹத்தையும் கல்லிலோ, செப்புத் தகட்டிலோ, முன்னும் பின்னுமாக
அர்ச்சையில் எழுந்தருளச் செய்து, ( பாஞ்சராத்ர/வைகாநஸ  ஆகம முறைப்படி
வடிவமைத்து ) அர்ச்சிக்கிறார்கள்/ உபாசனம் செய்கிறார்கள் ,இது ஆகம சாஸ்த்ரத்திலேயே
காணக்கிடைக்கிறது.
ஆசார்யர்கள், மஹான்கள் , வேதவித்துக்கள், ஆகம வல்லுனர்கள் மற்றும் நம்முடைய
முன்னோர்கள் ,நமக்குச் செய்துள்ள நல்லுபகாரம்.
 
 11169920_670641639748481_7321214970018597950_n
About the Author

Leave A Response